19.9.14

கடன் எப்போது தீரும்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நம் கடன் எப்போது தீரும்?

கவியரசர் கண்ணதாசன்: திருமாலின் பெருமைகளைப் பாடியது

வைஷ்ணவத் தலங்களில் மிகவும் பெருமை வாய்ந்ததும், அதிகமான பக்தர்களை ஈர்க்கும் தன்மையுடையதும், எது என்று பார்த்தால் நம் மனதில் மின்னலாக இரண்டு இடங்கள் தென்படும்.

ஒன்று திருமலை என்று புகழப்பெறும் திருப்பதி. மற்றொன்று காவிரிக்கரையில் உள்ள ஸ்ரீரங்கம்.

அவை இரண்டிலும் திருப்பதிக்கு மற்றுமொரு கூடுதலான சிறப்பு உண்டு. அகில இந்திய அளவில் எல்லா மாநிலத்தவரும் அதிகமான எண்ணிக்கையில் வந்து பெருமானைத் தரிசிச்துவிட்டுச் செல்வதால் நமது நாட்டிலுள்ள இந்து ஆலயங்களில் முதலிடம் என்ற பெருமையைக் கொண்டது திருமலையில்
உள்ள ஆலயம்!

பெருமாள் சக்ரதாரியாக, நின்ற தோற்றத்துடன் தன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பதால் திருப்பதிக்குச் சென்று திரும்புபவர்கள் மனத்திருப்தியடைந்து மீண்டும் மீண்டும் செல்கிறார்கள்.

ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு இல்லாதவர்கள் கூட ஒரு முறை திருமலை சென்றுவந்தால், ஈடுபாடு கொள்ளத் துவங்கிவிடுவார்கள். பெருமானின்
வலிமை அப்படி!

அதைத்தான் நம் வீட்டிலுள்ள பெரியவர்கள் திருப்பதி சென்று வந்தால் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படும் என்பார்கள்.

கவியரசர் கண்ணதாசன் அவர்களும் அந்தக் கருத்தை வலியுறுத்தி ஒரு பாடல் எழுதியுள்ளார்.

பாட்டைப் பாருங்கள்:
--------------------------------------
திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஓர்
திருப்பம் நேருமடா - உந்தன்
விருப்பம் கூடுமடா - நீ
திறந்திட நினைக்கும் கதவுகளெல்லாம்
தானே திறக்குமடா - உன்னை
தர்மம் அணைக்குமடா!....

(திருப்பதி)

ஊருக்கு மறைக்கும் உண்மைக ளெல்லாம்
வேங்கடம் அறியுமடா - அந்த
வேங்கடம் அறியுமடா - நீ
உள்ளதைச் சொல்லிக் கருணையைக் கேட்டால்
உன்கடன் தீருமடா - செல்வம்
உன்னிடம் சேருமடா!...

(திருப்பதி)

எரிமலை போலே ஆசை வந்தாலும்
திருமலை தணிக்குமடா - நெஞ்சில்
சமநிலை கிடைக்குமடா - உன்
எண்ணங்கள் மாறும் வண்ணங்கள் மாறும்
நன்மைகள் நடக்குமடா - உள்ளம்
நல்லதே நினைக்குமடா!....

(திருப்பதி)

அஞ்சலென்ற கரம் ஒன்று காவல் தரும்
வெங்கடேஸ்வரா!
சங்கு கொண்ட கரம் மங்கலங்கள் தரும்
வெங்கடேஸ்வரா!
தஞ்சமென்றவர்கள் நெஞ்சில் அன்பு தரும்
வெங்கடேஸ்வரா! வெங்கடேஸ்வரா!...

(திருப்பதி)

படம்: மூன்று தெய்வங்கள் - வருடம் 1971
----------------------------------------------------------------------
நாம் நினைக்கின்ற நல்ல காரியங்கள் உடனே கைகூடும் என்ற பொருளில் திறந்திட நினைக்கும் கதவுகளெல்லாம் தானே திறக்குமடா என்று சொன்னதோடு உன்னைத் தர்மம் அணைக்குமடா என்றும் சொன்னார் பாருங்கள் அது ஒரு சிறப்பு.

எதையும் வேங்கடத்தானிடம் மறைக்காமல் உள்ளதைச் சொல்லிக் கருணையைக் கேட்டால் உன்னிடம் செல்வம் சேருமடா என்று செல்வம் சேர்வதற்குரிய வழியைச் சொன்னதும் ஒரு சிறப்பு.

எரிமலை போலே ஆசை வந்தாலும் திருமலை தணிக்குமடா என்று சொன்னதோடு உன் நெஞ்சில் அளவோடு ஆசை கொள்ளும் சமநிலை கிடைக்கும் என்றும் சொன்னார் பாருங்கள் அதுவும் ஒரு சிறப்பு

இத்தனை சிறப்புக்களையும் உடையது அந்தப் பாடல் என்பதால், அதை இன்று பதிவு செய்தேன்.

அத்துடன் இன்று புரட்டாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமை. பெருமாளுக்கு உகந்த மாதம். அவரை நாம் நினைக்க வேண்டும். வணங்க வேண்டும் என்பதற்காக அப்பாடலை இன்று பதிவில் ஏற்றியுள்ளேன்

பாடலின் காணொளி வடிவம்:



our sincere thanks to the person who uploaded this song in the net

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=======================================================

20 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. திருப்பதி சென்றுவந்தால்
    திருப்பம் ஏற்படும் சரி..

    முருகா..
    முருகா..

    ReplyDelete
  3. காலையில் ஒரு அருமையான பாடல் கேட்கக் கொடுத்தமைக்கு நன்றி ஐயா...

    ReplyDelete
  4. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  5. என்ன ஆச்சரியம்! இன்று காலைதான் ஒரு மின் அஞ்சலில் திருப்பதியில் 108 தங்க புஷ்பங்களைக்கொண்டு செய்யும் அர்ஜித சேவா வந்த வரலாற்றை ஒருவர் எழுதி இருந்தார்.108 தங்க புஷ்பங்கள் ஒவ்வொன்றும் 30 கிராம் எடையுள்ளது
    ஒரு இஸ்லாமியர் அளித்து பூஜைக்குப் பயன் படுத்தச் சொன்னாராம்.இது நடந்தது 1984. அந்த தங்க‌ புஷ்பத்திற்காகவே அர்ஜித சேவா துவங்கப்பட்டதாம்.சுமார் 75 லட்சம் மதிப்புள்ள தங்க புஷ்பங்களை தானமாகக்கொடுக்க மனம் வந்த இஸ்லாமியப் பெரியவர் போற்றுதலுக்கு உரியவர் அல்லவா? மேலும் அவருக்காகவே ஒரு புதிய தரிசன சேவா துவங்கப்பட்டதும் ஆச்சரியமல்லவா?

    ReplyDelete
  6. Dear sir,the question asked by Mr.Ragunathan,on 18.9.14,reg neesabangaraja yogam,is a valid one.even i have read the aspects,given by him,in old reliable astro books.pls clarify the matter.

    ReplyDelete
  7. i am near to your home. please add me as your student.

    Thanks

    ReplyDelete
  8. திருப்பதி சென்றுவந்தால்
    திருப்பம் ஏற்படும் சரி...

    இதன் உள் அர்த்தம் என்ன (55 வருடங்களுக்கு முன்னால் என்னுடைய பாட்டி கூறிய உண்மை)
    கஷ்ட்ட காலங்களில் கஷ்ட்டத்தையே நினைத்துக்கொண்டு இருப்பான்.மேலும் மேலும் கஷ்ட்டத்தையே அனுபவித்துகொண்டு இருப்பான்.இதிலிருந்து மீண்டு வருவதற்க்கு ஒரு வழி தான் இட மாற்றமும், சிந்தனை மாற்றமும். அதற்க்காக தான் திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்பார்கள். இறை அருள் இருந்தால் எதையும் மாற்றும் சக்தி உண்டு. உண்மையான உண்மை.

    ReplyDelete
  9. /////Blogger வேப்பிலை said...
    திருப்பதி சென்றுவந்தால்
    திருப்பம் ஏற்படும் சரி..
    முருகா..
    முருகா..////

    பழநிக்குப் போய் வந்தால் பஞ்சம் தீரும்!

    ReplyDelete
  10. /////Blogger சே. குமார் said...
    காலையில் ஒரு அருமையான பாடல் கேட்கக் கொடுத்தமைக்கு நன்றி ஐயா.../////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. /////Blogger Yarlpavanan Kasirajalingam said...
    சிறந்த பகிர்வு
    தொடருங்கள்////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  12. /////Blogger kmr.krishnan said...
    என்ன ஆச்சரியம்! இன்று காலைதான் ஒரு மின் அஞ்சலில் திருப்பதியில் 108 தங்க புஷ்பங்களைக்கொண்டு செய்யும் அர்ஜித சேவா வந்த வரலாற்றை ஒருவர் எழுதி இருந்தார்.108 தங்க புஷ்பங்கள் ஒவ்வொன்றும் 30 கிராம் எடையுள்ளது
    ஒரு இஸ்லாமியர் அளித்து பூஜைக்குப் பயன் படுத்தச் சொன்னாராம்.இது நடந்தது 1984. அந்த தங்க‌ புஷ்பத்திற்காகவே அர்ஜித சேவா துவங்கப்பட்டதாம்.சுமார் 75 லட்சம் மதிப்புள்ள தங்க புஷ்பங்களை தானமாகக்கொடுக்க மனம் வந்த இஸ்லாமியப் பெரியவர் போற்றுதலுக்கு உரியவர் அல்லவா? மேலும் அவருக்காகவே ஒரு புதிய தரிசன சேவா துவங்கப்பட்டதும் ஆச்சரியமல்லவா?////

    கவியரசர் கண்ணதாசன் சொல்வார். மதங்கள் எல்லாம் ஆறுகளைப் போன்றவை எல்லா ஆறுகளுமே கடலில்தான் கலக்கின்றன. இறைவன் கடலைப் போன்றவர். இந்தக் கொள்கை உடைய அனைவருமே போற்றுதலுக்கு உரியவர்கள்தான்!

    ReplyDelete
  13. /////Blogger DR.SGM said...
    Dear sir,the question asked by Mr.Ragunathan,on 18.9.14,reg neesabangaraja yogam,is a valid one.even i have read the aspects,given by him,in old reliable astro books.pls clarify the matter.//////
    ------------------------
    /////////Wednesday, September 17, 2014 10:06:00 AM
    Blogger Regunathan Srinivasan said...
    அய்யா,
    எனக்கு மகர லக்னம்.சனி 10 ஆம் இடம் துலா ராசியில் உச்சம் .எனக்கு 12-13 வயது வரை சனி தசை தான் இருந்தது.நன்றாக படித்தேன்.நல்ல பெயர் எடுத்தேன்.ஆனால் typhoid ,jaundice ,chicken pox ,cholera என்று எல்லா வியாதிகளும் ஒவ்வொரு வருடமும் உக்கரமாக வந்தன.பத்தாம் இடம் 33 பரல்கள்.பத்தாம் இட அதிபதி சுக்ரன் கன்னி ராசியில் (9 ஆம் இடத்தில் )நீசம்.ஒரு கேள்வி அய்யா ?குரு 12 ஆம் இடத்தில் உள்ளார்.சந்திரன் 3ஆம் இடத்தில் உள்ளார்.அப்படியென்றால் சுக்ரன் உச்சமான மீன ராசியின் அதிபதி குரு சந்திரனிடம் இருந்து கேந்திரத்தில் (10 ஆம் இடத்தில் ) உள்ளார்.நீச்ச பங்கம் உள்ளதா அல்லது நீச்ச பங்க ராஜ யோகம் உள்ளதா ?மேதகு BV ராமன் அவர்கள் இதுவும் ஒரு நீச்ச பங்கதின் அடையாளம் என்று சொல்வதாக படித்ததுண்டு.நான் உங்களுடன் விவாதம் செய்வதாக தயவு செய்து நினைத்து கொள்ள வேண்டாம்.தலைப்புக்கு சம்பந்தபடாத கேள்வியை கேட்கிறானே என்றும் தயவு செய்து நினைத்து கொள்ள வேண்டாம்.உங்கள் கருத்து இது பற்றி என்ன அய்யா ?அடியேனுடைய சந்தேகத்தை தீர்த்து அருளுங்கள் அய்யா.
    என்றும் பணிவுடன் ,
    S . ரகுநாதன் //////
    ---------------------------
    அந்த அன்பரின் கேள்வியை மேலே கொடுத்துள்ளேன். சுக்கிரன் கன்னிராசியில் நீசமாகிவிட்டதைத் தெளிவாகக் கூறியிருக்கிறார்.
    “நீசன் நின்ற ராசிநாதன் ஆட்சி உச்சமாகினும் நீசபங்க ராஜயோகம்...”
    ஆனால் அன்பர் கூறியுள்ளது. குரு பகவான் ஆட்சி பெற்றிருப்பதை. நீசமான சுக்கிரன் நின்ற வீட்டுக்காரன் புதனைப் பற்றி அவர் ஒன்றும் சொல்லவில்லை. உங்கள் கருத்துப்படி என்ன சொல்கிறீர்கள் என்பது எனக்கு முழுமையாக விளங்கவில்லை. ஆனாலும் உங்கள் கருத்திற்கு மதிப்பளிக்கிறேன். விவாதம் செய்ய எனக்கு நேரமில்லை. மன்னிக்கவும்!

    ReplyDelete
  14. ////Blogger KUMAR said...
    i am near to your home. please add me as your student.
    Thanks/////

    இது திறந்தவெளி இணைய வகுப்பு. சேர்க்கை என்பதெல்லாம் கிடையாது. யார் வேண்டுமென்றாலும் சேர்ந்து படிக்க வேண்டியதுதான்!

    ReplyDelete
  15. /////Blogger Chandrasekaran Suryanarayana said...
    திருப்பதி சென்றுவந்தால்
    திருப்பம் ஏற்படும் சரி...
    இதன் உள் அர்த்தம் என்ன (55 வருடங்களுக்கு முன்னால் என்னுடைய பாட்டி கூறிய உண்மை)
    கஷ்ட்ட காலங்களில் கஷ்ட்டத்தையே நினைத்துக்கொண்டு இருப்பான்.மேலும் மேலும் கஷ்ட்டத்தையே அனுபவித்துகொண்டு இருப்பான்.இதிலிருந்து மீண்டு வருவதற்க்கு ஒரு வழி தான் இட மாற்றமும், சிந்தனை மாற்றமும். அதற்காக தான் திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்பார்கள். இறை அருள் இருந்தால் எதையும் மாற்றும் சக்தி உண்டு. உண்மையான உண்மை./////

    உங்களுடைய கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  16. திருப்பதி பற்றிய அரிய தகவல்கள்!

    * தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல! சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன.

    * திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏனெனில், ஏழுமலையான் சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹுட் வெப்பத்திலேயே இருக்கும் இது ஒரு அதிசயம் தானே! ஒவ்வொரு வியாழக் கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவர். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர்.

    * இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. இதில் லட்டு முதலிடம் பெற்று விளங்குகிறது.

    * ஏழுமலையானுக்கு ஒருபுதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ளகுலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர்.

    * பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஆடைக்கு மேல்சாத்து வஸ்திரம் என்று பெயர். வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும். பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

    * உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையையும் பெருமாளுக்கு அணிவிப்பர். இதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு அனுமதிக்கிறார்கள். பணம் செலுத்தியபின் இதை அணிவிக்க 10 வருடங்கள் காத்திருக்கவேண்டும்.

    * பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.

    ReplyDelete
  17. * ஏழுமலையானின் அபிஷேகத்திற்கு எங்கிருந்து பொருட்கள் வருகிறது தெரியுமா?

    ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் வருகின்றன. ஒரு தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்தபின், கஸ்தூரியும், புனுகும் சாத்துவர்.தினமும் காலை 4.30- 5.30 மணிக்குள் அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு ஆகும் செலவு ஒரு லட்சம். பணம் செலுத்தியவர்கள் 3 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.

    * பெருமாளுக்குரிய ரோஜாப்பூக்கள் ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்படுகின்றன. ஒரு ரோஜாப்பூவின் விலை ரூ.80. பக்தர்களின் செலவிலேயே இந்தப் பூக்கள் வந்து சேர்கின்றன.

    * சீனாவில் இருந்து கற்பூரம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.

    * ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை.

    * ஏழுமலையான் சாத்தியிருக்கும் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது. இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்து தான் சாத்தமுடியும். சூரிய கடாரியின் எடை 5 கிலோ. ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது. உலகிலேயே இதைப்போன்ற நீலக்கல் வேறு கிடையாது.

    * பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் பெருமாளுக்கு காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர். ராஜேந்திரச்சோழன், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் ஆகியோருடைய திருப்பணிகள் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

    * மராட்டிய மன்னர் ராகோஜி போன்ஸ்லே மிகப்பெரிய எமரால்ட் பச்சைக்கல்லை பெருமாளுக்கு காணிக்கையாக்கியுள்ளார். இப்பதக்கம் இவருடைய பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் பலதிருப்பணிகள் செய்த கிருஷ்ணதேவராயர் தனது மனைவியுடன் நிற்கும் சிலை கோயிலில் உள்ளது. கோயிலுக்குள் வரிசையில் செல்லும் போது இதைக் காணலாம்.

    * அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கான வெள்ளி வெங்கடாஜபதி விக்ரகம் 966ம் ஆண்டில் செய்யப்பட்டதாகும். பல்லவ மன்னன் சக்திவிடங்கனின் மனைவி காடவன் பெருந்தேவி இந்த விக்ரகத்திற்குரிய நகைகள் தந்துள்ளார்.

    * வெள்ளிக்கிழமைகளிலும், மார்கழி மாதத்திலும் பெருமாளுக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது.

    * மகா சிவராத்திரியில் ÷க்ஷத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதியுலா எழுந்தருள்வார். தாளப்பாக்கம் அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை.

    * அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்றொரு ஐதீகம் உள்ளது.

    * திருமலை திருப்பதி கோயில் ஸ்தலவிருட்சம் புளியமரம்.

    * சாத்வீக கோலத்தில் இருந்தாலும் தெய்வீக கோலங்களில் ஆயுதம் இடம் பெற்றிருக்கும். ஆனால், திருமலையில் ஏழுமலையான் எவ்விதமான ஆயுதமும் பிடிக்காமல் நிராயுதபாணியாக சேவை சாதிக்கிறார்.

    * ஆங்கிலேயர்களில் சர்தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன், லெவெல்லியன் என்ற வீரர் ஆகியோர் பெருமாளின் பக்தர்களாக இருந்ததோடு பல நேர்த்திக்கடன்களைச் செலுத்தியுள்ளனர். இதில் இன்று வரை பெருமாளுக்கு மன்றோ தளிகை என்றொரு ஒரு நிவேதனம் ஆங்கிலேயர் பெயரால் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    * திருப்பதி அலமேல்மங்கைக்குரிய ஆடைகத்வால் என்னும் ஊரில் பருத்தியில் தயாரிக்கப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். தாயாரின் திருமேனியில் படும் இந்த ஆடையை நெய்யும் போது மூன்றுவேளை குளிப்பதும், மாமிசம் உண்ணாமல் இருப்பதும் ஆகிய நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுகின்றனர்.

    * ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே (கோயிலை ஒட்டிய தெப்பக்குளம்) மீண்டும் கலக்கிறது. ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்நீரின் புனிதத்தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

    * 1180 கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொழியிலும் அமைந்துள்ளன.

    [இந்த தகவல்கள் திருமலை திருப்பதி கோயில் ஏடுகளில் இருந்து எடுக்கப்பட்டவை.

    ReplyDelete
  18. பழைய பாடங்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு தாங்கள் பதில் கூற தோரயமாக எத்தனை நாட்கள் ஜயா. நன்றி...

    ReplyDelete
  19. ////Sundaravadivel K said...
    * ஏழுமலையானின் அபிஷேகத்திற்கு எங்கிருந்து பொருட்கள் வருகிறது தெரியுமா? ////

    முருகப் பெருமாளின் அருள்
    முழுதும் அற்புதமானவையே..

    முருகா..
    முருகா..

    ReplyDelete
  20. ////Blogger ravanan s said...
    பழைய பாடங்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு தாங்கள் பதில் கூற தோரயமாக எத்தனை நாட்கள் ஜயா. நன்றி.../////

    என்னுடைய பாடங்களில் சந்தேகங்கள் வர வாய்ப்பில்லை. தெளிவாக எழுதிக்கொண்டிருக்கிறேன். பொதுவான சந்தேகங்களுக்கு, முன்பு ஒரு தொடர் பதிவை வெளியிட்டேன். your doubts and my answers என்று சுமார் 500 கேள்விகளுக்கு மேல் பதில்களுடன் உள்ளது அத்தனையும் பழைய பதிவுகளிலேயே உள்ளது படித்துப் பாருங்கள்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com