24.11.14

திரையிசை: சந்திரனையும் சூரியனையும் அஞ்சல்காரர்களாக்கிய கவிஞர்


திரையிசை: சந்திரனையும் சூரியனையும் அஞ்சல்காரர்களாக்கிய கவிஞர்

ரசித்த திரையிசைப் பாடல்

காதல் பாடல்களை எத்தனை எத்தனை ரசனையுடனும்,
கற்பனையுடனும் கவிஞர்கள் எழுதிக் கலக்கியுள்ளார்கள்.
அப்படி நல்ல வளமான கற்பனையுடனும், எளிமையான
வரிகளுடனும் அமைந்த பாடல் ஒன்றின் வரிகளையும்,
காணொளியையும் இன்று பதிவிட்டுள்ளேன். கச்சிதமான
இசையமைப்புடன் கண்ணையும் உள்ளத்தையும் கவரும்
விதமாகப் பாடல் படமாக்கப்பட்டுள்ளது,

அனைவரும், கேட்டு, பார்த்து மகிழுங்கள்,

அன்புடன்,
வாத்தியார்
-----------------------------------
காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டு வா
பேனா மையோ தீர்ந்திடும்

சந்திரனும் சூரியனும்
அஞ்சல் காரார்கள்
இரவு பகல் எப்பொழுதும்
அஞ்சல் உன்னை சேர்ந்திடும்

காதல்…

கடிதத்தின் வாரத்தைகளில்
கண்ணா நான் வாழ்கின்றேன்
பேனாவில் ஊற்றி வைத்தது
எந்தன் உயிரல்லோ ?

பொன்னே உன் கடிதத்தை
பூவாலே திறக்கின்றேன்
விரல் பட்டால் உந்தன்
ஜீவன் காயம் படுமல்லோ

அன்பே உந்தன் அன்பில்
ஆடிப் போகின்றேன்
செம்பூக்கள் தீண்டும் போது
செத்துச் செத்து பூப்பூக்கின்றேன்

காதல்…

கண்ணே உன் கால் கொலுசில்
மணியாக மாட்டேனா?
மஞ்சத்தில் உறங்கும் போது
சிணுங்க மாட்டேனா?

காலோடு கொலுசல்ல
கண்ணோடு உயிரரானாய்
உயிரே நான் உறங்கும்போது
உறங்க மாட்டாயா?

தப்பு செய்ய பார்த்தால்
ஒப்புக் கொள்வாயா?
மேலாடை நீங்கும் போது
வெட்கம் என்ன முந்தானையா ?

காதல்…
----------------------------------------
"கண்ணே உன் கால் கொலுசில்
மணியாக மாட்டேனா?
மஞ்சத்தில் உறங்கும் போது
சிணுங்க மாட்டேனா?"  என்ற வரிகள் பாடலின் முத்தாய்ப்பான வரிகள்
-----------------------------
படம் : ஜோடி (1999)
பாடல் : காதல் கடிதம் தீட்டவே
பாடலாசிரியர் : வைரமுத்து
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்கள் : எஸ் ஜானகி, உன்னி மேனன்
நடிப்பு: பிரசாந்த், சிம்ரன்
-------------------------------------
பாடலின் காணொளி வடிவம்:


our sincere thanks to the person who uploaded the clipping in the net
======================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

23 comments:

  1. அய்யா,
    பாடல் அருமை...நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது வந்த பாடல்.இளம் வயதினரிடையே பிரபலமான பாடல்.

    நீங்கள் எங்கள் பின்னுட்டத்திற்கு பதில் அளிக்கும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.உங்கள் பதிலின் முலம் நாங்கள் நிறைய கற்றுகொள்கிறோம் அய்யா.

    என்றும் பணிவுடன்,
    S .ரகுநாதன்

    ReplyDelete
  2. அஞ்சல் காரர்கள் தரும்
    அந்த கடிதங்கள் தாமதமாகவே வரும்

    என்பதை கவிஞரின் இந்த
    எழுத்துக்கள் தெளிவாக்குகிறது

    உயிரே நான் உறங்கும்போது
    உறங்க மாட்டாயா

    ReplyDelete
  3. வாத்தியார் ஐயாவிற்கு வணக்கம்.

    வாத்தியார் ஐயாவிற்கு வயது எண்ணிக்கை தான் கூடிவிட்டது மற்றபடி என்றும் மார்க்கண்டேச்வரன் தான் . ஐம்பதிலும் ஆசைவரும் இல்லையா ஐயா!

    :-))

    ஐம்பதிலும் ஆசைவரும் -
    சிவாஜி கணேசன் , K.R விஜயா - ரிஷிமூலம் - தமிழ் ரொமாண்டிக் சாங்

    http://www.youtube.com/watch?v=7UH6qn9v6wM

    ReplyDelete
  4. அருமையான மற்றும் எனக்கு மிகவும் பிடித்த பாடல் வாத்தியாரே... நினைவுட்டலுக்கு மிகவும் நன்றி....

    ReplyDelete
  5. Repected Sir
    It is one of my favourite songs.

    ReplyDelete
  6. வணக்கம் சார்.....

    ஐம்பதிலும் ஆசைவரும்
    ஆசையுடன் பாசம்வரும்
    கண்ணதாசன் சொன்னது!!

    கால்கொலுசில் மனியானாள்!
    60லும் ஆசைவருதாங்க சார்???

    ReplyDelete
  7. அய்யா, இந்தப் பாடலை நீங்கள் ஏற்கெனவே 14-1-2012 பதிவில் காதலர்களுக்குத் தனியாக அஞ்சல்காரர்கள் என்று தலைப்பிட்டு வழங்கியிருக்கீர்கள் .

    அழகான இப்பாடலை மீண்டும் வழங்கியதற்கு மிகவும் நன்றி

    ReplyDelete
  8. அய்யா வணக்கம் . இந்தப் பாடலை தாங்கள் ஏற்கெனவே 14-1-2012 அன்று காதலர்களுக்குத் தனியாக அஞ்சல்காரர்கள் என்ற தலைப்பில் வழங்கியுள்ளீர்கள். நல்ல பாடலை மீண்டும் வழங்கியதற்கு மிகவும் நன்றி

    ReplyDelete
  9. /////Blogger Regunathan Srinivasan said...
    அய்யா,
    பாடல் அருமை...நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது வந்த பாடல்.இளம் வயதினரிடையே பிரபலமான பாடல்.
    நீங்கள் எங்கள் பின்னுட்டத்திற்கு பதில் அளிக்கும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.உங்கள் பதிலின் முலம் நாங்கள் நிறைய கற்றுகொள்கிறோம் அய்யா.
    என்றும் பணிவுடன்,
    S .ரகுநாதன்/////

    பின்னூட்டங்களுக்கெல்லாம் பதில் அளித்துக்கொண்டிருக்கிறேனே சாமி. வேலைப் பளுவின் காரணமாக சிலநாட்களில் அது தாமதப்படலாம். அவ்வளவுதான்!

    ReplyDelete
  10. /////Blogger Regunathan Srinivasan said...
    அய்யா,
    பாடல் அருமை...நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது வந்த பாடல்.இளம் வயதினரிடையே பிரபலமான பாடல்.
    நீங்கள் எங்கள் பின்னுட்டத்திற்கு பதில் அளிக்கும் படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.உங்கள் பதிலின் முலம் நாங்கள் நிறைய கற்றுகொள்கிறோம் அய்யா.
    என்றும் பணிவுடன்,
    S .ரகுநாதன்/////

    பின்னூட்டங்களுக்கெல்லாம் பதில் அளித்துக்கொண்டிருக்கிறேனே சாமி. வேலைப் பளுவின் காரணமாக சிலநாட்களில் அது தாமதப்படலாம். அவ்வளவுதான்!

    ReplyDelete
  11. //Blogger வேப்பிலை said...
    அஞ்சல் காரர்கள் தரும்
    அந்த கடிதங்கள் தாமதமாகவே வரும்
    என்பதை கவிஞரின் இந்த
    எழுத்துக்கள் தெளிவாக்குகிறது
    உயிரே நான் உறங்கும்போது
    உறங்க மாட்டாயா////

    அப்படியா? உங்களுக்குத் தெரிந்தால் சரி! நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete
  12. //Blogger வேப்பிலை said...
    அஞ்சல் காரர்கள் தரும்
    அந்த கடிதங்கள் தாமதமாகவே வரும்
    என்பதை கவிஞரின் இந்த
    எழுத்துக்கள் தெளிவாக்குகிறது
    உயிரே நான் உறங்கும்போது
    உறங்க மாட்டாயா////

    அப்படியா? உங்களுக்குத் தெரிந்தால் சரி! நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete
  13. ////Blogger Maaya kanna said...
    வாத்தியார் ஐயாவிற்கு வணக்கம்.
    வாத்தியார் ஐயாவிற்கு வயது எண்ணிக்கை தான் கூடிவிட்டது மற்றபடி என்றும் மார்க்கண்டேச்வரன் தான் . ஐம்பதிலும் ஆசைவரும் இல்லையா ஐயா!
    :-))
    ஐம்பதிலும் ஆசைவரும் -
    சிவாஜி கணேசன் , K.R விஜயா - ரிஷிமூலம் - தமிழ் ரொமாண்டிக் சாங்
    http://www.youtube.com/watch?v=7UH6qn9v6wM/////

    உடம்பிற்குத்தான் வயது. மனதிற்கு ஏது வயது ராசா?

    ReplyDelete
  14. ////Blogger BLAKNAR said...
    அருமையான மற்றும் எனக்கு மிகவும் பிடித்த பாடல் வாத்தியாரே... நினைவுட்டலுக்கு மிகவும் நன்றி..../////

    உங்கள் விருப்பத்தைத் தெரிவித்தமேன்மைக்கு நன்றி முத்து நகர்க்காரரே!

    ReplyDelete
  15. ////Blogger BLAKNAR said...
    அருமையான மற்றும் எனக்கு மிகவும் பிடித்த பாடல் வாத்தியாரே... நினைவுட்டலுக்கு மிகவும் நன்றி..../////

    உங்கள் விருப்பத்தைத் தெரிவித்தமேன்மைக்கு நன்றி முத்து நகர்க்காரரே!

    ReplyDelete
  16. //Blogger sundari said...
    vanakkam sir,////

    உங்களின் வணக்கத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  17. //Blogger sundari said...
    vanakkam sir,////

    உங்களின் வணக்கத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  18. ///Blogger Dallas Kannan said...
    Repected Sir
    It is one of my favourite songs.////

    நல்லது. நன்றி கண்ணன்!

    ReplyDelete
  19. ///Blogger Dallas Kannan said...
    Repected Sir
    It is one of my favourite songs.////

    நல்லது. நன்றி கண்ணன்!

    ReplyDelete
  20. ////Blogger Sakthivel K said...
    வணக்கம் சார்.....
    ஐம்பதிலும் ஆசைவரும்
    ஆசையுடன் பாசம்வரும்
    கண்ணதாசன் சொன்னது!!
    கால்கொலுசில் மனியானாள்!
    60லும் ஆசைவருதாங்க சார்???/////

    கற்பனைக்கும், ரசனைக்கும், ஆசைக்கும், மனதிற்கும் வயது ஏது சாமி?

    ReplyDelete
  21. ////Blogger Sakthivel K said...
    வணக்கம் சார்.....
    ஐம்பதிலும் ஆசைவரும்
    ஆசையுடன் பாசம்வரும்
    கண்ணதாசன் சொன்னது!!
    கால்கொலுசில் மனியானாள்!
    60லும் ஆசைவருதாங்க சார்???/////

    கற்பனைக்கும், ரசனைக்கும், ஆசைக்கும், மனதிற்கும் வயது ஏது சாமி?

    ReplyDelete
  22. /////Blogger NAGARAJAN said...
    அய்யா, இந்தப் பாடலை நீங்கள் ஏற்கெனவே 14-1-2012 பதிவில் காதலர்களுக்குத் தனியாக அஞ்சல்காரர்கள் என்று தலைப்பிட்டு வழங்கியிருக்கீர்கள்
    அழகான இப்பாடலை மீண்டும் வழங்கியதற்கு மிகவும் நன்றி//////

    அப்படியா? நினைவில் இல்லை. மீண்டும் ஒருமுறை படிப்பதால்/கேட்பதால் தவறில்லை! அதான் நன்றி சொல்லிவிட்டீர்களே! மேட்டர் ஓவர்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com