26.9.14

உயர்வென்ற தாழ்வென்ற பிரிவு இல்லை!

 
உயர்வென்ற தாழ்வென்ற பிரிவு இல்லை!   

பக்தி மலர்

இன்றைய பக்தி மலர் நவராத்திரி வாரமாக மலர்கிறது. கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றையும் குறித்து கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய கருத்தாழமிக்க பாடலை திரு.T.M. செளந்திரராஜன் அவர்களின் குரலில் அனைவரும் கேட்டு மகிழப் பதிவிட்டுள்ளேன். பாடலின் வரிகளும் உள்ளன. காணொளியும் உள்ளது.

அன்புடன்,
வாத்தியார்

-------------------------------------------------------
    கல்வியா செல்வமா வீரமா?....   

    கல்வியா செல்வமா வீரமா? அன்னையா தந்தையா தெய்வமா?
    கல்வியா செல்வமா வீரமா? அன்னையா தந்தையா தெய்வமா?
    ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா? - இதில்
    உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா?
    ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா? - இதில்
    உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா?

    கல்வியா செல்வமா வீரமா?

    படித்தவன் கருத்தெல்லாம் சபையேறுமா? - பொருள்
    படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா?
    படித்தவன் கருத்தெல்லாம் சபையேறுமா? - பொருள்
    படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா?
    படித்தவன் படைத்தவன் யாராயினும்
    படித்தவன் படைத்தவன் யாராயினும் - பலம்
    படைத்திருந்தால் அவனுக்கிணையாகுமா? - பலம்
    படைத்திருந்தால் அவனுக்கிணையாகுமா?

    கல்வியா செல்வமா வீரமா?

    ஒன்றுக்குள் ஒன்றாகக் கருவானது - அது
    ஒன்றினில் ஒன்றாகப் பொருளானது
    ஒன்றுக்குள் ஒன்றாகக் கருவானது - அது
    ஒன்றினில் ஒன்றாகப் பொருளானது
    ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது?
    ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது? - மூன்றும்
    ஓரிடத்தில் இருந்தால் நிகரேது? - மூன்றும்
    ஓரிடத்தில் இருந்தால் நிகரேது?

    கல்வியா செல்வமா வீரமா?

    மூன்று தலைமுறைக்கும் நிதி வேண்டுமா? - காலம்
    முற்றும் புகழ் வளர்க்கும் மதி வேண்டுமா?
    மூன்று தலைமுறைக்கும் நிதி வேண்டுமா? - காலம்
    முற்றும் புகழ் வளர்க்கும் மதி வேண்டுமா?
    தோன்றும் பகை நடுங்கும் பலம் வேண்டுமா?
    தோன்றும் பகை நடுங்கும் பலம் வேண்டுமா? - இவை
    மூன்றும் துணை இருக்கும் நலம் வேண்டுமா? - இவை
    மூன்றும் துணை இருக்கும் நலம் வேண்டுமா?

    கல்வியா செல்வமா வீரமா?


    திரைப்படம்: சரஸ்வதி சபதம்
    பாடியவர்: t.m. சௌந்தரராஜன்
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: k.v. மஹாதேவன்

--------------------------------------------
பாடலின் காணொளி வடிவம்:



our sincere thanks to the person who uploaded this song in the net!

 வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!
==========================================================

15 comments:

  1. வணக்கம் சார்...
    கல்வி+ செல்வம்+ வீரம் !!
    கேட்பதற்க்கு இனிமை. ஆனால்!

    1.கல்வி- 2, 4,புதன் நல்ல நிலையில்
    இருக்கவேண்டும்!!
    2.செல்வம்- 2, 11,குரு அம்சமாக
    இருக்கவேண்டும் !!
    3.வீரம்- 1,3,11,செவ்வாய் சூப்பராக
    இருக்கவேண்டும் !
    இதுஎல்லாம் ஒருவனுக்கு இருக்கவேண்டும்!!
    லட்சத்தில் ஒருவனுக்குஇருக்கும் !!
    அதீத புண்ணீயத்திற்க்கும்+
    மகா பாக்யத்திற்கும்
    பிறந்திருக்கவேண்டும்......
    K.சக்திவேல்

    ReplyDelete
  2. டி எம் எஸ்ஸின் உச்ச ஸ்தாயிக் குரல் அழகாக வெளிப்பட்ட ஒரு அருமையான பாடல். பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  3. பாடல் இறுதியில் சொல்லப்பட்ட மூன்றும் துணையிருக்கும் நலம் பெரும்பாலோருக்கு வாய்க்காது. மூன்றில் ஒன்றோ அல்லது இரண்டுதான் பலருக்கும் இருக்கும். இது நல்ல, அருமையான கருத்தாழமிக்க பாடல் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.

    ReplyDelete
  4. /////Blogger வேப்பிலை said...
    வணக்கம்////

    நல்லது. உங்களின் வணக்கத்திற்கு நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete
  5. ////Blogger Sakthivel K said...
    வணக்கம் சார்...
    கல்வி+ செல்வம்+ வீரம் !!
    கேட்பதற்க்கு இனிமை. ஆனால்!
    1.கல்வி- 2, 4,புதன் நல்ல நிலையில்
    இருக்கவேண்டும்!!
    2.செல்வம்- 2, 11,குரு அம்சமாக
    இருக்கவேண்டும் !!
    3.வீரம்- 1,3,11,செவ்வாய் சூப்பராக
    இருக்கவேண்டும் !
    இதுஎல்லாம் ஒருவனுக்கு இருக்கவேண்டும்!!
    லட்சத்தில் ஒருவனுக்குஇருக்கும் !!
    அதீத புண்ணீயத்திற்க்கும்+
    மகா பாக்யத்திற்கும்
    பிறந்திருக்கவேண்டும்......
    K.சக்திவேல்/////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி சக்திவேல்!!!!

    ReplyDelete
  6. //////Blogger kmr.krishnan said...
    டி எம் எஸ்ஸின் உச்ச ஸ்தாயிக் குரல் அழகாக வெளிப்பட்ட ஒரு அருமையான பாடல். பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா!////

    நல்லது. உங்களின் இரசனை உணர்விற்கு நன்றி!

    ReplyDelete
  7. /////Blogger sundari said...
    Good afternoon sir,/////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  8. ////Blogger சே. குமார் said...
    நல்ல பாடல் ஐயா.../////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. ///Blogger Kirupanandan A said...
    பாடல் இறுதியில் சொல்லப்பட்ட மூன்றும் துணையிருக்கும் நலம் பெரும்பாலோருக்கு வாய்க்காது. மூன்றில் ஒன்றோ அல்லது இரண்டுதான் பலருக்கும் இருக்கும். இது நல்ல, அருமையான கருத்தாழமிக்க பாடல் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது./////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  10. ///Blogger Chandrasekaran Suryanarayana said...
    வணக்கம்./////

    நல்லது. உங்களின் வணக்கத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. அருமையான பதிவு
    தொடருங்கள்

    எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
    http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
    படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்.

    ReplyDelete
  12. ஐயா,

    சிறிது காலமாக தங்களின் செய்திகளை படித்து வருகிறேன். இதை போன்ற செய்திகளை கேட்பதற்கும் படிபதற்கும் நான் முன் ஜென்மத்தில் புண்ணியம் செய்து இருக்க வேண்டும் என்றே நம்புகிறேன்.

    என்னை ஒரு அர்த்தமுள்ள மனிதனாக மாற்றியது தங்கள் பதிவு தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தங்களை அறிமுகம் செய்த எனது மனைவிக்கு முதல் பாராட்டுகள். மற்றும் தங்கள் சேவை மேலும் பெருக மனமார்ந்த வாழ்த்துகள்.

    அன்பு கலந்த வணக்கங்கள்,
    விஜயன்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com