7.2.13

Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 17

 Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 17

ஜோதிடத் தொடர் - பகுதி 17

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
ஹஸ்த நட்சத்திரம் (கன்னி ராசி)

இது சந்திரனின் நட்சத்திரம்.

1. பரணி
2. கார்த்திகை
3. மிருகசீரிஷம்
4. புனர்பூசம்
5. பூசம்
6. ஆயில்யம்
7. மகம்
8. பூரம்
9. உத்திரம்
10. கேட்டை
11. மூலம்
12. பூராடம்
13. உத்திராடம்.
14. உத்திரட்டாதி
15. ரேவதி

ஆகிய 15 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும். பூரட்டாதி 4ஆம் பாதம் மட்டும் பொருந்தும்

இவற்றுள் அவிட்டம் 3 &4ஆம் பாதங்களும், பூரட்டாதி 1, 2 & 3ஆம் பாதங்களும் கும்ப ராசிக்கு உரியனவாகும்.. ஜோதிடர்கள் கன்னிக்கு ஆறாம் இடம் கும்பம் கும்பத்திற்கு எட்டாம் இடம் கன்னி ஆகவே அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றை விலக்கிவிடுவது நல்லது.

மேஷ ராசிக்கு உரிய அஸ்விணி, பரணி, கார்த்திகை 1ம் பாதம் ஆகிய நட்சத்திரங்களுக்கு 8/6 நிலைப்பாடு வரும். ஆகவே அவற்றை விலக்கிவிடுவது நல்லது.

மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் ஆகியவை சிம்ம ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும். கன்னிக்கு சிம்மம் பன்னிரெண்டாம் வீடு.  (12/1 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அந்த நட்சத்திரங்களையும் விலக்கிவிடுவது நல்லது.

அஷ்டம சஷ்டமக் கணக்கை பார்த்தால் 8 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகப் பொருந்தும்

ரோஹிணி, திருவாதிரை, சுவாதி, திருவோணம், சதயம் ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.

பெண்ணிற்கும், பையனுக்கும் ஹஸ்தம் ஏக நட்சத்திரமாக இருந்தால் பொருந்தும். என்ன ஒரே நட்சத்திரத்தில் தம்பதிகள் இருந்தால், ஏழரைச் சனி பிடிக்கும்போதும், அஷ்டமச்சனி (எட்டில் சனி) வரும்போதும், சனீஷ்வரன் இருவரையும் ஒன்றாகப் பிடித்து ஆட்டி வைப்பார்.. அதனால் பொதுவாக ஒரே நட்சத்திரம் அல்லது ஒரே ராசியைத் தவிர்ப்பது நல்லது.

அஸ்விணி, சித்திரை 1 & 2ஆம் பாதங்கள், விசாகம், அனுஷம், அவிட்டம் 1 & 2ஆம் பாதங்கள், பூரட்டாதி 1, 2 & 3ஆம் பாதங்கள் மத்திம பொருத்தம் உள்ளவையாகும்.

சித்திரை 3 & 4ஆம் பாதங்கள் பொருந்தாது!
-------------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

14 comments:

  1. பெண்கள் how to handle a husband என்று search செய்வார்களோ. இரண்டோ, மூன்றோ அல்லது அதற்கு மேலுமோ வைத்திருப்பவர்கள் நன்றாகவே சமாளிப்பவர்களும் இருக்கிறார்கள். ஒன்று (மட்டுமே) வைத்துக் கொண்டு சமாளிக்க முடியாதவர்களும் இருக்கிறார்கள். ஐயோ பாவம் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது

    ReplyDelete
  2. கணவரோ அல்லது மனைவியோ எந்தத் தன்மையுடன் இருக்கிறாரோ அவரை அந்தத் தன்மையுடனேயே புரிந்து கொண்டு மதிக்கவும், கொண்டாடவும் முடியவில்லையென்றால், பிறகு அருமையான உறவுமுறை அங்கே எப்படியிருக்கும்?

    இந்த உயிர் என்னோடு இருப்பதைத் தேர்வு செய்திருப்பது
    எவ்வளவு அற்புதமான விஷயம்’ என்று நீங்கள் மனமார
    உணர்ந்தால் மட்டுமே கொண்டாடும் தன்மை உங்களுக்கு வரும்.
    வேறு யாரோ ஒருவருக்கு அவள் அற்புதமானவளாகத் தெரியலாம்.
    ஆனால் உங்கள் கண்களுக்கு வேறுவிதமாகத்தான் தெரிவாள்.
    அவளை உங்களுடைய உரிமையாகப் பார்க்கும் காரணத்தால்
    அவருடைய அற்புதத்தன்மை உங்களுக்குத் தெரிவதில்லை.

    ஒருவர் சமூக ரீதியாக உங்களோடு பிணைக்கப்பட்டிருந்தாலும் அவர் தன் விருப்பத்தின் பேரில்தான் உங்களோடு தொடர்ந்து இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எனவே, அவரின் விருப்பத்திற்கு நன்றி கூறி அவரையும், அவரது அருகாமையையும் மகத்தானதாகக் கொண்டாடுங்கள். இப்படி உறவை மதிக்கவும், கொண்டாடவும் தெரிந்திருந்தால் அங்கே மேன்மையான உறவு மட்டுமே இருக்கமுடியும்.

    ReplyDelete
  3. யார் யாரை/எதை தேடுகிறார்கள்
    யாரக்கு தெரியும்..

    தோழர் ஆனந்த் அவர்கள் பெண்கள்
    தேடுவது எதை என கேட்கிறார்

    உண்மை பெண்கள் தான் இதை
    (how to handle wife என்பதை)
    உள்ளபடியே தேடுகிறார்கள்

    வலமாக இன்று சுழல விடும் பாடல்
    வழக்கமான அனுமதியுடன்..

    வாராய் என் தோழி வாராயோ
    மணப்பந்தல் காண வாராயோ

    மணமேடை தன்னில் மணமே காணும்
    திருநாளை காண வாராயோ

    மணக்கோலம் கொண்ட மகளே
    புது மாக்கோலம் போடு மயிலே

    குணக்கோலம் கொண்ட கனியே
    நம் குலம் வாழ பாடு குயிலே

    சிரிக்காத வாயும் சிரிக்காதோ
    திருநாளை கண்டு மகிழாதோ

    தனியாக காண வருவார்
    இவள் தளிர் போலே தாவி அணைவாள்

    கண் போலே சேர்ந்து மகிழ்வாள்
    இரு கண்மூடி மார்பில் துயில்வாள்

    எழிலான கூந்தல் கலையாதோ
    இதமான இன்பம் மலராதோ

    மலராத பெண்மை மலரும்
    முன்பு தெரியாத உண்மை தெரியும்

    மயங்காத கண்கள் மயங்கும்
    முன்பு விளங்காத கேள்வி விளங்கும்

    ReplyDelete
  4. ஐயரே உங்களுக்கு நல்ல ரசனை இருக்கிறது. தேர்ந்தெடுக்கும் பாடலை வைத்துச் சொல்கிறேன்.

    இவ்வளவு சொன்னது போதும். இல்லாவிட்டால் இந்த பாடத்திற்கு சம்பந்தமில்லாதது என்று வாத்தியார் தடை போடலாம்.

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா,எதற்காக ஆண்கள் மனதைப் போட்டு குழப்பிக்கொள்கிறார்கள் என்றே தெரியவில்லை,தினமும் ஜி தமிழ் சேனலை இரவு 8.30 மணிக்கு பாருங்கள்,கூகுல் அதைப்பார்த்தால் தலையை பிய்த்துக்கொள்ளும். நன்றி ஐயா.

    ReplyDelete
  6. குருவிற்கு வணக்கம்,
    பல வகையான பிஸ்ஸாகளை தாங்கள்
    தந்தால் சுவைக்க ஆர்வம்தான்.
    நன்றி

    ReplyDelete
  7. /////Blogger Ak Ananth said...
    பெண்கள் how to handle a husband என்று search செய்வார்களோ. இரண்டோ, மூன்றோ அல்லது அதற்கு மேலுமோ வைத்திருப்பவர்கள் நன்றாகவே சமாளிப்பவர்களும் இருக்கிறார்கள். ஒன்று (மட்டுமே) வைத்துக் கொண்டு சமாளிக்க முடியாதவர்களும் இருக்கிறார்கள். ஐயோ பாவம் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது/////

    ஜாதகத்தில் புத்திநாதன் நன்றாக உள்ளவர்கள் சமாளித்து விடுவார்கள். மற்றவர்கள் மட்டும்தான் ஐயோ பாவம்! நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  8. ////Blogger rajanblogs said...
    கணவரோ அல்லது மனைவியோ எந்தத் தன்மையுடன் இருக்கிறாரோ அவரை அந்தத் தன்மையுடனேயே புரிந்து கொண்டு மதிக்கவும், கொண்டாடவும் முடியவில்லையென்றால், பிறகு அருமையான உறவுமுறை அங்கே எப்படியிருக்கும்?
    இந்த உயிர் என்னோடு இருப்பதைத் தேர்வு செய்திருப்பது
    எவ்வளவு அற்புதமான விஷயம்’ என்று நீங்கள் மனமார
    உணர்ந்தால் மட்டுமே கொண்டாடும் தன்மை உங்களுக்கு வரும்.
    வேறு யாரோ ஒருவருக்கு அவள் அற்புதமானவளாகத் தெரியலாம்.
    ஆனால் உங்கள் கண்களுக்கு வேறுவிதமாகத்தான் தெரிவாள்.
    அவளை உங்களுடைய உரிமையாகப் பார்க்கும் காரணத்தால்
    அவருடைய அற்புதத்தன்மை உங்களுக்குத் தெரிவதில்லை.
    ஒருவர் சமூக ரீதியாக உங்களோடு பிணைக்கப்பட்டிருந்தாலும் அவர் தன் விருப்பத்தின் பேரில்தான் உங்களோடு தொடர்ந்து இருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எனவே, அவரின் விருப்பத்திற்கு நன்றி கூறி அவரையும், அவரது அருகாமையையும் மகத்தானதாகக் கொண்டாடுங்கள். இப்படி உறவை மதிக்கவும், கொண்டாடவும் தெரிந்திருந்தால் அங்கே மேன்மையான உறவு மட்டுமே இருக்கமுடியும்.////

    yes, understanding each other is very important in the married life.Thanks, my dear friend for your lengthy comment!

    ReplyDelete
  9. /////Blogger அய்யர் said...
    யார் யாரை/எதை தேடுகிறார்கள்
    யாரக்கு தெரியும்..
    தோழர் ஆனந்த் அவர்கள் பெண்கள்
    தேடுவது எதை என கேட்கிறார்
    உண்மை பெண்கள் தான் இதை
    (how to handle wife என்பதை)
    உள்ளபடியே தேடுகிறார்கள்
    வலமாக இன்று சுழல விடும் பாடல்
    வழக்கமான அனுமதியுடன்..

    வாராய் என் தோழி வாராயோ
    மணப்பந்தல் காண வாராயோ
    மணமேடை தன்னில் மணமே காணும்
    திருநாளை காண வாராயோ
    மணக்கோலம் கொண்ட மகளே
    புது மாக்கோலம் போடு மயிலே
    குணக்கோலம் கொண்ட கனியே
    நம் குலம் வாழ பாடு குயிலே
    சிரிக்காத வாயும் சிரிக்காதோ
    திருநாளை கண்டு மகிழாதோ
    தனியாக காண வருவார்
    இவள் தளிர் போலே தாவி அணைவாள்
    கண் போலே சேர்ந்து மகிழ்வாள்
    இரு கண்மூடி மார்பில் துயில்வாள்
    எழிலான கூந்தல் கலையாதோ
    இதமான இன்பம் மலராதோ
    மலராத பெண்மை மலரும்
    முன்பு தெரியாத உண்மை தெரியும்
    மயங்காத கண்கள் மயங்கும்
    முன்பு விளங்காத கேள்வி விளங்கும்//////

    உங்களுடைய பின்னூட்டத்க்திற்கும் பாடலுக்கு நன்றி விசுவநாதன்!


    ReplyDelete
  10. //////Blogger Ak Ananth said...
    ஐயரே உங்களுக்கு நல்ல ரசனை இருக்கிறது. தேர்ந்தெடுக்கும் பாடலை வைத்துச் சொல்கிறேன்.
    இவ்வளவு சொன்னது போதும். இல்லாவிட்டால் இந்த பாடத்திற்கு சம்பந்தமில்லாதது என்று வாத்தியார் தடை போடலாம்.//////

    ஆமாம். ரசனை முக்கியம். அது இல்லாவிட்டால் வாழ்க்கையே சுவைக்காது! அவருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் முக்கியமானதாகும்! நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  11. //////Blogger Geetha Lakshmi A said...
    வணக்கம் ஐயா,எதற்காக ஆண்கள் மனதைப் போட்டு குழப்பிக்கொள்கிறார்கள் என்றே தெரியவில்லை,தினமும் ஜி தமிழ் சேனலை இரவு 8.30 மணிக்கு பாருங்கள்,கூகுல் அதைப்பார்த்தால் தலையை பிய்த்துக்கொள்ளும். நன்றி ஐயா./////

    நல்லது. தகவலுக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  12. /////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்,
    பல வகையான பிஸ்ஸாகளை தாங்கள்
    தந்தால் சுவைக்க ஆர்வம்தான்.
    நன்றி////

    பாப்கார்ன் பொட்டலங்கள் தீரட்டும். அடுத்தது அதுதான் பொறுத்திருங்கள் உதயகுமார்!

    ReplyDelete
  13. அன்புக்குரிய வாத்தியாரே,

    வணக்கம். இன்றைக்கு ஹஸ்தம் என தெரிந்து படிக்கக்கூடாது எனப்பார்த்தேன். இருந்தாலும் படித்து விட்டேன். அதிலும் நமது ராஜன் அவர்கள் கூறிய வார்த்தைகள் அழகாக இருந்தன. ஆனால் இதைப்பற்றி எல்லாம் பேசும் தகுதி இன்னும் எனக்கு வரவில்லை. "எப்போ வருவாரோ எந்தன் கலி தீர" என்று கீர்த்தனம் பாடிக்கொள்ளலாம் (நடராஜரை பற்றிய கீர்த்தனம்).

    நிழலின் அருமை வெயிலில் புரியும். ஆனால் இறைவனோ, நிழல் தேவையற்றவனுக்கு நிழலை கொடுக்கிறார். பாலையில் உள்ளவனுக்கு கொடுப்பதில்லை. திங்கத்தெரியாதவனுக்குத்தான் பன்னு கிட்டுது.

    என்னுடன் படித்த அனைவரும் வாழ்க்கையில் செட்டில் ஆகி பத்திரிகை கொடுக்கும் பொது நான் மட்டும் இன்னும் ஆராய்ச்சி மண்ணாங்கட்டி என திரிவது கஷ்டமாகத்தான் உள்ளது. அப்போது ஆர்வத்தில் ஆராய்ச்சியில் இறங்கினேன். இன்று கொஞ்சம் regret பண்ணுகிறேன். பிறர் போல ஒரு பொறியியல் படித்திருந்தால் நானும் வாழ்க்கையில் செட்டில் ஆகியிருப்பேன். ஆராய்ச்சி, நாட்டுக்கு உழைக்கிறேன் என்று அலைந்து நான் என்னத்தை கண்டேன்? நான் வாங்கிய பல்கலைக்கழக தங்கப்பதக்கம் எதற்கானது?

    வகுப்பறையில் பெஞ்சு மேலெல்லாம் நிற்கச்சொள்ளக்கூடாது. :-))))))

    நான் அமைதியாய் உட்கார்ந்து விட்டேன்!

    அன்புடன்,
    புவனேஷ்






    ReplyDelete
  14. Blogger Bhuvaneshwar said...
    அன்புக்குரிய வாத்தியாரே,
    வணக்கம். இன்றைக்கு ஹஸ்தம் என தெரிந்து படிக்கக்கூடாது எனப்பார்த்தேன். இருந்தாலும் படித்து விட்டேன். அதிலும் நமது ராஜன் அவர்கள் கூறிய வார்த்தைகள் அழகாக இருந்தன. ஆனால் இதைப்பற்றி எல்லாம் பேசும் தகுதி இன்னும் எனக்கு வரவில்லை. "எப்போ வருவாரோ எந்தன் கலி தீர" என்று கீர்த்தனம் பாடிக்கொள்ளலாம் (நடராஜரை பற்றிய கீர்த்தனம்).
    நிழலின் அருமை வெயிலில் புரியும். ஆனால் இறைவனோ, நிழல் தேவையற்றவனுக்கு நிழலை கொடுக்கிறார். பாலையில் உள்ளவனுக்கு கொடுப்பதில்லை. திங்கத்தெரியாதவனுக்குத்தான் பன்னு கிட்டுது.
    என்னுடன் படித்த அனைவரும் வாழ்க்கையில் செட்டில் ஆகி பத்திரிகை கொடுக்கும் பொது நான் மட்டும் இன்னும் ஆராய்ச்சி மண்ணாங்கட்டி என திரிவது கஷ்டமாகத்தான் உள்ளது. அப்போது ஆர்வத்தில் ஆராய்ச்சியில் இறங்கினேன். இன்று கொஞ்சம் regret பண்ணுகிறேன். பிறர் போல ஒரு பொறியியல் படித்திருந்தால் நானும் வாழ்க்கையில் செட்டில் ஆகியிருப்பேன். ஆராய்ச்சி, நாட்டுக்கு உழைக்கிறேன் என்று அலைந்து நான் என்னத்தை கண்டேன்? நான் வாங்கிய பல்கலைக்கழக தங்கப்பதக்கம் எதற்கானது?
    வகுப்பறையில் பெஞ்சு மேலெல்லாம் நிற்கச்சொள்ளக்கூடாது. :-))))))
    நான் அமைதியாய் உட்கார்ந்து விட்டேன்!
    அன்புடன்,
    புவனேஷ் //////

    நெய்ரோஸ்ட் முருகலாக இருந்தால் மேலும் ருசிக்கும். உங்களை இறைவன் முருகல் தோசையாக்கிக்கொண்டிருக்கிறான் என்று நினைத்துக்கொள்ளுங்கள். சீக்கிரமே செட்டிலானவர்கள் எல்லாம் ஒரே சட்டியில் வேகவைக்கப்பட்ட இட்லிகள் என்று எடுத்துக்கொள்ளுங்கள்:-))))

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com