21.2.14

Astrology: பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே!

 
 Astrology: பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே!

பூமியில் இருப்பதும்  - வானத்தில்
பறப்பதும் அவரவர் எண்ணங்களே!
நெஞ்சினில் துணிவிருந்தால்
நிலவுக்கும் போய்வரலாம்

- கவியரசர் கண்ணதாசன்

நேற்றையப் பதிவில் அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து, அவரின்  கல்வித் தகுதி, மற்றும் நிதி நிலைமையை அலசி உங்கள் கணிப்பை
எழுதுங்கள் என்று கேட்டிருந்தேன்.

சரியான விடை:

1. பத்தாம் வகுப்போடு படிப்பைத் தலை முழுகியவர் அவர். School drop out
2. துவக்கத்தில் இருந்து, கடைசிவரை, பல இடங்களில் submissive levelலில் வேலை பார்த்தவர் அவர். கைக்கும் வாய்க்குமான வருமானம்.
அவ்வளவுதான்.பிறப்பில் இருந்தே கடைசிவரை ஏழ்மைநிலைதான்!

துலா லக்கினம். லக்கினாதிபதி சுக்கிரனும், யோககாரகன் சனியும் கூட்டணி போட்டுள்ளார்கள். கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று
கவலைப் படாமல் வாழ்ந்தவர் அவர். ஆறாம் வீட்டுக்காரன் (வில்லன்) பார்வை அந்தக் கூட்டணிக்குள் கலவரத்தை உண்டாக்கியதால், பெருத்த
யோகம் எல்லாம் ஒன்றும் இல்லை. ரோட்டி, கப்டா, மக்கானுக்குத் இருக்க இடம், உடுக்க உடை, உண்ண உணவு) தீங்கில்லாமல் வாழ்க்கை கடைசிவரை ஓடியது.அவரை அன்பாகப் பார்த்துக்கொள்ள ஒரு நல்ல துணைவி கிடைத்தார். மூன்று குழந்தைகள் பிறந்தனர். அவை மட்டும்தான் சற்று ஆறுதலான விஷயம்.

2ல் மாந்தி, இரண்டாம் வீட்டுக்காரன் செவ்வாய் நீசம். தனகாரகன் குரு அந்த வீட்டிற்கு எட்டில். கையில் காசு தங்கவில்லை. வந்தால் அல்லவா
தங்குவதற்கு?

4ஆம் வீடு பாபகர்த்தாரி யோகத்தில். ஒரு பக்கம் சனி மறுபக்கம் சூரியன். அந்த வீட்டுக்காரன் சனி, அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில். ஆகவே
கல்வி, பள்ளிப் படிப்போடு கட்’டானது. உங்கள் மொழியில் சொன்னால் ஊற்றிக்கொண்டுவிட்டது.
----------------------------------------------------------------------------
சரி, உங்கள் கணிப்புக்கு வருவோம். 28 பேர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களில் எட்டு பேர்கள் மட்டுமே சரியான விடைகளை எழுதியுள்ளார்கள். இரண்டு கேள்விகளுக்குமே சரியான விடைகளை எழுதியவர்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டிருக்கிறேன். அந்த எண்மருக்கும் எனது மனம் உவந்த பாராட்டுக்கள். கலந்துகொண்ட மற்ற நல் உள்ளங்களுக்கும் எனது பாராட்டுக்கள் உரித்தாகுக!

அன்புடன்,
வாத்தியார்

-----------------------------------------------------------------------------
1
Blogger Dallas Kannan said...
    Respected Sir
    My quick analysis.
    Education:
    Would not have crossed School.
    4hr lord is in 12the place of itself.
    With laknathipath/8th lord.
    only good thing is Guru looks at it.
    Butha is in 5th/friendly place, but in rasi Santhippu.
    After 13 years Rahu Dasa starts.
    Wealth:
    Cannot be rich. Will barly survive.
    Mandi in in 2nd place.
    2nd lord is in 10th place, but neecham and no benefic look
    11th lord is in5th place looking its own place. But it is in enemy’s house and with 12th lord.
    10th lord is uchham, but in 8th place.
    Thursday, February 20, 2014 5:29:00 AM///////
--------------------------------------------------
2
////Blogger Hari Krishna said...
    4 மற்றும் 5 க்கு அதிபதியும் லக்னாதிபதியும் 3 இல் மறைவு. 8 இல் சந்திரன் (1௦ ஆம் இடத்து அதிபதி) மறைவு. ஆகவே படிப்பு மற்றும் தொழில்
கிடையாது.
ஆனால் 5 இல் சூரியன் புதன் கூட்டணி. ௧௨ இல் கேது . ஆகவே, ஞானி & புத்திசாலி. 2-இல் மாந்தி மற்றும் சுக்கிரன் 3 இல் மறைவு.
இதனால் பணவரவு குறைவு தான். ஆனாலும், 9 இல் குரு. வாழ்க்கைக்கு தேவையான அளவு பணம் வந்து கொண்டே இருக்கும். பிழைத்துக்
கொள்வார். ஆனால் சேமிப்பு குறைவு.
    Thursday, February 20, 2014 11:02:00 AM/////
------------------------------------------------

/////Blogger C Jeevanantham said...
    Dear Sir,
    The given horoscope person did not study beyond school. 4th lord in 3rd and maandhi is close to 4th lord.
    He is poor due to 2nd lord neecham and maandhi is in 2nd place. Uccha chandran aspects reduces some ill effects. So he earn and spend what he earns.
    Thanking you,
    C.Jeevanantham.
    Thursday, February 20, 2014 11:04:00 AM//////
-------------------------------------------------  
4
 //////Blogger Ramesh Balakrishnan said...
    rameshraja1304
    quiz: 41
    1. school drop-out
    2. LIC (Low income group)

    Reasons:
    l lagna has engulfed with pabakarthari yogo (Kethu and Manthi) - but 3rd and 6th lord guru sitting in pagai house - aspects..
    l 2nd House has manthi - speech and money not satisfied)
    l 4th lord (education, mother) sani in 3rd house (12th house from his own house) (Maraivu) with laknathipathi Sukran 
    Thursday, February 20, 2014 4:20:00 PM/////
-------------------------------------------------
5
/////Blogger ravichandran said...
    Respected Sir,
    My answer for our today's Quiz No.42:
    1. The native of the given horoscope has dropped out of school.
    2. He has financial difficulties.

    1. Reason for not getting education:
    i)The fourth lord is sitting twelfth house from its own house alongwith eigth house authority (Venus) and getting third and six house authority

(Jupiter). Fourth house authority completely affected.
    ii) Vidyakaraga is getting Mars aspect and it is combusted by Sun. Mars aspects forth house also.It's bad sign for education.
    iii) In second house, Mandhi is there and also that house authority is debiliated.
    2. Reason for financial difficulties:
    i) Second house is affected by Mandhi as well as this house authority is debiliated.
    ii) Though eleventh house authority (Sun) aspects its own house, it is associated with twelfth lord Mercury. It's bad.
    iii) Jupiter is No.1 enemy for Libra lagna,sitting in Gemini and aspects Venus,Saturn,Mercury and Sun.
    iv) There is chance to flow of money but no way to save.(broken pot)
    v) Kedhu is sitting in twelfth house and which generally lead the native to face difficulties at old age. but that house(12th) authority (Mercury)

is sitting with eleventh lord. Hence he can manage.
    In short, Langa is under babakathiri yoga and lagna lord clutched by Saturn. Hence the native has to struggle.
    With kind regards,
    Ravichandran M.
    Thursday, February 20, 2014 7:17:00 PM/////
---------------------------------------------------------------- 
6  
Blogger Chandrasekaran Suryanarayana said...
    Quiz No.41 வணக்கம்.
    துலா லக்கினம், ரிஷப ராசி, ரோகினி நட்சத்திரம்
    1. ஜாதகர் படிக்கவில்லை. படிப்பு ஏறவில்லை. கல்வி மறுக்கப்பெற்ற ஜாதகம்.
    2. தினமும் உழைத்து சம்ப்பாதிப்பவர். எழ்மையான‌வர்.

    இந்த ஜாதகத்தின் பலம் :
    சந்திரன் (5 ப‌ர‌ல்) உச்சம் அடைந்து 7ம் பார்வை 2ம் வீட்டின்மீது.
    ல‌க்கின‌த்தில் 37 ப‌ர‌ல்
    5ல் புத,ஆதித்ய‌யோக‌ம்
    6ல் ராகு (36 பரல்) தீர்கமான‌ ஆயூள்.
    இந்த ஜாதகத்தின் பலவீனம்:
    குரு வக்கிரம், செவ்வாய் வக்கிரம், நீசம்
    லக்கினம் பாபகர்த்தாரி தோஷம்
    4ம் வீடு பாபகர்த்தாரி தோஷம்
    2ல் மாந்தி
    செவ்வாயின் 4ம் பார்வை லக்கினத்தின்மீது
    செவ்வாயின் 7ம் பார்வை 4ம் வீட்டின்மீது
    6ம் வீட்டு அதிபதி 7ம் பார்வை 3ம் வீட்டின்மீது
    சனி,சுக்கிரன் கூட்டு வர்க்கோத்தமம்.
    ல‌க்கினம் (37 பரல்) பாபகர்தாரி தோஷத்தில் உள்ளது. ஒரு பக்கம் கேது 12ல், மறுபக்கம் மாந்தி 2ல். 10ல் உள்ள நீசமான, வ‌க்கிரமான‌ செவ்வாயின் தீய பார்வையும் (4ம்பார்வை ) லக்கினத்தின் மீது விழுகிறது. லக்கினம் பாதிக்க பட்டுள்ளது. வாழ்க்கை குறை சொல்லும்படியாக அமைந்துள்ளது.
    4ம் வீடு கல்விக்கான வீடு. 4ம் வீடு (25 பரல்) பாபகர்தாரி தோஷத்தில் உள்ளது.ஒரு பக்கம் சூரியன் 5ல், மறுபக்கம் சனி 3ல். 4ம் வீடு பாதிக்க
பட்டுள்ளது.மேலும், 10ம் வீட்டில் உள்ள வக்கிரமான, நீசமான, செவ்வாயின் 7ம் பார்வை 4ம் வீட்டின் மீது. கல்வி பெற வாய்ப்பில்லை. கல்வி பாதிப்பு,

மண அமைதி இருக்காது. தாயுடன் உறவு சுமுகமாக இருக்காது. சொந்த வீடுகள் இருக்க வாய்ப்பில்லை. சொத்துக்கள் இருக்க வாய்ப்பில்லை.
    4ம், 5ம் வீட்டு அதிபதி 3ம் வீட்டில் சனியுடன் கூட்டு. 4ம் வீட்டு அதிபதி அதாவது, 4ம் வீட்டிற்க்கு 12ல். கல்வி தடங்கள். கஷ்டங்கள், நஷ்டங்கள்,

அதிகமாகும். வாழ்க்கை வசதியில்லாமல் போய்விடும்.வருமானத்தைவிட செலவுகள் அதிகமாக இருக்கும்.
    6ம் வீட்டு அதிபதி வ‌க்கிரமான‌ குருவின் பார்வை 4ம் வீட்டின் மீது 8ம் பார்வையாக இருப்பதால், மேலும் கல்விக்கு தடங்கள்.
    சனியின் 3ம் பார்வை 5ம் வீட்டில்ள்ள புதன் மீதும் பார்ப்பதால் ஜாதகனின் நுண் அறிவிற்க்கும் தடங்கள்.
    எந்த சுப கிரகங்களின் பார்வையும் 4ம் வீட்டின் மீது இல்லை.
    4ம் வீடு பூரணமாக் கெட்டு இருக்கிறது. கல்விக்கு பாதிப்பு அதிக‌ம்.
    நிதி நிலமை:
    சனி அமர்ந்த வீடும் பார்வை பெற்ற வீடும் நன்மையளிக்காது.
    2ம் வீட்டில் மாந்தி. 2ம் வீடு (28 பரல்). ஜாதகன் வறுமையால் வாட நேரிடும்.சொத்துக்கள் இருக்காது.நாவன்மை பங்கு எற்படும். விதண்டாவாதம்
செய்யகூடியவன்.
    உச்சமான சந்திரன் 8ம் வீட்டில் அமர்ந்துள்ளதால் நிதி மேலான்மைக்கு இது இடைஞ்சல்.
    11ம் வீடு தன் சொந்த முயற்ச்சியால் சம்பாதிப்பது.11ம் வீட்டு அதிபதி சூரியன்(4 பரல்) 5ம் வீட்டில் சனியின் 3ம் பார்வையுடன் இருப்பதால் 11ம் வீட்டு
அதிபதி பாதிக்கப்பட்டுள்ளதால் செல்வத்திற்க்கு மற்றவர்களின் எதிர்ப்பார்ப்பை பெற‌வேண்டும்.
    5ம் வீட்டு அதிபதி சனி 3ல், தன் வீட்டையே 3ம் பார்வையால் வைத்துள்ளார். துர்திஷ்டம்.
    ராசியிலும், நவாம்சத்திலும் சனி, சுக்கிரன் கூட்டு வர்க்கோத்தமம் அடைந்துள்ளது. திருமணம் ஆனவுடன், மனைவியின் மூலம் ஜாதகர்க்கு செல்வம் கிடைக்க வழியிருக்கிறது.
    10ம் வீட்டு அதிபதி 8ம் வீட்டிலுள்ளபடியால், வேலையில் அடிக்கடி மாற்றம் எற்படும். தடைகள் எற்படகூடும்.பணிகாலம் மிக குறுகியதாக
இருக்கும். கட்டிடம் கட்டும் சம்பந்தப்ப‌ட்ட தொழிலில் வேலை செய்வார்.
    சனியின் 10ம் பார்வை 12ம் வீட்டின் மீது. அயனம், சயனம், போகம் பாதிப்பு.
    3ல் இருக்கும் சுக்கிரன் வீட்டில் உள்ள உறவை கெடுக்கும். நிலைதடுமாறி விடுபவர்.
    இந்த ஜாதகத்தில் சொல்லும்படியாக எந்த யோகமும் இல்லை.
    சந்திரசேகரன் சூரியநாராயணன்
    Thursday, February 20, 2014 9:17:00 PM/////
--------------------------------------------------
7
////Blogger vanikumaran said...
    ஜாதகர் படிக்காதவர்.
    1.கல்விக்கு 4ம் வீடு. பாபகத்தாரி யோகத்தில்
    2.4ம் அதிபதி சனி 4க்கு 12ம் இடத்தில்
    3.கல்விக்கு காரகன் புதன் பாதகாதிபதி சூரியனுடன்
    பணவரவிற்க்கு
    1.2ம் வீட்டில் மாந்தி இது ஏழ்மை நிலை
    2. 2ம் வீட்டு அதிபதி செவ்வாய் நீசம்
    3.10ம் அதிபதி உச்ச சந்திரன் 2ம் வீட்டை பார்பதால் தொழில் மூலம் பணவரவு இருந்தாலும் லாபம் இல்லை. 11ம் அதிபதி லாபாதிபதி பாபகத்தாரி
யோகத்தில். உடன் 12ம் அத்பதி
    கைக்கும் வாய்க்கும் ஆன நிலை.
    பூர்வபுண்ணியாதிபதி சனி அஸ்டமாதிபதி சுக்ரனுடன் உள்ளதால் பலன் இல்லை
    Thursday, February 20, 2014 11:18:00 PM//////
-------------------------------------------------
8  
///////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    Quiz No.42.
    துலா லக்னம் ,ரிஷப ராசி .திசை இருப்பு 4.1.7.,
    கல்வி .படிப்பு :...
    1.லக்னத்திற்கு 4 மிடம் கல்வி ஸ்தானம் ...அதிபதி சனி அந்த வீட்டிற்கு 12ல் தனுசில் .
    2.5 மிடம் நுண்ணறிவு .அங்கே புதன் சூரியன் கூட்டணி புத ஆதித்ய யோகம்
    [சூரியனுக்கு பகை வீடு -புதன் சம வீடு ]கல்வி கற்காமல் பல கலைகளும் தெரிந்தவர்.பலதுறை நிபுணர்
    3. கல்விகாரகன் புதன் இருப்புக்கு 12 மிடம் 4ம் வீடு
    ஆகவே உயர் கல்வி இவருக்கு இல்லை ..பள்ளி படிப்போடு சரி..!!
    செல்வம் :....
    2,5,9,10,11 இடங்களை வைத்து பார்த்தால்...
    1...2ல் மாந்தி ஒ ஒ ஒ ஒட்டை வாளி ..2&7குடையவன் செவ்வாய் 9ல் நீசம்
    2... 5,9.மிடம் வைத்து பார்க்கும் போது பூர்வ புண்ணியம் குறைவுதான் !!
    3..10ல் செவ்வாய் நீசம் 10ம் வீட்டு அதிபதி 8ம் வீட்டில் உச்சம்.அது சந்திரன்.!! ..போச்சு..போச்சு...எல்லாம்.. போச்சு.. அது தர்க்கம் விவாதம் பண்ண சரி ..!!
    4..11ம் வீட்டதிபதி 5ல் பகை வீட்டில் ..
    5..ஆக ராஜ கிரகமான.சூரியன்&சந்திரன் வலுவிழந்து போனார்கள்
    6...லக்னாதிபதி 3ல் சனியுடன் துலாத்துக்கு யோககாரகன் சனி அவன் .3ல். பிரயோஜனம் இல்லை ..6&12 ல் கேது இருப்பதால் வாழ்க்கை பாடம்
இதுதான் என கண்டு மனம் தேற்றி ஞானி போல் வாழ்வார்.
    செல்வம் ...**செல்வோம்**
    ***ஆக கல்வி இந்த நபருக்கு பள்ளி படிப்போடு சரி.பலதுறை நிபுணர் .**.!!
    ***ஆக ஏதாவது ஒரு வகையில சம்பாத்தியம் வந்தாலும் கைல தங்காது??
    வாய்க்கும் கைக்குமான வருமானம் ..***
    Thursday, February 20, 2014 11:58:00 PM/////
=================================================================== 

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

16 comments:

  1. Arintaen. Oru Jathakattai eppai ellam alasa vendi irukkiratu? Viyantaen

    ReplyDelete
  2. அருமையாக ஒரு ஜாதகத்தை அலசியிருக்கிறீர்கள் ஐயா...
    வியப்பாக இருக்கிறது.

    ReplyDelete
  3. Sir,

    10th house owner is ucham and seeing 2nd house. How he couldn't help native in his profession and wealth.

    Thanks,
    GS

    ReplyDelete
  4. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    ஆத்தா ..!!! நான் பாஸ் பண்ணிட்டேன் ...!!!
    ஒரு விஷயத்தை கவனிக்க விட்டு விட்டேன். 4 மிடம் பாபகர்த்தாரி யோகத்தில் இருக்கின்றது என்பதை !!! அது மிகவும் முக்கியமால்லவா??.அதை கணக்கிட்டால் .மேலும் அலச வேண்டியதில்லையே !!.
    வாத்தியார் அய்யா .இருக்க இடம்.. உடுக்க உடை.., உண்ண உணவு .., இந்த மூன்றுக்கும் வழி வகுத்தவர்கள் யார் . எவ்வாறு .அதோடு .6ம் வீட்டுக்காரன் குரு . இவரை பொருத்தவரை வில்லன்??? .குரு பார்வை லக்னத்தின் மேல் இருப்பதால் மேற்கண்ட இந்த 3ம் கிடைத்ததா???என்பதை கொஞ்சம் தெளிவு படுத்த வேணுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
    நன்றி..

    ReplyDelete
  5. மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.

    புதிருக்கான விடையளிக்க தவற விட்டமைக்காக மன்னிக்கவும் ஐயா. (அவசரத்தில் கை பேசியை மற‌ந்து தொழிற்ச்சாலையிலேயே வைத்துவிட்டு வந்ததானால் பதிலலிக்க இயலாமல் போய் விட்டது.)

    நன்றி ல ரகுபதி

    ReplyDelete
  6. இது தான் வகுப்பறை
    இதைத்தான் எதிர்பார்த்தோம்

    இந்த பணிக்கு எத்தனை நன்றி
    இங்கே சொல்வது

    ReplyDelete
  7. ///இது தான் வகுப்பறை
    இதைத்தான் எதிர்பார்த்தோம்//////

    பூமியில் இருப்பதும்
    வான‌த்தில் பறப்பதும்
    அவரவ‌ர் எண்ணங்களே.....

    வாத்தியார் தலைப்பை அழகாக கொடுத்துள்ளார்.
    சூழ்நிலைக்கு எற்ப தலைப்பை கொடுப்பது
    வாத்தியாருக்கு நிகர் வாத்தியாரே.

    தாங்கள் எதிர்பார்த்த வகுப்பறை
    பூமியிலா வானத்திலா

    தங்களுடய எண்ணங்கள்
    பூமியிலா வானத்திலா

    இதை என்றால் எதை...

    சிந்தனைக்கு பல இடம்
    சித்தனுக்கும் பல இடமோ

    சிந்தித்த‌து பல விதம்
    சிக்கிதவிப்பதும் ஒரு விதம்

    நண்பரின் மகிழ்ச்சியே
    என்னுடய மகிழ்ச்சி

    வாழ்க வளமுடன்..



    ReplyDelete
  8. எனது தந்தையும் துலா இலக்கினம். அவருக்கும் 2ம் வீட்டு அதிபர் செவ்வாய் நீசம். பரம்பரை சொத்தும் சரியாக கிடைக்கவில்லை. பெரிதாக சம்பாதிக்கவும் இல்லை. ஆனால் வீடு வாகன வசதி இருந்தது. இந்த ஜாதகத்தில், இலாபாதிபதி தனது வீட்டை பார்ப்ப‌தாலும், தன காரகர் இலக்கினாதிபதியையும், யோக காரகரையும், இலாபாதிபதியையும் பார்ப்பதாலும் பிற்காலத்தில் வசதி வாய்ப்புகள் வந்திருக்கும் என்று தவறாக கணித்து விட்டேன். இதன் மூலம் 2ம் வீட்டு அதிபதி நீசம் பெற்றால், அதுவும் மாந்தியோ, மற்ற இயற்கையான தீய கிரகங்களோ 2ம் வீட்டில் இருந்து, சுப கிரக பார்வை பெறாவிட்டால் பெரிதாக வசதிகள் இருக்காது என்று புரிகிறது. சரியான விடையளித்தவர்களுக்கும், புதிரில் கலந்து கொண்டவர்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. Blogger A. Anitha said...
    Arintaen. Oru Jathakattai eppai ellam alasa vendi irukkiratu? Viyantaen

    தொடர்ந்து பாடங்களைப் படியுங்கள். உங்களுக்கும் அலசும் திறமை உண்டாகும். நீங்களும் மற்றவர்களை ஒரு நாள் வியப்படைய வைக்கலாம். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. /////Blogger சே. குமார் said...
    அருமையாக ஒரு ஜாதகத்தை அலசியிருக்கிறீர்கள் ஐயா...
    வியப்பாக இருக்கிறது./////

    தொடர்ந்து பாடங்களைப் படியுங்கள். உங்களுக்கும் அலசும் திறமை உண்டாகும். நீங்களும் மற்றவர்களை ஒரு நாள் வியப்படைய வைக்கலாம். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. /////Blogger KJ said...
    Sir,
    10th house owner is ucham and seeing 2nd house. How he couldn't help native in his profession and wealth.
    Thanks,
    GS////

    எட்டாம் வீட்டில் போய் சிக்கிக்கொண்டு விட்டதால், ஜாதகருக்கு ஒரு நல்ல, நிரந்தமான வேலையைக்கூட வாங்கித் தர முடியாதவன், இரண்டாம் வீட்டிற்கு எப்படி உதவ வருவான்?

    ReplyDelete
  12. Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    ஆத்தா ..!!! நான் பாஸ் பண்ணிட்டேன் ...!!!
    ஒரு விஷயத்தை கவனிக்க விட்டு விட்டேன். 4 மிடம் பாபகர்த்தாரி யோகத்தில் இருக்கின்றது என்பதை !!! அது மிகவும் முக்கியமால்லவா??.அதை கணக்கிட்டால் .மேலும் அலச வேண்டியதில்லையே !!.
    வாத்தியார் அய்யா .இருக்க இடம்.. உடுக்க உடை.., உண்ண உணவு .., இந்த மூன்றுக்கும் வழி வகுத்தவர்கள் யார் . எவ்வாறு .அதோடு .6ம் வீட்டுக்காரன் குரு . இவரை பொருத்தவரை வில்லன்??? .குரு பார்வை லக்னத்தின் மேல் இருப்பதால் மேற்கண்ட இந்த 3ம் கிடைத்ததா???என்பதை கொஞ்சம் தெளிவு படுத்த வேணுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
    நன்றி..

    எட்டில் இருந்தாலும் பாக்கியாதிபதி சந்திரன் உச்சம் பெற்றதும் ஒரு காரணம். குருவின் பார்வை லக்கினத்தின் மேல் இருப்பதும் ஒரு காரணம்!

    ReplyDelete
  13. ////Blogger raghupathi lakshman said...
    மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.
    புதிருக்கான விடையளிக்க தவற விட்டமைக்காக மன்னிக்கவும் ஐயா. (அவசரத்தில் கை பேசியை மற‌ந்து தொழிற்ச்சாலையிலேயே வைத்துவிட்டு வந்ததானால் பதிலலிக்க இயலாமல் போய் விட்டது.)
    நன்றி ல ரகுபதி////

    இதில் வருத்தப் படுவதற்கும் ஒன்றுமில்லை ராசா! அடுத்த புதிரில் உங்கள் கை வண்ணத்தைக் காட்டுங்கள்!

    ReplyDelete
  14. /////Blogger வேப்பிலை said...
    இது தான் வகுப்பறை
    இதைத்தான் எதிர்பார்த்தோம்
    இந்த பணிக்கு எத்தனை நன்றி
    இங்கே சொல்வது//////

    அடுத்த பின்னூட்டத்தில் திருவாளர் சந்திரசேகரன் சூரியநாராயணா அவர்கள் எழுதியுள்ளதையே என்னுடைய பதிலாக எடுத்துக்கொள்ளுங்கள் வேப்பிலையாரே!

    ReplyDelete
  15. Blogger Chandrasekaran Suryanarayana said...
    ///இது தான் வகுப்பறை
    இதைத்தான் எதிர்பார்த்தோம்//////
    பூமியில் இருப்பதும்
    வான‌த்தில் பறப்பதும்
    அவரவ‌ர் எண்ணங்களே.....
    வாத்தியார் தலைப்பை அழகாக கொடுத்துள்ளார்.
    சூழ்நிலைக்கு எற்ப தலைப்பை கொடுப்பது
    வாத்தியாருக்கு நிகர் வாத்தியாரே.

    தாங்கள் எதிர்பார்த்த வகுப்பறை
    பூமியிலா வானத்திலா
    தங்களுடய எண்ணங்கள்
    பூமியிலா வானத்திலா
    இதை என்றால் எதை...
    சிந்தனைக்கு பல இடம்
    சித்தனுக்கும் பல இடமோ
    சிந்தித்த‌து பல விதம்
    சிக்கிதவிப்பதும் ஒரு விதம்
    நண்பரின் மகிழ்ச்சியே
    என்னுடய மகிழ்ச்சி
    வாழ்க வளமுடன்..//////

    உங்கள் பின்னூட்டம் அவருக்கு (வேப்பிலையாருக்கு) உரிய பதிலாக அமைந்துள்ளது. நன்றி சுவாமி!

    ReplyDelete
  16. ////Blogger thozhar pandian said...
    எனது தந்தையும் துலா இலக்கினம். அவருக்கும் 2ம் வீட்டு அதிபர் செவ்வாய் நீசம். பரம்பரை சொத்தும் சரியாக கிடைக்கவில்லை. பெரிதாக சம்பாதிக்கவும் இல்லை. ஆனால் வீடு வாகன வசதி இருந்தது. இந்த ஜாதகத்தில், இலாபாதிபதி தனது வீட்டை பார்ப்ப‌தாலும், தன காரகர் இலக்கினாதிபதியையும், யோக காரகரையும், இலாபாதிபதியையும் பார்ப்பதாலும் பிற்காலத்தில் வசதி வாய்ப்புகள் வந்திருக்கும் என்று தவறாக கணித்து விட்டேன். இதன் மூலம் 2ம் வீட்டு அதிபதி நீசம் பெற்றால், அதுவும் மாந்தியோ, மற்ற இயற்கையான தீய கிரகங்களோ 2ம் வீட்டில் இருந்து, சுப கிரக பார்வை பெறாவிட்டால் பெரிதாக வசதிகள் இருக்காது என்று புரிகிறது. சரியான விடையளித்தவர்களுக்கும், புதிரில் கலந்து கொண்டவர்களுக்கும் வாழ்த்துகள்./////

    புரிந்துணர்விற்கும் அதை வெளிப் படுத்திய மேன்மைக்கும் நன்றி பாண்டியரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com