5.7.12

கவிதைச் சோலை: வருடுவார் கைக்கு வளைகின்ற தெய்வம்!

கவிதைச் சோலை: வருடுவார் கைக்கு வளைகின்ற தெய்வம்!

திருடனும் அரகரா சிவசிவா என்றுதான்
      திருநீறு பூசு கின்றான்
சீட்டாடும் மனிதனும் தெய்வத்தின் பேர்சொல்லிச்
      சீட்டைப் புரட்டு கின்றான்
முரடனும் அரிவாளில் காரியம் பார்த்தபின்
      முதல்வனை வணங்கு கின்றான்
முச்சந்தி மங்கையும் முக்காடு நீக்கையில்
      முருகனைக் கூவு கின்றாள்
வருடுவார் கைக்கெல்லாம் வளைகின்ற தெய்வம்என்
      வாழ்க்கையைக் காக்க வில்லையே!
மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்
      மதுரைமீ னாட்சி உமையே!
                                - கவியரசர் கண்ணதாசன்

வாழ்க வளமுடன்!

19 comments:

  1. மறைத்தல் மற்றும் அருளல் என்று தொழிலாற்றும் செய்தியையும்

    ஒன்றாய் இருத்தல்
    உடனாய் இருத்தல்
    வேறாய் இருத்தல்
    என்ற பேரருளின் தன்மையினையும்

    தெளிவாய் சொல்லி
    நல்வழி சாலை அமைத்தது
    இன்றைய (கவிதை)சோலை

    வணக்கமும்
    வாழ்த்துக்களும்

    ReplyDelete
  2. ஐயா, முன்பு பல்சுவைப் பகுதியில் தமிழோடு விளையாடினீர்கள்.
    அதில் கண்ணதாசனின் அவிவேக சிந்தாமணியில் இடம் பெற்ற இருபது பாடல்களையும் நீங்கள் அறிமுகப்படுத்தியே நான் அறிந்தேன்.
    நல்லவரும் தீயவரும் வணங்கும் கடவுள் அல்லவா? என்று கண்ணதாசனைப்போல கடவுளை உரிமையுடன் நக்கலடிக்க யாரால் முடியும்?

    "மனம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா
    நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா
    இனம் பார்த்து எனைச் சேர்க்க மறந்தாய் கண்ணா - நல்ல
    இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா"
    என்ற பாடலில் அது போல கடவுளைக் கடிந்து கொள்வதாக எழுதியிருப்பார்.

    "மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்
    மதுரை மீனாட்சி உமையே!"
    என்று முடியும் இந்தப் பாடல்களில் ஒரு பாடலில் வாயாலும், நடிப்பாலும் வாழ்ந்தவர்களையும் வெற்றிபெற வைத்து, ஊர்பேர் தெரியாத ஆளையும் வெற்றிபெற செய்து உழைப்பால் உயர்ந்த உத்தமரை தோல்வி பெறச் செய்தாய் எனவும் கிண்டலடித்த பாடலும் நன்றாக இருக்கும்.

    தலைப்பில் உள்ள சிந்திக்க வைக்கும் அறிவுரைப் படமும் நன்றே.
    நல்ல பாடல்களை தொடர்ந்து நினைவூட்டுகிறீர்கள், நன்றி.

    ReplyDelete
  3. ஆகா! அருமை!

    இந்தியனின் இயல்பு இது வென்று சுவாமி விவேகானந்தர் மேலைநாட்டுப் பேச்சில் கூறியிருப்பார்.

    செய்யும் தொழில் தர்மம் இல்லாத திருடர்களும் கூட எங்கள் நாட்டிலே தெய்வத்தை தொழுத பின்பே தான் தனது திருட்டு வேலையை கூட ஆரம்பிப்பார். அத்தனை தூரம் எங்களது தெய்வீக உணர்வு எங்கும் யாவரிலும் வியாபித்து இருக்கிறது என்று.

    அந்தக் கருத்தையே நமது கண்ணதாசனும் கவியாய் பொழிந்துள்ளான்.

    கண்ணதாசனின் இந்த கவிதை என்னை புதுக் கவிதையாக்கம் செய்யச் செய்துள்ளது.

    திருடனுக்கும் குருடனுக்கும் பாவம்; தீரா
    பெருநோய் கண்ட பாவிக்கும் - செல்வம்
    இருப்போருக்கும் இல்லாதவருக்கும்; தெய்வம்
    இருக்கிறது என்போருக்கும் இல்லவே இல்லையென
    மறுப்போருக்கும் அவர்தம் மனமெங்கும் பரவி
    நிற்பதுவும் நீதானே பராபரமே!

    கவிரசின் கவிதை முரசை -இப்
    புவிதனில் பரப்பும் கண்ணதாசனுக்கு தாசரே
    குவிந்தக் கரம் கொண்டு உமை - நான்
    கோவிந்தர் மகன் வணங்குகின்றேன்!

    பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  4. ஒரு முறை என் தகப்பனாரை என் அலுவலக நண்பரும் முன்னவருமான வெங்கடராமன் என்பார் ஒரு சித்தர் வந்திருப்பதாகக் கூறி அழைத்துச் சென்றார்.
    எங்கள் இல்லத்தில் மாட்டியிருந்த மகான்களின் படங்கள் அவரை அவ்வாறு தூண்டியிருக்க வேண்டும்.

    அந்த சித்தர் தஞ்சை அசோகா லாட்ஜில் தங்கி இருந்தார்.'சாது சன்னியாசிகளைக் கண்டால் சாஷ்டாங்கமாக வணங்கவும், ரிஷிமூலம் பார்க்கக் கூடாது' என்ற கொள்கையும் உடைய அப்பா அந்த சித்தர் என்று சொல்லப்பட்டவரின் முன்னர் வணங்கி அமர்ந்தார். அங்கே சுமார் 20 பேர் கையில் நோட்டுப் புத்தகம் பால் பாயின்ட் பேனாவுடன் அமர்ந்து இருந்தனராம்.
    சித்தர் கூறுவதையெல்லாம் குறிப்பு எடுத்து வந்தனராம்.'அடடா, நம்மிடம் குறிப்பெடுக்கப் பொருட்கள் இல்லையே' என்று வருந்தினாராம் அப்பா. சிறிது நேரத்தில் எல்லாம் அந்த வருத்தம் அப்பாவுக்கு மறைந்துவிட்டதாம்.

    சித்தர் கூறியது ஒன்றும் தத்துவ முத்துக்கள் அல்ல. ரேசில் எந்தக் குதிரை வெற்றி இலக்கைத் தொடும் என்று குறிப்புக் கொடுத்துக் கொண்டு இருந்தாராம்.

    எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால் இந்த நாட்டில் நல்லவர்கள் தீயவர்கள் எல்லோரும் நம்பிக்கையாளர்களே.இறைவன் தீயவர்களின் பிரார்த்தனையையும் நிறை வேற்றுவாரா? சொல்லப் போனால் தீயவர்களின் பிரார்த்தனை சீக்கிரம் நிறைவேற்றப்படலாம். ஏனேனில் அவர்களாக பாவக்குழியில் தெரிந்தே விழ நினைப்பதிலும், இறைவனின் விளையாட்டுப் பொருட்களாக மீண்டும் மீண்டும் பிறவி எடுக்க ஒப்புதல் அளிப்பவர்கள் அவர்கள். எனவேதான் சில சமயம் அயோக்கியர்கள் நம் கண் முன் சிறப்பான வாழ்க்கை வாழக் காண்கிறோம். தீயவர்களுக்கு மீண்டும் மீண்டும் அவர்களுடைய‌ வினைக்கேற்ற பிறவியைக் கொடுக்கும் இறைவன்,நல்லவர்களுக்கு பிறவிப் பெருங்கடலைத் தாண்ட வழிகாட்டுகிறான்.

    எளிமையான அழகான கவிதை.பதிவுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. பாட்டு நல்லாதேன் இருக்கு.
    பெரியவங்கல்லாம் கருத்து சொல்லறப்போ நான் ஊடாலே பூந்துக்க கூடாதுங்கறதுனால நான் அப்பாலே வகுப்பறைல ஒரு ஓரமா ஒதுங்கி நின்னுக்கறேன்......
    அதுக்கு முன்னாலே வாத்தியாருக்கு ஒரு வணக்கம் வச்சிடறேன்! குட் மார்னிங் சார்! பிரசன்ட் சார்!

    ReplyDelete
  7. ///எனது சிறுகதைத் தொகுதிகள் 4ஆம் தொகுதி வெளியீட்டு விழா உள்ளது!///

    அதாவது செட்டிநாட்டு மண்வாசனைக் கதைகள் 4ஆம் தொகுதி ....அப்படித்தானே ஐயா.
    மேலும் விபரம் தர முடியுமா?
    வாழ்த்துக்கள்!!!!!!

    ReplyDelete
  8. குருவிற்கு வணக்கம்
    நல்ல அருமையன பாட்டு
    கவியரசுவின்
    நல்ல தலைப்பு

    நன்றி

    ReplyDelete
  9. நான்மாடக் கூடலின் நாயகியாம் மீனாட்சி
    நல்லாரும் பொல்லாரும் எல்லாரும் மக்களென‌
    எண்ணுகிறாள் ஆதலினால் கண்ணெனவே காக்கின்றாள்
    மண்ணுலகில் வாழுகின்ற மனிதருள் பேதமில்லை
    கண்நுதற் கடவுளின் ஆட்சியில் அநீதியில்லை.
    கடவுளின் பெயர் சொன்னாலும் கயவர்தம் செயல்களை
    காலமெல்லாம் வாழ்ந்திருக்கும் தர்மத்தாய் கணக்கெடுப்பாள்
    புண்ணியம் செய்வோரை புவி மீட்டுக் காத்திடுவாள்
    பண்ணிய பாவமெல்லாம் படுகுழியென உணரவைப்பாள்
    சிரித்திருந்து செய்த பாவம் அழுதழுது போகுமென‌
    ஆன்றோர்கள் சொல்லி வைத்த அமுதுரையில் பொய்யில்லை.
    கண்ணனுக்கு தாசனவர் கவிதையிலே பொதிந்திருக்கும்
    உள்ளுறையை உணர்ந்திட்டால் உலகினிலே துன்பமில்லை.

    அருமையான கவிதை தந்தமைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  10. Guru Vanakkam,

    Thanks for the post. It is always a pleasure to hear kannadasan.

    Thanks to Aalasiyam and Iyer also for their post.

    Regards
    Ramadu.

    ReplyDelete
  11. //////Blogger அய்யர் said...
    மறைத்தல் மற்றும் அருளல் என்று தொழிலாற்றும் செய்தியையும்
    ஒன்றாய் இருத்தல்
    உடனாய் இருத்தல்
    வேறாய் இருத்தல்
    என்ற பேரருளின் தன்மையினையும்
    தெளிவாய் சொல்லி
    நல்வழி சாலை அமைத்தது
    இன்றைய (கவிதை)சோலை
    வணக்கமும்
    வாழ்த்துக்களும்/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  12. Blogger தேமொழி said...
    ஐயா, முன்பு பல்சுவைப் பகுதியில் தமிழோடு விளையாடினீர்கள்.
    அதில் கண்ணதாசனின் அவிவேக சிந்தாமணியில் இடம் பெற்ற இருபது பாடல்களையும் நீங்கள் அறிமுகப்படுத்தியே நான் அறிந்தேன்.
    நல்லவரும் தீயவரும் வணங்கும் கடவுள் அல்லவா? என்று கண்ணதாசனைப்போல கடவுளை உரிமையுடன் நக்கலடிக்க யாரால் முடியும்?
    "மனம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா
    நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா
    இனம் பார்த்து எனைச் சேர்க்க மறந்தாய் கண்ணா - நல்ல
    இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா"
    என்ற பாடலில் அது போல கடவுளைக் கடிந்து கொள்வதாக எழுதியிருப்பார்.
    "மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்
    மதுரை மீனாட்சி உமையே!"
    என்று முடியும் இந்தப் பாடல்களில் ஒரு பாடலில் வாயாலும், நடிப்பாலும் வாழ்ந்தவர்களையும் வெற்றிபெற வைத்து, ஊர்பேர் தெரியாத ஆளையும் வெற்றிபெற செய்து உழைப்பால் உயர்ந்த உத்தமரை தோல்வி பெறச் செய்தாய் எனவும் கிண்டலடித்த பாடலும் நன்றாக இருக்கும்.
    தலைப்பில் உள்ள சிந்திக்க வைக்கும் அறிவுரைப் படமும் நன்றே.
    நல்ல பாடல்களை தொடர்ந்து நினைவூட்டுகிறீர்கள், நன்றி./////

    வெறும் கிண்டல் என்று கணக்கிட முடியாது. சமூகப் பார்வையும், அதனால் ஏற்பட்ட தாக்கங்களும், கூடவே ஒரு வருத்தமும் கலந்திருக்கும்!

    ReplyDelete
  13. //////Blogger ஜி ஆலாசியம் said...
    ஆகா! அருமை!
    இந்தியனின் இயல்பு இது வென்று சுவாமி விவேகானந்தர் மேலைநாட்டுப் பேச்சில் கூறியிருப்பார்.
    செய்யும் தொழில் தர்மம் இல்லாத திருடர்களும் கூட எங்கள் நாட்டிலே தெய்வத்தை தொழுத பின்பே தான் தனது திருட்டு வேலையை கூட ஆரம்பிப்பார். அத்தனை தூரம் எங்களது தெய்வீக உணர்வு எங்கும் யாவரிலும் வியாபித்து இருக்கிறது என்று.
    அந்தக் கருத்தையே நமது கண்ணதாசனும் கவியாய் பொழிந்துள்ளான்.
    கண்ணதாசனின் இந்த கவிதை என்னை புதுக் கவிதையாக்கம் செய்யச் செய்துள்ளது.
    திருடனுக்கும் குருடனுக்கும் பாவம்; தீரா
    பெருநோய் கண்ட பாவிக்கும் - செல்வம்
    இருப்போருக்கும் இல்லாதவருக்கும்; தெய்வம்
    இருக்கிறது என்போருக்கும் இல்லவே இல்லையென
    மறுப்போருக்கும் அவர்தம் மனமெங்கும் பரவி
    நிற்பதுவும் நீதானே பராபரமே!
    கவிரசின் கவிதை முரசை -இப்
    புவிதனில் பரப்பும் கண்ணதாசனுக்கு தாசரே
    குவிந்தக் கரம் கொண்டு உமை - நான்
    கோவிந்தர் மகன் வணங்குகின்றேன்!
    பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!/////

    நெகிழ்ச்சியான உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!!

    ReplyDelete
  14. /////Blogger kmr.krishnan said...
    ஒரு முறை என் தகப்பனாரை என் அலுவலக நண்பரும் முன்னவருமான வெங்கடராமன் என்பார் ஒரு சித்தர் வந்திருப்பதாகக் கூறி அழைத்துச் சென்றார்.
    எங்கள் இல்லத்தில் மாட்டியிருந்த மகான்களின் படங்கள் அவரை அவ்வாறு தூண்டியிருக்க வேண்டும்.
    அந்த சித்தர் தஞ்சை அசோகா லாட்ஜில் தங்கி இருந்தார்.'சாது சன்னியாசிகளைக் கண்டால் சாஷ்டாங்கமாக வணங்கவும், ரிஷிமூலம் பார்க்கக் கூடாது' என்ற கொள்கையும் உடைய அப்பா அந்த சித்தர் என்று சொல்லப்பட்டவரின் முன்னர் வணங்கி அமர்ந்தார். அங்கே சுமார் 20 பேர் கையில் நோட்டுப் புத்தகம் பால் பாயின்ட் பேனாவுடன் அமர்ந்து இருந்தனராம்.
    சித்தர் கூறுவதையெல்லாம் குறிப்பு எடுத்து வந்தனராம்.'அடடா, நம்மிடம் குறிப்பெடுக்கப் பொருட்கள் இல்லையே' என்று வருந்தினாராம் அப்பா. சிறிது நேரத்தில் எல்லாம் அந்த வருத்தம் அப்பாவுக்கு மறைந்துவிட்டதாம்.
    சித்தர் கூறியது ஒன்றும் தத்துவ முத்துக்கள் அல்ல. ரேசில் எந்தக் குதிரை வெற்றி இலக்கைத் தொடும் என்று குறிப்புக் கொடுத்துக் கொண்டு இருந்தாராம்.
    எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால் இந்த நாட்டில் நல்லவர்கள் தீயவர்கள் எல்லோரும் நம்பிக்கையாளர்களே.இறைவன் தீயவர்களின் பிரார்த்தனையையும் நிறை வேற்றுவாரா? சொல்லப் போனால் தீயவர்களின் பிரார்த்தனை சீக்கிரம் நிறைவேற்றப்படலாம். ஏனேனில் அவர்களாக பாவக்குழியில் தெரிந்தே விழ நினைப்பதிலும், இறைவனின் விளையாட்டுப் பொருட்களாக மீண்டும் மீண்டும் பிறவி எடுக்க ஒப்புதல் அளிப்பவர்கள் அவர்கள். எனவேதான் சில சமயம் அயோக்கியர்கள் நம் கண் முன் சிறப்பான வாழ்க்கை வாழக் காண்கிறோம். தீயவர்களுக்கு மீண்டும் மீண்டும் அவர்களுடைய‌ வினைக்கேற்ற பிறவியைக் கொடுக்கும் இறைவன்,நல்லவர்களுக்கு பிறவிப் பெருங்கடலைத் தாண்ட வழிகாட்டுகிறான்.
    எளிமையான அழகான கவிதை.பதிவுக்கு நன்றி ஐயா!/////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  15. /////Blogger Bhuvaneshwar said...
    பாட்டு நல்லாதேன் இருக்கு.
    பெரியவங்கல்லாம் கருத்து சொல்லறப்போ நான் ஊடாலே பூந்துக்க கூடாதுங்கறதுனால நான் அப்பாலே வகுப்பறைல ஒரு ஓரமா ஒதுங்கி நின்னுக்கறேன்......
    அதுக்கு முன்னாலே வாத்தியாருக்கு ஒரு வணக்கம் வச்சிடறேன்! குட் மார்னிங் சார்! பிரசன்ட் சார்!/////

    நல்லது.உங்கள் விருப்பப்படி செய்யுங்கள் புவனேஷ்வர்!

    ReplyDelete
  16. ////Blogger தேமொழி said...
    ///எனது சிறுகதைத் தொகுதிகள் 4ஆம் தொகுதி வெளியீட்டு விழா உள்ளது!///
    அதாவது செட்டிநாட்டு மண்வாசனைக் கதைகள் 4ஆம் தொகுதி ....அப்படித்தானே ஐயா.
    மேலும் விபரம் தர முடியுமா?
    வாழ்த்துக்கள்!!!!!!/////

    ஆமாம். 15 சிறுகதைகளின் தொகுப்பு .160 பக்கங்கள். 4ஆம் பகுதி. அச்சாகிக் கொண்டிருக்கிறது. அது பற்றிய செய்தி பதிவில் வெளியாகும். பொறுத்திருங்கள் சகோதரி

    ReplyDelete
  17. /////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    நல்ல அருமையான பாட்டு
    கவியரசுவின்
    நல்ல தலைப்பு நன்றி/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  18. /////Blogger Parvathy Ramachandran said...
    நான்மாடக் கூடலின் நாயகியாம் மீனாட்சி
    நல்லாரும் பொல்லாரும் எல்லாரும் மக்களென‌
    எண்ணுகிறாள் ஆதலினால் கண்ணெனவே காக்கின்றாள்
    மண்ணுலகில் வாழுகின்ற மனிதருள் பேதமில்லை
    கண்நுதற் கடவுளின் ஆட்சியில் அநீதியில்லை.
    கடவுளின் பெயர் சொன்னாலும் கயவர்தம் செயல்களை
    காலமெல்லாம் வாழ்ந்திருக்கும் தர்மத்தாய் கணக்கெடுப்பாள்
    புண்ணியம் செய்வோரை புவி மீட்டுக் காத்திடுவாள்
    பண்ணிய பாவமெல்லாம் படுகுழியென உணரவைப்பாள்
    சிரித்திருந்து செய்த பாவம் அழுதழுது போகுமென‌
    ஆன்றோர்கள் சொல்லி வைத்த அமுதுரையில் பொய்யில்லை.
    கண்ணனுக்கு தாசனவர் கவிதையிலே பொதிந்திருக்கும்
    உள்ளுறையை உணர்ந்திட்டால் உலகினிலே துன்பமில்லை.
    அருமையான கவிதை தந்தமைக்கு நன்றி ஐயா./////

    சிறப்பான உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  19. /////Blogger RAMADU Family said...
    Guru Vanakkam,
    Thanks for the post. It is always a pleasure to hear kannadasan.
    Thanks to Aalasiyam and Iyer also for their post.(comments)
    Regards
    Ramadu.//////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி ராமுடுகாரு!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com