11.3.14

Astrology: நீல வண்ணக் கண்ணா வாடா! நீயொரு முத்தம் தாடா!

 
Astrology:  நீல வண்ணக் கண்ணா வாடா! நீயொரு முத்தம் தாடா!

நவரத்தினக்கற்களுக்கு எப்போதுமே மக்களிடம் ஒரு மவுசு உண்டு. சிலர் என்ன என்று தெரியாமலேயே, அடுத்தவன், நண்பன் சொன்னான் என்பதற்காக பணத்தை செலவழித்து வாங்கி நவரத்தினங்களை அணிந்து கொள்வார்கள்.


சூரியனுக்கு மாணிக்கம் Ruby
சந்திரனுக்கு முத்து Pearl
செவ்வாய்க்கு பவளம் Coral
புதனுக்கு பச்சை - மரகதம் Emerald
குருவிற்கு புஷ்பராகம் Topaz
சுக்கிரனுக்கு வைரம் Diamond
சனீஷ்வரனுக்கு நீலம் Sapphire
ராகுவிற்கு கோமேதகம் Garnet
கேதுவிற்கு வைடூரியம் Cat's eye, Lapis lazuli

என்று ஒவ்வொரு கிரகத்திற்கும் உரிய கல்லைப் பண்டைய நூல்கள் குறிப்பிட்டுள்ளன. உலகம் முழுவதும் மக்கள் இக்கற்களை விருப்பத்துடன், விலையைப்பற்றிக் கவலைப் படாமல் வாங்கி அணிந்து கொள்கிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட கல்லை, அதுவும் நமக்கு உரிய கல்லை வாங்கி அணிந்து கொண்டால், நமது தலை எழுத்துமாறிவிடுமா?

அது எப்படி மாறும்?

வாங்கிவந்த வரம் என்ன ஆவது?

நமது பிரச்சினைகள் தீர்ந்து விடுமா? திருமணம் ஆகாதவர்களுக்கு உடனே திருமணம் ஆகிவிடுமா? வேலை கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருப்பவர்களுக்கு உடனே நல்ல வேலை கிடைத்துவிடுமா? பணம் இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு பணம் கொட்ட ஆரம்பித்துவிடுமா? நோய் நொடிகளால் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நோய்கள் தீர்ந்துவிடுமா? குழந்தை பாக்கியம் இல்லாமல் ஏங்குபவர்களுக்கு உடனே குழந்தை பிறந்துவிடுமா? நூறுவயதுவரை வாழும் ஆசை உள்ளவர்களுக்கு, அவர்களின் ஆயுள் கூடிவிடுமா?

அதெல்லாம் ஒன்று கூட நடக்காது. அவரவர் ஜாதகப்படிதான் எல்லாம் நடக்கும்!

சரி கற்களால் ஒரு பயனும் இல்லையா? இருக்கிறது. யார் யார் என்ன என்ன கல்லை அணிய வேண்டும். அதனால் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன என்பதை இன்னொரு நாள் கேலக்சி வகுப்பில் அலசுவோம். அதுபோல ஜாதகத்தில் உள்ள எட்டாம் இடத்து அதிபதி (அஷ்டமாதிபதி - eighth lord) ற்கு உரிய கல்லை ஜாதகன் அணியவே கூடாது. போட்டுத் தள்ளிவிடும். அதையும் அலசுவோம்

இப்போது சொல்ல வந்த செய்திக்கு வருகிறேன்.

கீழே உள்ள பத்திரிக்கைச் செய்தியைப் பாருங்கள். அதைச் சொல்ல வந்தவன்தான் இவ்வளவு பில்ட் அப் கொடுத்து எழுதியுள்ளேன்.


நன்றி தினமலர் (முன்பு வந்த செய்தி). படத்தின் மீது கர்சரை வைத்து அழுத்தினால், படம் பெரிதாகத் தெரியும்

நீலக்கல் என்றால், அது சனியின் கல் என்று சொல்லி பலரும் ஓடி விடுவார்கள். ஆனால் ஒரு அன்பர், அரியவகை நீலக்கல் ஒன்றை 28 கோடி
(அம்மாடியோவ்) ரூபாய்களைக் கொடுத்து ஏலத்தில் (போட்டியில்) வாங்கியுள்ளார். முதலில் அதைப் படியுங்கள். மற்றவற்றை இன்னொரு நாள் பார்க்கலாம்

அன்புடன்
வாத்தியார்

=============================================================
 நமது வகுப்பறையின் மூத்த மாணவர் திருவாளர் கே.முத்துராமகிருஷ்ணன் அவர்கள் நேற்றைய பதிவிற்கு, அதாவது எண் 8 நடைப் பயிற்சிக்குக்
கூடுதல் தகவல்களைத் தன்னுடைய பின்னூட்டத்தில் கொடுத்திருந்தார். அவருக்கு நம் நன்றிகள் உரித்தாகுக. அவர் சுட்டிக்காட்டியபடி நானும்
கூகுள் ஆண்டவரிடம் கேட்டு வாங்கி ஒரு காணொளியைக் கீழே கொடுத்துள்ளேன்.

அனைவரும் பாருங்கள்



வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=====================================================

11 comments:

  1. நம்ம ஊர் பக்கம் சொல்வார்கள்..

    ’’..ஏ.. ஐயா.. ஒரு எட்டு போயி அவுகளைப் பாத்துட்டுத்தான் வாங்களேன்!..’’

    நவீன காலத்தில் அது தானே இதுவாகி விட்டது!..

    பதிவுக்கு நன்றி ஐயா..

    ReplyDelete
  2. நீலக்கல் என்றதும்
    நினைவில் வருவது டைடானிக்

    நீலம் என்றதும்
    நீல நிறம்

    வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் என்ற வாத்தியார் பாடலே நிழலில்

    நீலகண்டன் என்ற இயக்குனர்
    நிறைய எம்ஜிஆர் படம் தந்தவர்

    நீலகண்டன்; அவர் தான் நானும்
    நீங்களும் வணங்குபவர்

    ReplyDelete
  3. Respected Sir,

    Thanks for sharing...

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  4. நல்லதொரு பகிர்வு...
    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  5. மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.


    நவரத்தினங்களை பற்றிய தங்களின் பகிர்விற்க்கு நன்றி.அதிர்ஷ்ட கற்களை
    பற்றிய தங்களின் பாடத்திற்க்காக காத்திருக்கிறோம்.

    நன்றி ல ரகுபதி

    ReplyDelete
  6. ///Blogger துரை செல்வராஜூ said...
    நம்ம ஊர் பக்கம் சொல்வார்கள்..
    ’’..ஏ.. ஐயா.. ஒரு எட்டு போயி அவுகளைப் பாத்துட்டுத்தான் வாங்களேன்!..’’
    நவீன காலத்தில் அது தானே இதுவாகி விட்டது!..
    பதிவுக்கு நன்றி ஐயா..///

    உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. ////Blogger வேப்பிலை said...
    நீலக்கல் என்றதும்
    நினைவில் வருவது டைடானிக்
    நீலம் என்றதும்
    நீல நிறம்
    வானுக்கும் கடலுக்கும் நீல நிறம் என்ற வாத்தியார் பாடலே நிழலில்
    நீலகண்டன் என்ற இயக்குனர்
    நிறைய எம்ஜிஆர் படம் தந்தவர்
    நீலகண்டன்; அவர் தான் நானும்
    நீங்களும் வணங்குபவர்////

    உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி வேப்பிலை சுவாமி!!

    ReplyDelete
  8. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Thanks for sharing...
    With kind regards,
    Ravichandran M.////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. ////Blogger Jeevalingam Kasirajalingam said...
    சிறந்த பயனுள்ள பதிவு////

    நல்லது. நன்றி ஜீவலிங்கம்!

    ReplyDelete
  10. /////Blogger சே. குமார் said...
    நல்லதொரு பகிர்வு...
    வாழ்த்துக்கள் ஐயா...////

    நல்லது. நன்றி குமார்!

    ReplyDelete
  11. ////Blogger raghupathi lakshman said...
    மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.
    நவரத்தினங்களை பற்றிய தங்களின் பகிர்விற்க்கு நன்றி.அதிர்ஷ்ட கற்களை
    பற்றிய தங்களின் பாடத்திற்க்காக காத்திருக்கிறோம்.
    நன்றி ல ரகுபதி/////

    காத்திருக்காதீர்கள்! பொறுத்திருங்கள்! நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com