12.9.13

Astrology: ஓஹோ இப்படித்தான் அலச வேண்டுமா?

 

Astrology: ஓஹோ இப்படித்தான் அலச வேண்டுமா?

நேற்றைய பதிவில் கேட்டிருந்த கேள்விகளுக்கான விடைகள்:




கேள்விகள்
(ஜாதகம் ஒரு ஆணின் ஜாதகம். பிரபலம் அல்ல! சாதாரண மனிதர்தான் என்று குறிப்பிட்டிருந்தேன்)

கேள்விகள்
1. ஜாதகர் படித்தவரா அல்லது படிக்காதவரா?
படித்தவர் என்றால் எதுவரை படித்தவர்? பள்ளி இறுதியாண்டு வரையிலா? அல்லது இளங்கலை பட்டப் படிப்பு வரையிலா? அல்லது உயர்கல்வி பயின்றவரா? படிக்காதவர் என்றால் சில ஆண்டுகள் பள்ளிக்குச் சென்றவரா அல்லது மழைக்குக்கூட பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்காதவரா?


ஜாதகர் படித்தவர். இளங்கலை பட்டதாரி. அத்துடன் கணினித்துறையில் டிப்ளமோக்கள் படித்தவர். தங்கு தடையில்லாமல் படிப்பு வசப்பட்டது. காரணம் கல்வி ஸ்தானத்திற்கு அதிபதி செவ்வாய் உச்சம் பெற்றதோடு, திரிகோண அமைப்பில் (ஒன்றாம் வீட்டில்) உள்ளார். உடன் முதல் நிலை சுபக்கிரகமான குருவும் சேர்ந்து கூட்டாக உள்ளது. குரு நீசமாக இருந்தாலும் (எந்த நிலையிலும் நல்லவரே) அதனால் குருமங்கள யோகம் உள்ளது.

2. திருமணமானவரா அல்லது திருமணமாகாதவரா?

திருமணமானவர். எழாம் வீட்டுக்காரர் ஒன்பதில் (அதுவும் திரிகோண வீடு) சிறப்பாக அமர்ந்துள்ளார். அத்துடன் எழாம் வீட்டிப் மேல் குரு பகவானின் நேரடிப்பார்வையும் உள்ளது. களத்திரகாரகன் சுக்கிரனின் பார்வை ஏழாம் வீட்டின் மீதோ அல்லது ஏழாம் வீட்டுக்காரனின் மீதோ விழுகவில்லை. அதனால் சற்றுத் தாமதமாகத் திருமணம் நடைபெற்றது. ஜாதகருக்கு அவருடைய முப்பதாவது வயதில் திருமணம் நடைபெற்றது. சந்தோஷமான மணவாழ்க்கை. அத்துடன் இரண்டு குழந்தைகள். ஆஸ்திக்கு ஒரு ஆண்.ஆசைக்கு ஒரு பெண் என்று வைத்துக்கொள்ளுங்கள். திருமணம் ஆன நாள் முதலாய் தன் குடும்பத்துடன் வெளி நாட்டில்தான் உள்ளார்.

3. ஜாதகர் வெளிநாடு சென்று பணி செய்ய விருப்பம் கொண்டார். அவர் விருப்பம் நிறைவேறியதா? அல்லது இல்லையா? அதாவது ஜாதகருக்கும் கடல்கடக்கும் யோகம் உள்ளதா? அல்லது இல்லையா? அதாவது இங்கேயே குப்பை கொட்ட வேண்டியதுதானா?

ஜாதகர் கடந்த 15 ஆண்டுகளாக வெளி நாட்டில்தான் இருக்கிறார். நல்ல வேலையில் உள்ளார். ஒன்பதாம் வீட்டில் சுபக்கிரகமான சந்திரன் உள்ளது. அத்துடன் ஒன்பதாம் வீட்டின் மேல் அதன் அதிபதி புதனின் பார்வை உள்ளது. புதன் தனித்திருந்தால் சுபக்கிரகம் அதை மனதில் வையுங்கள். அத்துடன் லக்கினாதிபதி வலுவாக உள்ளார். குரு பகவானின் பார்வையும் (ஒன்பதாம் பார்வை) அந்த வீட்டின் மேல் விழுகிறது. இந்த மூன்று சுபக்கிரகங்களும் சேர்ந்து ஜாதகனின் வெளிநாட்டுக் கனவை நனவாக்கின.

ஜாதகத்தில் இரண்டுகிரகங்கள் உச்சம். நீசமான இரண்டு கிரகங்களும் தப்பித்துவிட்டன. குருபகபான் உச்சனான செவ்வாயுடன் சேர்ந்ததால் தப்பித்தார். புதன் சுபக்கிரகமான சந்திரனின் வலுவான பார்வையால் தப்பித்தார். ஜாதகத்தின் மிகபெரிய ப்ளஸ் பாயிண்ட் லக்கினாதிபதி சனி திரிகோணம் பெற்றது. அதுவும் நட்பு வீட்டில் திரிகோணம் பெற்றது. அலசும் போது இவற்றையும் நீங்கள் கணக்கில் கொள்ள வேண்டும்!
------------------------
1. டல்லாஸ் கண்ணன்
2. கலையரசி
3. கே.முத்துராமகிருஷ்ணன்
4. என்.விஜயகுமார்.
5. ஸ்ரவாணி
6. எம்.ரவிச்சந்திரன்
7. ஜி.முரளிகிருஷ்ணா
8. பழநிசண்முகம்
9. ஜனனி முருகேசன்
10. ரமாடு
11. சி.ஜீவானந்தம்
12. K.J
13. ஜக்வெற்றி
14. என்.விஜகுமார்

ஆகிய பதினான்கு பேர்களும் கேட்கப்பெற்ற மூன்று கேள்விகளுக்கும் சரியான பதில்களை எழுதியுள்ளார்கள். அவர்களுக்குப் பாராட்டுக்கள்

பெரும்பாலானவர்கள் இரண்டு கேள்விகளுக்கான பதில்களைச் சரியாக எழுதியுள்ளார்கள். அவர்களுக்கும் பாராட்டுக்கள்

கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்

அன்புடன்
வாத்தியார்

----------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++==

20 comments:

  1. Good Morning sir,
    Very good and excellent teaching and super analyse.
    Thanks a lot.
    With regards,
    k.umapathy

    ReplyDelete
  2. Dear Sir,

    Good morning.

    Iam same makara laknam, laknatthil sevai utcham matturum buthan serkkai. aanalum iam not completed my degree. Need your explanation if possible(My DOB 2-MARCH-1975-5.30am Bhavani)

    Regards
    Sengotaian.P.K
    Tirupur

    ReplyDelete
  3. Im glad that Iam able to predict the jadhagar kids. Also I predicted the jadhagar characteristics. Not sure, how far it is. Would be happy of you say something about his general character(like leader).

    ReplyDelete
  4. ayya,

    im waiting for next question. please Put my astrological feed hungry.

    ReplyDelete
  5. /////Blogger k.umapathy said...
    Good Morning sir,
    Very good and excellent teaching and super analyse.
    Thanks a lot.
    With regards,
    k.umapathy/////

    உங்களின் மனமுவந்த பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  6. /////Blogger redfort said...
    Dear Sir,
    Good morning.
    Iam same makara laknam, laknatthil sevai utcham matturum buthan serkkai. aanalum iam not completed my degree. Need your explanation if possible(My DOB 2-MARCH-1975-5.30am Bhavani)
    Regards
    Sengotaian.P.K
    Tirupur/////

    அன்பரே,
    நீங்கள் மகர லக்கினக்காரர். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர். கர்ப்பச்செல் இருப்பு ராகு திசையில் 10வருடம் 8 மாதம் 27 நாட்கள். அதற்குப் பிறகு 16 ஆண்டுகள் குரு மகா திசை.
    சரியா?
    உங்கள் லக்கினாதிபதி ஆறில் போய் (மறைவு) அமர்ந்திருக்கிறார். வலிமையாக இல்லை. எதிநீச்சல் போட வேண்டிய ஜாதகம். அத்துடன் நீங்கள் படிக்கின்ற காலத்தில் 12ஆம் இடத்துக்காரனின் மகா திசை. விரைய திசை. அதனால் பட்டப் படிப்பை முடிக்காமல் பாதியிலேயே விட்டு விட்டீர்கள். 4ஆம் அதிபதி செவ்வாய் உங்களைக் கல்லூரிவரை கொண்டுபோய் விட்டிருக்கிறான். அதை மறந்து விடாதீர்கள்
    அன்புடன்
    வாத்தியார்

    ReplyDelete
  7. ////Blogger கலையரசி said...
    waav...thank you ayya. You made my day.////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  8. ////Blogger கலையரசி said...
    Im glad that Iam able to predict the jadhagar kids. Also I predicted the jadhagar characteristics. Not sure, how far it is. Would be happy of you say something about his general character(like leader)./////

    பதிவில் எழுதியிருக்கிறேனே! படித்துப் பாருங்கள்!

    ReplyDelete
  9. /////Blogger C.Senthil said...
    ayya,
    im waiting for next question. please Put my astrological feed hungry.////

    நான்கு நாட்கள் பொறுத்திருங்கள். உங்களின் ஆர்வத்திற்கு நன்றி!

    ReplyDelete
  10. ஐயா , முதன் முறையாக என் கணிப்பு சரி என தேர்வு செய்ய பட்டிருக்கிறது. மிக்க நன்றி !. பாதி ஜோதிடனாக ஆகி விட்டேன் என்ற நினைப்பு வந்து விட்டது !.

    ReplyDelete
  11. ஐயா , முதன் முறையாக என் கணிப்பு சரி என தேர்வு செய்ய பட்டிருக்கிறது. மிக்க நன்றி !. பாதி ஜோதிடனாக ஆகி விட்டேன் என்ற நினைப்பு வந்து விட்டது !.இதை என் குருவாகிய உங்களுக்கே ஸமர்பிக்கிறேன் !

    ReplyDelete
  12. dear sir ,

    im siva lagnam & rasi mithunamam(thiruvathira- padam2)1raghu & chandran , 5sani(utcham), 6guru,7kethu,10budan&suriyan&sevai ,11sukran .

    sani dasa started at dec2012 and sani own pukthi now running . my question is 1)sani nallathu seivara
    yenaku sani dasai yeppadi erukum .2) jobless and own business webdesign and business also dull(education - BCA)age31 jothidar says highly affected 10place suriyan & sevai , budan combination is it true . why jobless please check it sir .

    ReplyDelete
  13. Sir,
    Thanks for detailed explanation. I am happy that my answers are correct.

    Few clarifications:
    1. Magara lagnam, Sevvai is maragathypathy. Still how he helped native even guru is neesam with Sevvai.
    2. One of classroom member Sengotain question, you replied that Sani at 6th (maraivu). so he is not helping native. But in one of old lesson you taught, planets like Sani, ragu, kethu at 6, 8 will do big benefits for native.
    Please explain sir.

    ReplyDelete
  14. ////Blogger murali krishna g said...
    ஐயா , முதன் முறையாக என் கணிப்பு சரி என தேர்வு செய்ய பட்டிருக்கிறது. மிக்க நன்றி !. பாதி ஜோதிடனாக ஆகி விட்டேன் என்ற நினைப்பு வந்து விட்டது !./////

    வாழ்த்துக்கள். பாதிக் கிணறைத் தாண்டுவது பற்றாது. முழுக்கிணறையும் தாண்டுவதற்குக் கற்றுக்கொள்ளுங்கள்! தொடர்ந்து படியுங்கள்!

    ReplyDelete
  15. /////Blogger murali krishna g said...
    ஐயா , முதன் முறையாக என் கணிப்பு சரி என தேர்வு செய்ய பட்டிருக்கிறது. மிக்க நன்றி !. பாதி ஜோதிடனாக ஆகி விட்டேன் என்ற நினைப்பு வந்து விட்டது !.இதை என் குருவாகிய உங்களுக்கே ஸமர்பிக்கிறேன் !////

    எனக்கு சமர்ப்பணம் எதுவும் வேண்டாம். உங்களின் ஆர்வத்திற்கும், வாசிப்பிற்கும் கிடைத்த வெற்றி அது!

    ReplyDelete
  16. ////OpenID sivachn said...
    dear sir ,
    im siva lagnam & rasi mithunamam(thiruvathira- padam2)1raghu & chandran , 5sani(utcham), 6guru,7kethu,10budan&suriyan&sevai ,11sukran .
    sani dasa started at dec2012 and sani own pukthi now running . my question is 1)sani nallathu seivara
    yenaku sani dasai yeppadi erukum .2) jobless and own business webdesign and business also dull(education - BCA)age31 jothidar says highly affected 10place suriyan & sevai , budan combination is it true . why jobless please check it sir ./////

    தங்கள் ஜாதகத்தைப் பார்த்துப் பலன் சொல்லும்படி கேட்டு எனக்குத் தினமும் சராசரியாக 20 மின்னஞ்சல்கள் வருகின்றன. அதெற்கெல்லாம் எனக்கு நேரமில்லை. உங்கள் ஊரிலேயே நல்ல ஜோதிடராகப் பார்த்து உங்கள் ஜாதகப் பலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

    ReplyDelete
  17. /////Blogger KJ said...
    Sir,
    Thanks for detailed explanation. I am happy that my answers are correct.
    Few clarifications:
    1. Magara lagnam, Sevvai is maragathypathy. Still how he helped native even guru is neesam with Sevvai.
    2. One of classroom member Sengotain question, you replied that Sani at 6th (maraivu). so he is not helping native. But in one of old lesson you taught, planets like Sani, ragu, kethu at 6, 8 will do big benefits for native.
    Please explain sir./////

    உச்சம் பெற்ற கிரகம் உதவி செய்யாமல் என்ன செய்யும்? மகர லக்கினத்திற்கும் கும்ப லக்கினத்திற்கு சனி லக்கின அதிபதி அவர் போய் மறைவு ஸ்தானத்தில் அமர்வது எப்படி நன்மை பயக்கும்? ஒரு படத்தின் தயாரிப்பாளர் ஓடிப் போய்விட்டால் படம் எப்படி முடியும்? எப்படி வெளியாகும்? ஆறு மற்றும் எட்டாம் வீட்டிற்கான பலன்கள் தனி. நீங்கள் சொல்லும் கிரகங்கள் அங்கே நன்மை செய்யும். வேறு நல்ல வீடுகளில் அமர்ந்து உபத்திரவம் செய்யாது அல்லவா?

    ReplyDelete
  18. /////Blogger redfort said...
    Dear Sir,
    Good morning.
    Iam same makara laknam, laknatthil sevai utcham matturum buthan serkkai. aanalum iam not completed my degree. Need your explanation if possible(My DOB 2-MARCH-1975-5.30am Bhavani)
    Regards
    Sengotaian.P.K
    Tirupur/////

    அன்பரே,
    நீங்கள் மகர லக்கினக்காரர். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர். கர்ப்பச்செல் இருப்பு ராகு திசையில் 10வருடம் 8 மாதம் 27 நாட்கள். அதற்குப் பிறகு 16 ஆண்டுகள் குரு மகா திசை.
    சரியா?
    உங்கள் லக்கினாதிபதி ஆறில் போய் (மறைவு) அமர்ந்திருக்கிறார். வலிமையாக இல்லை. எதிநீச்சல் போட வேண்டிய ஜாதகம். அத்துடன் நீங்கள் படிக்கின்ற காலத்தில் 12ஆம் இடத்துக்காரனின் மகா திசை. விரைய திசை. அதனால் பட்டப் படிப்பை முடிக்காமல் பாதியிலேயே விட்டு விட்டீர்கள். 4ஆம் அதிபதி செவ்வாய் உங்களைக் கல்லூரிவரை கொண்டுபோய் விட்டிருக்கிறான். அதை மறந்து விடாதீர்கள்
    அன்புடன்
    வாத்தியார்

    Thanks ayya.Its true but i am doing my degree(unfortunately discontinue) via postal not in collage.
    Ucham petra sevai ennai 10th and plus2 vil nalla mathippenkal pettru pass panna vaitthan enpathile santhosame.

    Thanks lot for your valuable reply

    Sengotaian PK
    Tirupur

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com