10.2.14

நூல் நயம் (புத்தக விமர்சனம்): முரண்பாடுகள்

 

நூல் நயம் (புத்தக விமர்சனம்): முரண்பாடுகள்

சென்ற வாரம் முரண்பாடுகள் என்ற நூலை அதன் தலைப்பிற்காகவே வாங்கினேன். படித்தேன். இன்புற்றேன். நீங்கள் அறியவேண்டி அதன் விபரங்களைக் கீழே கொடுத்துள்ளேன். அனைவரும் அதை விலைக்கு வாங்கிப் படியுங்கள்!

contradistinction: noun:noun =  distinction made by contrasting the different qualities of two things.
-------------------------------------------------------------------------
நூல் ஆசிரியர் காந்த ஊசி திரு.ந. குப்புசாமி அவர்களை எத்தனை பாராட்டினாலும் தகும். எத்தனை முரண்பாடுகளை அவர் பட்டியல் இட்டிருக்கிறார் என்று பார்த்தால் வியப்பாக இருக்கிறது.

துவக்கத்திலேயே இயற்கையின் மேல் கையை வைத்திருக்கிறார். இயற்கையில்தான் எத்தனை முரண்பாடுகள்?

இரவு - பகல், வெப்பம் - குளிர்ச்சி, நீர் - நெருப்பு, மேலிருந்து கீழ் நோக்கிப் பாயும் தண்ணீரின் தன்மை - கீழிருந்து மேல் நோக்கியே எரியும் நெருப்பின் தன்மை, சிறிய விதை - பெரியமரம், பெரிய விதை - சிறியமரம், உருவத்தில் பெரியதான யானை ஒரு குட்டிதான் போடும் - உருவத்தில் சிறியதான பன்றி 10 குட்டிகளைப் போடுகின்றது. காற்றில் பிராணவாயு - கரியமில வாயு, தண்ணீரில் ஆக்ஸிஜன் - ஹைட்ரஜன், அணுவில் எலக்ட்ரான் - புரோட்ரான் என்று முரண்பாடுகளைப் பட்டியலிட்டு அசத்தியிருக்கிறார். நம்மைச் சிந்திக்க வைக்கின்றார்.

இயற்கையைப் போல மனித இனமும் பல முரண்பாடுகளைக் கொண்டுள்ளது. பிறப்பு - இறப்பு, இன்பம் - துன்பம், அன்பு - கோபம், நட்பு - பகை, இனிப்பு - கசப்பு, உழைப்பு - சோம்பல், உறக்கம் - விழிப்பு, அறிவு - அறியாமை, உயர்ந்தவர் - தாழ்ந்தவர், ஏழை - பணக்காரன் என்று அதையும் பட்டியலிட்டிருக்கிறார்.

சித்தார்த்தர், புத்தரானதில் துவங்கி, இராஜாராம் மோகன்ராய், மகாத்மா காந்தி, சர் ஐசக் நியூட்டன், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கார் வரை பலரது வாழ்க்கைச் சுருக்கத்தைக் கொடுத்து அவற்றில் உள்ள நல்லவற்றையும், முரண்பாடுகளையும் விளக்கியிருக்கிறார்.

திருவள்ளுவரையும் அவர் விட்டு வைக்கவில்லை. திருக்குறள்களில் உள்ள சில முரண்பாடுகளை விளக்கமாகக் குறிப்பிட்டு அசத்தியுள்ளார்.
உதாரணத்திற்கு ஒன்றை மட்டும் எடுத்து எழுதியுள்ளேன்.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்

என்ற குறளுக்கும்

பிறவிப் பெருங்கடல் நீந்துவ நீந்தார்
இறைவன் அடி சேராதார்

என்ற குறளும் ஒன்றுக்கொன்று முரண்படிவதைக் குறிப்பிட்டு, படிக்கும் நம்மைச் சிந்திக்க வைக்கிறார். இது போன்று முரண்படும் வேறு சில குறள்களையும் பட்டியலிட்டுள்ளார்

மார்க்சியமும் காந்தியமும் முரண்பட்ட தத்துவங்கள் என்ற உப தலைப்பில் நிறையச் சொல்லியிருக்கிறார். கணிதத்தில் உள்ள முரண்பாடுகளையும் அவர் விட்டு வைக்கவில்லை.

மதுவிலக்கை ஆதரித்த தந்தை பெரியார், பிற்காலத்தில் மது அருந்துவதை ஆதரித்தார் என்று பெரியார் முரண்பட்ட செய்திகள் சிலவற்றைக் கொடுத்துள்ளார். கதர் ஆடைகளை ஒரு காலத்தில் வரிந்து கட்டிக்கொண்டு ஆதரித்த பெரியார், பிறகு அதைத் தேவையில்லை - மனித உழைப்பை வீணாக்கும் செயல் என்று பிரச்சாரம் செய்தாராம்.

காந்தியின் மதுவிலக்கு கொள்கையை ஆதரித்து, தமிழகம் முழுவதும் தனது வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் மூலம் பிரச்சாரம் செய்த கலைவாணர் என்.எஸ்.கே அவர்கள், அவரது கடைசி காலத்தில் குடிப்பழக்கத்திற்கு ஆளாகித் திரிந்தது முரண்பட்ட நிலைப்பாடு என்பதை வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார்.

வயது முதிர்ந்தவர்கள் இளம் பெண்களைத் திருமணம் செய்து கொள்வதை கடுமையாக எதிர்த்துவந்த தந்தை பெரியார், தமது அறுபதாவது வயதில் மணியம்மை என்ற இளம் பெண்ணை மணந்துகொண்டதைக் குறிப்பிட்டுள்ளார்.

தன் வாழ்நாள் முழுவதும் பிராமணர்களைக் கடுமையாக எதிர்த்துவந்த அம்பேத்கார், தன்னிடம் தட்டஎழுத்தராகப் பணிபுரிந்த பிராமணப் பெண்ணை மணந்து கொண்டு வாழ்ந்ததையும் குறிப்பிட்டுள்ளார்!

புத்தகம் பல அரிய செய்திகளுடன், சுவாரசியமாக உள்ளது. அனைவரும் வாங்கிப் படியுங்கள். புத்தகத்தின் சுவாரசியத்திற்கு நான் கியாரண்டி தருகிறேன்.

பக்கங்கள் - 128
விலை ரூ.50:00
நூலின் பெயர்: முரண்பாடுகள் (கட்டுரைகள்)
ஆசிரியர்:  காந்த ஊசி திரு.ந. குப்புசாமி


புத்தகம் கிடைக்குமிடம்:
மீனாட்சி வெளியீட்டகம்,
25, பாரதி பூங்கா சாலை 2
கோயம்புத்தூர் - 641 043
தொலைபேசி எண்; 0422 - 2440171

   ==================================================

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

18 comments:

  1. Contradistinction என்ற சரியான ஆங்கிலப் பதத்தையும் உபயோகப் படுத்தியுள்ளார். ஆர்வத்தைத் தூண்டியுள்ள புது(த்)தகம். வாங்குவோம்!! தகவலுக்கும் அணிந்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!

    ReplyDelete
  2. இரட்டை தன்மை கொண்டது தான்
    இந்த புண்ணிய பூமி..

    இதில் எங்கே முரண்பாடுகள்
    இடது கால் நடக்கும் போது

    வலது கால் ஓய்வெடுக்கும்
    வாழ்கை பாதை அப்போது தான்

    சீராகும். அதனால்
    சீர் உயர்த்தி பார்க்கவேண்டும்

    முரண் என்பது எதிர்மறை சிந்தனை
    முதலிருந்து முடிவு வரை

    இரட்டை தன்மை என உணர்ந்தால்
    இனிக்கும் நேர்மை சிந்தனையுடன்

    புத்தகம் படிக்க வேண்டும் என்ற
    பண்பை சொன்னது இந்த பதிவு..

    ReplyDelete
  3. contradictions are different. For example if a group of people support building a dam which will benefit large number of people, there will be group of people who contradict the same with the perception of preserving forest. Industrialization is against environmental preserve. Being a person who do administer the Government are forced to take decisions from both perspective and the same is common for individual too. Hence there is no surprise being a human taking different stand during different period. It is applicable to everyone.

    ReplyDelete
  4. Respected sir,

    Very useful post and thanks for sharing...

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  5. வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்,
    தங்கள் தவலுக்கு நன்றி. புத்தகத்தை வாங்கி படிப்போம். ஆனாலும் வேப்பிலை சொல்வது சரியானது தான். முருகன் சோமசுந்தரம் பிள்ளை.

    ReplyDelete
  6. வணக்கம் ஐயா!. எல்லாருடைய வாழ்க்கையிலும் எத்தனை முரண்கள். அதற்கு சம்பந்தமாக சோதிடத்தில் கிரக யுத்தம் பற்றி ஒரு பதிவு (எங்களுடைய நீண்ட நாள் கனவு) இட வேண்டும் என்றும், முடிந்தால் உதாரண ஜாதகத்திற்கு இப்பொழுது செய்தியில் அடிபடும் யுவன் ஷங்கர் ராஜாவின் ஜாதகத்தை ( பிற்ந்த தேதி ஆகஸ்டு 31, 1979)அலசலுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தாழ்மையுடன் கோரிக்கை விடுக்கிறேன்.

    ReplyDelete
  7. எதுவும் நிலை இல்லை . நிலை இல்லாமையே நிலையானது .

    ReplyDelete
  8. புத்தக விமர்சனம் அருமை ஐயா...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ..
    முரண் பாடுகள் என்ற புத்தகத்தில் இருக்கும் முரண் பற்றி கூறியது ..
    திருக்குறள் .சில பாடல்கள் முரண்பட்டு இருக்கிறது என் இரண்டு பாடல்கள் குறிபிட்டிருந்தீர்கள்..
    வாத்தியாரை மறுத்து சொல்வதற்கு மன்னிக்கவும்.!!
    எனது வாத்தியார் ஒரு கருத்து கூறினால்.. அது எனக்கு வேத வாக்கு !!

    .இறைவன் மலரடி பற்றினால் இந்த மாநிலத்தில் வாழும் காலம் நீண்டு நல்லபடியாக இருக்கும் .!!!
    2வது பாடல் !!பின்னர் அவர்களுக்கு அவன் **திருவடி** அடைகிற தன்மை கிடைக்கும்... [இதில் சைவ சித்தாந்த சாஸ்திர உண்மை இருக்கிறது !!சாலோகம், சாரூபம், சாமீபம்... எளிதில் விளக்க இயலாது ]
    இன்றைய நபர்களின் முரண்பாடுகள் பற்றி எழுதி விடலாம் !!!
    3000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய திருவாளுவர் ஒரு கருத்து இடத்தில் கூறினால் அதற்கு மாற்று கருத்து அவரே இட முடியாது !!
    மேலும் அந்த காலத்து புலவர்கள் தங்கள் படைப்புகளை அரச சபையல் அரங்கேற்றுவார்கள் ராஜ சபையல் பேரறிஞர்கள் இருப்பார்கள் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும்....ஒரு படைப்பு என்பது அந்த காலத்தில்.. சாமானிய விஷயமன்று !!
    நன்றி ...

    ReplyDelete
  10. /////Blogger Srinivasa Rajulu.M said...
    Contradistinction என்ற சரியான ஆங்கிலப் பதத்தையும் உபயோகப் படுத்தியுள்ளார். ஆர்வத்தைத் தூண்டியுள்ள புது(த்)தகம். வாங்குவோம்!! தகவலுக்கும் அணிந்துரைக்கும் மிக்க நன்றி ஐயா!////

    நல்லது. நன்றி ராஜூலுகாரு!

    ReplyDelete
  11. ////Blogger வேப்பிலை said...
    இரட்டை தன்மை கொண்டது தான்
    இந்த புண்ணிய பூமி..
    இதில் எங்கே முரண்பாடுகள்
    இடது கால் நடக்கும் போது
    வலது கால் ஓய்வெடுக்கும்
    வாழ்கை பாதை அப்போது தான்
    சீராகும். அதனால்
    சீர் உயர்த்தி பார்க்கவேண்டும்
    முரண் என்பது எதிர்மறை சிந்தனை
    முதலிருந்து முடிவு வரை
    இரட்டை தன்மை என உணர்ந்தால்
    இனிக்கும் நேர்மை சிந்தனையுடன்
    புத்தகம் படிக்க வேண்டும் என்ற
    பண்பை சொன்னது இந்த பதிவு.////.

    உங்கள் பின்னூட்டத்தின் கடைசி இரண்டுவரிகள்தான் மிகவும் முக்கியமானதாகும். நன்றி வேப்பிலை சுவாமி!

    ReplyDelete
  12. ////Blogger Ravi said...
    contradictions are different. For example if a group of people support building a dam which will benefit large number of people, there will be group of people who contradict the same with the perception of preserving forest. Industrialization is against environmental preserve. Being a person who do administer the Government are forced to take decisions from both perspective and the same is common for individual too. Hence there is no surprise being a human taking different stand during different period. It is applicable to everyone./////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. ////Blogger ravichandran said...
    Respected sir,
    Very useful post and thanks for sharing...
    With kind regards,
    Ravichandran M./////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  14. /////Blogger Raja Murugan said...
    வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்,
    தங்கள் தவலுக்கு நன்றி. புத்தகத்தை வாங்கி படிப்போம். ஆனாலும் வேப்பிலை சொல்வது சரியானது தான். முருகன் சோமசுந்தரம் பிள்ளை./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. /////Blogger venkatesh r said...
    வணக்கம் ஐயா!. எல்லாருடைய வாழ்க்கையிலும் எத்தனை முரண்கள். அதற்கு சம்பந்தமாக சோதிடத்தில் கிரக யுத்தம் பற்றி ஒரு பதிவு (எங்களுடைய நீண்ட நாள் கனவு) இட வேண்டும் என்றும், முடிந்தால் உதாரண ஜாதகத்திற்கு இப்பொழுது செய்தியில் அடிபடும் யுவன் ஷங்கர் ராஜாவின் ஜாதகத்தை ( பிறந்த தேதி ஆகஸ்டு 31, 1979)அலசலுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தாழ்மையுடன் கோரிக்கை விடுக்கிறேன்./////

    கிரக யுத்தம்பற்றிவிரிவாக எழுதுவோம். படிப்போம். அதற்கு குறிப்பிட்ட ஒருவரின் ஜாதகம் எதற்கு? அதெல்லாம் வேண்டாம்!

    ReplyDelete
  16. //////Blogger C Jeevanantham said...
    எதுவும் நிலை இல்லை . நிலை இல்லாமையே நிலையானது ./////

    உங்களின் கருத்துப் பகிற்விற்கு நன்றி ஜீவா!

    ReplyDelete
  17. ////Blogger சே. குமார் said...
    புத்தக விமர்சனம் அருமை ஐயா...
    வாழ்த்துக்கள்.////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  18. ///////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ..
    முரண் பாடுகள் என்ற புத்தகத்தில் இருக்கும் முரண் பற்றி கூறியது ..
    திருக்குறள் .சில பாடல்கள் முரண்பட்டு இருக்கிறது என் இரண்டு பாடல்கள் குறிபிட்டிருந்தீர்கள்..
    வாத்தியாரை மறுத்து சொல்வதற்கு மன்னிக்கவும்.!!
    எனது வாத்தியார் ஒரு கருத்து கூறினால்.. அது எனக்கு வேத வாக்கு !!
    .இறைவன் மலரடி பற்றினால் இந்த மாநிலத்தில் வாழும் காலம் நீண்டு நல்லபடியாக இருக்கும் .!!!
    2வது பாடல் !!பின்னர் அவர்களுக்கு அவன் **திருவடி** அடைகிற தன்மை கிடைக்கும்... [இதில் சைவ சித்தாந்த சாஸ்திர உண்மை இருக்கிறது !!சாலோகம், சாரூபம், சாமீபம்... எளிதில் விளக்க இயலாது ]
    இன்றைய நபர்களின் முரண்பாடுகள் பற்றி எழுதி விடலாம் !!!
    3000 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய திருவாளுவர் ஒரு கருத்து இடத்தில் கூறினால் அதற்கு மாற்று கருத்து அவரே இட முடியாது !!
    மேலும் அந்த காலத்து புலவர்கள் தங்கள் படைப்புகளை அரச சபையல் அரங்கேற்றுவார்கள் ராஜ சபையல் பேரறிஞர்கள் இருப்பார்கள் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும்....ஒரு படைப்பு என்பது அந்த காலத்தில்.. சாமானிய விஷயமன்று !!
    நன்றி ...//////

    இதில் வாத்தியாரின் கருத்து எதுவுமில்லை. அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதை எடுத்துக் காட்டியிருந்தேன். படித்துவிட்டு ஏற்றுக்கொள்வதும், ஏர்ருக்கொள்ளாததும் அவரவர் விருப்பம்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com