26.8.14

Astrology: quiz.68: மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்?


Astrology: quiz.68: மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்?

Quiz No.68: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

பகுதி அறுபத்தியெட்டு

26.8.2014

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு இரண்டு ஒரு கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்விகள்:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம்.



1. கல்வி நிலை பற்றி அலசி எழுதுங்கள். அதாவது ஜாதகர் படித்தவரா அல்லது படிக்காதவரா? படித்தவர் என்றால் எதுவரை படித்தவர்? படிக்காதவர் என்றால் ஏன் படிக்கவில்லை? போன்றவற்றை அலசி எழுதுங்கள்!

2. ஜாதகரின் 7ஆம் வீட்டை அலசிப் பதில் எழுதுங்கள். அவருக்கு திருமணம் நடைபெற்றதா? அல்லது திருமணமாகவில்லையா? திருமணம் நடைபெற்றது என்றால் எப்போது நடைபெற்றது? திருமணமே ஆகவில்லை என்றால், ஏன் ஆகவில்லை என்பதை அலசி பதிலை எழுதி அனுப்புங்கள். கேள்விக்கு உரிய பதிலை மட்டும் எழுதுங்கள்.

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

34 comments:

  1. திருமணத்திலிருந்து கொஞ்சம்
    திசை திருப்பி..

    வேறு பக்கம் குறித்து
    கேள்வி கேட்டால் மகிழ்ச்சி..

    தொடர் பயிற்சி அவசியம் எனினும்
    மாற்று பயிற்சியும் தேவை..

    ReplyDelete
  2. Respected Sir,

    Education:-
    He not complete his education, only Lower Basic level.
    Reason:- 4th house In charge Ju is in Neecham.
    Marriage:- He got married in between Year of 1967 to 1968.
    But marriage life is not success may be separation or widow.
    Reson:- 7th House Me is in 12th House.
    Regards
    Rm.srithar

    ReplyDelete
  3. Respected Sir,

    Jagathakar DOB:Dec 1 1949 7.50 AM (chennai).Meena Rasi, Danusu laganam.

    Education: 6 to 8th vathu varai padithirupar.
    Kalvikaragan bhudhan 12il, viraijaythi chevvai in parvai 4il athudan 4il ragahu veru. guru or bhudhan not aspecting 4th house.
    4il amarngatha chandran- Kemadurma (avayogam).Poor. (Kutti sukuran padikka vidathu -vathiyyar lesssons)

    padipu thadai pettru irukalam, 12il ulla bhu-aditya yogam+ Laganthiruku iruppakamum subarkal, jagathakaruku ethaiyum elithail kattrukollum arivai koduthirparkal. vivasayam seipavaraga irupar.

    Marriage: 24th vayathil or missing that change will be marrried at the age of 31 (marriage nadanthirukalam)

    Kalathirakaran sukaran, laganathipathi guru 2il, 7th house owner antha vettriuku 6il amaranthanlum, jagatharuku nadai pettra sukura dasa guru bhudhi il (71/2 sani vidaipettra pothu -Kudampathi pathi yum avera. so may be) or bhudhan bhudhi il marriage might have happpened (Kochara guru 7il irukumpothu).

    7th house owner getting aspect of Chevvai may delay the marriage.

    Puthisali manaivi kidaithirupar.
    Manaivi sollupechu kettu kalam thalli kondurupar.

    ReplyDelete
  4. வணக்கம் குரு,

    ஜாதகர் பள்ளி படிப்பு வரை முடிதிருக்கவே வாய்ப்பு உள்ளது. காரணம் நான்கிர்க்குடைய குரு நீச்சம், கல்விகாரகன் புதன் அஸ்தமனம், கல்விகாரகனுக்கும் நான்காமிடதிற்கும் செவ்வாய் பார்வை, நான்கில் ரகு சந்திரன் கூட்டணி அதனால் மனக்காரகன் கெட்டான், சந்திரன் அட்டமாதியனதால் நான்கில் அமர்ந்தது சரியல்ல மற்றும் தனுசு லக்ன வில்லன் சுக்கிரன் குருவோடு இணைந்ததும் சரியல்ல.

    திருமணம் சற்று தாமதமாக 31 வயதில் நடந்திருக்கும். காரணங்கள் ஏழாம் அதிபதி புதன் லக்னதிர்க்கு12இல் அத்துடன் அஸ்தமனம், பாக்கியாதிபதி சூரியனும் 12இல் மறைவு, குடும்பாதிபதி சனி செவ்வாயோடு சேர்கை, சுக ஸ்தானத்தில் ராகு.

    நன்றி
    செல்வ

    ReplyDelete
  5. வணக்கம், QUIZ NO.68

    01/12/1949 ஆம் ஆண்டு வியாழ கிழமை காலை 9.05.40 மணிக்கு ரேவதி நட்சத்திரத்தில் தனுசு லக்கினத்தில் ஜாதகர் பிறந்தார்.

    லக்கினம்: தனுசு, லக்கினாதிபதி : குரு, யோககாரகர்கள்: செவ்வாய், புதன், சூரியன்,
    யோகமில்லாத கிரகம் : சுக்கிரன்.

    கல்வி:
    லக்கினம் (2 பரல்: பலவீனம்)பாப கர்தாரி யோகம் ஒரு பக்கம் மாந்தி, மறு பக்கம் சூரியன். ஜாதகர் பிரச்சனைகளை தாங்கும் சக்தியை இழந்தவர்.

    லக்கினாதிபதி குரு (5 பரல்) 2ம் வீட்டில் நீசம்,மாந்தியுடன் கூட்டு,
    4ம் வீட்டு அதிபதி குரு 2ம் வீட்டில் நீசம்
    4ம் வீட்டில் சந்திரனுடன் (3 பரல்) ராகு கூட்டு மோசமான அமைப்பு, இள வயதில் தாயாரை இழக்கும் நிலமை. மன அமைதி இழந்தவர். கல்வியின் மீது பற்று இல்லாமல் இருக்கும் நிலமை.
    4ம் வீட்டின் மீது தீய கிரகமான கேதுவின் 7ம் பார்வை.4 வயது முதல் 11 வயது வரை கேது தசை காலத்தில் பள்ளிக்கு செல்ல நிறைய தடங்கள். இளமையில் உடல் கஷ்டங்கள் எற்பட்டு இருக்கும்.
    4ம் வீட்டின் மீது எந்த சுப கிரகங்களின் பார்வையும் இல்லை.
    செவ்வாயின் 8ம் பார்வையும் 4ம் விட்டின் மீது.
    5ம் வீடு நுண்ணறிவுக்கான வீடு. 5ம் வீட்டு அதிபதி செவ்வாய் 9ம் வீட்டில் பாக்கியஸ்தானத்தில் 2ம் வீட்டு அதிபதி சனியுடன் கூட்டு இருப்பதால் எழுத்தாளராக ஆகும் திறமை பெற் று இருப்பார்.
    2ம் வீட்டில் குரு 6ம் வீட்டு அதிபதி சுக்கிரனுடன் (5 பரல்) கூட்டு. அடுத்து வந்த சுக்கிர தசை 11 வயதிலிருந்து 31 வயது வரை.இந்த லக்கினதிற்க்கு சுக்கிரன் யோகமில்லாதவன். ஆகையினால், பள்ளிக்கு சென்று கல்வி கற்கும் வாய்ப்பில்லாதவர்.
    காரகன் புதனும் 12ம் வீட்டில் விரய ஸ்தானத்தில் இருப்பதால் கல்விக்கு மேலும் சிக்கல்.மேலும் 12ல் சூரியன் இருப்பதால் இள வயதில் தந்தையை விட்டு பிரியும் நிலமை.
    சூரியனும் புதனும் சேர்ந்து நிபுன யோகத்தினால் ஜாதகருக்கு நல்ல புத்தியை வழங்கினார்கள்.
    ஜாதகர் பள்ளிக்கு செல்லும் வாய்ப்பில்லாதவர்.

    திருமணம்:
    லக்கினம் பாபகர்தாரி தோஷம். லக்கினாதிபதி குரு நீசம்.
    7ம் வீட்டு அதிபதி புதன் 12ம் வீட்டில் விரயஸ்தானத்தில்.மேலும், தீய கிரகம் செவ்வாயின் 4ம் பார்வை 7ம் வீட்டின் அதிபதி புதன் மீது.இந்த ஜாதகத்தில் புதன் அஸ்தங்கம் ஆகி இருக்கிறார்.கணவன் மனைவிகுள் பிரிவு எற்படும்.
    2ல் மாந்தி இருப்பதால் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்காது.
    9ம் வீடு பாக்கியஸ்தானத்தில் சனி இருப்பதால் பல காலம் திருமணம் நடக்காமல் இருந்திருக்கும்.

    7ம் வீட்டு அதிபதி புதனுடன் சூரியன் கூட்டு இருப்பதால் , சூரிய தசை புதன் புக்தியில் அதாவது 36 வயதில் தாமதமான திருமணம் நடந்திருக்கும்.
    12ல் சூரியன் இருப்பதால் தாமதமான குழந்தை செல்வம்.

    சந்திரசேகரன் சூரியநாராயணன்

    ReplyDelete
  6. சார் வணக்கம்,
    அப்புறம் வகுப்பறை சகோதர சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம்.

    1. இவர் மருத்துவத்தில் பட்டம் பெறறிருப்பார். காரணம் 4ல் சந்திரன் இருகிறார் 8ஆம் அதிபதியாயிருந்தால் கூட 10ல் இருக்கும் ஞானகாரன் கேதுவின் பார்வையை பெற்றிருகிறார்.9ல் சனி செவ்வாய் 4க்கு 9ல் சூரியன் புதன் அப்புறம் இரண்டில் லக்னதிபதி மொத்ததில் இவர் தொழில் கல்வி பெற்றிருப்பார்.

    2. திருமணம் இல்லை.காரணம் 2ல் மாந்தி7ஆம் அதிபதிஅந்த இடத்திற்கு 6ல்
    அப்புறம் லக்னதிற்கு 12ல் புதன் 6ஆம் அதிபதி மற்றும் களதிர காரன் சுக்கிரன் மாந்தி கூட சேர்ந்துவிட்டார் மேலும் தேவ குரு கூட சேர்ந்துவிட்டார். சுக்கிரன்
    குரு சூரியன் புதன் ராகு கேது பிடியிலிருக்கிறது மேலும் அந்த ப்க்கமும் செவ்வாய் சனியை ராகு கேது பிடித்திருக்கிறது. அவ்வளதா தெரியும்.

    ReplyDelete
  7. Respected Sir,

    1.) Lagnadhipathy & 4-m adhipathy Guru Neecham + Maandhi.

    2.) Asthamadhibathy chandran 4-il + Raghu and Kedhu Paarvai.

    3.) 12-m adhipathy chevvai paarvai 4-il.

    4.) 12 vayadhil Sukhra Dhasa (Kutti sukhran kootti kedukkum)

    Jadhagar 6 - 8-m vaguppu padhithirundhal periya visayam. Degree kalvi karkkum amaippu illai.

    5.) 7-m adhipathy Budhan 12-il and avaradhu veetirku 6-il Mosamana amaippu.

    6.) 5-m adhipathy chevvai 7-m adhipathy budhanai than special paarvai 4-m paarvayaga parkiraar. Guru + Sukhran kootani adhanal Jadhagar Love marriage seidhiruppar. Sukhra dhasavil thirumanam nadadhirukkum. 12-m adhipathy and 9-m adhibathy parivardhanai (Indha parivardhanai nalla parivardhanai illai.) Neenda kaalam nilaitha thirumana valkai illai. Thirumana vaalkai konja kalamdhan. soorya dhasa guru bukthi-il jadhagarin manaivi irandhiruppar.

    Thank You.

    ReplyDelete
  8. dear sir..
    அன்பர் 10 ம் வகுப்பு வரை படித்திருப்பார்.
    4ஆம் இடத்தில் அட்டமாதிபதி
    சந்திரன்+ராகுவை கைபிடித்துகொண்டிருக்கிறார் !! கல்விகாரகன் புதன்
    12ல். 5ஆம் அதிபதி செவ்வாய் vs சனி
    மோதிகொண்டு இருக்கிறார்!
    இதனால் உயர்கல்விக்கு வாய்ப்பில்லை...
    அன்பருக்கு திருமணம் இல்லை!!!
    7ஆம் அதிபதி புதன் 12ல் விரையம்.
    புதன் 7ஆம் வீட்டிற்க்கு 6 ல் அகப்பட்டுகொண்டார் !!
    பாக்யாதிபதி சூரியன் விரையத்தில்
    வீழ்ந்தார் !!
    2ம் வீட்டில் நீசகுருவும்+மாந்தியும் இருக்கியனைத்து உம்மா கொடுக்கிறார்கள்.
    2ம் அதிபதி சனி தன்வீட்டிற்கு 8 ல்
    செவ்வாயுடன் WWFல் வித்தைகாட்டிகொண்டிருக்கிறார் !!
    இந்த காரண்ங்களால்
    திருமணம் இல்லை......

    ReplyDelete
  9. வாத்தியாருக்கு வணக்கம்,

    Quiz.68ற்கான பதில்.

    1.ஜாதகர் படிக்காதவர். சாகசங்களில் விருப்பமுடையவர்.
    2.திருமணம் நடந்தது.
    3.உடல் வலு சார்ந்த தொழில் அமைத்து(அறிவு சம்பந்தப்பட்ட தொழில் இல்லை).

    படிப்பு ஸ்தானமாகிய 4ல் சந்திரன் & ராகு, அதன் மீது சனியுடன் சேர்ந்த செவ்வாயின் பார்வை, மேலும் புதன் 12ல் பகைவன் வீட்டில், ஆகவே படிப்பெல்லாம் வராது(வரும் ஆனா வராது)

    7குரிய புதன் 12ல் மறைந்தாலும், இளம் வயதில் வந்த சுக்கிர திசை காதல் திருமணத்தை நடத்தி வைத்திருப்பார்.

    சூரியன் செவ்வாய் பரிவர்த்தனை யோகம் உள்ளது. சாகசங்களில் விருப்பமுடையவர். அதுவே கூட தொழிலாக அமைந்திருக்கும்.

    லக்கினாதிபதி குரு 2ல் நீச்சம், மேலும் பகைவன் சுக்கிரனுடன் கூட்டு, உடன் மாந்தி (குரு க்ளீன் போல்டு ஆனார்)

    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்
    தூத்துக்குடி.


    ReplyDelete
  10. Date of birth : Dec 1 1949
    App time : 8.50 a.m.
    Education
    4 th house occupied by Moon and Rahu, 4 th lord JU in debility
    Both are not favourable positions.
    Karaka ME in 12 th house also not good for education.
    Less chance for higher education.
    Marriage
    7 th lord associate with Sun in the 12 th house.
    Marriage may take place during Sun disha.

    ReplyDelete
  11. since chandran(8thlord)+Raghu in 4 th place and guru neecham+sukran+
    manthi in 2 nd place and puthan in 12 th place..he cannot continue his studies in school itself...but sooriyan+puthan combination he is talent or legend in some areas beyond education..
    2.7 th lord in 12th place along sooriyan reveals ..he will get marry very late..(sukran+manthi+neecha guru) also reveals this.

    ReplyDelete
  12. மதிப்பிற்குற்ய ஐயா,
    புதிர் தொடர் - பகுதி அறுபத்தியெட்டுக்கான பதில்

    1.புடிப்பு - படிப்பைப் பாதியில் விட்டவர்- 4ல் ராகு மற்றும் செவ்வாயின்
    5 ஆம் பார்வை 4 ஆம் வீட்டின் மீது.5 ஆம் இடத்து அதிபதி 12ல்
    சிறு வயது சுக்கிரதிசை


    2.ஜாதகருக்கு திருமணம் :திருமணம் நடைபெற்று இருக்கும்.
    சுக்கிரன் வர்கோத்மம் பெற்று உள்ளது.
    சுக்கிரனும் குருவும் 2ல் இருப்பது.

    இப்படிக்கு
    மு.சாந்தி

    ReplyDelete
  13. மதிப்பிற்குரிய அய்யா,
    ஜாதகரின் லக்னம் தனுசு .4இல் ராகு,8 வது அதிபதி 4 ஆம் வீட்டில் , செவ்வாய் பார்வை 4 ஆம் வீட்டில் மற்றும் கல்விக்கு அதிபதி புதன் 12 இல் மறைந்து உள்ளார்.மேலும் சூரியனுடன் உள்ளதால் அஸ்தங்கம் ஆகி விட்டார்.அதனால் ஜாதகர் படிக்காதவர்.

    ஜாதகரின் 7ஆம் அதிபதி 12 இல் மறைந்து உள்ளார் .2இல் மாந்தி...குரு நீச்சமாகி உள்ளார்.6அம் அதிபதி சுக்ரன் 2அம் வீட்டில் உள்ளார்..2ஆம் வீட்டின் அதிபதி பகை வீட்டில் உள்ளார்...அதனால் ஜாதகருக்கு திருமணம் நடக்க வாய்ப்புகள் இல்லை ...

    தாழ்மையுடன்,
    S .ரகுநாதன்

    ReplyDelete
  14. அவரது சுக்கிர திசையில் குரு புத்தி நடக்கும் பொது திருமணம் நடை பெற்றிருக்கும். லக்கினாதிபதியோடு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் உள்ளதால் திருமணம், நடைபெற்று இருக்கும்.

    மேல் நிலை வகுப்பு வரை படித்து இருப்பார்.

    ReplyDelete
  15. ஸ்ரீ குருப்யோ நமஹ. 01-December-1949 9:00 AM - (சென்னையில்) பிறந்த ஜாதகர். இரண்டாமிடத்தில் லக்னாதிபதி குரு நீசம். 1&4 க்கு அதிபதி நீச்சமாகி இருந்தாலும் இரண்டாமித்தில் நீசபங்க ராஜ யோகத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் சில பல தடங்கல்களுடன் ஜாதகர் பெரிய படிப்பைப் (குறைந்தது PG) படித்திருப்பார். 7-ஆம் அதிபதி 12 - இல் மறைவு கூடவே சூரியனால் அஸ்தங்கமும் ஆகியுள்ளார். 9-ஆம் அதிபதியுடன் கூடி ராஜ யோகம் உள்ளது. கூடவே சூரியன் செவ்வாய் பரிவர்த்தனை உள்ளது. மேலும் 7-ஆம் இடத்தில் 31 பரல்கள் உள்ளது. சுக்கிரனும் 5 பரல்களுடன் இரண்டாமிடத்தில் நிறைவாக உள்ளதால் கண்டிப்பாக திருமணத்தை நடத்தி குடும்ப வாழ்க்கையை உருவாக்கி கொடுப்பார். 1974 ஆம் ஆண்டில் சுக்கிர தசை குரு புத்தியில் (23 ஆம் வயதில் - அந்தக்காலத்தில் இது 'delayed marriage') திருமணம் நடந்திருக்க வேண்டும். வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  16. அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
    1).ஜாதகர் பள்ளி இறுதி வகுப்பை தாண்டி இருக்க மாட்டார்.
    2).திருமணம் நடந்து இருக்கும்.27 வயதிற்க்கு மேல் சுக்கிரன் தசையில் புதன் புக்தியில் நடந்திருக்கும்.
    அலசல்:
    லக்கினம், நான்காம் அதிபதி குரு 2ல் நீச்சம்.6,11 க்குடைய சுக்கிரனுடனும் மாந்தியுடனும் சேர்க்கை.வித்யா காரகன் புதன் 12ல் மறைவு.பக்கியாதிபதியான சூரியனின் சேர்க்கை.9ல் இருக்கும் செவ்வாயின் பார்வை.
    குரு அமர்ந்த வீட்டதிபதி சனி லக்கினத்திற்க்கு 9ல் அமர்வு,நீச்சபங்கமடந்துள்ளது.
    குரு,சுக்கிரன் சேர்க்கை 2ல் நிபுணத்துவத்தை தந்தாலும் உடன் இருக்கும் மாந்தியின் சேர்க்கை யோகத்தை கெடுத்து விட்டது.
    நாலில் அமர்ந்த சந்திரனும் ராகுவின் சேர்க்கை மற்றும் கேதுவின் பார்வையும் பள்ளி இறுதி வகுப்பையும் தாண்ட முடியாதவாறு செய்துள்ளது.
    2).களத்திராதிபதி புதன் 12ல் மறைந்து பாக்கியாதிபதி சூரியனுடன் சேர்க்கை.கூடவே 9ல் இருக்கும் செவ்வாயின் பார்வை.சூரியன் வர்க்கோத்தமம்.
    களத்திரகாரகன் சுக்கிரன் வர்க்கோத்தமும் பெற்று, நவாம்சத்தில் களத்திராதிபதி புதனுடன் சேர்க்கை பெற்றதும் ஜாதகருக்கு திருமணத்தை நடத்திவைத்துள்ளது.
    3).லக்னாதிபதி குரு, குடும்பஸ்தானத்தில் அமர்ந்து, நீச்ச பங்கம் அடைந்ததுடன்,குடும்ப காரகனாகவும் உள்ளார். களத்திரகாரகனுடன் சேர்க்கை பலம் திருமணத்தை நடத்தியிருக்க வேண்டும்.
    =பொன்னுசாமி.

    ReplyDelete
  17. ஜாதகர் மீன ராசி . ரேவதி நட்சத்திரம். தனுசு லக்னம். ராசி மற்றும் லக்னாதிபதி குரு 2-ல் நீசம். மாந்தி மற்றும் அசுர குரு சுக்கிரனுடன் கூட்டணி. 9-ல் சனி செவ்வாய்.
    1) ஜாதகர் பள்ளி படிப்பை முடித்து இருந்தால் ஆச்சரியம் தான். பள்ளி படிப்போடு கல்வி தடை. கல்லூரி சென்று இருக்க மாட்டார் !.
    காரணங்கள் : (1) கல்வி காரகன் குரு நீசம்.
    (2) குரு மாந்தியோடும் சுக்கிரனோடும் கூட்டணி !
    (3) நான்காம் அதிபதியும் குருவே !. அவர் நீசம் !
    (4) நான்காம் இடத்தில் சந்திரனும் ராகுவும் கூட்டணி !. சர்ப்ப தோஷம் ! நான்காம் வீடு
    கெட்டு விட்டது !
    (5) புத ஆதித்ய யோகம் இருந்தாலும் அது விரய ஸ்தானத்தில் ! பலன் அளிக்கவில்லை !
    2) ஜாதகருக்கு திருமணம் நிச்சயம் உண்டு ! காதல் கலப்பு திருமணம் ! .
    காரணங்கள் : 1) சனி செவ்வாய் 9-ல் கூட்டணி.
    2) ராகுவுக்கு செவ்வாய் பார்வை !
    3) சுக்ரன் குடும்ப ஸ்தானத்தில் குருவுடன் கூட்டணி !
    4) ஏழாம் இட பரல்கள் 31.
    5) புதன் விரய ஸ்தானத்தில் அஸ்தமனம் ஆகி இருந்தாலும் அவர் நட்சத்திர அதிபதி . அதனால் திருமணத்தை களத்தீரக்கார்கன் சுக்கிர தசையில் புதன் புக்தியில் நடத்தி முடித்தான் !.

    ReplyDelete
  18. மதிப்பிற்குரிய வாத்தியார் அய்யா:

    ஜோதிட புதிர் போட்டி எண் 68ற்கான எனது கணிப்பு:-

    1.ஜாதகர் பள்ளி படிப்பு வரை பயின்று இருப்பார்.

    *தனுசு லக்கனம், மீன ராசி, லக்கன மற்றும் 4மிட (கல்வி ஸ்தானம்)அதிபதி "குரு" 2மிடத்தில் "நீசம்"[ஆனால் நவாம்சத்தில் ஆட்சி]உடன் 6&11 மிட அதிபதி "சுக்கிரன்" மற்றும் "மாந்தி" உள்ளனர்.

    *கல்வி ஸ்தானத்தில் 8மிட அதிபதி "சந்திரன்" மற்றும் "ராகு" உள்ளனர்.மேலும் செவ்வாயின் 8ம் பார்வையையும், கேதுவின் 7ம் பார்வையையும் பெறுகின்றது.

    *கல்வி காரகன் "புதன்" 12மறைந்துள்ளார். உடன் "சூரியன்" இருப்பதனால் "புதஆதித்திய" யோகமாகிறது. புத்திசாலியாக இருப்பார்.

    *11வ:11மா:29நா வயதிற்கு மேல் சுக்கிர தசையினால் (குட்டி சுக்கிரன் கூடி கெடுக்கும்) படிப்பு பள்ளியோடு முடிந்திருக்கும்.

    2.ஜாதகருக்கு (27வ:11மா:29நா - 30வ:09மா:29நா வயதில்) திருமணம் நடந்திருக்கும்.

    *7மிட அதிபதி "புதன்" 12ல் 9மிட அதிபதி "சூரியனுடன்" இனைந்து மறைந்துள்ளார். (9&10 ம் ஆவதால் "தர்மகர்மதிபதி யோகம்)

    *7ம் மிடம் எந்த கிரக பார்வையையும் பெறவில்லை.

    *களத்திர காரகன் "சுக்கிரன்" 2ம்மிடத்தில் மாந்தி& லக்கன அதிபதி குருவுடன் சேர்ந்துள்ளார்.

    *சுக்கிரன் வர்தகோமம் (ராசி மற்றும் அம்சத்தில் ஒரே வீடு)ஆகியுள்ளார்.

    * எனவே ஜாதகரின் சுக்கிர தசை புதன் புத்தியில்(27வ:11மா:29நா - 30வ:09மா:29நா வயதில்)திருமணம் நடந்திருக்கும்.

    உபரிகை

    *2மிடத்தில் மாந்தி உள்ளதனால் குடும்ப வாழ்க்கை சுமாராகத்தான் இருக்கும்.

    *2,6,10 மிடத்தின் ஆதிக்கத்தால் இது தன ஜாதகம்.

    சுபம்.



    ReplyDelete
  19. Guruji,

    1. Wanning moon in 4 house good but with rahu not favorable.
    2.4 lord in 2nd house with mandi.
    3. mercury in 12 house.
    4. mars aspect in 4 house.
    5. 5th lord in 9th house.
    He is moderately educated but will have keen intelligence.

    Marraige life.

    1. 7 lord and 9 lord in 12 house.
    2. 2nd lord in 9th house.
    3. Guru and venus in 2nd house good but mandi in 2 house will give in fight in family.
    4. mercury in 12th house is not good as per your recent posting.
    5. venus in vargothamam. Jupiter in good poistion in navamsa.

    There is marraige in sukara dasa and mercury sub period.

    ReplyDelete
  20. Astrology quiz.68க்கான என்னுடைய அலச‌ல் :

    தனுசு லக்கினம், மீன ராசி ஜாதகர்.

    1. ஜாதகர் ஆரம்பக்கல்வி மட்டும் பயின்றவர்.
    2. திருமணம் நடந்திருக்கும்.

    அதற்கான காரணங்கள்:

    கல்வி : லக்கினாதிபதியும், 4ம் அதிபதியுமான குரு பகவான் 2ல் நீசம். தவிர,6ம் அதிபதி வில்லன் சுக்கிரன் மற்றும் மாந்தியுடன் கூட்டு வேறு. 4மிடத்தில் அஷ்டமாதிபதி சந்திரன் மற்றும் ராகு அமர்ந்துள்ளனர். இந்தக் கூட்டணியின் மேல் 9லிருந்து செவ்வாய் மற்றும் 10ல் உள்ள கேதுவின் பார்வையைத் தவிர வேறு சுபகிரகங்களின் பார்வையில்லை. கல்விக்காரகன் புதனோ லக்கினத்திற்கு 12ல் விருச்சிகத்தில் மறைந்து விட்டார்.இதற்கு துணையாக ஜாதகருக்கு கோள் சாரத்தில் 12 வயது வரை கேதுவின் தசை இருந்துள்ளது. இவையெல்லாம் சேர்ந்து ஜாதகரை படிக்க விடவில்லை. ஆரம்ப்க் கல்வியோடு பள்ளிக் கூடத்திற்கு முழுக்கு போட்டுவிட்டார்.

    திருமணம்: குடும்ப ஸ்தானத்தில் 2 சுபகிரகங்கள். அதன் அதிபதி 9ல் அமர்ந்து 5ம் அதிபதி செவ்வாயுடம் கூட்டு வைத்துள்ளார். 9ம் அதிபதி சூரியனும் 12ம் அதிபதி செவ்வாயும் பரிவர்த்தனை அடைந்துள்ளனர்.7ம் அதிபதி புதன், பாக்யாதிபதி சூரியனும் 12ல் மறைவு.7மிடத்திற்க்கு எந்த சுபக் கிரகங்களின் பார்வையுமில்லை. ஆனால் ஜாதகருக்கு திருமண வயதில் சுக்கிர தசை நடந்துள்ளது. 2ல் அமர்ந்த காரகன் சுக்கிரன் அவரின் திருமணத்திற்கு உதவி செய்துள்ளார். 24 வயதில் சுக்கிர தசை,குரு புக்தியில் திருமணம் இனிதே நடந்திருக்கும்.

    ReplyDelete
  21. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

    கல்விகாரகனான புதன் 12ல், 9ம் அதிபதி சூரியனுடன் சேர்க்கை பெற்று இருப்பதாலும், கல்வி ஸ்தான அதிபதி குரு 2ம் இடத்தில் அமர்ந்திருப்பதாலும் ஜாதகர் பட்டப் படிப்பு படித்தவர். மறைந்த புதன் நிறைந்த கல்வி என்று கூறுவர்.

    லக்னாதிபதி குருவும் களத்திர காரகன் சுக்கிரனும் சேர்ந்து குடும்ப ஸ்தானத்தில் இருப்பதாலும், சந்திரன் மீனத்திலும், 7ம் அதிபதி புதன் விருச்சிகத்தில் (Fruitful Signs) இருப்பதாலும் ஜாதகருக்கு நிச்சயம் திருமணம் உண்டு. அவருடைய 27வது வயதில், சுக்கிர தசை புதன் புக்தியில் திருமணம் நடைபெற்று இருக்கும்.

    ReplyDelete
  22. மதிப்பிற்குரிய ஐயா !!!

    புதிர் எண்: 68 இற்கான பதில்

    அன்பர்: தனுசு லக்கினம், லக்கினாதிபதி குரு 2இல் நீசம், உடன் ஆறாம்அதிபதி சுக்கரன், மாந்தி. குரு நீச்சமாக இருந்தாலும் அம்சத்தில் ஆட்சி. கல்விஸ்தானத்தில் எட்டாம்அதிபதி சந்திரன், மற்றும் ராகு. கல்விகாரகன் புதன் சூரியனுடன் இணைந்து நிபுணத்துவம் தந்தாலும் இவர்கள் இருப்பதோ 12இல் ( மறைவுஸ்தானத்தில்). ஆகவே இந்த ஜாதகர் மிகுந்த சிரமத்துடன் பள்ளிப்படிப்பை முடிக்கலாம். அதற்கு மேல் படிக்க வந்த கேது, சுக்கர திசைகள் கைகொடுக்காது. தடைபட்ட கல்வி. உயர்கல்வி பெறவில்லை.

    களத்திரகாரகன் சுக்கரன் சனி வீட்டில் ( நட்பு வீட்டில்). உடன் லக்கினாதிபதி குரு. ஏழாம்அதிபதி புதன் 12 இல் மறைவு. இருந்தாலும் ஜாதருக்கு சுக்கர திசை புதன் புத்தி 28 ஆம் வயதில் தொடங்கி 31 ஆம் வயது வரை உள்ளது. அன்றைய கோள்சார ரீதியில் பார்த்தால் 29 - 30 ஆம் வயதில் திருமணம் நடை பெற அதிக வாய்ப்புள்ளது.

    இப்படிக்கு

    சிவச்சந்திரன்.பா

    ReplyDelete
  23. The native is born on 1/Dec/1949 at around 8:58am, considering chennai as birth place.

    1. Lagnathipathi Guru is in 2nd house along with 6th and 11th house lord Sukran and also maandhi.
    Lagnathipathi is neecham.
    2. Bagyathipathi Sun is in 12th house along with 7th and 10th house lord Budhan. 5th lord Chevvai and 9th lord Sun are in
    parivathanai. 5th lord Chevvai is aspecting Sun and Budhan.
    3. Saturn and Chevvai combination in 9th house which will lead to intermittent issues in native's life.

    Education:
    a. 4th house lord Jupiter is neecham and is in 2nd house along with 6th house lord Sukran and maandhi.
    b. Budhan is in 12th house along with Sun and is combust. Budhan is aspected by 5th house lord chevvai.
    c. Valarpirai chandran is in 4th house along with rahu and this will lead to confused state of mind.
    Chandran is the 8th house lord.
    d. 5th lord chevvai (functionally benefic) is aspecting the 4th house.

    Considering all the above aspects, the native wouldn't have studied very well. He would have struggled to complete
    the degree itself.


    Marriage:
    1. Sukran is the 6th house lord and is in 2nd house along with neecha lagnathipathi and maandhi. So second house is also
    affected.
    2. 7th lord is budhan and it is combust and is in 12th house along with Sun.Though the the combination of
    9th house lord and 7th/10th lord forms a raja yoga, the native will not receive its benefit fully as the combination
    is in 12th house.
    3. 2nd house lord Sani is in 9th house along with 5th lord Chevvai.

    Considering all the above aspects, the native would have delay in getting married. The native would have got married in the end of the
    sukra dasa (in budhan budhi possibly) or in the surya dasa. The marriage would have been problematic.

    Regards,
    Srinivasan.

    ReplyDelete
  24. ஜாதகர் படிக்காதவர், திருமணம் ஆகாதவர்.

    7ம் அதிபதி 12ல் மறைந்து விட்டார். களத்திரகாரகன் சுக்கிரன் இன்னொரு சுப கிரகமான குருவுடன் 2ல் இருந்தாலும் உடன் மாந்தி இருப்பது திருமண நடப்பதற்கு தடையான அமைப்பு.

    வித்யாகாரகன் புதன் சூரியனுடன் இருப்பது கல்விக்கு நல்ல அமைப்பு. ஆயினும் 12ல் மறைந்து இருப்பது கல்வி தடையான அமைப்பு. 4ல் சந்திரன் உடன் ராகு இருப்பதும் இதற்கு ஒரு காரணம்.

    ReplyDelete
  25. உயர்திரு ஐயா, வணக்கம்.
    புதிர் 68ற்க்கு எனது பதில்,
    நான்காம் வீட்டு அதிபதி அந்த வீட்டிற்க்கு 11ல் இருந்தாலும் நீசம்,4ல் ராகு+எட்டாம் வீட்டு அதிபதி இருப்பதால் ஜாதகருக்கு ஆரம்ப கல்வியோடு படிப்பு தடைபட்டிருக்கும்.7ம் வீட்டு அதிபதி அந்த வீட்டிற்க்கு 6ல் மற்றும் லக்கணத்திற்க்கு 12ல்,மற்றும் 2ல் மாந்தி.களத்திரகாரர் சுக்கிரன் நட்பு வீட்டில் அதனால் சுக்கிரதிசை குரு புத்தியில் திருமணம் முடிந்திருக்கும்.திருமணவாழ்க்கை தோல்வியில் முடிந்திருக்கும்.

    ReplyDelete
  26. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ...புதிர் எண் .6 ௮
    லக்கனம் தனுசு ராசி மீனம் .
    1,லக்கனாதிபதி குரு சுக்கிரனுடன் 2 ல் உடன் மாந்தி .
    2,ராசி மீனம் சநதிரனுடன் ராஹு
    ஆக .7 மிடம் புதன் வீடு லக்னத்திற்கும் ராசிக்கும் ..
    3.புதன் 12ல் சூரியனுடன் ....இதில சூரியன் பரிவர்த்தனை செவ்வுடன் ,செவ்வாய் சனியுடன் கூட்டணி .
    சுக்கிரன் வர்கோத்தமம்--சூரியனும் வர்கோத்தமம் ..குரு அம்சத்தில் ஆட்சி ..
    4.படிப்பு லக்னத்திற்கு ௪ ல் சந்திரனுடன் ராஹு கூட்டணி இருந்தாலும் வித்தியாகரகன் 12ல் இருந்தாலும் புத ஆதித்ய யோகம் ..சனி பார்வை வேறு 12ய்பார்கிறார். ஆகவே பட்டபடிப்பு வரை படித்திருப்பார்.
    5.திருமணம்:: 9ல் சனி செவ்வாய் சேர்க்கை 2ல் மாந்தி .+குரு +சுக்கிரன் ..இருந்தாலும் குடும்பம் உண்டு காரணம் ::அம்சத்தில் குரு லக்னத்தை தன பார்வையில் வைப்பதால் கண்டிப்பாக திருமணம் உண்டு..
    என்ன ஒரு சின்ன திருத்தம் ரா சியில் 9 மிடம் சனி செவ்வாய் சேர்க்கை என்பதால் ஒரு முறை திருமணம் ஆகி ..பின் மீண்டும் ஒரு விதவை பெண்ணை மணதிருப்பார். காரணம் 9 மிடம் சனி செவ்வாய் சனிக்கு பகை வீடு .சனி அயன சயன சுக போக வீட்ட்டை தன பார்வையில் வைக்கிறார்.

    i.பட்ட படிப்பு வரை படித்திருப்பார்

    iiமுதல் திருமணம் ரத்தாகி பின்னர் ஒரு விதவை பெண்ணை மணந்திருப்பார். சுபமான குடும்ப வாழ்க்கை அமைந்திருக்கும் ..
    எனக்கு தெரிந்த வரை பரீட்சை எழுதிவிட்டேன் ...????

    ReplyDelete
  27. ஜாதகர் 1 டிசம்பர் 1949 அன்று காலை 9மணி 0 நிமிடம் 15 வினாடிக்குப்பிறந்தவர். பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.
    நானும் 1949ல் பிறந்தவன் ஆனதால், சனி, குரு ராகு கேது இருக்கும் இடங்களைப் பார்த்தவுடனேயே 1949ல் பிறந்தவர் என்பது புரிந்துவிட்டது. அதன் பின்னர் ஜாதகத்தை தசாஇருப்புக்கு ஏற்ப ஃபைன் ட்யூனிங் செய்ய 5 நிமிடமே ஆனது.

    4ம் இடத்து அதிபதி குரு ஆனதால் ஜாதகர் படிக்க வேண்டும். ஆனால் அவர் 2ல் நீசம் அடைந்து மாந்தியுடன் கூட இருக்கிறார். மேலும் சுக்கிரன் ஆறாம் வீட்டு அதிபதி. அவருடன் 4ம் அதிபதி நிற்பதும் கல்வியினை பாதித்துவிட்டது.

    படிப்புக்கான காரகன் புதன் தன் விட்டுக்கு ஆறிலும்,சூரியனால் அஸ்தங்கதம் அடைந்ததும் 12ல் மறைந்ததும் படிப்புக்கு உதவியாக இருக்காது.

    எட்டாம் வீட்டு அதிபதி சந்திரன் 4ல் சென்று அமர்ந்ததும் அவரோடுகூட ராகு அமர்ந்ததும் படிப்புக்கு உதவவில்லை.

    5வயதுமுதல் 12 வயது வரை கேதுதசா. எல்லாவகையிலும் தடங்கல்தான்.
    பள்ளிப்படிப்பை முடிப்பதே கடினம்தான். ஆரம்பப்பள்ளிப் படிப்பை முடித்திருப்பார்.அவ்வளவுதான்.

    திருமணம்: ஏழாம் வீட்டு அதிபதி புதன் 12ல் மறைந்து சூரியனால் எரிக்கப்பட்டு விட்டார்.களத்திரகாரகன் சுக்கிரன் இரண்டில் மாந்தியுடன் கூட்டணி.எனவே தாமதத் திருமணம். சுக்ரதசா புத புக்தியில்31,32 வயதில் திருமணம்.

    ReplyDelete
  28. வணக்கம் ஜயா

    புதிர் எண் 68 கான விடை


    கல்வி நிலை
    1) லக்னாதிபதியான குரு(கல்விகாரகனும் கூட) 2ல் மாந்தி யுடன் சேர்க்கை, லக்னாத்தின் பாபகர்த்தாரி யோகம், 4ல் ராகு எல்லாம் சேர்ந்து பள்ளி படிப்புடன் கண்டிப்பாக காலி ஆகி இருக்கும்.

    கல்யாணம்
    2) 7ம் வீட்டு காரன் 12 ல் மறைவு, காரகன் சுக்கிரன் மாந்தி சேர்க்கை, இருந்தாலும் நவாம்சத்தில் சுக்கிரன் வர்கோத்தம் ஆகியிருப்பதால் கண்டிப்பாக சுக்கிரதிசையில் கல்யாணம் ஆகி இருக்கும்

    நாராயணன், புதுச்சேரி

    ReplyDelete
  29. திருமணத்திலிருந்து கொஞ்சம்
    திசை திருப்பி..

    வேறு பக்கம் குறித்து
    கேள்வி கேட்டால் மகிழ்ச்சி..

    தொடர் பயிற்சி அவசியம் எனினும்
    மாற்று பயிற்சியும் தேவை..//

    சார் நான் நினைத்தேன் நீங்க சொல்லிட்டீங்கள் ஆனால் இதுவே ச்ரியா தெரியவில்லையே சார். ச்ரி நான் எப்படியும் நல்லா அலசுவேன் ரொம்பநன்றிசார்.

    ReplyDelete
  30. nellai padmanaban
    The native has no education only up to x std.
    1.budhan is in 12th place.
    2.guru fourt place is debiliated with sixth place venus
    3 8th place chandran with ragu in 4th place.
    4.even though fifth place aspects fourth by 8th aspect here no other support.
    The native is not married
    1.the budhan seventh place planet in 12th
    2.the sixth place venus with debilitated guru in 2nd house 3 3.ninth place sun is in 12th with pathagapathy budhan.
    4 mars in simham rasi is not good aspect

    ReplyDelete
  31. கேள்விக்கான பதிலை மற்றவர்கள் மூலமாக அறியக் காத்திருக்கிறேன்...

    ReplyDelete
  32. மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு எனது பதில்களை மதிப்பிடும்படி வேண்டுகிறென்.
    1. நான்காம் வீட்டு அதிபதி நீசம், 4ம் வீட்டு அதிபதி மாந்தியுடன் கூட்டணி. கல்வி ஸ்தானமான 4ம் வீட்டில் ராகு. கல்விக்கு அதிபதி புதன் லக்கனத்திற்கு 12ம் வீட்டில். அம்சத்தில் 4 ம் வீட்டு அதிபதி குரு ஆட்சி பெற்று இருப்பதால் ஆரம்பக்கல்வி மட்டும் கிடைத்திருக்கும்.

    2. ஏழாம் வீட்டு அதிபதி 12ம் வீட்டில் மறைவு. களத்திரகாரகன் சுக்கிரன் மாந்தியுடன் இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் கூட்டணி. எல்லாம் கெட்டுப்போனாலும் நல்லது செய்ய வேண்டிய குருவும் நீசமாகி போனார். 7ஆம் வீட்டிற்கு வேற நல்ல பார்வை எதுவும் இல்லை. அம்சத்தில் சுக்கிரனும்,ஏழாம் வீட்டு அதிபதியும் ராகுவுடன் கூட்டிணி. இவருக்கு திருமணம் ஆகியிருக்க வாய்ப்பு இல்லை. ஆனாலும் வெகுவேகமாக முறிந்திருக்கும்.

    ReplyDelete
  33. 1. ஜாதகரின் 4 ம் வீட்டில் 8ம் அதிபதி சந்திரன்,உடன் ராகு.4 ம் அதிபர் குரு நீசன்,உடன் 6 ம் அதிபர் சுக்கிரன் சேர்க்கை.4 ம் வீட்டிற்கு செவ்வாயின் பார்வை. எனவே ஜாதகர் ஆரம்ப கல்வியோடு படிப்பை நிறுத்தியிருப்பார்.

    2.7 அதிபதியும் ,பாக்யாதிபதி சூரியனும் 12 ல் மறைவு.7ம் அதிபதி புதனுக்கு செவ்வாயின் 4ம் பார்வை.
    லக்னாதிபதி குரு 2ல் நீசம் ,உடன் களத்திரகாரனும் 6 ம் அதிபதியுமாகிய சுக்கிரன்.
    ஆனால் அம்சத்தில் களத்திரகாரகன் சுக்கிரனுடன் 7ம் அதிபன் ’புதன் சேர்க்கை.சுக்கிரன் வர்கோத்தமமாகி வலுவில் உள்ளார். குருவும் அம்சத்தில் ஆட்சியில் உள்ளார். சனி,செவ்வாய் சேர்க்கை உள்ளதால் தாமத திருமணம். 32 வயதிற்கு மேல் திருமணம் நடந்திருக்கும். ஆனால் குடும்ப வாழ்க்கை மகிழ்சியாய் இருந்திருக்காது. பிரிந்திருக்கக் கூடும்.

    Sivarajan
    (pondicherry)

    ReplyDelete
  34. இலக்கினாதிபதியும் 4ம் வீட்டு அதிபதியுமான குரு 2ம் வீட்டில். ஆனால் உடன் மாந்தி. கல்விகாரகர் புதன் இலக்கினத்திற்கு 12ல், ஆனால் 4ம் வீட்டிற்கு 9ல். நவாம்சத்தில் 4ம் வீட்டு குரு ஆட்சி. 4ல் இராகு இருப்பது சிறப்பல்ல. பட்டப்படிப்பிற்கு வாய்ப்பில்லை. பள்ளிப் படிப்போடு கல்வி முடிந்திருக்கும்.

    குடும்ப ஸ்தானத்தில் மாந்தி இருப்பது சிறப்பில்லை. களத்திரகாரகரும் மாந்தியுடன் இருக்கிறார். 7ம் வீட்டு புதன் இலக்கினத்திற்கு 12ல், 7ம் வீட்டிற்கு 6ல். உடன் பாக்கியாதிபதி சூரியன் இருப்பது நல்லதே. ஆனால் அவரும் இலக்கினத்திற்கு 12ல் மறைந்து விட்டார். செவ்வாயின் பார்வை 7ம் வீட்டு அதிபதியின் மேல் படுகிறது. மன காரகர் சந்திரனும் இராகுவுடன் கூட்டணியில் இருக்கிறார். மன வேதனைகளும் குழப்பங்களும் நிறைந்திருக்கும். திருமணம் மறுக்கப்பட்ட ஜாதகம் என்றே தோன்றுகிறது. குடும்பகாரகரும் களத்திரகாரகரும் 2ம் வீட்டில் இருப்பதால், சுக்கிர தசையில் திருமணம் நடந்திருக்கலாம், ஆனால் நிலைத்திருக்காது.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com