சிங்கார மயிலாட என்ன உண்டு?
பக்தி மலர்
இன்றைய பக்தி மலரை, சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப்பெருமானின் பாடல் வரிகள் நிறைக்கின்றன.
கேட்டு மகிழுங்கள்!
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் - முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
திருச் செந்தூரிலே வேலாடும்
திருப்புகழ் பாடியே கடலாடும்
(திருப்பரங்குன்றத்தில்)
பழநியிலே இருக்கும் கந்தப் பழம் - நீ
பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்
பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம் -
பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்
(திருப்பரங்குன்றத்தில்)
சென்னையிலும் கந்த கோட்டம் உண்டு - உன்
சிங்கார மயிலாடத் தோட்டம் உண்டு
உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை - அங்கு
உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை!
(திருப்பரங்குன்றத்தில்)
பாடலாக்கம்: பூவை செங்குட்டுவன்
இசை: குன்னக்குடி வைத்தியநாதன்
பாடியவர்கள்: சூலமங்கலம் ராஜலட்சுமி-பி.சுசீலா
திரைப்படம்: கந்தன் கருணை
Our sincere thanks to the person who uploaded this video in the net
வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!
நல்ல பாடல் பகிர்வு ஐயா...
ReplyDeleteGood evening sir,
ReplyDeleteஇனிமையான பாடல் பகிர்வுக்கு நன்றி ஐயா!
ReplyDeleteMURUGA PERUMANIN Sirantha padalkalil thuvum ondru ...Pakirvuku Nadri Ayya
ReplyDelete