29.1.13

Astrology.Popcorn Post. உச்சத்தை தொடுவது எப்படியடா ?

Astrology.Popcorn Post. உச்சத்தை தொடுவது எப்படியடா ?
Popcorn Post No.33
பாப்கார்ன் பதிவுகள் - எண்.33


தேதி 29.1.2013 செவ்வாய்க் கிழமை
-----------------------------------------------
இதற்கு முன்னால் Popcorn Post No.32 23.1.2013 வியாழக்கிழமை அன்று வெளியானது. அதன் தொடர்ச்சி இது.. பாப்கார்ன் போஸ்ட் என்பது ஒரு குறிப்பிட்ட செய்தியை விளங்கச் சொல்லி உங்களுக்குத் தெரியப்படுத்துவது. சுருக்கமாக இருந்தாலும் விளக்கமாக இருக்கும். பாப்கார்ன் பொட்டலம் எந்த அளவு இருக்குமோ அந்த அளவுதான் பதிவும் இருக்கும்.

சனீஷ்வரனைப் பற்றி நமக்கெல்லம் நன்கு தெரியும். அவரைப்போல் கொடுப்பாரும் இல்லை. கெடுப்பாரும் இல்லை. அவர்தான் ஆயுள்காரகர். நம் ஆயுளுக்கான காரகர். அடுத்து அவர்தான் கரமகாரகர். Authority for work. உங்கள் மொழியில் சொன்னால் பூவாவிற்கு அதாவது ஜீவனத்திற்கு (Employment) வழி அமைத்துக் கொடுப்பவர் அவர்தான்.

அவனவன் ஜாதகத்திற்கு தகுந்த மாதிரி அமைத்துக் கொடுப்பார். ஜாதகனை பணத்தில் புரளவைக்கும் வேலையிலும் அமர்த்துவார். அல்லது பணம் புரளும் இடத்தில் (வங்கிகளில்) வேலையிலும்  அமர்த்துவார்.

வங்கி என்றவுடன் நினைவிற்கு வருகிறது. எனது நண்பர் ஒருவர் தேசிய வங்கி ஒன்றில் அதிகாரியாகச் சேர்ந்து, பல பதவி உயர்வுகளைப் பெற்றுக் கடைசியில், அவ்வங்கியின் தலைமைச் செயலகத்தில்  மேலாளர் பதிவியையையும் பிடித்து, அதையும் அலங்கரித்தார்.

அதுபோல ஒரு ஜாதகன் தான் அமரும் பணியில் உச்சத்தைத் தொடுவதற்கு என்ன காரணம்? அதாவது ஜாதகப்படி என்ன காரணம்?

சனி பத்தாம் வீட்டில் அமர்ந்தால், ஜாதகன் தான் பார்க்கும் வேலையில் உச்சத்தைத் தொடுவான்

அதுபோல லக்கினாதிபதி, நான்காம் வீட்டில் அமர்ந்து, தன் நேரடிப் பார்வையால், பத்தாம் வீட்டைப் பார்க்கும் அமைப்புள்ள ஜாதகனும் உச்சத்தைத் தொடுவான்.

இது இரண்டும்தான் முக்கியமான விதிகள் (Rules)

இன்னும் பல விதிகள் உள்ளன. விரிவாக எழுதலாம். இன்னொரு சந்தர்ப்பத்தில் அதை எழுதுகிறேன். அது பாப்கார்ன் கண்க்கில் வராமல் விருந்துச் சாப்பாட்டுக் கணக்கில் வரும். பொறுத்திருங்கள்!
---------------------------
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++

36 comments:

  1. Please let me know how I can attend the new class.Thanks!

    ReplyDelete
  2. ////Blogger Bala M said...
    Please let me know how I can attend the new class.Thanks!/////

    அன்பு சகோதரி பாலாமணி, உங்களுக்கு இடமில்லாம்லா? நிச்சயம் உண்டு. மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். அதைப் பாருங்கள்

    ReplyDelete
  3. பாடம் அருமை ஐயா..
    தொழில், வேலை என்று வரும் பட்சத்தில் கர்ம ஸ்தானமான 10ம்வீட்டு அதிபதி, அங்கு அமரும் கிரகங்கள், பார்வையிடும் கிரகங்கள் போன்றவற்றை முதன்மையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றாலும், கர்மகாரகர் என்ற ரீதியில் சனி பகவான் ஜாதகத்தில் ஆட்சி, உச்சம் பெற்று வேறு ஸ்தானங்களில் அமர்ந்தாலும் தொழில் அளவில் பெரிய முன்னேற்றங்கள் அமையுமா ? சனி நீசம் பெற்ற ஜாதகத்தில் தொழிலளவில் ஏற்படும் பலன்கள் எப்படிருக்கும் ?
    இது சில நாட்களாக ஏற்படும் சந்தேகம்..இன்று ஐயாவிடம் கேட்கலாம் என்று கேட்டுவிட்டேன்.தவறாக ஏதும் இருப்பின் மன்னிக்கவும்.நன்றி.

    ReplyDelete
  4. அருமை.... பத்தாம் அதிபதி நாலில் அமர்ந்து பத்தாம் வீட்டைப் பார்த்தாலும் வேலையில் உச்சம் தானே?

    புதிய வகுப்பறையில் எனக்கும் ஒரு இடம் போட்டுவையுங்கள் ஐயா...

    ReplyDelete
  5. Sir.. Good morning.. Magara lagnamana enaku 10 idathil (thulam) sani ucchamaga. Intha pathivu enaku puthu thembai koduthullathu. Mikka nandri.

    I remember in swami vivekanada horo, sani at tenth place. There also you explained 'sani at tenth place will make native to touch the peak in his profession'.

    ReplyDelete
  6. நல்ல பதிவு.

    எனக்கு இந்த நிலையில் 2ம் நிலை பொருந்திய நிலையில் உள்ளது.



    வாத்தியார் அவர்களுக்கு நன்றிகள்பல..

    ReplyDelete
  7. அய்யா,
    இந்த வாசகம் எனக்காகவே பதிவு இட்ட மகிழ்ச்சி உள்ளது, தங்களது பாதங்களை தொட்டு வணங்குகிறேன்.

    ReplyDelete
  8. பகுதி 1
    சபாஷ் சரியான முடிவு

    பகுதி 2
    வங்கி பணியில் சரி
    வரவேற்கிறோம்.. ஆனால்

    ஆசிரயாராக தொடங்கி
    அரசியல் வாதியாக தொடர்ந்து

    நாட்டின் ஜனாதிபதியாக இருக்கும்
    நம்மவருக்கும் இது பொருந்துகிறதே

    இன்று வழக்கமான அனுமதியுடன்
    இந்த பாடலினை சுழல விடுகிறோம்

    எச்சம் தொட்டு நின்றதை
    உச்சம் என்றதும் ரசிக்க

    ஒட்டகத்தக் கட்டிக்கோ
    கெட்டியாக ஒட்டிக்கோ
    வட்ட வட்டப் பொட்டுக்காரி

    ஒத்துழைக்க ஒத்துக்கோ
    பத்த வெச்சா பத்திக்கோ
    வாய் வெடிச்ச மொட்டுக்காரி

    விடவேண்டும் அச்சத்தை
    தொடவேண்டும் உச்சத்தை
    அதிகாலைச் சேலை சொல்லுமடி மிச்சத்தை

    கோழைக்கு வாழ்க்கைப்பட்டால் வாழ்வே என்னாகும்
    உன் வாளுக்கு வாழ்க்கைப்பட்டால் வாழ்வே பொன்னாகும்

    ReplyDelete
  9. VANAKKAM AYYA. PAAPCORN POST ARUMAI. NAAN UNGAL PUTHIYA VAGUPPARAIYIL (KATTANA VAGUPPARAI) SERA VAAYPPU KIDAIKKUMA.

    NANDRIGAL.

    MU.PRAKAASH

    ReplyDelete
  10. பாப்கார்ன் பதிவுகள் அனைத்துமே மீண்டும் மீண்டும் மனதில் அசை போட வைக்கின்றன! அருமை!

    ReplyDelete
  11. /////Blogger Thava Kumaran said...
    பாடம் அருமை ஐயா..
    தொழில், வேலை என்று வரும் பட்சத்தில் கர்ம ஸ்தானமான 10ம்வீட்டு அதிபதி, அங்கு அமரும் கிரகங்கள், பார்வையிடும் கிரகங்கள் போன்றவற்றை முதன்மையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றாலும், கர்மகாரகர் என்ற ரீதியில் சனி பகவான் ஜாதகத்தில் ஆட்சி, உச்சம் பெற்று வேறு ஸ்தானங்களில் அமர்ந்தாலும் தொழில் அளவில் பெரிய முன்னேற்றங்கள் அமையுமா ? சனி நீசம் பெற்ற ஜாதகத்தில் தொழிலளவில் ஏற்படும் பலன்கள் எப்படிருக்கும் ?
    இது சில நாட்களாக ஏற்படும் சந்தேகம்..இன்று ஐயாவிடம் கேட்கலாம் என்று கேட்டுவிட்டேன்.தவறாக ஏதும் இருப்பின் மன்னிக்கவும்.நன்றி./////

    சனியைப் பற்றி நிறையப் பதிவுகளை எழுதியுள்ளேன். அவற்றையெல்லாம் முறையாகப் படித்தால், இதுபோன்ற சந்தேகங்கள் வராது!

    ReplyDelete
  12. ////Blogger ஸ்கூல் பையன் said...
    அருமை.... பத்தாம் அதிபதி நாலில் அமர்ந்து பத்தாம் வீட்டைப் பார்த்தாலும் வேலையில் உச்சம் தானே?
    புதிய வகுப்பறையில் எனக்கும் ஒரு இடம் போட்டுவையுங்கள் ஐயா.../////

    இடத்தைப் பிடிக்க பஸ்ஸில்தான் துண்டு போட முடியும். வகுப்பறையில் அல்ல!
    உங்களைப்பற்றி வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்

    ReplyDelete
  13. /////Blogger KJ said...
    Sir.. Good morning.. Magara lagnamana enaku 10 idathil (thulam) sani ucchamaga. Intha pathivu enaku puthu thembai koduthullathu. Mikka nandri.
    I remember in swami vivekanada horo, sani at tenth place. There also you explained 'sani at tenth place will make native to touch the peak in his profession'./////

    உங்களூடைய நினைவாற்றலுக்கு மற்றுமொருமுறை ஓ போட்டுவிடுகிறேன்!

    ReplyDelete
  14. /////Blogger arul said...
    good post sir/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி அருள்!!!

    ReplyDelete
  15. ////Blogger raja said...
    நல்ல பதிவு.
    எனக்கு இந்த நிலையில் 2ம் நிலை பொருந்திய நிலையில் உள்ளது.
    வாத்தியார் அவர்களுக்கு நன்றிகள்பல..////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி ராஜா!!

    ReplyDelete
  16. /////Blogger C.Senthil said...
    அய்யா,
    இந்த வாசகம் எனக்காகவே பதிவு இட்ட மகிழ்ச்சி உள்ளது, தங்களது பாதங்களை தொட்டு வணங்குகிறேன்.////

    பாதங்களைத் தொடவும் வேண்டாம். காலை வாரிவிடவும் வேண்டாம். இரண்டுமே நல்லதல்ல!

    ReplyDelete
  17. /////Blogger அய்யர் said...
    பகுதி 1
    சபாஷ் சரியான முடிவு
    பகுதி 2
    வங்கி பணியில் சரி
    வரவேற்கிறோம்.. ஆனால்
    ஆசிரயாராக தொடங்கி
    அரசியல் வாதியாக தொடர்ந்து
    நாட்டின் ஜனாதிபதியாக இருக்கும்
    நம்மவருக்கும் இது பொருந்துகிறதே/////

    ஒட்டகத்தக் கட்டிக்கோ பாடலா? என்ன சுவாமி இது? உங்களிடம் இருந்து இதுபோன்ற பாடல்களை நான் எதிர்பார்க்கவில்லை!

    ReplyDelete
  18. /////Blogger Muthukrishnan Prakash said...
    VANAKKAM AYYA. PAAPCORN POST ARUMAI. NAAN UNGAL PUTHIYA VAGUPPARAIYIL (KATTANA VAGUPPARAI) SERA VAAYPPU KIDAIKKUMA.
    NANDRIGAL.
    MU.PRAKAASH/////

    இங்கே கேட்டால் எப்படிக் கிடைக்கும்? உங்களைப்பற்றி வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்

    ReplyDelete
  19. /////Blogger ravi krishna said...
    பாப்கார்ன் பதிவுகள் அனைத்துமே மீண்டும் மீண்டும் மனதில் அசை போட வைக்கின்றன! அருமை!/////

    ஆமாம். எனக்கும் அந்தப்பழக்கம் உண்டு! நன்றி!

    ReplyDelete
  20. Dear sir, good article.... B.V.Raman , the most famous astrologer and a powerful writer has Sanicharaya ( The Lord of dharma ) is in 4th place in rishaba raise. Mr BV Raman has reached his peak in his profession....becomes a world renounced astrologer for his perdition

    ReplyDelete
  21. Dear sir, BV Raman , the famous Indian astrologer has Saturn in his 4th behave aspecting 10th behave. He is of kumba Lagan too...his consulting work has gained world famous reputation with his predictions....he has reached the peak of his career...Thanks , Ram

    ReplyDelete
  22. sir vanakam.. menalakanam. lakanathipathi...guru..uachum.and vakaram .guru 10..house athipathi..ethat eppadi eduthu kolvathu..

    ReplyDelete
  23. /////Blogger Ram said...
    Dear sir, good article.... B.V.Raman , the most famous astrologer and a powerful writer has Sanicharaya ( The Lord of dharma ) is in 4th place in rishaba raise. Mr BV Raman has reached his peak in his profession....becomes a world renounced astrologer for his perdition////

    உண்மைதான். பகிர்ந்து கொண்ட மேன்மைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  24. Blogger Ram said...
    Dear sir, BV Raman , the famous Indian astrologer has Saturn in his 4th behave aspecting 10th behave. He is of kumba Lagan too...his consulting work has gained world famous reputation with his predictions....he has reached the peak of his career...Thanks , Ram/////

    நல்லது. மேலதிகத்தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  25. ////Blogger eswari sekar said...
    sir vanakam.. menalakanam. lakanathipathi...guru..uachum.and vakaram .guru 10..house athipathi..ethat eppadi eduthu kolvathu../////

    பத்தாம் அதிபதி அந்த வீட்டிற்கு எட்டில் உள்ளார். கர்மகாரகன் நிலைமையையும் பார்க்க வேண்டும். இன்னும் பல விஷ்யங்கள் உள்ளன. உதிரியான கிரகநிலைகளை வைத்து எப்படிப் பலன் சொல்வது?

    ReplyDelete
  26. Melum , intha idathil kaaragar veetil irunthal paava naasam endra vithiyai ninaithu kavalai kolla thevai illai. Sari thane ayya?

    ReplyDelete
  27. ஜகந்நாத ஹோரா ஆசிரியர், பிவிஆர் நரசிம்மராவ் அவர்களுடைய ஜாதகத்தில் சனி 8ல் நீசம். 10ம் அதிபதி புதன் உடன் இருக்கிறார். அவரைப் பற்றி நான் அதிகம் விளக்கிக் கூற வேண்டியதில்லை. ஜாதகக் கட்டங்கள், கிரகங்கள் இவற்றை மீறிய சக்தி ஒன்று இருக்கிறது என்ற முடிவுக்குதான் என்னால் வர முடிகிறது.

    ReplyDelete
  28. ///ஒட்டகத்தக் கட்டிக்கோ பாடலா? என்ன சுவாமி இது? உங்களிடம் இருந்து இதுபோன்ற பாடல்களை நான் எதிர்பார்க்கவில்லை!///

    இந்தபாடல்கருத்தில் அரசியலுள்ளதென
    இப்படி ஒரு விஸ்வருபமா..

    தொடர்-பில்லா பாடலினை இதுவரை
    தொட்டுக் காட்டியதில்லை

    எனினும்

    உங்கள் விருப்பமே.. .‘இனி
    எங்கள் விரல்களில் சுழலும்..

    ReplyDelete
  29. /////Blogger KJ said...
    Melum , intha idathil kaaragar veetil irunthal paava naasam endra vithiyai ninaithu kavalai kolla thevai illai. Sari thane ayya?////

    சரிதான் ராசா!

    ReplyDelete
  30. ////Blogger Ak Ananth said...
    ஜகந்நாத ஹோரா ஆசிரியர், பிவிஆர் நரசிம்மராவ் அவர்களுடைய ஜாதகத்தில் சனி 8ல் நீசம். 10ம் அதிபதி புதன் உடன் இருக்கிறார். அவரைப் பற்றி நான் அதிகம் விளக்கிக் கூற வேண்டியதில்லை. ஜாதகக் கட்டங்கள், கிரகங்கள் இவற்றை மீறிய சக்தி ஒன்று இருக்கிறது என்ற முடிவுக்குதான் என்னால் வர முடிகிறது./////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  31. ////Blogger அய்யர் said...
    ///ஒட்டகத்தக் கட்டிக்கோ பாடலா? என்ன சுவாமி இது? உங்களிடம் இருந்து இதுபோன்ற பாடல்களை நான் எதிர்பார்க்கவில்லை!///
    இந்தபாடல்கருத்தில் அரசியலுள்ளதென
    இப்படி ஒரு விஸ்வருபமா..
    தொடர்-பில்லா பாடலினை இதுவரை
    தொட்டுக் காட்டியதில்லை
    எனினும்
    உங்கள் விருப்பமே.. .‘இனி
    எங்கள் விரல்களில் சுழலும்../////

    நல்லது நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  32. @Ram: World renounced astrologer? When did he become a San-nyaasi? Did he become a San-nyaasi in his life? Kindly tell me, this is new information to me. Thanks.

    Bhuvanesh

    ReplyDelete
  33. ////Blogger sundari said...
    vanakkam sir,
    present sir
    nice lesson////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  34. ////Blogger Bhuvaneshwar said...
    @Ram: World renounced astrologer? When did he become a San-nyaasi? Did he become a San-nyaasi in his life? Kindly tell me, this is new information to me. Thanks.
    Bhuvanesh/////

    வார்த்தைப் பிரயோகத்தில் ஏதோ தவறு இருக்கிறது. திருவாளர் ராம், நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அர்த்தத்தில் சொல்லியிருக்கமாட்டார். காலம் சென்ற திரு பி.வி.ராமன் அவர்கள் உலகம் அறிந்த ஜோதிடர். அவ்வளவுதான்!

    ReplyDelete
  35. பாடம் அருமை,

    இன்னொரு விஷயம். பத்தில் சனி இருந்தால் சொந்த தொழில் அமையாது, அடிமை தொழில்தான் என்றும் ஒரு பேச்சு உள்ளது. இதை பற்றி தங்களின் கருத்தை பதிவு செய்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com