20.6.14

நில்லாத இளமையும் நிலையாத யாக்கையும்!

 
நில்லாத இளமையும் நிலையாத யாக்கையும்!

யாக்கை என்பது உடம்பைக் குறிக்கும் (அதன் பொருள் அறியாதவர்களுக்காகக் குறிப்பிட்டுள்ளேன்)

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள் 

அன்புடன்,
வாத்தியார்

------------------------------------------------
பழநி மலை முருகா பழம் நீ திருக்குமரா
பழம் ஒன்று எந்தனுக்கு தா
ஞான பழம் ஒன்று எந்தனுக்கு தா... முருகா ...
(பழநி மலை)

இளமை நில்லாது யாக்கை நிலையாது
வளமையோ செல்வமோ நலமொன்றும் தாராது
நிலமை இதுவாக தலைமைப் பொருளாக
நிம்மதியை எந்தனுக்கு தா ... முருகா ...
(பழநி மலை)

உளநாள் ஒவ்வொன்றும் உன் திருப்புகழ் பாடி
உண்மைப் பொருளாக உந்தனையே நாடி
சிலநாள் வாழ்ந்தாளும் செம்மையையே தேடி
செந்தமிழே அன்பே நீயும் நானும் கூடி

மகிழ்ந்திட வரம் ஒன்று தா - மனம்
மகிழ்ந்திட வரம் ஒன்று தா...முருகா ...
(பழநிமலை).


'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=============================================

6 comments:

  1. முருகா..
    முருகா..

    ///உளநாள் ஒவ்வொன்றும் உன் திருப்புகழ் பாடி
    உண்மைப் பொருளாக உந்தனையே நாடி ..///

    உள்ளத்தை தொடும் வரிகள்

    ReplyDelete
  2. /////Blogger வேப்பிலை said...
    முருகா..
    முருகா..
    ///உளநாள் ஒவ்வொன்றும் உன் திருப்புகழ் பாடி
    உண்மைப் பொருளாக உந்தனையே நாடி ..///
    உள்ளத்தை தொடும் வரிகள்///

    உருவாய்
    அருவாய்
    உளதாய்
    இலதாய்
    வருவாய்
    அருள்வாய்
    குகனே!

    ReplyDelete
  3. சீர்காழியின் பாடல்களிலேயே மிகவும் விரும்பும் பாடல் இது.பதிவிட்டதற்கு
    மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
  4. சிறந்த பாடல் பகிர்வு

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com