4.9.12

கவிதைச்சோலை: சங்கத் தமிழ்ப் புலவர் ஒக்கூர் மாசாத்தியாரும் கவியரசர் கண்ணதாசனும்!



அழகப்பா பல்கலைக் கழக நிறுவனர் டாக்டர் அழகப்ப செட்டியார்


அண்ணாமலை பல்கலைக் கழக நிறுவனர் ராஜாசர் அண்ணாமல செட்டியார்
கவிதைச்சோலை: சங்கத் தமிழ்ப் புலவர் ஒக்கூர் மாசாத்தியாரும் கவியரசர் கண்ணதாசனும்!

ஒவ்வொருவருக்கும், தாங்கள் பிறந்த மண்ணின் மேல் ஒரு தீராத காதல் இருக்கும். சாதாரண மனிதனுக்கே அது இருக்கும் எனும்போது
கவியரசர் கண்ணதாசனுக்கு இருக்காதா? தான் பிறந்த மண்ணைப் பற்றி அவர் பாடிய பாடலை  நீங்கள் கண்டு மகிழ, இன்று அதை வலையில் ஏற்றியுள்ளேன்

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------------------
வாழ்வாங்கு வாழ்ந்த குலம்
கவியரசர் கண்ணதாசன்
-------------------------------------------

சிந்துவெளி புகழ்காத்து
சீர்காத்து திறம்காத்து
தென்னாடு வந்தகுலமே

திருவுடைய சோழனவன்
செம்மாண் புகார்நகரில்
திருக்கோவில் கொண்டகுலமே

வந்தவழி மறவாது
வாய்மைநெறி தவறாது
வாழ்வாங்கு வாழ்ந்தகுலமே

வாணிபமும் மதநெறியும்
வளர்ந்தோங்கி நாள்தோறும்
வளமாக நின்றகுலமே

எந்தமிழர் நாடெங்கும்
இறைபணியே பெரிதென்று
எந்நாளும் செய்தகுலமே

என்னுடைய குலமென்பேன்
எல்லாமும் நீயறிவாய்
ஏற்றுக்கொள் தமிழர்நிலமே

காவிரியின் பெருமாட்டி
கவின்மதுரை நகர்தன்னைக்
கனல்சூழ வைத்தகதையும்

கண்ணகி என்றால் இந்த
மண்ணே அடிபணிய
கற்போடு வாழ்ந்தநிலையும்

நாவசையும் போதெல்லாம்
நாடசையும்படி நின்ற
நல்வளையா பதியின்கதையும்

நாடியவர்ப் பணியாது
மணிமேகலை என்ற
நன்மங்கை வாழ்ந்தகதையும்

காவியங்கள் ஐந்தினினும்
மூன்றினிலே தலைதூக்கிக்
காட்டுவதும் எங்கள்குலமே

கடுகளவுதான் சொன்னேன்
மலையளவு புகழுண்டு
காண்பாய்நீ தமிழர்நிலமே

கடலோடி மலைநாடும்
பிறநாடும் சென்றார்கள்
கப்பல் வராதபோதே

காற்றினிலே பாய்போட்டு
கடவுளையே துணைவைத்து
கலங்களெல்லாம் சென்றபோதே

நடமாடும் சிவமாக
திருநீறும் சந்தனமும்
நதிபோலப் பூசும்உடலே

‘நமசிவாயம்’ என்று
நாள்தோறும் சொல்லுமவர்
நயமான சிவந்தஇதழே

தடம்பார்த்து நடைபோடும்
தனிப்பண்பு மாறாத
தகைமிக்க தெங்கள்குலமே

தந்தகரம் அவராகப்
பெற்றவளும் நீதானே
சாட்சிசொல் தமிழர்நிலமே

ஆறாயிரம் பேர்கள்
கற்கின்ற கழகத்தை
அண்ணாமலை நாட்டினான்

அவனோடு போட்டியிட
அத்தனையையும் தான்தந்து
அழகப்பன் முடிசூட்டினான்

ஒராயிரம் தடவை
செட்டிமகன் நானென்று
உலகெங்கும் மார்தட்டினான்

உலகாளும் விஞ்ஞான
மருத்துவமும் கற்றவர்கள்
உண்டென்று பேர்காட்டினான்.

சேராத செல்வத்தைச்
சேர்த்தாலும் நல்லவழி
செலவாகும் எங்கள்குலமே

செந்திருவை சரஸ்வதியை
கேட்டேனும் உண்மைநிலை
தெரிந்துகொள் தமிழர்நிலமே

சாதிவெறி கொண்டேன்போல்
கவிதையிதை எழுதினேன்
தவறல்ல உண்மைசொன்னேன்

தர்மத்தைப் பாடுவது
சாதிவெறி யாகாது
தமிழுக்கே நன்மைஎன்பேன்

ஓதியொரு மொழிசொன்ன
ஒக்கூர்மா சாத்தியுமென்
உன்னதப் பாட்டிஆவாள்

உயர்ந்தசீத் தலைச்சாத்தன்
ஒருவகையில் வணிகனென்
உத்தமப் பாட்டனாவான்

ஆதிமுதல் தமிழிலே
அவர்வந்த வழியிலே
அடியேனைப் பெற்றகுலமே

அளவிலே சிறிதேனும்
செயலிலே பெரிதாக
அறிவாய்நீ தமிழர்நிலமே
- கவிதையாக்கம் கவியரசர் கண்ணதாசன்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

17 comments:

  1. கல்விப் பணிக்காகவும், ஆலயத் திருப்பணிக்காகவும் நகரத்தார் செலவிட்டுள்ள தொகை ஓர் அரசாங்த்தால் கூட செலவிட முடியாத‌து.


    கவியரசரின் குலப்பெருமை கொண்டாடும் மன நிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.அவ்வாறுதான் ஒவ்வொருவரும் தங்கள் முன்னோர்களைப் பற்றி அறிந்து, தெரிந்து அவர்கள் வழிப்படி/நெறிப்படி நாமும் வாழுதல் வேண்டும் என்ற எண்ணத்தைப் பெற வேண்டும்.


    என் தன்னம்பிக்கை உங்களின் தன்னம்பிக்கையை எந்தவகையிலும் தாழ்த்தாது. மர‌புகளும்,முன்னோர்களின் மேல் உள்ள பக்தியுமே ஒரு குழுவை வழி நடத்திச்செல்லும்.


    அரசியல் காரண‌களுக்காக சாதி மோதல்களையும், அதே அரசியல் காரணங்களுக்காக‌ சாதியைப் பேணுவ‌திலும் க‌வ‌ன‌ம் செலுத்தும் சுய‌ ந‌ல‌ வாதிக‌ளைத் த‌விர்த்துவிட்டால் எல்லா குழுவின‌ரும் ஒற்றுமையாக‌ வாழ‌ முடியும்.ப‌திவுக்கு ந‌ன்றி ஐயா!

    ReplyDelete
  2. அய்யா காலை வணக்கம் . பொதுப்பணிகளில் நகராத்தார் பணி அளவிடமுடியாது

    ReplyDelete
  3. கண்ணதாசனாரின் கவிதைகள் தனது குலத்தின் சமூக பங்களிப்பையும், உயர்வாய் உயர்ந்த எண்ணமும் செய்கையும் கொண்ட குடும்பங்களாய் வாழ்ந்ததை பெருமை பட அறியாதோருக்கு தெரியச் செய்கிறது. இது அந்த குடும்பங்களிலே பிறந்த குழந்தைகளுக்கு காலகாலமாக சொல்லப் படும் வரலாற்று பெருமையாகவும் இருக்கலாம். அப்படி சொல்வது மிகவும் அவசியமானதும் கூட... இத்தனை உயர்ந்த குலமிது அதிலே பிறந்த நீ எத்தனை உயரம் போக வேண்டும் என்று முடிவு செய்து கொள் என்பதாகவும் அமையும் அல்லவா!

    இப்போது நமது காலத்து வள்ளலைப் பற்றிய எனது கருத்தையும் கூறுகிறேன்.

    கடையேழு வள்ளல்கள் என்பர்
    தடை இல்லாக் கல்வியை
    கடைக்கோடி மக்களும் பெற
    உடைமை பொருள் ஆவியனைத்தையும்
    கொடையாகத்தந்த வள்ளலை மறப்போமோ!

    வாடகைக்கு நிலம் பிடித்து
    வாத்தியார் பலருக்கு சம்பளம் கொடுத்து
    வாழும் மக்களுக்கு கல்வி கொடுக்க
    வாழ்நாளெல்லாம் பாடுபட்ட சீமை
    பட்டதாரி சீர்மிகு அழகப்பர்!

    மருது மன்னர்கள் மகிழ்ந்து
    உறுதியோடு தந்த நிலத்தை
    விலையோடு பெறுகிறேன் மன்னரே!
    வேண்டாமென்று மறுக்காதீர் என்றுகூறி
    பொருள் தந்து பெற்ற நிலத்தில்
    புண்ணிய நிலையம் அமைத்த
    பொன்மனச் செம்மல் அவர்!

    அத்தோடு விட்டாரா! இடமும் இடத்தோடு
    பொருளும் கொட்டிக் கொடுத்து
    விஞ்ஞானக் கழகம் அமைக்க
    வேண்டிய வசதி செய்து கொடுத்து
    நேருவை அழைத்து திறப்பு விழாசெய்ய
    நேர்த்தியான வள்ளல் அவர்
    அழகப்பா என்பதை உலகறியும்!

    கண்டங்கள் ஐந்தும் வியாபித்து இருக்கும் தமிழனில் பல்லாயிரம் பேர் இந்த வள்ளலை நன்றியோடு அன்றாடம் போற்றுவர் என்பதில் ஐயமில்லை.

    ''.............. அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டல்
    அவையாவினும் புண்ணியம் கோடி
    ஆங்கோர் ஏழைக்கு எழுத்தரிவித்தால்'' என்பான் பாரதி...

    எத்தனையாயிரம் புண்ணியங்களை பெற்ற பெருமகனார் வள்ளல் அழகப்பர்!!!

    ReplyDelete
  4. கண்டங்கள் ஏழில் ஆறு என வியாபித்து இருக்கும் தமிழனில் பல்லாயிரம் பேர் இந்த வள்ளலை நன்றியோடு அன்றாடம் போற்றுவர் என்பதில் ஐயமில்லை.

    ReplyDelete
  5. குருவிற்கு வணக்கம்
    நல்ல பதிவு

    நன்றி

    ReplyDelete
  6. ஆனந்த முருகனின் சமீபகால போஸ்டில் இன்று வந்தது டாப் 1.

    ReplyDelete
  7. கவியரசருக்கு நம் பாராட்டைவிட வணக்கத்தையே செலுத்துவோம்.

    அவரின் இந்த கவிதையில் ஒருவரி "கடுகளவுதான் சொன்னேன்" கல்வி வேந்தர்களை அவர் புகழும் இந்த வரிகள், கவியரசருக்கே பொருந்தும். அவர் எழுதியதே கடுகளவுதான். காலம் மட்டும் கை கொடுத்திருந்தால் கடலளவை மிஞ்சியிருப்பார். ஒவ்வொருவரியையும் ருசிக்க வைத்துள்ளார்.

    நாவசையும் போதெல்லாம்
    நாடசையும்படி நின்ற- இந்த இரன்டே வரியில் அவர்களின் ஆளுமை கொடிகட்டி பறந்ததை ரத்தின சுருக்கமாக்கி உள்ளார்.

    ஆறாயிரம் பேர்கள்
    கற்கின்ற கழகத்தை
    அண்ணாமலை நாட்டினான்

    அவனோடு போட்டியிட
    அத்தனையும் தான்தந்து
    அழகப்பன் முடிசூட்டினான்

    ஒரு புத்தகம் போட்டு எழுத வேண்டியதை சில வரிகளிலேயே சொல்லிவிட்டார் கவியரசர்.

    அண்ணாமலை பல்கலைகழகம் எங்கள் ஊரில்தான் இருக்கிறது. பல்கலை கழகம் மட்டுமில்லாது பள்ளிக்கூடமும், மருத்துவக்கல்லூரியும் மக்களுக்காக நிருவப்பட்டதே. இந்த மருத்துவமனை செய்யும் இலவச சேவை மகத்தானது. எங்கள் பக்க அனைத்து டாக்டர்களும் அவர்களால் முடியாத போது அவர்கள் சொல்வது அண்ணாமலை ஒ.பி க்கு கொண்டு போ என்பதே. அந்த ஏழைகளின் வாழ்த்தால் இன்னும் எத்தனை காலமானாலும் அண்ணாமலையின் புகழ் மங்காது.

    ReplyDelete
  8. Blogger kmr.krishnan said...
    கல்விப் பணிக்காகவும், ஆலயத் திருப்பணிக்காகவும் நகரத்தார் செலவிட்டுள்ள தொகை ஓர் அரசாங்த்தால் கூட செலவிட முடியாத‌து.
    கவியரசரின் குலப்பெருமை கொண்டாடும் மன நிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.அவ்வாறுதான் ஒவ்வொருவரும் தங்கள் முன்னோர்களைப் பற்றி அறிந்து, தெரிந்து அவர்கள் வழிப்படி/நெறிப்படி நாமும் வாழுதல் வேண்டும் என்ற எண்ணத்தைப் பெற வேண்டும்.
    என் தன்னம்பிக்கை உங்களின் தன்னம்பிக்கையை எந்தவகையிலும் தாழ்த்தாது. மர‌புகளும்,முன்னோர்களின் மேல் உள்ள பக்தியுமே ஒரு குழுவை வழி நடத்திச்செல்லும்.
    அரசியல் காரண‌களுக்காக சாதி மோதல்களையும், அதே அரசியல் காரணங்களுக்காக‌ சாதியைப் பேணுவ‌திலும் க‌வ‌ன‌ம் செலுத்தும் சுய‌ ந‌ல‌ வாதிக‌ளைத் த‌விர்த்துவிட்டால் எல்லா குழுவின‌ரும் ஒற்றுமையாக‌ வாழ‌ முடியும்.ப‌திவுக்கு ந‌ன்றி ஐயா!////

    உங்களுடைய சிறப்பான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  9. ////Blogger Gnanam Sekar said...
    அய்யா காலை வணக்கம் . பொதுப்பணிகளில் நகராத்தார் பணி அளவிடமுடியாது////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  10. ////Blogger ஜி ஆலாசியம் said...
    கண்ணதாசனாரின் கவிதைகள் தனது குலத்தின் சமூக பங்களிப்பையும், உயர்வாய் உயர்ந்த எண்ணமும் செய்கையும் கொண்ட குடும்பங்களாய் வாழ்ந்ததை பெருமை பட அறியாதோருக்கு தெரியச் செய்கிறது. இது அந்த குடும்பங்களிலே பிறந்த குழந்தைகளுக்கு காலகாலமாக சொல்லப் படும் வரலாற்று பெருமையாகவும் இருக்கலாம். அப்படி சொல்வது மிகவும் அவசியமானதும் கூட... இத்தனை உயர்ந்த குலமிது அதிலே பிறந்த நீ எத்தனை உயரம் போக வேண்டும் என்று முடிவு செய்து கொள் என்பதாகவும் அமையும் அல்லவா!
    இப்போது நமது காலத்து வள்ளலைப் பற்றிய எனது கருத்தையும் கூறுகிறேன்.
    கடையேழு வள்ளல்கள் என்பர்
    தடை இல்லாக் கல்வியை
    கடைக்கோடி மக்களும் பெற
    உடைமை பொருள் ஆவியனைத்தையும்
    கொடையாகத்தந்த வள்ளலை மறப்போமோ!
    வாடகைக்கு நிலம் பிடித்து
    வாத்தியார் பலருக்கு சம்பளம் கொடுத்து
    வாழும் மக்களுக்கு கல்வி கொடுக்க
    வாழ்நாளெல்லாம் பாடுபட்ட சீமை
    பட்டதாரி சீர்மிகு அழகப்பர்!
    மருது மன்னர்கள் மகிழ்ந்து
    உறுதியோடு தந்த நிலத்தை
    விலையோடு பெறுகிறேன் மன்னரே!
    வேண்டாமென்று மறுக்காதீர் என்றுகூறி
    பொருள் தந்து பெற்ற நிலத்தில்
    புண்ணிய நிலையம் அமைத்த
    பொன்மனச் செம்மல் அவர்!
    அத்தோடு விட்டாரா! இடமும் இடத்தோடு
    பொருளும் கொட்டிக் கொடுத்து
    விஞ்ஞானக் கழகம் அமைக்க
    வேண்டிய வசதி செய்து கொடுத்து
    நேருவை அழைத்து திறப்பு விழாசெய்ய
    நேர்த்தியான வள்ளல் அவர்
    அழகப்பா என்பதை உலகறியும்!
    கண்டங்கள் ஐந்தும் வியாபித்து இருக்கும் தமிழனில் பல்லாயிரம் பேர் இந்த வள்ளலை நன்றியோடு அன்றாடம் போற்றுவர் என்பதில் ஐயமில்லை.
    ''.............. அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டல்
    அவையாவினும் புண்ணியம் கோடி
    ஆங்கோர் ஏழைக்கு எழுத்தரிவித்தால்'' என்பான் பாரதி...
    எத்தனையாயிரம் புண்ணியங்களை பெற்ற பெருமகனார் வள்ளல் அழகப்பர்!!!/////

    அவரைப் பற்றிய பல செய்திகள் இணையத்தில் உள்ளன. படித்துப் பார்த்தால், அவருடைய மேன்மை தெரிய வரும்! உங்களுடைய நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  11. ////Blogger ஜி ஆலாசியம் said...
    கண்டங்கள் ஏழில் ஆறு என வியாபித்து இருக்கும் தமிழனில் பல்லாயிரம் பேர் இந்த வள்ளலை நன்றியோடு அன்றாடம் போற்றுவர் என்பதில் ஐயமில்லை.////

    ராமநாதபுர மாவட்ட மக்கள் எல்லாம் கல்வியில் மேன்மையுற்றதற்கு அழகப்பரின் கல்விப்பணி தலையானது. அவர்கள் அனைவரும் அவருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளார்கள்.

    ReplyDelete
  12. Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    நல்ல பதிவு
    நன்றி

    உங்களின் வணக்கத்திற்கும் வருகைப் பதிவிற்கும் நன்றி!

    ReplyDelete
  13. ///Blogger thanusu said...
    ஆனந்த முருகனின் சமீபகால போஸ்டில் இன்று வந்தது டாப் 1.////

    உண்மைதான். நன்றி!

    ReplyDelete
  14. ////Blogger thanusu said...
    கவியரசருக்கு நம் பாராட்டைவிட வணக்கத்தையே செலுத்துவோம்.
    அவரின் இந்த கவிதையில் ஒருவரி "கடுகளவுதான் சொன்னேன்" கல்வி வேந்தர்களை அவர் புகழும் இந்த வரிகள், கவியரசருக்கே பொருந்தும். அவர் எழுதியதே கடுகளவுதான். காலம் மட்டும் கை கொடுத்திருந்தால் கடலளவை மிஞ்சியிருப்பார். ஒவ்வொருவரியையும் ருசிக்க வைத்துள்ளார்.
    நாவசையும் போதெல்லாம்
    நாடசையும்படி நின்ற- இந்த இரன்டே வரியில் அவர்களின் ஆளுமை கொடிகட்டி பறந்ததை ரத்தின சுருக்கமாக்கி உள்ளார்.
    ஆறாயிரம் பேர்கள்
    கற்கின்ற கழகத்தை
    அண்ணாமலை நாட்டினான்
    அவனோடு போட்டியிட
    அத்தனையும் தான்தந்து
    அழகப்பன் முடிசூட்டினான்
    ஒரு புத்தகம் போட்டு எழுத வேண்டியதை சில வரிகளிலேயே சொல்லிவிட்டார் கவியரசர்.
    அண்ணாமலை பல்கலைகழகம் எங்கள் ஊரில்தான் இருக்கிறது. பல்கலை கழகம் மட்டுமில்லாது பள்ளிக்கூடமும், மருத்துவக்கல்லூரியும் மக்களுக்காக நிருவப்பட்டதே. இந்த மருத்துவமனை செய்யும் இலவச சேவை மகத்தானது. எங்கள் பக்க அனைத்து டாக்டர்களும் அவர்களால் முடியாத போது அவர்கள் சொல்வது அண்ணாமலை ஒ.பி க்கு கொண்டு போ என்பதே. அந்த ஏழைகளின் வாழ்த்தால் இன்னும் எத்தனை காலமானாலும் அண்ணாமலையின் புகழ் மங்காது.////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி தனுசு!!

    ReplyDelete
  15. SP.VR. SUBBAIYA said...
    ///Blogger thanusu said...
    ஆனந்த முருகனின் சமீபகால போஸ்டில் இன்று வந்தது டாப் 1.////

    உண்மைதான். நன்றி!

    thanks Mr.Thanusu,nantri vathi(yar) ayya.


    ReplyDelete
  16. காவியங்கள் ஐந்தினினும்
    மூன்றினிலே தலைதூக்கிக்
    காட்டுவதும் எங்கள்குலமே
    ஐயா, எனக்கொரு ஐயவினா அது என்ன மூன்றினிலே மற்றதெல்லாம் புரிந்தது இதுமாத்திரம் புரியவில்லை

    ReplyDelete
  17. ////Blogger நடராஜன் said...
    காவியங்கள் ஐந்தினினும்
    மூன்றினிலே தலைதூக்கிக்
    காட்டுவதும் எங்கள்குலமே
    ஐயா, எனக்கொரு ஐயவினா அது என்ன மூன்றினிலே மற்றதெல்லாம் புரிந்தது இதுமாத்திரம் புரியவில்லை////

    கண்ணகி என்றால் இந்த
    மண்ணே அடிபணிய
    கற்போடு வாழ்ந்தநிலையும்

    நாவசையும் போதெல்லாம்
    நாடசையும்படி நின்ற
    நல்வளையா பதியின்கதையும்

    நாடியவர்ப் பணியாது
    மணிமேகலை என்ற
    நன்மங்கை வாழ்ந்தகதையும்

    காவியங்கள் ஐந்தினினும்
    மூன்றினிலே தலைதூக்கிக்
    காட்டுவதும் எங்கள்குலமே

    இந்தக் காவிய நாயகர்கள் மூவரும் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று நகரத்தார் வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன. அதைத்தான் கவியரசர் கண்ணதாசனும் குறிப்பிடுகின்றார்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com