26.3.14

Astrology: என்நாளும் வாழ்விலே கண்ணில்லா நோய்களே!

 
Astrology: என்நாளும் வாழ்விலே கண்ணில்லா நோய்களே!

பாட்டைக் கண்டு பயப்படாதீர்கள். ”எந்நாளும் வாழ்விலே கண்ணான காதலே!” என்ற வரிகளைத்தான் பதிவிற்கு ஏற்றாற்போல மாற்றிக் கொடுத்துள்ளேன்!

Quiz No.49: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

தொடர் - பகுதி நாற்பத்தி ஒன்பது

26.3.2014

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு ஒரே ஒரு கேள்வி தான். அந்தக் கேள்விக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம்.


ஜாதகர் பலவிதமான நோய்களால் மருத்துவமனைக்கு அலையும்படி நேரிட்டது. ஜாதகரின் நோய்களுக்கு ஜாதகப்படி என்ன காரணம்? நோய்களில் இருந்து மீண்டுவந்தாரா? அவருடைய 6ஆம் வீட்டை வைத்து அலசி எழுதுங்கள். பழத்தை உரித்துக் கொடுத்துவிட்டேன். ஜூஸ் போடுவது மட்டும்தான் உங்கள் வேலை!

அவருடைய நோய்களுக்கு முக்கியமான காரணங்கள் இரண்டு உள்ளன! அவற்றைக் குறிப்பிட்டுப் பதில்களை எழுதினால் மட்டுமே 100 மதிப்பெண்கள் கிடைக்கும்.

வழக்கமாக 2, 11, 4, 7 ஆம் வீடுகளை மட்டுமே அலசி வந்த உங்களுக்கு இன்று வித்தியாசமாக 6ஆம் வீட்டை அலசும் வாய்ப்பைக் கொடுத்துள்ளேன்

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

37 comments:

  1. Respected Sir
    1. Sani in the 6th Place
    2. Mars Looks at 6th place
    3. Laknathipathi and 6th house lord Sukra looks at lakna.
    4. Laknathi pathi is in papakarthari yogam (Sani and Sun/Buthan)
    5. 4 Planets in 8th house and got asthamanam.
    6. He would have born on Molam or Pooradam. The Dasa periods, Kethu/Sukra (6th lord as well) and after that Sun, moon would be bad too.


    Since laknathipathi Sukra looks at his own house from 7th place and Sani is uccham in 6th house, he would have come out of the deceases.

    Looks like it is Mr. Atal Bihari Vajpayee chart. But did not change my answer based on it. Hope I am correct.

    ReplyDelete
  2. லக்னத்திற்கும் ஆறாம் இடத்திகும் பகைவனான, ஆறாம் இடத்தில் அமர்ந்திருக்கும் சனைச்சரனுக்கும் பகைவனான செவ்வாயின் 8ம் பார்வை
    ஆறாம் இடத்தின் மேல் விழுகிறது. லக்னத்திற்கும் ஆறாம் வீட்டிற்கும் உடைய‌
    சுக்கிரன் 7ல் பகை வீட்டில் அமர்ந்து சனி, சூரியனால் சூழப்பட்டது.லக்னத்திற்கு யோககாரகனான சனைச்சரன் ஆறில் மறைந்தது ஆகியவை ஜாதகரை நீண்ட நாள் நோயாளி ஆக்கிவிட்டுள்ளது.

    ஆயுள் காரகனான் சனைச்சரனின் பார்வை ஆயுள் இடமான எட்டாம் வீட்டிற்குக் கிடைப்பதும், எட்டாம் வீட்டிற்கு உரிய குரு தன் சொந்த வீட்டிலேயே அமர்ந்ததும், சுக ஸ்தனமான 4ம் வீட்டிற்கு குரு பார்வை கிடைப்பதும் ஜாதகரை நோயில் இருந்து விடுபட வைத்தது.

    ReplyDelete
  3. மேலும் ஆறாம் வீட்டிற்கு ஆறாம் வீடான மீனத்தில்7,12க்குடைய செவ்வாய் அமர்ந்து 2,5,6 ஆகிய இடங்களைத்தன் பார்வையால் வைத்திருந்ததும் நோய்வாய்ப் படக் காரணம்.கண் நோய், இரத்தக்கொதிப்பு, முடக்கு வாதம் போன்றவை படுத்தும்.

    ReplyDelete
  4. லக்னம் அதிபதி சுக்ரன், 7ல் இருந்து லக்னத்தை பார்ப்பது சிறப்பு.
    6ல் சனி இருப்பது சிறப்பல்ல
    6ம் அதிபதி சுக்ரன், 7ல் இருந்தாலும் பாப கர்தாரி யோகத்தில் சிக்கி உள்ளத்தால், உடல் நிலை பாதிப்பு உண்டு.
    ராசிக்கு 6க்கு உடையவன் 12ல் மறைவு
    12க் உடைய செவ்வாயின் எட்டாம் பார்வை 6ம் வீட்டில் அங்கே உச்ச சனியும். So diseases will be there.
    4th lord sun in 8th house (hidden)

    Disease:-
    Related to Kidney and Respiratory disorder

    Recovery:-
    6ல் சனி உச்சமாக இருப்பதால் நோயில் இருந்து மீண்டு வந்திடுவார் (post operation)

    ReplyDelete
  5. 6ம் வீட்டில் உச்ச சனி. இடப இலக்கினத்திற்கு சனி 9 மற்றும் 10ம் வீட்டிற்கு அதிபர். யோககாரகர். அவர் உச்சம் பெற்றும் 6ல் மறைந்தார். 6ம் வீடு நோய்களை குறிக்கும் வீடு. அங்கே உச்சம் பெற்ற, செவ்வாயின் பார்வை பெற்ற‌ சனி அமர்ந்தது மட்டுமல்லாது உடல்காரகர் சூரிய பகவான் 8ல் மறைந்தார். அதோடு அவர் கிரக யுத்தத்தில் வேறு உள்ளார். உடன் 8ம் வீட்டுக்கார குரு. அமாவாசை திதி போல தெரிகிறது. சூரியனுக்கு சனியின் பார்வையும் உண்டு. இலக்கினாதிபதி சுக்கிரன் பாபகர்த்தாரி யோகத்தில். சுக்கிரன் இலக்கினத்தை தனது பார்வையில் வைத்திருந்தாலும் இவர் 6ம் அதிபதியும் கூட. இந்த காரணங்களினாலே ஜாதகருக்கு நோய்கள் பல வந்தன.

    ReplyDelete
  6. ரிஷப லக்னத்திற்கு பாதகாதிபதியான சனிஸ்வரன் மறையிடமான ஆறாம் இடத்தில அமர்ந்து உச்சம் பெற்று உள்ளான். ஆதலால் பல துன்பத்திற்கு ஜாதகர் ஆளானர் .

    ReplyDelete
  7. QUIZ NO.49 வணக்கம்.
    25th DEC. 1924ம் தேதி மாலை 4.07.01 மணிக்கு மூல நட்சத்திரத்தில் ஜாதகர் பிறந்தார்.

    1. முதல் காரணம்: ஆறாம் அதிபதி பாப‌கர்தாரி யோகத்தில் இருப்பதால் கடுமையான நோய்கள் உண்டானது.

    2. இரண்டாவது காரணம்: ஆறாம் வீட்டு அதிபதி சுக்கிரன் இருக்கும் விருச்சிக வீடு அவனுக்கு பகைவீடு. இது ஜல ராசி. இரு பக்கமும் பாப கிரக‌ங்கள்.

    3. நோய்களிலிருந்து மீள முடியாமல் மரணம் அடைந்து இறைவனடி சேர்ந்தார்.

    ரிஷப லக்கினம் (32 பரல்கள்). லக்கினாதிபதி சுக்கிரன் (6 பரல்கள்) 7ம் வீட்டில். அதே சுக்கிரன் 6ம் வீட்டிற்க்கு அதிபதியும் அவரே.

    7ம் வீட்டில் (19 பரல்கள்-பலவீனம்) இருக்கும் சுக்கிரன் பாபகர்தாரி தோஷத்தில் உள்ளார். சுக்கிரன் இருக்கும் வீடு பகை வீடு விருச்சிகத்தில். அந்த வீட்டிற்க்கு இரு பக்கமும் பாப கிரக‌ங்கள் (ஒரு பக்கம் சனி, மறுபக்கம் சூரியன்). இது ஜல ராசி.

    ஆகையினால் ஜாதகருக்கு முதலில் நீரழிவு நோய் வ‌ந்தது (சுக்கிர தசையில் செவ்வாய் புக்தியில்). பிறகு மூட்டு வலி வந்தது (ராகு தசையில் சனி புக்தியில்) அதன் பிறகு அது புற்று நோய்யாக மாறியது.

    (6ம் வீடுகளில் வரும் நோய்கள், அடிவயிறு, தொடைக்கும் இடுப்பிற்கும் இடைபட்ட பகுதிகள்,எலும்புகள், சதை பகுதி.)

    8ம் வீட்டில் குருவும், பகைவனான புதனும் குருவுடன் சேர்ந்துள்ளான். உடல் காரகன் சூரியன் 8ல் கூட்டு. தேய் பிறை சந்திரனும் 8ல் கூட்டு சேர்ந்துள்ளான்.

    6ம் வீட்டில் அமர்ந்திருக்கும் சனியின் 3ம் பார்வை, 8ம் வீட்டின் மீது. விரையாதிபதி செவ்வாயின் 8ம் பார்வை 6ம் வீட்டில் உள்ள சனியின் மீது.

    இவை எல்லாமுமாக ஒன்று சேர்ந்து ஜாதகனை படுத்தி மரணத்தை எற்படுத்தியது. கடைசியில் ஜாதகன் இறைவனடி சேர்ந்தார்.

    சந்திரசேகரன் சூரியநாராயணன்.

    ReplyDelete
  8. மதிப்பிற்குாிய அய்யா
    ெதாடா் 49, லக்னாதிபதியான சுக்ரன் 6மிட அதிபதியாகவும் 7மிடத்தில் உள்ளாா், இதனால் இவா் ஆண்ைமக்
    கு ைறவு , தீய ்சகவாசத்தால ெதால்ைகளுக்கு ஆளாகுபவா். பூர்வ புண்ணியம ெகட்டுள்ளது, புதன் 8ல் ம ைறந்து அஸ்தமனம் ஆகியுள்ளாா். ரிஷப லக்னத்திற்கு ேயாககாரகனாகிய சனி 6ல் உச்சமாக ் இருந்த ேபாதிலும் ெசவ்வாய் பார் ைவ ெபற்றுள்ளார், இதனால அபாயகரமான ேநாய்கள் உண்டாகும். அடி்ககடி அறு ைவ சிகிச்ைசகளுக்கு ஆளாக ேநாிடும்.

    ReplyDelete
  9. மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.

    இன்றைய புதிருக்கான விடை: 1.பாபகர்த்தாரி யோகத்தில் லக்கினாதிபதி அமர்ந்தது.
    2.ரோக ஸ்தானம் விரயாதிபதி செவ்வாய்யின் பார்வையில்(8ம் பார்வையாக) உள்ளது பாதிப்பான அமைப்பாகும்.

    *ரிஷப லக்கினம்,தனுசு ராசி.லக்கினாதிபதி 7ல் அமர்ந்து லக்கினத்தை தன் பார்வையில் வைத்திருப்பது சிறப்பு.எனினும் பாபகர்த்தாரி யோகத்தில் அமர்ந்து பலகீனமாக இருப்பது குறை.

    *8க்குரிய குரு ஆட்சி பெற்றாலும் அஸ்தங்கம் பெற்று பலமிழந்து அமர்ந்து
    உள்ளார்.

    *2,5க்குரிய புதன்,3க்குரியசந்திரன்,4க்குரிய சூரியன் 8ல் மறைந்து பாதகமாக‌
    அமர்ந்து உள்ளனர்.

    *உச்ச சனி ஆயுளை கொடுத்தாலும் விரயாதிபதி செவ்வாயின் பார்வை அவர் அமர்ந்த 6ம் பாவத்தை பலகீனப்ப‌டுத்தி,நோய் நொடிகளை கொடுத்து
    அவதியை கொடுத்திருப்பார்.


    சரியான விடையினை தெரிந்துகொள்ள ஆவல் ஐயா.

    நன்றி
    ல ரகுபதி

    ReplyDelete
  10. ஐயா வணக்கம்,

    இந்த ஜாதகரின் பலன்களை அறிய நான் மிகவும் ஆவலாக உள்ளேன். ரிஷப லக்நம் 6இல் உச்சம் பெற்ற சனி. 8இல் ஆட்சி பெற்ற குரு... 8-இல் பல்வேறு கிரகங்கள். என் ஜாதகத்தில் இருப்பது போலே உள்ளது. சரி தங்கள் கேள்விக்கு வருகிறேன்.

    6இல் உச்சம் பெற்ற சனி, 12-ம் வீட்டை பலமாக பார்க்கிறார். 12-ம் அதிபதி செவ்வாய் அவர் வீட்டிற்கு 12-இல் & அங்கிருந்து 8-ம் பார்வயாக 6-ஐ பார்க்கிறார். ரிஷப லக்னத்திற்கு மாபெரும் எதிரியான குரு 8-இல் அமர்ந்து 12-ஐ பார்க்கிறார். இதனால் இவர் பல்வேறு நோய்கலுக்கு ஆள்ஆனார்.

    எனக்கு செவ்வாய் உச்சம் பெற்றதால் இதுவரை எந்த நோயும் வரவில்லை என்று தோன்றுகிறது.

    நன்றி.

    ReplyDelete
  11. laknathipathi 7l
    9kum 10kum udaya neelan 6l uchcham
    6ku udayavan 6ku 6l
    6ku udayavan 8m parvaiyaka neelanai parkiraan.
    8l guru akshi
    jathakar amavasai otti piranthavar

    ReplyDelete
  12. ஜாதகத்தில் சுகஸ்தனதிபதி குரு (4 ஆம் இடத்து அதிபதி )அஸ்தமனம் மற்றும் பனிரெண்டாம் அதிபதி அதற்கு 12 ஆம் இடத்தில்-சனி ஆறாம் இடத்தில் உச்சம்(standing power)உள்ளது ஆதலால் மீண்டும் வந்தார்.

    ReplyDelete
  13. சனி 6ஆம் வீட்டில் அமர்ந்து செவாய்யின் 8ஆம் பார்வை பெற்றிருப்பது.6ஆம் அதிபதி 7இல் அமர்வு .இர்ண்டுமே தகாத நோய்களை தந்து அருவை சிகிச்சைக்கு வழி வகுக்கும்.

    ReplyDelete
  14. வணக்கம் குரு.
    இது நமது கேலக்சி 2007 வகுப்பறையில் நடத்தபெற்ற பாடம். ஆகையால் நான் விடையை தெறிந்துகொண்டே கலந்துகொள்ள விருப்பம் இல்லை. மன்னிக்கவும்.
    நன்றி.
    செல்வம்

    ReplyDelete
  15. 1.6 il irukum Saniyai Chevvai Parthal udampu ketu vidum.Pala viyathigal undagum.Adikadi Operation seiyumpadi nerum.

    2.Udalkaragan Suriyan + Mana Karagan Chandiran 8 il+atchi petra 8am athipathiyin Kootani
    Viyathigal ulla Udampu.Avargal methu Saniyin Parvai.

    He would have never recovered from his illness.

    3.Lagnathipathi (6am athipathi)in Pabakathiri yogam.

    ReplyDelete
  16. Dear sir:

    My Answer for Quiz no. 49:-

    Reasons are,

    1. Sani is in 6th house, with 8th aspect of Mars from 11th house(12th lord). (The Native might have got operation)

    2.Rishaba lakna (9,10 house) yogakarn "Sani" is occupied 6th house. Even though this is not good position.
    But also he is "Life karakan" "Utcham". Hence The native might lived long.

    So definitely he recovered from disease

    ReplyDelete
  17. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

    புதிர் பகுதி 49 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி, இப்போது 90 வயதாகும் இந்த ஜாதகருக்கு,
    லக்னாதிபதியும், 6ம் அதிபதியுமான சுக்கிரன் 7ல் நின்று லக்கினத்தைப் பார்ப்பதால் ஜாதகர் வியாதியால் அவதிப் பட்டிருப்பார்.

    அத்துடன் 6ல் இருக்கும் உச்ச சனி, செவ்வாயின் 8ம் பார்வையில் இருப்பதால் நரம்பு சம்பந்தமான வியாதிகளாலும், உஷ்ண சமபந்தமான வியாதிகளாலும் பாதிக்கப்பட்டிருப்பார்.

    நோய் குணமாவதற்கு காரணமான 5ம் அதிபதி புதனும், 11ம் அதிபதி குருவும் 8ல் மறைந்து, சூரியனால் அஸ்தங்கம் அடைந்து விட்டதால் இவர் நோயினால் அவதிப்பட நேரிட்டது.

    5ம் அதிபதியான புதன் மற்றும் 11ம் அதிபதி குருவின் தசாபுக்திகளில் இவருடைய நோய்கள் குணமாகி இருக்கும். அதாவது 1998ல் குரு திசை புதன் புக்தியில் குணமாகி இருப்பார்.

    ReplyDelete
  18. மதிப்பிற்குற்ய ஐயா,
    புதிர் தொடர் - பகுதி நாற்பத்தி ஒன்பதிற்கான பதில்

    1. 6 ஆம் அதிபதி பாபகர்தாரி யோகத்தில்.(சனி மற்றும் சூரியனுக்கு இடையில்)
    2. 6 ஆம் வீட்டின் மேல் செவ்வாயின் 8 ஆம் பார்வை.6 ஆம் வீட்டு மற்றும் 6 ஆம் வீட்டின் அதிபதியின்
    மேல் சுபகிரகணங்களின் பார்வை எதுவும் இல்லை.
    சனி உச்சம் மற்றும் 6 பரல்கள் இக்காரணங்களால் நோய்களில் இருந்து மீண்டுவந்து இருப்பார்.

    இப்படிக்கு
    மு.சாந்தி

    ReplyDelete
  19. நோய்க்கான காரணம்
    ரிஷப லக்கினம் – யோகாதிபதி சனி ஆறில்.
    சரியான இடம் அல்ல.அதிர்ஷ்டம் குறைவு.
    6 இல் சனி உச்சம்.+ ஆறாம் அதிபதி சுக்கிரன் எழில்
    + ஆறாம் அதிபதி பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கி உள்ளார்.
    உடல் காரகன் சூரியனுக்கு 12 இல் சுக்கிரன்
    சூரியன் செவ்வாய் கேந்திர அமைப்புகளில் உள்ளனர்.
    வெற்றி பெற காரணம்
    எட்டில் குரு ஆட்சி.
    8 -விபரீத ராஜ யோகம்+ சசி மங்கள யோகமும் + புத ஆதித்ய யோகமும் உள்ளது.
    சனி பார்வை உள்ளது.

    11 இல் செவ்வாய் இருப்பதால் அவர் வெற்றி பெற வாய்ப்பு உண்டு.

    ReplyDelete
  20. Dear Sir,

    6th place sani , 6th lord venus is in 7th. Mars aspects sani, creates blood related problems.

    6th lord venus is hemmed between malefic planets.

    lagna lord also venus. lagna lord and 6th lord is same. hence the person had experienced disease to the total life. He died because of diseases.

    He was unable to retrieve from diseases.

    Thanking you,

    ReplyDelete
  21. வணக்கம் ஐயா , பாப தோஷத்தில் உள்ள 6 மற்றும் லக்னாதிபதி , 12 அதிபதி செவ்வாய் பார்வையில் உள்ள வர்க்கபலம் மிகுந்த ஆறாமிடம்., ஆறாமிட சனி பார்வையில் இருக்கும் அஷ்தங்க சந்திரன் , புதன் ,குரு . இவர் நோய்வாய்பட்டு குணமடைவார்., சந்திரன் பாதிக்கப்பப்ட்டிருப்ப்பதாலும் செவ்வாய் சுய பரல் குறைந்திருப்பதாலும் ரத்தம்,நரம்பு சம்பந்தமான நோயால் பாதிக்கப்படுவார்

    ReplyDelete
  22. ரிஷப லக்னம், தனுசு ராசி ஜாதகர்.

    1.லக்னாதிபதியும் 6மிடத்துக்கு அதிபதியுமான‌ சுக்கிரன் 7ல் அமர்ந்து பாபகர்த்தாரியின் பிடியில் உள்ளார்.
    2.உடல் காரகனான சூரியன் 8ல் மறைந்து அஷ்டமாதிபதியுடன் கூட்டு வைத்து உள்ளார்.மேலும் 6ல் உள்ள சனியின் 3ம் பார்வையினாலும் வலுவிழந்து உள்ளார்.

    இவை எல்லாம் சேர்ந்து ஜாதகரை நோயின் பிடியில் தள்ளி அவரை மருத்துவ மனைக்கும், வீட்டிற்கும் மாறி மாறி அலைய‌ விட்டன.

    சரி, ஜாதகர் நோய்களின் பிடியில் இருந்து மீண்டு முழுவதும் குணமாகி வந்தாரா?

    ஜாதகருக்கு சிறு வயது முதல் வந்த தசா புக்திகள் சாதகமானதாக இல்லை.

    ஆனால் லக்னம் அதன் அதிபதி சுக்கிரன் பார்வையில் உள்ளதாலும் யோகாதிபதி சனி 6ல் வலுவாக அமர்ந்து உள்ளதாலும் ஜாதகர் நோயின் பிடியில் இருந்து மீண்டு வந்திருப்பார்.தவிர‌ 8ம் அதிபதி குரு 8ல் அமர்ந்து உள்ளதால் அவருக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்திருப்பார்.

    சரியான விடைக்கும் தங்களின் மேலான அலசலுக்கும் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  23. செவ்வாய் ன் 8ம் பார்வை 6இல் உள்ள சனி மீது.... +
    6ம் அதிபதி இன் பார்வை லக்நத்தின் மீது....
    இவை நோய் க்கு காரணம்....

    யோகதிபதி உச்சம் ...6ம் அதிபதி லக்னாதிபதி ஆவதால் மீண்டு வந்திருப்பார்.......

    ReplyDelete
  24. Respected Sir,

    My answer for our today's Quiz No.49:

    The Native has affected by disease. Two important reasons for disease are:

    1. Sixth house lord and lagna lord (Venus) are one and the same, sitting in enemy house and with baba kathri yoga. Saturn is sitting in sixth house.When sixth house lord or sixth house affected by baba kathri yoga, The native will suffer by disease a lot.

    2. The authority for body (Sun) sitting in eighth house and getting Saturn's aspect as well as saturn getting Mars (twelfth house lord) aspect. This is very dangerous. Saturn dasha was running and followed by Mercury dasha. Dasha period also not supported.

    I strongly believe these are the main reasons for disease.

    In this horoscope, eighth house also affected. Mercury, Moom as well as Jupiter combusted by Sun and getting Saturn's aspect. Hence, below the heart body portion has severely affected.

    As a result, The Native has died.

    With kind regards,
    Ravichandran M.


    ReplyDelete
  25. 1) அன்பரின் லக்னாதிபதி (மற்றும் ஆறுக்குடையதான சுக்கிரன்) கத்தரி யோகத்திலும், யோக காரகன் சனி ஆறில் மறைந்ததுவும், ஆத்ம மற்றும் உடல் காரகர்கள் எட்டில் மறைந்த்துவும் அவரை ஆரோக்யமற்றவராகவே வைத்திருந்தன.

    2) ஆறாம் இடத்தைப் பார்க்கும் பாதகாதிபதி செவ்வாய், நோய் எதிர்க்கும் ஆற்றலைக் குறைத்துவிட்டார்.

    நுரையீரல் (3) மற்றும் வயிறு (6) சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் அவதியுற்றவர். அடுத்தடுத்து வந்த திசைகளும் நோயைக் குணப்படுத்த உதவவில்லை. (ஆறுக்கு ஆறான 11-ல் பாதகாதிபதி. மற்றும் பதினொன்றுக்கு உடைய குரு எட்டில் மறைவு)

    ReplyDelete
  26. சார் வணக்கம்,
    இந்த அண்ணா ஜாதகதில் எல்லா கிரகமும் ராகு கேது பிடியில் மாட்டிகொண்டுள்ளது மேலும் 6ல் ரிஷபதிற்கு யோக கிரகமான் சனி உச்சம் இது நல்லாமைப்பு ஆனால் விரைய அதிபதி செவ்வாய் சனியை 8ஆம் பார்வையில் பார்கிறார் இது ரொம்ப நோய் தரும் மேலும் 6ல் இருக்கும் சனி விரைய ஸ்தானத்தில் பார்வை செலுத்துகிறார் மேலும் சந்திரன் 8ல் இருகிறார் இந்த ச்ந்திரன் ஆரோக்கியமான உடல்நிலையை தராது மேலும் சந்திரன் சனியின் பார்வையின் பெறுகிறார் மேலும் சூரியனும் சனியின் பார்வை பெறுகிறார்
    சூரியன் உடல் காரன் இதன் காரணமா அடிகடி மருத்துவமனைக்கு செல்வார் மேலும்8ல் அதிகமான் கிரகம் இருக்குது கிரகயுதததிலிருகிறது மேலும் லகனதிபதி சுக்கிரன் 8ற்கு 12லிருகிறார் மேலும் ராகு சனியின் பார்வையை பெறுகிறார் 3 சுக‌
    ஸ்தானம்

    ReplyDelete
  27. 1. Sun and moon both are in eigth place and the owner of 8th place guru is too strong.

    2. In 6th place its good to have a paavi- sani is in its utcha place then why problem? sir pls clear. But Seevai aspects 6th place to give operations.

    3. Sthira lagna pavar sani is utcham in 6th place. where by sani buthi periods he may have more difficulties. since sevvai is seeing this may due to accidents. or improper operations.

    Expect clear result from Vaathiyaar.

    ReplyDelete
  28. Ayya,

    This person is not recovered from his diseases. The reasons are:
    1. Lagna Owner(Venus) is in Papa Karthari Yogam. ie between Sun and Saturn. One of the worst Papa Karthari.
    2. Saturn is sitting in 6th house( Eventhough Yogakaran for this horoscope), but aspected by Mars. So he should have undergone surgery.
    3. Fixed sign Marakan(9th house owner- Saturn) sitting in 6th house.

    Your Student,
    Trichy Ravi

    ReplyDelete
  29. Quiz-49

    நோய்களில் இருந்து மீண்டுவந்தார்

    Reason:

    1. Sani 3rd aspects 4thlord suriyan

    2. Chevaai aspects sani by his 8th aspect

    3. 8th lord guru sitting in his place (atchi)

    4. 8th place has suba-karthari yoga

    5. 6th lord in 7th place but suba-karthari

    6 In sukran house sani sitting

    7. 12th lord chevaai Ayna boga bhagya isthanathipathi sitting in 11th house

    8. Guru aspects 4th place

    rameshraja1304

    ReplyDelete
  30. வணக்கம் ஐயா

    இந்த ஜாதக அன்பருக்கு முருகனின் பெயர் இருக்கும்.

    இலக்கினாதிபதி இலக்கினத்தில் ஆட்சி பலம் கொண்டவை ஆனாலும் துலாத்தில் 6-ம் இடத்தில் மூலத்திரிகோண பலம் பெறுகிறது, ஆகையால் 6 ம் ஸ்தான வேலையை அதிகப்படுத்தி செய்யும், 6 ம்அதிபதி சுக்கிரனின் பார்வை இலக்கினத்தில் பதிவதாலும்,

    பாக்கியாதிபதி ரோக ஸ்தானத்தில் இருப்பதாலும்,

    சுகாதிபதி - சூரியன் 8-ம் இடத்தில் மறைந்ததாலும்,
    பூர்வ புண்ணியாதிபதி-புதன் 8-ம் இடத்தில் மறைந்ததாலும்,
    8-ம்அதிபதி குரு மூலத்திரிகோண பலம் அடைவதாலும்,
    சந்திரன் அஷ்டமத்தில் இருப்பதாலும்

    இவர் ரோகியாக வாழ்ந்தார் / பலவிதமான நோய்களை அடைந்தார்

    இவருக்கு புற்று நோய் கூட வந்திருக்கும்.

    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    Galaxy2007 ல்
    என்னுடைய கடவுச்சொல் செயல் படவில்லை தயவுசெய்து சரி செய்து தரவும் ஐயா.

    ReplyDelete
  31. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்

    கொடுக்கப்பட்ட ஜாதகம் ரிஷப லக்கனம் ..தனுசு ராசி...

    [1]லக்னாதிபதி 7இல் .நல்ல அமைப்பு..லக்னத்தை தன பார்வையல் வைத்திருப்பது ...
    [2]லக்னாதிபதியின் சின்ன வீடான துலாம் 6 ம் வீடாக அமைந்து அதில் உச்சம் பெற்ற சனி ..ஆக ஆயுள் கெட்டி
    [3] 8ம் வீட்டில் அய்யா 4 பேர் ஒண்டு குடித்தனம் .நீ நான் என்று போட்டி போட்டு கொண்டு ஜாதகனுக்கு நோய்களை வாரி வழங்கி ஒரு வழி பண்ணி இருப்பார்கள்.... யோக காரகன் சூரியன் 8இல் சனி 6இல் நல்ல பலன் கொடுக்க கூடிய புதனும் 8இல் ..ஆக ஜாதகர் நொந்து நூடுல்ஸாகி எதோ என வாழ வேண்டியது??..
    [4]ராகு திசையில் ஜாதகர் கொஞ்சம் நடமாடும் நிலைக்கு வந்து தெளிவு பெறுவார்.
    [5] ராகு 3ம் இடத்தில இருப்பதால் நீண்ட ஆயுள் என்று வாத்தியார் அய்யா பாடம் ...
    [6] ஜாதகர் சிறு நீராக பிரச்சினைகளால் அவதிபட்டு மீண்டிருப்பார்..

    எவ்வளவு சரியாக இருக்கிறதோ அதற்க்கு தகுந்தாற்போல் மார்க் போட்டிருங்களேன் !![ திருவிளையாடல் நாகேஷ் பாணியல் ] .

    ReplyDelete
  32. ஜாதகருக்கு ஆறாம் அதிபன் சுக்கிரன் பாப கர்த்தாரி யோகத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது. உடல் காரகன் சூரியன் மற்றும் ஆறாம் அதிபன் சுக்கிரன் 2/12 ல் உள்ளனர். மேற்கூறிய அமைப்புக்களால் ஜாதகர் பலவிதமான நோய்களால் அவதிப்ட்டுள்ளார்.

    நன்றி அய்யா...

    ச. பாலாஜி.

    ReplyDelete
  33. ஐயா அவர்களுக்கு


    1. லக்கினநாதன் மற்றும் 6ம் அதிபதி சுக்கிரன் பாபகர்த்தாரி யோகத்தில் உள்ளார். சுக்கிரன் அமர்ந்துள்ள வீடு பகை வீடு மேலும் இரண்டு பக்கமும் பகை கிரகங்கள்.

    2. சூரியன்,குரு,குருவிற்கு பகைவன் ஆன புதன் மற்றும் தேய்பிறை சந்திரன் அனைத்தும் 8ம் வீட்டீல்.

    3. சனியின் பார்வை மற்றும் செவ்வாயின் பார்வை

    4. 6ம் அதிபதி பாபகர்த்தாரி யோகத்தில் இருந்தால் கடுமையான நோய்கள் உண்டாகும்.


    இவர் 26/12.1924ல் பிறந்திருப்பார்.

    இந்த உதாரண ஜாதகத்தை ஏற்கனவே கேலக்சி 2007 வகுப்பில் பார்த்து உள்ளோம். (6.2.14 = போஸ்ட் - 83)

    அன்புடன்
    j.dhanalakshmi

    ReplyDelete
  34. சனி செவ்வாயின் பார்வை பெற்றதால், அபாயகரமான நோய்கள் உண்டாகும். அடிக்கடி அறுவை சிகிச்சைகளுக்கு உட்பட நேரிடும்.
    2. சனி 8ம் பாவத்தில் உள்ள உடல் காரகன் சூரியன், மனகாரகன் சந்திரன், புதன், குருவை தன் பார்வையில் வைத்துள்ளது. மேலும் சனி செவ்வாயின் பார்வையில் உள்ளது,
    3. 6ம் ரோகாதிபதி பார்வை லக்கினத்தின் மீது உள்ளது

    ReplyDelete
  35. ஐயா வணக்கம்.

    என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில்...

    1. ரிஷப லக்கினத்திற்கு லாபாதிபதி சனி உச்சத்தில் இருந்தாலும், 6ல் மறைந்தது
    2. லக்னாதிபதி, பாப கர்த்தாரி யோகத்தில் சிக்கியது.
    3. லக்னாதிபதி அமர்ந்த வீட்டின் அதிபதி 6ம் வீட்டை நேரடிப் பார்வையில் வைத்திருப்பது.
    4. லக்னம், 6ம் வீடு, வீட்டின் அதிபதி, லக்னாதிபதி, ராசி, ராசி நாதன் ஆகியோருக்கு நல்ல கிரகங்களின் பார்வை இல்லாதது.

    ஜாதகர் மீண்டு வந்தாரா என்று கணிக்கத்தெரியவில்லை ஐயா...

    நன்றி,
    இளைய பல்லவன் (எ) வெங்கடேஷ் கிருஷ்ணன்

    ReplyDelete
  36. வணக்கம் ஐயா,

    ஜாதகருக்கு லக்னாதிபதியும்,6ம் அதிபதியும் சுக்கிரனாகி 7ல் அமர்ந்திள்ளார்,சிறிய வயதில் சுக்கிரன் தசா(குட்டிசுக்கிரன்) எல்லாம் சேர்ந்து பால்வினை நோய் ஏற்பட்டிருக்கும்.

    6ல் சனி உச்சம்,செவ்வாயின்பார்வையில் உள்ளார்,வாத நோய் ஏற்பட்டிருக்கும்
    சுக்கிரன் சனியின் நட்சத்திரத்தில் உள்ளார்,சனி ராகுவின் நட்சத்திரத்தில் உள்ளார்
    அடிக்கடி அறுவை சிகிச்சை செய்திருக்கவேண்டும்.ராகு திசா, புதன் புத்தியில் விடைபெற்றிருப்பார்.

    ReplyDelete
  37. ஐயா,
    ரிஷப லக்ன ஜாதகம். லக்னாதிபதி 7ல். 7ல் சுக்கிரன் இருப்பதால்
    அதிக காமியாகவும், அதனால் நோய் உள்ளவர். அதுவும் போக 8ல்
    சூரியன். தலையில் நோய் உள்ளவர். கண் நோய் உள்ளவர். 8ல் சந்திரன்.
    பித்தம் சம்பந்தமான நோய் உள்ளவர். பார்வைக் கோளாறு உள்ளவர்.
    சூரியனும் சந்திரனும் இரண்டு கண்களைக் குறிப்பவர்கள் இல்லையா.
    குரு 8ல். அஷ்டமாதிபதி அஷ்டமத்தில். அனேக நோய்கள் உள்ளவர்.
    அ.நடராஜன்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com