6.12.12

கவிதைச் சோலை: இருட்டிற்கு எதைத் தந்தாள்?

கவிதைச் சோலை: இருட்டிற்கு எதைத் தந்தாள்?

முல்லைக்கு முறுவல் தந்தாள்
    முகிலுக்குக் கூந்தல் தந்தாள்
வில்லுக்குப் புருவம் தந்தாள்
    வேலுக்கு விழிகள் தந்தாள்
சொல்லுக்குச் செந்தேன் தந்தாள்
    சுனைநீர்க்குக் குளிர்ச்சி தந்தாள்
அல்லிக்குச் செவ்வாய் தந்தாள்
    அழகுக்கே அழகு தந்தாள்!


நடைதந்தாள் அன்னத்திற்கு
    நகைதந்தாள் எனக்கு; நன்னூல்
இடைதந்தாள் கொடிக்கு, நல்யாழ்
    இசைதந்தாள் எனக்கு; தக்க
விடைதந்தாள் பிறர்க்கு; மையல்
    விழிதந்தாள் எனக்கு மேலும்
மடல்தந்தாள் படிப்பதற்கு
    மலர்தந்தாள் நுகர்வதற்கு!


மிரட்டிக்கொண் டிருந்த காளை
    மாட்டினை விரைந்து நான்போய்
விரட்டிக்கொண் டிருந்தேன் வந்தாள்
    விழிகளால் பிடித்தேன் காதல்
திருட்டுக்குத் தேதி தந்தாள்
    சேல்விழி பாதி தந்தாள்
இருட்டுக்குச் சேலை தந்தாள்
    இளமைக்கு வேலை தந்தாள்!

          - உவமைக் கவிஞர் சுரதா
---------------------------------------------
2

இதல்லவா உண்மையான நட்பு! 
ஸ்க்ரோல் டவுன் செய்து பாருங்கள்
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

8 comments:

  1. கவிஞர் சுரதா பற்றி தமாஷாகப் படிக்க வேண்டுமானால் கீழ்க்கண்ட பதிவைப் படிக்கவும்.

    http://adikkadi.blogspot.in/2009/04/blog-post_28.html

    கவிதை என்றால் மன இருளைப் போக்க வேண்டும். அப்போது இருட்டுக்குத் தேவைப்படுவது சுடர் விளக்குத்தான். சேலை அல்ல‌.

    அந்த ஐரோப்பிய குழந்தைகளின் செயல் மிகுந்த பாராட்டுக்குரியது. அந்த பேசின்
    எட்டவில்லை என்பதற்காக கீழேயே அசுத்தம் செய்யாமல் இருக்கிறார்களே.நம் ஊரில் இரவு நேர‌ அரசுப் பேருந்துகள் நிற்கும் வழித்தட உணவுச் சாலைகளைச் சுற்றி நம்மவர்கள் செய்யும் ஆபாசத்தை இதனுடன் ஒப்பிடுங்கள்.
    பதிவுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  2. குருவிற்கு வணக்கங்கள்,
    அருமையான கவிதை. நன்றி.

    ReplyDelete

  3. அழகிய கவிதை

    படித்தேன்
    பைந்தமிழ்த் தேனைக்
    குடித்தேன்

    ReplyDelete
  4. இருட்டுக்கு தமிழகத்தை தந்தாள்
    இந்திய தாய் என சொல்ல வைத்தது

    நாக்கை பற்றி (ஆனந்தமுருகன்)சொன்ன
    நாசூக்கான செய்தியை இப்படி புரிந்து கொண்டோம்

    ....

    எலும்பு இல்லாதவர்களே
    இதயத்தை உடைக்கலாம் என்ற போது

    பலம் இல்லாதவர் ஏன் நம்பிக்கையோடு
    பலம் பொருந்தி வாழ முடியாது..

    ...

    சுத்தம் இதைப்பற்றி
    சுருக்கமாக சொல்ல

    வழக்கம் போல் இந்த பாடலினை
    வலமாக சுழல விடுகிறோம்

    சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடு தான்
    சுத்தம் என்பதை மறந்தால் நாடும் குப்பைமேடு தான்

    உலாவும் நிலாவில் வெள்ளை அடிக்கலாம்
    எங்கேயும் எப்போதும் சுத்தப்படுத்தலாம்

    குளிக்கும் அறைக்குள் கெட்ட கெட்ட வார்த்தைகள்
    படிக்கும் மனத்தில் என்ன ஆசைகள்
    இதற்கா இதற்கா கல்வி கற்கும் சாலைகள்

    படிக்கும் படிப்பு நல்ல பண்பை ஊட்டலாம்
    ஒழுங்காய் நடக்கும் பாதை காட்டலாம்
    உனக்கும் எனக்கும் ஆடு மாடு தேவல
    உனை போல் எனை போல் கெட்டு போகல
    நல்லவங்க கூட இப்போ கெட்ட வார்த்தை ஆனது

    ReplyDelete
  5. குருவிற்கு வணக்கம்
    அருமையன கவிதை
    நன்றி.

    ReplyDelete
  6. இந்த
    வெல்லக்கட்டி வெடலக்குட்டி
    சேலக்கட்டி வந்ததடி
    சிரிச்சி பேசும் சித்திரமே
    என்னை
    சிறையெடுக்க வந்தாயாடி!

    சுப்புரத்தினதாசன், தன் எளிய வார்தைகளில் அழகழகான பாடல்களைத்தந்து தனி இடம் பிடித்தார். இன்று அவரின் கவிதையை தந்த ஐயா அவர்களுக்கு நன்றிகள்.

    ஆங்கிலேயரின் குடும்ப கலசாரம் முகம் சுளிக்க வைத்தாலும் அவர்களின் ஓங்கு புகழுக்கு இந்த ஒழுக்க கலாசாரம் தான் அடிப்படை.


    ReplyDelete
  7. நல்லதொரு காதல் கவிதை. அருமையான சொல்லாட்சி. எது எதற்கு எதைத் தந்தாள் என்பதை கவிஞர் மிகவும் நல்ல கவித்துவத்தோடு சொல்லிருக்கிறார். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் தன் காதலருக்கு, காதல் திருட்டுக்கு தேதி வேறு தருகிறாள்.

    எங்களது பெற்றோர் பார்த்து நடத்தி வைத்த திருமணம்தான். யாரையும் காதலித்ததும் இல்லை. யாராலும் காதலிக்கப் பட்டதும் இல்லை. இருந்தாலும் காதல் கவிதைகளை ரசிக்கக் கூடாதா என்ன.

    படத்தில் உள்ளது நட்பிற்கு வள்ளுவர் சொன்ன இலக்கணங்களையெல்லாம் தாண்டிய நட்பு போலும்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com