26.2.15

Quiz: புதிர்: எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம்!


Quiz: புதிர்: எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம்!

ஒரு இளம் தம்பதி...

மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க் கொண்டிருந்தார்கள்.
வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது பேருந்து.

ஏனோ, வழியில் அவர்கள் இருவரும் இறங்கிக் கொள்ள
முடிவு செய்து, பேருந்தை நிறுத்தி இறங்கிக் கொண்டனர்.

ஆளில்லாத வனாந்திரம், மான்களும் மயில்களும் குயில்களின் 
இசையோடு விளையாடிக் கொண்டிருந்தன.

ஆனால் அவர்கள் மனம் அதில் லயிக்கவில்லை...இறங்கிய 
இடத்திலிருந்து சற்று தள்ளி இருந்த பாறையில் ஏறினர்.

உச்சியில் இருந்து பாதாளத்தைப் பார்த்த போது, கால்கள் கூசின
உடல் நடுங்கியது. இருவரும் கண்களை மூடி கரங்களைப் பற்றிக்கொண்டனர்.

வனக்குரங்குகள் மரங்களிலிருந்து இவர்களை நோக்கி க்ரீ....ச்சிட்டன...

அப்போது,
மிகப் பெரிய சப்தம்...
திரும்பிப் பார்த்தார்கள்.

இவர்கள் இறங்கிய பேருந்தின் மீது மலையிலிருந்து மிகப் பெரிய 
பாறை விழுந்து பேருந்தை நசுக்கி இருந்தது.

ஒருவரும் தப்பவில்லை!

இவர்கள் இருவரைத் தவிர..மற்றவர்கள் பாறைக்கடியில் சமாதி 
ஆகி இருந்தனர்.

குயிலோசை இல்லை! மான்களும் மயில்களும் ஒடுங்கி நின்றிருந்தன.
வனக்குரங்குகள் மலை உச்சிக்கு தாவி ஓடின.

இளம் தம்பதி,
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இருவரும் சொல்லிக் கொண்டார்கள்.

"நாம் பேருந்தில் இருந்து இறங்கி இருக்கக் கூடாது...!"

ஏன் அப்படிச் சொன்னார்கள் ?
ஊகிக்க முடிகிறதா...?
சவாலான கேள்வி...!
100% உங்கள் யூகம் தவறாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

உங்கள் பதிலை எழுதுங்கள். சரியான விடை நாளை காலையில்!

சரியான பதிலை எழுதினால், அதி புத்திசாலி என்ற பட்டத்துடன் உங்கள் பெயர் வெளியாகும். இது எனக்கு WhatAppல் வந்தது. உங்களுக்கும் வந்திருந்து, அதைப் படித்திருந்தால் போட்டில் கலந்து கொள்ள வேண்டாம்!

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
===================================================

37 comments:

  1. They went to the Hill Station to commit suicide. For this only they down from the Bus. But if they are in the bus itself they will dead for which they came to the hill station.

    ReplyDelete
  2. மரணம் - நம் கைகளில் இல்லை

    ஜவஹர்

    ReplyDelete
  3. if we are in the bus this incident would not be happened and we saved all people's life

    ReplyDelete
  4. அவர்கள் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கிருந்தால் அந்த பேருந்து தாமதமாக சென்றிருக்காது. அந்த தாமதமே அந்த பெரிய பாறை பேருந்தின் மேல்விழக்காரணமாய் அமைந்து விட்டது. அதனால் அவர்கள் அவ்வாறு சொல்லியிருக்கலாம்.

    உங்கள் புதிருக்கு நன்றி.

    ReplyDelete
  5. Their destiny is not to die. So if they would have continued in the bus, the tragedy would not have happened. So all the passengers would have luckily escaped. Chockalingam.

    ReplyDelete
  6. sir, they would have decided for suicide from the top. R.Sundararajan

    ReplyDelete
  7. Ans:

    If we are in bus the bus didn't get accident.So others life also saved.

    M.Santhi

    ReplyDelete
  8. two member go moutain for suicide by pachaiyappan

    ReplyDelete
  9. அவர்கள் இறங்கும் போது சொர்க்கம் போல இருந்த இடம், பஸ் பாறையில் சிக்கி அனைவரும் இறந்த பிறகு அதை பார்த்த பறவைகள் விலங்குகளின் இயல்பான சூழ்னிலை மாறி, மலை உச்சியில் இருந்து கீழே பார்க்கும் போது ஏற்பட்ட பயம், அதனால் அந்த இடம் நரகம் போல் தோன்றியது அதனால், இளம் தம்பதி பஸ்ஸிலேயே இருந்திருக்காலாம் வேதனையில்லாம் இறந்திருக்கலாம் என்று நினைத்திருப்பார்கள்

    ReplyDelete
  10. Respected Sir,

    Avargal irangamal irundhuirundhal, paarai viluvadharkku munbaghavey perundhu andha idathai (Paarai vizhum idathai) Kadandhirukkum.

    Whatsapp il parkavillai. En arivirkku ettiyadhu.

    Thank You.

    ReplyDelete
  11. Respected sir,

    1. The Young couples planned & came to hill station for suicide attempt.
    2. While travel they might be thought, bus should face the accident easy for suicide. then they realised because of us other passenger should not struggle.
    3. That's the reason they selected the spot & stopped the bus.
    4. Destiny perfectly played, bus got accident & killed all the passenger.
    5. Then they realised, if they travel in bus, it may not face the accident other passenger might be safe, because of their (couple) decision other passenger got died.

    Regards
    rm.srithar

    ReplyDelete
  12. சிலவிஷயங்கள் புரியாத புதிராகத் தான் உள்ளன.

    ஆனாலும் - இந்தப் புதிர் எனக்கு வந்திருந்தது.

    ReplyDelete
  13. அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
    பதில் இப்படி இருக்கலாம்.
    “நாம் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்ப வேண்டியிருந்ததால் இறங்கி விட்டோம்.ஒரு வேளை நாம் இறங்காமல் இருந்திருந்தால்,நம்முடைய அதிர்ஷ்ட வசத்தால், மற்ற பயணிகளும் உயிர் பிழைத்திருப்பார்களே!”.
    நன்றியுடன்,
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  14. இதற்கு 3 பதில்களை தருகிறேன்
    இங்கே சரியானதை எடுத்துக் கொள்க
    "நாம் பேருந்தில் இறங்கி இருக்க கூடாது..."

    1)
    இந்த ஜோடிகள் தற்கொலைக்கு
    இறங்கியவர்கள்.. இறங்காமல்

    இருந்தால் இயற்கையாகவே
    இந்த விபத்தில் செத்து இருக்கலாம்

    2)
    வண்டி வேகமாக கடந்திருக்கும்
    வாகனத்துடன் எல்லோரும்

    உயிருடன் பிழைத்திருக்கலாம்
    உறவுகள் வாழ்த்தி யிருக்கும்..

    3)

    எல்லோரும் போன பிறகு
    எப்படி இங்கிருந்து கீழே இறங்குவது

    எந்த வாகனம் இங்கு
    எப்போ வருமோ..? என்ற கவலை

    இந்த 3 பதில்களில்
    இப்போ உங்களுக்கு சரியெனபட்டதை

    சட்டென டிக் செய்து கொள்ளுங்கள்
    சரி செய்து சொல்ல இன்னமும்

    மூன்று பதில்கள் கைவசம் உள்ளது
    முடிவாக அதை சொல்கிறேன்..

    கலைத்துறையில் பணியாற்றுவதால்
    கற்பனைகள் அதிகம் அய்யருக்கு

    ReplyDelete
  15. அய்யா,
    வாழ்க்கை விரக்தி ஆகி இருவரும் தற்கொலை செய்யும் முடிவிற்கு சென்றனர்.ஆனால் அப்போது அவர்களுக்கு '' பயம் '' வந்திருக்க வேண்டும்.வண்டியில் சென்று இருந்தால் ''பயமில்லாமல் பரலோகம்'' சென்று இருக்க முடியும் அல்லவா.ஏனென்றால் எதிர்பாராத திடீர் மரணம் என்பது குடும்பத்திற்கு பிரச்சனை ஆனால் மரணம் எய்தவருக்கு வரப்ரசாதம்.

    இது என்னுடைய பதில்.ஆனால் புதிர் போட்டிகளின் முடிவு எப்போதுமே புதிராகவே இருக்கும்.

    உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கும் மாணவன்,
    S .ரகுநாதன்

    ReplyDelete
  16. அவர்கள் பேருந்தை நிறுத்தி இறங்காமல் இருந்தால் அந்த பாறை விழும்போது அவர்கள் பேருந்து அந்த இடத்தை கடந்திருக்கும். அத்தனை பேரின் உயிரும் பிழைத்திருக்கும்.

    ReplyDelete
  17. ஏற்கனவே கேட்ட கதை. ஆகையால் நான் disqualified ஆகி விட்டேன். இதை மறைத்து ஏதோ என் சுய சிந்தனையில் உதித்தது போல் பதிலளிக்க விரும்பவில்லை.

    ReplyDelete
  18. கதையின் படி , அந்த இளம் தம்பதிகள் தற்கொலை செய்து கொள்ள நினைத்து பேருந்தில் இருந்து இறங்கி பாறையின் மீது ஏறி இருக்கலாம். அந்த கணத்தில் பேருந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. இதன்படி அவர்கள் உயிரோடு இருக்க வேண்டும் என்பது விதி. இதனை புரிந்து கொண்டு, அவர்கள் தற்கொலை எண்ணத்திலிருந்து மனம் மாறி, நாமும் பேருந்தில் இருந்திருந்தால் மற்ற அனைவரையும் காப்பற்றி இருக்கலாமே என்று நினைத்து இப்படி சொல்லி இருக்கலாம்.

    இப்படிக்கு,
    தணிகைவேல்.M

    ReplyDelete
  19. Avargal irunthirunthal kal vilunthirukkathu enru ninaiththu kuri iruppargal

    ReplyDelete
  20. இளம் தம்பதி இருவரும் முன்னதாகவே தங்களை மாய்த்துக்கொள்ள முடிவு செய்து மலைமேல் ஏறி இருந்தார்கள். பிறகு பாறை விழுந்து பஸ் நொருங்கி அனைவரும் இறந்ததால் தாங்களும் அவர்களோடேயே இருந்திருக்கலாம் என்று நினைத்து இற்ங்கியிருக்கக்கூடாது என்று கூறினார்கள்

    ReplyDelete
  21. ivargal eranamal irunthithital bus meethu parrai vilunthurukkathu

    ReplyDelete
  22. ivargal 2 perum irangamal irrunthal bus meethu parai velunthu irukkathu
    bus antha idathai thandi poi irrukum corracta?

    ReplyDelete
  23. they were driver and conductor of the vehicle

    ReplyDelete
  24. மற்றவர்களுக்காக உருண்டு வந்த கல் இவர்களை விட்டு மற்றையோரை நசுக்கி விட்டது.இவர்கள் பேருந்தில் இருந்திருந்தால் மற்றையோரும் பிழைத்திருப்பர் என்பதுதானே அது அய்யா?

    ReplyDelete
  25. அவங்க இறங்கலைனா பஸ் பாறை விழுறதுக்கு முன்னாடியே அந்த இடத்தை தாண்டி இருக்கும்.
    - பாலமுருகன்

    ReplyDelete
  26. They may wanted to suicide, but now they don't have guts. If they stayed in bus, they would be dead.
    Now, everyone is dead because of them and standing alive?

    ReplyDelete
  27. வணக்கம் சார்..........

    இளம்தம்பதி !!
    மலையில்இருந்து குதித்திருந்தால்
    தெரிந்தே சாகவேண்டும்!!!

    பஸ்சில் போயிருந்தால்
    சாவது தெரியாமல் செத்திருக்கலாம்!!

    ReplyDelete
  28. அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ள எண்ணி இறங்கினார்கள். ஆனால் அவர்களுக்கு முன்னால் விபத்து ஏற்பட்டு பஸ்ஸில் இருந்த அனைவரும் இறந்தார்கள். இவர்களுக்கு அயுள் பலமாக இருக்கிறது போலும்.இவர்கள் பேருந்திலேயே இருந்திருந்தால் இவர்களுடைய நல்ல‌ விதி மற்றவர்களையும் காப்பாறியிருக்கலாம்......

    ReplyDelete
  29. Dear sir
    It is my guess. They get down from bus for suicide but before they attempted suicide people who traveled along with them died due to the accident. That is why they said,they should not have got down from the bus. Am I correct?

    ReplyDelete
  30. Dear sir
    நம் இருவரும் பேருந்தில் இருந்திருந்தால் நம்ம நேரத்தினால் அனைவரும் பிழைத்திருப்பார்கள் என்று எண்ணி இறுப்பாற்கள்

    ReplyDelete
  31. இருவரும் இறங்காமல் இருந்திருந்தால் பேருந்து நிற்காமல் சென்றிருக்கும். அந்த பாறை விழுவதற்க்கு முன் அந்த இடத்தைக் கடந்திருக்கும்.

    ReplyDelete
  32. வணக்கம் குரு,

    எனது கணிப்புகள் இரண்டு.

    1. அவர்கள் அங்கு இறங்காமல் இருந்திருந்தால் பேருந்து பாறை விழுவதற்கு முன் அந்த இடத்தை கடந்துருக்கும்.

    2. அவர்கள் அங்கு இறங்கியதால் விலங்குகள் போட்ட கூச்சளினாலும் மற்றும் அவைகள் ஓடியதாலும் ஏற்பட்ட அதிர்வினாலும் பாறை உருண்டு பேருந்தின் மேல் விழுந்திருக்கலாம்.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  33. வணக்கம் ஐயா
    புதிர்கன பதில்
    நாம் இருவரும் மட்டும் தர்கொளை செய்து கொள்வதற்கு பதில்,பேருந்தில் சென்றிருந்தால் அவர்களுடன் சேர்ந்து நாமும் இறந்து இருகளாம் என்று கூறினார்கள் ஐய்யா
    ஏனென்றால் அவர்கள் பேருந்தில் இருந்து இறங்கினது இயற்கைய ரசிபதற்கு என்றால் அவர்கள் அங்கிருந்த மான்,மயில்,குயில்,போன்றவைகளை ரசித்திருக்கனும் ஆனால் அது அவர்களின் காதுகளுக்கும் கன்களுக்கும் எட்டவில்லை அதனால் தான் ஐயா

    ReplyDelete
  34. appadi avargal irangamal irunthal antha bus antha nimadam kadanthu poirukum. andha accident nadanthuirukathu.

    ReplyDelete
  35. If they are in the bus they will come out unhurt

    ReplyDelete
  36. in that puzzle, husband and wife decided to end their life. that is what they have decided. but as per proverb," man proposes but god disposes" here the same thing happened. thats all the answer.

    ReplyDelete
  37. both husband and wife decided to end their life a nd planned to do that. but as per proverb " man proposes but god disposes" so god has done his duty and they escaped and could not end their life as per their plan.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com