3.7.14

Astrology: quiz 61: Answer: சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வது போல உனைக் கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே!

 
Astrology: quiz 61: Answer: சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வது போல
உனைக் கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே!


கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
இன்ப காவிய கலையே ஓவியமே
செழும் கனி போல சுவை தரும் மாமணி என்
பாடிடும் பூங்குயிலே
இன்ப காவிய கலையே ஓவியமே
கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே
இன்ப காவிய கலையே ஓவியமே

சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வது போல
உனைக் கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே
நீல வானம் இல்லாத ஊரே இல்லை
உலகினில் மழை இன்றி ஏதும் இல்லை
அமுதே உனை அன்றி வாழ்வே இல்லை
அன்பே இது உண்மையே
இன்ப காவிய கலயே ஓவியமே

அங்கும் இங்கும் விளையாடி அலை போல உறவாடி
ஆனந்தம் காணும் நேரம் தானே
உள்ளத்தின் ஆசையே உன்னை உன்னை தேடுதே…

உன்னை உன்னை தேடுதே
கொஞ்சி பேசும் கிளியே நல் இன்பம் தரும் ஜோதியே
மானே மலரினும் மெல்லியது காதலே
மகிழ்வோம் நாமே புதுமை வாழ்விலே
இன்ப காவிய கலையே ஓவியமே
கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே இன்ப
காவிய கலையே ஓவியமே!

பாடலாக்கம். கவிஞர் பட்டுக்கோட்டை பி. கல்யாணசுந்தரம்.
படம்: நாடோடி மன்னன். (1958)
இசை எஸ் எம் சுப்பையா நாயுடு

-----------------------------------------------------------------------------
நேற்றையப் பதிவில், அம்மணி ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து, அதை அலசி, இரண்டு கேள்விகளுக்கான பதிலை எழுதும்படி கேட்டிருந்தேன்.

சரியான பதில் என்ன என்பதை முதலில் பார்ப்போம்.

1.  அம்மணி உயர் கல்வி கற்றவர். முதுகலைப் பட்டப்படிப்பு படித்தவர்.அதற்கு மேலும் படித்தவர்.

2. அம்மணிக்கு 29 வயதில் திருமணம் நடந்தது. நல்ல வரன் கிடைத்தது. மகிழ்ச்சியான மண வாழ்க்கை கிடைத்தது.

------------------------------------------------------------
ஜாதகப்படி அதற்கு என்ன காரணம். வாருங்கள் அலசிப்பார்ப்போம்!


1. ஜாதகி கும்ப லக்கினக்காரர். லக்கினாதிபதி சனீஷ்வரன் கேந்திரத்தில், நட்பு வீட்டில் வலுவாக இருக்கிறார். இந்த அமைப்பு கும்ப லக்கினக்காரர்களுக்கு பல வெற்றிகளைப் பெற்றுத் தரும் அமைப்பாகும்.

2. லக்கினத்திற்குப் பாபகர்த்தாரி யோகமும் உள்ளது. சுபகர்த்தாரி யோகமும் உள்ளது. சுபகர்த்தாரி யோகம் 3 சுப கிரகங்களின் அமர்வால் வலிமையாக உள்ளது. பாபகர்த்தாரி யோகத்தை அவைகள் ஓரம் கட்டிவிட்டன!

3. பெண்களுக்கு கும்ப லக்கினம் மிகவும் மேன்மைகளை உடைய லக்கினமாகும். பூர்ண கும்பத்தைப் போல எல்லா நல்ல குணங்களையும்
கொண்டவர்களாக இருப்பார்கள்.

4. கும்பலக்கினத்திற்கு யோககாரகனான சுக்கிரன் (4ஆம் வீட்டிற்கும், 9ஆம் வீட்டிற்கும் உரியவன்) உச்சம் பெற்று 7ஆம் வீட்டுக்காரனான சூரியனுடன் சேர்ந்து இருப்பது, ஜாதகிக்குப் பலவிதத்திலும் நன்மையாக அமைந்தது.

5. பெண்களின் ஜாதகத்தில் பாக்கியஸ்தானம் முக்கியமானதாகும். இங்கே அதன் அதிபதி உச்சம் பெற்றதால், ஜாதகிக்கு எல்லா நன்மைகளும்
அவரைத் தேடி வந்தன!

6. சந்திரன் + செவ்வாய் சேர்க்கையால் சசி மங்கள யோகம். குரு + சந்திரன் சேர்க்கையால் குருச் சந்திர யோகம் ஆகிய யோகங்கள் உள்ளன.
யோகங்கள் 12ல் அமைந்திருந்தாலும், பலன் இல்லாமல் போகுமா?

7. 12ஆம் வீட்டில் மாந்தி அமர்ந்திருந்தாலும், உடன் இருக்கும் 2 சுபக்கிரகங்களால் அவரின் வீரியம் குறைந்து விட்டது.

8. காலசர்ப்ப தோஷம் இருப்பதால், 30 வயதிற்கு மேல்தான் யோகங்கள்.
அது ஒரு குறை. ஆனாலும் 30 வயதிற்கு மேல் அதுவே யோகமாக
மாறுமே,அதனால் அதைப் பொறுத்துக்கொள்ளலாம்.

9. 4ஆம் வீட்டுக்காரன் உச்சம். வித்யாகாரகன் எந்தவித கெட்ட
சாவகாசமும் இல்லாமல் முதல் வீட்டில் (திரிகோணத்தில்).
அத்துடன் 4ஆம் வீட்டின்மேல் குரு பார்வை. இவை அனைத்தும்
சேர்ந்து ஜாதகியை நன்கு படிக்க வைத்தன. She is a post graduate

10. ஏழாம் வீட்டுக்காரன் சூரியன் நட்பு வீட்டில். உடன் களத்திரகாரன் சுக்கிரனின் கூட்டணி. அவன் (சுக்கிரன்) யோககாரனும் ஆவான்.
ஆகவேஅவர்கள் இருவரும் சேர்ந்து ஜாதகிக்கு நல்லபடியாகத் திருமணத்தைச் செய்து வைத்தார்கள்.

11. முக்கோணப் பரிவர்த்தனை. சனி வீட்டில் குரு. சுக்கிரன் வீட்டில்
சனி. குரு வீட்டில் சுக்கிரன். பரிவர்த்தனையால் அந்த 3 கிரகங்களுமே
வலிமைபெற்றுள்ளன.

12. ஆனாலும் தாமதமாக, அதாவது 29 வயதில் திருமணம் நடந்ததற்குக் காரணம் என்ன?

ஜாதகிக்கு அவருடைய 29ஆவது வயதில்தான் அதாவது 28 ஆண்டுகள்,
ஆறு மாதங்கள் கழிந்த பிறகுதான், ராகு மகா திசை முடிந்த பிறகுதான்
நல்ல காலம் ஆரம்பித்தது. ஆகவே அவருடைய திருமணம்
தாமதமானதும் ஒரு நன்மைக்குத்தான். ராகு மகா திசையில்
செய்திருந்தால் பிரச்சினைகள்உண்டாகியிருக்குமே சாமிகளா?

7ஆம் வீட்டின் மீது செவ்வாயின் பார்வை இருப்பதும், திருமணம் தாமதமானதற்கு ஒரு காரணம். அவர் 12ல் அமர்ந்திருப்பதைக்
கவனியுங்கள்.

குரு பகவான் 2ஆம் வீட்டிற்கு உரியவர். அவர் தன்னுடைய மகா திசை துவங்கியவுடன் ஜாதகிக்குக் குடும்ப வாழ்க்கையை அமைத்துக்
கொடுத்தார்.

9ஆம் அதிபதியை வைத்து மிகவும் அதிர்ஷ்டமான ஜாதகம். வேறு என்ன வேண்டும்?

அலசல் போதுமா?

சென்ற வாரம் சரியான விடையை எழுதியவர்களில் சிலர் இந்த வாரம் தவறான விடையை எழுதியுள்ளார்கள்.

4ல் சனி இருப்பதை வைத்து ஜாதகிக்குப் படிப்பு வராது என்று நினைத்திருக்கிறார்கள். மகரம் மற்றும் கும்ப லக்கினங்களுக்கு 
சனி அதிபதி. ஆகவே அவன் தனக்குத்தானே அல்லது தன்னுடைய
 லக்கின ஜாதகனுக்கு எப்படிக் கேடு செய்வான்? அத்துடன் அவன் 
தன்னுடைய பத்தாம் பார்வையாக லக்கினத்தைப் பார்க்கிறான். 
அவன் ஜாதகியின் படிப்பிற்கு இடையூறு செய்யவில்லை. 
அதை மனதில் வையுங்கள்.

போட்டியில் 23 பேர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்களில்
8  பேர்கள் சரியான பதிலை எழுதியுள்ளார்கள்.அவர்களின் பெயரும் பின்னூட்டமும்கீழே உள்ளது. அவர்கள் அனைவருக்கும் எனது மனம்
உவந்த நன்றி. மேலும் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் எனது பாராட்டுக்கள். Better luck for them next time!

அன்புடன்
வாத்தியார்

-------------------------------------------------------
1
///////Blogger S.Namasu said...
    மதிப்பிற்குரிய வாத்தியார் அய்யா, ஜோதிட புதிர் போட்டி எண் 61 ற்கான எனது கணிப்பு:-
    ஜாதகி படித்தவர்.
    லக்கின அதிபதி "சனி" 4ம் இடத்தில், மற்றும் 10ம் பார்வையாக லக்கினத்தை பார்க்கிறார். மேலும் "நீசபங்க ராஜயோக குரு"வின் 5ம் பார்வையினை பெறுகிறார். மற்றும் கல்விகாரகன் "புதன்" லக்கினத்தில் உள்ளதனால் ஜாதகி படித்தவர். (குரு பார்பதனால் சட்ட படிப்பிற்கான வாய்ப்பு)
    ஜாதகிக்கு 31:5:10 வயதிற்கு மேல் குரு தசையில் தாமதமாக திருமணம் நடந்திருக்கும்.
    7ம் இடத்து அதிபதி "சூரியன்" உச்சம் பெற்ற களத்திர காரகன் சுக்கிரனுடன் இணைந்து 2ம் இடமான "குடும்ப ஸ்தானத்தில்" உள்ளாதனால்
திருமணம் நிச்சயமாக உண்டு.
மேலும் தாமதத்திற்காண காரணம் ஜாதகிக்கு "அவசவ்ய காலசர்ப்ப தோசம் உள்ளது" (கேது கொடி பிடிப்பதனால்)
இதனால் குருசந்திர, சசிமங்கள யோகங்கலானது தாமதமாக கிடைக்கும்.
    சுபம்.
    Wednesday, July 02, 2014 10:17:00 AM/////
---------------------------------------------
2
//////Blogger Sivachandran Balasubramaniam said...
    மதிப்பிற்குரிய ஐயா !!!
    புதிர் எண் : 61 இற்கான பதில்.
    இதில் கொடுக்கப்பட்ட ஜாதகிக்கு கேது கொடிபிடித்து செல்லும் கால சர்ப்ப தோஷம் உள்ளது. பெண்களுக்கே உரிய கும்ப லக்கினம். பெண்ணின்
எல்லா அம்சமும் உண்டு !!! இலக்கின அதிபதி சனி 4இல் நட்பு வீடு.( கேந்திர வீடு ). பொதுவாக சனி 4இல் இருந்தால் சுககேடு, கல்விக்கு கேடு.
ஆனால் சனி இந்த ஜாதகிக்கு ராசி மற்றும் லக்கினாதிபதி. மேலும் 4ஆம் அதிபதி சுக்கரன் 2இல் உச்சத்தில். உச்சத்தில் இருந்தாலும் 7ஆம்
அதிபதியான சூரியனால் அஸ்தமனம். இருந்தாலும் சுக்கரன் 5 பரல்களுடன், அம்சத்தில் ஆட்சி பலத்துடன். மேலும் 4 ஆம் வீட்டை 2, 11 ஆம்
அதிபதியான குருவின் விசேஷ பார்வையில்.கல்விக்கு காரகனான புதன் லக்கினத்தில் 6 பரல்களுடன். மேல்நிலை கல்விக்கான ஸ்தானமான 5 ஆம்
அதிபதி புதன் 5 இற்கு 9 இல். இத்தகைய காரணங்களால் ஜாதகிக்கு உயர்கல்வி உண்டு !!! தொழில் ஸ்தானம் லக்கினாதிபதி சனியின் பார்வையில்
இருப்பதால் கல்வியால் வேலையும் நன்றாக இருக்கும். களத்திர ஸ்தானாதிபதி சூரியனும் களத்திரகாரகன் சுக்கரனும் கிரக யுத்தம். 5ஆம் அதிபதி
புதனின் பார்வை 7 ஆம் இடத்தில். 3,10 ஆம் அதிபதி செவ்வாயின் 8 ஆம் பார்வை 7லில். குடும்ப ஸ்தானாதிபதி குரு அந்த வீடிற்கு 11 இல்
இருந்தாலும் குருவுடன் ஆறாம் அதிபதி( வில்லன் ) மற்றும் மாந்தியின் பிடியில். சூரியன் குருவின் அம்சத்தில் இருப்பதால்,ராகு திசை முடிந்த பின்னர்
குரு திசை, குரு புத்தியில் 30 தாவது வயதில் திருமணம் நடைபெற்று இருக்கலாம். திருமணம் உண்டு !!!
    இப்படிக்கு
    சிவச்சந்திரன்.பா
    Wednesday, July 02, 2014 11:33:00 AM//////
-----------------------------------------------
3
 //////Blogger SIVA said...
    அய்யா வணக்கம் .,
    இவருடைய 5,9,10,11 மிட பரல்கள் நன்றாக இருப்பதாலும், யோககாரகன் சுக்கிரன் நல்லநிலையில் இருப்பதாலும் இவருடைய திருமணம்
நடைபெறும்,

    இவர் காலசர்ப்பதோஷ ஜாதகர் , ஏழாம் அதிபதி தன்னுடைய வீட்டிற்கு எட்டில் மறைவு , செவ்வாய் ஏழாம் இடத்தை தனது பார்வையில்
வைத்திருகிறார் ஆகவே இவருக்கு தாமத திருமணம்,28 வயது வரை நடந்த திசைகள் சாதகமாக இல்லை ஆகவே 28 வயதிற்கு மேல் குரு திசை
சுக்கிரபுத்தி அல்லது கோச்சார ரீதியில் குரு பலமான நேரத்தில் இவருக்கு திருமணம் கைகூடும் .
    கல்வி :- இரண்டாம் அதிபதி பன்னிரண்டாம் இடத்தில் நீஷபங்கம் ஆனாலும் சுக்கிரன் இரண்டாமிடத்தில் உச்சம்,புதன் 6 பரல்கள் லக்கினத்தில்
இருக்கிறார், நான்காமிடம் குருபார்வையுடன் ஆகவே நல்ல கல்வி உண்டு , லக்கினம் பாபகர்தாரி யோகத்தில் இருப்பதாலும் இரண்டாமிடத்தில்
சூரியன் இருப்பதாலும் சிறுசிறு பிரச்சனைகள் வரும் ., ஐந்தாம் அதிபதியும் லக்கினாதிபதியும் கேந்திரம் அடைகிறார்கள். ஆகவே இவருக்கு நல்ல
அறிவுத்திறன் இருக்கும்,
    குருசந்திரயோகம்,ருசயோகம் இருந்தாலும் பன்னிரண்டாம் இடத்தில மறைவுற்று இருப்பதால் இவருக்கு பலன் கிடைக்கவில்லை
    பாபகர்தாரி யோகம் மற்றும் சுபகர்த்தாரி யோகம் ஒரு சேர இருப்பது கலவையான பலன்களை தருமா என்பது புரியவில்லை அய்யா..
    Wednesday, July 02, 2014 4:14:00 PM//////
---------------------------------------------------
4
//////Blogger Dallas Kannan said...
    Respected Sir
    Here is my analysis.
    1. Kethu starts the Kalasharba dosham.
    2.But she has good yogams too. Gurumangala, sasimangala, gajakesari... All of thm are in 12th house, but still will give at least some benefits. Sukra, Guru, Sani all in "Mukona parivarthanai".
    3. Laknathipathi Sani is in 4th house and it is friend’s house too.
    4. 4th lord Sukra is in 11th house from it and is uchham. But Asthangam as it is close to Sun.
    5. 4th house also has Guru's parvai.
    6. Regarding 7th house, its lord is in 2nd place (8th from 7th place), but with uchha Sukran.
    7. Mars looks at 7th house.
    8. But Subha Buthan also looks at 7th house.
    9. Strong laknathipathi, 5th lord and sukra indicates love as well.
    So, She is definitely educated. she got married, but delayed as Mars's look and Sani is in 7th place in Navamsa.
    Wednesday, July 02, 2014 8:14:00 PM//////

-------------------------------------------------
5
/////Blogger ponnusamy gowda said...
    அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
    கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தில், ஜாதகி மெத்தப் படித்த மேதாவியாவார்.
    அவரது 30வது வயதில் திருமணம் நடந்து இருக்கும்.குரு தசை சனி புத்தியில் நடந்து இருக்கும்.
    அலசல்:
    ஜாதகி கும்ப லக்கினம்.லக்கினாதிபதி சனி கல்விக்குறிய 4ம் இடத்தில் நட்பு வீட்டில் அமர்ந்து,10ம் பார்வயால் லக்கினத்தையும்,அங்கு அமர்ந்த
கல்விக்கு அதிபதி புதனையும் தன் பார்வையில் வைத்துள்ளார்.
    2).நுண்ணறிவிற்க்கு ஆதிபத்தியம் கொண்ட 5ம் பதி புதன், லக்கினத்தில் அமர்வு.தனது வீட்டிற்க்கு 9ல்.
    3). 7ம் பதி சூரியன் 2ல் உச்ச சுக்கிரனுடன் அமர்வு. ஆயினும் சூரியன் தன் வீட்டிற்க்கு 8ல் அமர்வு சிறப்பில்லை.உச்சம் பெற்ற செவ்வாய்,குருவின் சேர்க்கையுடன், தன் 8ம் பார்வையால் 7ம் இடத்தை பார்வை செய்வதால் தகுதியற்றவர் கணவராகவாய்த்திருப்பார்.
    4).4&9க்குடைய யோககாரகன் சுக்கிரன்,2ம் இடத்தில் உச்சம். 2ம் பதி குரு நீச்ச பங்க ராஜயோகம் அடைந்திருப்பதுடன் கல்வி ஸ்தானமாகிய 4மிடத்தையும், மாங்கல்ய ஸ்தானமாகிய 8மிடத்தையும் பார்வை செய்திருப்பது
    நன்மையே.
    Wednesday, July 02, 2014 9:11:00 PM//////
-------------------------------------------------
6
/////Blogger Chandrasekharan said...
    Respected sir,
    Lagnadhipathy Sani 4-il thannudaya nanban sukranin veetil. 4-m adhibathy Sukran Uccham petru 2-il amarvu. Lagnathai lagnadhipathy sani 10-m paarvayaga parkiraar.
    Budhan 5 & 8-m adhipathy and avar lagnathil amarvu saniyin paarvai. Jadhagi Kandhippaga Technical Padippu (B.E, M.B.B.S) padithuiruppar.
    7-m adhipathy sooriyan lagnathirku 2-il( Kudumbasthanathil amarvu) sooriyan thanveetirku 8-il amarvu. Kaaragan Sukran Uccham petru 2-il amarvu.
    Labasthanathil amarndha Raaghu migundha narpalangalai vaari valangi iruppar. Raaghu dhasa Chandra bukthiyi alladhu Neecha bangam
adaindha Guru Dhasa-Sani bukthiyil avargalukku Thirumanam nadandhu irukkum and avar velinatil settle aagi iruppadharkku migavum adhigamana vaippu ulladhu.
    Thank You.
    Kadaisi Bench Maanavan.
    Wednesday, July 02, 2014 9:50:00 PM/////

--------------------------------------------------
7
///////Blogger Venkat Lakshmi said...
    மதிப்பிற்குரிய ஐயா வணக்கம், புதிர் 61க்கு விடை: லக்கனாதிபதி 4ல் 4ம் வீட்டு அதிபதி அந்த வீட்டிற்க்கு 11ல் உச்சம்,அதனால் ஜாதகி படித்தவர்.7ம் வீட்டு அதிபதி லக்கனத்திற்க்கு 2ல், 7ம் வீட்டு அதிபதி அந்த வீட்டிற்கு 8ல்,கால சர்ப்ப தோஷ ஜாதகம்,களத்திரகாரகன் சுக்கிரன் உச்சம்,அதனால் 30 வயதிற்க்கு மேல் குரு திசையில், குரு புத்தியில் திருமணம் முடிந்திருக்கும்.
    Thursday, July 03, 2014 12:44:00 AM//////
-------------------------------------------------
8
//////Blogger sivaradjane said...
    Quiz No.61
    1. 4 ம் இடத்தில் லக்னாதிபதியும் ,விரயாதிபதியான சனி பகவான் . வித்யாகாரகனான புதன் லக்னத்தில் ,ஆயினும் பாபகர்த்தாரி தோஷத்த்தில்

..இருப்பினும் 4 ம் இடத்திற்கு நீச 'குருவின் பார்வை உள்ளது. மேலும் 4 ம் அதிபதியான சுக்கிரன் 2 ம் வீட்டில் உச்சத்தில் உள்ளார். ஆகவே ஜாதகி
நன்கு படித்தவர்.

    2. கேது கோடி பிடித்துச் செல்லும் காலசர்ப்ப தோசம் உள்ள ஜாதகி. 7 ம் அதிபதியான சூரியன் 7 க்கு 8 ல் ..
    7 ம் இடத்திற்கு 8 ம் அதிபதியான புதன் மற்றும் 3 ம் அதிபதியான செவ்வாய் ஆகியோரின் பார்வை ஆகிய காரணங்களால் ஜாதகிக்கு தாமதமாகவே 31 வயதில் குரு திசையில் திருமணம் நடைபெற்று இருக்கும். ஜாதகப்படி களத்திரக்காரனும் ,கும்ப லக்கினத்திற்கு யோககாரனுமான சுக்கிரன் உச்சமானதுடன் 7 ம் அதிபதியான சூரியனுடன் கூட்டு சேர்ந்து அந்த பெண்னுக்கு திருமண யோகத்தை வழங்கினார் . பெண்களுக்கு
மற்றொரு களத்திர காரனான செவ்வாயும் உச்சத்தில் உள்ளார். உடன் குரு மங்கள யோகமும் ,குரு சந்திர யோகமும் உள்ளது.
    sivarajan
    (pondicherry)///////
------------------------------------------------------
========================================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

27 comments:

  1. தங்கள் அலசலுக்கு நன்றி....

    ஒரு விண்ணப்பம் ஐயா...

    ஒரு ஜாதகத்தை தந்து ,முதல் மற்றும் 2 வது பிரந்தது (அ) பிறப்பது ஆணா பெண்ணா என்று கண்டரிய கேள்வி கேட்கும்படி வேண்டுகிரேன்..

    (பிறப்பது என்ன குலந்தை என தெரிந்து கொள் வேண்டும் என்பது அனைவரும் விரும்புவதுதானே ஐயா!)....

    ReplyDelete
  2. இந்த ஜாதகிக்கு முதலில் பிறந்தது பெண் தானே ஐயா?

    ReplyDelete
  3. அய்யா வணக்கம் சுகம்தான

    ReplyDelete
  4. //ஆகவே அவருடைய திருமணம்
    தாமதமானதும் ஒரு நன்மைக்குத்தான். ராகு மகா திசையில்
    செய்திருந்தால் பிரச்சினைகள்உண்டாகியிருக்குமே சாமிகளா?//

    இது சரியான காரணமாகப் படவில்லை. நான் என் மனைவியை திருமணம் செய்யும் போது அவருக்கு 29 வயது. ராகு தசை குரு புத்தி நடந்தது. ராகு தசை முடியட்டும் என்று காத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்.

    ReplyDelete
  5. Respected Sir

    I am new to astrology and learning basics. I have a doubt running in my mind and I could not find answer for that despite of going through few articles.

    It would be great to hear answer from you

    Let's assume

    1) Shani Dasa is in progress
    2) Dasanadhan (eg Shani) is on Yogakaraka's star. But yogarakarakan is very weak
    3) Bhuddhinadhan is on Dasanadhan's star

    How the results would be in general?

    Correct me if my query is wrong

    Thank you
    Sathish Kumar

    ReplyDelete
  6. ஜாதகத்தை கற்றுக்கொள்ளும் மாணவனின் சிந்தனையில் நூறு சதவிகிதம் ஜாதகத்தை யாராலும் கணிக்க முடியாது ஓரளவு தான் கணிக்கமுடியும் என்று நிலைநிறுத்தியபிறகு, முடியும் என்ற நம்பிக்கையை வைத்து முயர்ச்சி செய்து வருகிறோம்.
    புரியாத புதிர் என்னவென்றால் " ஓரளவு " என்ற சொல்லுக்கு அளவுகோல் என்ன என்றுதான் தெரியவில்லை.

    இந்த ஜாதகத்தில் சுக்கிரன் சூரியனுடன் சேர்ந்து அஸ்தங்கமாகிவிட்டான். இது சரியா.

    உச்சமான கிரகம் அஸ்தங்கமான பிறகு எப்படி பலன் கொடுக்கும் என்று தாங்கள் முன்பு ஒருமுறை கூறியிருக்கிறீர்கள்.
    இது ஏன் இந்த ஜாதகத்திற்க்கு எற்றுக்கொள்ளகூடாது என்பதை தா‌ங்களை விலக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

    சந்திரசேகரன் சூரியநாராயணன்

    ReplyDelete
  7. லக்னாதிபதியே, சனைச்சரன், 12ம் அதிபன் ஆனாலும் அவர் தன் லக்னாதிபதியின் நன்மையை மட்டும் செய்ததும், படிப்புக்கான காரகன் புதன் 8ம் அதிபன் ஆனாலும் லக்னத்தில் அமர்ந்து லக்னத்தையும், படிப்பையும் கெடுக்காமல் விட்டதும்,நான்காம் அதிபன் சுக்கிரன் சூரியனால் அடி வாங்கியும் வலிமை குன்றாது நன்மை செய்ததும்,ஜாதகி கேது கொடி பிடித்துச்செல்லும்
    சர்ப தோஷத்தில் இருந்தும் படிப்புத் தடையில்லாமல் இருந்ததும், மேல் படிப்புக்கான காலம் ராகு தசாவில் இருந்தும் படிப்பு தடையில்லாமல் இருந்ததும்,
    இறையருள் என்று தான் சொல்லவேண்டும். எல்லாம் மூதாதையர் செய்த தான தர்ம பலன்களால் மட்டுமே சாத்தியம்.
    படித்த பாடங்களை பொய்யாக்கிய ஜாதகம்.
    நன்றி ஐயா!

    ReplyDelete
  8. மிக்க நன்றி அலசலுக்கு மிகவும அழகாகவும் இருந்தது விவரங்களுடன் .ஒரு சந்தேஹம் . இவைகளெல்லாம் யாருடைய சாதகமாக இருக்கும் என்பது தான் , அவைகளெல்லாம். தேர்ந்து விட்டால் சற்று நிம்மதி ஆகிவிடும்
    வணக்கம் தொடர்ந்து படித்துகொண்டிருக்கும் மாணவன்

    ReplyDelete
  9. Respected Sir

    Sukran asthangam did not create any issues?

    ReplyDelete
  10. Respected Sir
    Also Rahu is in 11th place and that too in Guru's house. That is good right? Even then if it would create issues in marriage if it happened in Rahu Dasa?

    ReplyDelete
  11. ////Blogger ramesh kumar said...
    தங்கள் அலசலுக்கு நன்றி....
    ஒரு விண்ணப்பம் ஐயா...
    ஒரு ஜாதகத்தை தந்து ,முதல் மற்றும் 2 வது பிறந்தது (அ) பிறப்பது ஆணா பெண்ணா என்று கண்டறிய கேள்வி கேட்கும்படி வேண்டுகிறேன்..
    (பிறப்பது என்ன குழந்தை என தெரிந்து கொள் வேண்டும் என்பது அனைவரும் விரும்புவதுதானே ஐயா!)..../////

    சிக்கலான பாடம். அந்தக் காலத்தில் முனிவர்கள் ஜோதிடத்தை வகுத்த காலத்தில், கருக்கலைப்பு, கருக்கலைப்பு மாத்திரைகள், தகாத உறவுகளால் கருத்தரிப்பு/கலைத்தல் போன்ற கேடுகள் எல்லாம் இல்லை. வயிற்றில் உருவாகும் கருவை மட்டுமே கணிப்பதற்குச் சொல்லிக் கொடுத்தார்கள். இப்போது அந்தக் கணிப்பு முறைகள் எல்லாம் பொய்யாகிப் போகும் அவதிகள் இருக்கின்றன!

    ReplyDelete
  12. ////Blogger raju maharajun said...
    அய்யா வணக்கம் சுகம்தானே!/////

    சுகம்தான்! நன்றி!

    ReplyDelete
  13. /////Blogger Kirupanandan A said...
    //ஆகவே அவருடைய திருமணம்
    தாமதமானதும் ஒரு நன்மைக்குத்தான். ராகு மகா திசையில்
    செய்திருந்தால் பிரச்சினைகள்உண்டாகியிருக்குமே சாமிகளா?//
    இது சரியான காரணமாகப் படவில்லை. நான் என் மனைவியை திருமணம் செய்யும் போது அவருக்கு 29 வயது. ராகு தசை குரு புத்தி நடந்தது. ராகு தசை முடியட்டும் என்று காத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்./////

    ராகுதிசையில் சுப கிரகங்களின் புத்தியில் திருமணம் செய்யலாம். காலசர்ப்ப தோஷமும் சேரும்போது அதுவும் சிக்கலாகிவிடும். நான் நிறையப் பார்த்திருக்கிறேன். நீங்கள் உங்கள் திருமணத்தை மட்டும் வைத்து உங்கள் அனுபவத்தைச் சொல்கிறீர்கள். இன்னும் இது போன்ற அமைப்புடைய வேறு சில ஜாதகங்களையும் பார்த்து விட்டு ஒரு முடிவிற்கு வாருங்கள் நண்பரே!

    ReplyDelete
  14. /////Blogger sathish kumar said...
    Respected Sir
    I am new to astrology and learning basics. I have a doubt running in my mind and I could not find answer for that despite of going through few articles.
    It would be great to hear answer from you
    Let's assume
    1) Shani Dasa is in progress
    2) Dasanadhan (eg Shani) is on Yogakaraka's star. But yogarakarakan is very weak
    3) Bhuddhinadhan is on Dasanadhan's star
    How the results would be in general?
    Correct me if my query is wrong
    Thank you
    Sathish Kumar/////

    உதிரியான கிரக நிலைகளை வைத்துக்கொண்டு நீங்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்வது தவறாகிவிடும். நீங்களும் முழு ஜாதகத்தைக் கொடுத்துக் கேள்வியை முறையாகக் (specific questions) கேட்கவேண்டும். பதில் சொல்பவரும் ஜாதகத்தை அலசி முறையாகப் பதில் சொல்ல வேண்டும். அதுதான் முறையானதாகும்!

    ReplyDelete
  15. ///////Blogger Chandrasekaran Suryanarayana said...
    ஜாதகத்தை கற்றுக்கொள்ளும் மாணவனின் சிந்தனையில் நூறு சதவிகிதம் ஜாதகத்தை யாராலும் கணிக்க முடியாது ஓரளவு தான் கணிக்கமுடியும் என்று நிலைநிறுத்தியபிறகு, முடியும் என்ற நம்பிக்கையை வைத்து முயற்சி செய்து வருகிறோம்.
    புரியாத புதிர் என்னவென்றால் " ஓரளவு " என்ற சொல்லுக்கு அளவுகோல் என்ன என்றுதான் தெரியவில்லை.
    இந்த ஜாதகத்தில் சுக்கிரன் சூரியனுடன் சேர்ந்து அஸ்தங்கமாகிவிட்டான். இது சரியா.
    உச்சமான கிரகம் அஸ்தங்கமான பிறகு எப்படி பலன் கொடுக்கும் என்று தாங்கள் முன்பு ஒருமுறை கூறியிருக்கிறீர்கள்.
    இது ஏன் இந்த ஜாதகத்திற்கு எற்றுக்கொள்ளகூடாது என்பதை தா‌ங்களை விளக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
    சந்திரசேகரன் சூரியநாராயணன்/////

    அஸ்தமனம் ஆன நிலையிலும், முக்கோணப் பரிவர்த்தனையினால் சுக்கிரன் வலிமை பெற்றுள்ளான். அதையும் பாருங்கள். பூர்வ புணியத்தை (5ஆம் வீடு) யாராலும் கணிக்க முடியாது. இந்த ஜாதகிக்கு பூர்வ புண்ணியாதிபதி திரிகோணம் பெற்று லக்கினத்தில் வந்து அமர்ந்துள்ளதைப் பாருங்கள்.
    அவன் தான் பலருடைய கணிப்பையும் பொய்யாக்கியவன். அவன் தன்னுடைய வீட்டோ பவரை உபயோகித்து ஜாதகிக்கு பல நன்மைகளைச் செய்தான். கே.எம்.ஆர்.கே சொல்வதைப் போல இறையருள் என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். எத்தனை அனுபவம் வாய்ந்த ஜோதிடர் என்றாலும் சில சமயங்களில் அவருடைய கணிப்பு பொய்யாகிப் போவதுண்டு. அதைத்தான் ஜோதிடத்தின் முதல்விதி (First Rule) வலியுறுத்திச் சொல்கிறது.

    ஜோதிடர் எதையும் கோடிட்டுக் காட்டலாமே தவிர, இப்படித்தான் நடக்கும் என்று அறுதியிட்டுச் சொல்லக்கூடாது. (“An astrologer only can indicate what is going to take place and he can not certainly say what is going to happen") அதற்கு வேறு ஒருவர் இருக்கிறார். அவரின் பெயர் கடவுள்

    ReplyDelete
  16. /////Blogger kmr.krishnan said...
    லக்னாதிபதியே, சனைச்சரன், 12ம் அதிபன் ஆனாலும் அவர் தன் லக்னாதிபதியின் நன்மையை மட்டும் செய்ததும், படிப்புக்கான காரகன் புதன் 8ம் அதிபன் ஆனாலும் லக்னத்தில் அமர்ந்து லக்னத்தையும், படிப்பையும் கெடுக்காமல் விட்டதும்,நான்காம் அதிபன் சுக்கிரன் சூரியனால் அடி வாங்கியும் வலிமை குன்றாது நன்மை செய்ததும்,ஜாதகி கேது கொடி பிடித்துச்செல்லும்
    சர்ப தோஷத்தில் இருந்தும் படிப்புத் தடையில்லாமல் இருந்ததும், மேல் படிப்புக்கான காலம் ராகு தசாவில் இருந்தும் படிப்பு தடையில்லாமல் இருந்ததும்,
    இறையருள் என்று தான் சொல்லவேண்டும். எல்லாம் மூதாதையர் செய்த தான தர்ம பலன்களால் மட்டுமே சாத்தியம்.
    படித்த பாடங்களை பொய்யாக்கிய ஜாதகம்.
    நன்றி ஐயா!//////

    உண்மைதான்.இந்த ஜாதகிக்கு பூர்வ புண்ணியாதிபதி திரிகோணம் பெற்று லக்கினத்தில் வந்து அமர்ந்துள்ளதைப் பாருங்கள்.
    அவன் தான் பலருடைய கணிப்பையும் பொய்யாக்கியவன். அவன் தன்னுடைய வீட்டோ பவரை உபயோகித்து ஜாதகிக்கு பல நன்மைகளைச் செய்தான். நீங்கள் சொல்வதைப் போல அதை இறையருள் என்றுதான் அதைச் சொல்ல வேண்டும். எத்தனை அனுபவம் வாய்ந்த ஜோதிடர் என்றாலும் சில சமயங்களில் அவருடைய கணிப்பு பொய்யாகிப் போவதுண்டு. பூர்வ புண்னியம் எதனால் இந்தப் பிறவியில் கிடைக்கிறது? இறையருளால்தானே!

    ReplyDelete
  17. ////Blogger Yagneshwar Ganapathy said...
    மிக்க நன்றி அலசலுக்கு மிகவும அழகாகவும் இருந்தது விவரங்களுடன் .ஒரு சந்தேகம் . இவைகளெல்லாம் யாருடைய சாதகமாக இருக்கும் என்பது தான் , அவைகளெல்லாம். தேர்ந்து விட்டால் சற்று நிம்மதி ஆகிவிடும்
    வணக்கம் தொடர்ந்து படித்துகொண்டிருக்கும் மாணவன்//////

    என்னுடைய சேகரிப்பில் உள்ள ஜாதகங்கள். என்னையும் உங்களையும் போல ஜாதகி ஒரு சாதாரணப் பெண்தான். கொண்டாடப் பட வேண்டிய பிரபலம் அல்ல! Not a celebrity to know

    ReplyDelete
  18. //////Blogger Dallas Kannan said...
    Respected Sir
    Sukran asthangam did not create any issues?/////

    சுக்கிரன், குரு, சனி ஆகிய மூவரும் முக்கோணப் பரிவர்த்தனையில் உள்ளார்கள் என்று உங்களுடைய பின்னூட்டத்தில் எழுதியுள்ளதை மறந்துவிட்டு இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள். அஸ்தமனம் ஆன நிலையிலும், முக்கோணப் பரிவர்த்தனையினால் சுக்கிரன் வலிமை பெற்றுள்ளான் டல்லாஸ் காரரே! அதையும் பாருங்கள்!

    ReplyDelete
  19. /////Blogger Dallas Kannan said...
    Respected Sir
    Also Rahu is in 11th place and that too in Guru's house. That is good right? Even then if it would create issues in marriage if it happened in Rahu Dasa?/////

    ராகு திசையும் நடந்து, கால சர்ப்ப தோஷமும் நடந்து கொண்டிருந்தால், தவிர்ப்பது நல்லது என்பார்கள். அப்படியே மீறி நடந்திருந்தாலும், ராகு திசை முடிந்த பிறகுதான் ஜாதகர்களுக்குத் திருமண வாழ்க்கை இனிக்கத் துவங்கும். இது என் அனுபவம்.

    ReplyDelete
  20. என் கேள்வியைத் தாங்கள் தவறாகப் புரிந்துக் கொண்டீர்கள். என் அனுபவம் என்றில்லை. யாராக இருந்தாலும் 30 வயதை நெருங்கும் ஒரு ஜாதகிக்கு அப்போதுதான் ராகு தசையின் ஆரம்ப நிலை என்றால் திருமணத்திற்காக அந்த தசை முடியும் வரை காத்திருக்க முடியுமா?

    ReplyDelete
  21. ஐயா,

    தங்களை தொந்தரவு செய்வதர்க்கு மன்னிக்கவும்....

    ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன், இது ஆண் ஜாதகமா (அ) பெண் ஜாதகமா என்று கண்டறிய இயலுமா?......

    அதுபோல

    பிறந்த நேரம் ,கிழமை, அன்றைய சூரிய உதயம் இவற்றை கொண்டு பிறந்திருப்பது ஆணா (அ) பெண்ணா என்று கூற இயலுமா?.....


    அறிவியலுக்கு அப்பாற்பட்ட மாபெரும் இச் ஜோதிடத்தை நமக்கு தந்தருளிய நம் முன்னோர்களுக்கு நன்றி.................

    ReplyDelete
  22. Respected Sir,

    "சுக்கிரன், குரு, சனி ஆகிய மூவரும் முக்கோணப் பரிவர்த்தனையில் உள்ளார்கள் என்று உங்களுடைய பின்னூட்டத்தில் எழுதியுள்ளதை மறந்துவிட்டு இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள். அஸ்தமனம் ஆன நிலையிலும், முக்கோணப் பரிவர்த்தனையினால் சுக்கிரன் வலிமை பெற்றுள்ளான் டல்லாஸ் காரரே! அதையும் பாருங்கள்!"

    I saw the mukona parivarthani. But had a doubt that asthanga dosam will overpower it or not. But since Sukra is in its own/ mulathrikona house, I took that as its real power. Also I thought the asthanga dosam also one of the reasons of delayed marriage in addition to Mars look.

    Want to clear the doubt and make sure. I do not have to be in doubt when a good teacher is there to clear it :).

    ReplyDelete
  23. /////Blogger Kirupanandan A said...
    என் கேள்வியைத் தாங்கள் தவறாகப் புரிந்துக் கொண்டீர்கள். என் அனுபவம் என்றில்லை. யாராக இருந்தாலும் 30 வயதை நெருங்கும் ஒரு ஜாதகிக்கு அப்போதுதான் ராகு தசையின் ஆரம்ப நிலை என்றால் திருமணத்திற்காக அந்த தசை முடியும் வரை காத்திருக்க முடியுமா?/////

    30 வயது நெருங்கினால். அல்லது தாண்டிவிட்டால், திருமணத்திற்கு ஜாதகத்தையே பார்க்காதீர்கள் என்று நான் சொல்லுவேன். ஜாதகம் பொருந்தினால் ஆளைப் பிடிக்காது. ஆளைப் பிடித்திருந்தால் ஜாதகம் பொருந்தாது. சோதனையாக இருக்கும். மேலும் 2 அல்லது 3 வருடங்கள் திருமணம் தள்ளிக் கொண்டே போகும். ஆகவே ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டுத் திருமணம் செய்து கொள்ளுங்கள். விதிப்படி நடப்பது நடக்கட்டும். வர இருப்பதை எப்படித் தடுத்து நிறுத்த முடியும்? என்பதுதான் என்னுடைய யோசனையாக இருக்கும் இதற்கு என்ன சொல்கிறீர்கள்?

    ReplyDelete
  24. ///Blogger ramesh kumar said...
    ஐயா,
    தங்களை தொந்தரவு செய்வதர்க்கு மன்னிக்கவும்....
    ஒரு ஜாதகத்தை பார்த்தவுடன், இது ஆண் ஜாதகமா (அ) பெண் ஜாதகமா என்று கண்டறிய இயலுமா?......
    அதுபோல
    பிறந்த நேரம் ,கிழமை, அன்றைய சூரிய உதயம் இவற்றை கொண்டு பிறந்திருப்பது ஆணா (அ) பெண்ணா என்று கூற இயலுமா?.....
    அறிவியலுக்கு அப்பாற்பட்ட மாபெரும் இச் ஜோதிடத்தை நமக்கு தந்தருளிய நம் முன்னோர்களுக்கு நன்றி.................//////

    ஆண் குழந்தைகளுக்கான அமைப்பு:
    ஏழாம் வீடு + சூரியன், செவ்வாய் அல்லது குரு போன்ற ஆண்கிரகங்கள் அவர்களுடைய வீடுகள்
    அதுபோல ஏழாம் வீட்டுக்காரன் + சூரியன், செவ்வாய் அல்லது குரு போன்ற ஆண்கிரகங்கள் அவர்களுடைய வீடுகள்
    பெண் குழந்தைகளுக்கான அமைப்பு. அதே எழாம் வீட்டை வைத்து அந்த 3 கிரகங்கள் இல்லாமல் மற்ற கிரகங்கள்.
    இந்த ஆட்டத்தில் ராகு & கேதுவிற்கு இடமில்லை.
    இது ஒரு குறுக்கு வழி. விரிவான வழி உள்ளது அது பெரிய பாடம். நேரம் இருக்கும்போது இன்னொரு நாள் அதைப் பாடமாகத் தருகிறேன். இங்கே அல்ல. கேலக்ஸி 2007 வகுப்பில். இங்கே எழுதினால் திருட்டுப் போகும் அபாயம் உண்டு

    ReplyDelete
  25. Blogger Dallas Kannan said...
    Respected Sir,
    "சுக்கிரன், குரு, சனி ஆகிய மூவரும் முக்கோணப் பரிவர்த்தனையில் உள்ளார்கள் என்று உங்களுடைய பின்னூட்டத்தில் எழுதியுள்ளதை மறந்துவிட்டு இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள். அஸ்தமனம் ஆன நிலையிலும், முக்கோணப் பரிவர்த்தனையினால் சுக்கிரன் வலிமை பெற்றுள்ளான் டல்லாஸ் காரரே! அதையும் பாருங்கள்!"
    I saw the mukona parivarthani. But had a doubt that asthanga dosam will overpower it or not. But since Sukra is in its own/ mulathrikona house, I took that as its real power. Also I thought the asthanga dosam also one of the reasons of delayed marriage in addition to Mars look.
    Want to clear the doubt and make sure. I do not have to be in doubt when a good teacher is there to clear it :)./////

    திரும்பத் திரும்ப அலச இன்னும் பல சந்தேகங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். 12ல் அமர்ந்திருக்கும் செவ்வாயின் பார்வை ஏழாம் வீட்டின் மேல் விழுவதால்தான் திருமணம் தாமதப்பட்டது என்பது முக்கியமான காரணம்.

    ReplyDelete
  26. ஐயா வணக்கம் நான் புதியதாக உங்கள் வலைதளத்திற்கு வருகை புரிந்துள்ளேன் .மிகவும் பயனுள்ள உங்கள் வலைதளத்தை கண்டு நான் நெகிழ்ச்சி அடைந்தேன்
    நன்றி ..

    ReplyDelete
  27. Ayya, indha jathagathil kala sarpa doshathil ketu lagnathukku munnal irukiradhu. Indha amaippu nanmayayi seyyuma. Pothuvaga rahu irundhal thaan nanmai irukkum ena solvargale.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com