Devotional கலியுக வரதன் காட்சியளிப்பது எங்கே?
பக்தி மலர்
இன்றைய பக்தி மலரை இளம் பாடகி மஹதியின் குரல் அலங்கரிக்கிறது. கேட்டு மகிழுங்கள்
-------------------------------------------------------
கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய்க்
காட்சியளிப்பது பழனியிலே
(கலியுக)
மலைமகள் அருளிய சக்திவேல் முருகன்
மரகத வண்ணனாம் திருமால் மருகன்
(கலியுக)
கண்முதற் கடவுளின் கண்மணியாய் வந்தான்
கார்த்திகைப் பெண்டிர் அணைப்பில் வளர்ந்தான்
விண்ணவர் குறையெல்லாம் நொடியில் களைந்தான்
வேண்டுவோர் வேண்டுமுன் வரமெல்லாம் தந்தான்
(கலியுக)
கானொளி
Our sincere thanks to the person who uploaded this video clipping
++++++++++++++++++++++++++++++++++++++
2
கவிதைச் சோலை: காலவிளையாட்டில் களித்தவர் கொடுக்கும் கணக்கு!
ஐந்தொகை
நீலமணி விழியிலே நீந்தினேன் அப்போதென்
நிழலையான் காண வில்லை;
நிகரில்லாச் செல்வத்தில் ஆடினேன் அப்போதென்
நெஞ்சைநான் காண வில்லை;
காலவிளை யாட்டிலே களித்தநான் முடிவினைக்
கருத்திலே கண்ட தில்லை;
கைகால் விழுந்துபோய்க் கண்பஞ் சடைந்ததும்
கணக்கினைப் புரட்டு கின்றேன்;
சால்வோர் சக்திஇச் சகத்திலே உண்டென்று
சத்தியம் செய்கின் றேனே;
தமிழிலொரு கவிமகனைச் சிறுகூடற் பட்டியில்
தந்தமலை யரசி தாயே!
-கவியரர் கண்ணதாசன்வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++===
Arumaiyana, bakthi paadall vangaathudan mutall padithen nantri
ReplyDeleteசெவிக்கினிதான சுகமான பாடல் கேட்கக்கொடுத்ததற்கு நன்றி ஐயா!பாடியுள்ளவர் மகதி.
ReplyDeleteகவியரசரின் அங்கலாய்ப்பும் அழகிய கவிதை.
அடுத்த இரண்டு நாட்கள் பதிவு இல்லை என்பது, பழகிவிட்ட என் போன்றவர்களுக்கு கடினமாக உள்ளது.மீண்டும் ஞாயிறு மலர் வெளியாகும் நாளை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்.
இன்று என் தந்தையாரின் 105வது ஆங்கிலப் பிறந்த நாள். அவரைப்பற்றி
இங்கே படிக்கவும்.
http://gandhiashramkrishnan.blogspot.in/
காந்தி ஜயந்தி நெருங்கி வரும் நேரத்தில் ஒரு காந்தீய நிர்மாண ஊழியரை அனைவரும் அறிந்து கொள்ளலாமே!
காலை வணக்கங்கள், ஐயா.
ReplyDelete"கண்ணுதற்க்கடவுளின் கண்மணியை வந்தாய்" என்று இருக்க வேண்டும் என நினைக்கிறேன்; அதாவது நுதலிலே (நெற்றியிலே) கண்ணையுடைய கடவுளின் (சிவனின்) கண்ணில் இருந்து நெற்றிக்கண்ணின் தீப்பொறியில் இருந்து) வந்தாய் என்ற பொருளின்........
ReplyDeleteதவறாய் இருப்பின் திருத்தவும்,
நன்றிகளுடன்
புவனேஷ்
குருவிற்கு வணக்கம்
ReplyDeleteபக்தி பாடல் அருமையகயிருந்த்து
நன்றி
நல்லப் பதிவு....
ReplyDeleteபகிர்விற்கு நன்றிகள் ஐயா!
உடலில் தெம்பும், கையில் காசும் இருக்கும் போது எவற்றை நாம் நினைக்கவில்லையோ, அவற்றை உடல் சோர்ந்து, கைகள் வரண்டு போன நிலையில் நினைந்து வருந்துவது இயல்பு. அதனை எத்தனை அழகாக கவியரசர் சொல்லுகிறார். மேலும், இந்தக் கருத்தைச் சொல்லும் அருகதை அவருக்குத்தான் இருக்கிறது. அவர் வாழ்க்கை இந்தத் தத்துவங்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருந்தது. கம்பன், பாரதி போன்ற ஒரு மாபெரும் கவிஞன் இன்னமும் சரியாகப் பாராட்டப் படாமல் போய்விட்டார். காரணம் அரசியல். வாழ்க அந்தக் கவிக்கோவின் புகழ்!
ReplyDeleteகாசு ... தெம்பு..
ReplyDeleteகணக்கு பார்த்து வேண்டாம் ஒரு வம்பு
யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
இந்த குறளை சொல்லும் போது மேல் உதடும் கீழ் உதடும் ஒட்டாது
என்ற சிந்தனையுடன்
வழக்கமான வருகை பதிவு
மாற்றங்கள் தான் வாழ்க்கை..
ReplyDeleteமாற பழகி விட்டால் மற்றது எளிதே
பாதையெல்லாம் மாறிவரும்
பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்து கொண்டால்
மயக்கம் தெளிந்துவிடும்
கவியரசரின் வரிகளை
கட்டாயம் கொள்வோம் நினைவில்
Migavum arumai ayya Nandri
ReplyDeleteமிக அருமையான பாடல்கள் பதிவில் தந்தமைக்கு நன்றி. மஹதியின் அழகான குரலில் பெரியசாமித் தூரன் அவர்களின் அற்புதப் பாடல் மின்னுகிறது.
ReplyDeleteகவியரசரின் பாடலைப் பற்றிச் சொல்ல வார்த்தைகளில்லை. அருமை. மிக்க நன்றி.
Guru Vanakkam,
ReplyDelete"KALIYUGA VARADHAN" will be in my meomory for long. This is one of the item My daughter danced for her Arangetram.
RAMADU.
////Blogger krishnababuvasudevan said...
ReplyDeleteArumaiyana, bakthi paadall vangaathudan mutall padithen nantri////
முதலில் படித்து, உடனே பின்னூட்டம் இட்டமைக்கு நன்றி நண்பரே!
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteசெவிக்கினிதான சுகமான பாடல் கேட்கக்கொடுத்ததற்கு நன்றி ஐயா!பாடியுள்ளவர் மகதி.
கவியரசரின் அங்கலாய்ப்பும் அழகிய கவிதை.
அடுத்த இரண்டு நாட்கள் பதிவு இல்லை என்பது, பழகிவிட்ட என் போன்றவர்களுக்கு கடினமாக உள்ளது.மீண்டும் ஞாயிறு மலர்
வெளியாகும் நாளை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்.
இன்று என் தந்தையாரின் 105வது ஆங்கிலப் பிறந்த நாள். அவரைப்பற்றி
இங்கே படிக்கவும்.
http://gandhiashramkrishnan.blogspot.in/
காந்தி ஜயந்தி நெருங்கி வரும் நேரத்தில் ஒரு காந்தீய நிர்மாண ஊழியரை அனைவரும் அறிந்து கொள்ளலாமே////!
காலம் ஒருநாள் மாறும் பொறுத்திருங்கள் கிருஷ்ணன் சார்!
///Blogger Bhuvaneshwar said...
ReplyDeleteகாலை வணக்கங்கள், ஐயா.////
உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி!
/////Blogger Bhuvaneshwar said..
ReplyDelete"கண்ணுதற்க்கடவுளின் கண்மணியை வந்தாய்" என்று இருக்க வேண்டும் என நினைக்கிறேன்; அதாவது நுதலிலே (நெற்றியிலே)
கண்ணையுடைய கடவுளின் (சிவனின்) கண்ணில் இருந்து நெற்றிக்கண்ணின் தீப்பொறியில் இருந்து) வந்தாய் என்ற பொருளின்........
தவறாய் இருப்பின் திருத்தவும்,
நன்றிகளுடன்
புவனேஷ்/////
அவருடைய கவிதை நான் எழுதிய வடிவில்தான் (பதிவில் கொடுத்துள்ள வடிவில்) உள்ளது. நீங்கள் புதிதாக ஏதாவது பொருள் கொண்டால் அது உங்கள் விருப்பம்!
/////Blogger Udhaya Kumar said...
ReplyDeleteகுருவிற்கு வணக்கம்
பக்தி பாடல் அருமையாகயிருந்தது
நன்றி////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
////Blogger ஜி ஆலாசியம் said...
ReplyDeleteநல்ல பதிவு....
பகிர்விற்கு நன்றிகள் ஐயா!////
உங்களின் பாராட்டிற்கு நன்றி ஆலாசியம்!
/////Blogger Thanjavooraan said...
ReplyDeleteஉடலில் தெம்பும், கையில் காசும் இருக்கும் போது எவற்றை நாம் நினைக்கவில்லையோ, அவற்றை உடல் சோர்ந்து, கைகள் வரண்டு
போன நிலையில் நினைந்து வருந்துவது இயல்பு. அதனை எத்தனை அழகாக கவியரசர் சொல்லுகிறார். மேலும், இந்தக் கருத்தைச்
சொல்லும் அருகதை அவருக்குத்தான் இருக்கிறது. அவர் வாழ்க்கை இந்தத் தத்துவங்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருந்தது.
கம்பன், பாரதி போன்ற ஒரு மாபெரும் கவிஞன் இன்னமும் சரியாகப் பாராட்டப் படாமல் போய்விட்டார். காரணம் அரசியல். வாழ்க அந்தக்
கவிக்கோவின் புகழ்!/////
நீங்கள் சொல்வதுபோல அவருக்கு முழு அங்கீகாரம் கிடைக்காமல் போனதற்கு அரசியல் குறுக்கீடுகள்தான் காரணம். அதனால் ஒன்றும்
குறைந்துவிடவில்லை. உங்களைபோல என்னைப்போல லட்சக் கணக்கான ரசிகர்கள் அவருக்கு இருக்கிறார்கள். அது போதும்!
உங்களின் சிறப்பான பின்னூட்டத்திற்கு நன்றி கோபாலன் சார்!
/////Blogger அய்யர் said...
ReplyDeleteகாசு ... தெம்பு..
கணக்கு பார்த்து வேண்டாம் ஒரு வம்பு
யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
இந்த குறளை சொல்லும் போது மேல் உதடும் கீழ் உதடும் ஒட்டாது
என்ற சிந்தனையுடன்
வழக்கமான வருகை பதிவு/////
உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி விசுவநாதன்!
/////Blogger அய்யர் said...
ReplyDeleteமாற்றங்கள் தான் வாழ்க்கை..
மாற பழகி விட்டால் மற்றது எளிதே
பாதையெல்லாம் மாறிவரும்
பயணம் முடிந்துவிடும்
மாறுவதை புரிந்து கொண்டால்
மயக்கம் தெளிந்துவிடும்
கவியரசரின் வரிகளை
கட்டாயம் கொள்வோம் நினைவில்////
ஆஹா நல்லது. நன்றி விசுவநாதன்!
/////Blogger vprasana kumar said...
ReplyDeleteMigavum arumai ayya Nandri/////
நல்லது. நன்றி நண்பரே!
/////Blogger Parvathy Ramachandran said...
ReplyDeleteமிக அருமையான பாடல்கள் பதிவில் தந்தமைக்கு நன்றி. மஹதியின் அழகான குரலில் பெரியசாமித் தூரன் அவர்களின் அற்புதப் பாடல்
மின்னுகிறது.
கவியரசரின் பாடலைப் பற்றிச் சொல்ல வார்த்தைகளில்லை. அருமை. மிக்க நன்றி.////
பெரியசாமித் தூரன் அவர்களை நினைவிற்குக் கொண்டுவந்து பின்னூட்டமிட்ட மேன்மைக்கு நன்றி சகோதரி!
/////Blogger RAMADU Family said...
ReplyDeleteGuru Vanakkam,
"KALIYUGA VARADHAN" will be in my meomory for long. This is one of the item My daughter danced for her Arangetram.
RAMADU./////
உங்களுடைய தகவலுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே!
வாத்தியார் ஐயா வணக்கம்.
ReplyDeleteவரவர மாமியார் கழுதை போல ஆனாளாம் அதனை போல தான் எனது நிலைமை இருக்கு இந்த போக்கிற்கு மன்னிக்கவும் . எதனிலும் ஒரு ஈடுபாடு இல்லையே ஐயா?
/////Blogger Maaya kanna said...
ReplyDeleteவாத்தியார் ஐயா வணக்கம்.
வரவர மாமியார் கழுதை போல ஆனாளாம் அதனை போல தான் எனது நிலைமை இருக்கு இந்த போக்கிற்கு மன்னிக்கவும் . எதனிலும் ஒரு ஈடுபாடு இல்லையே ஐயா?////
எல்லாவற்றிற்கும் மனம்தான் காரணம். மனதைக் கட்டிபோடுங்கள்!
Nanbaraa enramyigu naan manavan thaan manavanee enna urimayigaa aazgallam
ReplyDelete