Astrology: சுகங்களுக்கு அத்தாரிட்டி யார்?
Popcorn Post No.48
எல்லோருக்கும் ஒரு குழப்பம் உண்டு. களத்திரகாரகன் , அதாவது Authority for marriage யார்? ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியான களத்திரகாரகனா? அதாவது ஆண்களுக்கு சுக்கிரனும், பெண்களுக்கு செவ்வாயையும் எடுத்துக்கொள்ள வேண்டுமா?
அதெல்லாம் ஒன்றும் இல்லை!
Authority என்பவர் ஒருவர்தான் இருக்க முடியும். தந்தைக்கு அத்தாரிட்டி சூரியன். தாய்க்கு அத்தாரிட்டி சந்திரன் என்று இருப்பதுபோல களத்திரத்திற்கு, அதாவது திருமணத்திற்கு அத்தாரிட்டி சுக்கிரன் மட்டும்தான்!
வாழ்க்கையில் உள்ள எல்லா சுகங்களுக்கும், படுக்கை சுகம் உட்பட (அதாவது ஆணுக்கு பெண் சுகமும், பெண்ணிற்கு ஆண் பரிசமும்) எல்லா சுகங்களுக்கும் உரியவன் சுக்கிரன்தான். ஆகவே அவன்தான் திருமணம் செய்து வைக்கும் அதிகாரமும் கொணடவனாவான்.
பெண்களுக்கு மட்டும் ஒரு துணைக் காவடியும் உண்டு. மெயின் காவடியை சுக்கிரன் தூக்குவான். துணைக் காவடியை குரு பகவான் தூக்குவார். அதனால்தான் பெண்களுக்கு மஞ்சள் கயிற்றைத் தாலிக் கயிறாக அணிவிக்கிறோம். மஞ்சள் நிறமுடைய தங்கத்தில் திருமாங்கல்யத்தைச் செய்கிறோம். பெண்களைத் தினமும் மஞ்சள் பூசிக் குளி என்கிறோம். தங்கம் வாங்க முடியாத ஏழைப் பெண்களுக்கு விரளி மஞ்சளை, மஞ்சக் கயிற்றில் கட்டி அணிவிக்கின்றோம். இவை எல்லாம் குருபகவானை மகிழ்விப்பதற்கும், அவரின் ஆசீகளைப் பெறுவதற்கும்தான்.
பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை இருந்தால் மட்டும் செவ்வாயைக் கூப்பிட்டுப் பார்ப்போம். அதுபோல செவ்வாய் தோஷத்திற்கும் அவர் வந்து நிற்பார். அவரின் பங்களிப்பு அவ்வளவுதான்
விளக்கம் போதுமா?
அன்புடன்
வாத்தியார்
===============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
பாரம்பரிய ஜோதிடத்தில் களத்திர காரகன் என்பவர் சுக்கிரன் மட்டும்தான். பிருகு நாடி போன்ற நாடிகள் முறையில் ஜோதிட பலன் சொல்பவர்கள்தான் ஆண்களுக்கு சுக்கிரன் எனவும், பெண்களுக்கு செவ்வாய் எனவும் சொல்வார்கள். அந்த முறையில் புத்திரகாரகன் சூரியன் என்பார்கள். இரண்டையும் போட்டு குழப்பாமல் பாரம்பரிய ஜோதிடத்தை மட்டும் நாம் பார்த்தால் குழப்பத்திற்கு இடமில்லை.
ReplyDeleteஅய்யா , காலை வணக்கம். popcorn பதிவு வெகு நாட்களுக்கு பிறகு வந்தது மகிழ்ச்சி. சும்மா நச் என இருந்தது . மாங்கல்ய பாக்கியத்திற்கு குருவை பார்க்க வேண்டுமா ?.
ReplyDeleteRespected Sir
ReplyDeleteIt is crystal clear. Had doubt of Mars's part before....Not any more.
thanks a lot.
Respected Sir
ReplyDeleteApologize for out of the context question…
If Rahu is in Viruchigam for a Viruchiga laknam, can we say Rahu will work like laknathipathi and do mostly good (no conjunction or aspect)? 2 laknathipathis is better than one and the one is uchham :)
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ..மிக நன்று. ..தெளிவான விளக்கம் . நன்றி.
ReplyDelete