24.10.13

Astrology: 19ஆம் எண் புதிருக்கான பதில்!

 


முக்கிய அறிவிப்பு!

இன்று சஷ்டி. முருகப்பெருமானை வணங்குவதற்கு உகந்த நாள்.. பழநிஅப்பனை வணங்கிவிட்டு,  கீழ்க்கண்ட செய்திகளை  உங்களுக்குத் தெரியப்படுத்துவதில்  மகிழ்ச்சியடைகிறேன்!.

மூன்று தினங்களூக்கு முன்பு,  cut & paste கலாச்சாரத்தால், எனது எழுத்துக்கள், ஆக்கங்கள் அப்பட்டமாகத் திருட்டுபோவதைப் பற்றி எடுத்துச்  சொல்லி, அதற்கு என்ன செய்யலாம் என்று உங்களின் மேலான ஆலோசனைகளைக் கேட்டிருந்தேன்.

பலரும், தனி இணைய தளம்தான் அதற்குத் தீர்வு என்றும், User Name
and Password  உள்ள உறுப்பினர்கள் மட்டுமே உள்நுழையும் படியாக
அதைஏற்படுத்தி நடத்துங்கள் என்றும் பரிந்துரைத்துள்ளார்கள்.
ஆலோசனை நல்கிய அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக!

உறுப்பினர் கட்டணம் குறித்து ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்தை வெவ்வேறு விதமாகச் சொல்லியுள்ளார்கள்.

உறுப்பினர் கட்டணம் அல்லது நுழைவுக் கட்டணம் என்று அதைச் சொல்லலாம். அது ஒரு ஆண்டுக்கான கட்டணம். அதை நான் முடிவு செய்யாமல் உங்கள் விருப்பத்திற்கே விட்டு விடுகிறேன். நீங்கள் அனைவரும் உறுப்பினராக வேண்டும். எழுதும் பாடங்களைப் படித்துப் பயன்பெற வேண்டும்.அது மட்டுமே என் விருப்பம்.

கட்டணத்தை நீங்கள் உங்களின் விருப்பம்போல் செலுத்தலாம். அதில் இணையதளத்தை உருவாக்குவதற்கும், பராமரிப்பதற்கும் உள்ள தொகை
போக உபரியாகக் கிடைக்கும் பணத்தை நான் செய்து கொண்டிருக்கும் பொதுத் தொண்டுகள் மற்றும் அறச்செயல்களுக்கு பயன் படுத்தலாம் என்று
உள்ளேன்.

தனி இணைய தளம் ஒன்றை வடிவமைக்க ஏற்பாடு செய்துள்ளேன். இன்னும் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்குள் அது தயாராகிவிடும். அதற்கான Domain Name பதிவாகி விட்டது. Hosting Serverக்கும் ஏற்பாடு செய்துவிட்டேன். அவை பற்றிய முழுவிபரத்தை, அந்த வேலைகள் முடிந்த பிறகு தருகிறேன்.
-------------------------------------------------------------------------------------------------
 நமது புதிய வகுப்பறையின் முகவரி (URL)

Domain Name: galaxy2007.com

காலக்ஸி என்பது அண்டத்தைக் குறிக்கும். அதில் கிரகங்கள் உட்பட அனைத்தும் அடக்கம். அதனால் அந்தப் பெயர். 2007 என்பது நமது வகுப்பறையின் பிறந்த வருடத்தைக் குறிக்கும். ஆகவே அதையும் சேர்த்துக்கோண்டிருக்கிறேன்.

அது மட்டும்தான் காரணமா?

இல்லை Samsung Galaxy Smart Phone வைத்திருக்கிறேன். அற்புதமாக இருக்கிறது. அதை வாங்கிய நாளில் இருந்து காலக்ஸி என்ற பெயரும் பிடித்துவிட்டது:-)))))
------------------------------------------------------------------------------------------------

நவம்பர் மாதம் 7ஆம் தேதி (அதுவும் சஷ்டி தினமே) புதிய வகுப்பைத் துவங்கலாம் என்றுள்ளேன்.

இனி எழுதவுள்ள ஜோதிடப் பாடங்கள் அனைத்தும் அதில் மட்டுமே வெளியாகும். வாரம் 3 பாடங்களுக்குக் குறையாமல் பதிவாகும்.

இப்போது உள்ள இந்த வகுப்பிலும் பதிவுகள் தொடரும். அவைகள் ஜோதிடத்தைத் தவிர்த்து மற்ற பதிவுகளாக இருக்கும். அவைகளும் வழக்கம்போல எனது எழுத்து நடையில் சுவாரசியம் மிக்கதாக இருக்கும்.

புதிதாக வருபவர்கள் படிப்பதற்கு வசதியாக அடிப்படைப் பாடங்கள் இங்கே இருக்கும்.

உறுப்பினர்களை ஆய்ந்து அனுமதிப்பது எனது முக்கியமான வேலை. அதற்கு நீங்கள் அனைவரும் உங்களுடைய ஒத்துழைப்பை நல்க வேண்டும்.

அதற்கான படிவம் உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.

இணையதளத்தில், புதிய ஜோதிட வகுப்பில் சேர்வதற்கு விருப்பமுள்ள அனைவரையும் விண்ணப்பிக்க வேண்டுகிறேன். என் மின்னஞ்சல் மூலம்
தெரியப்படுத்துங்கள் (My mail ID: classroom2007@gmail.com) 
Please mention the words "New Classroom" in the subject box of the mail. It is important

அன்புடன்,
வாத்தியார்


அடிக்குறிப்பு: முன்பு உள்ள எனது தனித் தளங்களில், குறைந்த அளவு எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருந்தபோதே எனக்குச் சில டெக்னிகல் பிரச்சினைகள் ஏற்பட்டன.

1.Bandwidth பிரச்சினை அடிக்கடி ஏற்பட்டது.
2.சார்’ உள்ளே நுழைய முடியவில்லை என்று புகார்கள் வந்தன.
3. பின்னூட்டங்களுக்கு பதில் இல்லையே என்ற புகார்களும் வந்தன.

ஆனால் கூகுள் பிளாக்கில் (தற்போது உள்ள வலைப்பூவில்) எந்தப் பிரச்சினையும் இல்லை.

4227 தொடர்பாளர்கள் என்று வலைப்பூவின் கணக்குச் சொல்கிறது.
தினமும் சராசரி Page view 4,500 பக்கங்கள் என்று என் ப்ளாக்கரின்  Dash Board கணக்குக் காட்டுகிறது. அதேபோல தினமும் வந்து செல்கிறவர்களின் எண்ணிக்கை சுமார் 1,500 பேர்கள் என்று  வலைப்பூவின் வெளியில் உள்ள Hit Counter (Traffic Counter) காட்டுகிறது.

ஆகவே அந்தக் கணக்குகளில் ஏதோ குழப்பம் உள்ளது. கணினியின் தொழில் நுட்பம் எனக்குத் தெரியாததால் என்ன குழப்பம் என்று என்னால் ஒரு முடிவிற்கு வரமுடியவில்லை.

ஆனால் வருபவர்கள் எத்தனை பேர்களாக இருந்தாலும் ஆர்வத்துடன், முனைப்புடன் படிப்பவர்கள் சுமார் 200 பேர்கள்தான். அதை மட்டும் என்னால் உணரமுடிகிறது.

ஆகவே தேர்வு செய்து முதலில் 200 பேர்களுக்கு மட்டும்தான் புது வகுப்பில் அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளேன். இரண்டு மாதங்கள் பார்த்துவிட்டு, பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றால் ஜனவரி’ 2014 முதல் மற்றவர் களுக்கும் அனுமதியளிக்கலாம் என்றுள்ளேன். இல்லை என்றால் வேறு ஏதாவது  வழி செய்ய வேண்டும்.

ஆகவே நமது வகுப்பறைக்கு வரும் தொழில் நுட்பம் தெரிந்த மாணவக் கண்மணிகள் இந்தப் பிரச்சினையைப் போக்க என்ன செய்யலாம் என்று தங்கள் யோசனைகளைச்  சொல்லும்படி கேட்டுக்கொள்கிறேன்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
 2
 

Astrology: 19ஆம் எண் புதிருக்கான பதில்!

நேற்றையப் பதிவில் கேட்கப்பெற்ற கேள்விகள்:

இது ஒரு பெண்ணின் ஜாதகம். இந்தப் பெண்ணின் லக்கினம், இரண்டாம் வீடு, ஐந்தாம் வீடு, ஏழாம் வீடு ஆகிய பாவங்களை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள் என்று கேட்டிருந்தேன்.

சரியான பதில்கள்:
1.  ஜாதகி அழகானவர். நேர்மையானவர். ஒழுக்கமானவர். புகழ் எல்லாம் இல்லை. மாறாக இகழ்கள் மட்டுமே!
2. கையில் பணம் அன்றாடத் தேவைக்கு மட்டுமே இருந்தது. இருக்கின்றது. குடும்ப வாழ்க்கை சில காலம் மட்டுமே. பிறகு கெட்டுவிட்டது. அதற்கான காரணம் அடுத்தவரியில் இருக்கிறது.
3. திருமணமானவர். திருமணமாகி சில ஆண்டுகளிலேயே கணவர் இறந்துவிட்டார். ஜாதகி கைம்பெண்ணாகிவிட்டார். அதாவது விதவை!
4. ஜாதகிக்குக் குழந்தைகள் உள்ளன.இரண்டு பெண் குழந்தைகள். இரண்டையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டார்.
------------------------------------------
ஜாதகத்தைப் பாருங்கள்.


1
தனுசு லக்கினம். இயற்கையாகவே நல்ல லக்கினம். லக்கினாதிபதி குரு உச்சம் பெற்றுள்ளார்.

உச்சம் பெற்று என்ன பயன்? எட்டில் போய் உட்கார்ந்து கொண்டு விட்டார். முதுகெழும்பு உருவப்பட்ட நிலை! Anticipatory bail வாங்க முடியாத இடம்!

2.
குரு அமர்ந்த அந்த வீட்டுக்காரன் சந்திரன் (இந்த ஜாதகத்திற்கு அவன் அஷ்டமாதிபதியும் கூட) பரிவர்த்தனை பெற்று லக்கினத்தில் வந்து ஜம்’மென்று அமராமல், சனியின் பிடியில் சிக்கி மாட்டிக்கொண்டுள்ளான். துப்பவும் முடியாது. விழுங்கவும் முடியாது போன்ற நிலை.

3.
லாபாதிபதி சுக்கிரன் 12ல் மறைந்து விட்டான். மறைந்து நின்று பார்க்கும் மர்மமென்ன என்று அவனைக் கேட்க முடியாது! ஆறாம் வீட்டைப் பார்க்கும் மர்மமென்ன என்று அவனைக் கேட்க முடியாது!

4.
ஆக மொத்தம் 3 சுபக்கிரகங்களுமே வலுவிழந்து பயனில்லாமல் போய்விட்டார்கள். Foot Boardல் கூட இடம் கிடைக்காத நிலைமை.

5.
ஏழாம் வீட்டுக்காரன் புதன் 12ல். களத்திரகாரகன் சுக்கிரனும் 12ல். அத்துடன் செவ்வாய் மற்றும் மாந்தியின் கூட்டணி. இதைப் பார்க்கும் எவருமே ஜாதகிக்குத் திருமணம் ஆகாது. இது திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம் என்பார்கள். ஆனால் நடந்தது வேறு.

பரிவர்த்தனையான சந்திரன், ஏழாம் வீட்டை நேராகப் பார்ப்பதால் திருமணத்தை நடத்திவைத்தான். குடும்ப ஸ்தானத்தை தன்னுடைய
நேரடிப் பார்வையில் வைத்திருக்கும் குரு, ஜாதகிக்குக் குடும்ப வாழ்க்கையைத் தர வேண்டிய கட்டாயத்தால் தன்னுடைய வீட்டோ
பவரைப் பயன் படுத்தி ஜாதகிக்குத் திருமணத்தை நடத்திவைத்தான்.

6.
பாக்கிய ஸ்தான அதிபதி (9th House Lord - House of gains lord) சூரியன் நீசமாகிவிட்டான். நீசமானால் செல்லாக் காசு. அதோடு அவன் அமர்ந்த வீடு பாபகர்த்தாரி யோகத்தில். ஒரு பக்கம் செவ்வாயும் மாந்தியும். மறுபக்கம் கேது. அவன் சிறைப்பட்டும் விட்டான். அதோடு அவன் அரச கிரகமாதலால், சோதனைமேல் சோதனை போதுமடா சாமி என்று ஜாதகியைப் பாடும் நிலைக்குத் தள்ளிவிட்டான்.

7.
கவியரசரின் பாடல்களில் முத்தாய்ப்பாய் ஒரு வரியை எழுதியிருப்பார். அந்த வரிதான் பாட்டையே தூக்கி நிறுத்தும். அதுபோல உள்ள பாவ அவலங்களுக் கெல்லாம் முத்தாய்ப்பாய் முக்கிய பாவமான நான்காம் வீட்டில் (சுகஸ்தானம் -  House of comforts) ராகு போய் அமர்ந்து அழிச்சாட்டியம் பண்ணிக் கொண்டிருக் கிறார். குடியிருக்கின்றார்.  4ல் ராகு என்பது மோசமான அமைப்பு. சுகக்கேடு.

8.
மொத்தத்தில் எல்லாம் மோசம். ஒரு மோசமான ஜாதகத்திற்கு இந்த ஜாதகத்தை உதாரணமாகச் சொல்லலாம்!
-------------------------------------------------------
சரி, அப்படியென்றால், எப்படி இந்த ஜாதகத்திற்கு 337 வரும்? நல்ல அமைப்பே கிடையாதா?

9
லக்கினத்தில் அமர்ந்த சந்திரன் அழகைக் கொடுத்ததோடு, எதையும் தாங்கும் மனதையும் கொடுத்தான். லக்கினத்தில் அமர்ந்த (3ஆம் வீட்டிற்கும் உரிய) சனி, உறுதியான, போராடும் குணத்தையும் கொடுத்தான்.

10
குருவோடு பரிவர்த்தனையான சந்திரன் ஜாதகியின் திருமணத்தை நடத்திவைத்தான். சனி உடன் இருந்ததால் ஜாதகிக்குத் தாமதமான
திருமணம். 30 வயதில்தான் திருமணம் நடந்தது.

11.
ஐந்தாம் வீட்டுக்காரன் செவ்வாய் அந்த வீட்டிற்கு எட்டில் இருந்தாலும் ஆட்சி பலத்தோடு உள்ளான். அத்துடன் புத்திரகாரகன் குருவின் விஷேசப் பார்வையையும் அவன் பெற்றுள்ளான். ஆகவே ஜாதகிக்கு திருமணமானவுடன் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறந்தன.

12.
சந்திரனும் சனியும் சேர்ந்திருப்பது புனர்பூ தோஷம் ஆகும். புனர்பூ தோஷத்தின் பலன் தம்பதிகள் பிரிய நேரிடும். லக்கினத்தில் சனி
இருப்பது விதவை தோஷத்திற்கான அறிகுறி. தம்பதிகளின் பிரிவு வேறு மாதிரியாக ஆயிற்று. கணவனை வைகுண்டத்திற்கு அனுப்பிவிட்டு ஜாதகியை விதவையாக்கி சனி தன் வேலையை முடித்துக்கொண்டான். ஜாதகியின் 10 ஆண்டு திருமண வாழ்வு ஒரு  முடிவிற்கு வந்தது.

குடும்ப ஸ்தானத்திற்கு அதிபதியான சனீஷ்வரன் அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் அமர்ந்தது கேடானது. ஆனால் அந்த வீட்டை
தன்னுடைய பார்வையில் வைத்திருக்கும் குரு பகவான், ஜாதகிக்குக் குடும்ப பந்தத்தைக் கொடுத்துக்கொண்டே வந்திருக்கிறார்.

ஜாதகி பிறந்தது ஒரு நல்ல குடும்பத்தில். வாழ்க்கைப் பட்டது ஒரு செல்வந்தர் வீட்டில். மூத்த மருமகள். ஆனால் 4ல் அமர்ந்த ராகு ஜாதகியின் கைக்கு எதையும் எட்டாமல் செய்து submissive levelலிலேயே வாழும்படி செய்துவிட்டான்.(என்ன நடந்தது என்பதை எழுதினால் பத்துப் பக்கக் கதை எழுத வேண்டும். ஆகவே எழுதவில்லை. அத்துடன் அது தேவை இல்லாததும் கூட)
---------------------------------------------------------------------------------------------------
பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளார்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள்.  சரியான பதிலைத் தொட்டு எழுதியவர்களின் பெயர்களைக் கீழே கொடுத்துள்ளேன்:

 சரியான விடைகள் -  அதாவது நீங்கள் எழுதுவீர்கள் என்று நான் எதிர்பார்த்தது:

சரியான பதில்கள்:
1.  ஜாதகி அழகானவர். மன உறுதி மிக்கவர்
2. பணக் கஷ்டம் உடையவர்.
3. குடும்ப வாழ்க்கை சில காலம் மட்டுமே.
4. திருமணமானவர்.
5. திருமணமாகி சில ஆண்டுகளிலேயே கணவர் இல்லை. மண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்திருக்கும் அல்லது ஜாதகி விதவையாகி இருப்பார்.
6. ஜாதகிக்குக் குழந்தை உண்டு!

ஓரளவு 4 அல்லது 5  விடைகளை நெருங்கி எழுதியவர்கள்:

1. திரு.சந்திரசேகரன்.
2. Redfort, Tirupur
3. திரு.ஜி.முரளி கிருஷ்ணா
4. திரு, பழனிசண்முகம்
5. திருமதி சுசீலா கந்தசாமி
6. திரு.Kmr.Krishnan, Lalgudi

இவர்களில் திரு, பழனிசண்முகம் மட்டும்தான் ஜாதகி விதவை என்பதை ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார். இவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்!

அதுபோல கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்!!!!!!

அன்புடன்,
வாத்தியார்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

25 comments:

  1. sir oru chinna santhegam. intha jathahaththil neesa banga raja yogam. varaatha. neesamaana suriyan , antha veetu athipathi sukkiran aatchi palam udaiya sevaai udan. ithu neesa banga raja yogamma illaiya. intha neesa banga raja yogam jathakikku uthava villaiya

    ReplyDelete
  2. நல்ல அலசல் ஐயா.

    முக்கியமான ஸ்தானங்களையும் கிரகங்களையும் தன் பார்வையால் 'பவர்' செய்த பிருஹஸ்பதி இந்த ஜாதகிக்கு ஒரு 'ஸ்டார்'.

    கிட்டத்தட்ட இவர் பிறந்த நேரத்தில் பிறந்து இன்னும் தீக்காயுளுடன் இருக்கும் இரண்டு மேல்நாட்டு (அன்னாளைய) நடிகைகளின் விபரச் சுட்டிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (for curiosity sake only). லக்னம் மாறி இருக்கக் கூடும்.

    நன்றியுடன்
    ஸ்ரீனிவாஸ ராஜுலு

    1) http://en.wikipedia.org/wiki/Adrienne_Corri

    2) http://en.wikipedia.org/wiki/Andr%C3%A9e_Lachapelle

    ReplyDelete
  3. சோதிடம் எனும் தலைப்புதான் உங்கள் வகுப்பறை 2007-ன் வெற்றிக்குக் காரணம். 80% வருகையாளர்கள் அதையொட்டியே வருகிறார்கள். சோதிட பாடம் இல்லாத வகுப்பறை ஆசிரியர் இல்லாத வகுப்பறைக்கு சமம்.

    ReplyDelete
  4. Respected Sir
    The vipareetha raja yogam(12th lord and 6th lord in 12th house) did not help in any way?

    ReplyDelete
  5. மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.
    நான் ஜோதிடத்தை பற்றிய சரியான தேடலில் இருந்த போதுசில புத்தகங்களை படித்து சிறிது சிறிதாக புரிந்து கொண்டேன்.ஆனாலும் முழுமையான தெளிவு பெற கூடிய வகையில் நமக்கு எப்போது வாய்ப்பு கிடைக்குமோ என்ற எண்ணத்தில் இருந்த சூழ்நிலையில்,கடந்த இருவருடங்களில்தான் இன்டர்நெட்
    தொடர்பை ஏற்படுத்திகொண்டேன்.அப்போதுதான் த‌ங்க‌ளின் கைவண்ணத்தில் வந்து கொண்டிருந்த வகுப்பறை வாத்தியார் பதிவு என் தேடலுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்த்து.என் இத்தேடலுக்கு என் கட‌ந்த கால வாழ்க்கை அனுபவம்தான் காரணம்.
    என்னுடைய பிரச்சனை என்னவென்று ஜாதகத்தை வைத்து தேட வைத்த அந்த சூழ்நிலைதான் கடலில் தத்தளித்தவனுக்கு ஒரு பிரம்மாண்ட கப்பலே கை கொடுத்து காப்பற்றியது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.கடந்த இரு வருடங்களாக தங்களின் பதிவை படித்து பயனடைந்து வருகிறேன்.இப்போது
    தொடர்ந்து இபயனை அடைய விரும்புருகிறேன்.தங்கள் கடைக்கண் பார்வை பதிவின் மூலம் இச்சிறிய‌வன் பட்டதே பெரும்பாக்கியம் என கருதுகிறேன். மேலும் நான் தொடர்ந்து படிக்கும் வாய்ப்பை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
    நன்றி ஐயா. ல. ரகுபதி

    ReplyDelete
  6. Respected Sir,

    Galaxy2007.com-il.. Maanavarodu maanavarai padhivai thirudubavar vandhuvittal enna seivadhu ayya..?

    Blogger-il edhavadhu security settings seidhal nandraga irukkum. Google server down avadharku vaaipugal illai. Veru servergal down avadarku vaipugal irukku. so, page loading will be delayed. IRCTC kadhaipole slow agividapogiradhu.

    4227 members irukanga. 1500 members not states that 1500 members are coming from 1500 IP address. Naan 1nabar 5 murai vandhal 5 endru sollum. 300 nabargal 5 murai vandhal 1500 endru varum. Naan 1nabar 10 pages padipaen. so 1500 namargal 4500 pakkangal padika koodum.

    ReplyDelete
  7. நன்றி ஐயா.

    கணவர் இறந்திருப்பார் என்பதை கணிக்க முடிந்தது ஆனாலும் அப்படி எதிர்மறையாக எழுத மனம் வரவில்லை என்ன செய்ய சனி பரிதாபம் பார்க்காமல் போட்டுத் தள்ளிவிட்டானே??!!!

    ReplyDelete
  8. Sir,
    One clarifiction,
    2 house is for finance, family life and speech.

    If 2nd house god is not in good position(saturn is in 12 house here), it means that she wont be good in finance, family life and speech?
    Correct me if am wrong.

    ReplyDelete
  9. அய்யா , என் கணிப்பு ஓரளவாகவேனும் சரியாக இருந்தததிற்கு தங்களின் ஜோதிட பாடங்களே காரணம் ஆகும் !. இளம் விதவை அல்லது விவாகரத்து என்று குறிப்பிட்டதற்கு காரணம் ஒரு வேளை அந்த பெண்மணி விதவையாக இல்லாமல் இருந்து விதவை என்று ஆணித்தரமாக குறிப்பிட்டால் அமங்கலமாக இருக்கும் என்று தான் !. இனி பட்டதை கூறுகிறேன் !. புத்திர ஸ்தானத்தில் நிறைய பேர் என்னை போன்றே ஊணமுள்ள குழந்தை என்று கோடிட்டு காட்டி இருக்கிறார்கள் ! ஆனால் அது பொய்த்து விட்டது !. இனி இன்னும் உஷாராக இருக்க வேண்டும் ! .நன்றி !.

    ReplyDelete
  10. http://en.wikipedia.org/wiki/Jennifer_Jayne

    14 நவம்பர் 1931 லேயே பிறந்து வாழ்ந்த நடிகை ஜெனிஃபெர் ஜெயனே 2006ல் மறைந்துள்ளார்.அவ‌ர் ஒரே கணவருடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.கணவ்ருக்கு முன்னர் இறந்துள்ளார்.விதவை ஆகவில்லை.

    ஸ்ரீனிவாசலு அவர்கள் கூறிய செய்திக்கு இதுவும் ஒரு ஒட்டுச்செய்தி. பெரும்பாலும் லக்கின மாற்றம் ஜெனிஃபெரை நன்கு வாழச்செய்திருக்கும்.

    புதிரில் கொடுத்த இந்த ஜாதகியின் எதிர்மறைகளைக் கூற வேண்டாம் என்பதாலேயே பலவற்றையும் கூறாமல் விட்டேன்.உச்சமடைந்த குரு நன்மை செய்ய மாடட்டரா என்ற எதிர்பார்ப்புதான் காரணம்.

    ஐயா குறிப்பிட்டவர்களைத் தவிர மற்றும் பலரும் கிட்டத்தட்ட சரியான பதில்களைக் கொடுத்துள்ளனர்.அனைவருக்கும் பாராட்டுக்கள்.

    ஜோதிடம் வகுப்பறையில் நின்று விட்டால் வருகையும் தானாகக் குறைந்துவிடும்.

    வருகை எண்ணிக்கைக்கூட வேண்டும் என்பதர்காக திருட்டுக் கொடுத்துக் கொண்டே இருக்க முடியாது.பூட்டு போட்ட வகுப்பறை அல்லது புதிய தளம்தான் ஒரே தீர்வு.சிறியதாக இருந்தாலும் ஒரு கட்டணம் விதித்தலே சரியானது.

    ReplyDelete
  11. /////Blogger mystocks said...
    sir oru chinna santhegam. intha jathahaththil neesa banga raja yogam. varaatha. neesamaana suriyan , antha veetu athipathi sukkiran aatchi palam udaiya sevaai udan. ithu neesa banga raja yogamma illaiya. intha neesa banga raja yogam jathakikku uthava villaiya/////

    நீசபங்க ராஜ யோகம் என்றால் என்ன? அதைச் சொல்லுங்கள் முதலில்! அதாவது உங்களின் புரிதலை முதலில் சொல்லுங்கள்!

    ReplyDelete
  12. ////Blogger Srinivasa Rajulu.M said...
    நல்ல அலசல் ஐயா.
    முக்கியமான ஸ்தானங்களையும் கிரகங்களையும் தன் பார்வையால் 'பவர்' செய்த பிருஹஸ்பதி இந்த ஜாதகிக்கு ஒரு 'ஸ்டார்'.
    கிட்டத்தட்ட இவர் பிறந்த நேரத்தில் பிறந்து இன்னும் தீக்காயுளுடன் இருக்கும் இரண்டு மேல்நாட்டு (அன்னாளைய) நடிகைகளின் விபரச் சுட்டிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (for curiosity sake only). லக்னம் மாறி இருக்கக் கூடும்.
    நன்றியுடன்
    ஸ்ரீனிவாஸ ராஜுலு
    1) http://en.wikipedia.org/wiki/Adrienne_Corri
    2) http://en.wikipedia.org/wiki/Andr%C3%A9e_Lachapelle/////

    லக்கினம் மாறினால் எல்லாமும் மாறிவிடுமே ஸ்வாமி!

    ReplyDelete
  13. ////Blogger Astro Learner LKG said...
    சோதிடம் எனும் தலைப்புதான் உங்கள் வகுப்பறை 2007-ன் வெற்றிக்குக் காரணம். 80% வருகையாளர்கள் அதையொட்டியே வருகிறார்கள். சோதிட பாடம் இல்லாத வகுப்பறை ஆசிரியர் இல்லாத வகுப்பறைக்கு சமம்./////

    ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதத் துவங்கியபோது 10 பேர்கள் கூட படிக்க வரவில்லை. 6 மாதங்களுக்குப் 30 பேர்கள் கிடைத்தார்கள்.
    4 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்தது.

    எண்ணிக்கையைப் பற்றி நான் எப்போதுமே கவலைப் படுவதில்லை!

    என் எண்ணங்களை, என் சிந்தனைகளை, நான் அறிந்துணர்ந்ததை ஆவணப் படுத்துகிறேன். அவ்வளவுதான். ஒரு பத்திரிக்கையில் பத்து ஆண்டுகளாகத் தொடர்ந்து சிறுகதைகளையும் தொடர் கட்டுரைகளையும் எழுதிக்கொண்டிருக்கிறேன். இதுவரை 10 புத்தகங்களை வெளியிட்டு இருக்கிறேன். அவற்றில் ஜோதிடம் இம்மிகூட இல்லை. அந்தப் பத்திரிக்கையின் மூலம் எனக்கு முப்பதாயிரம் வாசகர்கள், ரசிகர்கள் இருக்கிறார்கள். அதற்கு என்ன சொல்கிறீர்கள்?

    ReplyDelete
  14. Blogger Dallas Kannan said...
    Respected Sir
    The vipareetha raja yogam(12th lord and 6th lord in 12th house) did not help in any way?

    அவர்கள்தான் மாந்தியுடன் கைகலப்பில் (கிரக யுத்தத்தில்) இருக்கிறார்களே சாமி!

    ReplyDelete
  15. /////Blogger raghupathi lakshman said...
    மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.
    நான் ஜோதிடத்தை பற்றிய சரியான தேடலில் இருந்த போதுசில புத்தகங்களை படித்து சிறிது சிறிதாக புரிந்து கொண்டேன்.ஆனாலும் முழுமையான தெளிவு பெற கூடிய வகையில் நமக்கு எப்போது வாய்ப்பு கிடைக்குமோ என்ற எண்ணத்தில் இருந்த சூழ்நிலையில்,கடந்த இருவருடங்களில்தான் இன்டர்நெட்
    தொடர்பை ஏற்படுத்திகொண்டேன்.அப்போதுதான் த‌ங்க‌ளின் கைவண்ணத்தில் வந்து கொண்டிருந்த வகுப்பறை வாத்தியார் பதிவு என் தேடலுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்த்து.என் இத்தேடலுக்கு என் கட‌ந்த கால வாழ்க்கை அனுபவம்தான் காரணம்.
    என்னுடைய பிரச்சனை என்னவென்று ஜாதகத்தை வைத்து தேட வைத்த அந்த சூழ்நிலைதான் கடலில் தத்தளித்தவனுக்கு ஒரு பிரம்மாண்ட கப்பலே கை கொடுத்து காப்பற்றியது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.கடந்த இரு வருடங்களாக தங்களின் பதிவை படித்து பயனடைந்து வருகிறேன்.இப்போது
    தொடர்ந்து இப்பயனை அடைய விரும்புருகிறேன்.தங்கள் கடைக்கண் பார்வை பதிவின் மூலம் இச்சிறிய‌வன் பட்டதே பெரும்பாக்கியம் என கருதுகிறேன். மேலும் நான் தொடர்ந்து படிக்கும் வாய்ப்பை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
    நன்றி ஐயா. ல. ரகுபதி////

    ஆற்றுத் தண்ணீர், முகர்ந்து குடிப்பதற்கு எதற்கு அனுமதி? இது இணைய வகுப்பு. எந்தக் கட்டுப்பாடும் இல்லை. யார் வேண்டுமென்றாலும் படித்துப் பயன் பெறலாம். நான் எழுதும் நோக்கமும் அதுதான்!

    ReplyDelete
  16. /////Blogger Chandrasekharan said...
    Respected Sir,
    Galaxy2007.com-il.. Maanavarodu maanavarai padhivai thirudubavar vandhuvittal enna seivadhu ayya..?////

    இப்படி சந்தேகப் பட்டால் எப்படி ஸ்வாமி? ஆம்னி பஸ்ஸில் பயணிக்கிறோம். ஓட்டுனர் நம்மைக் கொண்டுபோய், போக வேண்டிய ஊரில் பத்திரமாகக் கொண்டுபோய்ச் சேர்ப்பார் என்ற நம்பிக்கையோடுதான் பயணிக்கிறோம்.

    நமிபிக்கையும், துணிச்சலும் அவசியம் வேண்டும். நடப்பது நடக்கும். நடக்காமல் போக வேண்டியது என்ன முயன்றாலும் நடக்காது. தனி இளைய தளத்தில் சில பாதுகாப்பு வளையங்கள் உள்ளன. ஆகவே திருட்டிற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு. அதுவும் இல்லாமல் வேண்டிய விபரங்களை வாங்கிக் கொண்டுதான் நான் அனுமதியளிக்கிறேன்
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>..
    /////4227 members irukanga. 1500 members not states that 1500 members are coming from 1500 IP address. Naan 1nabar 5 murai vandhal 5 endru sollum. 300 nabargal 5 murai vandhal 1500 endru varum. Naan 1nabar 10 pages padipaen. so 1500 namargal 4500 pakkangal padika koodum./////

    தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  17. /////Blogger redfort said...
    நன்றி ஐயா.
    கணவர் இறந்திருப்பார் என்பதை கணிக்க முடிந்தது ஆனாலும் அப்படி எதிர்மறையாக எழுத மனம் வரவில்லை என்ன செய்ய சனி பரிதாபம் பார்க்காமல் போட்டுத் தள்ளிவிட்டானே??!!!////

    அறுவை சிகிச்சை மருத்துவர் இரக்கம் கொண்டவராக இருந்தால் எப்படித் தொழிலை நடத்துவார்? கையில் கத்தியை எப்படி எடுப்பார்:-)))))

    ReplyDelete
  18. /////Blogger Udhayaganesh said...
    Sir,
    One clarifiction, 2 house is for finance, family life and speech.
    If 2nd house god is not in good position(saturn is in 12 house here), it means that she wont be good in finance, family life and speech?
    Correct me if am wrong./////

    குடும்ப வாழ்க்கைக்குத்தான் குரு கை கொடுத்தார் என்று எழுதியுள்ளேனே சாமி!
    அந்தப் பெண்மணி பேச்சுத்திறமை உள்ளவர் என்று யார் சொன்னது?

    ReplyDelete
  19. ////Blogger murali krishna g said...
    அய்யா , என் கணிப்பு ஓரளவாகவேனும் சரியாக இருந்தததிற்கு தங்களின் ஜோதிட பாடங்களே காரணம் ஆகும் !. இளம் விதவை அல்லது விவாகரத்து என்று குறிப்பிட்டதற்கு காரணம் ஒரு வேளை அந்த பெண்மணி விதவையாக இல்லாமல் இருந்து விதவை என்று ஆணித்தரமாக குறிப்பிட்டால் அமங்கலமாக இருக்கும் என்று தான் !. இனி பட்டதை கூறுகிறேன் !. புத்திர ஸ்தானத்தில் நிறைய பேர் என்னை போன்றே ஊணமுள்ள குழந்தை என்று கோடிட்டு காட்டி இருக்கிறார்கள் ! ஆனால் அது பொய்த்து விட்டது !. இனி இன்னும் உஷாராக இருக்க வேண்டும் ! .நன்றி !.////

    நல்லது. அப்படியே செய்யுங்கள். நன்றி!

    ReplyDelete
  20. /////Blogger kmr.krishnan said...
    http://en.wikipedia.org/wiki/Jennifer_Jayne
    14 நவம்பர் 1931 லேயே பிறந்து வாழ்ந்த நடிகை ஜெனிஃபெர் ஜெயனே 2006ல் மறைந்துள்ளார்.அவ‌ர் ஒரே கணவருடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.கணவருக்கு முன்னர் இறந்துள்ளார்.விதவை ஆகவில்லை.
    ஸ்ரீனிவாசலு அவர்கள் கூறிய செய்திக்கு இதுவும் ஒரு ஒட்டுச்செய்தி. பெரும்பாலும் லக்கின மாற்றம் ஜெனிஃபெரை நன்கு வாழச்செய்திருக்கும்.
    புதிரில் கொடுத்த இந்த ஜாதகியின் எதிர்மறைகளைக் கூற வேண்டாம் என்பதாலேயே பலவற்றையும் கூறாமல் விட்டேன்.உச்சமடைந்த குரு நன்மை செய்ய மாடட்டரா என்ற எதிர்பார்ப்புதான் காரணம்.
    ஐயா குறிப்பிட்டவர்களைத் தவிர மற்றும் பலரும் கிட்டத்தட்ட சரியான பதில்களைக் கொடுத்துள்ளனர்.அனைவருக்கும் பாராட்டுக்கள்.
    ஜோதிடம் வகுப்பறையில் நின்று விட்டால் வருகையும் தானாகக் குறைந்துவிடும்.
    வருகை எண்ணிக்கைக்கூட வேண்டும் என்பதர்காக திருட்டுக் கொடுத்துக் கொண்டே இருக்க முடியாது.பூட்டு போட்ட வகுப்பறை அல்லது புதிய தளம்தான் ஒரே தீர்வு.சிறியதாக இருந்தாலும் ஒரு கட்டணம் விதித்தலே சரியானது.///////

    எண்ணிக்கை பிரதானமல்ல! திருட்டுத்தான் இப்போதைக்குப் பிரதானம்! உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  21. நண்பர் ரெட் போர்டுக்கு ஏற்பட்ட அதே தர்ம சங்கடம் தான் எனக்கும். இலக்கினத்தில் சனி இருக்க, உடன் எட்டாம் அதிபன் இருக்க ஜாதகி விதவை ஆக வாய்ப்பு உள்ளது என்று தெரிந்தாலும் அதை எழுத மனம் வரவில்லை.

    தொடர்ந்து பெயில் ஆகிக்கொண்டே வருகிறேன். அடுத்த முறை அனைத்து கேள்விகளுக்கும் சரியான பதில் எழுத வேண்டும். சரியான விடை எழுதிய அனைவருக்கும் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
  22. Sir,
    I am a your student, studying your lessons, but I don't know how to send the answers for the questions, I want to participate in this session. Can u please help me.

    Regds.
    G. Rukumani

    ReplyDelete
  23. வாத்தியாருக்கு திருவாரூர் சரவணனின் அன்பு வணக்கம்.

    தங்களது எழுத்துக்கள் அப்பட்டமாக திருடு போவதால் நீங்கள் எடுத்திருக்கும் முடிவு மிகச்சரிதான். புதிய வகுப்பில் எல்லா விபரங்களையும் அளித்து கற்றுக்கொள்ள ஆர்வத்துடன் வரும் மாணவர்கள் யாரும் இந்த தவறை செய்ய வாய்ப்பு மிகவும் குறைவு.

    ஒரு நாளிதழில் பக்க வடிவமைப்பாளராக வேலைக்கு சேர்ந்தபோது அதிக நேரம் வேலை, மிக குறைந்த ஊதியம், அலுவலக பாலிடிக்ஸ், குடும்ப விழா என்று லீவு கேட்டால் கூட ஆயிரத்தெட்டு பார்மாலிட்டீஸ் என்ற கெடுபிடியில் தாக்கு பிடிக்காமல் அந்த வேலையை விட்டு சொந்த தொழில் தொடங்கினேன்.

    "கேட்டதும் லீவு கொடுக்கலைன்னு வேலையை விட்ட. இப்போ சொந்தமா தொழில் வெச்சதும் ஞாயிற்றுக்கிழமை கூட லீவே விடாம, ஒரு நாளைக்கு 12 அல்லது 13 மணி நேரம் அலுவலகம் திறந்து வேலை பார்க்குறதுன்னு ஆகிட்டியே" அப்படின்னு என் அம்மா சொன்னதும்தான் நான் என்ன செய்துகிட்டு இருக்கேன்னு எனக்கு புரிஞ்சது.

    ஆக, நேரம் காலம் பார்க்காம தொழில்ல ஈடுபடுறேன்னு மத்தவங்க சொல்லி தெரிஞ்சுக்குற அளவு அதைப் பத்தி யோசிக்காம வேலை செஞ்சுகிட்டு இருக்கேன்.

    தளத்துக்கு வந்து பின்னூட்டம் போடுறது, புதிரில் கலந்து கொள்வதற்கு கூட நேரம் ஒதுக்க முடியாத நிலையில் தடுமாறிக்கொண்டிருக்கிறேன். ஆனால் தங்களின் பணிச்சூழலுக்கு இடையில் இந்த அளவுக்கு 6 ஆண்டுகளாக இவ்வளவு பாடங்களை பதிவிடுவதற்கு எவ்வளவு உழைத்திருக்க வேண்டும் என்பது எனக்கு நன்றாக புரிகிறது.

    ReplyDelete
  24. திருவாரூர் பெரிய கோவில் (ஆழித்தேர்) பங்குனி உத்திர திருவிழாவுடன் தொடர்புடைய சிவன் கோவில் பாழடைந்து இருந்தது. அந்த கோவில் தொடர்பான செவிவழிச்செய்திகளை வைத்தும், இப்போது வரை நடைபெற்று வரும் சில சம்பிரதாயங்களை வைத்தும் ஒரு கட்டுரையை எழுதி புகைப்படங்களுடன் பல பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்தேன். 2005-2006 காலகட்டத்தில் அவற்றில் எல்லாம் பிரசுரமாகிவிட்டது. 2007ல் கோவில் பாலஸ்தாபனம் ஆனது.

    சுமார் 50 லட்சம் செலவில் திருப்பணி முடிந்து இப்போது 1-9-2013 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. மீண்டும் புனரமைக்கப்பட்ட தகவல்களை வைத்து எழுதிய கட்டுரை ஒரு வார இதழில் வெளிவந்தது. அந்த தகவல்களை வரி மாறாமல் அப்படியே எடுத்து கடைசியில் ஒரு பாரா சேர்த்து பிரபல மாதமிருமுறை ஆன்மிக இதழில் வேறொருவர் பெயரில் பிரசுரம் செய்துகொண்டிருக்கிறார்.

    கோவிலின் வரலாறு, புராணத்தை யாரும் மாற்ற முடியாது. குறைந்த பட்சம் தங்களது நடையிலாவது அதை புதிதாக எழுதி அனுப்பியிருக்கலாமே என்றுதான் எனக்கு தோன்றியது.

    தங்கள் வகுப்பறையில் ஆக்கங்கள் திருடு போவது பற்றி முன்பு ஒரு முறை வகுப்பறையில் கூறியிருந்தீர்கள். உங்கள் தளத்தில் உள்ளவற்றை காப்பி & பேஸ்ட் செய்த ஆசாமி அதை நக்கலடித்து ஜோதிடத்தை எல்லாரும் கற்றுக்கொள்ளவே எழுதுவதாக கூறுபவர் ஏன் காப்பி செய்துவிட்டார்கள் என்று புலம்ப வேண்டும். காப்பி செய்து வேறு தளத்தில் வெளியிட்டாலும் நாலு பேர் படிக்கத்தானே போகிறார்கள் என்று எழுதியிருந்தார்.
    ------------------------

    ReplyDelete
  25. அடப்பாவிகளா... என்று ஆத்திரமாகத்தான் வந்தது. இதை படித்து காப்பி செய்தாலும் அதை உங்கள் கணிணியில் சேமித்து வைத்து நீங்கள் மட்டும் கற்றுக்கொள்வது ஓ.கே. அதை தனது சொந்த எழுத்து போல் பயன்படுத்துவதுதான் மிக மிக கேவலமான இழிவான அருவருக்கத்தக்க செயல். உண்மையில் இன்னும் நாலு பேர் தெரிந்து கொள்ள வழி செய்கிறேன் என்று சொல்லும் பேர்வழிகள் முக்கியமான நாலு வரிகளை போட்டு வகுப்பறை தளத்து லிங்க் கொடுத்து அங்கே போய் படியுங்கள் என்று கூறுவதுதான் நியாயம். ஆனால் இந்த ஆசாமிகளுக்கு எந்த நியாயமும் அநியாயமும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் நம்மை நாம் பாதுகாத்துக்கொள்வதுதான் நல்லது.

    நீங்கள் செய்வதுதான் சரி ஐயா.

    ------------------------
    தங்களுடைய பழைய பாடங்களையும் திரும்ப திரும்ப படித்துப்பார்ப்பதில் இப்போதெல்லாம் ஒரு ஜாதகத்தைப் பார்த்தாலே அடிப்படை விஷயங்களை ஓரளவு எளிதாக கணித்து விட முடிகிறது. முக்கியமாக எந்த கிரகம் எங்கே ஆட்சி, எந்த எந்த பார்வை உண்டு, எதனுடன் சேர்ந்தால் எந்த இடத்தில் இருந்தால் என்ன மாதிரி அடிப்படை பிரச்சனை, முக்கியமாக நீங்கள் சொல்லும் சஷ்டம அஷ்டம நிலைப்பாடு (6-8) மற்றும் ஒரு இடத்துக்குரியவர் அதற்கு 12ஆம் இடத்தில் இருப்பது இது போன்ற விஷயங்களை பார்த்ததும் அந்த ஜாதகத்தில் உள்ள முக்கிய பிரச்சனைகளை கூற முடிகிறது. இதைப் பார்க்கும் ஜோதிட கணிப்புகள் பற்றி அறியாத மக்கள் நான் என்னவோ எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் என்று நினைத்து பலன் சொல்லுமாறு கேட்கிறார்கள்.

    நான் அவர்களிடம் சில விஷயங்களை மட்டும் தெளிவாக கூறி விடுகிறேன்.

    "நான் தொழில் முறை ஜோதிடன் இல்லை. என் ஜாதகத்தில் அதற்குரிய அமைப்பும் இல்லை. என்னுடைய மன திருப்திக்காகத்தான் கற்றுக்கொண்டு வருகிறேன். அதற்கு என் ஜாதகத்தில் இடம் இருக்கிறது.

    அது தவிர நான் இப்போதுதான் கற்றுக்கொள்ளவே ஆரம்பித்திருக்கிறேன். கற்று இதில் தேர்ச்சி பெற எவ்வளவு காலம் ஆகுமோ தெரியாது. வேண்டுமென்றால் அடிப்படை விஷயங்களுடன் கொஞ்சம் கூடுதலான தகவல்களை கூறலாம்.

    நான் சொல்வது அப்படியே நடக்கும் என்றெல்லாம் கூறமாட்டேன். ஏனென்றால் என்ன நடக்க வேண்டும் என்று தீர்மானித்திருப்பது இறைவன். இப்போது உங்கள் ஜாதகங்களை எல்லாம் பார்க்க பார்க்க எனக்கு நல்ல பயிற்சி கிடைக்கும்" என்று கூறுவேன்.

    -------------------------
    கடந்த இரண்டரை ஆண்டுகளாக என்னதான் சொந்தமாக தொழில் செய்தாலும் முதல் ஒரு வருடங்கள் வீட்டு செலவுக்காக என்னால் மாதம் ஆயிரம் ரூபாய்தான் கொடுக்க முடிந்தது. அடுத்த ஆண்டு 2ஆயிரம் ரூபாயும், தற்போது 6 மாதங்களாக 3 ஆயிரம் ரூபாயும் கொடுத்து வருகிறேன். ஆக இதுதான் இப்போது என் சம்பளம்.

    அந்த நாளிதழ் பணியிலேயே இருந்திருந்தால் இப்போது மாதம் 6 ஆயிரம் ரூபாய் வந்திருக்குமே. அந்த மாதிரி சம்பளம் வாங்கினால் இப்போது இருப்பது போல் கடை வாடகை, கம்ப்யூட்டருக்கு செலவு, கரண்ட் பில், கடன் கட்டுறது எந்த செலவும் இல்லாமல் எல்லாவற்றையும் வீட்டுக்கே செலவு செய்து கொள்ளலாம் என்று அம்மா திட்டிக்கொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால் நிலை மாறும் என்ற நம்பிக்கையுடன் நான் தொழிலில் ஈடுபட வகுப்பறையும் முக்கிய காரணம். அதேபோல் தொழில் ஆரம்பித்தத போது ஒரு கணிணி, பிரிண்டர் 20 ஆயிரம் ரூபாய் கடனுடன் ஆரம்பித்தேன். இடையில் மின்வெட்டு பிரச்சனையால் யுபிஎஸ் வைக்க 30 ஆயிரம் ரூபாய் செலவானதுடன் அவ்வப்போது கம்ப்யூட்டருக்கும் கூடுதல் செலவு செய்ய வேண்டியதாயிற்று.

    ஆனால் தொழில் ஆரம்பித்த போது இருந்ததை விட சில படிகளாவது முன்னேறியிருக்கிறேன் என்று சொல்லலாம்.

    அதிலும் அஷ்டகவர்க்க பாடங்களில் என்னால் இயன்ற தொகையை செலுத்தி வகுப்பறைக்குள் நீங்கள் நுழைய அனுமதித்ததை நான் மறக்க மாட்டேன். இப்போது மற்றவர்களின் ஜாதகங்களை பார்க்கும்போது அஷ்டகவர்க்கத்தை வைத்து பார்க்கும்போது எளிதாக கணிக்க முடிகிறது.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com