17.9.13

Astrology: Quiz புதிர் - பகுதி 8

 
Astrology: Quiz புதிர் - பகுதி 8

உட்தலைப்பு: எனது கேள்வியும் உங்கள் பதிலும்

தொடர் - பகுதி எட்டு

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான பகுதி இது! வழக்கம்போல ஆர்வத்துடன்  பங்கு கொள்ளும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன சரியா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?


நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டுபிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

க்ளூ வேண்டுமா?

ஜாதகர் உலகம் அறிந்த பிரபலம்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++

38 comments:

  1. Queen Victoria (24 May 1819 – 22 January 1901) Birth Time: 5 AM England

    ReplyDelete
  2. பதினெட்டு வயதிலேயே 'சூரியன் அஸ்தமிக்காத' மாபெரும் பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் மஹாராணியாக முடிசூட்டிக்கொண்ட 'அலக்ஸாண்ட்ரியா விக்டோரியா' 24-மே-1819 அன்று அதிகாலை சுமார் 5:00 மணி அளவில் லண்டனில் உள்ள கென்சிங்க்டன் அரண்மணையில் பிறந்தார்.

    தன்னுடைய சுயசரிதத்தை 122 பாகங்களில் சாசனப் படுத்தியுள்ள இவரது ஆட்கியில் மட்டும் 20 பேர் பிரிட்டனின் பிரதம மந்திரியாக இருந்தனர்.

    (கோஹினூர் என்பது ஒரு காலத்தில் உலகில் அதிகம் அறியப்பட்ட வைரமாக இருந்த 105 கேரட் (21.6 கிராம்) வைரம் ஆகும். பெர்சிய மொழியில் இதன் பொருள் "மலையின் ஒளி" ஆகும். கோஹினூர் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் குண்டூர் மாவட்டம் கொல்லூர் என்ற இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்டது. இது வரலாற்றின் பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு இந்து, முகலாயர், பெர்சியர், ஆப்கன், சீக்கியர் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் சண்டையிடப்பட்டு கைவசமாக்கப்பட்டது, மேலும் அவர்கள் இதைப் போர் நேரத்தில் கைப்பற்றி மீண்டும் மீண்டும் பாழ்படுத்தினர். இது இறுதியாக கிழக்கிந்தியக் கம்பெனியின் மூலமாக கைப்பற்றப்பட்டு, 1877 ஆம் ஆண்டில் மகாராணி விக்டேரியாவை இந்தியாவின் பேரரசியாக அறிவித்த போது பிரிட்டிஷ் அரச ஆபரணங்களின் பகுதியானது.)

    ReplyDelete
  3. விக்டோரியா மகாராணி

    ReplyDelete
  4. அந்த
    பலத்தை எங்களுக்கும்
    பார்க்க ஆவலாக உள்ளதே

    ReplyDelete
  5. இது விக்டோரியா மகாராணியாரின் ஜாதகம். 24/05/1819 - 04.15 am - London, England - 26 நாடுகளுக்குச் சொந்தக்காரி என்றால் சும்மாவா? என்ற தலைப்பில் ஏற்கனவே இவர் ஜாதகத்தை அலசியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  6. மகாராணி விக்டோரியா

    ReplyDelete
  7. அய்யா, இது பிரிட்டிஷ் மஹாராணி விக்டோரியா அவர்களின் ஜாதகம். மேல் நிலை பாடம் உதவியது . மிக்க நன்றி. ! - முரளி

    ReplyDelete
  8. இது இங்கிலாந்து மகாராணி விக்டோரியா அவர்களின் ஜாதகம். 24 மே 1819 பிறந்த இவர் மகா யோகக்காரர். இராஜ கிரகங்களான சூரியனும் சந்திரனும் இலக்னத்தில், அதுவும் சந்திரன் உச்சம். இலக்கினாதிபதி சுக்கிரன் 12ல் மறைந்தாலும், இவரே 6ம் இடத்து அதிபதியும் ஆகிறார். அதனால் விபரீத இராஜயோகமும் உண்டு. குரு பகவான் நீசமானாலும் திரிகோணத்தில், யோககாரகன் சனி பகவானும் இராகு பகவானும் செவ்வாயோடு 11ல். இந்த அமைப்பு இவருக்கு இராஜயோகத்தை அளித்தது.

    ReplyDelete
  9. It is the horoscope of Queen Victoria born on 24.05.1819

    AMG

    ReplyDelete
  10. 25/05/1819 time 6:00 to 6:30

    But I dont know name.

    By
    Senthilkumar D

    ReplyDelete
  11. vanakam.sir.jathaki.victoryamaga rani.....

    ReplyDelete
  12. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

    புதிர் - பகுதி 8 இல் கொடுத்திருந்த ஜாதகத்தின்படி

    1819 ஆம் ஆண்டு மே மாதம் 24 ந் தேதி பிறந்த இந்த ஜாதகத்துக்குரியவர் இங்கிலாந்தின் விக்டோரியா மாகாராணி ஆவார்.

    ReplyDelete
  13. Respected Sir,

    My answer for today,s Q -8 is:-

    The Great Queen Victoria.

    Date of Birth: 24.05.1819
    Place of Birth : Kensington palace, London.

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  14. Respected Sir,
    This horoscope belongs to Victoria Maharani.
    date f birth : 24th may 1819.
    birth time: 6 AM approx.

    Yesterday's lesson helped much in finding today's quiz Sir.

    ReplyDelete
  15. Dear Sir,

    D.o.b is May 24th 1819

    Queen Victoria.

    Thanking you

    ReplyDelete
  16. sir the given horoscope is that of queen victoria. i think you have already discussed her horoscope. since i remembered that this is of a queens horoscope i found out directly bypassing all the shortcuts you have given.thank you sir

    ReplyDelete
  17. எப்படிப் போட்டாலும் கணக்கு சரியாக வரவில்லை ஐயா!

    1968ல் சனி ராகு மீனத்தில். ஆனால் குரு சிம்மத்தில். 1949ல் குரு மகரத்தில் ராகு மீனத்தில் சனியோ சிம்மத்தில்.

    1900 க்கு முன்பு பிறந்தவராக் இருக்கலாம். மென் பொருள் ஆதரவளிக்கவில்லையே!

    விடைக்கு காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  18. ஐயா, அது மேதகு விக்டோரியா மகாராணியின் ஜாதகம். ஜனவரி 1ம் தேதி மேல்நிலைப் பாடத்தில் பதிவிட்டுள்ளீர்களே ஐயா!

    ReplyDelete
  19. Queen Victoria... May 24 1819.. I found the date through Jagannatha Hora. Still don't know how to calculate manually sir. It looks like very tedious process to calculate manually for me.

    ReplyDelete
  20. வணக்கம் ஐயா,

    நீங்கள் கொடுத்துள்ள ஜாதகம்;24/5/1819,காலை 5.15மணி,விக்டோரியா மகாராணியின் ஜாதகம், நான் பாசுங்ளா ஐயா,

    ReplyDelete
  21. Hi,

    This is Former England Queen Victoria's Horoscope DOB : 24-05-1819 Morning 5:45 - 7:15

    -Rajkumar

    ReplyDelete
  22. This chart is of Queen Victoria born on 24 May 1819

    ReplyDelete
  23. பிறந்த நாள் : 24-05-1819
    பிறந்த நேரம்: 04:15 AM
    பெயர்: ராணி விக்டோரியா

    ReplyDelete
  24. சரியான விடை:
    மேதகு விக்டோரியா மகாராணியின் ஜாதகம் இது. 26 நாடுகளுக்கு அரசியாக இருந்தவர் அவர்

    பெயர்: Alexandrina Victoria
    வாழ்ந்த காலம்: 24 May 1819 முதல் 22 January 1901 வரை சுமார்
    81 ஆண்டுகள் 7 மாதங்கள் 28 நாட்கள்
    பதவிக்கு வந்த காலம்: 28.06.1938 (தனது 20வது வயதில்)

    பிறப்பு விவரம்:
    23/24.5.1819
    அதிகாலை 4:40 மணி
    L attitude: 51.30 North
    Longitude: 0.5 West
    Birth Star: Rohini
    ரிஷப ராசி, ரிஷப லக்கினம்
    ---------------------------------------------
    சரியான விடையைப் பின்னூட்டம் மூலம் எழுதிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.உங்களின் ஆர்வத்திற்கு நன்றி
    இதையே தனித்தனியாக அனைவருக்கும் எழுதிய பதிலாக எடுத்துக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்
    அன்புடன்
    வாத்தியார்
    +++++++++++++++++++++++++

    ReplyDelete
  25. சரியான விடையை மின்னஞ்சல் மூலம் எழுதியவர்களின் பெயரைக் கீழே கொடுத்துள்ளேன். அவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்!

    1. ராமமூர்த்தி ராஜ்
    2. பரமசிவம் சுந்தரி, சென்னை
    3. விஜய் பாண்டுரங்கன்
    4. சக்தி கருப்பையா, மதுரை
    5. என்.விஜயகுமார்
    6. வி.பானுமதி
    7. எஸ்.தினேஷ்
    ---------------------
    அன்புடன்
    வாத்தியார்

    ReplyDelete
  26. Queen Victoria
    24.5.1819
    ரோகிணி முதலாம் பாதம்

    ReplyDelete
  27. இது இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் இந்தியாவையும் சேர்த்து 28 நாடுகளை ஆண்ட விக்டோரியா மகாராணியின் ஜாதகம்

    ReplyDelete
  28. When we talk about various India astrologers in Sydney, Pandit Vivek Ji's name inevitably tops the list. His Proficiency is not just limited to astrology. Pandit vivek ji has mastered over subjects in Astrology like Career, Marriage problems, Business, Education, Legal problem, Love affairs, Vaastu problem, Conjugate problem, etc. so tried to consult our esteemed astrologer in Sydney to provide an instant remedy that will uplift your spirits and bring happiness to your life. There are millions of people who are struggling to achieve their ambitions and dreams in their lives. But you could get an edge over them, if you seek the services of our Best astrologer in Sydney, Australia.

    Indian Astrologer in Sydney

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com