16.6.14

Astrology: பெயர்ச்சிப் பலன்கள்!

 
 குரு பகவான்

Astrology: பெயர்ச்சிப் பலன்கள்!

பெயர்ச்சிப் பலன்களைப் படித்துவிட்டுத் தளர்ச்சி ஆகிவிடாதீர்கள்.

ஆனி மாதம் 5ஆம் தேதி வியாழக்கிழமை (19.6.2014) அன்று காலை 9 மணிக்கு குரு பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குக் குடி பெயருகிறார். இந்த வீட்டில் இன்னும் ஒரு ஆண்டு காலம் இருப்பார். குரு பகவானுக்கு அது உச்ச வீடு என்பதால் அனைவருக்கும் நன்மையானதாகவே இருக்கும். அது பொதுப்பலன்.

உங்களுடைய அடிப்படை ஜாதகம் நன்றாக இருந்தாலும், அல்லது உங்களுடைய ஜாதகத்தில் நன்மையான திசாபுக்திகள் நடந்து கொண்டிருந்தாலும் இது போன்ற பெயர்ச்சிகளால் உங்களுக்குப் பெரிய பாதிப்பு ஒன்றும் இருக்காது.

குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெறுவதும். அங்கே ஒரு ஆண்டு காலம் இருப்பதும் கீழ்க்கண்ட ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மையானதாகும்!

1. மிதுன ராசி – 2ல் குரு
2. கன்னி ராசி - 11ல் குரு
3. விருச்சிக ராசி - 9ல் குரு
4. மகர ராசி - 7ல் குரு

ஆகிய மேலே குறிப்பிட்டுள்ள நான்கு ராசிக்காரர்களும் அதிகமான நன்மைகளைப் பெறுவார்கள்.

1. கடக ராசி - 1ல் குரு (ஜென்மத்தில் குரு)
2.ரிஷப ராசி - 3ல் குரு
3.கும்ப ராசி - 6ல் குரு
4.தனுசு ராசி - 8ல் குரு
5.சிம்ம ராசி - 12ல் குரு

ஆகிய இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கும் தீமையான பலன்களே அதிகமாக இருக்கும். தடைகள், தாமதங்கள் அலைச்சல்கள், அவதிகள் அதிகமாக இருக்கும்

1.மேஷ ராசி - 4ல் குரு
2.துலாம் ராசி - 10ல் குரு

ஆகிய இந்த இரண்டு ராசிக்காரர்களுக்கும் ஓரளவு நன்மையானதாக இருக்கும்.

3. மீன ராசி - 5ல் குரு (அஷ்டமச் சனியும் நடை பெறுவதால்) இந்த ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதிக்குப் பிறகு, சனி இடம் மாறிய பிறகு நன்மைகள் உண்டாகும்.

நன்மை என்றால் என்ன?

நன்மை என்பது ஆளாளுக்கு, வயதிற்கு வயது, பொருளாதார நிலைக்குத் தகுந்தது (That is status and age of the life) போல மாறுபடும். திருமணம் கூடிவருதல், இடம்,வீடு வாங்குதல், நல்ல வேலை கிடைத்தல், வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு, பண வரவு, நோய்த் தொல்லை நீங்குதல், குடும்ப ஒற்றுமை, குழப்பங்கள் நீங்குதல், புகழ், செல்வாக்குக் கிடைத்தல், அலைச்சலின்மை. காரிய சித்தி, மன நிம்மதி போன்று பல மேட்டர்கள் நன்மையின் கீழ் வரும். கஷ்டங்கள் தீரும். மன மகிழ்ச்சி உண்டாகும் என்று ஒரே வரியில் சொல்லலாம்

இந்தியாவின் ஜனத்தொகை 120 கோடிகள். சராசரியாக ஒரு ராசிக்குப் பத்துக் கோடி மக்கள். ஒரு ராசிக்கு உரிய பலன் பொதுப்பலன். அந்த ராசிக்கு உரிய பத்துக் கோடிமக்களுக்கும் எப்படிப் பொருந்தும்?

இரண்டாம் வீட்டிற்கு வரும் குரு திருமணத்தை நடத்திவைப்பார் என்பது பொது விதி.திருமணம் ஆகாமல் அவதிப்பட்டவர்களுக்கு, இந்தப் பெயர்ச்சியினால் உங்களுக்குத் திருமணம் ஆகும் என்று கூறலாம். அதேபலன் திருமணமானவர்களுக்கு எப்படிப் பொருந்தும்?

நீங்கள் வீடு வாங்குவீர்கள் என்று அதற்கு வாய்ப்பு உள்ளவர்களுக்குப் பலன் பொருந்தும்.  அன்றாடக் கைக்கூலியில் கஷ்டப்படுபவருக்கு எப்படிப் பொருந்தும்?

ஆகவே நன்மையான பலன் என்பதை, அது என்னவாக இருக்கும் என்று நோண்டிக் கொண்டு இருக்காமல், அதன் போக்கிலேயே விட்டுவிடுங்கள்.
நன்மைகள் தானாகவே வரும். வந்த பிறகு தெரிந்துகொள்ளுங்கள்.

”சார், அதெல்லாம் இருகட்டும் எங்களுக்கு  ராசிகள் வாரியாக மாற்றத்திற்கான பலனைச் சொல்லுங்கள்”  என்கிறீர்களா? கேலக்சி வகுப்பில் பதிவிடலாம் என்று உள்ளேன். தினமும் 3 ராசிகள்.என்ற கணக்கில் அங்கே இன்னும் இரண்டு நாட்களுக்குள் பதிவாகும். எழுதிப் பதிவிட வேண்டும் சாமிகளா! அதற்குத்தான் அந்த 2 நாட்கள் அவகாசம்!
-------------------------
உங்களுக்கு நன்மையான தசா புத்திகள் நடைபெற்றுக் கொண்டிருந்தால், அதுவே போதும். இந்தக் கோள்சாரங்கள், கோச்சாரப் பலன்கள் பெரிய பாதிப்புக்களை, அது நன்மையோ அல்லது தீமையோ உண்டாக்காது. அதை மனதில் வையுங்கள்

அன்புடன்
வாத்தியார்

-----------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

19 comments:

  1. குருப் பெயர்ச்சி பலன்கள் சுருக்கமாகவும் பளிச்சென்றும் உள்ளது.இந்த அளவு தெரிந்தால் போதுமானது.

    குரு வரும் இடத்தினை விட பார்வைக்குத்தான் அதிகபலன் என்பார்களே. அப்படிப் பார்த்தால் கடகத்திற்கு ஜன்ம குருவாக வருபவர் 5,7,9ஐப் பார்ப்பது நல்லதுதானே! குழந்தைகள், மனைவி, பாக்கியம்/தந்தையால் நலந்தானே ஏற்படவேண்டும்?

    'ஆனால் ஜன்ம ராமர் வனத்திலே'= தந்தை வ்னத்திற்குபோகச் சொன்னதும், அதனால் அவரைப் பிரிந்ததும், மனைவியைப் பிரிந்ததும், பல கஷ்டங்களும் ஸ்ரீராமர் ஏன் அனுபவித்தார்?

    ReplyDelete
  2. இறைவன் துணை நிற்பதால்
    இந்த கிரக பெயர்சிகளை

    பொருட்படுத்துவதில்லை..
    பொறுமையான மனோபாவத்தில்...

    ஆசு அறும் அவை நல்ல நல்ல
    அடியார் அவர்க்க மிகவே என்பது

    சம்பந்த பெருமான் திருவாக்கல்லவா
    சகலருக்கும் அது பொருந்துமல்லவா

    ReplyDelete
  3. மதிப்பிற்குரிய ஐயா !!!

    நான் முன்பொருமுறை கூறியது போல நீங்கள் சமிபகாலமாக பதிவிடும் அனைத்து புதிர் கேள்வி பதில் பகுதிகளில் பங்கெடுத்துளேன். இனியாவது galaxy வகுப்பில் சேர எனக்கு தகுதி வந்துவிட்டதா ஐயா ?

    சிவச்சந்திரன்.பா.

    ReplyDelete
  4. Sir,

    Thanks for the oneline short & sweet guru peyarchi predictions. I request you to answer a general question.கோட்சார குருவின் பார்வை ஜாதகத்தில் ராசிக்கட்டத்தில் உள்ள கிரகங்களின் மீது படியுமா?

    Few days before, I accompanied my friend while he went to consult an Astrologer. He had a bad Rahu dasa & suffers from some eye related problem which began from ராகு தசை சந்திர புக்தி, which did not become normal till now(குரு தசை புதன் புக்தி). The Astrologer held the position of afflicted Moon in 2'nd house from lagna to be responsible for this. However he told that there was no problem with current புதன் புக்தி and added that as கோட்சார குரு will aspect Moon in second house, this problem will get over in last 3 months of this dasa bukthi.

    ReplyDelete
  5. ayya,

    vaakkiyapadi, guru peyarchi 13/06/2014 nadandhadhu. Thaangal idhai indha peyarchiyai thirukkanithappadi padhivittulleergal endru ninikkiren. Idharkku edhavadhu mukkiya kaaranam ulladha? En endraal, idharkku munbu, thaangal padhivitta sanippeyarchi matrum tamizh varudappirappu vaakkiyappadi irundhadhu. Thavaru irundhaal mannikkavum.

    Anbudan,

    Mu.Prakaash.

    ReplyDelete
  6. கடக இராசிக்கு எப்போது விடிவு? 7.5 சனி முடிந்து 3ல் (கன்னியில்) சனி வந்ததும் விடிவு வரும் என்று காத்திருந்தவனுக்கு, இடியாக இறங்கியது வேதை பற்றிய தகவல். அதாவது சனி 3ல் இருக்கும் போது ஏற்பட இருக்கும் நற்பலன்களை 12ல் இருக்கும் கிரகம், அது சூரியனாக இல்லாத பட்சத்தில், தடுத்து விடுமாம். இந்த வேதை பற்றி வாத்தியார் எழுதினால் நன்றாக இருக்கும். அதோடு அஷ்டம குரு சற்று காலம் படுத்தினார். நேரம் அவ்வளவு நன்றாக இல்லை என்பதே உண்மை. சரி, கேது 12ல் இருந்து மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு 11க்கு (இடபத்திற்கு) செல்லும் நேரத்தில், குரு 9ல் இருந்து 10ம் இடத்திற்கு பெயர்ந்தார். சுமாராக இருந்த நேரம் மோசமானது. 6 மாதங்களில் சனியும் 4ம் இடத்திற்கு வந்து விட்டார். படு மோசமானது. 11ல் குரு இருந்த காலம், அதுவும் வக்கிரம் அடைவதற்கு முன் மட்டும் ஒரு ஆறு மாத காலம், சற்று ஆறுதலாக இருந்தது. ஆக, சனி மிதுனத்திற்கு பெயர்ந்த காலம் முதலாக கடக இராசிக்கு மிக நல்ல நேரம் வந்ததாக தெரியவில்லை. இடபத்தில் சனியும் குருவும் சேர்ந்து இருந்த அந்த ஓராண்டு (2000ல் இருந்து 2001 வரை)மிக நன்றாக இருந்தது. கேதுவும் 6ல் இருக்க அது ஒரு கனாக்காலமாக இருந்தது. இனி எப்போது அப்படி ஒரு பொற்காலம் வருமோ?

    வாத்தியார் கூறுவது போல தசா புக்திகள் தான் கோச்சாரத்தை விட முக்கியம் என்பது அனுபவத்தில் உணர்ந்த விஷயம். 7.5 சனி காலத்தில் எனக்கு கேது தசையும் நடந்தது. நன்றாக சாத்தி ஒரு மூலையில் உட்கார வைத்தார் கேது பகவான். உழைப்பு அனைத்தும் வீணானது. சுக்கிர தசை வந்தாலும் சுய புக்தியில் ஒன்றும் பெரிதாக நடக்கவில்லை. சூரிய புக்தி வேலை மாற்றம் வாங்கிக் கொடுத்தது, ஆனால் குறைவான ஊதியத்தில். சந்திர புக்தி முழுக்க ஒரு சோர்வான நிலையும், கவலையும், இனம் புரியாத அச்சங்களுமே வியாபித்திருக்கின்றன. அடுத்து வரும் செவ்வாய் புக்தி எப்படி இருக்குமோ? எல்லாம் இறைவன் விட்ட வழி.

    ReplyDelete
  7. //அதேபலன் திருமணமானவர்களுக்கு எப்படிப் பொருந்தும்?//

    இரண்டாவது திருமணம் செய்பவர்களுக்கு அல்லது செய்ய விரும்புபவர்களுக்காவது இது பொருந்தும். (Just joking)

    எனக்கு ஜன்ம குருவில்தான் திருமணம் நடந்தது. ஜன்ம குருவில்தான் குழந்தை பிறந்தது. இந்த பலன்களை குரு பகவான் தன் பார்வையின் மூலம் செய்தார் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. அடுத்து உரிய தசா புத்தி வந்ததும் ஒரு காரணம் எனலாம்.

    ReplyDelete
  8. //கோட்சார குருவின் பார்வை ஜாதகத்தில் ராசிக்கட்டத்தில் உள்ள கிரகங்களின் மீது படியுமா?//

    நாடி முறையில் ஜோதிடம் பார்ப்பவர்கள் இது போன்று சொல்வதுண்டு. உதாரணமாக ஜனன ஜாதகத்தில் உள்ள குருவை கோச்சார சனி பார்த்தால் குழந்தைகளுக்கு கெடுதல். இப்படி சொல்வார்கள். இது ஒரு தனி subject. பெரிய subject.

    ReplyDelete
  9. அய்யா அவர்களுக்கு வணக்கம்,குரு பெயர்ச்சி பலன்கள் லக்னத்தை வைத்து பலன் பார்க்கலாம்?

    ReplyDelete
  10. /////Blogger kmr.krishnan said...
    குருப் பெயர்ச்சி பலன்கள் சுருக்கமாகவும் பளிச்சென்றும் உள்ளது.இந்த அளவு தெரிந்தால் போதுமானது.
    குரு வரும் இடத்தினை விட பார்வைக்குத்தான் அதிகபலன் என்பார்களே. அப்படிப் பார்த்தால் கடகத்திற்கு ஜன்ம குருவாக வருபவர் 5,7,9ஐப் பார்ப்பது நல்லதுதானே! குழந்தைகள், மனைவி, பாக்கியம்/தந்தையால் நலந்தானே ஏற்படவேண்டும்?
    'ஆனால் ஜன்ம ராமர் வனத்திலே'= தந்தை வனத்திற்குபோகச் சொன்னதும், அதனால் அவரைப் பிரிந்ததும், மனைவியைப் பிரிந்ததும், பல கஷ்டங்களும் ஸ்ரீராமர் ஏன் அனுபவித்தார்?/////

    அதை ஒரு நாள் விரிவாக அலசுவோம். பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  11. ////Blogger வேப்பிலை said...
    இறைவன் துணை நிற்பதால்
    இந்த கிரக பெயர்சிகளை
    பொருட்படுத்துவதில்லை..
    பொறுமையான மனோபாவத்தில்...
    ஆசு அறும் அவை நல்ல நல்ல
    அடியார் அவர்க்க மிகவே என்பது
    சம்பந்த பெருமான் திருவாக்கல்லவா
    சகலருக்கும் அது பொருந்துமல்லவா/////

    இறைவனிடம் சரணடைந்து விட்டால் போதும். ஜாதகத்தையே பார்க்கத் தேவையில்லை!

    ReplyDelete
  12. ////Blogger Sivachandran Balasubramaniam said...
    மதிப்பிற்குரிய ஐயா !!!
    நான் முன்பொருமுறை கூறியது போல நீங்கள் சமிபகாலமாக பதிவிடும் அனைத்து புதிர் கேள்வி பதில் பகுதிகளில் பங்கெடுத்துளேன். இனியாவது galaxy வகுப்பில் சேர எனக்கு தகுதி வந்துவிட்டதா ஐயா ?
    சிவச்சந்திரன்.பா.////

    மின்னஞ்சல் அனுப்புங்கள். classroom2007@gmail.com என்பது மின்னஞ்சல் முகவரி. வலைப் பதிவின் முகப்பில் இருக்கிறதே சாமி!

    ReplyDelete
  13. ////Blogger Arul Murugan. S said...
    Sir,
    Thanks for the oneline short & sweet guru peyarchi predictions. I request you to answer a general question.கோட்சார குருவின் பார்வை ஜாதகத்தில் ராசிக்கட்டத்தில் உள்ள கிரகங்களின் மீது படியுமா?
    Few days before, I accompanied my friend while he went to consult an Astrologer. He had a bad Rahu dasa & suffers from some eye related problem which began from ராகு தசை சந்திர புக்தி, which did not become normal till now(குரு தசை புதன் புக்தி). The Astrologer held the position of afflicted Moon in 2'nd house from lagna to be responsible for this. However he told that there was no problem with current புதன் புக்தி and added that as கோட்சார குரு will aspect Moon in second house, this problem will get over in last 3 months of this dasa bukthi.////

    ராசியின் மீது படும்பார்வை, அங்கே உள்ள கிரகங்களின் மீதும் படியும்!

    ReplyDelete
  14. /////Blogger Muthukrishnan Prakash said...
    ayya,
    vaakkiyapadi, guru peyarchi 13/06/2014 nadandhadhu. Thaangal idhai indha peyarchiyai thirukkanithappadi padhivittulleergal endru ninikkiren. Idharkku edhavadhu mukkiya kaaranam ulladha? En endraal, idharkku munbu, thaangal padhivitta sanippeyarchi matrum tamizh varudappirappu vaakkiyappadi irundhadhu. Thavaru irundhaal mannikkavum.
    Anbudan,
    Mu.Prakaash./////

    ஆலங்குடியில் உள்ள குருபகவான் ஆலயச் செய்திப்படி, அந்தத் தேதியைக் குறிப்பிட்டுள்ளேன்!

    ReplyDelete
  15. ////Blogger thozhar pandian said...
    கடக இராசிக்கு எப்போது விடிவு? 7.5 சனி முடிந்து 3ல் (கன்னியில்) சனி வந்ததும் விடிவு வரும் என்று காத்திருந்தவனுக்கு, இடியாக இறங்கியது வேதை பற்றிய தகவல். அதாவது சனி 3ல் இருக்கும் போது ஏற்பட இருக்கும் நற்பலன்களை 12ல் இருக்கும் கிரகம், அது சூரியனாக இல்லாத பட்சத்தில், தடுத்து விடுமாம். இந்த வேதை பற்றி வாத்தியார் எழுதினால் நன்றாக இருக்கும். அதோடு அஷ்டம குரு சற்று காலம் படுத்தினார். நேரம் அவ்வளவு நன்றாக இல்லை என்பதே உண்மை. சரி, கேது 12ல் இருந்து மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு 11க்கு (இடபத்திற்கு) செல்லும் நேரத்தில், குரு 9ல் இருந்து 10ம் இடத்திற்கு பெயர்ந்தார். சுமாராக இருந்த நேரம் மோசமானது. 6 மாதங்களில் சனியும் 4ம் இடத்திற்கு வந்து விட்டார். படு மோசமானது. 11ல் குரு இருந்த காலம், அதுவும் வக்கிரம் அடைவதற்கு முன் மட்டும் ஒரு ஆறு மாத காலம், சற்று ஆறுதலாக இருந்தது. ஆக, சனி மிதுனத்திற்கு பெயர்ந்த காலம் முதலாக கடக இராசிக்கு மிக நல்ல நேரம் வந்ததாக தெரியவில்லை. இடபத்தில் சனியும் குருவும் சேர்ந்து இருந்த அந்த ஓராண்டு (2000ல் இருந்து 2001 வரை)மிக நன்றாக இருந்தது. கேதுவும் 6ல் இருக்க அது ஒரு கனாக்காலமாக இருந்தது. இனி எப்போது அப்படி ஒரு பொற்காலம் வருமோ?
    வாத்தியார் கூறுவது போல தசா புக்திகள் தான் கோச்சாரத்தை விட முக்கியம் என்பது அனுபவத்தில் உணர்ந்த விஷயம். 7.5 சனி காலத்தில் எனக்கு கேது தசையும் நடந்தது. நன்றாக சாத்தி ஒரு மூலையில் உட்கார வைத்தார் கேது பகவான். உழைப்பு அனைத்தும் வீணானது. சுக்கிர தசை வந்தாலும் சுய புக்தியில் ஒன்றும் பெரிதாக நடக்கவில்லை. சூரிய புக்தி வேலை மாற்றம் வாங்கிக் கொடுத்தது, ஆனால் குறைவான ஊதியத்தில். சந்திர புக்தி முழுக்க ஒரு சோர்வான நிலையும், கவலையும், இனம் புரியாத அச்சங்களுமே வியாபித்திருக்கின்றன. அடுத்து வரும் செவ்வாய் புக்தி எப்படி இருக்குமோ? எல்லாம் இறைவன் விட்ட வழி./////

    இறைவனிடம் விட்டு விட்டீர்கள் அல்லவா? பிறகு எதற்குக் கவலை. அவர் பார்த்துக்கொள்வார் என்று மன நிம்மதியோடு இருங்கள் பாண்டியரே!

    ReplyDelete
  16. ////Blogger Kirupanandan A said...
    //அதேபலன் திருமணமானவர்களுக்கு எப்படிப் பொருந்தும்?//
    இரண்டாவது திருமணம் செய்பவர்களுக்கு அல்லது செய்ய விரும்புபவர்களுக்காவது இது பொருந்தும். (Just joking)
    எனக்கு ஜன்ம குருவில்தான் திருமணம் நடந்தது. ஜன்ம குருவில்தான் குழந்தை பிறந்தது. இந்த பலன்களை குரு பகவான் தன் பார்வையின் மூலம் செய்தார் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. அடுத்து உரிய தசா புத்தி வந்ததும் ஒரு காரணம் எனலாம்./////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  17. //////Blogger Kirupanandan A said...
    //கோட்சார குருவின் பார்வை ஜாதகத்தில் ராசிக்கட்டத்தில் உள்ள கிரகங்களின் மீது படியுமா?//
    நாடி முறையில் ஜோதிடம் பார்ப்பவர்கள் இது போன்று சொல்வதுண்டு. உதாரணமாக ஜனன ஜாதகத்தில் உள்ள குருவை கோச்சார சனி பார்த்தால் குழந்தைகளுக்கு கெடுதல். இப்படி சொல்வார்கள். இது ஒரு தனி subject. பெரிய subject./////

    உங்களின் கருத்துப்பகிர்விற்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  18. /////Blogger bala subramani said...
    அய்யா அவர்களுக்கு வணக்கம்,குரு பெயர்ச்சி பலன்கள் லக்னத்தை வைத்து பலன் பார்க்கலாம்?/////

    சந்திரன் இருக்கும் ராசியை வைத்துத்தான் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  19. குரு பகவான் கடக இராசிக்கு பெயர்ந்ததும், சனி பகவானின் பார்வை அவருக்கு கிடைக்கிறது. இது அவ்வளவு விசேஷமா என்று தெரியவில்லை. குருவால் கிடைக்க இருக்கும் பலன்களை சனி தடுத்து விடுவார் என்று கொள்ளலாமா? சனி பகவான் நவம்பரில் விருச்சிகத்துக்கு பெயர்ந்ததும், குரு பகவானின் பார்வை அவருக்கு கிடைக்கிறது. இது ஏழரை, அஷ்டம, கண்டக சனி காலம் நடந்து கொண்டிருக்கும் இராசியினருக்கு சற்று ஆறுதலாக இருக்கும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் அதன் பிறகு சில மாதங்களுக்கு குரு பகவான் வக்கிர கதியில் இருப்பார். அப்போது இந்த பார்வை எவ்வளவு தூரம் எடுபடும் என்று தெரியவில்லை.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com