11.10.12

Astrology வலியைப் போக்க என்ன (டா) செய்ய வேண்டும்?

Astrology வலியைப் போக்க என்ன (டா) செய்ய வேண்டும்?

பேராசிரியர் பாடத்தைத் துவங்கினார்

அவருடைய கையில் ஒரு கண்ணாடி டம்ளர். அதாவது குவளை. தண்ணீரால் அது நிரப்பப்பெற்றிருந்தது.

பேராசியர் டம்ளரை உயர்த்திப் பிடித்தவர், கேட்டார்:

   “இந்தக் குவ்ளையை இப்ப்டியே சில நிமிடங்களுக்குக் கையில் பிடித்திருந்தால் என்ன ஆகும்?”

   “நத்திங்” (ஒன்றும் ஆகாது) என்று கோரசாகப் பதில் வந்தது

   “ஓக்கே” என்று சொன்னவர் தொடர்ந்து கேட்டார்: “சரி, இதையே நான் ஒரு மணி நேரம் தொடர்ந்து பிடித்துக்கொண்டிருந்தால் என்ன ஆகும்?”

ஒரு மாணவன் எழுந்து சொன்னான்: “உங்கள் கை வலிக்கத் துவங்கும்!”

“நீ சொல்வது சரி!” என்ற பேராசிரியர், தொடர்ந்து கேட்டார்....: “அதே வேலையை ஒரு நாள் முழுக்கச் செய்தால் என்ன ஆகும்?”

“கைச் சதையில் அதீதமான அழுத்தமும், வலியும் உண்டாகும். உங்கள் கையில் நடுக்கம் ஏற்படலாம். உங்களை மருத்துவமனையில் சேர்க்க வேண்டியதாயிருக்கும்” என்று இன்னொருவன் எழுந்து சொல்ல வகுப்பில் அனைவரும் சிரிக்கத் துவங்கினார்கள்

“எக்ஸலெண்ட்” என்று ஒப்புக்கொண்ட பேராசிரியர் அடுத்துக் கேட்டார்: “இது ந்டக்கும்போது, அதாவது இதைச் செய்யும்போது டம்ளரின் எடையில் மாற்றம் ஏற்படுமா?”

“இல்லை” என்று அனைவரும் ஒரே குரலில் பதிலளித்தார்கள்

“பிறகு, அதாவது எடையில் மாற்றம் இல்லை என்னும் நிலையில், கையில் ஏற்படும் வலிக்கும், கைச் சதையில் ஏற்படும் அழுத்ததிற்கும் என்ன காரணம்?

("Then what caused the arm ache & the muscle stress?")

சரியான பதிலைச் சொல்லத் தெரியாமல் அனைவரும் மெளனமாக இருந்தார்கள்

அடுத்துப் பேராசிரியர் கேட்டார்: “சரி இப்போது வலியில் இருந்து விடுபட வேண்டுமென்றால், நான் என்ன செய்ய வேண்டும்?”

சட்டென்று ஒருவன் எழுந்து பதில் சொன்னான்: “டம்ளரைக் கீழே வைத்து விடுங்கள்”

“அதுதான் சரியான முடிவு” என்று சொன்னவர், தொடர்ந்து பேசினார்.

வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் பிரச்சினைகளையும் அப்படித்தான் கையாள வேண்டும். பிரச்சினைகளுக்கும் அதைத்தான் தீர்வாகக் கொள்ள வேண்டும்.. பிரச்சினைகளைச் சில நிமிடங்கள் மனதிற்குள் வைத்திருக்கலாம். அதில் தவறில்லை. ஆனால் அதையே தொடர்ந்து மனதிற்குள் வைத்திருந்தீர்கள் என்றால அது மனதிற்குக் கடுமையான வலியைக் கொடுக்கத் துவங்கி விடும்! உங்களால் வேறு எந்த வேலையிலும் ஈடுபட முடியாத நிலை ஏற்படும்! உங்களை அது முடக்கிப் போட்டுவிடும்

உண்மையில் நம்மால் உடனடியாக எதுவும் செய்ய முடியாது. அதற்குரிய நேரமும், காலமும் வரும்போது அதைப் பார்த்துக்கொள்ளலாம். அப்போது அதைத் தீர்வுக்குக் கொண்டு வரலாம் என்று தற்காலிகமாக அதைக் கீழே வைத்துவிட வேண்டும். அதாவது ஒதுக்கி வைத்துவிட்டு அல்லது மறந்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்க வேண்டும்

ஆகவே கையில் எந்தக் குவளையையும் தாங்கிக் பிடித்துகொண்டிருக்காமல் கீழே வைத்து விட்டு, ஒவ்வொரு நாளையும் புதிதாகத் துவங்குங்கள்!
-------------------------------------------------------------
   “வாத்தி (யார்)  எதற்காக இந்தக் கதை ?”

    “ஜோதிடப் பாடம் படிக்கும் பலரும் இதைததான் செய்கிறீர்கள். ஜோதிடத்தில் ஒரு ஒவ்வாத விதியைப் (rule) படித்து விட்டு, அதை உங்கள் ஜாதகத்துடன் இணைத்துப் பார்ப்பதுடன் அல்லாம்ல கவலைப்பட வேறு துவங்கி விடுகிறீர்கள். அதைப் பற்றிய தெளிவு பிறக்க என்ன செய்யலாம், யாரைக் கேட்கலாம் என்று குழம்ப வேறு ஆரம்பித்துவிடுகிறீர்கள். அவ்வாறு செய்யாதீர்கள். Put the rules down. படித்தவற்றைக் கீழே வைத்து விடுங்கள். அல்லது அதைக் குறித்துவைத்துக் கொண்டு, அடுத்து வரும் கேள்வி பதில் வகுப்பின்போது (session) அதைக் கேட்டுத் தெளிவு பெறலாம் என்று முடிவு செய்து விட்டு நிம்மதியாக இருங்கள்.”
------------------------------------------------------------
நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பிய கதை. கதை ஆங்கிலத்தில் இருந்தது. மொழியாக்கம் மட்டும் அடியேனுடைய கைவண்ணம்.

அன்புடன்
வாத்தியார்

--------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

20 comments:

  1. Good morning sir. Nice info which everyone required.

    ReplyDelete
  2. எதுவந்த போதும் இறைவன் இருக்கிறான்
    எதுகிடைத்த போதும் இறைவனேக் கொடுத்தான்
    கொடுத்தவனே எடுத்துக் கொண்டாலும் சரி
    எடுத்தவனேக் கொடுத்து விட்டாலும் சரியே!

    விதைத்ததை அறுவடை செய்கிறோம் அதை
    விதித்ததாக புரிந்து கொண்டு நாம் எப்போதும்
    படைத்தவன் அவனையே நோகிறோம் -வந்து
    உறுத்துவது யாதென்று உண்மைப்புரிந்தால் நன்று!

    இறுகப்பிடிக்க வேண்டியது இறைவனின் பாதமே அன்றி
    இடர்களையும் இன்னல்களையும் அல்லவே!!! என்று...

    அருமையான ஒரு கருத்தை கூறியது இன்றையப் பதிவில் வந்தக் கதை.

    ReplyDelete
  3. படித்த கதை..
    படிக்க தந்த கதை..

    வந்த துன்பம் எதுவென்றாலும்
    வாடி நின்றால் ஓடிவிடாது என்ற

    கண்ணதாசனின் வரிகளுக்கு
    கட்டியம் சொல்லி வந்த கதை

    பற்று எதன் மீதிருந்தாலும்
    பற்றிக் கொள்வது துன்பமே..

    "யாதெனின் யாதெனின்" என சொன்ன வள்ளுவமே
    "பற்றற்றான் பற்றினை பற்றுக" என
    அறிவுரையும் சொல்கிறதே..

    வள்ளுவத்தை கடைப்பிடித்து
    வான்வரை உயர வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. அன்பு தோழர் சிங்கை செல்வர்
    ஆலாசியம் அவர்களின் பின் ஊட்டம்

    எளிமையான வரிகளில்
    எண்ணங்களை பிரதிபலித்தது..

    இலட்சங்களை இழந்தாலும்
    இலட்சியத்தை இழக்காதே என சொன்ன

    சிங்கையாரே.. நன்றிகள்..
    சிரம் தாழ்ந்த வணக்கங்களுடன்

    ReplyDelete
  5. நல்ல கருத்து.
    ஒருவன் எப்போது தான் படிக்கும் ஜோதிட விதிகள்
    அனைத்தையும் தன் ஜாதகத்திற்கு
    மட்டும் பொருத்திப் பார்த்து பார்த்து கவலைப்பட்டு நின்று விடாமல்
    இருக்கிறானோ அவனே ஒரு தலை சிறந்த ஜோதிடன்.
    இதுவே முதல் அடிப்படை தகுதி.

    ReplyDelete
  6. காலத்திற்கு உகந்த அறிவுரை. எல்லோரும் மனதில் இருத்திக் கொள்வார்களாக.

    இடையறாத பணியின் காரணமாக இப்போதெல்லாம் வாரத்திற்கு 2 அல்லது 3 தினங்கள்தான் வகுப்பறைக்கு வர முடிகிறது. இருப்பினும் வக்கிரமாகி (அதாவது பின்னோக்கிச் சென்று) ஏற்கனவே வெளிவந்த பாடங்களை விடாமல் படித்து வருகிறேன்

    ReplyDelete
  7. தன்னம்பிகை தரும் கதை வாழ்க ஆசிரியர்

    ReplyDelete
  8. காலையிலிருந்து சுமார் 10 - 20 முறை நண்பனுக்கு கால் செய்து இன்று எனது மனனிலை குறித்து பேசவேண்டுமென்று ஒரே உந்தல். சரியாக தகுந்த தொடர்புள்ள பாடத்தை ஆசிரியரவர்கள் இன்று பதிவேற்றியுள்ளீர்கள், நன்றி.

    ஸில விசயங்கள் காவேரி ப்ரச்சனையைப் போல அவ்வளவு எளிதில் வைத்து விட்டு வேறு வேலையை பார்க்க முடிவதில்லை.

    ReplyDelete
  9. ////Blogger KJ said...
    Good morning sir. Nice info which everyone required.////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. /////Blogger ஜி ஆலாசியம் said...
    எதுவந்த போதும் இறைவன் இருக்கிறான்
    எதுகிடைத்த போதும் இறைவனேக் கொடுத்தான்
    கொடுத்தவனே எடுத்துக் கொண்டாலும் சரி
    எடுத்தவனேக் கொடுத்து விட்டாலும் சரியே!
    விதைத்ததை அறுவடை செய்கிறோம் அதை
    விதித்ததாக புரிந்து கொண்டு நாம் எப்போதும்
    படைத்தவன் அவனையே நோகிறோம் -வந்து
    உறுத்துவது யாதென்று உண்மைப்புரிந்தால் நன்று!
    இறுகப்பிடிக்க வேண்டியது இறைவனின் பாதமே அன்றி
    இடர்களையும் இன்னல்களையும் அல்லவே!!! என்று...
    அருமையான ஒரு கருத்தை கூறியது இன்றையப் பதிவில் வந்தக் கதை.////

    உங்களுடைய மனம் நிறைவான, சிறப்பான பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  11. /////Blogger அய்யர் said...
    படித்த கதை..
    படிக்க தந்த கதை..
    வந்த துன்பம் எதுவென்றாலும்
    வாடி நின்றால் ஓடிவிடாது என்ற
    கண்ணதாசனின் வரிகளுக்கு
    கட்டியம் சொல்லி வந்த கதை
    பற்று எதன் மீதிருந்தாலும்
    பற்றிக் கொள்வது துன்பமே..
    "யாதெனின் யாதெனின்" என சொன்ன வள்ளுவமே
    "பற்றற்றான் பற்றினை பற்றுக" என
    அறிவுரையும் சொல்கிறதே..
    வள்ளுவத்தை கடைப்பிடித்து
    வான்வரை உயர வாழ்த்துக்கள்./////.

    நல்லது. உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  12. ////Blogger அய்யர் said...
    அன்பு தோழர் சிங்கை செல்வர்
    ஆலாசியம் அவர்களின் பின் ஊட்டம்
    எளிமையான வரிகளில்
    எண்ணங்களை பிரதிபலித்தது..
    இலட்சங்களை இழந்தாலும்
    இலட்சியத்தை இழக்காதே என சொன்ன
    சிங்கையாரே.. நன்றிகள்..
    சிரம் தாழ்ந்த வணக்கங்களுடன்////

    அவருடைய சார்பில் சொல்லிவிடுகிறேன். உங்களுடைய வணக்கங்களுக்கு நன்றி!

    ReplyDelete
  13. /////Blogger ஸ்ரவாணி said...
    நல்ல கருத்து.
    ஒருவன் எப்போது தான் படிக்கும் ஜோதிட விதிகள்
    அனைத்தையும் தன் ஜாதகத்திற்கு
    மட்டும் பொருத்திப் பார்த்து பார்த்து கவலைப்பட்டு நின்று விடாமல்
    இருக்கிறானோ அவனே ஒரு தலை சிறந்த ஜோதிடன்.
    இதுவே முதல் அடிப்படை தகுதி./////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  14. ////Blogger ananth said...
    காலத்திற்கு உகந்த அறிவுரை. எல்லோரும் மனதில் இருத்திக் கொள்வார்களாக.
    இடையறாத பணியின் காரணமாக இப்போதெல்லாம் வாரத்திற்கு 2 அல்லது 3 தினங்கள்தான் வகுப்பறைக்கு வர முடிகிறது. இருப்பினும் வக்கிரமாகி (அதாவது பின்னோக்கிச் சென்று) ஏற்கனவே வெளிவந்த பாடங்களை விடாமல் படித்து வருகிறேன்/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  15. ///Blogger Astro Krishnakanth said..
    தன்னம்பிகை தரும் கதை வாழ்க ஆசிரியர்/////

    நல்லது. உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  16. /////Blogger zing zang said...
    காலையிலிருந்து சுமார் 10 - 20 முறை நண்பனுக்கு கால் செய்து இன்று எனது மனனிலை குறித்து பேசவேண்டுமென்று ஒரே உந்தல். சரியாக தகுந்த தொடர்புள்ள பாடத்தை ஆசிரியரவர்கள் இன்று பதிவேற்றியுள்ளீர்கள், நன்றி.
    ஸில விசயங்கள் காவேரி ப்ரச்சனையைப் போல அவ்வளவு எளிதில் வைத்து விட்டு வேறு வேலையை பார்க்க முடிவதில்லை./////

    எல்லாவற்றிற்கும் மனம்தான் காரணம். மனதை வசப்படுத்துங்கள். எல்லாம் சாத்தியமாகும்!

    ReplyDelete
  17. எக்சலன்ட். அனைவருக்கும்தேவையான ஒரு ஆலோசனை கரு இன்றைய ஆக்கம்.

    நம்முடைய செயல்பாட்டை தீர்மானிப்பது நம் மனம். அது கொஞ்சம் சந்தோசம் அடையும் போது அடுத்தடுத்து நாமே அடுத்தவருக்கு சந்தோசம் தரும்படி நடந்து கொள்கிறோம். அதுவே மனம் வருந்தும் படி நடந்து கொண்டால் நாமும் முடங்கி, அடுத்தவரையும் முடக்கி விடுகிறோம். நாம் இந்த தருணத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டும்? தூக்கி போட்டு விட்டு போய்க்கொண்டே இருக்கவேண்டும்.இது நமக்கும் தெரிந்ததுதான். ஆனால் செய்கிறோமா என்றால் இல்லை.செய்யாததால் உண்டாகும் பின் விளைவை மனதில் பட்டென்று பதிய அதை நடைமுறை வசனங்களோடு சொன்னது சிறப்பு.

    மனதில் படும்படி ஒரு கிளாஸ்+ கிலாஸ் சேர்த்து ஒரு பர்ஸ்ட் கிளாஸ் கதையை நம் கிளாசில் தந்த வாத்தியாருக்கும் அதனை அனுப்பிய நண்பருக்கும் நன்றிகள்

    ReplyDelete
  18. தண்ணீரில் விழுந்து தத்தளித்த பெண்ணைத் தொட்டுத் தூக்கிய சன்னியாசி, அதைப் பார்த்துக் கொண்டிருந்த சன்னியாசி.
    "நான் அவளை அங்கேயே வைத்துவிட்டு வந்துவிட்டேனே; நீர் அவளை இன்னுமா மனத்தில் சுமந்து கொண்டிருக்கிறீர்?"

    பிரச்சனையை அங்கேயே விட்டு விட வேண்டும்.'சரிதான் போ'என்று மனத்திற்குள் சொல்லிக் கொண்டு எல்லாவற்றையும் உடனுக்குடன் தள்ளிவிடுவேன்.

    ReplyDelete
  19. ///kmr.krishnan said...
    தண்ணீரில் விழுந்து தத்தளித்த பெண்ணைத் தொட்டுத் தூக்கிய சன்னியாசி, அதைப் பார்த்துக் கொண்டிருந்த சன்னியாசி.///

    சன்யாசி என்று யாரை சொல்கின்றீர்..
    சாயம் போன(காவி) உடையை

    காரின் கதவுகளை தி(து)றந்ததாலேயே
    காவி அணிந்து துறந்தவர் என்றால் எப்படி

    காவிக்கும் நமது கலாச்சார மரபல்ல
    கருத்தில் சொன்னால் எள்ளு வெடிக்கும்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com