23.6.15

கண்ண பெருமாளை ஒருவர் காதலிக்கும்போது முருகப் பெருமானையும் ஒருவர் காதலிக்கக்கூடாதா என்ன?


கண்ண பெருமாளை ஒருவர் காதலிக்கும்போது முருகப் பெருமானையும் ஒருவர் காதலிக்கக்கூடாதா என்ன?

பக்தி மலர்

காதல் எப்படி பக்தியாகும். பக்தியின் அதீத நிலைப்பாடுதான் காதல். கண்ணனைக் காதலானாக்கி பாரதியார் பாடலை எழுதினார். இப்போது முருகனைக் காதலானாக்கி ஒருவர் பாடலை எழுதியுள்ளார். சூடிக் கொடுத்த ஆண்டாள் கண்ணனைக் காதலிக்கவில்லையா?

ஆனால் முருகப்பெருமான் மீது காதல் கொண்டு ஒரு பெண் மயக்கத்துடன் பாடுவதைப் போல பாடலை எழுதியுள்ளார் கவிஞர் ஒருவர். இன்று அல்ல. பல ஆண்டுகளுக்கு முன்னாள். ஆனால் அதை ஒரு பெண் பாடகியை வைத்துப் பாட வைக்காமல். ஆண் பாடகர் ஒருவரை வைத்துப் பாட வைத்ததுதான் சற்று நெருடலாக உள்ளது. அதை மறந்து விட்டுப் பாடலை மட்டும் பார்ப்போம்.

இன்றைய பக்தி மலரை அந்தப் பாடலின் வரிகள் நிறைக்கிறது. அனைவரும் படித்து மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------
பாங்கி என்றால் தோழி என்று வைத்துக்கொள்ளுங்கள்

(பல்லவி)

இன்பக் கனா ஒன்று கண்டேன் ... பாங்கி 
என்னுள்ளம் மகிழ்வு கொண்டேன் ... என்பாங்கி
(இன்பக் கனா ஒன்று கண்டேன்)

அனுபல்லவி
தென்பழனி ஊரன் ... சேவற் கொடிக்காரன் 
என்னுயிர்காதாரன் ... இரவில் எனையடைய
(இன்பக் கனா)

சரணம்
1.
பன்னிரு தோளழகும் ... பரந்த விழியழகும்
மின்னொளி வேலழகும் ... மேனி அழகும் 
காதல் ...
கன்னல் மொழி அழகும் ... களிற்றின் நடையழகும் 
பொன்மயில் தன்னழகும் ... புன்னகையின் அழகும் 
(இன்பக் கனா)

பாங்கி ... என்னுள்ளம் மகிழ்வு கொண்டேன் ... என்பாங்கி
(இன்பக் கனா)

2.
தென்றல் மலர் மணத்தை ... வாரி இறைத்தெங்கும்
திங்கள் அடைந்ததெந்தன் ... தேகம் சிலிர்த்தது
அங்கு ...
தென்றல் மலர் மணத்தை ... வாரி இறைத்தெங்கும்
திங்கள் அடைந்தது எந்தன் ... தேகம் சிலிர்த்தது
அங்கு ...
அந்திப் பேடோடு நடம் ... ஆடிக்களித்தப் போது 
ஆறுமுகன் வந்தென்னை அணைந்து சுகித்ததைப் போல்
(இன்பக் கனா)

பாங்கி ... என்னுள்ளம் மகிழ்வு கொண்டேன் ... என்பாங்கி
(இன்பக் கனா)

3.
முன்னர் யான் கண்டறியா ... மோகக்கிளர்ச்சி பல
மூண்டது என்னுள்ளத்தில் ... முற்றும் எனை மறந்தேன் 
உன்னைக் கைவிடேன் என்றோர் ... உறுதி மொழியும் சொன்னான் 
ஒப்பிவிட்டேன் ஆவியை ... தப்பிதம் ஏதும் உண்டோ? 
(இன்பக் கனா)

பாங்கி ...
(இன்பக் கனா)

4.
அன்புடன் பேசி என்னை ... அணைத்துப் பிடித்துவிட்டான்
அதரம் கனிய முத்தம் ... அமுதமெனக் கொடுத்தான் 
துன்பம் பிறப்பிறப்பு ... சோகம் இல்லாதொழித்தான் 
தோகையே இதன் பயன் ... சொல்லடி நீயறிந்தால் 
(இன்பக் கனா)

பாங்கி ...
என்னுள்ளம் மகிழ்வு கொண்டேன் ... என்பாங்கி
இன்பக் கனா 
--------------------------------
பாடகர்: M.M. தண்டபாணி தேசிகர்
வரிகள்:  கு.சா. கிருஷ்ணமூர்த்தி
---------------------------


Dandapani Desikar
Vocalist
M M Dandapani Desikar was a Carnatic vocalist, actor and composer. Dandapani Desikar was born in Tiruchengattangudi, near Nannilam in Madras Presidency. He got training from Manicka Desikar and Kumbakonam Rajamanickam Pillai. Wikipedia
Born: August 27, 1908, India
Died: June 26, 1972
Parents: Muthiah Desikar
-------------------------------
கண்ணன் - என் காதலன் 
பாடலாக்கம்: மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
-------------------------------------------------
செஞ்சுருட்டி - திஸ்ர ஏக தாளம்
சிருங்கார ரசம்

தூண்டிற் புழுவினைப்போல் - வெளியே
சுடர் விளக்கினைப் போல்,
நீண்ட பொழுதாக - எனது
நெஞ்சந் துடித்த தடீ!
கூண்டுக் கிளியினைப் போல் - தனிமை
கொண்டு மிகவும் நொந்தேன்;
வேண்டும் பொருளை யெல்லாம் - மனது
வெறுத்து விட்டதடீ! . ... 1

பாயின் மிசை நானும் - தனியே
படுத் திருக்கை யிலே,
தாயினைக் கண்டாலும் - சகியே!
சலிப்பு வந்த தடீ!
வாயினில் வந்ததெல்லாம் - சகியே!
வளர்த்துப் பேசிடுவீர்;
நோயினைப் போலஞ் சினேன்; - சகியே!
நுங்க ளுறவை யெல் லாம். ... 2

உணவு செல்லவில்லை; - சகியே!
உறக்கங் கொள்ளவில்லை.
மணம் விரும்பவில்லை; - சகியே!
மலர் பிடிக்க வில்லை;
குண முறுதி யில்லை; - எதிலும்
குழப்பம் வந்த தடீ!
கணமும் உளத்திலே - சுகமே
காணக் கிடைத்ததில்லை. ... 3

பாலுங் கசந்தடீ தடீ! - சகியே!
படுக்கை நொந்த தடீ!
கோலக் கிளிமொழியும் - செவியில்
குத்த லெடுத்த தடீ!
நாலு வயித்தியரும் - இனிமேல்
நம்புதற் கில்லை யென்றார்;
பாலத்துச் சோசியனும் - கிரகம்
படுத்து மென்று விட்டான். ... 4

கனவு கண்டதிலே - ஒருநாள்
கண்ணுக்குத் தோன்றாமல்,
இனம் விளங்க வில்லை - எவனோ
என்னகந் தொட்டு விட்டான்.
வினவக் கண்விழித்தேன்; - சகியே!
மேனி மறைந்து விட்டான்;
மனதில் மட்டிலுமே - புதிதோர்
மகிழ்ச்சி கண்டதடீ! . ... 5

உச்சி குளிர்ந்ததடீ! - சகியே!
உடம்பு நேராச்சு,
மச்சிலும் வீடுமெல்லாம் - முன்னைப்போல்
மனத்துக் கொத்தடீ!
இச்சை பிறந்ததடீ! - எதிலும்
இன்பம் விளைளந்ததடீ!
அச்ச மொழிந்ததடீ! - சகியே!
அழகு வந்ததடீ! ... 6
=======================================

எண்ணும் பொழுதி லெல்லாம் - அவன்கை
இட்ட விடத்தினிலே!
தண்ணென் றிருந்ததடீ! - புதிதோர்
சாந்தி பிறந்ததடீ!
எண்ணி யெண்ணிப் பார்த்தேன்; - அவன்தான்
யாரெனச் சிந்தை செய்தேன்;
கண்ணன் திருவுருவம் - அங்ஙனே
கண்ணின் முன் நின்றதடீ! ... .7
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1 comment:

  1. வள்ளி அல்லவா

    சரி சரி
    முருகா முருகா

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com