Astrology.Popcorn Post: தீபிகா படுகோனேயும், சொந்த வீடும்!
Popcorn Post No.47
பாப்கர்ன் சாப்பிட்டு ரெம்ப நாள் அகிவிட்டது. அதனால் இன்று பாப்கர்ன் பதிவு. கடைசியாக பார்ப் கார்ன் சாப்பிட்டது 12.8.2013 அன்று. நான்கு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. சிலர் சார், பார்ப்கார்ன் பதிவுகளைப் போடுங்கள் என்றார்கள். அவர்களை மகிழ்விக்க மீண்டும் பார்ப்கார்ன் பதிவுகள்
-----------------------------------------------------------------------------------
எல்லோருக்கும் பல கனவுகள் இருக்கும். அது தவிர்க்க முடியாதது. ஆனால் சிலருக்கு மட்டும்தான் அக்கனவுகள் நனவாகும். அதாவது நடக்கும்.
நியாயமான கனவுகள் என்றால் அது நம் முயற்சியாலும், நமக்கு உள்ள ஜாதகப் பலன்களாலும் நடக்கும். நியாயமில்லாத கனவுகள் நடக்காது.
ஒரு இளைஞன் திருமணம் செய்து கொள்ளக் கனவு காணலாம். ஜாதகத்தில் அதற்குரிய நேரம் வரும்போது, தன்னிச்சையாக நடந்து, அந்தக் கனவு நனவாகிவிடும். ஆனால் அமலா பாலைப் போன்று அல்லது தீபிகா படுகோனேயைப் போன்று ஒரு அழகான பெண்ணை மணந்து கொள்ள ஆசைப் படலாமா? அல்லது கனவுதான் காணலாமா? அது எப்படி நனவாகும். இந்தச் ஜென்மத்தில் அது நடக்காது.
அதுபோல எல்லோருக்கும் ஒரு பொதுவான கனவு உண்டு. அதுதான் சொந்த வீடு வாங்கும் கனவு. எத்தனை நாட்களுக்குத்தான் வாடகை வீட்டில் குடி இருப்பது?
புரட்டி எடுக்கும் விலைவாசி உயர்வில், உணவுப் பொருட்கள், உடைகள், பிள்ளைகளுக்கான கல்விச் செலவுகள், போக்குவரத்துச் செலவுகள் போன்றவற்றுடன் வீட்டு வாடகையையும் சேர்த்து எப்படிச் சமாளிப்பது? தொழில் செய்பவர்களுக்கு அது சாத்தியப்படும். ஆனால் வேலைக்குச் செல்பவர்கள் என்ன செய்யவார்கள் சொல்லுங்கள்? பாவம் அவர்கள்! அதுவும் unorganized sectorகளில் வேலைக்குச் செல்பவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள்.
-----------------------------------------------------------------
ஜாதகப்படி வீடு வாங்கும் அமைப்பு.
1.4காம் வீடு, அதன் அதிபதி, காரகன் செவ்வாய் (Authority for landed properties) ஆகியோர் வலிமையாக இருந்தால், அவர்களின் தசா புத்திகளில் வீட்டை வாங்குவீர்கள்.
2.லக்கினாதிபதி உட்பட மற்ற கிரகங்களின் அமைப்பை வைத்து, அதாவது அவர்களின் சேர்க்கை மற்றும் பார்வையை வைத்து அந்த வீட்டின் அமைப்பு (Size, look and place) இருக்கும்.
அதாவது நீங்கள் அம்பத்தூரில் வாங்குவீர்களா - அல்லது ஆவடியில் வாங்குவீர்களா - அல்லது திருமுல்லைவாயில், அல்லது திருவள்ளூர் போன்ற சென்னையின் புறநகர்ப் பகுதியில் வாங்குவீர்களா? என்பது தெரியும்.
மத்திய சென்னைப் பகுதிகளான தேனாம் பேட்டை, தி.நகர், அண்ணாநகர் போன்றவற்றை நான் குறிப்பிடவில்லை. அவற்றில் நீங்கள் வீடுகளை வாங்குவதென்றால் இன்றையத் தேதியில் கோடிகளில் பணம் வேண்டும். அதற்கு நீங்கள் வெளிநாடுகளில் கை நிறைய டாலர்களில் சம்பாதிக்கின்றவராகவோ, அல்லது இந்திய மண்ணில் ஒரு நிறுவனத்தின் மேலாளராகவோ அல்லது CMD ஆகவோ பணி செய்கின்றவராக இருக்க வேண்டும். அதுபோன்றவர்கள் எல்லாம் என்னுடைய ப்ளாக் படிப்பார்களா என்றும் தெரியவில்லை. ஆகவே அதை எழுதவில்லை
------------------------------------------------------------------
ஒரே ஒரு முக்கிய செய்தியை மட்டும் இங்கே சொல்கிறேன். நான்காம் வீட்டுக்காரனும், லக்கினாதிபதியும் ஒன்றாக நான்காம் வீட்டில் டெண்ட் அடித்து அமர்ந்திருப்பதோடு ஒரு சுபக்கிரகத்தின் கடைக் கண்பார்வையும் அவர்களுக்கு கிடைத்தால் ஜாதகன் நிச்சயம் ஒரு வீட்டை வாங்குவான்.
எப்போது வாங்குவான்?
கோள்சாரத்தில் செவ்வாய் பதினொன்றாம் வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தில் வாங்குவான்
--------------------------------------------------------------------------------------------
இவ்வளவுதானா?
இன்னும் பல அமைப்புக்கள் உள்ளன. என்னென்ன கிரகத்தால் என்னென்ன மாதிரி சொத்துக்கள் அமையும் என்பதை இன்னொரு நாள் விரிவாக எழுதுகிறேன். இங்கே அல்ல கேலக்சி2007 வகுப்பில். பொறுத்திருங்கள்.
பாப்கர்ன் பொட்டலத்தில் இவ்வளவுதான் தரமுடியும் சாமிகளா?
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
========================================================
Respected Sir,
ReplyDeleteThanks for the popcorn post.
Sir
ReplyDeletepl plan to once in a week for one popcorn post.
கனவு மெய்பட வேண்டும் என்றான்
ReplyDeleteகவிஞன் சுப்பிரமணிய பாரதி
கனவுகளே இல்லாதவருக்கு
காலம் தானே பதில் சொல்லும்
காலன் வந்து சேரும் முன்னர்
கந்தன் காலை பற்றிடுவோம்
Good Morning Sir !
ReplyDeleteசார்.. பாப்கார்ன் பதிவில் காரம் கொஞ்சம் குறைவு தான். இருந்தாலும் உடலுக்கும் அது தானே நல்லது. காலை வணக்கம் சார்.
ReplyDeletegood morning sir. good post on immovable property acquisition. it happened to me during 4th lord dasa in the end. (sukra dasa). mars is in ruling position in 5th house
ReplyDelete/////Blogger Chandrasekharan said...
ReplyDeleteRespected Sir,
Thanks for the popcorn post./////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
///Blogger karuppiah Sakthi said...
ReplyDeleteSir
pl plan to once in a week for one popcorn post.////
செய்துவிட்டால் போகிறது. நன்றி நண்பரே!
/////Blogger வேப்பிலை said...
ReplyDeleteகனவு மெய்பட வேண்டும் என்றான்
கவிஞன் சுப்பிரமணிய பாரதி
கனவுகளே இல்லாதவருக்கு
காலம் தானே பதில் சொல்லும்
காலன் வந்து சேரும் முன்னர்
கந்தன் காலை பற்றிடுவோம்/////
ஆமாம். அதுதான் முக்கியம்!சொத்தைப் பற்றிய கனவுகள் அதற்குப் பிறகுதான்! நன்றி வேப்பிலையாரே!
//////Blogger Sattur Karthi said...
ReplyDeleteGood Morning Sir !///
உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!
/////Blogger Covai Ravee R said...
ReplyDeleteசார்.. பாப்கார்ன் பதிவில் காரம் கொஞ்சம் குறைவு தான். இருந்தாலும் உடலுக்கும் அது தானே நல்லது. காலை வணக்கம் சார்./////
ஆஹா...வாருங்கள் ரவி! உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!
////Blogger murali krishna g said...
ReplyDeletegood morning sir. good post on immovable property acquisition. it happened to me during 4th lord dasa in the end. (sukra dasa). mars is in ruling position in 5th house/////
உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!