10.5.13

சிவசண்முகனுக்கு ஈடு யாருமில்லை!

 
சிவசண்முகனுக்கு ஈடு யாருமில்லை!

பக்தி மலர்

“சுவாமிமலை எங்கள் சுவாமி மலை - சிவசண்முகனுக்கு ஈடு யாருமில்லை” என்ற பல்லவியுடன் துவங்கும் பக்திப்பாடல் ஒன்றை சூலமங்கலம் சகோதரிகள் பரவசத்துடன் பாடியுள்ளார்கள் அந்தப் பாடல் இன்றைய பக்தி மலரை அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

------------------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
http://youtu.be/mzqyuKFg5Og
Our sincere thanks to the person who uploaded the clipping in the net  



வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

11 comments:

  1. அருமையான இனிமையான பாடலுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  2. அருமையான முருகன் பாடல் மிக்க மகிழ்ச்சி.நானும் முருக பக்தன் தான்.அய்யா ஜோதிடத்தில் சிறு சந்தேகம்.கிரக மாலிகா யோகம் லக்னத்தில் இருந்து 5 வீடுகளில் கேது மற்றும் சந்திரன்(லக்னாதிபதி) தவிர மற்ற அனைத்து கிரகங்கள் இருந்தாலும்.அது கிரக மாலிகா யோகம் தானா?பதில் கூறவும் அய்யா.

    ReplyDelete
  3. ஆக்கமாக வந்ததை
    ஆக்கியது அய்யர் அல்ல..

    அறிந்தால் மகிழ்ச்சி..
    அறிவித்தால் பெருமகிழ்ச்சி..

    விழிப்பூட்டினால் வழிகாட்டி
    "விழி" பூட்டினால்...?

    இருட்டு அறையில் கறுப்புபூனையை
    இல்லாத போது தேடினால்...?

    சக்தி குறைந்த
    செல்போனில்

    எத்தனை முறை நாம்
    எண்களை சுழற்றினாலும்

    தொடுமோ எதிராளியை அந்த
    தொடர்பு..?

    ReplyDelete
  4. முருகன் பக்தியெனும் கிரீடததில் இன்றும்
    ஒரு பச்சை கல் பதிகிறது
    வளர்க தம் சேவை

    ReplyDelete
  5. அய்யர் said...
    ///ஆக்கமாக வந்ததை
    ஆக்கியது அய்யர் அல்ல..

    அறிந்தால் மகிழ்ச்சி..
    அறிவித்தால் பெருமகிழ்ச்சி..

    விழிப்பூட்டினால் வழிகாட்டி
    "விழி" பூட்டினால்...?

    இருட்டு அறையில் கறுப்புபூனையை
    இல்லாத போது தேடினால்...?

    சக்தி குறைந்த
    செல்போனில்

    எத்தனை முறை நாம்
    எண்களை சுழற்றினாலும்

    தொடுமோ எதிராளியை அந்த
    தொடர்பு..?///
    ஆக்கத்தை அளித்த அய்யர் அவர்களுக்கு பராட்டுக்கள்.
    இறைவன் படைப்பில் எத்தனையோ அற்புதஙள்.இதில் பன்றியாக பிறந்திடினும் அதன் வாழ்க்கையிலும் ஒரு இனிமை படைக்கப் பட்டுள்ளது.
    நல்ல படைப்புக்கும் அதனை பதிவிட்ட வாத்தியார் பெருந்தகைக்கும் வணக்கங்கள்.
    சூல மங்கலம் சகொதரிகளின் காணொளி அருமை.பதிவுகளுக்கு நன்றிகள்.


    ReplyDelete
  6. முதல் முறையாக உரைநடையில் விசு ஐயர் அவர்களுடைய ஆக்கம் வந்துள்ளது மிக்க மகிழ்ச்சி. சாதாரணமாக உடைந்த வாக்கியங்களுடன் இரட்டை வரி உரைநடைக் கவிதை எழுதுவார். சிறிது புரியும்; பலதும் புரியாது.இன்று தெளிவான நடையுடன் எழுதிய ஆக்கம் நன்றாக உள்ளது.

    வராக அவதாரத்திற்குப் பின்னர் பகவானே இந்த நிலைக்குச்சென்றதாகவும்,ருத்ரன் அந்த வராகத்தை வதம் செய்ததாகவும், விட்டுணு சிரித்துக்கொண்டே வைகுண்டம் ஏகியதாகவும் ஒரு புராணம் கூறும். வைணவர்கள் கோபிக்க வேண்டாம். இதுபோலவே ருத்ரனை பலமுறை விட்டுணு காத்த கதைகள் உண்டு.

    நரசிம்ம அவதாரமும் அப்படியே தங்கி விட்டதாகவும்,அப்போது சிவன் சரபேஸ்வரராகவும், அம்பிகை பிரத்யங்கராதேவியாக வந்து நரசிம்மத்தை
    விண்ணுலகத்திற்குத் தூக்கிச் சென்றதாகவும் ஒரு புராணம்.

    பழக்கத்தைப் பற்றி ஸ்ரீராமகிருஷ்ணர் கதை.
    ஒரு மீன்காரி மழை பெய்யும் நள்ளிரவில் ஒரு பூக்காரியின் இல்லத்தில் தங்க நேர்கிறது.மீன் கூடையை வாங்கி வெளி வாசல் திண்ணையில் வைத்துவிட்டு
    மணம் வீசும் பூக்களுக்கு இடையில் இடம் செய்து மீன்காரியைப்படுக்கச்
    சொல்கிறாள் பூக்காரி. மீன்காரிக்குத் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக்கிறாள். "என்னால் இந்த மலர்களின் துர்நாற்றத்தில் தூங்க முடியவில்லை. என் மீன்கூடையைக் கொடு அக்கா" என்றூ கேட்டு வாங்கி அந்த மீன் கூடையில் கொஞ்சம் தண்ணீர் தெளித்து தலைக்கு உயரம் வைத்துக் கொண்டாளாம்.நன்கு தூங்கிப் போனாளாம்.
















    ReplyDelete
  7. வி.சு ஐயர் அவர்களுடைய கட்டுரை இன்றைய தினத்தில் எல்லோருக்கும் மிகவும் வேண்டிய ஒரு சிறப்பான ஆக்கமாகும்

    ReplyDelete
  8. சாபத்தால் பன்றியாக மாறி சாக்கடையில் வீழ்ந்து கிடக்கும் மனிதனை அதிலிருந்து மீட்டெடுக்க முயற்சி செய்யும்போது, இதுவே சுகம், இதிலிருந்து நான் வருவதற்கில்லை என்று சொன்ன கதையை முன்பேகூட எங்கோ படித்திருக்கிறேன். இது மேம்போக்காக பொருள் கொள்ளக்கூடிய சாதாரண நீதிக்கதை அல்ல. இதனை மேலும் ஆழ்ந்து படித்தால், இதில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை பல உண்டு. பிரச்சினைகளுக்கு பயந்துகொண்டு பணிந்து போவது, பிரச்சினையை பிறருக்குத் தள்ளிவிடுவது, வருவது வரட்டும் என்று சும்மா கிடப்பது, எதிர்கொண்டு மோதி இரண்டில் ஒன்று முடிவு காண்பது இப்படி பல வழிகள் உண்டு. ஒவ்வொருவரும் சிறிது எண்ணிப் பார்த்தால் தெரியும், வாழ்வில் நாம் சந்தித்த பிரச்சினைகள். சில நம்மை பயமுறுத்தியிருக்கும், இதை நம்மால் சமாளிக்க முடியாது என நினைத்த பல பிரச்சினைகள் உண்டு. நாளைக் காலை சந்திக்க வேண்டிய பிரச்சினைக்கு இன்று இரவு முழுதும் தூங்காமல் இருந்து கவலை பட்ட நிகழ்வுகள் உண்டு. ஆனால் அவை அனைத்தும் எப்படி முடிந்தன. ஏதோ ஒரு வழியில், பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுதானே வளர்ந்து வந்திருக்கிறோம். ஆகவே, வருவது வரட்டும், அதை எதிர்கொள்வோம் நாம் நடந்து கொள்வது நேர்மையான வழி என்றால், எந்த பிரச்சினையும் நம்மை ஒன்றும் செய்யாது எனும் உறுதிப்பாட்டோடு நேர்மையாக நடந்தால் பயமில்லை. நேர்மை தவறினால், பிரச்சினை நம்மை வீழ்த்திவிடும். இது உறுதி. ஐயர் அவர்கள் கதை என்னுள் எழுப்பிய சிந்தனையின் விளைவு இந்த பின்னூட்டம். நன்றி ஆசிரியர் ஐயா.

    ReplyDelete
  9. அன்புள்ளம் கொண்ட ஐயா
    வணக்கம்
    வாழ்த்த வயதில்லை ஆதலால் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்

    உஙகளின் இந்த அறிய பணி தொடற இறைவணை பிரார்திக்கின்றேன்

    அன்புடன்
    உங்கள் மாணவன்
    கண்ணன்♥க சென்னை 17

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com