9.7.14

Astrology: quiz.62: துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்!

 

Astrology: quiz.62: துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்!

Quiz No.62: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

பகுதி அறுபத்தியிரண்டு

9.7.2014

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு மூன்று கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்விகள்:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம். அன்பரின் ஜாதகத்தில் 4 ஆம் வீட்டையும், 7ஆம் வீட்டையும், 10ஆம் வீட்டையும் ஆராய்ந்து பதில் எழுதுங்கள்.


1.
ஜாதகரின் கல்வி பற்றி எழுதுங்கள். அதாவது ஜாதகர் படித்தவரா? அல்லது படிக்காதவரா? அல்லது படிப்பைப் பாதியில் விட்டவரா? ஆராய்ந்து எழுதுங்கள்.

2
ஜாதகருக்கு உரிய வயதில் திருமணம் ஆயிற்றா? அல்லது ஆகவில்லையா? திருமணம் ஆயிற்று என்றால் எந்த வயதில் ஆயிற்று? ஆகவில்லை என்றால் ஏன் ஆகவில்லை? ஆயிற்று என்றால் ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்? ஆகவில்லை என்றால் ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?

3.
ஜாதகருக்கு என்ன தொழில்? அரசாங்க உத்தியோகமா? அல்லது தனியார் நிறுவனத்தில் வேலையா? வியாபரமா? அல்லது சுய தொழிலா? என்ன செய்கிறார் என்பதைக் குறிப்பிட்டு எழுதுங்கள். ஜாதகப்படி அதற்கான காரணத்தையும் எழுதுங்கள்

பதிலை எழுதி அனுப்புங்கள். கேள்விக்கு உரிய பதிலை மட்டும் எழுதுங்கள். மற்ற பாவங்களையும் (That is other houses) குடைந்து எழுதிவிட்டு, என்னைக் குடையாதீர்கள்.

3 கேள்விகளுக்கும் சரியான பதில்களை எழுதினால் மட்டுமே 100 மதிப்பெண்கள் கிடைக்கும்.

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

36 comments:

  1. Respected Sir
    Here is my quick analysis.

    -- Laknathipathi/10th lord (vidhakarahan) is in 12th house with 12th hose lord and 2/9th house lord -- But he is uccham in navamsa.
    -- 4/7th lord is Uccham, but with neecha Mars (3/8th lord) -- Neecha pangam
    Vakra Sani is in 7th place. He is 5th and 6th lord. but Guru is looking at it.
    -- 10th lord is with 9th lord and 12th lord. Some level of Dharmakarmathipathi yogam is there. Reduced because of 12th place with 12th lord.

    Difficult test. But let me give my answers based on Uccha Bhudan(Navamsam) and uccha Guru. Trying to be positive here even though laknathipathi is in 12th place.

    1. Education. Would have completed atleast a degree with some difficulty due to Mars association and Rahu dasa (Mesa rahu will do good) but help of strong Guru (4th lord) and Bhudha (in navamsa).

    2. Marriage: He is married in Guru Dasa as Guru looks at 7th (own) house even though Vakra Sani is there. Sani also his 5th lord (and 6th lord). Since Sani is there and Mars association with Guru would have delayed or given problems with it.

    3. 10th lord is in 12th house with sun and Sukra. He is working in government due to sun's association.

    ReplyDelete
  2. Respected Sir

    1. Education :- He not completed the Higher eduction. Jupiter stay with Mars in 11th House it is 8th from 4th House.
    2. Marriage:- He got marriage but final it went to Divorcee or Widow.Jupiter is in 11th house, but Saturn is in Seveth House.
    3.Job :- He is working in Government job, but lower position Not satisfied in his job.Mercury join with Sun but it is in 12th house.
    Regards
    Rm.srithar

    ReplyDelete
  3. Respected sir,
    1. Education : the native is highly educated. He must be an engineer. 4th lord is exalted in 11th house to form gurumangala yogam. Owner of fourth house moon is also exalted in 9th house. Exalted Jupiter has a vision on the 5th lord sani and 5th lord has a vision on the 4th house. Due to above auspicious reasons. The native is surely educated beyond postgraduation.
    2. Marriage : the native is happily married at the age of 29 at guru dasa sani budhdhi. Seventh lord Jupiter is exalted in 11th house and views the sani to give good result.
    3. Career : He is an industrialist . He is an NRI . 9th lord and 10th lord together with 12th lord in 12th house, this indicates his livelihood abroad. Eleventh house has exalted Jupiter with mars to give abundant wealth.

    ReplyDelete
  4. 1. நான்கு, ஏழுக்குரிய குரு 11ம் வீட்டில் உச்சத்தில். ஜாதகர் கல்லூரிப்படிப்பை முடித்திருப்பார்.

    2. ஏழுக்குரிய குரு உச்சத்தில் இருப்பதாலும் 11ல் அமர்ந்து ஏழாம் வீட்டைப்பார்ப்பதாலும் ஜாதகருக்கு திருமண பாக்கியம் உண்டு. ஆனால் ஆறுக்குரிய சனி ஏழில் இருப்பதால் சற்று தாமத திருமணமாக இருக்கும். 30க்கு மேல் குருதிசையில் சுக்கிரபுத்தியில் திருமணம் நடந்திருக்கும்.

    3. 10 க்கு உரிய புதன் 12ல் சூரியனுடன் கூடவே 9 க்கு உரிய சுக்கிரன். சூரியன் தன் வீட்டில் ஆட்சி. ஜாதகருக்கு நிச்சயமாக அரசு உத்தியோகம். பெரும் பதவி கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

    ReplyDelete
  5. ayya

    1. jathagar athigam padithirukka vaaippillai. 10-m vaguppaithaandiyiruppathe santhegamthaan. Kaaranam, buthikaragan matrum laknathibathi budhan laknathirku 12-il matrum 4-m veettirkku entha suba grahapaarvaiyum illai. 4-m veettukkaaran guru uchamaaga vibareetha raajayogathil irundhaalum, 4-m veettirkku 8-il ullar. Athudan, 6m athipathy saniyin paarvai 4-m veettirkku ulladhu.

    2. Ivarukku, thirumanam guru thisai-guru buthiyil nadanthirukkum. Thirumana vaazhkkai santhoshamaaga irukkum. Sani 7il irunthu 3-m paarvaiyaaga chandranai paarthaalum kuzhappam illai. Kaaranam, Chandran Ucham Petrullaar. Adhumattumindri, 7-m athibathiyaana ucha guruvin 9-m paarvai 7-m veedu matrum poorva punniyaathiyaana sanibagavaan mel.

    3. ivarukku, thozhil nalla muraiyil (GURU THISAI VARAI) amaindhirukka kandippaaga vaaippillai. Kaaranam, 10-m athipathy budhanum thozhil kaaragaraana saniyum 6-8 positionil. 10-m Athipathy budhanum - guruvum 2-12 positionil. Matrum 10-m veettirkku endha suba graha paarvaiyum illai.

    Anbudan,

    Mu.Prakaash

    ReplyDelete
  6. 1) நான்காம் அதிபதி கடகத்தில் உச்சத்துடன் நீசபங்க ராஜயோகமாக உள்ளார். எனவே இவர் கல்வியில் பெரிய ஸ்காலராக ஆகியிருக்கக் கூடும்.

    2) ஏழாம் வீட்டில் சனீஸ்வரர் அமர்ந்து ஜாதகருக்கு திருமன யோகத்தினை தல்லிப்போட்டிருப்பார். எனினும் ஏழாம் உச்ச அதிபதி தனது ஒன்பதாம் பார்வையாக அவ்வீட்டினைப் பார்பதால் கால தாமதமாக குருதிசையினில் திருமனமாகியிருக்கும்.

    3) ஜாதகத்தில் சந்திரன் உச்சம், புதஆதித்ய யோகமும், நிபுனத்துவ யோகமும் உள்ளது. ஆனால் பத்தாம் அதிபதி சூரியனுடன் கூடி 12‍‍ ல் மறைந்துள்ளார் மற்றும் லக்னதிற்கு இருபுரமும் தீய கிரகங்கள் என்பதால் ஏதும் யூகிக்க இயலவில்லை.

    நான் அமேச்சூர் என்பதால் எனது பதில் தவராகவும் இருக்கலாம். பங்குபெற‌ வேண்டுமெண்று பதிலலித்தேன்.

    ReplyDelete
  7. ஜாதகருக்கு திருமணம் நடந்திருக்கும் (தாமதமாக). களத்திர பாவத்தின் மேலே விழும் வியாழ நோக்கினால் அது நடந்திருக்கும். ஆயினும் மணமுறிவில் முடிந்திருக்கும். இரண்டில் மாந்தி, கேது. எட்டாம் வீட்டுக்காரனான செவ்வாயின் பார்வை இரண்டாம் வீட்டின் மேல். இவையே மன முறிவுக்கும் மண முறிவுக்கும் வழி வகுத்திருக்கும்.

    ReplyDelete
  8. Respected Sir,

    1.) Lagnathipathy Budhan 12-il udan 2&9-m adhipathy Sukran and 12-m adhipathy sooriyan Aatchi.

    2.) 4-m adhipathy Guru Uccham and avarudan Neecham petra Chevvai. Chevvai ingey 1-level neecha Bangham adaindhu ullar.

    7-il amarndha Sani 10-m paarvayaga 4-i parkiraar. Kanni lagnathirku 4-m adhipathy guru uccham petradhinalum, 5-m adhipathyin 10-m paarvai 4-ku ulladhalum jadhagar nalla kalvi katravar. Degree Mudhithavar.

    7-il amarndha saniyal thamadha thirumanama..? illai.. Raghu dhasa 8 vayadhil arambam. 26 vayadhil Guru dhasa.. adhanal guru than dhasavil Guru dhasa Guru bukthi alladhu Guru dhasa Sani bukthi-il thirumanam nadandhu irukkum.

    ingey 7-m adhipathy uccham petru 11-il amarndhu 5-m adhipathy-i than 9-m paarvayil parkiraar. Manaivi vandhavudan ivarukku valkayil adhirstham.

    10-m adhipathy budhan 12-il, avarey lagnathipathy.

    Sooriyan 12-m idathil aatchi and chevvai neecham. (Neecha bangham adaindadhu veru.) adhanal Arasanga velai illai.

    Business seivadharku Budhan nandraga irukka vendum avar 10-m adhipathyyaga vandhalum 12-il amarndhu ullar. adhanal Business illai.

    Private company-il velai. Adimai velai-ku 6-m idam. 6-m adhipathy 7-il avar veetirku dhanasthanathil & 11-il amarndh uccham petra Guruvin paarvai adhanal Thaniyar niruvanathil Velai.

    Dharma karmadhipathy yogam 12-il ulladhu (Sukran and budhan ondraga 12-il) 12-m adhipathy 12-il amarvu u and lagnadhipathy 12-il amarvu adhanal Jadhagar than pirandha idathi vittu veli-idathirku sendru vazha vaaipu.

    1.) Jadhagar degree mudhithavar.
    2.) 26 vayadhirku mel Guru dhasa guru bukthi alladhu Sani bukthiyil thirumanam.
    3.) Thaniyar niruvanathil Velai.

    Velinathil velai seivadharku alladhu settle avadharkumey 100% chances ulladhu.

    Thank You.
    Kadaisi Bench Maanavan.

    ReplyDelete
  9. மதிப்பிற்குற்ய ஐயா,
    புதிர் தொடர் - பகுதி அறுபத்தியிரண்டுக்கான பதில்

    1.புடிப்பு - படிப்பைப் பாதியில் விட்டவர்- 16 வயதில் ராகு திசை மற்றும் லக்கனாதிபதி
    12 ல்,சனியின் 10 ஆம் பார்வை 4 ஆம் வீட்டின் மீது.

    2.ஜாதகருக்கு திருமணம் : 34 ஆம் வயதில் குரு திசையில்

    5 ஆம் இடத்து அதிபதியான குரு மற்றும் உச்சமான குரு திருமணம் நடைபெற்று இருக்கும்.

    3.அரசாங்க உத்தியோகம; 10 ஆம் இடத்து அதிபதியான புதன் 12 ஆம் இடத்து அதிபதியான ராஜகிரகமான
    சூரியனுடன்,மற்றும் தொழில்காரன் சனியின் 3 ஆம் பார்வை 10 ஆம் வீட்டின் மீது.

    இப்படிக்கு
    மு.சாந்தி

    ReplyDelete
  10. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ...புதிர் எண்62
    கன்னியா லக்னம் ..
    லக்னாதிபதி லக்னத்திற்கு .12 ல்உடன் சூரியன் சுக்கிரன் ..சூரியன் ஆட்சி மூல த்ரிகோணம் ..ஒரு சின்ன பிரச்சினை லக்னாதிபதி பாபகர்த்தாரி யோகம் ...[இந்த இடத்தில சூரியன் பாவியா சுபர ???
    2ல்கேது & மாந்தி . பாபகர்த்தாரி யோகம்...??]
    4மிடம் தனுசு 4மிட அதிபதி குருஉச்சம் ஆகவே நல்ல படிப்பு இருக்கும் ..வசதி வாய்ப்புகள் உண்டு ..
    7 மிடம் மீனம் 7ல் சனி... உச்சம் பெற்ற குரு 9ம் பார்வையாக 7ம்இடத்தை பார்ப்பதால் திருமணம் உண்டு ..ஆனால் குடும்பம் அமையாது காரணம் 2ல் மாந்தியுடன் கேது ..விவாகரத்து ஆகி இருக்கும். அத்துடன் வரும் பணம் எல்லாம் விரயம் ஆகிவிடும் ஓட்டை அண்டா??
    1௦ மிடம் மிதுனம் அதிபதி சூரியனுடன் ஆகவே அரசாங்க வேலை கூட்டுறவு அல்லது பொது ஜன தொடர்பு சம்பந்த பட்ட வேலை ..11ல் உச்சம் பெற்ற குருவுடன் நீசம் பெற்ற செவ்வாய் சேர்ந்து இருப்பதால் நீச பங்க ராஜ யோகம் .சந்திரன் உச்சம் பெற்று இருப்பதால் கடல் கடந்து செல்லும் வாய்ப்பு உண்டு..
    ராஜ கிரகங்கள் 2நன்றாக இருக்கிறது மேலும் குரு உச்சம் குரு மங்கள யோகம் ..ஆகவே புகழ் பெற்றவராக் இருப்பார்.
    ஒரே ஒரு குறை குடும்பம் இல்லை.
    பரீட்சை எழுதி விட்டேன். வாத்தியார் அய்யா .எனக்கு .௦---1௦௦..

    ReplyDelete
  11. ரோஹிணி நட்சத்திரம். கன்னி லக்னம். லக்னாதிபதி புதன் 12-ல் அஸ்தமனம். ராசி அதிபதி சுக்ரன் 12-ல் பகை வீட்டில். சூரியன் ஆட்சி. குரு சந்திரன் உச்சம். செவ்வாய் நீச பங்கம்.
    1) 4-ம் வீடு அதிபதியும் கல்வி காரகனுமான குரு 11-ல் உச்சமாக இருக்கிறார். அவர் 4-ம் வீட்டிற்கு 8-ம் வீட்டில் இருந்தாலும் 5-ம் அதிபதியான சனியின் வக்ர பார்வை 4-ம் வீட்டின் மீது படிகிறது. ஜாதகர் நன்கு படித்து இருப்பார்.
    2) 7-ம் வீட்டு அதிபதியும் குருவே !. அவர் 11-ல் உச்சமாக இருப்பதோடு மட்டுமில்லாமல் 7-ம் வீட்டிற்கு ஐந்தாம் வீட்டில் இருக்கிறார் !. மேலும் 7-ம் வீட்டை தனது 9-ம் பார்வையால் பார்க்கிறார்.அங்கே வக்ர சனி இருந்தாலும் குருவின் பலம் ஓங்கி இருக்கிறது !. அதனால் கண்டிப்பாக குரு தசையில் திருமணம் அரங்கேறி இருக்கும்!. சனி புக்தியில் நடந்திருக்கும் !.
    3) 10-ம் வீட்டு அதிபதியும் லக்னாதிபதியுமான புதன் 12-ல் அஸ்தமனம் ஆனாலும் 10-ம் வீடு பலமாக இருக்கிறது (38 பரல்கள்) ! தர்ம கர்மாதிபதி யோகம் இருக்கிறது !. புதனும் சுக்கிரனும் வலுவாக இல்லாததால் தனியார் வேலை அமைந்திருக்கும் !. அதில் நன்கு படிபடியாக மேலே வந்திருப்பார் !.

    சரியா அய்யா ?. அலசல்களுக்கு காத்திருக்கிறேன் !

    ReplyDelete
  12. அடிப்படை தகவல்கள்:-

    கன்னி லக்னம், ரிஷப ராசி, ரோஹிணி நட்சத்திரம்.

    லக்னாதிபதி மற்றும் பத்துக்குரியவன் 12ல் மறைவு. ஆயினும் நவாம்சத்தில் உச்சம். லக்னம் பாபகர்த்தாரி யோகத்தில், சுப கிரகங்களின் பார்வை இல்லை. ராசியின் மீது சனியின் பார்வை.

    அலசல்:-
    4ம் பாவம்:- படிப்பு:- லக்னாதிபதி மற்றும் கல்வி காரகன் புதன், 12ல் மறைந்தாலும் நவாம்சத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். 4ம் அதிபதி குரு. குரு கடகத்தில் உச்சம். இருந்தாலும் 4ம் வீட்டின் மேல் சனியின் பார்வை இருந்தாலும் சனியை உச்ச குரு பார்ப்பதால் தோஷம் நீங்குகிறது. சி.ஏ. முதலிய படிப்புகள் படித்திருக்கலாம்.

    7ம் பாவம்:- திருமணம்:-. ஏழாம் அதிபதியும், களத்திரகாரகனான சுக்ரனும் லக்னத்திற்கு 12ல் மறைவு. 7ல் சனி. ஆயினும் 7ம் அதிபதியான உச்ச குருவின் பார்வையால் திருமணம் உண்டு. 26 முதல் 30 வயதிற்குள் குருதிசை சுய புக்தியில் திருமணம் நடைபெற்றிருக்கும்.

    10ம் பாவம்:- தொழில்:- 10ம் அதிபதி புதன் 12ல் மறைவு. 10ம் இடம் எந்த சுபகிரகத்தின் பார்வையும் பெறவில்லை. தொழில் காரகன் சனி குருவின் பார்வை பெற்றுள்ளார். 10ம் அதிபதி புத்ன் சந்திரனின் சாரத்திலும், தொழில் காரகன் சுயசாரத்திலும் இருக்கின்றனர். நிலையான தொழில் உண்டு. சொந்தத் தொழில் இல்லை. சனி ராஜ கிரகமான குருவுடன் சிம்மத்தில் இருப்பதால் அரசாங்கத்தில் உயர்ந்தபதவியில் அமர்ந்திருப்பார்.

    ஜாதகத்திற்கு வலு சேர்ப்பவை:-
    1. உச்ச குரு
    2. நவாம்சத்தில் உச்சம் பெற்ற லக்னாதிபதி மற்றும் கல்விகாரகன் - புதன்.

    நன்றி ஐயா.

    இளையபல்லவன் (எ)
    வெங்கடேஷ் கிருஷ்ணன்

    ReplyDelete
  13. நல்ல அம்சம் நிறைந்த ஜாதகம்.
    ஜாதகத்தில் உள்ள யோகங்கள்
    நீச பங்க யோகம். - 11
    புத ஆதித்ய யோகம். - 12
    நிபுந யோகம். -12
    கர்மாதிபதி யோகம் (இரண்டாம் நிலை) - 12
    குரு – உச்சம் 11
    சந்திரன் – உச்சம் 9
    சூரியன் – ஆட்சி. 12
    கல்வி உண்டு. உயர்கல்வி வாய்ப்பு உண்டு.
    திருமணம் நடைபெறும். ( குரு திசையில் )
    பத்தாம் இடம் சுபகர்தாரி யோகத்தில் உள்ளது.
    நல்ல தொழில், வருமானம் உண்டு.

    ReplyDelete
  14. மதிப்பிற்குரிய ஐயா !!!

    புதிர் எண்: 62 இற்கான பதில் !

    புதிரில் கொடுக்கப்பட்ட அன்பர் கன்னி லக்கினத்தில் பிறந்தவர். லக்கினாதிபதி புதன் 12 இல் சூரியனால் அஸ்தமனம். கன்னி லக்கினத்தின் யோகக்காரகர் சுக்கரனும் 12 இல் பகை வீட்டில். லக்கினாதிபதி புதனும், யோககாரகர் சுக்கரனும் அம்சத்தில் தத்தம் தனது சொந்த வீட்டில் உச்ச மற்றும் ஆட்சி பலத்துடன் இருந்தாலும், அவர்கள் ஜாதகருக்கு உரிய பலன்களை விரைய வீட்டில் இருப்பதால் செய்ய முடியாது. கல்வி ஸ்தானாதிபதி குரு, லாபஸ்தானத்தில் உச்சம் அடைந்தாலும், அவர் மூன்று, எட்டாம் அதிபதி செவ்வாயுடன் இருப்பதும், நான்காம் வீட்டிற்கு 6/8 அமைப்பில் உள்ளது. மேலும் ஆறாம் அதிபதி (வில்லன் ) வக்கிர சனியின் பிடியில் நான்காம் வீடு இருப்பதாலும், மாந்தி மற்றும் கேது இரண்டாம் வீட்டில் உள்ளதாலும் புத ஆதித்ய யோகபலனும் பனிரெண்டாம் வீட்டில் இருப்பதால் ஜாதகர் ஆரம்ப கல்வியுடன் (பள்ளி கல்வி வரை மட்டுமே)படிப்பு நின்று இருக்கும். ஆனால் ஜாதகருக்கு கண்டிப்பாக அடிப்படை கல்வி உண்டு !!!! ஜாதகரின் களத்திரஸ்தானத்தில் ஆறாம் அதிபதி சனி வக்கிர நிலைமையில் இருந்தாலும், ஏழாம் அதிபன் உச்ச குருவின் சிறப்பு ஒன்பதாம் பார்வை இருப்பதாலும், சுக்கரன் பன்னிரெண்டில் மறைந்தாலும் அவர் அம்சத்தில் ஆட்சி வீட்டில் இருப்பதாலும், ராகு திசை முடிந்த பின்னர், குரு திசை குரு புத்தியில் 28 ஆம் வயதில் திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு !!! தொழில் ஸ்தானத்தில் 38 பரல்கள், பாக்கிய ஸ்தானம் 35 பரல்கள். தொழில் காரகன் சனி வக்கிர நிலையில். தொழில் ஸ்தானாதிபதி புதன் 12 ஆம் வீட்டில் சிம்மராசியில், சூரியனுடன், பாக்கிய ஸ்தானாதிபதி சுக்கரனுடன். இவர் தன் தந்தையின் பரம்பரை தொழில் செய்திருக்கலாம். ராகு திசையில் வேலைக்கு சென்று இருப்பார். குரு திசையில் அவர் தன் பரம்பரை/ சுய தொழில் செய்திருப்பார் !!!!


    சிவச்சந்திரன்.பா

    ReplyDelete
  15. வணக்கம் அய்யா! புதிர் எண் 62 க்கான என்னுடைய அலசல்:

    கன்னி லக்கினம், ரிசப ராசி ஜாதகம்.
    1)ஜாதகர் படித்தவர்.
    2)திருமணம் சற்று தாமதமாக நடந்திருக்கும்.
    3)சுய தொழில் செய்பவர்.
    அதற்கான காரணங்கள் :
    கல்வி:
    1) லக்கினாதிபதி புதன் 12ல் மறைவு.லக்கினமும் பாபகர்த்தாரியின் பிடியிலுள்ளது. 2/9க்கான அதிபதி சுக்கிரனும் 12ல் மறைவு. 2ல் கேது வேறு.அதனால் ஜாதகர் பிறவியில் ஏழைக் குடும்பத்தில் பிறந்துள்ளார்.
    2) 4மிடத்து அதிபதி குரு 11ல் உச்சமடைந்துள்ளார்.ஆனால் அஷ்டமாதிபதி செவ்வாயுடன் கூட்டு வைத்துள்ளார். கல்வி காரகன் புதன் 12ல் மறைந்தாலும் நவாம்சத்தில் உச்சமடைந்துள்ளார்.5மிடத்திற்கான சனி 7ல் அமர்ந்து 4மிடத்தை தன் 10ம் தனிப் பார்வையில் வைத்துள்ளார்.5மிடத்திற்கும் உச்ச குருவின் பார்வையுள்ளது.
    என்வே ஜாதகர் சிரமப்பட்டு ஒரு பட்ட (அ)பட்டய‌ப் படிப்பை முடித்தவர்.
    திருமணம்:
    1)ஏழாமிடத்தில் 5/6ம் அதிபதி சனி அமர்ந்துள்ளார்.
    2)களத்திராதிபதி குரு 11ல் உச்சம். அவர் தன் 9ம் பார்வையால் 7மிடத்தையும் அதில் அமர்ந்துள்ள சனியையும் பார்க்கிறார்.
    3)களத்திரகாரகனும் குடும்ப ஸ்தானாதிபதியுமான‌ சுக்கிரன் 12ல் மறைந்து 12மிடஅதிபதி சூரியனுடன் சேர்ந்து அஸ்தங்கமாகி விட்டார்.
    மேற்கண்ட காரணங்கள் மற்றும் ஜாதகருக்கு கோச்சாரத்தில் வந்த‌ ராகு தசை காரணமாக 27 வயதிற்கு மேல் குரு தசை/சனி புத்தியில் சற்றே தாமதமாக‌ திருமணம் நடந்திருக்கும்.
    வேலை:
    1)10மிடம் சுபகர்த்தாரியிலுள்ளது. 10மிட அதிபதி புதன் 12ல் மறைந்து அதன் அதிபதி சூரியன் மற்றும் 2/9ம் அதிபதி சுக்கிரனுடன் உள்ளார்.
    2)கர்மகாரகன் சனி 10க்கு 10மிடமான 7ல் அமர்ந்துள்ளார்.
    3)லாபாதிபதி சந்திரன் 9மிடத்தில் உச்சமடைந்துள்ளார்.
    மேற்கண்ட காரணங்களால் ஜாதகர் வெளி நாட்டிலோ (அ) வெளியூரிலோ ஒரு சுய தொழில் தொடங்கி அதில் வெற்றியும் பெற்றிருப்பார்.
    (பின் குறிப்பு : கொடுக்கப்பட்டுள்ள ஜாதக நிலவரங்களைக் கொண்டு "ஜகன்னாத ஹோரா"வில் பார்த்த போது, செவ்வாய் மற்றும் நவாம்ச நிலைகள் மாறுபட்டுள்ளன‌. எனவே என் கணிப்பு சரியாஎன்று வாத்தியார்தான் சொல்ல வேண்டும்.)

    ReplyDelete
  16. Ayya,

    Please find my answers:

    1. He must be dropped out middle of studies. Reasons are: Saturn is looking by 10th look and 4th house owner(Guru) sitting in 8th house from 4th house, even though he(Guru) is in Uccham.

    2. He must be married in the age of 30 to 32. Reasons are: 7th house owner is Uccham and Neechabanga Raja Yogam along with Chevvai. But marriage life might not stayed for long life, because Sukran is in 12th house.

    3. He must be doing good brokerage/broker/cinema related business. The reasons are: 1. Bhudhan is in Uccham at Navamsha. 2. 10th house has Suba Karthari yogam(Hemmed by Uccha Chandran and Uccha Guru)

    Your Student,
    Trichy Ravi

    ReplyDelete
  17. Dear Guruji,

    1. 4th Lord in 11 house.
    2. 5th lord in 7th house.
    3. 5th and 7th house has guru parvai.
    4. Kalasarpa dosham.
    5. Lagna in papakarti yogam.
    6. Suriyan in twelfth no government job.
    7. 10th lord in movable sign.
    8. Sukran in own sign in navamsa.
    9. Mars neecham but neecha bangam.

    Conclusion.
    1. Person is well educated.
    2. his marriage held at age 27 -30 when Guru dasa guru sub period or saturn sub period.
    3. wife will bought with her more wealth.
    4. he will work in private concerns in foreign, becasue 10th lord in movable sign.

    ReplyDelete
  18. லக்னாதிபதி விரையத்தில் உள்ளதால் வாழ்க்கை அவருக்கு பயன்படாது.
    2ம் பாவம் கேது,மாந்தி மற்றும் அதிபதி சுக்கிரன் 12ல் விரையத்தில்

    4ம் அதிபதி குரு 11ல் லாபத்தில் உச்சமாக இருப்பதால் படிப்பு வந்திருக்கும் உடன் 3,8ம் அதிபதி செவ்வாய் நீச்ச பங்கமாகி வலிவுடன் கெடுத்தார்.
    புதன் 12ல் அதிபதி சூரியன் உடன் கெட்டார். சந்திரன் திசைக்கு பின் வந்த் செவ்வாய், ராகு திசைகள் பள்ளிப்படிப்பிற்கு தடை செய்தன

    திருமணத்திற்கான 7ம் வீட்டில் சனி,அதிபதி குரு 11 உச்சம் பெற்றிருந்தாலும் உடன் இருக்கும் 8ம் அதிபதியால் பிரச்சனை போன்றே தோன்றுகிறது. சுக்கிரன் யோகாதிபதியும் ஆகி 12ல் விரையத்தில் மறைந்ததால், காலம் கடந்து மணமானாலும் பிரிவு போன்றே உள்ளது. சனி, சந்திரன் பார்வை பிரிவை காட்டுகிற்து. குடும்ப (2ம்) ஸ்தானம் கெட்டுள்ளது

    தொழில் ஸ்தானம் இரு சுபகிரகங்களால் சுபக்கத்தாரி யோகதினால் நன்மையடைகிறது.10 அதிபதி 12ல் இருப்பதால் ஒருவர் கீழ் பணி செய்யும் வேலையாக அமைந்து பணம் கிடைக்கும். காரகன் சனி 7ல் குரு பார்வையில் உள்ளது நல்ல நிலைமையே.

    குரு மங்கள யோகம் குரு,சந்திரன் உச்சம் இவருக்கு உதவியதா இல்லையா என்பதும்

    இன்னும் உறுதியாக முடிவெடுக்க முடியாத என் அலசல் சரியா தவறா என்று தங்கள் பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கும் உங்கள் மாணவி

    ReplyDelete
  19. Dear Sir,

    1. He is studied good due to the power of 4th lord Jupiter exalted in 11th place.

    2.7th lord jupiter is exalted, but saturn placement in 7th delayed the marriage. placement of Kethu in 2nd and Rahu in 8th does not support married life. May be divorced.

    3. 10th lord mercury in 12th and papakarthari yoga. Hence he dont get stable job. His job is not permanent.

    Thanking you,

    ReplyDelete
  20. லக்னமே கேது மாந்தி சூரியனுக்கு இடையில் சிக்கிக் கொண்டுவிட்டது. பாபகர்த்தாரி.லக்கினத்திற்கு 21 பரல் மட்டுமே.லக்னாதிபதி புதன் 12ல் மறைந்து
    சூரியனால் அஸ்தங்கதம்.புதனுக்கு 4 பரல் மட்டுமே. லக்னத்திற்கு சனியின் பார்வை.எனவே அஸ்திவாரமே ஆட்டம் கண்டுள்ளது.

    நான்காம் இடத்திற்கு சனியின் பார்வை.நான்காம் அதிபன் குரு உச்சம் அடைந்தாலும் தன் வீட்டிற்கு 8ல் மறைந்து, எட்டாம் அதிபன் செவ்வாயுடன்
    கூட்டணி.எனவே ஜாதகர் படிப்பு விஷயத்தில் முழு வெற்றியடையவில்லை.26 வயது வரை 8ம் அதிபன் செவ்வாயின் தசாவும், ராகுவின் தசாவும் இளமையில் வறுமை மற்றும் பலவகை இன்னல்களைக் கொடுத்து படிப்பை கெடுத்தது.தடங்கல்களைக் கொடுத்தது.ஆனாலும் நவாம்சத்தில் உச்சம் பெற்ற கல்விகாரகன் புதன் பட்டப் படிப்பைக் கொடுத்தார்.

    ஏழாம் அதிபனும் குருவே. ஏழாம் இடத்தில் ஆறாம் அதிபதி சனைச்சரன்.எனவே தான் விரும்பிய பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முடியாமல் இருக்கும்.ஏழாம் அதிபன் உச்சம் அடைந்து தன் வீட்டையே சிறப்பாக ஒன்பதாம் பார்வையாகப் பார்த்ததால் திருமணம் உண்டு.மேலும் சந்திரன் உச்சம் பெற்று சுய வர்கத்தில் 7 பரல் பெற்றதால் குருதசா புதபுக்தியில் 31 வயதில் திருமணம்.நவாம்சத்தில் குரு சிம்மத்தில் நட்பு வீட்டில்.

    பத்தாம் அதிபதியும் புதனே.அவர் 12ல் மறைந்து அஸ்தங்க‌தம் ஆனதால் வேலை சரியாக அமையவில்லை. ஆனால் மூன்றாம அதிபன் செவ்வாய் 11 லாபத்தில் அம‌ர்ந்து நீச பங்கம் ஆனதும் உச்ச குருவுடன் கூட்டணி அமைத்ததும் வணிகத்தில் நல்ல வெற்றியைக் கொடுத்தது. மேலும் லாப ஸ்தானதிபதி சந்திரன் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து உச்சம் பெற்றதால்
    30 வயதுக்கு மேல் வணிகத்தில் வெற்றிபெற்றார்.9 க்கு 35 பரல், 10க்கு 39 பரல்,11க்கு 30 பரல். எனவே லக்கினத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் மற்ற காரணிகளால் சரிசெய்யப்பட்டுள்ளது

    முடிவு: 1.பட்டப் படிப்பு உண்டு.2.திருமணம் உண்டு (31 வயதில்). 3. 30 வயதுக்கு மேல் வணிகத்தில் வெற்றியடைந்தார்.

    ReplyDelete
  21. 1. Lagnapathi Budhan is in 12th house along with 12th lord Suriyan and 2nd and 9th lord sukran.
    Lagnam in papa kathri yogam.
    4th and 7th lord Guru is uccham. 11th lord Chandran is uccham.

    2. Education:
    4th house lord - Jupiter is exalted (uccham) and is in 11th house along
    with Chevvai. Guru mangala yogam is there.
    Saturn aspects 4th house.
    Vidyakaran Budhan is lagnathipathi and is in 12th house but along with Sun and Sukran.
    Sun+Budhan combination will form nipuna yoga.
    So the native would have studied well.

    3. Marriage:
    Saturn is in 2nd house and saturn is lord of 5th and 6th house.
    Saturn aspects Moon and hence punar poo dosham.
    Jupiter is lord of 7th and 4th houses. Jupiter is exalated and aspects 7th house.
    Guru is along with chevvai. So there will be delay in the marriage.
    Ketu is in 2nd house along with Maandi.
    Sukran is the 9th house lord and is in 12th house along with Sun and lagnathipathi budhan.

    So the native would have got married. Marriage would have had troubles and might
    have got seperated.


    4. Work:
    10th lord Budhan is in 12th house along with Sun and sukran. He might
    be working in the job related to government and communication/arts (budhan related).

    ReplyDelete
  22. வணக்கம் ஐயா!
    1.லக்னாதிபதி மற்றும் பாக்யாதிபதி புதன்,சுக்ரன் விரையத்தில் சென்று செல்ல காசு ஆகிவிட்டனர் அதொடு ஆட்சி பெற்ற சூரியன் வேற.
    2.4ம் அதிபதி குரு அந்த வீட்டுக்கு 8ல் உச்சம், 4ம் வீட்டின் மேல் சனியின் பார்வை உள்ளது ஆனாலும் சந்திரனுக்கு 4ல் சூரிய+புதன் சிறப்பக உள்ளது, அதனால் படிப்பை கன்டிபாக நல்ல படியாக முடித்து இருப்பார்.
    3.7ம் வீட்டில் சனி(6ம் வீட்டு அதிபதி) ஆனால் அந்த வீட்டு அதிபதி குரு உச்சம் அதொடு அவர் இருக்கும் வீட்டு அதிபதி சந்திரனும் உச்சம் அதனால் குரு திசையில் 26 வயதில் திருமணம் நடைபெறும். நல்ல மனைவி அமைந்து இருபால்.
    4.பத்தாம் வீட்டு அதிபதி 12ல் இருபதால் நிரந்திர வேலை அமைய வாய்ப்பு இல்லை, ஆனால் குரு திசையில் நல்ல வேலை, நல்ல வருமாணம் அமைந்து இருக்கும். அது சனி திசையிலும் தொடர்ந்து நல்ல படியாக இருகும்.

    ReplyDelete
  23. அன்பர் ஜாதகம்
    4 ஆம் இடம்.அதிபதி உச்சம்!8 ஆம்
    அதிபதியுடன்???
    7 ஆம் வீட்டில் சனி!!அவனே பாதகாதிபதி ???
    10 ஆம் அதிபதி 12இல்?
    1 ஆம் அதிபதி 12இல்?
    முதல் 42 வருடம் யோகதிசை இல்லை சுகபடாத ஜதகம் ......

    ReplyDelete
  24. Quiz No.62 வணக்கம்.
    08.09.1966 ஆம் தேதி காலை 7.30.36 மணிக்கு ரோகினி நட்சத்திரத்தில் பிறந்த ஜாதகர்க்கு கன்னி லக்கினம். யோககாரன் சுக்கிரன். யோகமில்லாதவர்கள் ‍ சந்திரன், குரு, செவ்வாய்.

    இந்த ஜாதகத்தில் உள்ள‌ பலம்
    குரு உச்சம் தன்னுடைய 9ம் பார்வையால் வக்கிரமான‌ சனியின் பலத்தை குறைத்து ஜாதகருக்கு நன்மைசெய்துவிடுகிறார்.
    சந்திரன் ரிஷப ராசியில் பாக்கியஸ்தானத்தில் உச்சம். சந்திரன் அஷ்டவர்கத்தில் 7 பரல்கள்.
    புதன் நவாம்சத்தில் உச்சம்.
    லக்கினம் பாபகர்த்தாரி யோகத்தில் இருந்தாலும், லக்கினாதிபதி புதன் நவாம்சத்தில் உச்சம் அடைந்துள்ளார்.

    1. கல்வி - மருத்துவ கல்வியில் உயர்ந்த கல்வியை படித்து இருப்பார். கல்விக்கு எந்த தடங்களும் இருந்திருக்காது.

    4ம் வீடு தனுர் ராசி குருவின் வீடு, கல்விக்கான‌ வீடு. 4ம் வீட்டு அதிபதி குரு 11ம் வீட்டில் உச்சம். 4ம் வீட்டில் 30 பரல்கள். 4ம் வீடு பலமாக உள்ளது.

    5ம் வீடு (நுண்ணறிவு). 5ம் வீட்டு அதிபதி சனியை குரு தன்னுடைய 9ம் பார்வையால் வைத்துள்ளார். 5ம் வீட்டையும் தன்னுடைய 7ம் பார்வையால் வைத்துள்ளார்.

    புதன் 12ல் சூரியனுடன் சேர்ந்து புத ஆதித்திய யோகத்திலிருந்தாலும், நவாம்சத்தில் புதன் உச்சம் அடைந்துள்ளார்.

    சூரியன் தன்னுடைய சொந்த வீட்டில் இருந்தாலும் (3 பரல்கள்) பலவீனமாக 12ம் வீட்டில் இருக்கிறார்.

    2. திருமணம் எற்பட்டு பிறகு பிரிவில் முடிந்தது.

    11ம் வீட்டில் அமர்ந்துள்ள உச்சமான குருவின் 9ம் பார்வை 7ம் வீட்டின் மீது பார்ப்பதால் ஜாதகருக்கு 26 வயதில் குரு தசையில் குரு புக்தியில் திருமணம் எற்பட்டு பிறகு வந்த சனி புக்தியில் திருமணம் பிரிவில் முடிந்தது. அதற்கு காரணம் சனியின் 3ம் பார்வை 9ம் வீட்டு பாக்கியஸ்தானத்தின் மீதும்,7ம் பார்வை லக்கினத்தின் மீதும், செவ்வாயின் 4ம் பார்வை 2ம் வீட்டின்மீது, ராகுவின் 7ம் பார்வை 2ம் வீட்டின் மீது. 2ம் வீட்டில் கேது, மாந்தி கூட்டு.2ம் வீட்டு அதிபதி 12ம் வீட்டில் இருப்பதால், எல்லாம் சேர்ந்து ஜாதகருக்கு குடும்பம் அமையாமல் செய்துவிட்டது.

    2ம் வீடு 7ம் வீட்டிலிருந்து 8ம் வீடு மனைவியின் ஆயுளைகுறிக்கிறது., ஆகையால், கேதும், மாந்தியும் சேர்ந்து இங்கு இருப்பது சரியில்லை. பிரிவினைக்கு இதுவும் காரணம்.

    9ம் வீட்டு அதிபதி பாக்கியாதிபதி சுக்கிரன் 3பரல்களுடன் சூரியனுடன் சேர்ந்து பலவீனமாக உள்ளார்.

    3. தொழில் - வெளிநாட்டில் மருத்துவ டாக்டராக பணிசெய்து கொண்டு இருப்பார்.

    சந்திரன், சூரியன், லக்கினாதிபதி ஆகிய மூவரும் நன்றாக இருக்க வேண்டும்.இந்த ஜாதகத்தில் சந்திரன் உச்சம் (7 பரல்)பாக்கியஸ்தானம் 9ம் வீட்டில் அமர்ந்துள்ளது விசேஷம்.10ம் வீட்டு அதிபதி புதன் நவாம்சத்தில் உச்சமாக இருப்பது விசேஷம்.
    10ம் அதிபதி 12ல் இருந்தால் வேலையில் அல்லது தொழிலில் பல பிரச்சினைகள் சந்திக்க நேரிடும். சிலர் வெளிநாட்டிற்க்கு செல்ல வாய்ப்புள்ளது. 10ம் வீட்டில் 39 பரல்கள் உள்ளன.ஆகையினால் 10ம் வீடு பலமாக இருப்பதாக கருதலாம்.

    யோகம்:
    நீசபங்க யோகம் கடக ராசியில் நீசமான செவ்வாய் உச்சமான குருவுடன் சேர்ந்து நீசபங்க யோகத்தை அடைந்துள்ளார். அதிஷ்டமானவர். 38 வயதில் குரு தசை செவ்வாய் புக்தியில் உயர்ந்த நிலையை அடைவார்.

    சந்திரசேகரன் சூரியநாராயணன்

    ReplyDelete
  25. 1.ஜாதகர் படிப்பை பாதியில் விட்டவர்....

    2.காலசற்பதோசத்தினால் திருமணம் தள்ளி போனது.32 வயதில் திருமணம் நடந்தது.. உச்சம் பெற்ற குரு பகவான் 9 ஆம் பார்வையாக 7 ஆம் வீட்டை பார்பதால் திருமணத்தை நடத்திவைத்தார்.

    3.தொழில் ஸ்தானாதிபதி உடன் ஆட்சி பெற்ற சூரியன் மற்றும் சுக்கிரன் சேர்கை கலை துறை இல் சிறந்த கவிங்கராக ஆகிற்று.

    ReplyDelete
  26. வணக்கம் குரு,

    1. ஜாதகர் தடைபட்டோ அல்லது கஷ்டபட்டோ பள்ளி படிப்பை முடித்திருப்பார். காரணங்கள் படிக்கும் வயதில் செவ்வாய் மற்றும் ராகு திசை போதா குறைக்கு 8மிட சம்பந்தம், 2ம் வீட்டு அதிபதி சுக்கிரன் லக்னத்திற்கு 12இல், 4ம் வீட்டு அதிபதி குரு அந்த வீட்டிற்கு எட்டில் அத்துடன் லனதிர்க்கு எட்டாம் அதிபதி செவ்வாயுடன் சேர்க்கை, 5ம் இடத்தின் அதிபதி சனி அந்த வீட்டிற்கு 3இல், வித்யா காரகன் புதன் லக்னத்திற்கு 12இல் அஷ்தங்க தோஷதுடன் அத்துடன் அவர் லக்னாதிபதியும் ஆவார்.

    2. முப்பது வயதிற்கு மேல் திருமணம் குரு திசை சனி புக்தி அல்லது புதன் புக்தியில் நடந்திருக்கும். காரணங்கள் 7இல் சனி, 7ம் இடத்தின் அதிபதி குரு அட்டமாதிபதி செவ்வாயுடன் சேர்க்கை, சுக்கிரன் லக்னத்திற்கு 12இல் மற்றும் சந்திரனுக்கு சனியின் பார்வை அதாவது புனர்பூ தோஷம்.

    3. நிலம் சம்பந்தமான புரோக்கர் தொழில் செல்வார்.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  27. jadhagar 08/09/1966 08.00 AM. rohini 4.
    (a) fourth lord Jupiter exalted in 11th. lagna lord mercury and is with Sun.(even in 12th house) jupiter and mercury given him good education.
    (b) 7th lord Jupiter exalted in 11th and is aspecting 7th house (9th parvai). so he is married. but as Saturn in 7th house caused late marriage i.e in Guru Dasa after 1992. (2nd lord in 12th house might have caused separation - not sure)
    (c) 10th lord is Mercury and being lagnathipathy also with Venus the 9th lord forming Darmakarmathipathy yoga given him employment. because 9th lord and 10th lord in 12th house he might have got job in foreign land during Raghu Dasa. S.Moorthy

    ReplyDelete
  28. உயர்திரு ஐயா,வணக்கம்.புதிர் 62க்கு எனது பதில்,ஜாதகர் படித்தவர், 4ம் வீட்டுக்கும்,7ம் வீட்டுக்கும் உடையவர் ஒருவரே,அவர் உச்சம் உடன் செவ்வாய் நீசம்,நீசபங்க ராஜயோகம்.திருமணமானவர் குரு திசை குரு புத்தியில் திருமணமாகியிருக்கும்.சுயதொழில் செய்பவர்.

    ReplyDelete
  29. Dear Ayya,

    Please find my prediction of quiz no 62.

    1) Education  dropped because mandhi and kethu sits in 2nd house,sevvai fouth look to the 2nd house ,2nd house sukkaran hide in the 12th house so educatioon cant be continued.

    2) In guru desai sukkaran buthi this person got married  due to 7th house guru got uccham and 9th look on the seventh house, sukkaran hide in 12th house but got aatchi  in navamsam, delay in marriage because Budhan hide in 12th house and ucham in navamsam,for this lagnam, guru is enemy  so marriage got delayed.

    3) 10th house got hidden in 12th house so no own business and sun got hide in 12th house  and navamsam sun got neecham so no government job,for this lagnam sani is natpu and also sits in kendram , sani seventh look to the lagnam ,adimai job only.budhan of  10th house of rasi is uccham in navamsam so good job.

    ReplyDelete
  30. ஐயா,
    கன்னி லக்கினம். லக்னாதிபதி புதன் 12ல். புதனுக்கு வீடு கொடுத்த சூரியன் ஆட்சி.
    4 ஆம் இடத்துக்குரிய குரு 11ல்.குரு உச்சம். செவ்வாயுடன் சேர்க்கை. குரு மங்கள யோகம்.
    ஜாதகர் படித்தவர்.
    லக்னத்துக்கு 7ல் சனி. அதனால் தாமத திருமணம். 7ஆம் இடத்தைத் தன் பார்வையில்
    வைத்திருக்கும் உச்ச குருவால் நிச்சயம் திருமணம் நடைபெற்றிருக்கும். 27 வயதுக்குப் பிறகு
    குரு தசையில் திருமணம் நடைபெற்றிருக்கும்.
    லக்னாதிபதி புதன் பத்தாம் இடத்துக்கும் உரியவனாகி ஆட்சி பெற்ற சூரியனுடன்
    இருப்பதால் அரசு உத்தியோகம்.

    அ.நடராஜன்

    ReplyDelete
  31. After a long time attended this quiz. The person born by 8th sep 1966. The 4th lord guru is in 11th house -utcham. hence he is a graduate. The marriage might have made in his guru dhasa 27th age as previous dhasa is raghu which is in 8th house. He may not be a govt servant or owner he will be an officer - might be a accountant. you have to confirm.

    ReplyDelete
  32. மதிப்பிற்குறிய வாத்தியார் அய்யா,

    ஜோதிட புதிர் போட்டி எண் 62க் காண எனது கணிப்பு:-

    1. ஜாதகர் படித்தவர்
    கல்வி ஸ்தான அதிபதி (4ம் வீடு) "குரு" 11ம் இடத்தில் "உச்சம்" பெற்று உள்ளார்.
    மேலும் சனிபகவானுடைய 10ம் பார்வையை பெறுகிறார். (இது முக்கியத்துவம் பெறாது, காரணம் குரு பகவான் இந்த வீட்டினை தனது 9ம் பார்வையாக பார்க்கிறார் - சனி குருவின் வீட்டில் அடக்கி வாசிப்பார்)
    12ம் வீட்டில் சூரியன் மற்றும் புதன் இனைந்து "புத ஆதித்ய" யோகம் ஆகிறது. மற்றும் புதன் சுக்கிரன் இனைந்து "நிபுனத்துவ யோகம" கொடுக்கிறது

    2. ஜாதகருக்கு 26 வயதிற்கு மேல் திருமணம் நடந்திருக்கும்.
    7ம் வீட்டின் அதிபதி குரு 11ம் வீட்டில் உச்சம். மேலும் 26 வயதிற்கு மேல் குரு தசை. 7ம் இடத்தில் 5,6க் கான அதிபதி சனி அமர்ந்து லக்கினத்தை தனது 7ம் பார்வையில் வைத்து உள்ளார்.
    களத்திர காரகன் சுக்கிரன் 12ம் இடத்தில் மறைந்து உள்ளார்.
    சனி தனது 3ம் பார்வையாக சந்திரனை பார்ப்பதனால் "புனர்பூ" தோஸம் பெறுகிறது. இது திருமணதில் சில தடங்கல்களை ஏற்படுத்தும்.

    3. ஜாதகர் அரசாங்க உத்தியோகத்தில் இருப்பார்.
    10ம் இடதின் அதிபதி 12ல் மறைந்துள்ளதால் சுய தொழில/வி்யாபாரம் இல்லை. மாறாக 6ம் இடதினை சூரியனும் புதனும் பார்ப்பதனால் அரசாங்க உத்தியோத்தில் இருப்பார். (கணக்கராக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்)
    தொழில் காரகன் சனி 6ம் இடத்திற்கு அதிபதியானது உத்தியோகத்தினை குறிக்கிறது.

    சுபம்.

    ReplyDelete
  33. கல்வி - 4-ம் அதிபதி குரு பகவான் லக்கினாதிற்கு 11-ல் உச்சம். வித்யாகாரகன் புதன் 12-ல் மறைந்தாலும் சூரியனுடன் கூடி புத ஆதிபத்திய யோகம் பெறுவதால் படிப்பில் graduation பெற்று இருப்பார்.

    திருமணம் : 7-ல் சனி பகவான், சுக்கிரன் 12-ல் மறைவு(அவனே குடும்ப ஸ்தானாதிபதியும் கூட). 2-ல் மாந்தி + கேது. இருந்தாலும் குரு பகவான் (7-ம் அதிபதி) லக்கினாதிற்கு 11-ல் உச்சம், தாமத திருமணம்.

    தொழில் : பத்தாம் அதிபதி + லக்கினத்திபதி 12-ல் மறைவு. 10-ம் இடம் சுப கர்தத்தி யோகத்தில். சுய தொழில் , govt job இல்லை. private job-ல் இருப்பார்.

    ReplyDelete
  34. 4ம் வீட்டு குரு உச்சம், இலக்கினத்திற்கு 11ல், ஆனால் 4ம் வீட்டிற்கு எட்டாம் வீட்டில். கல்விகாரகர் மற்றும் இலக்கினாதிபதி புதன், இலக்கினத்திற்கு 12ல் மறைந்தார். ஆனால் புதன் 4ம் வீட்டிற்கு 9ல் இருக்கிறார். 4ம் வீட்டுக்காரருக்கு இடம் கொடுத்த சந்திரனும் உச்சம். ஆனால் 4ம் வீட்டிற்கு 5 மற்றும் 6ம் (வில்லன்) வீட்டுக்கார சனியின் பார்வை உள்ளது. இருப்பினும் மற்ற அம்சங்களால் ஜாதகர் படித்தவர். பட்டப் படிப்பு முடித்திருப்பார்.

    7ம் வீட்டு குரு உச்ச‌ம். 7ம் வீட்டிற்கு உச்ச குருவின் விசேஷ பார்வையும் உள்ளது. இருப்பினும் 7ம் வீட்டில் ச‌னி இருப்ப‌து ஒரு குறையே. 2ம் வீட்டில் மாந்தி இருப்ப‌தும் ஒரு குறையே. எல்லாவ‌ற்றையும் விட‌ க‌ள‌த்திர‌கார‌க‌ரும் பாக்கியாதிப‌தியுமான‌ சுக்கிர‌ன் இல‌க்கின‌த்திற்கு 12லும், 7ம் வீட்டிற்கு 6லும் ம‌றைந்த‌து பெரிய‌ குறை. இருப்பினும் குரு, அதுவும் உச்ச‌ குரு, பார்வையால் திரும‌ண‌ம் ந‌ட‌ந்த‌து. திரும‌ண‌ம் 28 வ‌ய‌திற்கு மேல் குரு மகாத‌‌சையில் ந‌ட‌ந்திருக்கும்.

    10ம் வீட்டு புத‌ன் இல‌க்கின‌த்திற்கு 12ல். விசேஷ‌ம் இல்லை. 10ம் வீட்டிற்கு எந்த சுப கிரக பார்வையும் இல்லை. ஆனால், க‌ர்ம‌கார‌க‌ன் 7ம் வீட்டில் இருந்து இல‌க்கின‌த்தை த‌ன‌து பார்வையில் வைத்திருக்கிறார். 10ம் வீட்டுக்கார‌ புத‌ன் சூரிய‌ன‌து வீட்டில் சூரிய‌னோடு இருக்கிறார். உட‌ன் பாக்கியாதிப‌தி சுக்கிர‌ன். ஜாத‌க‌ர் அர‌சாங்க‌ ஊழிய‌ர்.

    ReplyDelete
  35. Yes he is educated.

    Yes he is married. in Guru dasa he may got married. But after which he may be single

    Job will be as professor or teacher. Mainly in teaching professioon.

    ReplyDelete
  36. பின்னூட்டம் மூலம் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com