12.2.14

Astrology: Quiz 40 குயிலாக நான் இருந்தென்ன, குரலாக நீ வரவேண்டும்!

 
Astrology: Quiz 40 குயிலாக நான் இருந்தென்ன, குரலாக நீ வரவேண்டும்!

Quiz No.40: விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

தொடர் - பகுதி நாற்பது.

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு ஒரே ஒரு கேள்விதான்! (உங்களை அதிகம் சிரமப்படுத்த விரும்பவில்லை)
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அய்யனின் (அன்பரின்)  ஜாதகம். அன்பரின் திருமண வாழ்க்கையை அலசி எழுதுங்கள். ஆசாமிக்குத் திருமணம் ஆயிற்றா? அல்லது ஆகவில்லையா? ஆயிற்றென்றால் எப்போது ஆயிற்று? ஆகவில்லை என்றால் - ஏன் ஆகவில்லை? சர்ஃப் எக்செல் போட்டு அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள். காரணத்துடன் எழுதுங்கள்



அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
========================================================

28 comments:

  1. Late married.

    Lagna god is not in good position, venus in 8th house and 4 planets in same place and seeing lagna.

    Moon in second house and saturn in good position which made him to get into marriage life may be after 42 age.

    ReplyDelete
  2. லக்னாதிபதி சூரியன் 7ல் அமர்ந்தது திருமணத்திற்கு சுகமில்லாத அமைப்பு.

    7ம் இடத்திற்கு உரிய சனி தன் வீட்டிலேயே அமர்ந்து சூரியனால் அஸ்தங்கதம். யோககாரகனான செவாயும் 7ல் அமர்ந்து அஸ்தண்க்காதம்.இரண்டாம் வீட்டு அதிபதி புதனும் 7ல் அமர்ந்து அஸ்தங்கதம்.சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு சாதாரணமாகவே தாமதத் திருமணம்.

    களத்திரகாரகன் 8ல் மறைந்தாலும் உச்சத்தை அடைந்து 8ம் வீட்டுக்காரரான குரு பகவானுடனேயே கூட்டணி.

    குருதசா புத புக்தியில் 32 வயது போல திருமணம். கஜகேசரியோகம் அதற்குத் துணையாய் இருந்திருக்கும்.

    ReplyDelete
  3. 50 வயது முடியப் போகும் ஜாதகருக்கு தாமத திருமணம் நடந்திருக்க வேண்டும். 7ம் வீட்டுக்கார சனி பகவான் 7ம் வீட்டிலேயே இருக்கிறார். உடன் இலக்கினாதிபதி சூரியன், 2ம் வீடான குடும்ப வீட்டுக்கார புதன், மற்றும் சிம்ம இலக்கினத்திற்கு யோககாரகனான செவ்வாய். 7ம் வீடு கிரக யுத்தத்தில் மாட்டி இருந்தாலும், களத்திரகாரகரான சுக்கிரன் குருவுடன் இலக்கினத்திற்கு எட்டாம் வீட்டில் இருந்தாலும், அது 7ம் வீட்டிற்கு 2ம் வீடு. அதோடு சுக்கிரன் எட்டாம் வீட்டில் இருப்பது ஒரு நல்ல அமைப்பு. இந்த ஜாதகத்தில் அவர் உச்சமாகவும் இருக்கிறார். அதனால் செல்வத்திற்கு குறைவிருக்காது. கஜ கேசரி யோகமும் உள்ளது. வியாழ தசையில் இவருக்கு திருமணம் நடந்திருக்க வேண்டும். ஆனால் 7ம் வீட்டில் கிரக யுத்தம் இருப்பதோடு, 7ம் வீட்டில் சனி இருப்பதாலும், செவ்வாய் தோஷமும் இருப்பதால் தாமத திருமணம்தான். சனி தசையில் இவர் மனைவியை பிரிந்திருப்பார்.

    ReplyDelete
  4. Result: Marriage is denied for this horoscope. The native is a spiritual person who might be an astrologer or mystic by profession. The native is also interested in public service.

    1) 7th house is severely damaged with 4 malefics.
    2) Saturn is also the sixth lord for simha lagna.
    3) Kalatra karaka venus is in 8th house and associated with 8th lord. kalatra karaka venus is in graha yuddha.
    4) 2nd from 2nd house has mandi.


    ReplyDelete
  5. அன்பருக்குத் திருமணம் நடந்திருக்காது.

    1) களத்திரகாரகன் எட்டாம் அதிபதியுடன் எட்டில் மறைந்துவிட்டார் (உச்ச சுக்கிரன் கண்டந்த தோஷத்தில் மாட்டியிருக்கிறார்)
    2) களத்திர ஸ்தானாதிபதியுடன் இரண்டு நேர் எதிரிகள் ஏழாம் இடத்தில் அமர்ந்து அந்த இடத்தைக் கெடுத்துவிட்டார்கள். அனைவருமே பாபிகள் (பாபிகளுடன் சேர்ந்துவிட்ட புதனும்தான்)
    3) ஏழாம் அதிபதி சனி, எதிரியான செவ்வாயின் நக்ஷத்திரக் காலில் அமர்ந்துவிட்டதால் அவரது தசையிலும் ஒன்றும் செய்யமுடியவில்லை.
    4) குடும்பஸ்தானத்தில் பன்னிரண்டாம் அதிபதி. சுபர்களின் பார்வை இருந்தாலும், அவர்கள் மூன்று, எட்டாம் அதிபதிகள்.
    5) எல்லாவற்றுக்கும் மேல் ஐந்தில் கேது. இவர் விரக்தியைக் கொடுத்திருப்பார்.

    ReplyDelete
  6. அய்யா அவர்களுக்கு குரு திசையில் அழகான துணைவி அமைத்திருக்கும். ஏழாம் இடத்தில கலவையாக கிரகங்கள் இருந்தாலும் களத்திரகாரகன் உச்சம் பெற்று குருவோடு இரண்டாமிடத்து உள்ள சந்திரனை பார்கிறார்கள்.

    ReplyDelete
  7. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

    புதிர் பகுதி 40 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி

    லக்னாதிபதி சூரியன், களத்திர ஸ்தான அதிபதி சனியுடன் சேர்ந்து இருப்பதால் கண்டிப்பாக திருமணம் நடைபெர்று இருக்கும்.
    குரு, களத்திர காரகன் சுக்கிரனுடன் சேர்ந்து குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பது இதை உறுதி செய்கிறது.
    ஆனால் சனி பகவான் 7ல் ஆட்சி பெற்று செவ்வாய் உடன் சேர்ந்து இருப்பதால் தாமதமாகத் திருமணம் நடந்திருக்கும்.

    ஜாதகருக்கு, 2001ம் வருடம் அவருடைய 37 வயதில், குரு தசை செவ்வாய் புக்தியில் திருமணம் நடந்திருக்கும்.

    ReplyDelete
  8. பிறந்த நாள் : 29 /02 /1964
    7 இல் சனி.
    திருமண தாமதத்தை தரும்.
    காரகன் சுக்கிரன் உச்சம்.
    உடன் ஆட்சி பலத்துடன் குரு.
    சந்திர ராசியின் படி 7 இல் சுக்கிரன்.
    குரு திசையில் திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளது.

    ReplyDelete
  9. குருவிற்கு வணக்கங்கள்,
    திருமண யோகம் உள்ள ஜாதகம்.
    7ம் அதிபதி ஆட்சி, லக்கினாதிபதி பார்வை,குடும்ப ஸ்தானாதிபதி புதனின் பார்வை உள்ள லக்கினம். செவ்வாய் 7ல் இருந்தாலும் யோககாரகனாவதால் தோஷமில்லை.செவ்வாய் வர்க்கோத்தம்மாகியுள்ளார். முக்கியமாக வர்க்கோத்தம குரு மற்றும் வர்க்கோத்தம உச்ச சுக்கிரனின் பார்வை குடும்ப ஸ்தானத்தில். குரு தசை சனி புக்தியில் அதாவது 27ம் வயதில் திருமணமாகியிருக்கலாம்.

    ReplyDelete
  10. திருமணம் உண்டு
    1. லக்கின அதிபதி 7ல் - பார்வை லக்கினததின் மேல்
    2. 7ம் அதிபதி 7ல் - பார்வை லக்கினததின் மேல்
    3. சுகாதிபதி செவ்வாய் கெட்டு 7ல் உள்ளார் - இது திருப்தி இன்மையை காட்டுகிறது
    4. குரு (ஆட்சி) + சுக்ரன் (உச்சம்) - இருந்தாலும் அவர்கள் பகைவர்கள், அதனால் வீஷேசம் இல்லை.

    ReplyDelete
  11. Dear Sir,

    The provided horoscope 12th lord in 2nd, leads to loss. and loss of family.
    7th lord in 7th. 8th lord guru in 8th.
    Many planets in 7th. All made him to make multiple partners.
    Sukran uchham and vargotama. Mars also vargotama. means ,the strong desire of material life to the person. Whereas the sukran in 8th place strong, leads to multiple sexual partners.
    Also 7th lord saturn with mars with sun, mercury leads to loss of partner.
    so No family life.

    Thanking you sir.

    ReplyDelete
  12. Respected Sir,

    My answer for our today's Quiz No.40:

    Date of birth : 01.03.1964
    Time of birth : 06:00 to 6:30pm

    NATIVE OF THE GIVEN HOROSCOPE MARRIED BUT DELAYED MARRIAGE.

    Reason 1:

    Though Seventh lord(Saturn) is sitting in its own house, it's affected. Because it is associated with two bad planets (Sun and Mars).

    Reason 2:

    Kalathra karaha (Venus) is sitting eigth place from lagna. it is bad for timely marriage.

    Reason 3:

    Dhasa and sub periods are also not supported to do marriage in time. Base dhasa is Mars (almost seven years) thereafter Rahu dasa (eighteen years).In Guru dasa, later period only he married.

    In short, the native married after 35 years of his age.

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  13. பிறந்த தேதி 1.3.1964. நேரம் - மாலை 6 மணி

    லக்னாதிபதி 7ல் - பகை வீட்டில்.
    7ம் அதிபதி - ஆட்சி மற்றும் மூலதிரிகோணத்தில் - ஆனால் சிம்ம லக்னத்திற்கு பாதகாதிபதி.
    களத்திரகாரகன் - 8ல் உச்சம் பெற்று மறைவு.
    செவ்வாய் 7ல் இருந்தாலும், கும்பத்தில் இருப்பதால் - செவ்வாய் தோஷம் இல்லை.

    7ல் - சூரியன், சனி, செவ்வாய், புதன் - எந்த ஒரு நல்ல கிரகத்தின் பார்வையும் இல்லை.

    சுக்கிரன் 8ல் மறைந்தாலும், பாதகாதிபதி ஆனபடியால், 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்ற அடிப்படையில் நன்மை அளிப்பார். திருமணம் உண்டு. ஆயினும் 7ல் அமர்ந்த சனியும், புதனும் சிம்ம லக்கினக்காரர்களுக்கு பாதகாதிபதிகளாக இருப்பதால், தாமதமான மற்றும் சங்கடமான திருமண வாழ்க்கை.

    5ல் கேது மற்றும் 8ல் குரு (5ம் அதிபதி & காரகன்) மறைவு - குழந்தை பாக்கியம் குறைவு.

    ReplyDelete
  14. மதிப்பிற்குரிய ஐயா,
    ஜாதகருக்கு நிச்சயம் திருமணம் ஆகியிருக்கும்.
    சுக்ரன் உச்சம் ஆனால் 8ல், 7ல் 6,7க்குடைய சனி ஆகையால் தாமத திருமணம்.
    லக்னாதிபதியும் 7க்குடையவனும் யோகக்காரகனான செவ்வாய் மற்றும் 2க்குடைய புதனுடன் சேர்ந்து 7ல். சிம்ம லக்னத்திற்கு 6க்குடையவனும் சனியே மேலும் 7ல் சூரியன்+செவ்வாய் சேர்க்கை, 11ஆம் வீட்டின் அதிபதி 7ஆம் வீட்டோடு சம்பந்தம் ஆகையால் இருதார யோகம்.(Second wife results due to the death of first wife)Unhappy marriage life.

    ReplyDelete
  15. திருமணத்திற்கு 7ம் வீடு 7ம் அதிபதி,சுக்கிரன் இவற்றில்.
    1. 7ம் வீடு சனி,சூரியன்,செவ்வாயால் கெட்டுள்ளது.
    2. 7ம் வீட்டு அதிபதி சனி 7ல் ஆட்சி. ஆனாலும் லக்னத்திற்க்கு சனி பார்வை உள்ளது. இது தாமத திருமணம் போல் தோன்றினாலும்,
    3. லக்நாதிபதி சூரியனால் சனி, பாக்யாதிபதி,சுகாதிபதி, செவ்வாய், குடும்பாதிபதி புதன், அஸ்தமனம் அடைந்துள்ளனர்.
    4. களதிரகாரகன் சுக்கிரன் உச்சம் ஆனாலும் 8ம் மறைவு ஸ்தானத்தில் உடன் அஸ்டமாதிபதியால் கெட்டுள்ளது

    குடும்ப வாழ்விற்கு 2ம் வீடு, அதிபதி, குரு இவற்றில்.
    1. 2ல் சந்திரன் – இளமையில் திருமணம் என்றாலும், சந்திரன், விரையாதிபதி வாழ்கை விரையம். 2ம் வீட்டிற்கு செவ்வாய் பார்வை உள்ள்து. செவ்வாய் தோசம்
    2. அதிபதி புதன் 7ல் சூரியனுடன் அஸ்தமனம்,
    3. மற்றும் காரகன் குரு 8ம் வீட்டில் மறைவில் 3ம் அதிபதி சுக்கிரனுடன் கெட்டுள்ளது
    ஆகவே திருமணம் மற்றும் குடும்ப வாழ்விற்க்கு எதிரான (இல்லாத) அமைப்பு.

    ReplyDelete
  16. வாத்தியார் வணக்கம்
    எனக்கு சரியா கணிக்கதெரியவில்லை. இருந்தாலும் இவர் திரும்ண்ம் செய்துகொண்ட்வ்ர் த்ன்குடும்ப்த்தில் குரு சுக்கிரன் நேரடியா பார்த்து கொள்ளுதல்
    மேலும் ச்னி தசாபோகும்போது திரும்ணம் செய்துகொண்ட்ர். 3ல் மாந்தி புத்ன்2க்கு 6ல் வெள்ளி 4க்கு 6ல் திரும்ண குடும்ப வா நிம்ம்தி இல்லை 12வ்து வீட்டிற்குரிய் கிரக்ம் ச்ந்திர ன் 2ல் இது ந்ல்லதில்லை ச்னிரொம்ப் தொந்தரவுப்ண்ணும் ச்னி சிம்ம்ல்க்னத்திற்குஎதிரி ச்ந்திரன் விரய்திப்தி

    ReplyDelete
  17. Dear sir:
    My Answer for Quiz:40

    Jathakarukku Thirumanam (during kuru nokkam)nadanthirukkum (Age between 32Y/5M/28D to 35Y/1M/28D) "Kuru" thasai Sukira "Putthi".

    Reasons:
    1.Kalathira karakan "Sukiran":- UTCHAM + "Guru" AATCHI veedu. And both kirakas 7th parvai in 2nd house "Kudumbam shtanam".

    2.7th house "Kalathira shtanam":- No need to consider this house. Due to 4 planets are occupied, hence "Kiraka utham" (i could not judge that, which planet is the winner)

    3.Kudumbam shtanam:"Chanthiran". Nadpu veedu.

    ReplyDelete
  18. வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்,

    ஜாதகத்தில் 7 ல் லக்கினாதிபதி சூரியன் - வித்தியகாரகன் மற்றும் குடும்பஸ்தனதிபதி புதன், பாக்கியாதிபதி செவ்வாய் - எல்லோரும் சனியின் பிடியில் கெட்டு குட்டிசுவர் ஆகிவிட்டார்கள்.
    போததற்கு 8 ம் இடத்தில் களதிரகரகன் சுக்கிரனும், சுப கிரகம் குரு.
    மேலும் குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் அவயோகத்தில்.

    எனவே இந்த ஜாதகருக்கு திருமணம் நடக்க வாய்ப்பில்லை மேலும் இவருக்கு படிப்பும் இல்லை.

    ReplyDelete
  19. Respected Sir,

    Thirumanam Marukkapetra jadhagam illai. 2-m adhibathy Budhan 7-il. 7-m adhibathy 7-il and Lagnadhipathy 7-il & Kaaragan Sukran 8-il Uccham. (Sukran 8il amarvadhu Vaangi vandha varam. Adhuvum ivarukku Uccham Petra sukran) Thirumanam 100% Nichayam.

    Eppoludhu Thirumanam.
    Kaalam kadandha Thirumanam. 40 vayadhukku maele.

    Kaarpacel iruppu : 6.6 years +
    Raghu dhasa : 18 Years+
    8-m adhipathy Dhasa : 16 years = 40.6 years.
    7-m adhibathy Aatchi petra karanathal Sani dhasavil 41 vadhukku piragu Thirumanam Nadandhu irukkum.

    7-il sani kaalam kadandha thirumanam. 40.6 vayadhil Sani dhasa Suyabukthi alladhu 7il amarndha Budhan bukthiyil thirumanam Nadandhirukkum.

    Thank You.

    ReplyDelete
  20. வணக்கம்.கேட்டதும் கொடுத்து விட்டீர், வாத்தியாரைய்யா!கிரகயுத்தத்திற்கான உதாரண ஜாதகம். நன்றிகள் பல! கொடுக்கப்பட்ட ஜாதகர் மார்ச் 1, 1964ம் வருடம் இரவு 7.00 மணியளவில் பிறந்தவர். களத்திர ஸ்தானத்தில் சனியுடன் சூரியன் மற்றும் செவ்வாய் இருப்பதால் களத்திர மரணம் அல்லது விபத்னி யோகம். அதனால் இந்த ஜாதகர் தன் மனைவியை இழந்தவர்.

    ReplyDelete
  21. Hi Sir, Greetings!!!

    As Saturn and Mars are in 7th Place and Venus are in 8th place there is no chance in getting married.

    As well as Kethu are in 5th place and karaga Guru is in 8th place, this jothigam has puthira dosam.

    Thanks,
    Ravisankar. M

    ReplyDelete
  22. Hi Sir,

    7th house: Native will get lately married since Authority for marriage[venus] is exalted and yogakaragan Mars is in 7th house.
    Married life will have too much troubles since
    7th house is in planetary war.
    Saturn [6th lord and 7th lord] is in 7th house.
    Venus is associated to 8th lord.
    Lagna lord [Sun] is in enemy's house.
    Jupiter[8th lord] in own house sees 2nd house[family].
    Moon[12th lord] is in 2nd house[family]
    Moon is seperate causing Kemadruma bad yoga

    ReplyDelete
  23. Respected Sir
    This chart looks familiar to me. If my memory is correct, the owner did not get married as sun, Mars and Sani are there in 7th place, Sukra in 8th place and 12th lord in 2nd lord. I think even I asked the question, sun is the laknathipathi and Mars is the yogakaraka. So they should do good to the chart owner and sukra and Guru is looking at 2nd place.

    ReplyDelete
  24. மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.

    புதிர் 40க்குரிய பதில்:திருமண தடை உள்ள ஜாதகம்.திருமணம் ஆகவில்லை.
    *சிம்மலக்கினம்,கன்னிராசி.
    *7ல் செவ்வாய்,சனி,சூரியன் போன்ற தீயகிரகங்கள் அமர்ந்ததுடன் குடும்ப ஸ்தானாதிபதி புதன் இவர்களுடன் சேர்ந்து கெட்டுள்ளது.
    *சுபர்கள் சுக்கிரன் உச்சம்,குரு ஆட்சி எனினும் 8ல் மறைவு அத்துடன் 12க்கு
    உரியவன் சந்திரன்(தேய்பிறை சந்திரன்)குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்தது,குடும்பம்
    அமைய தடையாக அமைந்த்தது.
    *5ல் கேது சுபர் பார்வை ஏதுமின்றி அமர்ந்து சன்யாசயோகத்தை ஏற்படுத்தி
    உள்ளது.

    ReplyDelete
  25. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் .
    Quiz No.40 dt.
    1.. சிம்ம லக்னம் .கன்னி ராசி.
    2.. லக்னாதிபதி சூரியன் லக்னத்திற்கு 7ல்
    3..2ம் வீட்டுக்காரன் புதன் 7ல்
    4..6&7ம் வீட்டுக்காரன் சனி 7ல் ஆட்சி பேஷ் !பின்னி பெடல் எடுக்கிற ஆளு
    5..8ம் வீட்டுகாரன் 8ல் உடன் உச்சம் பெற்ற சுக்கிரன் .
    6..மிக முக்கியமாக கவனிக்க பட வேண்டிய விஷயம் ஞானகாரகன் கேது 5ல்

    இவருக்கு திருமணம் ஆகுமா??? ஆகாதா???
    காரணம் :-
    1...7 ல் சனி+ செவ்வாய் சேர்க்கை .
    2..7ல் சூரியன் +புதன்...**ஆக ரெண்டு வில்லன்[சனி+செவ்வாய் ] ஒரு பாவி[சூரியன் ] இவர்களோடு ஒரு ஜோக்கர்[புதன்] சேர்ந்து அவனும் வில்லனாகி விட்டான்
    3. களஸ்திரகாரகன் 8ல் உடன் குரு ..2ம் வீட்டை பார்த்தாலும் 2 ம் வீட்டில் சந்திரன் இருந்தாலும் இவர்களை விட **4**வில்லன்களின் பார்வை லக்னத்தை.பார்ப்பது .......கேது 5 ல் இருப்பது
    4.சுபர்கள் யாரவது 7ம் வீட்டை பார்கிறார்களா??..ம்ஹூம்

    சரி வரும் திசைகள் புக்திகளில் ஏதாவது நல்லது நடக்க வாய்ப்பு ??
    செவ்வாய் 6.7.16+ராகு 18=25 வயது அப்புறம் 8ம் வீட்டுக்காரன் திசை குரு 16வருடம் 41வயது பிறகு 6&7ம்வீட்டு அதிபதி சனி திசை 19...60 வயது எங்கே??? .அரும்பு கோணினால் வாசம் போகாது..!!இரும்பு கோணினால் யானையும் வெல்லலாம் ..!!நரம்பு கோணினால் நாமிதர்க்கு என் செய்குவோம் ..!!!
    **இந்த ஜென்மத்தில் திருமணம் கிடையாது ..திருமணம் கிடையாது .திருமணம் கிடையாது .**பண வசதி வாய்ப்புக்கு குறைவு இருக்காது !!

    **தெளிவான சந்நியாசி யோகம் **
    s.n.ganapathi.

    ReplyDelete
  26. QUIZ NO. 40 வணக்கம்
    01.03.1964 ஆம் தேதி மாலை 6.59 மணிக்கு பிறந்தவர் இந்த ஜாதகர்.

    லக்கினம்: சிம்மம், ராசி: கன்னி, நட்சத்திரம்: சித்திரை
    யோககாரகர்கள்: சூரியன், குரு, செவ்வாய், யோகமில்லாதவர்கள்: புதன், சுக்கிரன், சனி

    இது ஒரு பிரம்மசாரியாக இருந்து சன்னியாசியாக மாற கூடிய ஜாதகம்.

    திருமணம் மறுக்கபட்ட ஜாதகம்.

    சிம்ம லக்கினகாரர்கள் அஞ்சா நெஞ்சமும், வீரமும் உடையவர். இந்த ஜாதகம் சன்னியாசி ஆவதற்கான ஜாதகம்.நான்கு கிரகங்கள் கேந்திர வீட்டில் இருப்ப‌தால், அந்த அமைப்பு ஜாதகனைத் துறவறத்தில் தள்ளிவிடும். நிச்சயம் அவன் துறவறம் பூண்டு விடுவான்

    லக்கினாதிபதி சூரியன் 7ம் வீட்டில் பகை வீடான கும்ப ராசியில் புதன், செவ்வாய், சனி ஆகிய பாப‌ கிரங்களுடன் கூட்டு சேர்ந்து லக்கினம் (26 பரல்) பல‌மிழந்து காண‌ப்ப‌டுவ‌தால் திரும‌ண‌ம் ந‌டைபெற‌ வாய்ப்பில்லை.

    உச்ச‌மான களத்திரகாரகன் சுக்கிர‌ன்(2 பரல்) , குரு ஆகிய எந்த சுப கிரங்களின் பார்வையும் 7ம் வீட்டின் மீதும் அல்லது லக்கினத்தின் மீதும் பார்வை விழவில்லை. ஆகையினால், திரும‌ண‌ம் நிச்சியமாக இல்லை.

    சனிக்கு சூரியனும், செவ்வாயும் பகை கிரங்கள். ஆகையால் நன்மை பயக்காது. இது திருமண யோகத்திற்க்கு எதிரான அமைப்பு.

    இந்த ஜாதகத்தில், சனி, புதன், செவ்வாய் ஆகிய கிரங்கள் அஸ்த‌ங்கமாகியுள்ளன.அதனால்,. திருமணம் பிரிவில்தான் முடியும்

    7ம் வீட்டிலுருந்து செவ்வாய், சனி ஆகிய பாப கிரங்களின் 7ம் பார்வை லக்கினத்தின் மீது விழுவதால் திரும‌ண‌ம் ந‌டைபெற‌ வாய்ப்பில்லை.

    ஏழாம் வீட்டில் (26 பரல்) ஒன்று மேற் பட்ட நான்கு தீய கிரகம் அமர்ந்திருப்பதால் திருமணம் பிரிவில்தான் முடியும்.

    6ம் வீட்டு அதிபதி 7ம் வீட்டில் மற்ற தீய கிரங்களுடன் கூட்டு சேர்ந்து இருப்பதால் திருமணம் பிரிவில்தான் முடியும்

    2ம் வீட்டு அதிபதி புதன் 7ம் வீட்டில் பாப கிரகமான செவ்வாயுடன் கூட்டு சேர்ந்துள்ளதால் குடும்ப வாழ்க்கை அமைய வாய்ப்பு இல்லை.

    7ம் வீட்டிலுள்ள செவ்வாய், சனி ஆகிய கிரங்களின் தீய பார்வை 2ம் வீட்டினில் உள்ள சந்திரன் மீது விழுவதால் குடும்ப வாழ்க்கையில்லை.

    ஏழாம் வீட்டில் செவ்வாய் இருப்ப‌தால்,தர்ம நியாயம் இல்லாத காரியங்களைச் செய்பவான ஜாதகன் இருப்பான்.மண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது.

    7ல் சனியிருந்தால் ஜாதகன் நன்கு உயர்ந்து வாழ்வான். இந்த இடம் சனிக்கு மிகவும் உகந்த இடம். அதானல்தான் அந்தப்பலனை அவர் ஜாதகனுக்குக் கொடுப்பார். அதே நேரத்தில் ஜாதகனுக்கு மன அமைதியும், மகிழ்ச்சியும் இல்லாமல் செய்துவிடுவார்.

    5ல் கேது இருப்பதால், புத்திரதோஷம். குழந்தைகள் இழப்பு. வயிற்று உபாதைகள் உடையவர். வயதான காலத்தில் ஆன்மீகம்,வேதங்களில் ஈடுபாடு உண்டாகும். துறவுச் சிந்தனை மேலோங்கி ஆசிரமங்களில் போய்ச் சேர்ந்துவிடுவார். மேலும், ராகுவின் 7ம் பார்வை 5ம் வீட்டின்மீது விழுகிற‌து.

    11ஆம் வீட்டில் ராகு இருப்பதால் ஜாதகன் அதிகம் படித்தவனாகவும், நீண்ட ஆயுளை உடையவனாக இருப்பான்.

    இந்த ஜாதகத்தில் உள்ள முக்கியமான யோகங்கள்:
    1. ஆதி யோகம்: குரு, புதன், சுக்கிரன் 6,7,8ல் இருந்தால், உயர்ந்த பதவிகளை அடைவார்கள். வாழ்க்கை நன்றாக இருக்கும்.
    2. சசி மகா யோகம்: சனி கேந்திரத்தில் இருந்தால், ராணுவம், காவல்துரை, சட்டம்,உத்தியோகம் பெருவார்கள். ஆயுள் 70 வயதிற்க்கு மேல் இருக்கும்.
    3. கஜகேசரி யோகம்: சந்திரனிலிருந்து குரு கேந்திரத்தில் இருந்தால், அதிர்ஷ்ட்டம் ஆஸ்தி, முன்னேற்றம், வெற்றி எற்படும்.

    சந்திரசேகரன் சூரியநாராயணன்

    ReplyDelete
  27. Hello Sir

    Got married ( 29 year old), on Jupiter-Mercury-Venus, Kochara Jupiter in 2nd house.

    Navamsa - Mercury is 7th lord in Lagna.
    Thanks
    Satya

    ReplyDelete
  28. ஜாதகரின் திருமண வாழ்க்கையை அலசி எழுதும்படி கூறியிருந்தேன்!

    சரியான விடை:

    அநியாயத் தமதத்திற்குப் பிறகு, ஜாதகருக்கு அவருடைய 37ஆவது வயதில் திருமணம் நடந்தது. தாமதத்திற்கு என்ன காரணம்?

    சிம்ம லக்கின ஜாதகம் சித்திரை நட்சத்திரம்
    1. ஏழாம் அதிபதி சனி அந்த வீட்டில் உடன் இரண்டு தீய கிரகங்களின் பிடியில் (சூரியன் மற்றும் செவ்வாயுடன் சேர்க்கை)
    2. களத்திரகாரகன் சுக்கிரன் எட்டில் (மறைவு ஸ்தானத்தில்)
    3. சுப கிரகமான குரு பகவானும் எட்டில்
    4. ஜாதகனுக்கு செவ்வாய் திசை இருப்புடன் ராகு திசை முடியும்போது 25 வயதாகி விட்டது. அடுத்து வந்த மகா திசை அதிபதி குரு பகவானும் எட்டில் இருப்பதால், அந்த திசையும் மேன்மையுடையதாக இல்லை.
    5. லக்கினாதிபதி சூரியன் ஏழில் இருப்பதால், அவர் தன்னுடைய புத்தியில் (sub period) திருமணத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் தசா நாதனும் புத்தினாதனும் (குருவும், சூரியனும்) ஒருவருக்கொருவர் 12/2 நிலையில் இருப்பதைப் பாருங்கள். ஆகவே சூரிய புத்தியில் திருமணம் நடக்கவில்லை
    6. அதற்கு அடுத்துவந்த (குரு மகா திசை) சந்திர புத்தியில் ஜாதகனுக்குத் திரும்ணம் நடந்தது. சந்திரனும் குருவும் ஒருவருக்கொருவர் நேரடிப் பார்வையில் இருப்பதைப் பாருங்கள்
    உரிய தசா புத்தி வரும்போது நடக்க வேண்டியது நடக்கும். அதை வலியுறுத்திச் சொல்வதற்காகவே இந்தப் புதிர்ப்பாடம்.

    27 பேர்கள் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் 15 பேர்கள் சரியான விடையை எழுதியிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கொண்ட மற்ற நல் உள்ளங்களுக்கும் எனது வாழ்த்துக்கள். Better luck for them in the next
    quiz!

    சரியான விடையை எழுதியவர்களின் பெயர்கள், அவர்களுடைய பதிலுடன் 13.2.2014 பதிவில் உள்ளது.

    அன்புடன்
    வாத்தியார்
    ===============================================

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com