17.6.15

தலையைச் சுற்ற வைத்த கடிதம்!

தலையைச் சுற்ற வைத்த கடிதம்!

ஓரு தந்தை தனது இளம்வயது மகளின் அறையை கடந்து செல்லும்போது அது சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்ததைக்கண்டு உள்ளே சென்றார்.

எல்லாப் பொருட்களும் அழகாக அடுக்கப்பட்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது.அப்போதுதான் தலையணையின் மேல் ஒரு கடிதம் இருப்பதைப் பார்த்தார்.அதை எடுத்துப் பார்த்தார்.

அதன்மேல் ”அப்பாவுக்கு” என்று எழுதியிருந்தது.பதறிய அவர் உடனே நடுங்கும் கரங்களுடன் உள்ளேயிருந்த கடிதத்தைப் படித்தார்.

அதில் இவ்வாறு எழுதியிருந்தது:

"அன்புள்ள அப்பா, மிகுந்த வருத்தத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.என்னை மன்னித்து விடுங்கள். என் காதலன் டிமோத்தியுடன் நான் வீட்டை விட்டுப்போகிறேன்.உங்களுடனும் அம்மாவுடனும் சண்டைபோட்டு ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்த விரும்பவில்லை.அதனால் சொல்லாமல்போகிறேன்.

டிமோத்தியின் அன்பு என்னை அவனுக்கு அடிமையாக்கிவிட்டது.நீங்கள் டிமோத்தியைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும்.

உடம்பில் பல இடங்களில் பச்சை குத்தியிருந்தாலும், அவன் நல்லவன்.

அதற்கும் மேலே நான் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன்.அதை கலைக்க டிமோத்தி விரும்பமில்லை.

டிமோத்திக்கும் எனக்கும் நிறைய வயது வித்தியாசம் இருந்தாலும், இப்போதெல்லாம் 42 ஒரு வயதல்ல!

அவனிடம் பணமில்லாமல் இருந்தாலும் எங்கள் உறவு உறுதியானது.டிமோத்திக்கு இன்னும் பல காதலிகள் இருந்தாலும், எனக்கென்று தனது வாழ்க்கையில் ஒரு தனி இடம் கொடுத்திருக்கிறான்.

என் மூலம் நிறைய பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறான்.

டிமோத்திக்கு நதியருகே ஒரு அழகிய குடிசையிருக்கிறது.அங்கு நாங்கள் தங்கியிருப்போம்.

அவன் காட்டில் கஞ்சா பயிர் செய்வான். அதை நாங்கள் எங்கள் நண்பர்களுக்கு விற்று வாழ்க்கை நடத்துவோம்.கஞ்சாவை நானும் புகைத்தேன். ரொம்ப சுகமாயிருக்கிறது.

மருத்துவர்கள் சீக்கிரம் எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்ளுங்கள்.ஏனென்றால் அப்போதுதான் டிமோத்தி எய்ட்சிலிருந்து விரைவில் குணமடைவான்.

அப்பா நீங்களும் அம்மாவும் என்னைப் பற்றிக் கவலைப் படாதீர்கள்.எனக்கு என்னைப் பார்த்துக் கொள்ள தெரியும்.

எனக்கு பதினைந்து வயதாகிறது.என்றாவது ஒரு நாள் உங்களையெல்லாம் உங்கள் பேரக்குழந்தைகளுடன் வந்து பார்ப்பேன்.

உங்கள் அன்பு மகள்,
லிண்டா..!

அவருக்கு உலகமே சுற்றுவது போலிருந்தது..கடிதத்தின் கீழே “பின்பக்கம் பார்க்க” என்று எழுதியிருந்தது..துடிக்கும் இதயத்துடன் கடிதத்தை திருப்பி பார்த்தார்.

அங்கே என்ன எழுதியிருந்தது?

ஸ்க்ரோல் டவுன் செய்து படியுங்கள்

V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
அங்கு இவ்வாறு எழுதியிருந்தது:

பின்குறிப்பு;

அப்பா, நான் முன்பக்கம் எழுதியது எதுவும் உண்மையில்லை.நம் வாழ்க்கையில் எவ்வளவோ மோசமான விஷயங்களெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறது.

இதையெல்லாம் பார்க்கும்போது நான் பத்தாம் வகுப்பு கணக்குப் பாடத்தில் தேர்ச்சி பெறாதது ஒன்றும் பெரிய விஷயமே கிடையாது.

எனது தேர்வு அட்டை எனது மேஜைமேல் இருக்கிறது.எடுத்து கையெழுத்து போடுங்கள்.நான் பக்கத்து வீட்டில்தான் இருக்கிறேன். உங்கள் கோபம் தணிந்ததும் கூப்பிடுங்கள்.
--------------------------------
எப்படியிருந்தது (கடிதத்தின் முதல் பக்கம்)?
யாராயிருந்தாலும் தலை சுற்றுமா. இல்லையா?

அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

9 comments:

  1. நானும் எனது மனைவியும் படித்துவிட்டு சிரித்த சிரிப்பிற்கு அளவே இல்லை. திரிலிங் + நகைச்சுவை மிக்க பதிவு.

    ReplyDelete
  2. ஒரு கோட்டை அழிக்காமல் சிறியதாக்க அதன் அருகில் அதைவிடப் பெரிய கோடு கிழிப்பது போன்ற ஒரு யோசனை. பரவாயில்லை. அந்தப் பெண் நிச்சயம் ஓர்
    அரசியல் வாதியாக வருவாள்.

    ReplyDelete
  3. அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
    அந்தப் பெண் தெனாலி ராமனுக்கு உறவோ? - இல்லை வாத்தியார் ரூம் போட்டு யோசித்திருப்பாரோ?
    நன்றியுடன்,
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  4. இன்னமுமா கையெழுத்திற்காக காத்திருக்கின்றாள்
    இன்றைய நாளில் மாணவர்களே கையெழுத்து போட்டுக் கொள்கிறார்கள்

    இதெல்லாம் சகஜம் சார்..
    இந்தளவிற்கு ஒரு மாணவி தெரிந்து வைத்திருக்கிறாள்

    என்றால் தவறு அந்த லிண்டா மீது அல்ல
    எல்லாம் அவள் பெற்றோர் மீது தான்

    தண்டனைக்குரியவர் அந்த பெண் அல்ல
    தாராளமாக சொல்லலாம் அவள் பெற்றோர் தான்

    ReplyDelete
  5. //////Blogger விசயக்குமார் said...
    நானும் எனது மனைவியும் படித்துவிட்டு சிரித்த சிரிப்பிற்கு அளவே இல்லை. திரிலிங் + நகைச்சுவை மிக்க பதிவு./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  6. //////Blogger kmr.krishnan said...
    ஒரு கோட்டை அழிக்காமல் சிறியதாக்க அதன் அருகில் அதைவிடப் பெரிய கோடு கிழிப்பது போன்ற ஒரு யோசனை. பரவாயில்லை. அந்தப் பெண் நிச்சயம் ஓர் அரசியல் வாதியாக வருவாள்.///////

    நீங்கள் சொல்வது சரிதான். ஒரு அரசியல்வாதிக்கு உள்ள அத்தனை சாமர்த்தியமும் அந்தப் பெண்ணுக்கு உள்ளன. நன்றி கிருஷ்ணன் சார்

    ReplyDelete
  7. /////Blogger GOWDA PONNUSAMY said...
    அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
    அந்தப் பெண் தெனாலி ராமனுக்கு உறவோ? - இல்லை வாத்தியார் ரூம் போட்டு யோசித்திருப்பாரோ?
    நன்றியுடன்,
    -பொன்னுசாமி.//////

    இருக்கலாம்.

    ReplyDelete
  8. //////Blogger வேப்பிலை said...
    இன்னமுமா கையெழுத்திற்காக காத்திருக்கின்றாள்
    இன்றைய நாளில் மாணவர்களே கையெழுத்து போட்டுக் கொள்கிறார்கள்
    இதெல்லாம் சகஜம் சார்..
    இந்தளவிற்கு ஒரு மாணவி தெரிந்து வைத்திருக்கிறாள்
    என்றால் தவறு அந்த லிண்டா மீது அல்ல
    எல்லாம் அவள் பெற்றோர் மீது தான்
    தண்டனைக்குரியவர் அந்த பெண் அல்ல
    தாராளமாக சொல்லலாம் அவள் பெற்றோர் தான்/////

    நீங்கள் சொன்னால் சரிதான் வேப்பிலையாரே!

    ReplyDelete
  9. ஐயா வணக்கம்
    மகள் அப்பாவுக்கு கற்றுக்கொடுத்த பாடம்
    நன்றி.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com