Astrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ! பகுதி 8
ஜோதிடத் தொடர் - பகுதி 8
இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள் அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
------------------------------------------------------------------------------------------------
திருவாதிரை நட்சத்திரம் (மிதுன ராசி)
இது ராகுவின் நட்சத்திரம்.
1. அஸ்விணி
2. பரணி
3. கார்த்திகை
4. மிருகசீரிஷம்
5. புனர்பூசம்
6. உத்திரம்
7. சித்திரை
8. விசாகம்
9. மூலம்
10. பூராடம்
11. உத்திராடம்
12. அவிட்டம்
13. பூரட்டாதி
14. உத்திரட்டாதி
15. ரேவதி
ஆகிய 15 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய் நட்சத்திரங்களாகும்.
இதில் அனுஷம், கேட்டை, விசாகம் 4ஆம் பாதம் ஆகியவை விருச்சிக ராசிக்கு உரியதாகும். ஜோதிடர்கள் மிதுனத்திற்கு ஆறாம் இடம் விருச்சிகம். விருச்சிக ராசிக்கு எட்டாம் வீடு மிதுனம்.. அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றை விலக்கிவிடுவது நல்லது.
அதே நிலைப்பாடு உத்திராடம் 2, 3 & 4 பாதங்கள், மற்றும் திருவோணம், அவிட்டம் 1 & 2ஆம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்களுக்கு உண்டு. அவைகள் மகர ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும்.. மிதுனத்திற்கு மகரம் எட்டாம் வீடு. மகரத்திற்கு மிதுனம் ஆறாம் வீடு. (8/6 position to each rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது.
அதே நிலைப்பாடு கார்த்திகை 2, 3, 4 ஆம் பாதங்கள், ரோஹிணி, மிருகசீரிஷம் 1, 2 ஆம் பாதங்களுக்கும் உண்டு. அவைகள் ரிஷப ராசிக்கு உரிய நட்சத்திரங்களாகும். மிதுனத்திற்கு ரிஷபம் பன்னிரெண்டாம் வீடு. ரிஷபத்திற்கு மிதுனம் இரண்டாம் வீடு. (1/12 position to the rasi) வேண்டாம் என்பார்கள். ஆகவே அவற்றையும் விலக்கிவிடுவது நல்லது.
ஆக மொத்தத்தில் 7 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.
ரோஹிணி, ஹஸ்தம், திருவோணம், சுவாதி, சதயம் ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றை விலக்கி விடுவது நல்லது.
பெண்ணிற்கும், பையனுக்கும் திருவாதிரை ஒரே நட்சத்திரமாக இருந்தால், ஏக நட்சத்திரப் பொருத்தம் உண்டு.
புனர்பூசம், பூசம், ஆயில்யம், அனுஷம் ஆகிய 4 நட்சத்திரங்களும் பொருந்தாது!
மகம், பூரம் ஆகிய 2 நட்சத்திரங்களும் மத்திய பொருத்தம். சராசரி!
-------------------------------------------------------------------------------
(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++
Good morning. Present sir.
ReplyDeleteகுருவிற்கு வணக்கம்
ReplyDeleteநன்றி
respected sir,
ReplyDeletegood morning
lakshminagaraj
வணக்கம் ஐயா
ReplyDeleteவணக்கம் ஐயா, நானும் என் மனைவியும் திருவாதிரை தான், தங்கள் பதிவை பார்த்தவுடன் மகிழ்ச்சி அடைந்தேன். நன்றி .....
ReplyDelete/////Blogger KJ said...
ReplyDeleteGood morning. Present sir./////
உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி!
/////Blogger Udhaya Kumar said...
ReplyDeleteகுருவிற்கு வணக்கம்
நன்றி/////
உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி!
////Blogger Lakhsmi Nagaraj said...
ReplyDeleterespected sir,
good morning
lakshminagaraj/////
உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி!
////Blogger geetha lakshmi said...
ReplyDeleteவணக்கம் ஐயா////
உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி!
/////Blogger Gk.Murugan said...
ReplyDeleteவணக்கம் ஐயா, நானும் என் மனைவியும் திருவாதிரை தான், தங்கள் பதிவை பார்த்தவுடன் மகிழ்ச்சி அடைந்தேன். நன்றி ////.
நல்லது. உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!