24.12.14

நகைச்சுவை: உங்களைச் சிரிக்க வைக்காமல் விடப் போவதில்லை!


நகைச்சுவை: உங்களைச் சிரிக்க வைக்காமல் விடப் போவதில்லை!

1.
”உன் மாமனாருக்கு அனுமார் மேல ரொம்ப பக்தியாமே! அனுமாருக்கு தன் சொத்தை எல்லாம் எழுதி வச்சுட்டாராமே!”

”இது என்ன பெரிய விஷயம்? உன் மாமனார்கூடத்தான் அனுமாருக்குத் தன் பொண்ணையே கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்கிறார். அவர்தான் பெரிய பக்திமான்!”
---------------------------------
2.
”ஏன்னா, புடவைக்குப் போடறுதுக்காக கஞ்சி காய்ச்சி வச்சிருந்தேனே - எங்கே அது?”

”எனக்கு சாதம்தான் பிசைஞ்சு வச்சிருக்கேன்னு நினைச்சு சாப்பிட்டுட்டேனே!”
----------------------------------
3.
”பையனுக்கு என்ன சார் பேர் வெச்சிருக்கீங்க..?”

”லோராண்டி – னு வச்சிருக்கேன்…!”

”என்னய்யா பேர் இது, கேள்விப்பட்டதே இல்லையே..?”

”என்ன இப்படிச் சொல்லிட்டீங்க, சித்தர் பாடல்களில் இடம் பெற்ற பேர் சார் இது…!”

”என்ன பாடல் அது?”

”நந்தவனத்தி லோராண்டி..!”
----------------------------------------------
4
கணவன்: ”கசப்பான மருந்து கூட உன் கையால கொடுக்கறப்போ ஸ்வீட்டா இருக்கு செல்லம்…!”

மனைவி: ”கர்மம்… கர்மம்… நான் உண்மையிலேயே ஸ்வீட்தான் கொடுத்தேன்…இன்னைக்கு எனக்கு பர்த்டே..!”

கணவன்: ”............!!!!
----------------------------------------------------------
5
”மன்னா,நமது நாட்டு ராணுவ ரகசியத்தை ஒற்றன் எதிரி நாட்டு மன்னனிடம் சொல்லி விட்டான்".

"அமைச்சரே,நம்மிடம் தான் ராணுவமே கிடையாதே".

"அதைதான் சொல்லி விட்டான் மன்னா".
----------------------------------------------------
6
ரெண்டு மணிக்கு வீட்டில் நுழைந்த திருடனை அடித்து உதைத்துப் படுக்க வைத்துவிட்டாள் மனைவி. திருடனும் வாங்கிய அடியில் மயங்கிக் கிடந்தான்.

இன்ஸ்பெக்டர் : வெரிகுட்மா ..எப்படி உங்களால முடிஞ்சது..?”

மனைவியின் பதில்: “லேட்டா வந்த எம்புருசன்னு நெனச்சு சாத்திப் புட்டேனுங்க..”
------------------------------------------------------
7
”தினமும் ஆறு லிட்டர் தண்ணி குடிக்கணும்..!”

”அதெப்பிடி டாக்டர்? முன்னூறு மில்லி அடிக்கும்போதே தள்ளாடுதே..?”
------------------------------------------------------
8
ஒரு சாமியாரின் உண்மைக்கதை.

சிஷ்யன் : “குருவே! நீங்கள் சொன்னபடி ஐம்புலன்களையும் அடக்கப் பழகி விட்டேன். ஆனால், என் மனைவியை மட்டும் அடக்க முடியவில்லையே ...?”

குரு : “சிஷ்யா! அது முடியாமல்தானே நானே சாமியார் ஆனேன்?

( இப்படித்தான் சாமியார்கள் உருவாகிறார்களாம்..! )
---------------------------------------
இந்த எட்டில் எது மிகவும் நன்றாக உள்ளது?
(தொடரும்)

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

25 comments:

  1. குரு - சிஷ்யன்!..

    வளர்க ஆஸ்ரமம்!..

    ReplyDelete
  2. வணக்கம் வாத்தியாரே!!!

    3வது ஜோக் மிக அருமை. 8வது ஜோக் உண்மை.

    3வது ஜோக் தற்கால சமுதாயத்தின் புரிதல் தன்மையை உணர வைக்கிறது. இப்படிதான் விஷ்ணு சஹஸ்ரநாமத்திலிருந்தும் சில பெயர்கள் புரிந்து கொள்ளப்படுகின்றன.


    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்
    தூத்துக்குடி

    ReplyDelete
  3. ஐயா வணக்கம் ,
    4 வது நகைச்சுவை எனக்கு பிடித்தது இருக்கிறது .
    நன்றி ஐயா .

    ReplyDelete
  4. 1 சொத்து தரும் மாமனார் இப்போது இல்லை.. வெளிநாட்டு மாப்பிள்ளையிடமிருந்து சொத்து பறிக்கும் மாமனார்களே அதிகம்

    2. இப்போ பெண்கள் துவைப்பதில்லை பல வீடுகளில் ஆண்கள் சில வீடுகளில் மிஷின்
    3. இதுவாவது பராவாயில்லை
    4. பர்த்டே கசப்பான மருந்து தானே
    5. சோ.. நீ... யா..
    6. அடி உதாவததை என்று இதைத்தான் சொல்வார்களோ
    7. ஆறு லிட் அப்படியே குடிக்கனுமா
    8.அதனால் தான் உண்மையாக இருப்பவர்கள் சாமியார்களாவது இல்லை (அய்யரைப்போல)

    ReplyDelete
  5. இன்று எம்ஜிஆர் பற்றி
    இருக்கும் பதிவு என ஆவலுடன்

    வந்தேன் வந்ததும்
    வருத்தமான செய்தி முதலில்

    சிரிக்கச் சொல்லி தொர்ந்தது
    சிந்திக்க வைத்தது..

    வருத்தமும் சிரிப்பும் கலந்தது தான்
    வாழ்க்கை என்பதை சிம்பாளிக்காக

    பாலச்சந்தர் பாணியிலேயே சொல்லி
    பதிவு செய்தது..

    சபாஷ் வாத்தியாரே..

    ReplyDelete
  6. Respected Sir
    All are good, but I could not control my laughter for LORANDI.. 4, 5 and 6 continued that trend.

    ReplyDelete
  7. யக்குனர் பாலச்சந்தர் அவர்களுக்கு நானும் என் அஞ்சலியைச் செலுத்துகிறேன்.
    கமல், ரஜனி,போன்றவர்களை உருவாக்கியவர்.வங்காள இயக்குனர் ஷ்யாம் பெனகலுக்கு இணையாக வைத்துப் பேசப்பட்டவர்.ஒரு ஏ ஜி'ஸ் ஆஃபீஸ் கிளார்க்
    இந்த அளவு நாடகம் சினிமாவில் புகழ் பெறுவார் என்று யாருமே எதிர் பார்த்து இருக்க மாட்டார்கள்.

    நகைச்சுவையில் 3,6 எனக்குப் பிடித்தன‌.

    ReplyDelete
  8. anbudan vanakkam vathiyaar ayya ..ellame arumai.

    ReplyDelete
  9. ////Blogger துரை செல்வராஜூ said...
    குரு - சிஷ்யன்!..
    வளர்க ஆஸ்ரமம்!../////

    உங்கள் ரசனைக்கு நன்றி!

    ReplyDelete
  10. ////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
    வணக்கம் வாத்தியாரே!!!
    3வது ஜோக் மிக அருமை. 8வது ஜோக் உண்மை.
    3வது ஜோக் தற்கால சமுதாயத்தின் புரிதல் தன்மையை உணர வைக்கிறது. இப்படிதான் விஷ்ணு சஹஸ்ரநாமத்திலிருந்தும் சில பெயர்கள் புரிந்து கொள்ளப்படுகின்றன.
    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்
    தூத்துக்குடி/////

    நல்லது. நன்றி தூத்துக்குடிக்காரரே!

    ReplyDelete
  11. ////Blogger lrk said...
    ஐயா வணக்கம் ,
    4 வது நகைச்சுவை எனக்கு பிடித்தது இருக்கிறது .
    நன்றி ஐயா ./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  12. ////Blogger வேப்பிலை said...
    1 சொத்து தரும் மாமனார் இப்போது இல்லை.. வெளிநாட்டு மாப்பிள்ளையிடமிருந்து சொத்து பறிக்கும் மாமனார்களே அதிகம்
    2. இப்போ பெண்கள் துவைப்பதில்லை பல வீடுகளில் ஆண்கள் சில வீடுகளில் மிஷின்
    3. இதுவாவது பராவாயில்லை
    4. பர்த்டே கசப்பான மருந்து தானே
    5. சோ.. நீ... யா..
    6. அடி உதாவததை என்று இதைத்தான் சொல்வார்களோ
    7. ஆறு லிட் அப்படியே குடிக்கனுமா
    8.அதனால் தான் உண்மையாக இருப்பவர்கள் சாமியார்களாவது இல்லை (அய்யரைப்போல)/////

    எந்த அய்யர்.அதைச் சொல்லவில்லையே நீங்கள்? ஓஹோ உங்களையே சொல்லிக்கொள்கிறீர்களா? நல்லது. வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  13. /////Blogger வேப்பிலை said...
    இன்று எம்ஜிஆர் பற்றி
    இருக்கும் பதிவு என ஆவலுடன்
    வந்தேன் வந்ததும்
    வருத்தமான செய்தி முதலில்
    சிரிக்கச் சொல்லி தொர்ந்தது
    சிந்திக்க வைத்தது..
    வருத்தமும் சிரிப்பும் கலந்தது தான்
    வாழ்க்கை என்பதை சிம்பாளிக்காக
    பாலச்சந்தர் பாணியிலேயே சொல்லி
    பதிவு செய்தது..
    சபாஷ் வாத்தியாரே..////

    சபாஷ் போட்டதற்கு ஒரு விஷேசமான நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete
  14. ////Blogger Sundararajan Rajaraghavan said...
    Sir 7 th joke is real. R.Sundararajan////

    நல்லது. நன்றி சுந்தரராஜன்!

    ReplyDelete
  15. ////Blogger Dallas Kannan said...
    Respected Sir
    All are good, but I could not control my laughter for LORANDI.. 4, 5 and 6 continued that trend.////

    உங்களின் நகைச்சுவை உணர்வு வாழ்க! நன்றி!

    ReplyDelete
  16. ///////Blogger kmr.krishnan said...
    இயக்குனர் பாலச்சந்தர் அவர்களுக்கு நானும் என் அஞ்சலியைச் செலுத்துகிறேன். கமல், ரஜனி,போன்றவர்களை உருவாக்கியவர்.வங்காள இயக்குனர் ஷ்யாம் பெனகலுக்கு இணையாக வைத்துப் பேசப்பட்டவர்.ஒரு ஏ ஜி'ஸ் ஆஃபீஸ் கிளார்க் இந்த அளவு நாடகம் சினிமாவில் புகழ் பெறுவார் என்று யாருமே எதிர் பார்த்து இருக்க மாட்டார்கள்.
    நகைச்சுவையில் 3,6 எனக்குப் பிடித்தன‌.//////

    உண்மைதான். திறமை எங்கிருந்தாலும் அது வெளிப்படும் காலத்தில் நிச்சயம் வெளிப்படும். நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  17. ////Blogger hamaragana said...
    anbudan vanakkam vathiyaar ayya ..ellame arumai.////

    உங்களின் வணக்கத்திற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி கணபதியாரே!

    ReplyDelete
  18. ///Blogger Chandrasekaran Suryanarayana said...
    3,6,7,8 are good.////

    உங்களின் நகைச்சுவை உணர்வு வாழ்க! நன்றி நண்பரே!

    ReplyDelete
  19. ///Subbiah Veerappan said...
    எந்த அய்யர்.அதைச் சொல்லவில்லையே நீங்கள்? ஓஹோ உங்களையே சொல்லிக்கொள்கிறீர்களா? நல்லது. வாழ்க வளமுடன்!////

    அய்யர் என்றதும் உங்களுக்கு
    அவர் தான் நினைவுக்கு வருகிறாரா

    நல்லது
    நலமுடன் வாழ்க..

    ஒழுக்கத்தில் சிறந்த
    ஒப்புயர்வற்றவர்கள் "அய்யர்"

    பிறப்பாலோ
    பயிலும் தொழிலாலோ

    அய்யர் ஆக யாரும் முடியாது
    அதைத்தானே வள்ளுவம் சொல்கிறது

    அய்யர் என பெரியபுராணத்தில்
    அய்ந்து பேரை சேக்கிழார் அழைப்பர்

    அந்த ஐவரும் பிறப்பால்
    அவர்கள் அய்யர் அல்ல..

    விளக்கம் போதும் தானே
    விரிவாக சொல்லவும் வேண்டுமோ?

    ReplyDelete
  20. நகைப் பணி தொடரட்டும்
    நூல் விரைவில் வரட்டும்

    ReplyDelete
  21. ///Blogger வேப்பிலை said...
    ///Subbiah Veerappan said...
    எந்த அய்யர்.அதைச் சொல்லவில்லையே நீங்கள்? ஓஹோ உங்களையே சொல்லிக்கொள்கிறீர்களா? நல்லது. வாழ்க வளமுடன்!////
    அய்யர் என்றதும் உங்களுக்கு
    அவர் தான் நினைவுக்கு வருகிறாரா
    நல்லது
    நலமுடன் வாழ்க..
    ஒழுக்கத்தில் சிறந்த
    ஒப்புயர்வற்றவர்கள் "அய்யர்"
    பிறப்பாலோ
    பயிலும் தொழிலாலோ
    அய்யர் ஆக யாரும் முடியாது
    அதைத்தானே வள்ளுவம் சொல்கிறது
    அய்யர் என பெரியபுராணத்தில்
    அய்ந்து பேரை சேக்கிழார் அழைப்பர்
    அந்த ஐவரும் பிறப்பால்
    அவர்கள் அய்யர் அல்ல..
    விளக்கம் போதும் தானே
    விரிவாக சொல்லவும் வேண்டுமோ?////

    போதும் அய்யரே போதும். சேக்கிழார் இருந்திருந்தால் உங்களையும் சேர்த்து எண்ணிக்கையை ஆறாக்கி இருப்பார்! சரிதானே?

    ReplyDelete
  22. ////Blogger Mathu S said...
    நகைப் பணி தொடரட்டும்
    நூல் விரைவில் வரட்டும்////

    சனிப்பெயர்ச்சிதான் ஆகிவிட்டதே. இப்போது எனக்கு சனி பகவான் பதினொன்றில். அவர் ஆசியுடன் புத்தகம் கூடிய விரைவில் வெளிவரும்!

    ReplyDelete
  23. ////Blogger prabhu.s Kaduki said...
    super///

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com