11.12.13

Astrology: Check in ஆகிவிட்டீர்களா?

 
Astrology: Check in ஆகிவிட்டீர்களா?

செக் இன் என்பதற்கான அர்த்தமும் முக்கியத்துவமும் அடிக்கடி விமானத்தில் பயணிப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும். அத்துடன் நண்பர்களை அல்லது உறவினர்களை வழியனுப்ப விமான நிலையங்களுச் செல்கின்றவர்களுக்கும் நன்றாகத்தெரியும்!

சரி, செக் இன்னைப் பற்றி அகராதி என்ன சொல்கிறது? The act or process of reporting that you have arrived at a hotel, an airport, etc. : the act or process of checking in; also : the time when people are allowed to check என்கிறது.

பேருந்துப் பயணம் என்றால், கடைசி நிமிடத்தில்கூடச் சென்று, பேருந்தில் ஏறி, பதிவு செய்யப்பட்ட நமது இருக்கையில் அமர்ந்து கொள்ளலாம்.

விமானப் பயணத்தில் அது சாத்தியமில்லை!

உங்களையும், உங்கள் பெட்டிகள் (Suit cases and other packages) என்று அனைத்தையும் குடைந்துவிட்டு, அனுமதி மறுக்கப்பெற்ற பொருட்கள் உங்களிடம் எதுவுமில்லை என்று தெரிந்த பிறகும், உங்களுடைய சாமான்களின் அளவு அனுமதிக்கப்பெற்ற எடைக்குள்தான் இருக்கின்றன என்று தெரிந்த பிறகும், உங்களுடைய பாஸ்போர்ட், விசா, முதலியவை சரியாக உள்ளனவா என்று பரிசோதித்த பிறகும்தான் உங்களுக்குச் செக்கின்’ சீட்டை வழங்குவார்கள். அதற்குப் பிறகுதான் நீங்கள் பயணத்திற்குத் தகுதியானவர் ஆவீர்கள். அந்த செக்கின் ஸ்லிப்புடன் தான் நீங்கள் உங்களுக்கான விமானத்தில் ஏறிப் பயணிக்க முடியும்.
-----------------------------------------------------------------
நான் சொல்ல வந்த செக்கின் மேட்டர் வேறு!

உங்களுக்கு 60 வயதாகிவிட்டதா? அப்படி என்றால் பதிவை மேற்கொண்டு படியுங்கள். மற்றவர்கள் எல்லாம் பதிவை விட்டு விலகுங்கள்.
-----------------------------------------------------------------
அறுபது வயதாகி விட்டதல்லாவா? எப்போது வேண்டுமென்றாலும் மிஸ்டர் எமதர்மராஜன் பாசத்தோடு (பாசக் கயிற்றோடு) உங்களைத் தேடி வரலாம். ஆகவே நீங்கள் பயணத்திற்கு தயாராக இருப்பது அவசியம்.

அவன் வந்த பிறகு, முன் ஜாமீன், வாய்தாவெல்லாம் வாங்க முடியாது. அள்ளிக் கொண்டு போய் விடுவான். திரைப்படங்களில் பார்த்திருப்பீர்களே அது போல உஙகளை அள்ளிக் கொண்டு போய் விடுவான்.

1.  சொத்துக்கள் இருந்தால், உங்களுக்குப் பிறகு வீட்டில் மண்டை உடையாமல் இருக்க உயில் எழுதிப் பதிவு செய்து வைத்து விடுவது நல்லது.

2. வங்கி லாக்கர் இருந்தால், அதற்கு நீங்கள் உங்கள் இல்லாளையோ அல்லது உங்களுக்கு நம்பிக்கை உள்ள ஒருவரையோ நாமினேட் செய்து வைத்து விடுவது நல்லது.

3. வங்கி வைப்புத்தொகைகள், வங்கி சேமிப்புக் கணக்குகள் போன்றவற்றிற்கும் அதே போல ஒருவரை நாமினேட் செய்து வைத்துவிடுவது நல்லது.

4. முக்கியமாக சொத்துப் பத்திரங்கள், லாக்கர் சாவிகள், எல்லாவற்றையும் விட முக்கியமாக ரேசன் கார்டு போன்றவற்றையும் ஒரே இடத்தில் வைத்து அதன் விபரத்தையும் ஒருவரிடம் சொல்லி வைத்து விடுவது நல்லது.

5. நீங்கள் புத்தகங்கள் படிப்பவராகவும், நிறையப் புத்தகங்களைச் சேகரித்து வைத்திருப்பவராகவும் இருந்தால், உங்களுக்குப் பிறகு அந்தப் பொக்கிஷங்கள் எல்லாம் எடைக்குப் போய் விடாமல் இருக்க, அவற்றை எல்லாம் உள்ளூரில் உள்ள நூலகத்தில் ஒப்படைக்க ஏற்பாடு செய்வது நல்லது.

சரி, போர்டிங் பாஸ் (அதாவது செக்கின் ஸ்லிப்) நமக்கு எப்போது கிடைக்கும் என்பதை அறிந்துகொள்ள நேர்வழி மற்றும் குறுக்கு வழி ஏதாவது உள்ளதா?

உள்ளது. அதை இங்கே எழுதினால் ஆபத்து! பதிவு முழுமையாகத் திருட்டுப் போகும் ஆபத்து உள்ளது.

ஆகவே Galaxy2007 வகுப்பில் எழுத உள்ளேன். அங்கே பாருங்கள்! அல்லது எனது புத்தகங்களின் முதல் இரண்டு பாகங்கள் இன்னும் இரண்டு மாத
காலத்தில் வெளிவர உள்ளன! அப்போது படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்!


அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=============================================================

16 comments:

  1. மிகவும் உண்மை. தற்போதைய காலக் கட்டத்தில், எல்லா வயதினருமே கடை பிடிக்கவேண்டிய குறிப்புகள் இவை. இளையர் எனில் தங்களுடைய பெற்றோரிடமும் (அல்லது நம்பிக்கைக்கு உரியவர்களிடமோ) முதியவர் எனில் தங்கள் பிள்ளைகளிடமும் தங்களுடைய சொத்து, மற்றும் இதர விபரங்களைச் சொல்லி வைக்க வேண்டும்.

    -நன்றி ஐயா.

    ReplyDelete
  2. நியாயமான - நிதர்சனமான உண்மைகள்!..

    விழித்துக் கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொள்வார்!..

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy morning... I am eagerly awaiting for our books...

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  4. எதிர்பார்த்த பதிவு
    எமது விருப்பங்களை ஏற்றமைக்கு

    நன்றிகள்.. அது சரி..
    நாமினேட் செய்ய யாருமில்லை

    அப்போ என்ன செய்வது
    அதையும் சொன்னால் நல்லது

    முன்னாடி சொத்துக்களை சொல்வது
    முறையல்ல ஏனெனில் நம்மை

    முதலிலேயே அனுப்பிவிடும்
    முக்கியமானவர்களும் உண்டு

    சொந்தம் எதுவுமில்லாதவருக்கு
    சொல்ல ஏதாவது இருக்கிறதா?

    ReplyDelete
  5. ஏனில்லை சொந்தம் எல்லோர்க்கும் ஈசனவன்
    ஏகபோக சொந்தமென எண்ணியே வாழ்ந்திடுவோம்.
    நல்லவர்கள் யாரென்று நாலுமுறை ஆராய்ந்து
    நாமினேட் செய்துவிடும் நற்பொருளை அவரிடத்தே.

    ReplyDelete
  6. ///Srinivasa Rajulu.M said...
    நல்லவர்கள் யாரென்று நாலுமுறை ஆராய்ந்து
    நாமினேட் செய்துவிடும் நற்பொருளை அவரிடத்தே.///

    நன்றி சீனு.. மற்றவர்களை
    நாமினேட் செய்ய சட்டம் அனுமதிப்பதில்லை

    உறவுகளில் ஒருவர் என்பதினாலே
    உள்ளம் வெதும்பி வந்தது கேள்வி

    சட்டமும் நமக்கு
    சாதகமாக இல்லை..

    ஜாதகமும் நமக்கு
    சாதகமாக இல்லை

    இருக்கும் வரை அனுபவிப்போம்
    இதனாலேயே திறமைக்கு குறைவாக

    ஊதியம் பெறுகிறோம்
    ஊதாரித்தன செலவுகள் இல்லை

    செலவுகள் குறைந்தாலும்
    வரவுகள் குறைவதில்லை அதனால்

    இறக்கும் வரை
    இருக்க வேண்டுமென

    அப்போதைக்கு
    இப்போதே கேட்டு வைத்தேன்

    ReplyDelete
  7. I always remember the saying of my grand mother to ensure the process stated by you is completed well before retirement age. And treat the rest of the years after retirement you are going to live in this world with your kids is like bonus. And when your kids also aware of this the impact of "dukka" always minimized. And everyone including the next and the earlier generations are aware of our own home practices.

    ReplyDelete
  8. /////Blogger Srinivasa Rajulu.M said...
    மிகவும் உண்மை. தற்போதைய காலக் கட்டத்தில், எல்லா வயதினருமே கடை பிடிக்கவேண்டிய குறிப்புகள் இவை. இளையர் எனில் தங்களுடைய பெற்றோரிடமும் (அல்லது நம்பிக்கைக்கு உரியவர்களிடமோ) முதியவர் எனில் தங்கள் பிள்ளைகளிடமும் தங்களுடைய சொத்து, மற்றும் இதர விபரங்களைச் சொல்லி வைக்க வேண்டும்.
    -நன்றி ஐயா.//////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. /////Blogger துரை செல்வராஜூ said...
    நியாயமான - நிதர்சனமான உண்மைகள்!..
    விழித்துக் கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொள்வார்!../////

    குறட்டை விட்டோர் எல்லாம் கோட்டை விட்டார்
    - பட்டுக்கோட்டையார் அன்று (அன்றே) சொன்னது!

    ReplyDelete
  10. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... I am eagerly awaiting for our books...
    With kind regards,
    Ravichandran M./////

    விரைவில் வெளிவரும் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன!

    ReplyDelete
  11. ////Blogger வேப்பிலை said...
    எதிர்பார்த்த பதிவு
    எமது விருப்பங்களை ஏற்றமைக்கு
    நன்றிகள்.. அது சரி..
    நாமினேட் செய்ய யாருமில்லை
    அப்போ என்ன செய்வது
    அதையும் சொன்னால் நல்லது/////

    யாரும் இல்லை என்றால் தர்மத்திற்கு (கோவில்களுக்கு) எழுதிவைக்க ஏண்டியதுதான்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

    /////முன்னாடி சொத்துக்களை சொல்வது
    முறையல்ல ஏனெனில் நம்மை
    முதலிலேயே அனுப்பிவிடும்
    முக்கியமானவர்களும் உண்டு
    சொந்தம் எதுவுமில்லாதவருக்கு
    சொல்ல ஏதாவது இருக்கிறதா?/////

    சொந்தம் இல்லாவிட்டால் வசதியாகப்போய்விட்டது. எதிர்ப்பு இருக்காது. அனாதை இல்லங்கள் அல்லது முதியோர் இல்லங்களுக்கு எழுதிக்கொடுத்துவிட வேண்டியதுதான்!

    ReplyDelete
  12. /////Blogger Srinivasa Rajulu.M said...
    ஏனில்லை சொந்தம் எல்லோர்க்கும் ஈசனவன்
    ஏகபோக சொந்தமென எண்ணியே வாழ்ந்திடுவோம்.
    நல்லவர்கள் யாரென்று நாலுமுறை ஆராய்ந்து
    நாமினேட் செய்துவிடும் நற்பொருளை அவரிடத்தே.//////

    எங்கும் இருப்பவர் அவர்தான்! எல்லோருக்கும் சொந்தம் அவர்தான்!

    ReplyDelete
  13. /////Blogger வேப்பிலை said...
    ///Srinivasa Rajulu.M said...
    நல்லவர்கள் யாரென்று நாலுமுறை ஆராய்ந்து
    நாமினேட் செய்துவிடும் நற்பொருளை அவரிடத்தே.///
    நன்றி சீனு.. மற்றவர்களை
    நாமினேட் செய்ய சட்டம் அனுமதிப்பதில்லை
    உறவுகளில் ஒருவர் என்பதினாலே
    உள்ளம் வெதும்பி வந்தது கேள்வி
    சட்டமும் நமக்கு
    சாதகமாக இல்லை..
    ஜாதகமும் நமக்கு
    சாதகமாக இல்லை
    இருக்கும் வரை அனுபவிப்போம்
    இதனாலேயே திறமைக்கு குறைவாக
    ஊதியம் பெறுகிறோம்
    ஊதாரித்தன செலவுகள் இல்லை
    செலவுகள் குறைந்தாலும்
    வரவுகள் குறைவதில்லை அதனால்
    இறக்கும் வரை
    இருக்க வேண்டுமென
    அப்போதைக்கு
    இப்போதே கேட்டு வைத்தேன்//////

    ஒன்னுமே புரியலை உலகத்திலே!
    வேப்பிலையாரே!
    ஒன்னுமே புரியலை (உங்கள்) உலகத்திலே!

    ReplyDelete
  14. /////Blogger Ravi said...
    I always remember the saying of my grand mother to ensure the process stated by you is completed well before retirement age. And treat the rest of the years after retirement you are going to live in this world with your kids is like bonus. And when your kids also aware of this the impact of "dukka" always minimized. And everyone including the next and the earlier generations are aware of our own home practices./////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!

    ReplyDelete
  15. Sir, Still waiting For Your Books Long...... time, Dear sir pls do the process as soon as possible.

    ReplyDelete
  16. அய்யா தங்களது புத்தகம் எங்கு கிடைக்கும்?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com