21.10.13

Astrology: Quiz.18 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்!

 
Astrology: Quiz.18 ஜாதகர் யாரென்று கண்டுபிடியுங்கள்!

புதிர் தொடர் - பகுதி பதினெட்டு.

Find out the native of the horoscope. ஜாதகத்திற்கு உரியவர் யார் என்பதைக் கண்டுபிடியுங்கள்!

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள்.முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன Okay யா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?



நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள். விக்கி பீடியா, கூகுள் தேடு பொறி என்று எல்லா வசதியும் உள்ளதே! பிறகென்ன கஷ்டம்?

க்ளூ வேண்டுமா?

ஜாதகர் தமிழ் நாட்டுக்காரர் அல்ல! வெளி மாநிலக்காரர். பிரபலமானவர்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
---------------------------------------------------------------------------------
இடைச் சேர்க்கை!


வேண்டுகோள்!

ஜோதிடம் பொதுவானது. பழமையானது. காலம் காலமாக உள்ளது. 1,500 ஆண்டுகளுக்கு மேலாக பல மகான்களும், ஞானிகளும்  ஜோதிடத்தை விரிவாகத் தந்துள்ளார்கள். யார் வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளலாம். யாரும் அதைச் சொந்தம் கொண்டாட முடியாது!

பிறக்கும்போதே யாரும் ஜோதிட அறிவுடன் பிறப்பதில்லை. இறையுணர்வு, தெய்வ அருள் (intuition power), ஞானம் உள்ளவர்கள் அதில் மேன்மை உற்று விளங்கினார்கள்.

மற்றவர்கள் கற்று உணர்ந்தார்கள். கற்றுணர்தலிலும் அது மனதில் நிற்பதற்கும் தெய்வசித்தம் வேண்டும்.

கற்றுணர்தல், அனுபவம், எழுத்து என்பது ஆளாளுக்கு வித்தியாசப்படும். தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். அது தங்களுடைய நடையில் அவர்கள் எழுதும்போது, அதை ஒருவர் அச்சரம் பிசகாமல் காப்பியடித்து தான் எழுதியதுபோல் பதிவிடுவதில் என்ன நியாயம் உள்ளது?

எழுத விரும்புபவர்கள், தாங்கள் கற்றதை, தங்கள் அனுபவத்தைத் தங்கள் நடையில் எழுதட்டும். அதில் தவறில்லை!

ஆனால் இன்றைய அவல நிலையில் நியாய அநியாயங்களுக்கெல்லாம் இடமில்லை. முடிந்தால், விருப்பப்படுவதை செய்துகொள், யார்
உன்னைக் கேட்க முடியும் என்னும் நிலைப்பாடுதான் மேலோங்கி உள்ளது.

இன்றைய இணைய வளர்ச்சியில் cut & paste கலாச்சாரத்தில் எல்லாம் சாதாரணமாகிவிட்டது.

சட்டம், வழக்கு எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது. ராஜீவ் காந்தி கொலை வழக்கே பல ஆண்டுகளாக இன்னும் நிலுவையில் உள்ளது. இணைய வழக்குகள் எல்லாம் எம்மாத்திரம்?

ஆகவே நாம்தான் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

இணையத்தில் எழுதுவது என்பது ஒரு பெண் திறந்தவெளியில் குளிப்பதற்குச் சமமானது.

பலர் எனது எழுத்துக்களை, ஆக்கங்களை அப்பட்டமாகத் திருடிக் கொண்டு போகிறார்கள். இதைக் காலம்காலமாக பலரும் எனக்குஎடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நம் வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரான திருவாளர் KmrK அவர்களுக்கு இந்தத்திருட்டு விஷயம் நன்றாகத் தெரியும். சென்ற வாரம் நமது வகுப்பறை மாணவி Ms.கோகிலம் அவர்களும் சமீபத்தில் நடந்துகொண்டிருக்கும் திருட்டு ஒன்றைச் சுட்டிக் காட்டி எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

ஆகவே நம் ஜோதிட வகுப்பைத் திறந்தவெளியில் நடத்தாமல், Closed Roomல் நடத்த விரும்புகிறேன். அத்துடன் இங்கே திறந்த வெளியில் உள்ள முக்கியமான பாடங்களை எல்லாம் அந்த அறைக்கு மாற்றிவிடலாம் என்றும் நினைக்கிறேன்!

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். 

என்ன செய்யலாம்? உறுப்பினர்களை எப்படி அனுமதிக்கலாம் என்பது பற்றிய உங்கள் அனைவரின் மேலான ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன!!! உங்கள் பதில்களை எனக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்புங்கள் (My mail ID: classroom2007@gmail.com)

அன்புடன்
வாத்தியார்

 
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++==

49 comments:

  1. குருவிற்கு வணக்கங்கள்,
    கொடுக்கப்பட்ட ஜாதகத்திற்குடையவர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அவர்கள்.

    ReplyDelete
  2. வணக்கம் .

    இந்த ஜாதகத்திற்கு உரியவர் திரு. நரேந்தர தமோதர்தாஸ் மோடி
    DOB : 17th September 1950
    Birth time : 11.00 AM
    Birth Place: Vadnagar, Mehsana dist. Bombay State.
    Day : Sunday
    அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்.
    சிறந்த தலைவர் ஆவர்தர்க்கு ருசக யோகமும் , லக்னத்தில் செவ்வாய் (6) புதன் (36) உச்சத்தில் இருப்பதும் காரணம்.
    இப்பொழுது நடக்கும் சந்திர தசையும் , வருகிற செவ்வாய் தசையும் அவரை எதிர் காலத்தில் சிறந்த தலைவராக உருவாக்கும் .
    சந்திரசேகரன் சூர்யநாராயணன்

    ReplyDelete
  3. Dear Sir,

    Born: September 17, 1950 (age 63), Vadnagar, India

    Jathagar namma Gujarat CM: Narendra Modi

    He turned Gujarat into one of the Best Managed States in India

    ReplyDelete
  4. I have already answered this question. Narendra Modi, Gujarat CM

    Just have an astrological question on him, How could he not have married anyone? when second lord and fifth lord guru is aspecting sukra(7th house lord) sitting in 10th house. I don't see a planetary combination for bachelor life in his horoscope, Then why no marriage?

    I would appreciate if Sir can answer this question from the astrological point of view

    ReplyDelete
  5. Dear Ayya....He is Mr.Narendra Modi

    br
    gopinath

    ReplyDelete
  6. Respected Sir,
    The horoscope belongs to Mr. NARENDRA MODI, India's most pronounced name in recent days :-).

    DOB : 17th sep 1950.
    Time : 11 AM.

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா!

    இது நரேந்திர மோடி அவர்களின் ஜாதகம் தானே!

    சுதாகர்,
    ராஜ்கோட், குஜராத்.

    ReplyDelete
  8. Narendra Damodardas Modi born 17 September 1950

    ReplyDelete
  9. Vanakkam Aiya,

    Jadhagathuku sondakarar Narendra Modi
    Endru therigiradu Aiya.

    Nandri.

    ReplyDelete
  10. Respected Sir
    It is Gujarath CM Narendra Modi.

    ReplyDelete
  11. இது குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அவர்களின் ஜாதகம். DOB : 17/09/1950
    TOB : 11.00 am POB : Vadnagar, Gujarat

    ReplyDelete
  12. This is Narendra Modi's horoscope
    Date of birth: 17th September 1950

    ReplyDelete
  13. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

    புதிர் - பகுதி 18 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி 17.09.1950 அன்று பிறந்த இந்த ஜாதகத்துக்குரியவர், இந்தியாவின் அடுத்த பிரதமர் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படும் இன்றைய குஜராத் முதல்வர் திரு. நரேந்திர மோடி அவர்கள்.

    ReplyDelete
  14. good morning sir,

    ans:
    NAREDRA MODI AVL , DOB 17-09-1950

    ReplyDelete
  15. இந்த இணையத் திருடர்கள் அடங்கவே மாட்டார்கள் போலிருக்கிறது. இந்த நிலை எனக்கு ஏற்பட்டிருந்தால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்திருப்பேன். நான் உங்களுக்கு என்ன ஆலோசனை சொல்ல முடியும். 4000 பேருக்கு மேல் இருக்கும் இந்த வகுப்பறையை பின்தொடருபவர்களில் யாராவது ஏதாவது நல்ல யோசனை சொல்வார்கள் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  16. அய்யா
    உங்கள் வருத்தம் நியாயமனது.குறைவான நுழைவு கட்டணம் விதிக்களாம்

    ReplyDelete
  17. அவர் கன்னட நடிகர் விஷ்ணுவர்தன்.
    பிறந்த தேதி: 18-செப்-1950.

    ReplyDelete
  18. A Famous Hindi film actress SHABNAM AZMI
    Date Of Borth : 18.09.1950

    ReplyDelete
  19. 2001ஆம் ஆண்டிலிருந்து குஜராத் மாநிலத்தை வெகுவாக் முன்னேற்றிக் காட்டிய முதல்வர் மேதகு 'நமோ' அவர்கள் (திரு நரேந்திர மோடி)

    ReplyDelete
  20. 17.9.1950 அன்று காலை 11.02 க்கு பிறந்த இவர் குஜராத் முதல்வர் மற்றும் அடுத்த பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் ஜாதகம் இது ....

    ReplyDelete
  21. பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் திரு நரேந்திர மோதி அவர்களுடைய ஜாதகம்.

    ReplyDelete
  22. it is narendra modi's horoscope. prospective candidate for prime minister from bjp. what are his chances , sir ?.

    ReplyDelete
  23. Ayya,

    This is Narendra Modi horocope.

    Sep 17 1950. Morning 9'o clock.

    Your Student,
    Trichy Ravi

    ReplyDelete
  24. Respected Sir,

    The person is none other than our Prime minister candidate. Mr. Narendra Modhi.

    DOB: Sep 17 1950.
    Place : Vadnagar, Bombay (Courtesy: Wikipeida)

    Ivar Jadhagathai satru alasinal nandraga irukkum ayya.

    I also sent you mails regarding your information theft and it's very easy to identify your lessons because of your way of writing. As a new student I too studied your old lessons and I am having many of your lessons in my mind. I'm seeing that exact information in many places in the Internet.

    In facebook, I have seen the exact lesson about maandhi which you have written in our blog.! so, in that person's posting about maandhi, I replied with the message " Naan indha paadathai indha link "http://classroom2007.blogspot.in/search/label/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF"-il padithullaen. Indha paadam angurundhu thirudapattu ingu post seyyapatrukku, Sondhama nee edhena poduya nu comment pottaen.

    Thirudanaai parthu thirundhavittal thiruttai ozhikka mudiyadhu endru kavingnar eludhi-iruppar.

    Maanavargalagiya naangal 1000 paadangal irundhalum, ungalin paadam idhu.. idhu endru easy-ah identify seivome ayya.

    Neengal paadangalai JPG or PNG format-il podalam aanal padikka clarity-ahga irukkadhu.

    Niraikudam eppoludhum thalumbadhu.. Kuraikudam dhan thalumbum ayya. Maanavargalagiya naangal irukka neengal kavalai kolla vendam. Namadhu vagupparai mootha maanavargal & Information Technology la work panravanga edhavadhu Idea kandippaga kodupaargal. Naanum en pangirkku edhavadhu idea kodukka muyarchi seigiraen ayya..

    Thank You.

    ReplyDelete
  25. Respected Sir,

    My answer for our today's Quiz No.18:-

    Date of birth : 17.09.1950

    Time of birth : 11am to 12pm

    Place of birth: Vadnagar, Mehsana dist. Gujarat

    Name of the native: Narendra damodardas Modi

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  26. Dear Sir,

    The horoscope belongs to Mr. Narendra Modi.

    D.O.B is 17th September 1950.

    Thanking you sir,
    C.Jeevanantham

    ReplyDelete
  27. Hi Sir,

    Sepetember 17,1950.
    Its Narendra Modi.

    ReplyDelete
  28. Shri.Narendra Damodar Das Modiji!

    17th Sep 1950; VADHANAGAR; GUJARAT

    He is the rising star of Mother Bharath who needs a change for the better.

    I wish he faces the election only on the plank of development of India and no other populist slogans.

    ReplyDelete
  29. Narendra Damodardas Modi born 17 September 1950 is the 14th and current Chief Minister of Gujarat, a state in western India, representing the Bharatiya Janata Party (BJP). He is the prime ministerial candidate of the BJP and the centre-right National Democratic Alliance for the upcoming 2014 Indian general elections

    Pakkiyaathipathi sandran tisaiyil rakhu pukthiyil pirathamar vedpaalaraaka dervu seyappattirukkiraar.

    sandhiranum rakuvum pirathamar naarkaaliyil amara vaipparkala ena vaathiyaar iyya solla vendum.

    ReplyDelete
  30. born in 17 sept 1950. Gujrat CM Narendra Moodi. born around 11.10am to 12.20pm.

    ReplyDelete
  31. மதிப்பிற்குரிய‌ ஐயா,
    இது திரு. நரேந்திர மோடி அவர்களுடய ஜாதகம்.

    ReplyDelete
  32. வணக்கம்.

    பிறந்த நாள் 17-09-1950
    ஞாயிற்றுக் கிழமை
    அனுஷ நக்ஷத்ரம் ; விருசிக லக்னம், ராசி
    அந்த பிரபலமானவர்: திரு நரேந்திர மோடி
    நேரம்: 11.00

    அன்புடன் ராதா

    ReplyDelete
  33. வணக்கம் ஐயா, அந்த பிரபலம் ஷபனா ஆஸ்மி அவர்கள் ஜாதகம்.

    ReplyDelete
  34. Chief Minister of Gujarat

    narendra modi

    ReplyDelete
  35. மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.
    இன்றைய quiz க்கு எமது பதில். குஜராத்மாநில முதல்வரும் தற்போதைய‌ BJP க‌ட்சியின் பிரதமர் வேட்பளருமான திரு.நரேந்திர மோடி அவர்கள். ஐயா. புத்திகாரகனும்(அஷ்டவர்கத்தில் 7 பரல்கள்) லக்னாதிபதியாக‌ ஆட்சி பெற்ற செவ்வாய்யும்(6பரல்கள்)வலுத்து, சூரி(10க்கு உடையவன் உச்சம் பெற்ற புத‌னுடன் 11 ல்), சந்(லக்னத்தில்9க்கு உடைய‌வன் ஆட்சி பெற்ற செவ்வாய்யுடன் தலா 5 பரல்கள்)உறுதுணையுடன் திரு.மோடி அவர்களுடைய ஜாதகம் சிறப்படைந்து இருக்கிற்து. சரியா என‌ விடையினை அறிந்து கொள்ள ஆர்வமாய் உள்ளேன் ஐயா. நன்றி. ல.ரகுபதி

    ReplyDelete
  36. Horoscope of Narendra Modi - Prime Ministrial Candidate - DOB 17/Sep/1950 @ 11.00 AM

    ReplyDelete
  37. Quiz - 18

    Dear Sir

    Answer - Narendara Modi

    J.Dhanalakshmi

    ReplyDelete
  38. பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் திரு. நரேந்திர மோடி அவர்கள்.

    புதன் உச்சம் மற்றும் மூல திரிகோணம். பாக்கியஸ்தான அதிபதியின் தசை நடந்து கொண்டிருக்கிறது. பார்ப்போம், 2014ல் இவர் வென்று நல்லாட்சி அமைக்கிறாரா என்று.

    ReplyDelete
  39. Narendra modi is the person.birth date is september 17th 1950

    ReplyDelete
  40. அந்தப் பிரபலம் தற்போதைய பிரதம வேட்பாளரா?

    ReplyDelete
  41. சரியான விடை:

    திரு.நரேந்திர மோடியின் ஜாதகம் இது.
    17.9.1950 காலை 11.00 மணிக்குப் பிறந்திருக்கிறார்.
    பிறந்த ஊரின் அட்சரேகை, தீரிக்க ரேகைகள்: -72.38, +23.47

    சுமார் 45 பேர்கள் சரியான விடையை எழுதியிருக்கிறார்கள். எவ்வளவு சொல்லியும் கேட்காமல் பின்னூட்டத்தில் விடையை எழுதி அனுப்பியவர்களையும் சேர்த்துச் சொல்கிறேன். பின்னூட்டத்தில் எழுதினால் அவர்களுடைய பெயர் பதிவில் எப்படி வரும்?

    சிலர் நடிகை சபனா ஆஸ்மியின் ஜாதகம் இது என்று தவறாக எழுதியுள்ளார்கள். மோடி பிறந்த தினத்திற்கு அடுத்த தினத்தில் நடிகை சபனா ஆஸ்மி பிறந்துள்ளார். தேதியைத் தவறாகக் கணக்கிட்டதன் விளைவு அது.

    சரியான பதிலை எழுதிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது பாராட்டுக்கள்!

    அன்புடன்,
    வாத்தியார்

    ReplyDelete
  42. சத்யநாராயணன் அவர்களே. திரு நரேந்திரா மோடிக்கு திருமணம் ஆகி விட்டது. கூகுளாரிடம் naredra modi wife என்று search செய்து பாருங்கள். தேவையான விபரம் கிடைக்கும்.

    ReplyDelete
  43. Dear Sir,

    Need his astro predictions about Modi to become a prime minister of india.

    Please give your comments

    Regards
    Sengottaiyan.PK
    Tirupur.

    Please note Rahul gandhi also Viruchika rasi.

    Rahul gandhi kkum chandra disai nadappu.

    Modikkum chanra disai nadappu

    Aanal modikku chandran pakkiyathipati neesam petru tirikona palatthudan atchi petra sevvaiyudan kuttani.

    Aanal rahul gandhi makara laknam chanran 7kkuirayavan 11 il neesam marakathipathiyum avane.

    Yaar prime minister aavaarkal unkaludaiya kanippu enna solkirathu ariya aavalaka irukkirathu.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com