21.2.13

என்ன பாட்டுடா சாமி!!!!!

என்ன பாட்டுடா சாமி!!!!!

நம் அய்யர் விசுவநாதன் தினமும் ஒரு பாடலை சுழல விடுகிறாரே - நாமும் ஒரு பாட்டை சுழல விடுவோம் என்று நினைத்ததன் விளைவு இந்தப்பாடல். தினமும் ஜோதிடத்தையே படித்துக்கொண்டிருக்காமல் மாறுதலுக்கு இன்று இந்தப் பாடலைக் கேளுங்கள். பாடலின் ஒளி வடிவம், வரி வடிவம், காட்சி வடிவம் என்று அத்தனையும் உள்ளது.

பாடலை எழுதிய கவிஞரும் அருமையாக எழுதியிருக்கிறார். இசை அமைத்த இசையமைப்பாளரும், பாடியவர்களும் தங்களின் பங்கைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்

அன்புடன்
வாத்தியார்

------------------------------------------------
புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்

சொந்த ஆகாயம் வேண்டும்
ஜோடி நிலவொன்று வேண்டும்
நெற்றி வேர்க்கின்ற போது
அந்த நிலவில் மழை பெய்ய வேண்டும்

வண்ண விண்மீன்கள் வேண்டும்
மலர்கள் வாய் பேச வேண்டும்
வண்டு உட்காரும் பூ மேலே
நான் வந்து உட்காரும் வரம் வேண்டும்


கடவுளே கொஞ்சம் வழி விடு
உன் அருகிலே ஓர் இடம் கொடு
புன்னகை எங்கள் தாய்மொழி என்ற வரம் கொடு
பூமியில் சில மாறுதல் தனை வர விடு

யுத்தம் இல்லாத பூமி
ஒரு சத்தம் இல்லாமல் வேண்டும்
மரணம் காணாத மனித இனம்
இந்த மண்ணில் நிலை கொள்ளும் வரம் வேண்டும்

பஞ்சம் பசி போக்க வேண்டும்
பாலைவனம் பூக்க வேண்டும்
சாந்தி சாந்தி என்ற சங்கீதம்
சுகம் ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்


போனவை அட போகட்டும்
வந்தவை இனி வாழட்டும்
தேசத்தின் எல்லை கோடுகள் அவை தீரட்டும்
தெய்வங்கள் இந்த மண்ணிலே வந்து வாழட்டும்

-------------------------------------------------------------------------------------------
தமிழில் குயில் பாட வேண்டும் என்ற வரியும், புன்னகை எங்கள் தாய்மொழி என்ற வரம் கொடு என்ற வரியும் போனவை போகட்டும், வந்தவை இனி வாழட்டும் என்ற வரியும் பாடலில் உள்ள அசத்தலான வரிகளாகும்
--------------------------------------------------------------------------------------------
பாடியவர்கள். கே.எஸ்.சித்ரா & மனோ
பாடல் வரிகள்: கவிஞர் வைரமுத்து
இசை: ஏ.ஆர். ரெஹ்மான்
இயக்கம்: மணி ரத்தினம்
படம் வெளியான தேதி: 13.11.1993
நடிகரகள்: பிரசாந்த், ஆனந்த் & நடிகை ஹீரா


பாடலின் காணொளி வடிவம்:
http://www.youtube.com/watch?v=zuUIQu9KiqM
Our sincere thanks to the person who uploaded the clipping in the net



வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

6 comments:

  1. பாடலை கேட்டோம்
    பாடிக்கொண்டே ரசித்தோம்..

    வழக்கம் போல் இந்த பாடலினை
    வகுப்பறையில் சேர்க்கிறோம்

    .....

    காலை நேரப் பூங்குயில்
    கவிதை பாட போகுது

    கலைந்து போன மேகங்கள்
    கவனமாகக் கேட்குது

    கேட்ட பாடல் காற்றிலே
    கேள்வியாகப் போகுமோ

    எங்கே உன் ராகம் ஸ்வரம்

    மேடை போடும் பௌர்ணமி
    ஆடிப் பாடும் ஓர் நதி

    வெல்ல ஒளியினில் மேகலை
    மெல்ல மயங்குது என் நிலை

    புதிய மேகம் கவிதை பாடும்
    பூபாளம் பாடாமல்
    எந்தன் காலை தோன்றும் என்னாளும்

    இளமை என்னும் மோகனம்
    இணைந்து பாடும் என் மனம்

    பட்டு விரித்தது புல்வெளி
    பட்டுத் தெரித்தது வின்னொளி

    தினமும் பாடும் எனது பாடல்
    காற்றோடும் ஆற்றோடும்
    இன்றும் என்றும் கேட்கும்
    என்றென்றும்

    ReplyDelete
  2. பணம் இருந்தால் ...

    ருசியுள்ள சாப்பாடு வாங்கலாம்
    பசியை வாங்க முடியாது

    புத்தகம் வாங்கலாம்
    அறிவை வாங்க முடியாது

    மருந்து வாங்கலாம்
    உடல் நலம் வாங்க முடியாது

    மெத்தை வாங்கலாம்
    உறக்கத்தை வாங்க முடியாது

    மனிதனை வாங்கலாம்
    கடவுளை வாங்க முடியாது

    கடல் பயணத்திற்கு தண்ணீர் தேவை
    கடல் நீர் முழுதும் கப்பலில் வைத்தால்

    கப்பல் மூழ்கி விடும் அது போல
    கடத்தும் வாழ்க்கைக்கு

    பணம் தேவை ஆனால்
    பணமே வாழ்க்கையில்லை..

    ரகசியமாக ஒரு செய்தி..
    பணம் சம்பாதிப்பது சுலபம்
    செலவு செய்வது தான் கடினம்..

    ReplyDelete
  3. குருவிற்கு வணக்கம்
    நல்ல ஓர் புதிய பாடல்,காதுக்கு விருந்து
    நன்றி

    ReplyDelete
  4. /////Blogger அய்யர் said...
    பாடலை கேட்டோம்
    பாடிக்கொண்டே ரசித்தோம்..
    வழக்கம் போல் இந்த பாடலினை
    வகுப்பறையில் சேர்க்கிறோம்
    .....
    காலை நேரப் பூங்குயில்
    கவிதை பாட போகுது
    கலைந்து போன மேகங்கள்
    கவனமாகக் கேட்குது
    கேட்ட பாடல் காற்றிலே
    கேள்வியாகப் போகுமோ
    எங்கே உன் ராகம் ஸ்வரம்
    மேடை போடும் பௌர்ணமி
    ஆடிப் பாடும் ஓர் நதி
    வெல்ல ஒளியினில் மேகலை
    மெல்ல மயங்குது என் நிலை
    புதிய மேகம் கவிதை பாடும்
    பூபாளம் பாடாமல்
    எந்தன் காலை தோன்றும் என்னாளும்
    இளமை என்னும் மோகனம்
    இணைந்து பாடும் என் மனம்
    பட்டு விரித்தது புல்வெளி
    பட்டுத் தெரித்தது வின்னொளி
    தினமும் பாடும் எனது பாடல்
    காற்றோடும் ஆற்றோடும்
    இன்றும் என்றும் கேட்கும்
    என்றென்றும்/////

    உங்களின் பாடலுக்கு நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  5. /////Blogger அய்யர் said...
    பணம் இருந்தால் ...
    ருசியுள்ள சாப்பாடு வாங்கலாம்
    பசியை வாங்க முடியாது
    புத்தகம் வாங்கலாம்
    அறிவை வாங்க முடியாது
    மருந்து வாங்கலாம்
    உடல் நலம் வாங்க முடியாது
    மெத்தை வாங்கலாம்
    உறக்கத்தை வாங்க முடியாது
    மனிதனை வாங்கலாம்
    கடவுளை வாங்க முடியாது
    கடல் பயணத்திற்கு தண்ணீர் தேவை
    கடல் நீர் முழுதும் கப்பலில் வைத்தால்
    கப்பல் மூழ்கி விடும் அது போல
    கடத்தும் வாழ்க்கைக்கு
    பணம் தேவை ஆனால்
    பணமே வாழ்க்கையில்லை..
    ரகசியமாக ஒரு செய்தி..
    பணம் சம்பாதிப்பது சுலபம்
    செலவு செய்வது தான் கடினம்/////

    சம்பாதிப்பதற்கு அறிவும், அதிர்ஷ்டமும் வேண்டும். செலவழிப்பதற்கு மனம் ஒன்றிருந்தால் போதும்!

    ReplyDelete

  6. /////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    நல்ல ஓர் புதிய பாடல்,காதுக்கு விருந்து
    நன்றி/////

    உங்களின் ரசணைக்கு நன்றி உதயகுமார்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com