12.12.14

அந்த எழில் காண இந்த விழிகள் போதுமா?

அந்த எழில் காண இந்த விழிகள் போதுமா?

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை 'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய முருகப் பெருமான் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
==============================================
கந்தன் எழில் காண இந்த இரு விழிகள்
எந்தவகை போதும்
கந்தன் எழில் காண
சிந்தையிலே முருகன் பந்தம் எனும் அலைகள்
வந்து வந்து மோதும்

சிந்தையிலே முருகன் பந்தம் எனும் அலைகள்
வந்து வந்து மோதும்
(கந்தன் எழில் காண)

செந்தில் பரங்குன்றம் திருத்தணிகைக் கண்டும்
என்றும் அவன் நினைவே 
திருவாவினன்குடியில் ... குமரன் திருவடியில் ...
தெண்டணிட்டும் நான் தணியேன்
(கந்தன் எழில் காண)

(சிந்தையிலே முருகன்)

தந்தைக்குத் தனிப்பொருளை ... தந்த சுவாமிமலை ...
சன்னிதியில் நின்றேன் 
செந்துவர் வாய்ச் சிரிப்பை ... சென்னிமலை சென்று ...
என்புறுகக் கண்டேன் 

நான் ... என்புறுகக் கண்டேன்
(கந்தன் எழில் காண)
(சிந்தையிலே முருகன்)

மருதமலை மேலே அழகுத் திருக்கோலம் பருகிக் களித்திருந்தேன்
வரதன் கொலுவிருக்கும் வயலூர் காட்சி தந்த வண்ணம் சுவைத்திருந்தேன்
வள்ளிமலை விராலி மயிலம் திருவருணை கழுகுமலைக் கடந்தேன்
புள்ளிருக்கும் வேளூர் சிக்கல் திருப்போரூர் போற்றி வழி நடந்தேன்

இன்பச் சிவக்கொழுந்து இருக்கும் இடமெல்லாம் இன்னமும் அலைந்திடவோ 
குன்றுதோரும் சென்று நின்று நின்று குவி குகனை தொடர்ந்திடவோ
எல்லையிலா எழிலை எங்கிருந்தும் காண வல்லமை தாரானோ
சொல்லவுணா சுகத்தில் தோய்ந்திருக்க வேலன்
உள்ளத்தில் வாரானோ ...

பாடலைப் பாடியவர்: 'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன் 
=========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

8 comments:

  1. அருமையான பாடல். இதில்வரும் புள்ளிருக்கு வேளூர் என்பது வைத்தீஸ்வரன் கோவில். முத்துக்குமாரசாமி என்ற முருகன் அங்கே மிகவும் சக்திவாய்ந்தவர்.
    செவ்வாய் பரிஹாரத்தலம்.

    ReplyDelete
  2. Thanks Sir.
    Also wishing our Only Super star for his Birthday and his film release.

    ReplyDelete
  3. ////kmr.krishnan
    முத்துக்குமாரசாமி என்ற முருகன் அங்கே மிகவும் சக்திவாய்ந்தவர்.
    செவ்வாய் பரிஹாரத்தலம். ///

    இத்துடன்
    இந்த சிறப்பை சொல்ல வேண்டும்

    இது தருமை ஆதீனத்தின்
    இப்போதைய பராமரிப்பில் உள்ளது

    கிருத்திகை நாள் ஒவ்வொன்றிலும்
    கால் வலி பொறுக்க பல மணி

    நேரம் நின்று அபிடேக ஆராதனை
    நேர்த்தியாக தரிசிக்கும் சுவாமியை

    தலை மீது கரம் வைத்து
    தலை வணங்குகிறோம்..

    திருக்கோயிலின்
    திருப்பணிக்கு உதவுபவர்கள்

    கரம் நீட்டுங்கள்
    கரன்சி நோட்டுக்களுடன்

    தோல் தொடர்பான
    நோய்களுக்கு பிராத்தனை ஸ்தலம்

    இத்தனை சிறப்புகளை
    இந்த அய்யர் சொல்லட்டுமென

    அன்போடு விட்டுக் கொடுக்கும்
    ஆங்கரை தோழருக்கு நன்றிகள்

    ReplyDelete
  4. ஓம் சரவணபவாய நம:
    ஓம் சரவணபவாய நம:
    ஓம் சரவணபவாய நம:

    ReplyDelete
  5. ஆசானே வணக்கம்.

    அவருக்கு என்ன இரண்டு பொண்டாட்டிகாரர்.

    ReplyDelete
  6. dash board படத்தை மாத்தி ரொம்ப நாளாச்சு.. உடனே மாத்துங்க...

    டேஷ் போர்டுக்கு படம் வேணும்னா சொல்லுங்க நாங்க தயார் பண்ணி அனுப்பறோம்

    ReplyDelete
  7. . அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ..
    பஞ்சாபி மக்கள் சர்தார்ஜி மிகவும் மகிழ்ச்சியானவர்கள் ...என்ன ஒரு விசேடம் நடந்தாலும் பாட்டு நடனம் என தூள் கிளப்புவார்கள் .!எனது வியாபார தொடர்பு .1985 .சர்தார்ஜி வீட்டில் திருமணம் .அழைப்பு போயிருந்தேன் .ஜாம்ஷெட்பூரில் 3 நாட்கள் மலை நேரம் ஒரே ஆட்டம் பாட்டம் வயது வித்தியசம் இல்லாது அனைவரும் கலந்து கொண்டனர்...உழைப்பாளிகள்
    .நாம் அவர்களிடம் சத்ஸ்ரீ அகால் என கூறினால் அவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. ...
    **சர்தார்ஜிகளில் பிச்சைகாரரை பார்க்க முடியாது.. !!!***...
    சமீபத்தில் அமெரிக்க சென்றபோது கூட அங்கு சர்தார்ஜிகள் வாடகை வண்டி...ஓட்டுனர்களாக உள்ளனர். .வயதானவர்கள் பெரிய மளிகை கடைகளில் சரக்கு வைக்க ..ஒழுங்கு.. செய்வதற்கு நிற்கிறார்கள் ..

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com