28.3.14

கருணை முகங்கள் ஆறு; கவலை எதற்கு கூறு?

 
 கருணை முகங்கள் ஆறு; கவலை எதற்கு கூறு?

பக்தி மலர்

28.3.2014

கருணை ... முகங்கள் ... ஓராறு
காக்கும் கரங்களோ ... ஈராறு
முருகன் ... வாழும் ... வீடாறு
முகம் பார்த்து ... இரங்க வேறாரு

கந்தன் ...
கருணை ... முகங்கள் ... ஓராறு
துணை என்று ... ஐயனின் வடிவேலை
தொழுவதன்றி வேறென்ன வேலை
வினையை ... தீர்ப்பது ... குகன் வேலை
வேலைப் போற்றுதல் ... நாவின் வேலை

கருணை ... முகங்கள் ... ஓராறு
அடியார்கள் ... அகமே அவன் கோயில்
அன்பே ... ஆலயத் தலைவாயில்
குடியாய் ... இருப்பான் ... குறை தீர்ப்பான்
குமரன் நம் குடியை வாழவைப்பான்

கந்தன் ...
கருணை ... முகங்கள் ... ஓராறு
காக்கும் கரங்களோ ... ஈராறு
முருகன் ... வாழும் ... வீடாறு
முகம் பார்த்து ... இரங்க வேறாரு

- சூலமங்கலம்' சகோதரிகள்
======================================

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

8 comments:

  1. பாடல்கள் கேட்கிறதா?
    பதில்கள் வருகிறதா?

    ReplyDelete
  2. தமிழ்க் கடவுளான முருகனைப் போற்றி நிற்கும் பாடல் வரிகளைக் கண்டு மகிழ்ந்தேன் .மிக்க நன்றி ஐயா
    பகிர்வுக்கு .

    ReplyDelete
  3. ////Blogger வேப்பிலை said...
    முருகா..
    முருகா..////

    கந்தா..
    கதிர்வேலா....
    கார்த்திகேயா.....

    ReplyDelete
  4. ////Blogger வேப்பிலை said...
    பாடல்கள் கேட்கிறதா?
    பதில்கள் வருகிறதா?////

    வராமல் இருக்குமா? கேபதற்குத்தான் நேரமில்லை. நேரம் இருக்கும்போது கேட்கிறேன் சுவாமி!

    ReplyDelete
  5. ///Blogger அம்பாளடியாள் வலைத்தளம் said...
    தமிழ்க் கடவுளான முருகனைப் போற்றி நிற்கும் பாடல் வரிகளைக் கண்டு மகிழ்ந்தேன் .மிக்க நன்றி ஐயா
    பகிர்வுக்கு////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  6. ////Blogger Maaya kanna said...
    Yes Sir!/////

    Thanks my dear maayakkannan

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com