21.7.14

ஒரே ஆசாமி எப்போது இரண்டாகத் தெரிவான்? பகுதி 2



ஒரே ஆசாமி எப்போது இரண்டாகத் தெரிவான்? பகுதி 2

மனவளக் கட்டுரை

இக்கதையின் முதல் பகுதியைப் படித்திராதவர்கள், அதைப் படித்துவிட்டுப் பின் இதைப் படிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!
----------------------------------------------------------------------
தில்லியில் இருந்து வடக்கில் சோனிபட் செல்லும் நெடுஞ்சாலை, கிழக்கில் காஜியாபாத் செல்லும் நெடுஞ்சாலை, தெற்கில் நொய்டா, குர்கான், ஃபாரிடாபாத் போன்ற ஊர்களுக்குச் செல்லும் நெடுஞ்சாலை, ஆகிய சாலைகளில் உள்ள விளை நிலங்களுக்கெல்லாம் அடித்தது யோகம்.

பெரும் பணக்காரர்களும், ரியல் எஸ்டேட் காரார்களும், தொழிற்சாலைகளைக் கட்ட விரும்பும் நிறுவனங்களும், ஒன்றுக்குப் பத்து விலையைக் கொடுத்து இடங்களைக் கொத்துக் கொத்தாக வாங்கிக் கொண்டிருந்தார்கள்.

அந்த நிலையில் நமது கதையின் நாயகருக்கும் ஒரு யோகம் அடித்தது. தனக்குச் சொந்தமான பல இடங்களில் ஒரு இடத்தை - அது வெறும் 20 ஏக்கர் பூமி - விற்று 100 கோடி ரூபாய்களைப் பார்த்துவிட்டார். தேர்த்திவிட்டார். எல்லாம் பூர்வீக நிலங்கள். கோதுமை விவசாயம் செய்து எந்தக் காலத்தில் அத்தனை பெரிய தொகையைப் பார்ப்பதாம்?

உடனே ஒரு கணக்காய்வாளரைப் பிடித்து வருமான வரியைக் கட்டிவிட்டு, கிரேட்டர் நொய்டாவிற்குச் செல்லும் பாதையில் ஒரு பண்ணை வீட்டை வாங்கிக் கொண்டு செட்டிலாகிவிட்டார். இதுபோல இன்னும் சில சொத்துக்கள் உள்ளன. அவற்றை எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று பத்திரங்களை வங்கி லாக்கர்களில் பத்திரப் படுத்திவிட்டார்.

வீட்டில் 3 பேர்கள்தான். அவர், அவருடைய அன்பு மனைவி, 21 வயது நிரம்பிய அவருடைய மகன். இருபதாயிரம் ரூபாய் சம்பளத்தில் ஒரு நல்ல பஞ்சாபி சமையல்காரரை வேலைக்குச் சேர்த்து வேளாவேளைக்கு சிக்கன் கபாஃப், சிக்கன் மஞ்சூரியா என்று பிடித்த உணவுகளாக சாப்பிட்டு வாழ்க்கையை அனுபவிக்கத் துவங்கினார்.

உடற்பயிற்சிக்கு  வீட்டிலேயே ஜிம் இருந்தது. பகலில் மனைவியுடன் 2 மணி நேரம் சீட்டாடுவார். மூட் இருக்கும் சமயங்களில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பார்.

மாலை 7 மணியானால் பாட்டிலும் கையுமாக தோட்டத்தில் அமர்ந்து விடுவார். 10 மணிவரை பொழுது போகும். துணைக்கு மனைவியையும் இருத்திக்கொள்வார். இவருக்கு விஸ்கிதான் பிடிக்கும். அம்மணி ஒயின் சாப்பிடுவார். பையனுக்குக் கார் வாங்கிக் கொடுத்திருந்தார். பையனும் வெளியே சுற்றிவிட்டு ஒன்பது மணிக்கு சமர்த்தாக வீட்டிற்குத் திரும்பிவிடுவான்.

அவருடைய சமூகத்தில் குடிப்பது ஒன்று தவறான செயல் அல்ல! மேலும் வீட்டில் ஏதாவது விசேடம் என்றால் உறவினர்கள் மற்றும் நண்பர்களைக் குடும்பங்களுடன் அழைத்துப் பெரிய அளவில் தண்ணிப் பார்ட்டி நடக்கும்.

எல்லாம் அளவாகக் குடிக்கும் குடிகாரர்கள் நிறைந்த சமூகம் அவர்களுடைய சமூகம். குடித்துவிட்டுத் தெருவில் விழுந்து கிடக்கும் நபர்களைப் பார்க்க முடியாது.

குடியின் சாதக பாதகங்களைப் பற்றி தன் மகனுக்குச் சொல்லிக் கொடுக்க விரும்பியவர். அதைப் பதினைந்து நாட்கள் பாடமாக நடத்தத் துவங்கினார்.
21 வயதாகிவிட்டதால் அந்தப் பாடம் அவனுக்கு அவசியம் என்றும் நினைத்தார்.

கல்காஜி நகர் சித்தரஞ்சன் பார்க் அருகே இருக்கும் பார் ஒன்றிற்கு மகனை ஆழைத்துச் சென்றவர். தன்னுடைய பயிற்சியைத் துவக்கினார்.

விஸ்கி, பியர், ஒயின், பிராண்டி, ரம், ஜின் என்று குடிப்பதற்குக் கிடைக்கும் அத்தனை சரக்குகளிலும் மாதிரிக்கு ஒவ்வொரு பாட்டிலை வரவழைத்து அவற்றை விளக்கினார். எவை எவை எந்தெந்த மூலப் பொருள்களில் இருந்து செய்யப்படுகிறன என்பதை முதலில் சொல்லிக் கொடுத்தார். பிறகு எந்தெந்தப் பருவத்திற்கு எதெதைக் குடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்.

பிறகு அவைகள் சந்தைப் படுத்தப்படும்போது வரும் பாட்டில்களின் அளவைக் கூறினார். 180ml, 360ml, 750ml பாட்டில்களை வரவழைத்துக் காட்டினார். ஒரு ஸ்மால் பெக் என்பது 30ml என்பதையும் ஒரு லார்ஜ் என்பது 60ml என்பதையும் சொன்னார். 3 லார்ஜ்களுக்குமேல் சாப்பிடக்கூடாது என்பதையும், அதையும் சற்று இடைவெளி கொடுத்தே சாப்பிட வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுத்தார்.

அதற்குப் பிறகு உற்சாகமாக, “மை டியர் சன், லெட் அஸ் ஸ்டார்ட் வித் விஸ்கி டுடே!” என்று சொல்லியவர், பணியாளரை அழைத்து தேவையான வற்றைக் கொண்டு வரும்படி பணித்தார்.

முதலில் ஒரு ஸ்மால் பெக்கில் ஆரம்பித்தவர், அடுத்தடுத்து அரை மணி நேர இடைவெளியில் மேலும் இரண்டு லார்ஜ் அளவுள்ள விஸ்கியை வரவழைத்து அருந்தினார். மகனையும் அருந்தச் செய்தார். பிறகு வீட்டிற்குத் திரும்பினார்கள். ஓட்டுனர் வாகனத்தைச் செலுத்த தங்களுடைய பண்ணை வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். அப்ப்டியே ஒரு வாரம் சென்றது.

நடுவில் ஒரு நாள் பையன் கேட்டான். “அப்பா, எப்படி ஆரம்பிப்பது என்று சொல்லிக் கொடுத்தீர்கள். எப்போது நிறுத்துவது என்பதை நீங்கள் சொல்லித் தரவில்லையே?”

“நல்ல கேள்வி. பொறுத்திரு. பயிற்சியின் முடிவில் உனக்கே விளங்கும். அல்லது நான் சொல்லித் தருகிறேன்” என்றார்.

அடுத்த வாரம் அளவை சற்று அதிகப் படுத்தினார். இரண்டு வாரங்கள் சென்றது தெரியவில்லை.

பயிற்சியின் கடைசி நாள் அன்று அவருடைய பையன், அவர் கழிப்பறைக்குச் சென்றிருக்கும் சமயம், அவனாகவே ஒரு லார்ஜ்ஜை ஊற்றி ஒரே மடக்கில் குடித்துவிட்டான். அவருக்குத் தெரியாது என்று நினைத்தான். என்ன ஆகும் என்று குறுகுறுப்பும் இருந்தது. வயதுக் கொளாறு.

வந்தவர், அதைக் கவனித்துவிட்டார். ஆனாலும் கண்டு கொள்ளவில்லை. வழக்கம்போல மேஜையில் இருந்த பாட்டிலில் இருந்த மதுவை ஊற்றி இருவரும் அருந்தினார்கள்.

அப்போதுதான் அது நடந்தது.

போதை தலைக்கேறிய நிலையில் பையன் சற்றுக் குளறலுடன் கேட்டான்:

“அப்பா, எப்போதும் கேஷில் ஒருவர்தானே இருப்பார். இன்று ஏன் இரண்டு பேர்கள் இருக்கிறார்கள்”

“இதுதாண்டா அளவு. கேஷில் இருப்பது ஒருவர்தான். உனக்கு போதை அதிகமானதால் ஒருவர், இருவராகத் தெரிகிறார். குடியில் இதுதான் மோசமான நிலைமை. இந்த அளவைத் தொடக்கூடாது. இதற்கு முன்னரே நிறுத்திவிட வேண்டும். குடியை எப்போது நிறுத்துவது என்று கேட்டாயே. இப்போதுதான் நிறுத்த வேண்டும். இதையும் மீறித் தொடர்ந்தால், கவிழ்ந்து கிடக்க நேரிடும். புறிகிறதா?”

“நன்றாகப் புறிகிறது டாடி. தெரிந்து கொண்டேன்” என்றான்
---------------------------------------------------------------------
நேற்றுச் சொன்ன முதல் கதைக்கும் இதுதான் பதில்.

”நீ யாருக்காகச் சம்பாதிக்கின்றாயோ, அவர்கள் உன்னுடைய சம்பாத்தியத் திறமையையோ அல்லது அல்லது அதில் உள்ள வலிகளையோ புரிந்து கொள்ளாமல் நடக்கத் துவங்கினால், நீ சம்பாதிப்பதை நிறுத்திவிட வேண்டும். நன்றி, விசுவாசம் இல்லாத இவர்களுக்கா இத்தனை நாட்கள் பாடு பட்டோம் என்று நினைக்க வேண்டும். உன்னைச் சுற்றியுள்ள மனிதர்கள் இரண்டாகத் தெரிவார்கள். அவர்களுடைய உண்மையான உருவம் தெரியும். மனதில் கசப்பு உண்டாகும். அந்த நிலையில், சம்பாதிப்பதை நிறுத்திவிட்டு, சேர்த்து வைத்த பணத்தை உன் கடைசிக் கால பாதுகாப்பிற்காக ஒரு அளவு பணத்தை நிறுத்திக் கொண்டு விட்டு, மற்றவற்றை அறவழிகளில் செலவழிக்க வேண்டும். ஏழை, எளிய மக்களுக்கு, கல்வி, மற்றும் திருமணங்களுக்குப் பண உதவி செய்ய வேண்டும். கோயில் திருப்பணிகளுக்குக் கொடுக்க வேண்டும். அன்ன தானங்கள் செய்ய வேண்டும். ஒரு மனத் திருப்தி உண்டாகும். அந்த மனத் திருப்திதான் உன்னுடைய வாழ்க்கையின் கடைசி அத்தியாயங்களில் உனக்கு உறுதுணையாக இருக்கும்!

ஆக இரண்டு வெவ்வேறு கதைகளுக்கும் முடிவு ஒன்றுதான்.
ஒரே மனிதன் இரண்டாகத் தெரிவதும் நடக்கும். அனைவரின் வாழ்விலும் நடக்காவிட்டாலும், 75% மனிதர்களின் வாழ்வில் நடக்கும். நடக்கும்போது இந்தக் கதைகளை நினைத்துக்கொள்ளுங்கள்

அன்புடன்
வாத்தியார்

==========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

20 comments:

  1. வணக்கம் வாத்தியார் ,

    நல்ல கருத்து ,

    இது போன்ற மனவள கதைகளை நீங்கள் எழுதலாம்.

    .

    ReplyDelete
  2. Repected Sir
    Never expected this answer. Really good one, liked both...

    The only problem is when your wife herself does not recognize the effort and pain in your work and you have a baby with you :)...

    ReplyDelete
  3. சிறந்த பகிர்வு

    ReplyDelete
  4. இளைஞர்களுக்கு ஏற்ற வண்ணம் ஸ்மால், லார்ஜ் என்று சுவையாக எழுதுவதுதான் உங்கள் வெற்றிக்குக் காரணம். நல்ல பதிவுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  5. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ..நிதர்சனமான உண்மை... என்று தான் பெற்றது ,சுற்றத்தார்,உடனிரிப்போரின் .மறு முகம் தெரிகிறதோ?? அன்று நிறுத்திவிட வேண்டும் ... மிக்க சரி.. வாழ்க்கைக்கு தேவையான முத்தான கருத்து .. நன்றி அய்யா ..sn,ganapathi..

    ReplyDelete
  6. Nalla message in likeable way.
    kindly post similar stories more sir. Enjoyed reading.
    World is running on that small appreciation from the clos circle. every time, if we appreciate the food, Wife feels happy and we get good food with love. If you start criticizing, then thats the end of good food.

    ReplyDelete
  7. Hello Sir,

    Happy to see you back. How are you now?

    Really never expected this climax of the story.
    we must know when to stop if we start doing anything in the life. I got this message.

    Thank you...

    ReplyDelete
  8. ////Blogger V.C.Arunchand said...
    வணக்கம் வாத்தியார் ,
    நல்ல கருத்து ,
    இது போன்ற மனவள கதைகளை நீங்கள் எழுதலாம்./////

    நல்லது. உங்களது விருப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முடிந்தவரை எழுதுகிறேன்

    ReplyDelete
  9. /////Blogger Dallas Kannan said...
    Repected Sir
    Never expected this answer. Really good one, liked both...
    The only problem is when your wife herself does not recognize the effort and pain in your work and you have a baby with you :)...//////

    யாராக இருந்தாலும் அவர்களுக்கு உணர்த்தும் காலம் பின் ஒரு நாள் வரும் நண்பரே!

    ReplyDelete
  10. /////Blogger Yarlpavanan Kasirajalingam said...
    சிறந்த பகிர்வு/////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  11. ////Blogger kmr.krishnan said...
    இளைஞர்களுக்கு ஏற்ற வண்ணம் ஸ்மால், லார்ஜ் என்று சுவையாக எழுதுவதுதான் உங்கள் வெற்றிக்குக் காரணம். நல்ல பதிவுக்கு நன்றி ஐயா!/////

    என் பதிவுகளை எல்லா வயதினரும் படிக்கின்றார்கள். ஆகவே தனிப்பட்டு யாருக்காகவும் நான் எழுதுவதில்லை. நடை பழகிவிட்டது! சுவாரசியத்திற்காக அவ்வாறு எழுத வேண்டியதாக உள்ளது. நன்றி!

    ReplyDelete
  12. /////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ..நிதர்சனமான உண்மை... என்று தான் பெற்றது ,சுற்றத்தார்,உடனிரிப்போரின் .மறு முகம் தெரிகிறதோ?? அன்று நிறுத்திவிட வேண்டும் ... மிக்க சரி.. வாழ்க்கைக்கு தேவையான முத்தான கருத்து .. நன்றி அய்யா ..sn,ganapathi../////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. /////Blogger bg said...
    நல்ல பாடம்.////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. ////Blogger Ashok said...
    Sir,
    Good learnings !
    Cheers !!/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. /////Blogger Karthikraja K said...
    Nalla message in likeable way.
    kindly post similar stories more sir. Enjoyed reading.
    World is running on that small appreciation from the clos circle. every time, if we appreciate the food, Wife feels happy and we get good food with love. If you start criticizing, then thats the end of good food./////

    அதே உலகத்தால் காயப்படும்போது செய்ய வேண்டியதைத்தான் கட்டுரையில் சொல்லியுள்ளேன். நன்றி!

    ReplyDelete
  16. //////Blogger Prakash Kumar said...
    Hello Sir,
    Happy to see you back. How are you now?
    Really never expected this climax of the story.
    we must know when to stop if we start doing anything in the life. I got this message.
    Thank you.../////

    உங்களின் புரிந்துணர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. எப்படி முடிக்கப்போகிறீர்கள் என்று ஆவலுடன் படித்தேன், கடைசியில் செம ட்விஸ்ட். எப்படி இதுமாதிரி யோசிக்கிறீர்கள்? அருமை.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com