23.2.15

கவிதை: எது பெரிது ஐந்தா அல்லது ஆறா?

கவிதை: எது பெரிது ஐந்தா அல்லது ஆறா?

ஐந்து பெரிது, ஆறு சிறிது – கவிஞர் வைரமுத்து
--------------------------------------------------------------------------
“சீ மிருகமே!”
என்று
மனிதனைத் திட்டதே
மனிதனே

எந்த விலங்கும்
இரைப்பைக்கு மேலே
இன்னொரு வயிறு வளர்ப்பதில்லை

எங்கேனும்
தொப்பைக் கிளியோ
தொப்பை முயலோ
பார்த்ததுண்டா ?
**
எந்த விலங்குக்கும்
சர்க்கரை  
வியாதியில்லை தெரியுமோ?
**
இன்னொன்று :
பறவைக்கு வேர்ப்பதில்லை
**
எந்த பறவையும்
கூடுகட்டி
வாடகைக்கு விடுவதில்லை
**
எந்த  
விலங்கும்
தேவையற்ற நிலம்
திருடுவதில்லை
**
கவனி மனிதனே

கூட்டு வாழ்க்கை இன்னும்
குலையாதிருப்பது
காட்டுக்குள்தான்
**
அறிந்தால்
ஆச்சரியம் கொள்வாய்
உடம்பை உடம்புக்குள் புதைக்கும்
தொழு நோய்
விலங்குகளுக்கில்லை
**
மனிதா
இதை
மனங்கொள்

கர்ப்பவாசனை
கண்டு கொண்டால்
காளை பசுவைச்
சேர்வதில்லை
**
ஒருவனுக்கொருத்தி
உனக்கு வார்த்தை
புறாவுக்கு வாழ்க்கை

எந்த  
புறாவும்
தன் ஜோடியன்றி
பிறஜோடி தொடுவதில்லை
**
பூகம்பம் வருகுது எனில்
அலைபாயும் விலங்குகள்

அடிவயிற்றில் சிறகடிக்கும்
பறவைகள்

இப்போது சொல்
அறிவில்
ஆறு பெரிதா ?
ஐந்து பெரிதா ?
**
மரணம் நிஜம்
மரணம் வாழ்வின் பரிசு

மாண்டால் -
மானின் தோல்  
ஆசனம்
மயிலின் தோகை விசிறி

யானையின் பல் அலங்காரம்
ஒட்டகத்தின் எலும்பு ஆபாரணம்
**
நீ மாண்டால் …

சிலரை
நெருப்பே  
நிராகரிக்கும்
என்பதால்தானே
புதைக்கவே பழகினோம்
**
“சீ மிருகமே !”
என்று
மனிதனைத் திட்டதே
மனிதனே
**
கொஞ்சம் பொறு
காட்டுக்குள் என்ன சத்தம் …

ஏதோ ஒரு மிருகம்
இன்னொரு மிருகத்தை
ஏசுகிறது
” சீ மனிதனே !”
--------------------------------------------------------------------
இணையத்தில் படித்தேன். நன்றாக இருந்தது. உங்களுக்கு அறியத்
தந்துள்ளேன்.

அன்புடன்,
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

15 comments:

  1. கவிதை நன்றாக இருக்கிறது. ஏற்கனவே படித்திருந்தாலும், இப்போது மீள் வாசிப்பும் நன்றாகவே உள்ளது.

    மிருகங்களுக்கு நோயே வருவதில்லை என்பது போல் சொல்வது அவ்வளவு சரியல்ல.குரங்குகள் தொழுநோயால் பாதிப்பு அடைகின்றன. யானை, மாடு போன்றவை சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றன.நாய்,பூனை வகைகள்
    தோல் நோய்கள் பலவும் ஏற்பட்டு துன்பத்திற்கு ஆளாகின்றன‌.

    பறவைகள் இருப்பிடத்திற்காகப் போரிடுகின்றன.பால் உணர்வில்,ஒரு சில விலங்குகள் தவிர, மற்றவைக்குத் தாய், உடன் பிறப்பு என்ற வேற்றுமை தெரிவதில்லை.

    மனிதர்களில் பெரும்பான்மையானோர் பாவச் செயல்களுக்குப் பயந்து ஒழுக்கத்தினைக் கடைப் பிடிப்பவர்களே. பழிபாவத்திற்கு அஞ்சாத ஒரு சிலரை வைத்து மனித இனத்தினையே எடைபோடமுடியுமா என்ன?!

    ReplyDelete
  2. போலீஸ் நாய்க்கு தொப்பை உண்டு
    சிங்கத்திற்கும் தொப்பை உண்டு

    கவிஞர் இவைகளை மறந்து விட்டார்
    கவிதைக்காக சொன்னாலும்

    மனிதனை வெறுக்கும் மனிதா
    மனிதம் புனிதமானது...

    தமிழ் மட்டுமே அதன்
    தரத்தை அறியும்

    அதை இந்த கவிஞர்
    அப்படியே மறந்தது ஏனோ?

    ReplyDelete
  3. ஆறு தான் பெரியது...
    அன்பு தமிழ் அறிந்த கவிஞர்

    கணக்கில் வீக் என்பதைதான் இந்த
    கவிதை காட்டுகிறது

    ஐந்தும் ஆறும் எண்களில் தான்
    ஐயமின்றி சொல்வோம்

    எண்ணத்தில் இல்லை என்று
    என்ன சரிதானே...

    அடுத்தவர்களை கெடுப்பவர்கள்
    அரசியலில் பெரியவராவதில்லையா

    ReplyDelete
  4. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்

    **மரணம் மனிதனுக்கு பரிசு **..மிக மிக அருமையான வரிகள் ..

    மனைவி மக்களோடு இருந்து ,,பேரன்,, பேத்திகளை,, கண்டு ,,பிதிர் கடன் தீர்த்து !!!.இன்று படுத்து நாளை சாவது *முதல் பரிசு*
    .

    ReplyDelete
  5. ஐயா வணக்கம்

    கவிப்பேரரசு வின் வைர " முத்து " க்கள்
    அருமை.

    கண்ணன் .

    ReplyDelete
  6. ///kmr.krishnan said...
    பழிபாவத்திற்கு அஞ்சாத ஒரு சிலரை வைத்து மனித இனத்தினையே எடைபோடமுடியுமா என்ன?!///

    அப்பா...
    ஆங்கரை தோழர்

    இப்போ தான்
    இந்த கருத்து பின் ஊட்டத்தில் தான்

    அய்யரோடு ஒத்து போகிறார்
    அவருக்கு நன்றியுடன் பாராட்டுக்கள்

    வேரிலிருந்து வரும்
    வேப்பிலை காற்று ருசிக்குதா?

    ReplyDelete
  7. ஜோதிட ஆசானுக்கு வணக்கம்.

    ReplyDelete
  8. /////Blogger kmr.krishnan said...
    கவிதை நன்றாக இருக்கிறது. ஏற்கனவே படித்திருந்தாலும், இப்போது மீள் வாசிப்பும் நன்றாகவே உள்ளது.
    மிருகங்களுக்கு நோயே வருவதில்லை என்பது போல் சொல்வது அவ்வளவு சரியல்ல.குரங்குகள் தொழுநோயால் பாதிப்பு அடைகின்றன. யானை, மாடு போன்றவை சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றன.நாய்,பூனை வகைகள்
    தோல் நோய்கள் பலவும் ஏற்பட்டு துன்பத்திற்கு ஆளாகின்றன‌.
    பறவைகள் இருப்பிடத்திற்காகப் போரிடுகின்றன.பால் உணர்வில்,ஒரு சில விலங்குகள் தவிர, மற்றவைக்குத் தாய், உடன் பிறப்பு என்ற வேற்றுமை தெரிவதில்லை.
    மனிதர்களில் பெரும்பான்மையானோர் பாவச் செயல்களுக்குப் பயந்து ஒழுக்கத்தினைக் கடைப் பிடிப்பவர்களே. பழிபாவத்திற்கு அஞ்சாத ஒரு சிலரை வைத்து மனித இனத்தினையே எடைபோடமுடியுமா என்ன?!/////

    உண்மைதான். உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  9. /////Blogger kmr.krishnan said...

  10. /////Blogger வேப்பிலை said...
    போலீஸ் நாய்க்கு தொப்பை உண்டு
    சிங்கத்திற்கும் தொப்பை உண்டு
    கவிஞர் இவைகளை மறந்து விட்டார்
    கவிதைக்காக சொன்னாலும்
    மனிதனை வெறுக்கும் மனிதா
    மனிதம் புனிதமானது...
    தமிழ் மட்டுமே அதன்
    தரத்தை அறியும்
    அதை இந்த கவிஞர்
    அப்படியே மறந்தது ஏனோ?//////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete
  11. ////Blogger வேப்பிலை said...
    ஆறு தான் பெரியது...
    அன்பு தமிழ் அறிந்த கவிஞர்
    கணக்கில் வீக் என்பதைதான் இந்த
    கவிதை காட்டுகிறது
    ஐந்தும் ஆறும் எண்களில் தான்
    ஐயமின்றி சொல்வோம்
    எண்ணத்தில் இல்லை என்று
    என்ன சரிதானே...
    அடுத்தவர்களை கெடுப்பவர்கள்
    அரசியலில் பெரியவராவதில்லையா////

    அடுத்துக் கெடுப்பவர்கள் அரசியலில் மட்டுமல்ல - எல்லாத் துறைகளிலும் இருக்கிறார்கள் சுவாமி!

    ReplyDelete
  12. ///Blogger Ramki said...
    Very True////

    நல்லது நன்றி!

    ReplyDelete
  13. ////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    **மரணம் மனிதனுக்கு பரிசு **..மிக மிக அருமையான வரிகள் ..
    மனைவி மக்களோடு இருந்து ,,பேரன்,, பேத்திகளை,, கண்டு ,,பிதிர் கடன் தீர்த்து !!!.இன்று படுத்து நாளை சாவது *முதல் பரிசு*/////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி கணபதியாரே1
    .

    ReplyDelete
  14. ////Blogger lrk said...
    ஐயா வணக்கம்
    கவிப்பேரரசு வின் வைர " முத்து " க்கள் அருமை.
    கண்ணன் .////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com