3.3.13

துறையூருக்கு வாருங்கள் துரைமார்களே!



துறையூருக்கு வாருங்கள் துரைமார்களே!

நமது வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரான லால்குடி கே.முத்துராமகிருஷ்ணன் அவர்களின் முயற்சியால் உருவான கணனி பயிற்சிமையத்தின் துவக்கவிழா நாளை நடைபெறவுள்ளது.

நமது வகுப்பறைத் தோழர்கள் (தோள் கொடுப்பவர்க்ள்) 40 பேர்கள் கொடுத்த நன்கொடை ரூ.85,000த்தையும் சேர்த்து, மேலும் தன் நண்பர்கள், உறவினர்கள், சொந்தப்பணம் என்று அவர் வசூலித்துக் கொடுத்த ரூ.3,75,000 ரூபாயில் உருவாகியுள்ள இந்தக் கணினி மையம் பல கிராமத்துச் சிறுவர்களுக்கு உதவும் வண்ணம் அமைந்துள்ளது.

நமது வகுப்பறைக் கண்மணிகளில் கொடையளித்தவர்களின் பெயர்களை 31.12.2012 அன்று பதிவில் வெளியிட்டிருந்தேன். அதன் தொடர்ச்சிதான் இன்றையச் செய்தி

அதன் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அவர் அனுப்பியுள்ள அழைப்பிதழைக் கீழே கொடுத்துள்ளேன். திருச்சி மற்றும் துறையூரைச் சுற்றியுள்ள பகுதியில் இருக்கும் நமது  வகுப்பறை மாணவர்கள், அந்த நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பிக்கலாம்.

நிகழ்வில் கே.முத்துராம கிருஷ்ணன் அவர்களும் வாழ்த்துரை நல்க உள்ளார்.

உங்கள் அனைவரின் கவனத்திற்கும் இந்த அழைப்பிதழ் வரவேண்டும் என்பதற்காக ஒரு நாள் முன்பாகவே அதை வலை ஏற்றியுள்ளேன். அதை மனதில் கொள்ளவும்!

வாழ்க அவருடைய தொண்டு! வளர்க அவருடைய சேவைகள்.

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------



 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

5 comments:

  1. உயர்திரு கேஎம்ஆர்கே அவர்களின் சீரிய முயற்ச்சியால் நாளை திறப்பு விழா காணும் கனிணி பயிற்ச்சி மையத்திற்கும்,நமது வகுப்பறை கண்மனிகள் அளித்துள்ள பங்களிப்புகளுக்கும் எமது உளம் கனிந்த நல் வாழ்த்துக்கல்.
    நன்றியுடன்,
    -Peeyes.

    ReplyDelete
  2. அன்னாரின் பணிமென்மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. கனிணி பயிற்ச்சி மையத்திற்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  4. நலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்!
    தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

    இளவேனில் உன்வாசல் வந்தாடும்!
    இளந் தென்றல் உன்மீது பண்பாடும்!

    மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம்!
    மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்!

    இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்!
    எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்!

    விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
    நகங்களை நாமும் நறுக்குவதுண்டு!

    இதிலென்ன பாவம்.....!
    எதற்கிந்த சோகம்? கிளியே..!

    கிழக்கினில் தினம்தோறும் கதிரானது!
    மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது!

    கடல்களில் உருவாகும் அலையானது
    விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது!

    நிலவினை நம்பி இரவுகள் இல்லை!
    விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை!

    ஒரு வாசல் மூடி......!
    மறுவாசல் வைப்பான் இறைவன்!

    ReplyDelete
  5. வனக்கம் ஐயா, நானிந்த வலை பகுதிக்குபுதியவன்
    என்னுடய பெயர் சண்முகசுந்த்தரம் நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்தவன்
    எனக்கு ஜொதிடம் படிக்க ஆர்வம் எனவெ எனக்கு கருதுகூருஙல்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com