கேட்காமல் கிடைத்த வரம்!
ஒரு சின்ன கற்பனை!
ஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைக்கிறது.
பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400 ரூபாய்கள் உங்கள் சொந்த செலவிற்காக வரவு வைக்கப்படும். ஆனால் இந்தப் பரிசுக்கு சில நிபந்தனைகள் உண்டு:
1. அந்த நாளில் நீங்கள் செலவழிக்காத பணம் உங்கள் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டுவிடும்.
2. உங்கள் பணத்தை நீங்கள் வேறு ஒருவரின் கணக்கிற்கு (அதாவது அக்கவுண்டிற்கு) மாற்ற முடியாது.
3. அதைச் செலவு செய்ய மட்டுமே உங்களுக்கு உரிமை உண்டு.
4. ஒவ்வொரு நாளும் விடியும்போது, உங்கள் வங்கிக் கணக்கில், அந்த நாளின் செல்விற்காக 86,400 ரூபாய் வரவு வைக்கப்படும்.
5. எப்போது வேண்டுமென்றாலும், வங்கி, இந்த ஆட்டத்தை முன்னறிவிப்பின்றி நிறுத்திக் கொள்ளலாம்.
6. வங்கி, முடிந்தது கணக்கு என்று சொன்னால், அவ்வளவுதான் வங்கிக் கணக்கு மூடப்படும். மேற்கொண்டு பணம் வரவு வைக்கப்பட மாட்டாது.
7. இப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
8. உங்களுக்குப் பிடித்த எல்லாவற்றையும் வாங்குவீர்கள் இல்லையா? உங்களுக்கு மட்டுமல்லாமல், உங்கள் மனதிற்குப் பிடித்தவர்களுக்கும் வாங்கித் தருவீர்கள் இல்லையா? உங்களுக்கு முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்கும் செலவு செய்வீர்கள் - ஏனென்றால் அவ்வளவு பணத்தையும் உங்களுக்காக மட்டுமே செலவு செய்வது சாத்தியமில்லை என்பதால், அப்படித்தானே?
9. முடிந்தவரை ஒவ்வொரு ரூபாயையும் எப்படியாவது செலவு செய்து உபயோகிப்பீர்கள்தானே?
உண்மையில் இது ஆட்டமில்லை.
நிதர்சனமான உண்மை!
ஆம்!
நம் ஒவ்வொருவருக்கும் இப்படியான வங்கிக் கணக்கு இருக்கிறது. நாம்தான் அதைக் கவனிக்கவில்லை. அந்த ஆச்சரிய வங்கிக் கணக்கின் பெயர் பெயர் காலம்.
ஒவ்வொரு நாள் காலையும் நாம் எழுந்திருக்கும்போது, வாழ்க்கையின் அதி உன்னதப் பரிசாக, 86,400 நொடிகள் நமக்கு வழங்கப்படுகிறது.
One day = 24 hours X 60 minutes X 60 seconds = 86,400 seconds (நொடிகள்)
இரவு நாம் தூங்கப் போகும்போது, நாம் மிச்சம் வைக்கும் நேரம் நமக்காக சேர்த்து வைக்கபடுவதில்லை.
அன்றையப் பொழுதில் நாம் வாழாத நொடிகள் தொலைந்தது தொலைந்ததுதான். நேற்றையப் பொழுது போனது போனதுதான்.
ஒவ்வொரு நாள் காலையிலும் புத்தம் புதிதாக நம் கணக்கில் 86,400 நொடிகள் வரவாகும்
எச்சரிக்கையே இல்லாமல் எப்போது வேண்டுமென்றாலும் வங்கி, உங்கள் கணக்கை முடக்க முடியும்.
அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
உண்மையில் 86,400 வினாடிகள் என்பது அதற்குச் சமமான அல்லது அதற்கு மேலான பணத்தை விடவும் மதிப்பு வாய்ந்தது அல்லவா?
இதை நினைவில் வைத்துக் கொண்டால், வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் நாம் கொண்டாடி மகிழ மாட்டோமா?
காலம் நாம் நினைப்பதைவிட வேகமாக ஓடிவிடும்!
எனவே காலத்தைப் பொன் போலப் பேணுங்கள். எப்போதும் சந்தோஷமாக இருங்கள். உங்களைச் சுற்றியுள்ளவர்களை, சார்ந்துள்ளவர்களை ஆழமாக நேசியுங்கள்! வாழ்க்கை கிடைப்பதற்கு அரிய பொக்கிஷம். வாழ்க்கையைக் கொண்டாடி மகிழுங்கள்
இணையத்தில் படித்ததை சிறு மாற்றங்களுடன் உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்
============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

காலத்தை போற்றுவோம்
ReplyDeleteகனிவுடன் வாழ்வோம்
விடியற்காலையில் பூபாளம் போல - இனியதொரு பதிவு.. சிந்தனைக்கு விருந்து. காலம் பொன் போன்றது என தெரியாமலா சொன்னார்கள்!..
ReplyDeleteவாழ்வையும் காலத்தையும் பற்றிய அருமையானதொரு பார்வை.
ReplyDeleteஅற்புதம்.
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அய்யா.
Respected Sir,
ReplyDeleteGood One sir...
Neengal jodhida padam pudiyadhaga valaiyetruvadhey illayae... Please post some new lessons at-least popcorn post sir...
Thank You.
Dear sir, Good morning.Few months back i have joined your blog. Keenly studying your jothida lessons. I am sincerly requesting you to bring your lessons in book form so that we can refer it any time
ReplyDeleteRaju
சிறந்த வழிகாட்டல்
ReplyDeleteThough we can guess while reading this, but it is still reading worth. I am trying to follow it but it is very difficult to make 100%. But certainly i am seeing improvement. thank you for sharing.
ReplyDeleteஅருமை
ReplyDeletethe same thing explained with a different perspective. The total degree in zodiac is 360 degree. And the day consists of 60 naazhikai. This means the human is bound to breath only up to 21600 (360*60) times per day. During every breath we need to assure the right kind of act.
ReplyDeleteகாலம் பொன் போன்றது.ஒப்புக்கொள்கிறேன். இன்று தொழில் நுட்ப வளர்ச்சியால்
ReplyDeleteபல செயல்களையும் அதிக உடல் உழைப்போ, கால விரயமோ இல்லாமல் செய்ய முடிகிறது.அதனால் முன்பு போல் அல்லாமல் இப்போது இளைஞர்களுக்கு
அந்த நேர வங்கிக் கணக்கில் அதிகம் செலவாவதில்லை.கைவசம் இருக்கும் நேரத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்ற திட்டம் இந்தத் தலைமுறைக்குத் தெரியவில்லையோ என்று தோன்றுகிறது.
ஒரு மொபைல் நிறுவனத்தின் விளம்பரம்: ஒரு மகன் சோம்பலாக சோபாவில் படுத்துக் கொண்டு காதில் ஒலிக் கருவியுடன் கண் மூடிப் படுத்து இருக்கிறான்.
செலுத்த வேண்டிய பணத்தை நேரத்தோடு செலுத்தவில்லையே என்று தந்தை
ஆதங்கப்படுகிறார். பையன் கண்ணைத் திறக்காமலேயே மொபைல் மூலம் பணத்தைச் செலுத்தி விட்டு மேலும் சோம்பலாகத் திரும்பிப் படுக்கிறான்.
தொழில் நுட்பம் இளைஞர்களை எல்லாச் செயல்களையும் ஒத்திப் போடவும்,
கிடைக்கும் நேரத்தை ஆக்கபூர்வமாகச் செலவு செய்யவோ தெரியாமலும் ஆக்கிவிடுகிறதோ என்று ஐயப்படுகிறேன்.
உங்கள் பதிவு அருமை. நன்றி ஐயா!
காலத்தை வீணாக்காதீர்! என்று உங்களுடைய காலத்தில்(column)எல்லாரும் உணரும்படி உரைத்துள்ளீர்! நன்றி!
ReplyDeleteஉங்கள் பதிவு அருமை. நன்றி.
ReplyDeleteகாலத்தை வென்றவன் காவியமாணவன்
இதிலிருந்து புரிகிறது எல்லோராலும் காலத்தை
வெற்றி கொள்ளமுடியாது.
அப்படி முடியும் என்றால் காலனுக்கு வேலை இல்லை.
காலத்தைப் போற்றுவோம்...
ReplyDelete/////Blogger வேப்பிலை said...
ReplyDeleteகாலத்தை போற்றுவோம்
கனிவுடன் வாழ்வோம்/////
ஆஹா....நீங்கள் சொன்னால் சரிதான் வேப்பிலையாரே!
////Blogger துரை செல்வராஜூ said...
ReplyDeleteவிடியற்காலையில் பூபாளம் போல - இனியதொரு பதிவு.. சிந்தனைக்கு விருந்து. காலம் பொன் போன்றது என தெரியாமலா சொன்னார்கள்!../////
நல்லது. நன்றி நண்பரே!
////Blogger Govindasamy said...
ReplyDeleteவாழ்வையும் காலத்தையும் பற்றிய அருமையானதொரு பார்வை.
அற்புதம்.
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி அய்யா.//////
நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
////Blogger Chandrasekharan said...
ReplyDeleteRespected Sir,
Good One sir...
Neengal jodhida padam pudiyadhaga valaiyetruvadhey illayae... Please post some new lessons at-least popcorn post sir...
Thank You.////
நல்லது. உங்களின் வேண்டுகோளிற்கு நன்றி! செய்கிறேன்!
/////Blogger Nallaswamy Raju said...
ReplyDeleteDear sir, Good morning.Few months back i have joined your blog. Keenly studying your jothida lessons. I am sincerly requesting you to bring your lessons in book form so that we can refer it any time
Raju/////
எனக்கு மட்டும் ஆர்வம் இல்லையா என்ன? வேலை நடந்து கொண்டிருக்கிறது! நன்றி!
/////Blogger Jeevalingam Kasirajalingam said...
ReplyDeleteசிறந்த வழிகாட்டல்//////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
////Blogger Karthikraja K said...
ReplyDeleteThough we can guess while reading this, but it is still reading worth. I am trying to follow it but it is very difficult to make 100%. But certainly i am seeing improvement. thank you for sharing./////
நல்லது. அப்படியே செய்யுங்கள். நன்றி!
/////Blogger Uma said...
ReplyDeleteஅருமை/////
நல்லது. நன்றி சகோதரி!
//////Blogger Ravi said...
ReplyDeletethe same thing explained with a different perspective. The total degree in zodiac is 360 degree. And the day consists of 60 naazhikai. This means the human is bound to breath only up to 21600 (360*60) times per day. During every breath we need to assure the right kind of act./////
உண்மைதான். உங்களுடைய கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteகாலம் பொன் போன்றது.ஒப்புக்கொள்கிறேன். இன்று தொழில் நுட்ப வளர்ச்சியால்
பல செயல்களையும் அதிக உடல் உழைப்போ, கால விரயமோ இல்லாமல் செய்ய முடிகிறது.அதனால் முன்பு போல் அல்லாமல் இப்போது இளைஞர்களுக்கு
அந்த நேர வங்கிக் கணக்கில் அதிகம் செலவாவதில்லை.கைவசம் இருக்கும் நேரத்தை எப்படி செலவு செய்ய வேண்டும் என்ற திட்டம் இந்தத் தலைமுறைக்குத் தெரியவில்லையோ என்று தோன்றுகிறது.
ஒரு மொபைல் நிறுவனத்தின் விளம்பரம்: ஒரு மகன் சோம்பலாக சோபாவில் படுத்துக் கொண்டு காதில் ஒலிக் கருவியுடன் கண் மூடிப் படுத்து இருக்கிறான்.
செலுத்த வேண்டிய பணத்தை நேரத்தோடு செலுத்தவில்லையே என்று தந்தை
ஆதங்கப்படுகிறார். பையன் கண்ணைத் திறக்காமலேயே மொபைல் மூலம் பணத்தைச் செலுத்தி விட்டு மேலும் சோம்பலாகத் திரும்பிப் படுக்கிறான்.
தொழில் நுட்பம் இளைஞர்களை எல்லாச் செயல்களையும் ஒத்திப் போடவும்,
கிடைக்கும் நேரத்தை ஆக்கபூர்வமாகச் செலவு செய்யவோ தெரியாமலும் ஆக்கிவிடுகிறதோ என்று ஐயப்படுகிறேன்.
உங்கள் பதிவு அருமை. நன்றி ஐயா!/////
எல்லாம் சரியாகும். கவலை எதற்கு? காலதேவன் பார்த்துக்கொள்வான். உங்களுடைய கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
////Blogger venkatesh r said...
ReplyDeleteகாலத்தை வீணாக்காதீர்! என்று உங்களுடைய காலத்தில்(column)எல்லாரும் உணரும்படி உரைத்துள்ளீர்! நன்றி!/////
ஹ,,ஹ,,,,ஹா!
////Blogger Chandrasekaran Suryanarayana said...
ReplyDeleteஉங்கள் பதிவு அருமை. நன்றி.
காலத்தை வென்றவன் காவியமாணவன்
இதிலிருந்து புரிகிறது எல்லோராலும் காலத்தை
வெற்றி கொள்ளமுடியாது.
அப்படி முடியும் என்றால் காலனுக்கு வேலை இல்லை./////
உண்மைதான். நன்றி நண்பரே!
////Blogger சே. குமார் said...
ReplyDeleteகாலத்தைப் போற்றுவோம்...//////
ஆமாம். போற்றுவோம். நன்றி நண்பரே!