Astrology: quiz number.70 : எப்போது நோய் வந்தது? வந்த நோய் என்ன செய்தது?
Quiz No.70
புதிர் போட்டி எண்.70 விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!
28.10.2014
Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!
இன்றைப் பாடத்திற்கு மூன்று கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்விகள்:
கீழே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம்.
ஜாதகரின் 6ஆம் வீட்டை அலசிப் பதில் எழுதுங்கள். அவருக்கு கடுமையான உடல் உபாதைகள் உண்டாகின. அது எந்த வயதில் உண்டானது? எத்தனை காலம் அவதிப்பட்டார். அதில் இருந்து, அதாவது உடல் நோய்களில் இருந்து மீண்டு வந்தாரா? அல்லது வரவில்லையா? என்பதை அலசி பதிலை எழுதி அனுப்புங்கள். கேள்விகளுக்கு உரிய பதிலை மட்டும் எழுதுங்கள்.
கேள்விகள்:
1. எந்த வயதில் நோய் வந்தது?
2. எத்தனை காலம் அது படுத்தி எடுத்தது?
3. ஜாதகர் அதிலிருந்து குணமாகி மீண்டு வந்தாரா அல்லது வரவில்லையா?
திருமணத்தை வைத்தே கேள்விகள் எதற்கு? என்று மாணவர் ஒருவர் கேட்டுக்கொண்டே இருந்தார். அவருக்காக இன்றையை அலசலை வேறு பக்கம் திருப்பியிருக்கிறேன்.
நவாம்ச சக்கரம்
அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!
ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!
உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
-------------------------------------------------------------------
எனது மோடத்திற்கு காய்ச்சல் வந்து, நேற்று படுத்துக்கொண்டு விட்டது. WIFI வேலை செய்யவில்லை. அதனால் நேற்று வகுப்பறையில் பதிவை வலை ஏற்ற முடியவில்லை. கவலை வேண்டாம். அந்த ஒரு நாள் இழப்பை இந்த வாரம் வெள்ளிக்கிழமைக்குள் கூடுதலாக பதிவுகளை ஏற்றி சரி செய்து விடுகிறேன்
-------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
அய்யா,
ReplyDeleteModem காய்ச்சல் என்றீர்களே. நீங்கள் BSNL இணைப்பு வைத்திருக்கிறீர்களா?
அன்புள்ள வாத்தியாருக்கு,
ReplyDeleteவணக்கம்.
Quiz No.70ற்கு பதில்.
மிதுன லக்கினாதிபதி புதன் 12ல், அதன் மீது உச்சம் பெற்ற சுக்கிரனுடன் கூட்டு சேர்ந்த 8ம் அதிபதி சனியின் பார்வை. தீராத நீர் சம்பந்த பட்ட நோய்.
1வயதிற்குள் ராகு திசையில் விஷக்கடி. வியாழ திசையில் (18வயது வரை) வயிற்று உபாதைகளும் வந்து விலகி இருக்கும்.
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்
தூத்துக்குடி.
வாத்தியார் ஐயாவிற்கு மாணவனின் வணக்கங்கள்.
ReplyDeleteRespected Sir,
ReplyDeleteHe got dices in 23rd age Two years he struggled lot. Saturn Dasa - Kethu Bukthi.
He recovered on 26th age Saturn Dasha & Venus Bukthi
Regards
rmsrithar
வணக்கம் சார்...
ReplyDeleteஅன்பர் ஜாதகத்தில்...
லக்னாதிபதி விரையத்தில்.கேதுவுடன்
6 ஆம் அதிபதி ஆட்சி!! அதுவும் ராகுவுடன்!!!
இதுக்கது நீளம்.
புழிப்பில்அவுங்கப்பன் என்ற நிலை!!!
சனி அஸ்தமனம்........
சனி திசையில் நோய்வந்திருக்கும்
கேதுபுத்தி முடியும்வரை நோய்
இருந்திருக்கும்.
5, 9.ஆம் அதிபதி 10ல் சேர்ந்ததாலும்...
சுக்கிரன் உச்ச வர்க்கோத்தமம்
பெட்றதாலும்....
புண்ணீயம் இருப்பதால்
மீண்டுவந்திருப்பார்!!!
வணக்கம் குரு,
ReplyDeleteஇந்த ஜாதகருக்கு 44 வயதில், புதன் திசை சூரிய புக்தி, சனி அந்திரம் ஏழரை சனி (விரையத்தில்) ரத்த புற்று நோயோ, ரத்தம் நீர்த்துபோதல் அல்லது ரத்த சம்பந்தமான நோய் ஏற்பட்டு மரணம் சம்பாவிதிருக்கலாம் அல்லது மரணவாசல் வரை சென்று சந்திர புக்தியில் நலமாடைந்திருகலாம். அப்படியே பிழைத்திருந்தாலும் கேது திசை சனி புத்தியில் ஆயுளுக்கு பங்கம் வந்திருக்கும்.
நன்றி
செல்வம்
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
ReplyDeleteமிதுன லக்ன ஜாதகரான இவருக்கு,
லக்னாதிபதி புதன் 12ல் கேதுவுடன் அமர்ந்து 6ம் அதிபதி செவ்வாயாலும், ராகுவாலும், சனியாலும் பார்க்கப் படுவதால் லக்னாதிபதி க்டுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்.
லக்னத்திற்கும் செவ்வாயின் பார்வை இருக்கிறது. எனவே ஜாதகர் கண்டிப்பாக நோய்வாய்ப் படுவார்.
அவருடைய 37 வது வயதில் புதன் தசை புதன் புக்தியில் நோய்வாய்படுவார். விருச்சிகத்தில் ராகு செவ்வாய் சம்பந்தம் இருப்பதால் மறைவு ஸ்தானத்தில் கட்டி ஏற்பட்டு அதனால் வலி அதிகமாகி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்திருப்பார்.
சுமார் ஆறு வருடங்களுக்கு நோயினால் அவஸ்தைப் பட்டிருப்பார்.
ஆனால் 6ம் அதிபதி 6இலேயே ஆட்சி பெற்று இருப்பதாலும், லக்னாதிபதிக்கு குரு பார்வை இருப்பதாலும் நோயிலிருந்து விடுபட்டிருப்பார்.
Dear Sir,
ReplyDeleteThe person got decease on mercury dasa around the age of 45. Rahu with mars aspects mercury. So he might have suffered due to blood related decease and might have died due to that because of kethu join with mercury.
Thanking you sir.
ஜாதகர் 26 ஏப்ரல் 1937ல் காலை 10மணி 9 நிமிடம் 30 வினாடிக்குப்பிறந்தவர்.
ReplyDeleteஉஷ்ண சமபந்தமான, குருதி நோய்;ரத்த அழுத்தம்,இதய சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டார். இவை துவங்கிய போது அவர் வயது 54.
60 வயது வரை நோயால் 6 வருடங்கள் துன்பம்.
செரிபரல் ஹெமரேஜால் 60 வயதில் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
வீடு மாற்றம் செய்து கொண்டுள்ள சூழலில் அவசரமாக எழுதுகிறேன்.முழுதும் கவனம் செலுத்த முடியவில்லை. மன்னிக்கவும்.
அய்யா வணக்கம்.
ReplyDeleteமிதுன லக்கினம், துலா ராசி ஜாதகர்.
லக்னாதிபதி புதன் 12ல் மறைவு. கூடவே, கேதுவின் கூட்டணி வேறு.இந்த கூட்டணியை தன் 3ம் தனிப்பார்வையாக அட்டமாதி சனி பார்க்கிறார். ஆறாம் அதிபதி செவ்வாய் தன் சொந்த வீடான விருச்சிகத்தில் 6மிடத்திலேயே ராகுவுடன்
உள்ளார். செவ்வாய்+ ராகுவின் பார்வை லக்னாதிபதி புதனின் மேல் உள்ளது.முதல் நிலை சுபக்கிரகமான குரு 8ல் நீசமடைந்து மறைந்து விட்டார்.
அவரின் 5ம் தனிப் பார்வை லக்னாதிபதி புதனின் மேலுள்ளது.
ஜாதகருக்கு 18 வயது முடிந்த பிறகு வந்த சனி தசையில் உடல் நலம் குன்றியது. அதற்கு பிறகு வந்த புதன் தசையில் உடல் உபாதைகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தன. பிறகு வந்த கேது தசையில் வியாதிகள் தீவிரமடைந்து 55 வயதில் உடல் நலம் மோசமாகியது. மீண்டு வந்திருக்க மாட்டார் என்றுதான் நினைக்கிறேன்.
வாத்தியார் ஐயாவிற்கு மாணவர்களின் பணிவான வணக்கங்கள்.
ReplyDeleteஇன்றைய பாடத்தின் பதில்
வழக்கம் போல என்னுடைய " அண்ணா " ச்சியின் பதில்.
இந்த ஜாதகரின் ஜாதகம் ஆனது வாழ்நாள் முழுவதும் நோயுடன் தான் இருந்து இருப்பார் .
காரணங்கள் ;-
1. மிதுன லக்னதிர்க்கு 6 ம் அதிபதி ஆட்சி பெற்று வலுவான அமைப்புடன் உள்ளார்.
2. ஆறாம் அதிபதி உச்சம் பெற்ற ராகுவுடன் இணைந்து இருப்பது ஆகும்.
3. லக்னாதிபதி மற்றும் சுக ஸ்தானாதிபதியான புதன் 12 ல் மறைந்து கேதுவுடன் இணைந்து இருப்பது ஆகும்.
4. குரு திசையில் உடல் நிலையில் முன்னேற்றம் இருந்து இருக்கும்.
5. பிறந்தது முதல் நோயிடுடன் தான் வாழ்க்கையை கழித்து கொண்டு இருப்பார்.
6. அம்சத்தில் சுக ஸ்தானாதிபதி ஆறாம் அதிபதியுடன் இணைந்து இருப்பது ஆகும்.
7. ஆறாம் அதிபதி வலிமையுடன் இருப்பதால் நோயை தாங்க கூடிய " சக்தி " அவருக்கு இயற்கையிலே இருந்து இருக்கும்.
வாழ்க வளமுடன்.
அன்புள்ள வாத்தியார்க்கு.....
ReplyDeleteகேள்விகள்:
1. எந்த வயதில் நோய் வந்தது?
2. எத்தனை காலம் அது படுத்தி எடுத்தது?
3. ஜாதகர் அதிலிருந்து குணமாகி மீண்டு வந்தாரா அல்லது வரவில்லையா?
1.மேற்கூறிய ஜாதகர்க்கு/ஜாதகிக்கு தன்னுடய 30வது வயதில் அதாவது புதன் தசை புதன் புத்தியில் நோய்/விபத்து வந்திருக்கிறது/நடந்திருக்கிறது.
காரனம்:- புதன் லக்கினாதிபதி அவர் 12-ம் இடத்தில் இருந்து நேர் பார்வையாக 6-ம் இடமான ரோக ஸ்தானத்தை பார்க்கிறார்.
2.8-ம் இடத்து அதிபதி பரிவர்த்தனை அடைந்திருப்பது தீய பலன்ங்களையே தரும்.. அந்த நோயின் தாக்கம் குறைந்தது 28 மாதங்களாக வாட்டி வதக்கி இருக்கும்
காரனம்:- புதன் தசை புதன் புத்தி 28 மாதங்கள்..
3.அவர் மீண்டு வரவில்லை...
காரனம்:- 6-ம் இடமான ரோக ஸ்தான அதிபதியோடு இராகு சேர்வதால் வந்த வினை மேலும் லக்கினாதிபதி நேர் பார்வை அது மட்டுமா 8-ம் இடத்து அதிபதி பரிவர்த்தனை இத்துனையும் சேர்த்து பாவம் அவரை எழுந்திருக்கவிடவில்லை... தன்னுடைய 33 வது வயதில் மரணத்தை தழுவ வேண்டியதாகிவிட்டது.....
அங்காரகன் ஆட்சி, இராகு உச்சம் இருந்தும் பலன் இல்லாமல் போய்விட்டது.....
புதிர் எண் 70க்கான விடை.
ReplyDelete லக்னாதிபதி 12ல் விரையமானர். குரு நீசம். சுக்கிரன் உச்சம்.
ஆனாலும் 6ல் இருக்கும் ஆட்சி உள்ள செவ்வாயும், ராகுவும் நீண்ட ஆயுளை கொடுக்கும். எதிரிகளை விரட்டும். ஆயுள் காரக சனி 10ல் இருந்து காப்பாற்றும். ஆத்ம காரகன் சூரியன் 11ல், ராசியில் உச்சமானலும், நவாம்சத்தில் கேது உடன் சேர்க்கை உடல் உபாதையை மாறி மாறி கொடுத்து கொண்டு இருந்தாலும் ஆயுள் தீர்க்கம். மரணம் ச்ந்த்ர திசையில் தான் 87 வயதிற்கு பிறகு தான்.
நாராயணன், புதுச்சேரி.
Respected Sir,
ReplyDeleteMy answer for our Quiz No.70:
1. He was suffered by disease from his 36 years.
2. Sixteen years suffered.
3. He couldn't overcome and he died.
Reasons:.
1. Lagna lord is sitting in 12th place along with kedu. its bad.
2. In sixth house, Raghu is sitting along with Mars and both aspecting lagna lord.
3. The authority for body hemmed between Saturn and Kedu.
4. Saturn aspects lagna lord. It's worst.
5. At the time of birth also he suffered for one year.
6. When the lagna lord dhasa started, his problem also started by disease (may be dialysis) since sixth house is watery sign and aspects lagna lord.
7. Yogakaraga also clutched by Saturn.
8. In Bhudan dasa sani puththi he passed away.
With kind regards,
Ravichandran M.
புதிர் எண்: 70 இற்கான விடை !!!!
ReplyDeleteஅன்பர் ஏப்ரல் 26 1937 இல் பிறந்திருப்பார் !!!! சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, மிதுன லக்கினம். லக்கினாதிபதி புதன் விரையத்தில் மற்றும் மேஷ ரிஷப ராசி சந்திப்பில்,லக்கினாதிபதி கேதுவின் பிடியில், ஆறாம் அதிபதி செவ்வாய் மற்றும் எட்டாம் அதிபதி சனியின் பார்வையில் !!!! 3 ஆம் வீடு, ஆறாம் வீடு மற்றும் எட்டாம் வீடுகள் முறையே 33, 34,31 பரல்கள்; ஆகவே இவர் கஷ்டபடவே பிறந்தவர். ஆறாம் அதிபதி ஆறாம்வீட்டிலே இருந்தாலும் அவர் வக்கிர நிலையில் ராகுவுடன் !!!! ராகு திசை 1 வருடம் 11 மாதங்கள் முடிந்தவுடன், குரு திசை, குரு 7 மற்றும் 10 ஆம் அதிபதி, 8இல் நீசம், மேலும் அவர் எட்டாம் அதிபதி சனியுடன் பரிவர்த்தனை, எட்டாம் அதிபதி சனி வக்கிர நிலையில் உள்ள பனிரெண்டாம் அதிபதி சுக்கரனுடன் சேர்க்கை. லக்கினத்திற்கு ஆறாம் அதிபதி செவ்வாயின் பார்வையை தவிர வேறு எந்த சுபகிரக பார்வையும் இல்லை !!! பிறந்தது முதல் சுகக்கேடு குரு திசை, மற்றும் சனிதிசை கடந்து வாழ்ந்திருந்தால் அபூர்வம் !!!!! மத்திம ஆயுள் ஜாதகம் !!!!
இப்படிக்கு
சிவச்சந்திரன்.பா.
Question No. 70
ReplyDeleteவணக்கம்
1.பிறந்ததிலிருந்தே இடது கால் சம்மந்தமான வியாதியுடன் அல்லது கால் உணமாகவோ பிறந்திருப்பார்.
2.சுமார் 54 வருட காலம் வியாதியில் இருந்து இருப்பார்.
3.உச்சமான சுக்கிரனுடன் சனி கூட்டு இருப்பதால், சுக்கிரதசையில் வியாதியிலிருந்து மீண்டு வந்து இருப்பார்.
மிதுன லக்கினம், லக்கினாதிபதி புதன் 12ல் கேதுவுடன் கூட்டு.
பிறக்கும் பொழுதே ராகு தசை. 1வது வயதில் இருந்து ராகு தசையில் 6ம் வீட்டு அதிபதி செவ்வாய்யுடன் கூட்டு.
6ம் வீட்டில் செவ்வாய் இருந்தால் கால்கள் சம்மந்தாமான நோய்கள் ஏற்படும்.
12ம் வீடு கால்கள் சம்மந்தமான நோய் உண்டாகும். 12ல் லக்கினாதிபதி புதன் இருப்பதால் கால்கள் சம்மந்தாமான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
6ம் வீடு விருச்சிக ராசி. அதிபதி செவ்வாய் 6ம் வீட்டில் ராகுவுடன் கூட்டு.
செவ்வாய்யின் 7ம் பார்வை 12ல் உள்ள லக்கினாதிபதி புதனின் மீது.
6ல் உள்ள ராகுவின் 7ம் பார்வை 12ல் உள்ள புதனின் மீது உள்ளது.
10ல் உள்ள சனியின் 3ம் பார்வை 12ல் உள்ள புதனின் மீது.
8ம் வீட்டில் குரு நீசம் மகரத்தில். நீசமான குருவின் 5ம் பார்வை 12ல் உள்ள புதனின் மீது. மேலும்,
சந்திரனிலிருந்து 6ம் வீடு மீன ராசி அதில் சனி அமர்ந்துள்ளார். அதிபதி குரு 8ம் வீட்டில். அவருடைய 5ம் பார்வை 12ல் உள்ள புதனின் மீது.
சந்திரசேகரன் சூரியநாராயணன்
Respected Sir
ReplyDeleteDifferent kind if quiz and little difficult.
Kathu starts the kala sharba dosam. Laknathipathi in 12th. but he has some good yogams too and guru also looks at 12th place.
I wanted to say his diseases started in Sani dasa mars period. But Sani and Guru parivarthani made me say that he fell ill after 77 in Mars dasa and continued in Ragu dasa. He did not come out of the illness.