15.10.14

Astrology: quiz number.69 : மயக்கமா, கலக்கமா, மனதிலே குழப்பமா?


Astrology: quiz number.69 : மயக்கமா, கலக்கமா, மனதிலே குழப்பமா?

Quiz No.69

புதிர் போட்டி எண்.69 விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

15.10.2014

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு ஒரே ஒரு கேள்வி மட்டுமே! அந்தக் கேள்விக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்விகள்:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அம்மணியின் ஜாதகம்.






ஜாதகியின் 7ஆம் வீட்டை அலசிப் பதில் எழுதுங்கள். அவருக்கு திருமணம் நடைபெற்றதா? அல்லது திருமணமாகவில்லையா? திருமணம் நடைபெற்றது என்றால் எப்போது நடைபெற்றது? திருமணமே ஆகவில்லை என்றால், ஏன் ஆகவில்லை என்பதை அலசி பதிலை எழுதி அனுப்புங்கள். கேள்விக்கு உரிய பதிலை மட்டும் எழுதுங்கள்.

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

21 comments:

  1. வாத்தியாருக்கு வணக்கம்,

    திருமணம் வியாழ திசையின் முடிவில் நடைபெற்றது. விவாக ரத்தும் பெற்றார்.

    அம்மணியின் ஜாதகத்தில் மிதுன லக்கினத்தின் அதிபதி மற்றும் யோகாதிபதி புதன் லக்கினதிலேயே, கேந்த்ராதிபத்திய தோஷம், களத்திர ஸ்தானாதிபதி 8ல், அதுவும் வக்கிரம் பெற்ற சனியுடன் கூட்டு, அதன் மீது சூரியனின் பார்வை, பற்றாததிர்க்கு சந்திரன் மீது வக்கிர சனியின் பார்வை. புனர்பூ தோஷம். டைவர்ஸ் பெற்று கொடுத்தார்.


    அன்புள்ள மாணவன்,

    பா. லக்ஷ்மி நாராயணன்
    தூத்துக்குடி.

    ReplyDelete
  2. வணக்கம் சார்...

    அம்மனிக்கு திருமணம்!!!
    சனி திசையில் நடந்திருக்கும்.
    அதேசனிதிசையில்
    பிரிவினையும் நடந்திருக்கும்.

    புதனும்,சுக்கிரனும் கைகொடுப்பார்கள்.

    ReplyDelete
  3. Dear Guruji,

    1.Guru is neecham but it become neechabanga raja yogam because it is with lord eight lord. eight lord in its own house.
    2.Venus in 12 house but has jupiter aspect.
    3.Strong Lagna lord and it's view on 7th house.
    4.Guru view on 2nd house.
    5.Guru in its own house and form gajakesari yogam in navamsa.
    6.Venus is also well placed in navamsa.

    Definitely there is marriage, it should have been on saturn dasa mercury sub period.

    ReplyDelete
  4. Respected Sir
    Here is my quick analysis.

    Definitly Married:
    1. Laknathipathi Budha in laknam and looks 7th house.
    2. 7th lord Guru is in 8th house and neecham, but in own house in navamsam
    3. Sukra is in 12th house, but its own house.

    Mariage is delayed due to Guru in 8th house with Sani and Sun looks at it. She married in the mid sani dasa, Sani dasa/Chandra Budhi

    ReplyDelete
  5. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

    மிதுன லக்ன ஜாதகிக்கு, லக்னாதிபதி புதன் லக்னத்திலேயே ஆட்சி பெற்று இருக்கிறார். அவருக்கு தீயவர்கள் பார்வை இல்லை. குடும்ப ஸ்தான அதிபதி சந்திரன் திரிகோணத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து சனியின் 10ம் பார்வையை பெறுகிறது. அதனால் புனர்பூ தோஷம் ஏற்படுகிறது. எனவே திருமணம் தாமதமாகும்.

    ஏழாம் அதிபதியான குரு நீச்சம் அடைந்திருந்தாலும் சந்திரனுக்கு கேந்திரத்தில் இருப்பதால் நீசபங்க ராஜ யோகமாகி விடுகிறது. இந்த அமைப்பு கஜகேசரி யோகத்தையும் ஏற்படுத்துகிறது. நவாம்சத்திலும் குரு மீனத்தில் ஆட்சி பெற்று சந்திரன் சேர்க்கை பெற்றுள்ளது.

    இத்துடன் செவ்வாயும் சுக்கிரனும் 6 மற்றும் 5ம் வீடுகளுக்கு அதிபதிகளாகி பரஸ்பர கேந்திரங்களில் இருப்பதாலும் ஜாதகிக்கு திருமணம் நடைபெற்று இருக்கும். அதிலும் யோக்காரகனான சுக்கிரன் ரிஷபத்தில் ஆட்சி பெற்று அமர்ந்து குருவின் பார்வையைப் பெறுகிறது. எனவே ஜாதகிக்கு 1989 ல் அவருடைய 28 வது வயதில் சனி திசை சுக்கிர புக்தியில் திருமணம் நடைபெற்று இருக்கும்.

    ReplyDelete
  6. அன்புடன் வணக்கம் வாத்தியார் அய்யா .,
    புதிர் எண் 69.

    1.மிதுன இலக்கணம் ..லக்னத்தில் புதன் ஆட்சி

    2..7ம் வீடு தனுசு அதிபதி 8ல் உடன் ஆட்சி பெற்ற சனி ..7ம் வீட்டதிபதி குரு நீசம்கி விட்டார்...மஞ்சள் கொடுக்க கூடியவர் டம்மி ஆகிவிட்டார் .

    3..களஸ்த்ரா காரகன் சுக்கிரன் ஆட்சி பலத்துடன் .மாந்தியோடு கூட்டணியாக லக்னத்திற்கு 12 ல் ..பேஷ் பேஷ் ரெம்ப மோசம் அயன சயன சுக போஹம் ..லேது ...

    4..பாக்கியம் .9ம் மிடம் கும்பத்தில் கேது ...7 மிடத்தை யாரவது சுபர் பார்வை உள்ளத ?? இல்லை .

    5....2 ம் வீட்டுக்காரன் சந்திரன் 5 ல் தனித்து புனற்பு தோஷம் ...2ல் சூரியன் தன வீட்டிற்கு 12ல் ..

    6..ஆரம்பத்தில் ரா கு திசை .பின்னர் குரு 16 வருடங்கள் ஆக வயது 20 பின்னர் சனி 8 ம்வீட்டுகாரன் திசை .ஆக 39 வயது அப்புறமாக லக்னாதிபதி திசை ...புதன் ..எங்கே ...???ஆனால் ஆயுள் பலமாக இருக்கும் ...

    7...மன்கஸ்டத்துடன் ..அலசியது ...!!!

    இந்த பெண்ணுக்கு திருமணம் ஆவதில்லை. ..s.n.ganapathi

    ReplyDelete
  7. அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
    கொடுக்கப் பட்டுள்ள புதிருக்கான விடை:
    ஜாதகிக்கு திருமணம் தனது 31வது வயதில் சனி தசை சூரியன் புத்தியில் நடந்திருக்க வேண்டும்.
    அலசல்:
    1) மிதுன லக்கினத்தில் லக்கினாதிபதியும், சுகாதிபதியுமான புதன் சுப பலத்தில் இருந்து களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டையும் பார்வை செய்கிறார். லக்கினமும்,4 மற்றும் 7ம் இடமும் சுப பலம் பெற்றுள்ளன.
    2) குடும்பாதிபதி சந்திரன் பூர்வபுன்னிய ஸ்தானத்தில் அமர்வு, ஸ்தானாதிபதி சுக்கிரன் 12ல் உச்சம்.
    சுக்கிரனுக்கு 12மிடம் மறைவு இல்லை என்பது ஜோதிட விதி.
    3) ஏழாமதிபதி குரு எட்டில் மறைவுடன் நீச்சமடைகிறார். ஆயினும் எட்டாம் அதிபதி சனியுடன் கூட்டு ஆனதால் நீச்ச பங்க ராஜயோகம் பெற்றுள்ளார்.
    சனி,குரு இருவருமே உத்திராடம் நட்சத்திரத்தில்.குடும்ப ஸ்தானத்தில் உள்ள சூரியன்,ஆட்சி பெற்ற சனியின் நட்சத்திரமான பூசத்தில்.
    நட்சத்திர பரிவர்த்த்னையால் 8ம் இடம் கெடவில்லை.
    ஆக, திருமணத்தை குறிப்பிடும் 2,4,7,8 மற்றும் 12ம் இடங்கள் சுப பலம் பெற்றுள்ளதால் திருமணம் கட்டாயமாக நடந்திருக்க வேண்டும்,
    நன்றியுடன்,
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  8. சார் வணக்கம்.
    இந்த ஜாதகதில் திருமணம் இருகிறது. 7ஆம் அதிபதி குரு அந்த வீட்டிற்கு 2ல்
    குரு ஆட்சிபெற்ற சனியோடு சேர்ந்து நீச்ச பங்க ராஜயோகதில் இருகிறார் லக்னதிபதி புதன் லக்னதில் ஆட்சிபெற்று 7ஆம் வீட்டை தன் பார்வையில் வைத்துகொள்கிறார் இது திரும்ணத்திற்கு எற்ற அமைப்பு மேலும்2ல் சுபகிரக குரு பார்வை விழுகிறது மேலும் 2ஆம் அதிப்தி சந்திரன் அந்த வீட்டிற்கு 4ல் இருந்து யோககிரக சனியின் பார்வை பெறுகிறது மேலும் அது சனியின் உச்ச வீடு
    7ஆமஅதிபதி திசையில் திருமணம் நடந்திருக்கும்.

    ReplyDelete
  9. அய்யா,
    ஜாதகி மிதுன லக்னம் துலா ராசி. லக்னாதிபதி புதன் லக்னத்தில் தனித்து ஆட்சி !. ராசியாதிபதி சுக்ரன் 12-ல் ஆட்சி !.மூன்றில் செவ்வாய் ராகு.

    மொத்தத்தில் புத்திசாலியான தைரியமான பெண் !.

    ஆனால் , இரண்டில் சூரியன் ( தன் வீட்டிற்கு 12-ல்),

    ஏழில் கிரகங்கள் இல்லை !
    ஏழாம் அதிபதி குரு 8-ல் நீசம் வக்கிரம், சனியுடன் கூட்டணி, சனியும் வக்கிரம்.
    ஏழாம் இடத்திற்கு லக்னாதிபதி புதன் ஆட்சி பார்வை.
    ஏழாம் இடத்து பரல்கள் 20 அல்லது 19.
    ஐந்தாம் இடத்து சந்திரனுக்கு வக்ர சனியின் பார்வை.

    குடும்பம், திருமணம் கிடையாது ! . நீச வக்ர குருவும் வக்ர சனியும் சேர்ந்து வாழ்க்கையில் வெறுப்பு விரக்தி !. கிட்டத்தட்ட துறவு வாழ்க்கை ! இருப்பினும் புத்திசாலித்தனம் தைரியத்தால் பெண்மணி காலம் தள்ளுவார். பெண்மணி கோபக்காரராக இருப்பார் !.
    சரி தானா ?

    ReplyDelete
  10. வணக்கம் குரு,

    புதிர் போட்டி வேண்டுகோளை நிறைவேற்றியமைக்கு முதலில் நன்றி.

    ஜாதகிக்கு இருதார யோகம் அமைப்பு உள்ளது. காரணம் இரண்டில் சூரியன், எட்டில் சனி, பன்னிரண்டில் மாந்தி மற்றும் காலத்திற காரகன் சுக்கிரன். இருப்பினும் எட்டில் அமர்ந்த குரு பகவான் இரண்டாம் வீட்டையும், பனிரண்டாம் வீட்டையும் பார்வை செய்கிறார். எனவே 28 வயதில் சனி திசையில் சுக்கிர புக்தியில் கோட்சார குரு 9இல் இருந்தபோது திருமணம் நடந்திருக்கும்.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  11. Quiz No.69க்கான விடை

    மிதுன லக்கினம், துலாம் ராசி ஜாதகி. புனர்பூ தோஷமுள்ள, திருமணம் மறுக்கப்பட்ட‌ ஜாதகம்.

    அதற்கான காரணங்கள்.

    1. களத்திராதிபதி குரு 8ல் நீசமடைந்து அட்டமாதிபதி சனியுடன் கூட்டு வைத்துள்ளார். தவிர வக்கிரம் வேறு. களத்திர காரகன் சுக்கிரன் லக்கினத்திற்கு 12ல் மாந்தியுடன் சேர்ந்து கெட்டு விட்டார்.

    2. குடும்பாதிபதி சந்திரன் 5ல் அமர்ந்துள்ளார். சனியின் நேர்பார்வை 2மிடத்திற்கும், 10ம் தனிப்பார்வை சந்திரனின் மேலுமுள்ளது. 3ம் அதிபதி சூரியன் 2ல் அமர்ந்து அந்த இடத்தை மேலும் வலுவிழக்க வைத்துவிட்டார்.

    லக்னாதிபதி சுப‌ புதனின் நேர் பார்வை 7மிடத்திற்கு இருந்தாலும்,அவர் பாபகர்த்தாரியின் பிடியிலுள்ளார். ஜாதகிக்கு கோச்சாரத்தில் திருமண வயதில் ஆரம்பமான‌ சனி தசை 39 வயது வரை இருந்துள்ளது.

    மேற்கண்ட காரணங்களால் ஜாதகிக்கு திருமணம் நடைபெற்றிருக்க‌ வாய்ப்பில்லை.

    ReplyDelete
  12. Dear Sir,

    1. Lagna lord mercury in power aspects 7th place.
    2. Marriage karaka venus in 12th place, but own place.
    3. 2nd lord in 5th place Lakshmi sthanam.
    4. Jupiter 7th lord in 8th aspects 2nd. but neecham. join with sani. 8th lord in 8th.
    5. Sani made the marriage late.

    The Person got married late.

    ReplyDelete
  13. வாத்தியார் ஐயாவிற்கு மாணவனின் வணக்கம்.

    இந்த பெண்ணுக்கு கல்யாணம் ஆகவில்லை என்பது ( என்னுடைய அண்ணாச்சியின் ) கருத்து. காரணம் ஏழாம் அதிபதி எட்டில் நீசம் மேலும் களத்திர காரகன் பனிரெண்டில் இருப்பது, லக்னாதிபதி பாபகத்ரி யோகத்தில் இருப்பது ஆகும். நடைபட்ட திசைகளும் சாதகமானதாக இல்லை. ஏழாம் அதிபதி நீசபங்க யோகத்தில் இருந்தாலும் அட்டமாபதி சேர்க்கை ஆகும்.

    ReplyDelete
  14. Ayya,

    Please find my findings.

    Marriage is not happened due to below reasons
    1. 7th house owner(Guru) neecham
    2. Kalathirakarakan (Sukran) is in 12th house
    3. 9th house owner(Baghya owner -Shani) is sitting in 12th house from his house

    Your Student,
    Trichy Ravi

    ReplyDelete
  15. Respected Sir,

    My answer for our Quiz No.69:

    She has married. But not happy life.

    Reasons:

    1. Seventh lord is in eighth house along with Saturn (debilitated also)

    2. Kalathra karaga is in twelfth house from langa.

    3. Lagna lord is in good position.

    4. In navamsa, Seventh lord is in good position. Hence marriage happend.

    5. Jupiter aspects Venus as well as second house.

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  16. லக்னாதிபதி லக்னத்தில் இருந்தாலும், லக்னம் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கி உள்ளது, களத்திரகாரகன் 12ம் வீட்டில், அதுவும் மாந்தியுடன். ஆயினும் லக்னாதிபதி புதன் நேராக 7ம் இடத்தை பார்பதால், அவர் புக்தியில் கல்யாணம் ஆகி இருக்கும்.

    V.Narayanan, pondicherry

    ReplyDelete
  17. Hello Sir,

    first of all, sorry for not replying any of the old posts, busy with office work..happens once in a while.


    Jathagar-DOB:July22nd 1961, 3.30 AM.
    thulam rasi,mithuna lagnam.

    Kalthirakaran 12il, 7th house owner neesam+ 8th house owner Sanibhagavan (both are in vakram), Nadaipettra desa period were bad.

    7th house paral 19, 2nd house paral-20.

    Thirumanam,kudumpa amaipu marukkapatta jathagam.

    ReplyDelete
  18. வணக்கம். 7ம் வீட்டை லக்கினதிலேயே ஆட்சி புரியும் சுப கிரகம் புதன் பார்க்கிறார். நன்மை.

    7ம் அதிபன் 8ல் நீச பங்கம் அடைந்துள்ளார். அங்கு சனி ஆட்சி அதனால். சுக்கிரன் 12ல் மாந்திஉடன் அமர்ந்தாலும், குரு பார்வை, சுக்கிரன் ரிஷபத்தில் ஆட்சி பெறுவதால் தோஷம் நிவர்த்தி.

    குடும்ப ஸ்தானத்தில் சூரியன் இருந்தாலும், குரு பார்வை இருப்பதால், நிவர்த்தி.

    ஆதலின் தாமதமாக திருமணம் நடக்கும். குடும்பம் அமையும்.

    அன்புடன்

    ReplyDelete
  19. தாமதமாக 30 வயதிற்கு மேல் திருமணம் ஆனவர். 7ம் அதிபதி 8ல் நீசமாகி மறைவு. ஆயினும் நீச பங்கமாகியிருக்கிறார். களத்திரகாரகன் சுக்கிரன் 12ல் மறைந்தாலும் ஆட்சியானதால் திருமணம் உண்டு. அடுத்து லக்கினாதிபதி புதன் ஆட்சியாகி 7ம் இடத்தைப் பார்க்கிறார்.

    ReplyDelete
  20. 1. She is married in early age (may be age of 17-19)
    2. She is widow or separated

    1. Reason
    Guru bukthi made her married. Though necha, got neecha banga due to Sani.
    Got Sun in 2nd, Mithuna lagnathipathi in lagna having eye on 7th. So Guru disai, Budhan bukthi got her married.

    2. Widow/Divorced
    -Mars with Raghu in Leo aspecting her 6th, 9th notgood position for long married life
    -Saturn aspecting Sun in Vargothama (though he likes to do good, Sun is his enemy), both together spoiled 2nd house of family.
    -Venus in troubled location both raasi, navamsa
    -Though neecha banga, when Sani bukthi Guru sub takes, Guru will do his job. 7th lord and aspecting second house get trouble.
    -Moon gets Saturn aspect makes widow chances.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com