Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 12
ஜோதிடத் தொடர் - பகுதி 12
இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
ஆயில்ய நட்சத்திரம் (கடக ராசி)
இது புதனின் நட்சத்திரம்.
1. கார்த்திகை
2. மிருகசீரிஷம்
3. புனர்பூசம்
4. பூரம்
5. சித்திரை
6. சுவாதி
7. விசாகம்
8. அனுஷம்
9. திருவோணம்
10. அவிட்டம்
11. சதயம்
ஆகிய 11 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய நட்சத்திரங்களாகும்.
மூலம், பூராடம், உத்திராடம் (1ஆம் பாதம்) ஆகியவை தனுசு ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் கடகத்திற்கு ஆறாம் இடம் தனுசு.. தனுசு ராசிக்கு எட்டாம் வீடு கடகம். அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றை விலக்கிவிடுவது நல்லது.
அதே நிலைப்பாடு சதய நட்சத்திரம், அவிட்டம் 3 & 4, பூரட்டாதி 1, 2 &3 ஆம் பாதங்களுக்கும் உள்ளது. அவைகள் கும்ப ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும்.கடகத்திற்கு கும்பம் எட்டாம் வீடு. கும்பத்திற்கு கடகம் ஆறாம் வீடு. (8/6 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது. இவற்றுள் சதயமும், அவிட்டம் 3 & 4, மட்டும் பொருத்தக் கணக்கில் வருவதால், கவனத்தில் கொண்டு, அவற்றை விலக்கி விடுவது நல்லது.
அதே நிலைப்பாடு திருவாதிரை, மிருகசீரிஷம் 3 & 4ஆம் பாதங்கள், புனர்பூசம் 1, 2 & 3ஆம் பாதங்களுக்கும் உண்டு. அவைகள் மிதுன ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும். கடகத்திற்கு மிதுனம் பன்னிரெண்டாம் வீடு. மிதுனத்திற்கு கடகம் இரண்டாம் வீடு. (12/1 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது. இவற்றுள் மிருகசீரிஷம், புனர்பூசம் பொருத்தக் கணக்கில் வருவதால், கவனத்தில் கொண்டு, அவற்றை விலக்கி விடுவது நல்லது.
அஷ்டம சஷ்டமக் கணக்கை பார்த்தால் 7 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகப் பொருந்தும்
அஸ்விணி, மகம், மூலம், கேட்டை, ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.
பெண்ணிற்கும், பையனுக்கும் ஆயில்யம் ஒரே நட்சத்திரமாக இருந்தால் பொருந்தாது. பொருந்தவே பொருந்தாது!
திருவாதிரை, பூரம் ஆகிய இரண்டு நட்சத்திரங்களும் பொருந்தாது!
பரணி, ரோஹிணி, உத்திரம், ஹஸ்தம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகிய 8 நட்சத்திரங்களும் மத்திய பொருத்தம். சராசரி பொருத்தம் உள்ளவையாகும்!
-------------------------------------------------------------------------------
(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாசித்துப் பார்த்துப் பார்த்து பயன் உற்றேன் . நன்றி ஐயா!
ReplyDeleteகல்யாண வலை ஓசை கொண்டு
ReplyDeleteகாற்றே நீ முன்னால செல்லு
பின்னாடி நான் வாரேன் என்று
கன்னாளன் காதோடு சொல்லு
ஏர்பிடிக்க கைகள் இடைபிடிக்க
நீர் வயல்போல் நெஞ்சில் நெகிழ்ந்திருக
பொன்னான நெல் மணிகள்
கண்ணே உன் கண்மனிகள்
தண்ணீரிலே செவ்வாழை போல்
தாவி சிரிக்காதோ
என்ற
பாடல் வரிகளை
பதிந்து சுழல விட்டபடி
வருகை பதிவு..
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteவாசித்துப் பார்த்துப் பார்த்து பயன் உற்றேன் . நன்றி ஐயா!////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
////Blogger அய்யர் said...
ReplyDeleteகல்யாண வலை ஓசை கொண்டு
காற்றே நீ முன்னால செல்லு
பின்னாடி நான் வாரேன் என்று
கன்னாளன் காதோடு சொல்லு
ஏர்பிடிக்க கைகள் இடைபிடிக்க
நீர் வயல்போல் நெஞ்சில் நெகிழ்ந்திருக
பொன்னான நெல் மணிகள்
கண்ணே உன் கண்மனிகள்
தண்ணீரிலே செவ்வாழை போல்
தாவி சிரிக்காதோ
என்ற பாடல் வரிகளை பதிந்து சுழல விட்டபடி
வருகை பதிவு../////
உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி விசுவநாதன்!!