ஊர் கேட்ட பாடல்கள் உனக்காக வாழும்!
நீ.. பார்த்த பார்வைகள் கனவோடு போகும்..
நீ.. சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்...
ஊர் கேட்ட பாடல்கள் உனக்காக வாழும்!
உன் நினைவுகள் என்றும் எமக்காக வாழும்!..
---------------------------------------------------------------------------------
சென்னையில் காலமான பின்னணிப் பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன் (91 வயது) அவர்களுக்கு வகுப்பறையின் சார்பில் நமது அஞ்சலியைப் பதிவு
செய்கிறேன். எத்தனையோ உள்ளங்களைத் தன் எண்ணற்ற பாடல்களால் மகிழ்வித்த அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். பழநி அப்பனைப்
பிரார்த்திக்கின்றேன்
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------
Our sincere thanks to the person who uploaded this clipping in the net!
-----------------------------------------------------------------------------
அவர் பாடிய பாடல்களில், சிறந்த பாடல்களை, பிடித்த பாடல்களைப் பட்டியலிடுவது கடினம். சட்டென்று தோன்றிய சில பாடல்களை இங்கே
நினைவு கூறுகிறேன். பல பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்தவர் அவர்!
1
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக
அன்னை மடியை விரித்தாள் எனக்காக
3
பால் தமிழ் பால்
எனும் நினைப்பால்
இதழ் துடிப்பால்
அதன் பிடிப்பால்
சுவை அறிந்தேன்
4
சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா
5
போனால் போகட்டும் போடா; இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா.
6
பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம்போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக
பல்லாக்கு வாங்க வந்தேன் ஊர்வலம்போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக
7
நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்
கிடைக்கும் என்பார் கிடைக்காது
கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்
8
அவனுகென்ன தூங்கிவிட்டான் ...
அகப்பட்டவன் நான் அல்லவா
ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே போட்டு விட்டான்
அவனுகென்ன தூங்கிவிட்டான் ...
அகப்பட்டவன் நான் அல்லவா
9
மனுசன மனுஷன் சாப்பிடுராண்டா தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே
மனுசன மனுஷன் சாப்பிடுராண்டா தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே
10
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா
இது கொள்ளையாடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா
11
போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் குடுத்தானே-
இறைவன் புத்தியை குடுத்தானே -
அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே -
மனிதன் பூமியை கெடுத்தானே
போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியை குடுத்தானே
12
உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு
இங்கு கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு
கொண்டாடும்போது ஒரு நூறு பேரு
உயிர் கூடு விட்டு போன பின்னே கூட யாரு
13
மாறாதையா மாறாது
மனமும் குணமும் மாறாது
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
தூய தங்கம் தீயில் வெந்தாலும் (மாறாதையா )
14
பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம்
பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம்
ஊரப்பா பெரியதப்பா உள்ளம்தான் சிறியதப்பா
ஊரப்பா பெரியதப்பா உள்ளம்தான் சிறியதப்பா
15
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
அது ஆணவச் சிரிப்பு
இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ
ஆனந்தச் சிரிப்பு
நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது,
அங்கே சிரிப்பவர் யார் அழுபவர் யார்
தெரியும் அப்போது
16
கடவுள் ஏன் கல்லானான் - மனம்
கல்லாய் போன மனிதர்களாலே (கடவுள்)
கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான் - அதை
கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான்
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான் - இங்கு
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான் (கடவுள்)
17
தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிக்கும்...
செய்த தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
18
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைத்தேனே
கூட்டும் இசையும் கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ?
19
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
20
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன் - அந்தி
நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன் - அந்தி
நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன் ஆ...
21
ஆறு மனமே ஆறு - அந்த
ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு
22
பார்த்தா பசுமரம்
படுத்தா நெடுமரம்
சேர்த்தா விறகுக்காகுமா - ஞானத்தங்கமே
தீயிலிட்டால் கரியும் மிஞ்சுமா?
23
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
24
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே மனிதன் யாருமில்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
25
ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே
26
ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
27
அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
28
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலைகடல் ஓய்வதில்லை
29
கண்போன போக்கிலே கால போகலாமா..
கால் போன போக்கிலே மனம் போகலாமா..
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா..
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா..
30
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்
31
புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
கங்கை யமுனை காவிரி வைகை ஓடுவது எதற்காக
நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக
32
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து
பாரு ராஜா
33
புதிய வானம் புதிய பூமி -
எங்கும்பனிமழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ணப் பூமழை பொழிகிறது ஒ ஒ ஓஹோ
லால்ல லாலால்லா ஓஓஓ லால்ல லாலால்லா
34
தாய் இல்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
35
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தநனாலே வெளி வரும் தயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
36
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா (அச்சம்)
37
உன்னை அறிந்தால்...
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
38
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை
39
சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்
சோம்பலை வளர்த்தா ஏற்படும் கஷ்டம்
உண்மையோடு உழைக்கணும்
தானேய் தனன--
மச்சான் ஒன்று சேர்ந்து வாழோணும்
தானேய் தண்னன்ன
40
எங்கே போய்விடும் காலம்?-
அது என்னையும் வாழ வைக்கும்-
நீ இதயத்தை திறந்து வைத்தால்-
அது உன்னையும் வாழவைக்கும்
41
நல்ல நல்ல நிலம் பார்த்து
நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே
நாணயத்தை வளர்க்கண்ணும்
42
நான் ஆணையிட்டால்...
அது நடந்து விட்டால்...
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்
44
பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவனா
இனிப்பில்லாத முக்கனியா
இசையில்லாத முத்தமிழா
45
உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி கடவுள் செய்த குற்றமடி
உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி கடவுள் செய்த குற்றமடி
46
இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்
நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று
47
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப்பாரடா
நீ எண்ணிப்பாரடா (சின்னப்பயலே ..)
ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி
உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்
காலம் தரும் பயிற்சி
- உன் நரம்போடு தான் பின்னி வளரனும்
தன்மான உணர்ச்சி தன்மான உணர்ச்சி
48
திருடாதே பாப்பா திருடாதே
திருடாதே பாப்பா திருடாதே
வறுமை நிலைக்கு பயந்து விடாதே
வறுமை நிலைக்கு பயந்து விடாதே
திறமை இருக்கு மறந்து விடாதே (திருடாதே ....)
49
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு எனும் தோட்டத்திலே
நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
50
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
51
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி நீந்ததுகின்ற குழலோ
மாதுளையின் பூ போலே மலருகின்ற இதழோ
மான் இனமும் மீன் இனமும் மயங்குகின்ற விழியோ
52
பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி சேரவேண்டும்
பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி சேரவேண்டும்
கலைகளை தெய்வமாய் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும் இம்ம்ம்ம்
பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
53
என்னை தெரியுமா என்னை தெரியுமா -
நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன்
என்னை தெரியுமா ஆஆஆ ........ உங்கள் கவலை மறக்க கவிதை பாடும்
கவிஞன் என்னை தெரியுமா ஆஆ...
54
பாடினாள் ஒரு பாட்டு
பால் நிலாவினில் நேற்று
ஓடினேன் அதை கேட்டு
தேடினேன் வலை போட்டு
பூங்குயில் அவள் யாரோ
பொன் மயில் அவள் பேரோ
பூங்குயில் அவள் யாரோ
பொன் மயில் அவள் பேரோ
55
தங்க பதக்கத்தின் மேலே
ஒரு முத்து பதித்தது போலே
இந்த பட்டு கன்னங்களின் மேலே
ஒன்று தொட்டு கொடுத்திடலாமோ
நீயும் விட்டு கொடுத்திடலாமோ
56
பேசுவது கிளியா - இல்லை
பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா
கொத்து மலர்க் கொடியா
57
மானல்லவோ கண்கள் தந்தது - ஆஹா
மயில் அல்லவோ சாயல் தந்தது - ஓஹோ
தேனல்லவோ இதழைத் தந்தது - ம் ஹும்
சிலையல்லவோ அழகைத் தந்தது
58
சந்திரோதயம் ஒரு பெண்ணானாதோ
செவ்வானாமே இரு கண்ணானாதோ
பொன்னோவியம் என்று பேரானதோ
என் வாசல் வழியாக வலம் வந்ததோ
59
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
என் மன தோட்டத்து வண்ணப் பறவை
சென்றது எங்கே சொல் சொல் சொல்
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
60
திரும்பி வா ஒளியே திரும்பி வா
விரும்பி வா என்னை விரும்பி வா
இட்ட அடி கனிந்திருக்க்க
எடுத்த அடி சிவந்திருக்க
பட்ட இடம் குளிர்ந்திருக்க
பருவ மழை பொழிந்திருக்க
திரும்ப வா அறிவே திரும்ப வா
திரும்பி வா ஒளியே திரும்பி வா
61
கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா -
நாம்கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா
செல்லாத இடம் நோக்கிச் செல்லலாமா
சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா
62
நாங்க புதுசா ...
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க
63
நல்லது கண்ணே கனவு கனிந்தது
நன்றி உனக்கு
உறவில் எழுந்ததுஅன்பு விளக்கு
எனது மடியினில் வா..சீதா.. சீதா..சீதா.. சீதா...
64
ஆடலுடன் பாடலைக் கேட்டு
ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
ஆடலுடன் பாடலைக் கேட்டு
ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
65
சின்னவளை முகம் சிவந்தவளைநான்
சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு
சின்னவளை முகம் சிவந்தவளைநான்
சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு
66
பூ வைத்த பூவைக்குப் பூக்கள் சொந்தமா
பூவுக்கும் தேனுக்கும்
பூ சிந்தும் போதைக்கும் ஈக்கள் சொந்தமா
67
ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை
அவளில்லாமல் நானில்லை
நானில்லாமல் அவளில்லை
68
நாடகம் எல்லாம் கண்டேன்
உந்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே .....
கீதம் பாடும் மொழியிலே ...... (நாடகம் )
69
பட்டுச்சேலை காத்தாட பருவமேனி கூத்தாட
கட்டு கூந்தல் முடித்தவளே -
என்னைக்காதல் வலையில் அடைத்தவளே
70
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது
71
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
பார்வையிலே மன்னன் பேரெழுதி
அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
72
சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா
எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே - உன்னை
இடர வைத்து தள்ளப் பார்க்கும் குழியிலே
அத்தனையும் தாண்டி காலை முன்வையடா
அஞ்சாமல் கடமையிலே கண்வையடா ஆஆஆ
73
எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்
74
ஏர்முனைக்கு நேர் இங்கு எதுவுமே. இல்லே!
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே. இல்லே!”
75
ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே!
என்னருமை காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே!
76
மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்
அண்ணன் வாழவைப்பான் என்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்
77
கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?
78
உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கிக்கிடப்பது மீதி
79
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும்
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும்
80
தாழையாம் பூ முடிச்சு தடம் பாத்து நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா பொன்னம்மா என்
வாசலலுக்கு வாப்ங்கி வந்தது என்னம்மா - என்னம்மா
81
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ?
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ?
இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே
நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
82
படைத்தானே படைத்தானே
மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே
மனதினில் கவலையை வளர்த்தானே
83
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார்முகிலாய்
காதல் மழை பொழியும் கார்முகிலாய் - இவள்
காதலன் நானிருக்கப் பேரெழிலாய்
84
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே..
தலைவன் இருக்கிறான் மயங்காதே
85
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
86
மதுரையில் பறந்த மீன்கொடியை
உன் கண்களில் கண்டேனே..
போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை
உன் புருவத்தில் கண்டேனே..
தஞ்சையில் பறந்த புலிக்கொடியை
உன் பெண்மையில் கண்டேனே..
இவை மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை
தமிழகம் என்றேனே..உன்னை
தமிழகம் என்றேனே..
87
ஏட்டில் எழுதி வைத்தேன்
எழுதியதை சொல்லி வைத்தேன்
கேட்டவளை காணோமடா இறைவா
கூட்டிச்சென்ற இடமேதடா
88
கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் - அவன்
காதலித்து வேதனையில் வாட வேண்டும்!
பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும் - அவன்
பெண்ணென்றால் என்னவென்று உணர வேண்டும்!
89
அன்புள்ள மான் விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர் காதலில் ஓர் கவிதை
90
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே! நண்பனே! நண்பனே!
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன்? ஏன்? ஏன்?
91
வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
நீ.. பார்த்த பார்வைகள் கனவோடு போகும்..
நீ.. சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்...
ஊர் கேட்ட பாடல்கள் உனக்காக வாழும்!
உன் நினைவுகள் என்றும் எமக்காக வாழும்!..
---------------------------------------------------------------------------------
சென்னையில் காலமான பின்னணிப் பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன் (91 வயது) அவர்களுக்கு வகுப்பறையின் சார்பில் நமது அஞ்சலியைப் பதிவு
செய்கிறேன். எத்தனையோ உள்ளங்களைத் தன் எண்ணற்ற பாடல்களால் மகிழ்வித்த அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். பழநி அப்பனைப்
பிரார்த்திக்கின்றேன்
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------
Our sincere thanks to the person who uploaded this clipping in the net!
-----------------------------------------------------------------------------
அவர் பாடிய பாடல்களில், சிறந்த பாடல்களை, பிடித்த பாடல்களைப் பட்டியலிடுவது கடினம். சட்டென்று தோன்றிய சில பாடல்களை இங்கே
நினைவு கூறுகிறேன். பல பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்தவர் அவர்!
1
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக
அன்னை மடியை விரித்தாள் எனக்காக
3
பால் தமிழ் பால்
எனும் நினைப்பால்
இதழ் துடிப்பால்
அதன் பிடிப்பால்
சுவை அறிந்தேன்
4
சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா
5
போனால் போகட்டும் போடா; இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
போனால் போகட்டும் போடா.
6
பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம்போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக
பல்லாக்கு வாங்க வந்தேன் ஊர்வலம்போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன் தனிமரமாக
7
நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்
கிடைக்கும் என்பார் கிடைக்காது
கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்
8
அவனுகென்ன தூங்கிவிட்டான் ...
அகப்பட்டவன் நான் அல்லவா
ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே போட்டு விட்டான்
அவனுகென்ன தூங்கிவிட்டான் ...
அகப்பட்டவன் நான் அல்லவா
9
மனுசன மனுஷன் சாப்பிடுராண்டா தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே
மனுசன மனுஷன் சாப்பிடுராண்டா தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே
10
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா
இது கொள்ளையாடிப்பதில் வல்லமை காட்டும் திருட்டு உலகமடா
தம்பி தெரிந்து நடந்து கொள்ளடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா
இதயம் திருந்த மருந்து சொல்லடா
11
போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியைக் குடுத்தானே-
இறைவன் புத்தியை குடுத்தானே -
அதில் பொய்யும் புரட்டும் திருட்டும் கலந்து
பூமியைக் கெடுத்தானே -
மனிதன் பூமியை கெடுத்தானே
போயும் போயும் மனிதனுக்கிந்த
புத்தியை குடுத்தானே
12
உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு
இங்கு கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு
கொண்டாடும்போது ஒரு நூறு பேரு
உயிர் கூடு விட்டு போன பின்னே கூட யாரு
13
மாறாதையா மாறாது
மனமும் குணமும் மாறாது
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
தூய தங்கம் தீயில் வெந்தாலும் (மாறாதையா )
14
பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம்
பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணமாம்
ஊரப்பா பெரியதப்பா உள்ளம்தான் சிறியதப்பா
ஊரப்பா பெரியதப்பா உள்ளம்தான் சிறியதப்பா
15
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
அது ஆணவச் சிரிப்பு
இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ
ஆனந்தச் சிரிப்பு
நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது,
அங்கே சிரிப்பவர் யார் அழுபவர் யார்
தெரியும் அப்போது
16
கடவுள் ஏன் கல்லானான் - மனம்
கல்லாய் போன மனிதர்களாலே (கடவுள்)
கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான் - அதை
கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான்
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான்
இரக்கத்தை நினைத்தவன் பொன்னை இழந்தான் - இங்கு
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்
எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான் (கடவுள்)
17
தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிக்கும்...
செய்த தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
18
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைத்தேனே
கூட்டும் இசையும் கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ?
19
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று
20
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன் - அந்தி
நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன் - அந்தி
நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன் ஆ...
21
ஆறு மனமே ஆறு - அந்த
ஆண்டவன் கட்டளை ஆறு
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு
22
பார்த்தா பசுமரம்
படுத்தா நெடுமரம்
சேர்த்தா விறகுக்காகுமா - ஞானத்தங்கமே
தீயிலிட்டால் கரியும் மிஞ்சுமா?
23
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
24
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே மனிதன் யாருமில்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
25
ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே
26
ஏன் என்ற கேள்வி
இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
27
அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
28
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
ஆதவன் மறைவதில்லை
ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும்
அலைகடல் ஓய்வதில்லை
29
கண்போன போக்கிலே கால போகலாமா..
கால் போன போக்கிலே மனம் போகலாமா..
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா..
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா..
30
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்
31
புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்காக
தோழா ஏழை நமக்காக
கங்கை யமுனை காவிரி வைகை ஓடுவது எதற்காக
நாளும் உழைத்து தாகம் எடுத்த தோழர்கள் நமக்காக
32
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து
பாரு ராஜா
33
புதிய வானம் புதிய பூமி -
எங்கும்பனிமழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ணப் பூமழை பொழிகிறது ஒ ஒ ஓஹோ
லால்ல லாலால்லா ஓஓஓ லால்ல லாலால்லா
34
தாய் இல்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
35
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தநனாலே வெளி வரும் தயங்காதே
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே
36
அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா
தாயகம் காப்பது கடமையடா (அச்சம்)
37
உன்னை அறிந்தால்...
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
38
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
கடமை அது கடமை
கடமை அது கடமை
39
சும்மா இருந்தா சோத்துக்கு நஷ்டம்
சோம்பலை வளர்த்தா ஏற்படும் கஷ்டம்
உண்மையோடு உழைக்கணும்
தானேய் தனன--
மச்சான் ஒன்று சேர்ந்து வாழோணும்
தானேய் தண்னன்ன
40
எங்கே போய்விடும் காலம்?-
அது என்னையும் வாழ வைக்கும்-
நீ இதயத்தை திறந்து வைத்தால்-
அது உன்னையும் வாழவைக்கும்
41
நல்ல நல்ல நிலம் பார்த்து
நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே
நாணயத்தை வளர்க்கண்ணும்
42
நான் ஆணையிட்டால்...
அது நடந்து விட்டால்...
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்
44
பனி இல்லாத மார்கழியா
படை இல்லாத மன்னவனா
இனிப்பில்லாத முக்கனியா
இசையில்லாத முத்தமிழா
45
உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி கடவுள் செய்த குற்றமடி
உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி கடவுள் செய்த குற்றமடி
46
இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்
நினைத்து வாட ஒன்று மறந்து வாழ ஒன்று
47
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப்பாரடா
நீ எண்ணிப்பாரடா (சின்னப்பயலே ..)
ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி
உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி
நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்
காலம் தரும் பயிற்சி
- உன் நரம்போடு தான் பின்னி வளரனும்
தன்மான உணர்ச்சி தன்மான உணர்ச்சி
48
திருடாதே பாப்பா திருடாதே
திருடாதே பாப்பா திருடாதே
வறுமை நிலைக்கு பயந்து விடாதே
வறுமை நிலைக்கு பயந்து விடாதே
திறமை இருக்கு மறந்து விடாதே (திருடாதே ....)
49
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு எனும் தோட்டத்திலே
நாளை மலரும் முல்லைகளே
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
50
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
51
நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ
நீரலைகள் இடம் மாறி நீந்ததுகின்ற குழலோ
மாதுளையின் பூ போலே மலருகின்ற இதழோ
மான் இனமும் மீன் இனமும் மயங்குகின்ற விழியோ
52
பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி சேரவேண்டும்
பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி சேரவேண்டும்
கலைகளை தெய்வமாய் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும் இம்ம்ம்ம்
பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
53
என்னை தெரியுமா என்னை தெரியுமா -
நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன்
என்னை தெரியுமா ஆஆஆ ........ உங்கள் கவலை மறக்க கவிதை பாடும்
கவிஞன் என்னை தெரியுமா ஆஆ...
54
பாடினாள் ஒரு பாட்டு
பால் நிலாவினில் நேற்று
ஓடினேன் அதை கேட்டு
தேடினேன் வலை போட்டு
பூங்குயில் அவள் யாரோ
பொன் மயில் அவள் பேரோ
பூங்குயில் அவள் யாரோ
பொன் மயில் அவள் பேரோ
55
தங்க பதக்கத்தின் மேலே
ஒரு முத்து பதித்தது போலே
இந்த பட்டு கன்னங்களின் மேலே
ஒன்று தொட்டு கொடுத்திடலாமோ
நீயும் விட்டு கொடுத்திடலாமோ
56
பேசுவது கிளியா - இல்லை
பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா
கொத்து மலர்க் கொடியா
57
மானல்லவோ கண்கள் தந்தது - ஆஹா
மயில் அல்லவோ சாயல் தந்தது - ஓஹோ
தேனல்லவோ இதழைத் தந்தது - ம் ஹும்
சிலையல்லவோ அழகைத் தந்தது
58
சந்திரோதயம் ஒரு பெண்ணானாதோ
செவ்வானாமே இரு கண்ணானாதோ
பொன்னோவியம் என்று பேரானதோ
என் வாசல் வழியாக வலம் வந்ததோ
59
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
என் மன தோட்டத்து வண்ணப் பறவை
சென்றது எங்கே சொல் சொல் சொல்
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
60
திரும்பி வா ஒளியே திரும்பி வா
விரும்பி வா என்னை விரும்பி வா
இட்ட அடி கனிந்திருக்க்க
எடுத்த அடி சிவந்திருக்க
பட்ட இடம் குளிர்ந்திருக்க
பருவ மழை பொழிந்திருக்க
திரும்ப வா அறிவே திரும்ப வா
திரும்பி வா ஒளியே திரும்பி வா
61
கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா -
நாம்கையோடு கை சேர்த்துக் கொள்ளலாமா
செல்லாத இடம் நோக்கிச் செல்லலாமா
சிந்தாமல் சிதறாமல் அள்ளலாமா
62
நாங்க புதுசா ...
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க
63
நல்லது கண்ணே கனவு கனிந்தது
நன்றி உனக்கு
உறவில் எழுந்ததுஅன்பு விளக்கு
எனது மடியினில் வா..சீதா.. சீதா..சீதா.. சீதா...
64
ஆடலுடன் பாடலைக் கேட்டு
ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
ஆடலுடன் பாடலைக் கேட்டு
ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
65
சின்னவளை முகம் சிவந்தவளைநான்
சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு
சின்னவளை முகம் சிவந்தவளைநான்
சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு
66
பூ வைத்த பூவைக்குப் பூக்கள் சொந்தமா
பூவுக்கும் தேனுக்கும்
பூ சிந்தும் போதைக்கும் ஈக்கள் சொந்தமா
67
ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன்
நிலவில் குளிரில்லை
அவள் கண்ணைப் பார்த்து மலரைப் பார்த்தேன்
மலரில் ஒளியில்லை
அவளில்லாமல் நானில்லை
நானில்லாமல் அவளில்லை
68
நாடகம் எல்லாம் கண்டேன்
உந்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே .....
கீதம் பாடும் மொழியிலே ...... (நாடகம் )
69
பட்டுச்சேலை காத்தாட பருவமேனி கூத்தாட
கட்டு கூந்தல் முடித்தவளே -
என்னைக்காதல் வலையில் அடைத்தவளே
70
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது
71
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
பார்வையிலே மன்னன் பேரெழுதி
அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி
பூ முடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
72
சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா
தலை நிமிர்ந்து உனை உணர்ந்து செல்லடா
எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே - உன்னை
இடர வைத்து தள்ளப் பார்க்கும் குழியிலே
அத்தனையும் தாண்டி காலை முன்வையடா
அஞ்சாமல் கடமையிலே கண்வையடா ஆஆஆ
73
எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என் பாடல் நான் பாட பலர் ஆடுவார்
இனி என்னோடு யார் ஆடுவார்
74
ஏர்முனைக்கு நேர் இங்கு எதுவுமே. இல்லே!
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே. இல்லே!”
75
ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே!
என்னருமை காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே!
76
மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்
அண்ணன் வாழவைப்பான் என்று அமைதி கொண்டாள்
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றாள்
77
கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?
78
உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கிக்கிடப்பது மீதி
79
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும்
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும்
80
தாழையாம் பூ முடிச்சு தடம் பாத்து நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா பொன்னம்மா என்
வாசலலுக்கு வாப்ங்கி வந்தது என்னம்மா - என்னம்மா
81
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ?
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ?
இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே
நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே
82
படைத்தானே படைத்தானே
மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே
மனதினில் கவலையை வளர்த்தானே
83
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
காதல் மழை பொழியும் கார்முகிலாய்
காதல் மழை பொழியும் கார்முகிலாய் - இவள்
காதலன் நானிருக்கப் பேரெழிலாய்
84
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே..
தலைவன் இருக்கிறான் மயங்காதே
85
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான் - அவன்
கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்
86
மதுரையில் பறந்த மீன்கொடியை
உன் கண்களில் கண்டேனே..
போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை
உன் புருவத்தில் கண்டேனே..
தஞ்சையில் பறந்த புலிக்கொடியை
உன் பெண்மையில் கண்டேனே..
இவை மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை
தமிழகம் என்றேனே..உன்னை
தமிழகம் என்றேனே..
87
ஏட்டில் எழுதி வைத்தேன்
எழுதியதை சொல்லி வைத்தேன்
கேட்டவளை காணோமடா இறைவா
கூட்டிச்சென்ற இடமேதடா
88
கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் - அவன்
காதலித்து வேதனையில் வாட வேண்டும்!
பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும் - அவன்
பெண்ணென்றால் என்னவென்று உணர வேண்டும்!
89
அன்புள்ள மான் விழியே
ஆசையில் ஓர் கடிதம்
நான் எழுதுவதென்னவென்றால்
உயிர் காதலில் ஓர் கவிதை
90
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே! நண்பனே! நண்பனே!
இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே அது ஏன்? ஏன்? ஏன்?
91
வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
டி.எம்.எஸ் பாடிய எண்ணற்ற பாடல்களில் ஒவ்வொன்றும் ஒரு விதமாக ரசிகர்களை பரவசமடையவோ அல்லது அமைதிப்படுத்தவோ செய்யும். அவற்றில் சில பாடல்களின் பட்டியலை வகுப்பறையில் கொடுத்ததற்கு நன்றி.
ReplyDeleteகாலை வணக்கம் அய்யா !
ReplyDeletegood post about TMS
ReplyDeleteஈடு இணையற்ற கலைஞன்..தமிழ் உள்ளளவும் அவர்தம் புகழ் நிலைத்திருக்கும். முருக பக்தராகிய அவர் - முருகனுக்குரிய விசாகம் நிறைந்த நன்னாளை அடுத்து முருகனின் திருவடித் தாமரைகளில் அடைக்கலம் ஆனார்..
ReplyDeletePBS சென்ற மாதம்
ReplyDeleteTMS இந்த மாதம்
இன்னொரு பாடகரை
இந்த தமிழகம் இழந்து விட்டது
பாடிய பாடல்கள்
பத்தாயிரத்தக்கும் மேல்
பட்டியலிட்டு மனதில்
பதிவு செய்தது 1 சதவீதமே
அத்துனையும்
அருமை அருமை
ஆடலுடன் பாடலை கேட்டு
(வேகமான பீட்டில் ஒரு முத்திரை)
அதோ அந்த பறவை போல
(ஆழ்மனதை தட்டி எழுப்புவன)
இன்னமும் பல பல
இதனை நினைவு கூர்ந்த
வகுப்பறைக்கு நன்றிகள் 100ஆயிரம்
வாத்தியாருக்கு பல்லாயிரம்
அவர் பாடிய முருகன் பாடல்கள்
ReplyDeleteஆழ்மனதை தட்டி எழுப்பும்
அவற்றுள் சிலவற்றையும்
அந்த பட்டியலில் சேர்க்க
சிலவற்றினை தருகிறோம்
சிந்திக்கவும் சேர்ந்து பாடவும்..
அவன் ஆறுமுகம்
மண்ணானாலும் திருச்செந்துரில்
ஓர் ஆறு முகமும்
முருகனை கூப்பிட்டு முறையிட்ட
தந்தையுடன் அன்னை செய்த
மெல்ல சிரிக்கும் உந்தன்
செந்துர் செல்லும் தென்றல்
சொல்லாத நாளில்லை
செந்துர்கந்தைய்யா
நெற்றி நெருப்பொன்று வந்து
திருச்செந்துரின் கடலோரத்தில்
எந்தன் குரலில் ஒலிப்பதெல்லாம்
சொல்ல சொல்ல மனம்
சொல்லமலே உருகுகிறதே
திரு.டி.எம்.எஸ். அவர்கள் என்றும் நம் நினைவில் வாழ்வார். காற்று அவர் குரலை நம் செவிகளில் கொண்டு சேர்த்து, அவர் நினைவுகளை நிலைத்து வாழ வைக்கும்.
ReplyDeleteதாங்கள் வரிசைப்படுத்தியுள்ள திரு.டி.எம்.எஸ் அவர்களின் பாடல்கள் அனைத்தும் மிகச் சிறப்பானவை. தாய்மொழி தமிழ் இல்லாவிட்டாலும், 'முத்தைத் தரு' எனத் தொடங்கும் திருப்புகழ் பாடலை, அவரை விடவும் அருமையாகப் பாட வல்லவர் யார்?. 'ராஜாதி ராஜ மகா..' என்ற நவராத்திரி திரைப்படத்து தெருக்கூத்துப் பாடலாகட்டும், 'போகுது பார் என் புறா' என்ற சாரங்கதாரா திரைப்படத்து அடாணா ராகப் பாடலாகட்டும், முழு அர்ப்பணிப்பு உணர்வோடு பாடியிருப்பது அவரது தனிச்சிறப்பு.
இறைவன் அவரது ஆன்மாவிற்கு நிலைத்த அமைதியை அருளட்டும்.
அன்பான ஆசிரியருக்கு
ReplyDeleteவணக்கம்,
உரிய நேரத்தில்
டி.எம்.எஸ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதன் மூலம் தங்கள் சமுதாயத்தின் உயரிய பண்பின் சிறப்பை உணர்விக்கிறது.
1950-1980 ஒலிச்சாதனங்களின் வளர்ச்சியும் திரைப்பாடல்கள் மற்றும் இசைத்துறயின் அதீத வளர்ச்சியும் பட்டிதொட்டி முதல் உலகின் சகல பாகங்களும் அதி வேகமாக ஊடுருவிய அந்த காலகட்டமே தமிழ் உலகுக்கு டிஎம்எஸ் ஸின் கணீரென்ற குரல் அறிமுகமாகி ஆழப்பதிந்தது.அவருடைய
அளவற்ற முருகன் பாமாலைகள்
இன்றளவும் மனதில் இனிமையாகஒலிக்கிறது.
திரைப்பாடல்கள் சொல்லவே வேண்டாம் சிவாஜி எம்ஜிஆர் போன்ற முன்னணி நாயக்ர்கள் தங்கள் குரலில் பாடியது போல் பிரமிப்பாக இருக்கும்.அவருடைய ஆற்றல் எல்லாராலும் புரிய முடியாத ஒன்று.எத்தனை பேர் வந்தாலும் அவர் அவரே. தங்கள் மேலுள்ள மதிப்பு இன்றும் சில புள்ளீகளால் அதிகரித்துள்ளது.
நன்றி வணக்கம்
ReplyDelete"தாய்மொழி தமிழ் இல்லாவிட்டாலும்"
என திருமதிபார்வதி ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்த செய்தி எனக்குப் புதிதாக இருந்ததால் ஆச்சர்யமாக இருந்த்து.
மிகவும் பெருமையாக இருக்கிறது
அவருக்கு நன்றி
மற்றும் வகுப்பறைக்கு இவ்வாரம் டிஎம்எஸ் வாரமாக அறிவித்தால் நன்றாக இருக்கும் எனக்கருதுகிறே,
மிக அற்புதமான பட்டியல். பல்லாயிரக்கணக்கான பாடல்களில் நல்முத்துக்களைத் தேர்ந்தெடுத்து நினைவு படுத்தியமைக்கு நன்றி. அவருடைய பாடல்களில் எதைத் தேர்ந்தெடுத்து இதுதான் சிறந்தது என்று சொல்ல முடியாத அளவுக்கு அத்தனையும் அற்புதங்கள். குரலா அது? அவர் ஒரு சகாப்தம். அவரை நினைவு படுத்தியமைக்கு மீண்டும் நன்றி ஐயா.
ReplyDeleteT.M.S பதிவுக்கு நன்றி அய்யா.
ReplyDelete43
ReplyDeleteஉழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம்
உண்டாவதெங்கே சொல் என் தோழா
உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம்
உண்டாகும் என்றே சொல் என் தோழா
Guriji, I think this song is not sung by TMS.
அவர் குரல் வளத்திற்கு ஈடு கொடுக்கும் விதமாக பாடல் வரிகளும் இசையும் அமைந்தன என்றுதான் சொல்ல வேண்டும். அத்தனையும் இறவாப் புகழ் பெற்ற பாடல்கள்தாம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைவதாகுக.
ReplyDeletesuper about TMS
ReplyDeleteVersatile singer. Changes his voice based on for whom he sings. Love all the songs in the list. And the Murugan Songs proveded by "Veppilai".
ReplyDeleteDallas Kannan
Sange muzhangu song is by Seerkazhi Govindarajan (Movie : kalangarai viLakkam)
ReplyDelete
ReplyDelete/////Blogger சரண் said...
டி.எம்.எஸ் பாடிய எண்ணற்ற பாடல்களில் ஒவ்வொன்றும் ஒரு விதமாக ரசிகர்களை பரவசமடையவோ அல்லது அமைதிப்படுத்தவோ செய்யும். அவற்றில் சில பாடல்களின் பட்டியலை வகுப்பறையில் கொடுத்ததற்கு நன்றி./////
அவர் நவரசங்களிலும் சர்வசாதாரணமாகப் பாடியவர். அதனால்தான் அவருக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள். உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி சரண்!
///Blogger Sattur Karthi said...
ReplyDeleteகாலை வணக்கம் அய்யா !/////
உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி!
////Blogger arul said...
ReplyDeletegood post about TMS////
நல்லது. நன்றி அருளாரே!
////Blogger துரை செல்வராஜூ said...
ReplyDeleteஈடு இணையற்ற கலைஞன்..தமிழ் உள்ளளவும் அவர்தம் புகழ் நிலைத்திருக்கும். முருக பக்தராகிய அவர் - முருகனுக்குரிய விசாகம் நிறைந்த நன்னாளை அடுத்து முருகனின் திருவடித் தாமரைகளில் அடைக்கலம் ஆனார்../////
ஈடு இணையற்ற கலைஞன் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
////Blogger வேப்பிலை said...
ReplyDeletePBS சென்ற மாதம்
TMS இந்த மாதம்
இன்னொரு பாடகரை
இந்த தமிழகம் இழந்து விட்டது
பாடிய பாடல்கள்
பத்தாயிரத்தக்கும் மேல்
பட்டியலிட்டு மனதில்
பதிவு செய்தது 1 சதவீதமே
அத்துனையும்
அருமை அருமை
ஆடலுடன் பாடலை கேட்டு
(வேகமான பீட்டில் ஒரு முத்திரை)
அதோ அந்த பறவை போல
(ஆழ்மனதை தட்டி எழுப்புவன)
இன்னமும் பல பல
இதனை நினைவு கூர்ந்த
வகுப்பறைக்கு நன்றிகள் 100ஆயிரம்
வாத்தியாருக்கு பல்லாயிரம்/////
உங்களின் மேன்மையான பின்னூட்டத்திற்கு நன்றி விசுவநாதன்!
/////Blogger வேப்பிலை said...
ReplyDeleteஅவர் பாடிய முருகன் பாடல்கள்
ஆழ்மனதை தட்டி எழுப்பும்
அவற்றுள் சிலவற்றையும்
அந்த பட்டியலில் சேர்க்க
சிலவற்றினை தருகிறோம்
சிந்திக்கவும் சேர்ந்து பாடவும்..
அவன் ஆறுமுகம்
மண்ணானாலும் திருச்செந்துரில்
ஓர் ஆறு முகமும்
முருகனை கூப்பிட்டு முறையிட்ட
தந்தையுடன் அன்னை செய்த
மெல்ல சிரிக்கும் உந்தன்
செந்துர் செல்லும் தென்றல்
சொல்லாத நாளில்லை
செந்துர்கந்தைய்யா
நெற்றி நெருப்பொன்று வந்து
திருச்செந்துரின் கடலோரத்தில்
எந்தன் குரலில் ஒலிப்பதெல்லாம்
சொல்ல சொல்ல மனம்
சொல்லமலே உருகுகிறதே//////
அவருடைய முருகன் பாடல்களைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி விசுவநாதன்!
////Blogger பார்வதி இராமச்சந்திரன். said...
ReplyDeleteதிரு.டி.எம்.எஸ். அவர்கள் என்றும் நம் நினைவில் வாழ்வார். காற்று அவர் குரலை நம் செவிகளில் கொண்டு சேர்த்து, அவர் நினைவுகளை நிலைத்து வாழ வைக்கும்.
தாங்கள் வரிசைப்படுத்தியுள்ள திரு.டி.எம்.எஸ் அவர்களின் பாடல்கள் அனைத்தும் மிகச் சிறப்பானவை. தாய்மொழி தமிழ் இல்லாவிட்டாலும், 'முத்தைத் தரு' எனத் தொடங்கும் திருப்புகழ் பாடலை, அவரை விடவும் அருமையாகப் பாட வல்லவர் யார்?. 'ராஜாதி ராஜ மகா..' என்ற நவராத்திரி திரைப்படத்து தெருக்கூத்துப் பாடலாகட்டும், 'போகுது பார் என் புறா' என்ற சாரங்கதாரா திரைப்படத்து அடாணா ராகப் பாடலாகட்டும், முழு அர்ப்பணிப்பு உணர்வோடு பாடியிருப்பது அவரது தனிச்சிறப்பு.
இறைவன் அவரது ஆன்மாவிற்கு நிலைத்த அமைதியை அருளட்டும்./////
உங்களின் மேன்மையான கருத்துப் பகிர்விற்கு நன்றி சகோதரி!
////Blogger சர்மா said...
ReplyDeleteஅன்பான ஆசிரியருக்கு
வணக்கம்,
உரிய நேரத்தில்
டி.எம்.எஸ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதன் மூலம் தங்கள் சமுதாயத்தின் உயரிய பண்பின் சிறப்பை உணர்விக்கிறது.
1950-1980 ஒலிச்சாதனங்களின் வளர்ச்சியும் திரைப்பாடல்கள் மற்றும் இசைத்துறயின் அதீத வளர்ச்சியும் பட்டிதொட்டி முதல் உலகின் சகல பாகங்களும் அதி வேகமாக ஊடுருவிய அந்த காலகட்டமே தமிழ் உலகுக்கு டிஎம்எஸ் ஸின் கணீரென்ற குரல் அறிமுகமாகி ஆழப்பதிந்தது.அவருடைய
அளவற்ற முருகன் பாமாலைகள்
இன்றளவும் மனதில் இனிமையாகஒலிக்கிறது.
திரைப்பாடல்கள் சொல்லவே வேண்டாம் சிவாஜி எம்ஜிஆர் போன்ற முன்னணி நாயகர்கள் தங்கள் குரலில் பாடியது போல் பிரமிப்பாக இருக்கும்.அவருடைய ஆற்றல் எல்லாராலும் புரிய முடியாத ஒன்று.எத்தனை பேர் வந்தாலும் அவர் அவரே. தங்கள் மேலுள்ள மதிப்பு இன்றும் சில புள்ளீகளால் அதிகரித்துள்ளது.
நன்றி வணக்கம்/////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
///Blogger சர்மா said...
ReplyDelete"தாய்மொழி தமிழ் இல்லாவிட்டாலும்"
என திருமதிபார்வதி ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்த செய்தி எனக்குப் புதிதாக இருந்ததால் ஆச்சர்யமாக இருந்த்து.
மிகவும் பெருமையாக இருக்கிறது
அவருக்கு நன்றி
மற்றும் வகுப்பறைக்கு இவ்வாரம் டிஎம்எஸ் வாரமாக அறிவித்தால் நன்றாக இருக்கும் எனக்கருதுகிறேன்////
மதுரைக்காரரான அவருக்கு செளராஷ்ட்டிரம்தான் தாய் மொழி!
/////Blogger Thanjavooraan said...
ReplyDeleteமிக அற்புதமான பட்டியல். பல்லாயிரக்கணக்கான பாடல்களில் நல்முத்துக்களைத் தேர்ந்தெடுத்து நினைவு படுத்தியமைக்கு நன்றி. அவருடைய பாடல்களில் எதைத் தேர்ந்தெடுத்து இதுதான் சிறந்தது என்று சொல்ல முடியாத அளவுக்கு அத்தனையும் அற்புதங்கள். குரலா அது? அவர் ஒரு சகாப்தம். அவரை நினைவு படுத்தியமைக்கு மீண்டும் நன்றி ஐயா.////
உண்மைதான் சார். அவர் ஒரு சகாப்தம்! உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி சார்!
///Blogger manikandan said...
ReplyDeleteT.M.S பதிவுக்கு நன்றி அய்யா./////
நல்லது. நன்றி நண்பரே!
/////Blogger Ramkumar KG said...
ReplyDelete43
உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம்
உண்டாவதெங்கே சொல் என் தோழா
உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம்
உண்டாகும் என்றே சொல் என் தோழா
Guriji, I think this song is not sung by TMS./////
நீங்கள் சொல்வது சரிதான். அது சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய பாடல். இணையத்தில் தேடிப் பிடித்து அதை உறுதி செய்துகொண்டேன். பதிவில் இருந்தும் அதை நீக்கி விட்டேன். சுட்டிக் காட்டிய மேன்மைக்கு நன்றி1
//////Blogger Ak Ananth said...
ReplyDeleteஅவர் குரல் வளத்திற்கு ஈடு கொடுக்கும் விதமாக பாடல் வரிகளும் இசையும் அமைந்தன என்றுதான் சொல்ல வேண்டும். அத்தனையும் இறவாப் புகழ் பெற்ற பாடல்கள்தாம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைவதாகுக.////
உண்மைதான். பாடல் வரிகளும் இசையும் அமைந்தன என்பதைத் தெய்வ அருள் என்றுதான் சொல்ல வேண்டும். அந்தக் காலகட்டத்தில் இருந்தவர்கள் அனைவருமே ஜீனியஸ்கள். அவர்களின் கூட்டு முயற்சியால் எல்லாம் சிறப்பாக அமைந்தன!
/////Blogger Kalai Rajan said...
ReplyDeletesuper about TMS/////
நல்லது. நன்றி நண்பரே!
/////Blogger Kannan said...
ReplyDeleteVersatile singer. Changes his voice based on for whom he sings. Love all the songs in the list. And the Murugan Songs proveded by "Veppilai".
Dallas Kannan//////
உண்மைதான். உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!!
//////Blogger NAGARAJAN said...
ReplyDeleteSange muzhangu song is by Seerkazhi Govindarajan (Movie : kalangarai viLakkam)/////
நீங்கள் சொல்வது சரிதான். அது சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய பாடல். இணையத்தில் தேடிப் பிடித்து அதை உறுதி செய்துகொண்டேன். பதிவில் இருந்தும் அதை நீக்கி விட்டேன். சுட்டிக் காட்டிய மேன்மைக்கு நன்றி1
91 வதாகக் கொடுத்த பாடல் 'வீடுவரை உறவு' நல்ல' ஃபினிஷிங் டச்'
ReplyDeleteடி எம் எஸ் தன் குரலில் என்றும் வாழ்வார். உடல் இல்லாத(அசரீரி) குரலாக என்றும் வாழ்வார். சொட்டிஜா! சொன்னவோ!