பிப்ரவர் 7ம் தேதி சனிக்கிழமை, சான் ஃப்ரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் கான்கார்டு சிவா முருகன் கோவிலுக்கு ஒரு பாத யாத்திரை நடந்தது. அதை பற்றி இங்கு சில வரிகள் எழுத அனுமதிக்க வேண்டும்.
தைப்பூசம் சென்ற வாரமே வந்து விட்டாலும் பக்தர்கள் பாத யாத்திரை செல்வதற்கு ஏதுவாக சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்தார்கள். சோலை என்ற பக்தர் தலைமையில் 2011ம் ஆண்டிலிருந்து குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்து வருகின்றனர். முதல் ஆண்டு நூறிலிருந்து இரு நூறு பக்தர்கள் மட்டும் சென்ற பாதயாத்திரை, இந்த ஆண்டு கிட்டத்தட்ட ஆயிரமாக உயர்ந்துள்ளது.
வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இன்னும் அதிகமாக பக்தர்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழை காரணமாக சிலர் வர இயலவில்லை. பெரும்பாலானோர், சான் இராமோன் என்ற ஊரிலிருந்து கிட்டத்தட்ட 21 மைல்கள் நடந்தனர். சிலர் ஃப்ரீமாண்ட் என்ற ஊரிலிருந்தும் (கிட்டத்தட்ட 48(?) மைல்கள்), சிலர் வால்னட் கிரீக் என்ற ஊரிலிருந்தும் (கிட்டத்தட்ட 8 மைல்கள்) நடந்தனர். வழி நெடுக, பழனி பாதயாத்திரைக்கு செல்வது போல உணவும், நீரும், மோர், பாணக்கம், தேனீர், காப்பி, மற்ற பாணங்களும் வழங்கப்பட்டன. பக்தர்களுக்கு முன்பே மின்னஞ்சலில் வழி தெரிவிக்கப்பட்டிருந்தாலும், ஊருக்கு புதியவர்கள் வ்ழியை விட்டு விடாமல் இருக்க தன்னார்வலர்கள் மிதிவண்டியில் தொடர்ந்து பேட்ரோல் செய்து கொண்டிருந்தனர். குழுவினர் மற்றும் தன்னார்வலர்களின் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது. சிறிதும் சிரமம் பாராமல் அனைவரையும் இன்முகத்தோடு, அன்போடு உபசரித்தது சிறப்பு. சிறுவர் சிறுமிகளிலிருந்து முதியவர்கள் வரை பக்தர்கள் நடந்து சென்றது மகிழ்ச்சியாக இருந்தது. மிகவும் சிறப்பாக நடந்த பாத யாத்திரையின் இறுதியில் கான்கார்ட் குமரனை தரிசித்தவுடன் இரவு உணவு கோவிலில் வழங்கப்பட்டது. திரும்பி செல்லவும் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அடுத்த நாள் பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்தனர். மிகவும் சிறப்பாக தைப்பூசம் கொண்டாடிய மகிழ்ச்சி. விழாக்குழுவினர், தன்னார்வலர்கள், மற்றும் கோவில் நிர்வாகத்திற்கு கோடானு கோடி நன்றிகள்.
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com
காணொளியை மீண்டும் கேட்டு ரசித்தேன் அய்யா!
ReplyDeleteபகிர்விற்கு நன்றி!
Very nice song
ReplyDeleteநல்லதொரு அருமையான பாடல். படத்தில் உள்ளது பழனி மலை பழனியாண்டவர்தானே?
ReplyDeleteAyya kalai vanakkam..Azhgan MURUGAPERUMANIN arumaiyana padal pakirvikku Nandri
ReplyDeleteGood morning sir,
ReplyDeleteமுருகா..
ReplyDeleteமுருகா..
நன்றி அய்யா.
ReplyDeleteபிப்ரவர் 7ம் தேதி சனிக்கிழமை, சான் ஃப்ரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் கான்கார்டு சிவா முருகன் கோவிலுக்கு ஒரு பாத யாத்திரை நடந்தது. அதை பற்றி இங்கு சில வரிகள் எழுத அனுமதிக்க வேண்டும்.