1.6.12

Short Story ஓட்டுநர்

-------------------------------------------------------------------------------------
 சிறுகதை: ஒட்டுநர்

அடியவன் எழுதி, மாத இதழ் ஒன்றில், சென்ற மாதம் வெளிவந்த சிறுகதை ஒன்றை நீங்கள் படித்து மகிழ இன்று வலை ஏற்றியுள்ளேன். அனைவரும் படித்து மகிழுங்கள்.
அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------
அசையும் சொத்துக்களில்
ஆத்தாளைத்தவிர
அனைத்தையும் பங்கு வைத்துக்கொண்டார்கள்
ஆத்தாளை
வைத்துக்கொள்ள
மாதங்களைப் பங்கு வைத்தார்கள்

என்ற கவிதை வரிகளைப் படித்தவுடன் சாமிநாதன் செட்டியாரின் மனதில் பெரிய தாக்கம் உண்டாயிற்று. அந்த வரிகளிடையே தொக்கி நிற்கும் உண்மையை முழுமையாக அறிந்தவர் அவர். அவருடைய பெரிய அண்ணன் வீட்டிலேயே அது நடந்திருக்கிறது.

நான்காண்டுகளுக்கு முன்பு, அதாவது 2008ஆம் ஆண்டு, சென்னை திருச்சி நெடுஞ்சாலையில், பெரம்பலூருக்கு அருகே ஒரு கனரக லாரிக்காரன் அவருடைய பெரிய அண்ணன் சென்று கொண்டிருந்த காரின் மீது அநியாயமாக மோதி, அவருடைய பெரிய அண்ணனுக்கு அந்த இடத்திலேயே சிவபதவியை வாங்கிக் கொடுத்திருந்தான்.

சிவபதவி அடைந்தவரின் மனைவியின் வேண்டுகோளுக்கிணங்க, அவருடைய பிள்ளைகள். அவர் பிறந்தசெட்டி நாட்டு கிராமத்தில் விரிவாகக் கேதத்தை நடத்தி முடித்தார்கள்  கேதம் முடியும் வரை அவருடைய பிள்ளைகள் ஒற்றுமையாக இருந்தார்கள். அதுதான் அதிசயம். அந்த அதிசயம் அதற்குப் பிறகு ஒருவாரம் கூட நீடிக்கவில்லை.

கேதம் முடிந்த அன்று, இறந்தவருடைய மகள்கள் மூவரும் தத்தம் வீடுகளுக்குச் சென்ற அடுத்த நாழிகையே, மகன்கள் மூவரும், தங்கள் தாயாரை ஓரம் கட்டிவிட்டு, அவர் கையில் இருந்த சாவிகளைப் பற்றிக்கவலைப் படாமல், தங்கள் அப்பச்சியின் அறையைத் திறந்து, பெட்டகம், பீரோக்கள் என அனைத்தையும் உடைத்துப் பார்த்த்தோடு, அங்கிருந்த அனைத்தையும் அள்ளிக்கொண்டுத் போய் தங்கள் பொறுப்பில் பத்திரப் படுத்தி வைத்துவிட்டார்கள். இடப் பத்திரங்கள், பங்குப் பத்திரங்கள், தங்க, வைர நகைகள், வெள்ளிச்சாமான்கள் என்று இருபது கோடி பெறுமானமுள்ள சொத்துக்களை எல்லாம் பெரிய ஆச்சியின் கண் எதிரிலேயே பறிபோயின. எடுத்துக்கொண்ட மகன்கள் அனைத்தையும் பதுக்கி வைத்துவிட்டார்கள்.

பெண்பிள்ளைகளுக்குப் பாத்தியப்பட்டதை எல்லாம் கொடுக்க வேண்டாமா? என்று கேட்டபோது, அவர்களுக்கெல்லாம் திருமணத்தின்போது நிறையக் கொட்டிக் கொடுத்து செய்தாகி விட்டது. இருந்தாலும் நாங்களாகப் பார்த்து ஏதாவது கொடுப்போம் - பொறுத்திருங்கள் என்று சொல்லி விட்டார்கள்.

தில்லை நகரில் இருந்த வீடு, கண்டோன்மென்ட் வில்லியம்ஸ் சாலையில் இருந்த வீடு, இப்ராஹிம் பூங்கா அருகே இருந்த வணிக வளாகம் என்று திருச்சி மாநகரில் இருந்த தங்கள் குடும்பச் சொத்துக்கள் மூன்றையும் தங்களுக்குள் பங்கு வைத்துக்கொண்டவர்கள், பேட்டவாய்த்தலை அருகில் இருந்த இருபது ஏக்கர் விவசாய பூமியை மட்டும் ஆத்தாளுக்கென்று சொல்லி - அதை விற்றுவரும் பணத்தை ஆத்தாளுக்கென்றே சொன்னவர்கள் - கடைசியில் அப்படி விற்று வந்த பணத்தை, அப்படியே தங்கள் தாயாரிடம் கொடுக்காமல், அதற்குரிய வருமானவரியைக் கட்டிவிட்டு, மீதத்தொகையை வங்கியொன்றில் வைப்பு நிதியாக, தங்கள் பெயரையும் கூட்டாகப் போட்டு வைத்ததோடு, வைப்பு நிதி ரசீதையும் தங்களிடமே வைத்துக்கொண்டு விட்டார்கள்.

பெண்பிள்ளைகளுக்கு ஆளுக்கு இரண்டு லட்ச ரூபாய் இவர்கள் கொடுக்க முன்வந்தபோது, அவர்கள் மூன்று பேரும் வாங்க மறுத்து, நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னதோடு, நீங்கள் பண்ணுகின்ற அக்கிரமத்திற்கு ராங்கியம் கருப்பர் உங்களுக்குக் கூலி கொடுப்பார் என்று சாபம் கொடுத்து விட்டுப் போய்விட்டார்கள். பேச்சு வார்த்தை இல்லாமல் போய்விட்டது.

முதலில் தங்கள் தாயாரை ஆளுக்கு நான்கு மாதம் வைத்துக்கொள்வது என்று முடிவெடுத்தவர்கள். அதைச் செயல் படுத்தவில்லை.செயல்படுத்த முடியவில்லை. வந்தவர்களில் - அதாவது மருமக்கள் மூவரில் இருவர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

கடைசியில் ஊரில் உள்ள பெரிய வீட்டிலேயே ஆத்தாவைத் தங்க வைத்துவிட்டார்கள். சமையலுக்கு ஒரு வயதான சமையல்காரரையும், பகலில் துணைக்கு ஒரு அக்காவையும்  ஏற்பாடு செய்தவர்கள், அவர்கள் இருவரும் மாலையில் சென்று விடுவார்கள் என்பதால், இரவில் துணைக்கு உள்ளூர் ஆச்சி ஒருவரைச் சம்பளத்திற்கு ஏறபாடு செய்து உடன் தங்க வைத்தார்கள்.

நடப்பதை எல்லாம் பார்த்துப் பித்துப் பிடித்தது போன்ற நிலைக்கு வந்த தாயாரும், அதிக நாள் உயிர்வாழவில்லை. நோய்வாய்ப்பட்டு, அடுத்துவந்த இரண்டாண்டுகளிலேயே இறந்து போய்விட்டார்கள்!

ராங்கியம் கருப்பர் கூலி கொடுத்தாரா? அது தனிக்கதை - அதை இன்னொரு நாள் பார்ப்போம். இப்போது பிரதானக் கதைக்கு வருகிறேன்.

இதை எல்லாம் நன்கு அறிந்த நம் கதையின் நாயகர் சாமிநாதன் செட்டியார், படித்த கவிதையின் தாக்கத்தில் இருந்து  மீண்டு தன் மனைவி சாரதா ஆச்சியை அழைத்ததோடு, முழுக்கவிதையையும் கொடுத்துப் படி என்றார்.

சேயன்னா தானா
சிவலோகம் சென்றுவிட்டார்
குடும்ப ஒற்றுமையும்
கூடவே சென்றுவிட்டது”

என்று துவங்கும் கவிதையில் நடுவில் வரும் வரிகள் எல்லாம் அசத்தாலாக இருக்கும்.

அசையாத சொத்துக்களில்
நூற்பாலையை மட்டும்
ஏற்பாரில்லை
மற்ற சொத்துக்களுக்கு
மல்லுக் கட்டு”

என்றெல்லாம் வரும்

படித்துவிட்டு, ஒரு புன்னகையோடு, கவிதை வெளியாகியிருந்த புத்தகத்தைத் திருப்பிக்கொடுத்த ஆச்சியிடம், செட்டியார் கேட்டார்.

”என்ன ஒன்றும் சொல்லாமல் திருப்பிக் கொடுக்கிறாய்?”

ஆச்சி மதுரையில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றில் உளவியல் துறை பேராசிரியையாக இருப்பவர். அதனால் வலுவாக ஏதாவது சொல்லுவார் என்று செட்டியார் எதிர்பார்த்தார்.

ஆனால் ஆச்சி அவர்கள், செட்டியார் எதிர்பார்த்திருந்த பதிலைச் சொல்லாமல் வேறு மாதிரியாகப் பதில் சொன்னார்.

“எல்லா வீடுகளுக்கும், எல்லாப் பிள்ளைகளுக்கும் இது பொருந்தும் என்று எடுத்துக் கொள்ள முடியாது! தர்மம் முழுவதுமாக கெட்டுவிட்டதாகச் சொல்ல முடியாது. இன்னும் நல்ல பிள்ளைகள் - தாய் தந்தைகளைப் போற்றும் பிள்ளைகள் இருக்கத்தான் செய்கிறார்கள். என் தம்பி மக்கள் இருவரும் அமெரிக்காவில் இருந்து தங்கள் பெற்றோர்களுக்கு எத்தனை பணம் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் போன்றோர்களை இந்தக் கணக்கில் எப்படிச் சேர்க்கமுடியும்?”

”அவர்கள் விதிவிலக்கு. விதிவிலக்குகளை எல்லாம் உதாரணமாகக் கொள்ள முடியாது. பொதுவாகத்தான் பார்க்க வேண்டும்!”

“சரி, பொதுவாகவே சொல்லுங்கள் - பெற்றோர்கள் வயதான காலத்தில் பிள்ளைகளை நம்பி இருக்கக்கூடாது என்கிறீர்களா?”

“வயதான காலத்தில் தங்கள் கையிருப்பை விட்டுவிடாமல், தங்கள் கட்டுப்பாடிலேயே வைத்துக்கொள்ள வேண்டும். அதுதான் முக்கியம். அதைத்தான் சொல்ல வந்தேன்”

“பணம் மட்டும் இருந்தால் போதுமா? வயதான காலத்தில் நோய் நொடி வந்தால் என்ன செய்வது? வாதம் வந்து படுத்தால் என்ன செய்வது? ஆதரவிற்கு இரண்டு பேராவது வேண்டாமா? பிள்ளகளைத் தவிர அந்த ஆதரவை நல்லபடியாக வேறு யார் தரமுடியும்?”

“அந்த அதரவைப் பிள்ளைகள் சலிப்பில்லாமல் தருவார்கள் என்பது என்ன நிச்சயம்?”

”சலிப்பு என்பது மனித மனத்தின் ஒரு நிலைப்பாடு. செலுத்தப்படுகின்ற அன்பை வைத்து சமயங்களில் அது தலை காட்டாமல் இருக்கும்.எதுவுமே நிச்சயமில்லாத வாழ்க்கை இது. படுத்தால் அடுத்த நாள் காலை எழுந்திருப்போம் என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது? நிச்சயம் எங்கே இருக்கிறது? தூங்கையிலே வாங்குகிற காத்து சுழிமாறிப் போனாலும் போச்சு என்பார்கள். ஊருக்கு ஆம்னி பஸ்ஸில் போகிறோம். ஒட்டுனர் யாரென்றே தெரியாது. நம்மைப் பத்திரமாகக் கொண்டுபோய் ஊரில் சேர்ப்பார் என்ற நம்பிக்கையில் தான் பயணிக்கிறோம். அதே நம்பிக்கையை இறைவன் மேல் வையுங்கள். வயதான காலத்தில் எந்தப் பிரச்சினையும் வராமல் அவர் பார்த்துக்கொள்வார். உங்களை நல்ல வழியில் கரை சேர்ப்பார். நமக்கு ஓட்டுனர் அவர்தான். அதாவது நம் வாழ்க்கை என்ற பயணத்திற்கு ஓட்டுனர் அவர்தான். அவரைப் பிரார்த்தனை செய்யுங்கள். தேவையில்லாமல் இது போன்ற நடப்புக்களை எல்லாம் பார்த்துவிட்டு உங்களை நீங்களே குழப்பிக்கொள்ளாதீர்கள். இருக்கிற கொஞ்ச நஞ்ச நிம்மதியும் இப்போதே இல்லாமல் போய்விடும்!”

ஆச்சியின் இந்த அதிரடியான வார்த்தைகளால், செட்டியார் இப்போது வேறு மாதிரியான தாக்கத்திற்கு உள்ளானார். ஆமாம், இவளுக்கு உள்ள தெளிவான சிந்தனை நமக்கு ஏன் இல்லாமல் போய்விட்டது என்பதுதான் அது!

செட்டியாரின் கண்கள் பனித்து விட்டன!

மெல்லிய குரலில் சொன்னார்: “எனக்கு ஓட்டுனர் நீ தான். உனக்குப் பிற்குதான் இறைவன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

47 comments:

  1. என் நண்பர் ஒருவர் சொல்வார். இப்போது நாம் படும் கஷ்டத்துக்கெல்லாம், நம் முன்னோர்கள் செய்த பாவம் தான் காரணம் என்று.

    இப்போ நாம முடிந்த வரை அடுத்தவனுக்கு எந்த சிரமமும் கொடுக்காம வாழ்றோமே. இதுக்கு பலன் கிடையாதா என்று கேட்பேன்.

    நம்ம தாத்தா காலத்துல வெச்ச மரங்கள்ல இப்போ நாம பழம் சாப்பிடுற மாதிரி (வாழையை நாமளே வெச்சு நாமளே சாப்பிடுறத உதாரணம் காட்டக்கூடாது) இப்போ நாம செய்யுற நன்மைகள் நம்ம புள்ளைங்க அல்லது பேரன் பேத்திகளுக்கு நன்மை செய்யும்னு நம்பி வாழ்க்கையை ஓட்ட வேண்டியதுதான் அப்படின்னு சொல்வார்.

    கதையில் சொல்லியிருப்பது போல் பெரும்பாலானவர்கள் இறைவன் போட்டுவிட்டு வாழ்கிறார்கள்.

    ஆனால் இறைவன் மேல் பாரத்தைப்போட்டுவிட்டு அதன் காரணமாக கஷ்டப்பட்டாலும் எல்லாம் விதி என்று பொறுமையுடன் சகித்துக்கொண்டிருக்கும் முதியவர்களையும் எனக்கு தெரியும்.

    60 ஆண்டுகளுக்கு முன்னால் பரம்பரை சொத்தில் இருந்து கிடைத்த 1 செண்ட் நிலத்தை தங்கள் உழைப்பின் மூலம் பல ஏக்கராக மாற்றினார்கள் ஒரு விவசாயத்தம்பதியர்.

    அவர்களின் மூத்த மகன் 35 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டான். அதனால் கோபமடைந்த விவசாயி போலீசில் புகார் (காசும்) கொடுத்து மகனை அடிக்க வைத்து சொத்தில் பங்கு கேட்க கூடாது என்று ஒதுக்கி விட்டார்.

    ஆனால் பிரிந்து சென்ற மகன் தனக்கு பெண் குழந்தை பிறந்த உடன், அதனை தாய் தந்தையர் காலடியில் போட்டு நான் கூலி வேலை செய்து மிகவும் கஷ்டப்படுறேன். கொஞ்சம் இடம் பிரிச்சுக்கொடுங்க என்று கேட்டார்.

    விவசாயியும் மனம் மாறி, பாதி வீடு, நிலங்களில் பாதி என்று பிரித்துக்கொடுத்துவிட்டார்.

    கடுமையான உழைப்பின் மூலம் 20 ஆண்டுகளில் இன்று அந்த மூத்த மகன் கோடீஸ்வரர்.

    விவசாயி பார்த்து திருமணம் செய்து வைத்த இளைய மகனுடன் அவரும் அடுத்து 20 ஆண்டுகள் உழைத்து நிறைய சொத்து வாங்கிக்கொடுத்தார். மூத்த மகன் பிரிந்து செல்லும்போது ரொக்கமாக இருந்த 1 லட்ச ரூபாயும் (1979ல்) இளைய மகனுக்குதான் வந்தது.

    விவசாயியும் அவரது மனைவியும் உழைக்க முடியாமல் உட்கார்ந்தனர். மூத்த மகன், எனக்கு நிலத்தையும் வீட்டையும் மட்டும்தானே பிரிச்சு கொடுத்த. ரொக்கம் 1 லட்சத்தை தம்பிக்கு கொடுத்துட்டு 20 வருஷம் அவனுக்குதானே உழைச்சு சொத்து சேர்த்த என்று சாப்பாடு போடவில்லை.

    அண்ணனை போலீஸ் ஸ்டேஷன்ல வெச்சு எதுக்கும் பங்கு கேட்டு வரக்கூடாதுன்னு எழுதி வாங்கிட்டுதானே விரட்டுன. அப்புறம் ஏன் அவங்களுக்கு 1 வருஷம் கழிச்சு பங்கு கொடுத்த என்று சின்ன மகனும் சாப்பாடு போடவில்லை.

    மாட்டுத்தரகு பார்த்து, முதியோர் பென்சன் வாங்கி சிறிது காலம் மனைவியை அந்த விவசாயி காப்பாற்றினார். கடைசியாக அவர் மனைவி இறந்த பின், வீட்டிலும் இருக்க கூடாது என்று சின்ன மகன் துரத்தி விட, கணவன் சரியில்லாமல் தனியாக பிள்ளையுடன் கஷ்டப்படும் மகள் வீட்டில் கூனிக்குறுகி சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்.

    மகளும், பேரனும் நாங்கள் உங்களைப்பார்த்துக்க எதோ புண்ணியம் செய்திருக்கணும். நீங்க எதை பற்றியும் நினைக்காம இங்க இருங்க என்று சொன்னாலும் அந்த விவசாயி என்ன சொல்கிறார் தெரியுமா?

    ஆயிரம் இருந்தாலும் ரெண்டு புள்ளைங்க இருக்கும்போது மகள் வீட்டில் போய் திங்கிறான்னு ஊர் என்னை கேவலமா பேசுமே. நான் எந்த ஊருக்காச்சும் போய் கண் காணாம செத்துப்போறேன்னு புலம்புறார்.

    அப்படி எதுவும் செஞ்சுக்காதீங்கன்னு தினமும் மகளும் பேரனும் தைரியம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

    இதை என்ன இப்படியும் பலர் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  2. என் நண்பர் ஒருவர் சொல்வார். இப்போது நாம் படும் கஷ்டத்துக்கெல்லாம், நம் முன்னோர்கள் செய்த பாவம் தான் காரணம் என்று.

  3. "அசையும் சொத்துக்களில்
    ஆத்தாளைத்தவிர
    அனைத்தையும் பங்கு வைத்துக்கொண்டார்கள்
    ஆத்தாளை
    வைத்துக்கொள்ள
    மாதங்களைப் பங்கு வைத்தார்கள்"

    இந்த வரிகளை நீங்கள் முன்பே அறிமுகப் படுத்தியிருக்கிறீர்கள். இதைப் பற்றி என் கணவரிடமும் சொல்லி நாங்கள் விவாதித்தது நினைவில் வந்தது. சொத்துத் தகராறை நேராகப் பார்த்தவர்களுக்கும், (என்னைப் போன்று) அதை தன் பெற்றோர்கள் சொல்லிக் கேட்டவர்களுக்கும் இந்தக் கதை தங்கள் குடும்பத்தில் நிகழ்ந்ததை தவறாமல் நினைவுக்கு கொண்டு வரும்.

    படிப்பினை சொன்ன சாரதா ஆச்சி பாராட்டப்பட வேண்டியவர். சாமிநாதன் செட்டியார் எதார்த்தமானவர். தன் வரையில் இறுதிகாலத்திற்கு ஏற்பாடு செய்து கொண்டு மனிதர்கள் மாறும் இயல்புடையவர்கள் என்பதையும் மனதில் மறக்காமல் வைத்துக்கொண்டால் அதிர்ச்சி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
    மற்றுமொரு சிறந்த ஓட்டுனரை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  4. குருவிற்கு வணக்கம்
    ஆச்சி சொன்ற்போல் நல்ல பிள்ளைகள்
    தாய் தந்தையை போற்றும் பிள்ளைகள்
    இன்னும் இருக்கிறார்கள்.

    பஸ்ஸில் ஏறியவுடன் ஓட்டுனரை நினைப்பதில்லை இறங்குமிடம் வருகிறதா என்றுதான் எதிர்பார்த்து
    இருப்போம்,(சில பிள்ளைகள்போல்)

    நல்ல ஒர் அறிவு பெரும் சிறுகதை

    ஆச்சி சொன்னது எப்பொழுதும் ஓட்டுனரை (இறைவனை) நினைக்கவேண்டும்.

    நன்றி

    ReplyDelete
  5. //ஊருக்கு ஆம்னி பஸ்ஸில் போகிறோம். ஒட்டுனர் யாரென்றே தெரியாது. நம்மைப் பத்திரமாகக் கொண்டுபோய் ஊரில் சேர்ப்பார் என்ற நம்பிக்கையில் தான் பயணிக்கிறோம். அதே நம்பிக்கையை இறைவன் மேல் வையுங்கள். வயதான காலத்தில் எந்தப் பிரச்சினையும் வராமல் அவர் பார்த்துக்கொள்வார். உங்களை நல்ல வழியில் கரை சேர்ப்பார். நமக்கு ஓட்டுனர் அவர்தான். அதாவது நம் வாழ்க்கை என்ற பயணத்திற்கு ஓட்டுனர் அவர்தான். அவரைப் பிரார்த்தனை செய்யுங்கள். //

    // “எனக்கு ஓட்டுனர் நீ தான். உனக்குப் பிற்குதான் இறைவன்!//

    அருமையான வரிகளுடன் அழகான கதை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. /// சரண் said...
    என் நண்பர் ஒருவர் சொல்வார்.
    இப்போது நாம் படும்
    கஷ்டத்துக்கெல்லாம், நம் முன்னோர்கள்
    செய்த பாவம் தான் காரணம் என்று. ///

    நம்முடைய வாழ்வில் நடக்கும்,அனைத்தும் சம்பவங்களுக்கும்
    நம்முடைய முற்பிறவி சுய கர்மாக்கள்
    தான் காரணம்.
    நீங்கள் ஒரு புண்ணியம் செய்தவராக இருந்தால்,
    உங்களை எப்படி பாவம் செய்த ஒரு தகப்பனுக்கு
    மகனாக பிறக்க இறைவன் அனுமதி அளிப்பார்.
    நீங்கள் ஒரு'பாவ கர்மாக்கள் அதிகம் உள்ளவராக,இருக்கும் போது
    கண்டிப்பாக ஒரு புண்ணியாவனுக்கு,
    உங்களால் மகனாக பிறக்க முடியாது.
    இறைவனும் அதற்கு அனுமதிக்க மாட்டார்.
    சத் புத்திரர்கள் பிறக்க நல் கர்மவினைகள் வேண்டும்.
    நான் ஆராய்ந்த கர்மவினை சம்மந்தபட்ட உண்மை சம்பவங்களை,
    கூடிய விரைவில் எழுதுகிறேன்.

    ஓம் சரவணபவ நம

    ReplyDelete
  7. கதையல்ல நிஜம் என்று சொல்லும் வண்ணம் உள்ளது கதை.உங்களுடைய கதை சொல்லும் பாணி அலாதியானது. பெரம்பலூர்,பெட்டைவாய்த்தலை என்று டோப்பாக்ரஃபி எல்லாம் சொல்வதால் ஓர் உண்மைக் கதை போல அமைந்து விடுகிறது.

    இந்தக் கதையில் 20 கோடிக்கு சொத்து இருந்தும் ஆச்சியின் நிலை பரிதாபம்தான்.இன்றும் பெண்களுக்கான சொத்தினைக் கொடுக்காத ஆணாதிக்கம்
    கண்டிக்கப்பட வேண்டியதே. பெண்ணிய வாதிகள் கணவன்மார்களுக்கு எதிராகப் பெண்களைத் தூண்டுவதை விடுத்துச் சொத்தைத் தர மறுக்கும் சகோதரர்களுக்கு எதிராகத் தூண்ட வேண்டும்.

    ராங்கியம் என்ற ஊர் தஞ்சை வள்ளல் லக்ஷ்மி சீவல் தெய்வத்திரு
    ஏ. சுப்பிரமணியம் செட்டியார் அவர்களின் ஊர். நினைவு படுத்தியமைக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  8. /////Blogger சரண் said...
    என் நண்பர் ஒருவர் சொல்வார். இப்போது நாம் படும் கஷ்டத்துக்கெல்லாம், நம் முன்னோர்கள் செய்த பாவம் தான் காரணம் என்று.
    இப்போ நாம முடிந்த வரை அடுத்தவனுக்கு எந்த சிரமமும் கொடுக்காம வாழ்றோமே. இதுக்கு பலன் கிடையாதா என்று கேட்பேன்.
    நம்ம தாத்தா காலத்துல வெச்ச மரங்கள்ல இப்போ நாம பழம் சாப்பிடுற மாதிரி (வாழையை நாமளே வெச்சு நாமளே சாப்பிடுறத உதாரணம் காட்டக்கூடாது) இப்போ நாம செய்யுற நன்மைகள் நம்ம புள்ளைங்க அல்லது பேரன் பேத்திகளுக்கு நன்மை செய்யும்னு நம்பி வாழ்க்கையை ஓட்ட வேண்டியதுதான் அப்படின்னு சொல்வார்.
    கதையில் சொல்லியிருப்பது போல் பெரும்பாலானவர்கள் இறைவன் போட்டுவிட்டு வாழ்கிறார்கள்.
    ஆனால் இறைவன் மேல் பாரத்தைப்போட்டுவிட்டு அதன் காரணமாக கஷ்டப்பட்டாலும் எல்லாம் விதி என்று பொறுமையுடன் சகித்துக்கொண்டிருக்கும் முதியவர்களையும் எனக்கு தெரியும்.
    60 ஆண்டுகளுக்கு முன்னால் பரம்பரை சொத்தில் இருந்து கிடைத்த 1 செண்ட் நிலத்தை தங்கள் உழைப்பின் மூலம் பல ஏக்கராக மாற்றினார்கள் ஒரு விவசாயத்தம்பதியர்.
    அவர்களின் மூத்த மகன் 35 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டான். அதனால் கோபமடைந்த விவசாயி போலீசில் புகார் (காசும்) கொடுத்து மகனை அடிக்க வைத்து சொத்தில் பங்கு கேட்க கூடாது என்று ஒதுக்கி விட்டார்.
    ஆனால் பிரிந்து சென்ற மகன் தனக்கு பெண் குழந்தை பிறந்த உடன், அதனை தாய் தந்தையர் காலடியில் போட்டு நான் கூலி வேலை செய்து மிகவும் கஷ்டப்படுறேன். கொஞ்சம் இடம் பிரிச்சுக்கொடுங்க என்று கேட்டார்.
    விவசாயியும் மனம் மாறி, பாதி வீடு, நிலங்களில் பாதி என்று பிரித்துக்கொடுத்துவிட்டார்.
    கடுமையான உழைப்பின் மூலம் 20 ஆண்டுகளில் இன்று அந்த மூத்த மகன் கோடீஸ்வரர்.
    விவசாயி பார்த்து திருமணம் செய்து வைத்த இளைய மகனுடன் அவரும் அடுத்து 20 ஆண்டுகள் உழைத்து நிறைய சொத்து வாங்கிக்கொடுத்தார். மூத்த மகன் பிரிந்து செல்லும்போது ரொக்கமாக இருந்த 1 லட்ச ரூபாயும் (1979ல்) இளைய மகனுக்குதான் வந்தது.
    விவசாயியும் அவரது மனைவியும் உழைக்க முடியாமல் உட்கார்ந்தனர். மூத்த மகன், எனக்கு நிலத்தையும் வீட்டையும் மட்டும்தானே பிரிச்சு கொடுத்த. ரொக்கம் 1 லட்சத்தை தம்பிக்கு கொடுத்துட்டு 20 வருஷம் அவனுக்குதானே உழைச்சு சொத்து சேர்த்த என்று சாப்பாடு போடவில்லை.
    அண்ணனை போலீஸ் ஸ்டேஷன்ல வெச்சு எதுக்கும் பங்கு கேட்டு வரக்கூடாதுன்னு எழுதி வாங்கிட்டுதானே விரட்டுன. அப்புறம் ஏன் அவங்களுக்கு 1 வருஷம் கழிச்சு பங்கு கொடுத்த என்று சின்ன மகனும் சாப்பாடு போடவில்லை.
    மாட்டுத்தரகு பார்த்து, முதியோர் பென்சன் வாங்கி சிறிது காலம் மனைவியை அந்த விவசாயி காப்பாற்றினார். கடைசியாக அவர் மனைவி இறந்த பின், வீட்டிலும் இருக்க கூடாது என்று சின்ன மகன் துரத்தி விட, கணவன் சரியில்லாமல் தனியாக பிள்ளையுடன் கஷ்டப்படும் மகள் வீட்டில் கூனிக்குறுகி சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்.
    மகளும், பேரனும் நாங்கள் உங்களைப்பார்த்துக்க எதோ புண்ணியம் செய்திருக்கணும். நீங்க எதை பற்றியும் நினைக்காம இங்க இருங்க என்று சொன்னாலும் அந்த விவசாயி என்ன சொல்கிறார் தெரியுமா?
    ஆயிரம் இருந்தாலும் ரெண்டு புள்ளைங்க இருக்கும்போது மகள் வீட்டில் போய் திங்கிறான்னு ஊர் என்னை கேவலமா பேசுமே. நான் எந்த ஊருக்காச்சும் போய் கண் காணாம செத்துப்போறேன்னு புலம்புறார்.
    அப்படி எதுவும் செஞ்சுக்காதீங்கன்னு தினமும் மகளும் பேரனும் தைரியம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
    இதை என்ன இப்படியும் பலர் இருக்கிறார்கள்.///////

    நல்லது. உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. /////Blogger தேமொழி said...
    "அசையும் சொத்துக்களில்
    ஆத்தாளைத்தவிர
    அனைத்தையும் பங்கு வைத்துக்கொண்டார்கள்
    ஆத்தாளை
    வைத்துக்கொள்ள
    மாதங்களைப் பங்கு வைத்தார்கள்"
    இந்த வரிகளை நீங்கள் முன்பே அறிமுகப் படுத்தியிருக்கிறீர்கள். இதைப் பற்றி என் கணவரிடமும் சொல்லி நாங்கள் விவாதித்தது நினைவில் வந்தது. சொத்துத் தகராறை நேராகப் பார்த்தவர்களுக்கும், (என்னைப் போன்று) அதை தன் பெற்றோர்கள் சொல்லிக் கேட்டவர்களுக்கும் இந்தக் கதை தங்கள் குடும்பத்தில் நிகழ்ந்ததை தவறாமல் நினைவுக்கு கொண்டு வரும்.
    படிப்பினை சொன்ன சாரதா ஆச்சி பாராட்டப்பட வேண்டியவர். சாமிநாதன் செட்டியார் எதார்த்தமானவர். தன் வரையில் இறுதிகாலத்திற்கு ஏற்பாடு செய்து கொண்டு மனிதர்கள் மாறும் இயல்புடையவர்கள் என்பதையும் மனதில் மறக்காமல் வைத்துக்கொண்டால் அதிர்ச்சி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
    மற்றுமொரு சிறந்த ஓட்டுனரை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி ஐயா./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  10. /////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    ஆச்சி சொன்னாற்போல் நல்ல பிள்ளைகள்
    தாய் தந்தையை போற்றும் பிள்ளைகள்
    இன்னும் இருக்கிறார்கள்.
    பஸ்ஸில் ஏறியவுடன் ஓட்டுனரை நினைப்பதில்லை இறங்குமிடம் வருகிறதா என்றுதான் எதிர்பார்த்து
    இருப்போம்,(சில பிள்ளைகள்போல்)
    நல்ல ஒர் அறிவு பெரும் சிறுகதை
    ஆச்சி சொன்னது எப்பொழுதும் ஓட்டுனரை (இறைவனை) நினைக்கவேண்டும்.
    நன்றி/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. //////Blogger வை.கோபாலகிருஷ்ணன் said...
    //ஊருக்கு ஆம்னி பஸ்ஸில் போகிறோம். ஒட்டுனர் யாரென்றே தெரியாது. நம்மைப் பத்திரமாகக் கொண்டுபோய் ஊரில் சேர்ப்பார் என்ற நம்பிக்கையில் தான் பயணிக்கிறோம். அதே நம்பிக்கையை இறைவன் மேல் வையுங்கள். வயதான காலத்தில் எந்தப் பிரச்சினையும் வராமல் அவர் பார்த்துக்கொள்வார். உங்களை நல்ல வழியில் கரை சேர்ப்பார். நமக்கு ஓட்டுனர் அவர்தான். அதாவது நம் வாழ்க்கை என்ற பயணத்திற்கு ஓட்டுனர் அவர்தான். அவரைப் பிரார்த்தனை செய்யுங்கள். //
    // “எனக்கு ஓட்டுனர் நீ தான். உனக்குப் பிற்குதான் இறைவன்!//
    அருமையான வரிகளுடன் அழகான கதை. பாராட்டுக்கள்./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. //////Blogger kmr.krishnan said...
    கதையல்ல நிஜம் என்று சொல்லும் வண்ணம் உள்ளது கதை.உங்களுடைய கதை சொல்லும் பாணி அலாதியானது. பெரம்பலூர்,பெட்டைவாய்த்தலை என்று டோப்பாக்ரஃபி எல்லாம் சொல்வதால் ஓர் உண்மைக் கதை போல அமைந்து விடுகிறது.
    இந்தக் கதையில் 20 கோடிக்கு சொத்து இருந்தும் ஆச்சியின் நிலை பரிதாபம்தான்.இன்றும் பெண்களுக்கான சொத்தினைக் கொடுக்காத ஆணாதிக்கம்
    கண்டிக்கப்பட வேண்டியதே. பெண்ணிய வாதிகள் கணவன்மார்களுக்கு எதிராகப் பெண்களைத் தூண்டுவதை விடுத்துச் சொத்தைத் தர மறுக்கும் சகோதரர்களுக்கு எதிராகத் தூண்ட வேண்டும்.
    ராங்கியம் என்ற ஊர் தஞ்சை வள்ளல் லக்ஷ்மி சீவல் தெய்வத்திரு
    ஏ. சுப்பிரமணியம் செட்டியார் அவர்களின் ஊர். நினைவு படுத்தியமைக்கு நன்றி ஐயா!/////

    சொல்வதை சுவாரசியமாகச் சொல்ல வேண்டாமா? சுவாரசியத்திற்கு அதெல்லாம் தேவைப்படுகிறது! உங்களின் பாராட்டிற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  13. மிக நெகிழ்வான கதை. உணர்ச்சிகளால் கோர்த்தெடுக்கப்பட்ட‌ அற்புதமான மாலை. ஆச்சியின் அறிவுரை 'நாளைப் பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு' எனும் கவியரசரின் வரிகளை நினைவுபடுத்தின. உண்மைச் சம்பவத்தை நேரில் பார்த்ததைப் போன்ற உணர்வு. அருமையான பதிவைத் தந்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  14. திரு.சரண் அவர்கள் கூறிய உண்மைச் சம்பவமும் நெஞ்சை நெகிழ்த்துவதாக இருந்தது. அதை விடவும் அந்தச் சம்பவத்தை அவர் கோர்வையாகச் சொன்ன விதம் அருமை. வாத்தியாரின் வகுப்பறை எழுத்துலகிற்குத் தரும் மற்றுமொரு எழுத்தாளராகும் வாய்ப்பு பிரகாசமாகத் தெரிகிறது. கொஞ்சம் மெனக்கெட்டால் எழுத்துலகில் ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம் என்று தோன்றுகிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. அருமையான கருவை அந்த வயதில் எட்ட இருப்போருக்கு ஆழ்ந்த சிந்தனையை தரும் கதை. கடைசியில் ஒரு தெளிவான விடையையும் இருத்தியது,

    /////தேவையில்லாமல் இது போன்ற நடப்புக்களை எல்லாம் பார்த்துவிட்டு உங்களை நீங்களே குழப்பிக்கொள்ளாதீர்கள். இருக்கிற கொஞ்ச நஞ்ச நிம்மதியும் இப்போதே இல்லாமல் போய்விடும்!////
    பெரும்பாலானோரின் எண்ணப் பிரதி தாம் இவைகள்... அவசியமில்லாக் கவலை இருந்தும் அநேகரின் கவலையும் இதுவே!..

    ''அசையாத சொத்துக்களில்
    நூற்பாலையை மட்டும்
    ஏற்பாரில்லை
    மற்ற சொத்துக்களுக்கு
    மல்லுக் கட்டு”

    இது கதையல்ல நிஜமே!

    இது எத்தனை உண்மையானது...
    யானைகளை கட்டிக் கொண்டு போராடுவது போன்றது இது...
    1990 -களின் ஆரம்பத்தில் மத்திய அரசு அறிவித்த புதிய ஜவுளிக் கொள்கையில்
    நலிந்த ஆலைகள் எல்லாம் நசுங்கிய குடும்பங்கள் எத்தனை எத்தனை.

    இது போன்ற உதாரங்களை கொணர்வது தங்களின் கதைகளின் சிறப்புகளில் இதுவும் ஓன்று...

    அருமையானக் கதை பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  16. /////Blogger Parvathy Ramachandran said...
    மிக நெகிழ்வான கதை. உணர்ச்சிகளால் கோர்த்தெடுக்கப்பட்ட‌ அற்புதமான மாலை. ஆச்சியின் அறிவுரை 'நாளைப் பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு' எனும் கவியரசரின் வரிகளை நினைவுபடுத்தின. உண்மைச் சம்பவத்தை நேரில் பார்த்ததைப் போன்ற உணர்வு. அருமையான பதிவைத் தந்தமைக்கு மிக்க நன்றி./////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கும், பாராட்டிற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  17. /////Blogger Parvathy Ramachandran said...
    திரு.சரண் அவர்கள் கூறிய உண்மைச் சம்பவமும் நெஞ்சை நெகிழ்த்துவதாக இருந்தது. அதை விடவும் அந்தச் சம்பவத்தை அவர் கோர்வையாகச் சொன்ன விதம் அருமை. வாத்தியாரின் வகுப்பறை எழுத்துலகிற்குத் தரும் மற்றுமொரு எழுத்தாளராகும் வாய்ப்பு பிரகாசமாகத் தெரிகிறது. கொஞ்சம் மெனக்கெட்டால் எழுத்துலகில் ஒளிமயமான எதிர்காலம் நிச்சயம் என்று தோன்றுகிறது. வாழ்த்துக்கள்./////

    ஆமாம். அவர் எழுதி அனுப்பினால், மாணவர் மலரில் அவருக்கு இடம் கொடுத்து ஊக்குவிப்போம்!

    ReplyDelete
  18. /////Blogger ஜி ஆலாசியம் said...
    அருமையான கருவை அந்த வயதில் எட்ட இருப்போருக்கு ஆழ்ந்த சிந்தனையை தரும் கதை. கடைசியில் ஒரு தெளிவான விடையையும் இருத்தியது,
    /////தேவையில்லாமல் இது போன்ற நடப்புக்களை எல்லாம் பார்த்துவிட்டு உங்களை நீங்களே குழப்பிக்கொள்ளாதீர்கள். இருக்கிற கொஞ்ச நஞ்ச நிம்மதியும் இப்போதே இல்லாமல் போய்விடும்!////
    பெரும்பாலானோரின் எண்ணப் பிரதி தாம் இவைகள்... அவசியமில்லாக் கவலை இருந்தும் அநேகரின் கவலையும் இதுவே!..
    ''அசையாத சொத்துக்களில்
    நூற்பாலையை மட்டும்
    ஏற்பாரில்லை
    மற்ற சொத்துக்களுக்கு
    மல்லுக் கட்டு”
    இது கதையல்ல நிஜமே!
    இது எத்தனை உண்மையானது...
    யானைகளை கட்டிக் கொண்டு போராடுவது போன்றது இது...
    1990 -களின் ஆரம்பத்தில் மத்திய அரசு அறிவித்த புதிய ஜவுளிக் கொள்கையில்
    நலிந்த ஆலைகள் எல்லாம் நசுங்கிய குடும்பங்கள் எத்தனை எத்தனை.
    இது போன்ற உதாரணங்களை கொணர்வது தங்களின் கதைகளின் சிறப்புகளில் இதுவும் ஓன்று...
    அருமையானக் கதை பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!//////

    உங்களின் சிறப்பான விமர்சனத்திற்கும், பாராட்டிற்கும் நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  19. குடும்ப அடிதடி, சொத்து தகறாறு இவற்றை என் கண் முன்னால் பார்க்கும் நிலை ஏற்பட்டதில்லை. இனியும் ஏற்படாமல் இருப்பது நல்லது என்றே நினைக்கிறேன்.

    வாழ்க்கையில் எதுவும் நடக்கலாம். இதுதான் நடக்கும் என்று யாராலும் முன் கூட்டியே அனுமனிக்க முடியாது.

    //நான் ஆராய்ந்த கர்மவினை சம்மந்தபட்ட உண்மை சம்பவங்களை,
    கூடிய விரைவில் எழுதுகிறேன்.//

    எழுதுங்கள். படிக்க மிகுந்த ஆவலாய் இருக்கிறேன்.

    ReplyDelete
  20. போகர் அவர்களின் ஆக்கத்தைப் படிக்க ஆவலாக உள்ளேன்.

    என் நினைவு சரியாக கைகொடுக்குமானால் .....
    சரண் ஏற்கனவே பிரபல பத்திரிகைகளில் தொழில் முறை எழுத்தாளராக பல பதிவுகளை வெளியிட்டவர் என அவரது வலைப்பூவில் முன்பு பார்த்த ஞாபகம். சில பதிவுகளை ஸ்கேன் செய்து போட்டிருந்ததையும் பார்த்த நினைவு. இப்பொழுது அவை தெரியா வண்ணம் மறைத்துவிட்டார் என நினைக்கிறேன்.
    இவரும் தன்னடக்கம் மிக்க தம்பிகளின் வரிசையில் சேர போட்டி போடுகிறாரோ?

    பார்வதியின் கருத்தைப் படித்த பின்பு எனக்கு நினைவு வந்த பாடல் வரிகள்...
    நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க - அதை
    நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க
    வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க - எந்த
    வேதனையும் மாறும் மேகத்தைப் போல
    வேதனையும் மாறும் மேகத்தைப் போல

    ReplyDelete
  21. எப்பொழுதும் போல் கதை சிறப்பாக இருந்தது.இன்னும் விரிவாக இருந்தால் நன்றாக இருக்கும்.நன்றி.

    ReplyDelete
  22. நல்லதொரு கதை.
    மிக வயதான காலத்தில் யாரும் எதிர்பார்ப்பது அன்பும் அரவைனைப்பும் மட்டுமே.சொந்தமாகா எத்தனை கோடி சம்பாதித்து வைத்திருந்தாலும் அவர்களின் உடம்புக்கும் மனதுக்கும் எதிர்பார்ப்பது அன்பும் அரவனைப்பும் தான். நாம் எவ்வள்வு தான் பணமாக கொடுத்தாலும் பார்த்துக்கொள்ள எத்தனை ஆட்களை பக்கத்தில் வைத்தாலும் அந்த வயதானவர்களுக்கு தேவை நெருக்கமான அன்பு மட்டுமே.

    காசை எப்போது வேண்டிமானலும் சம்பாதித்துக்கொள்ளலாம் மனிதர்களை சம்பாதிப்பதே மிக மிக கடினம்.இதை புரிந்துகொண்டால் காசுக்காக கால் இடறி விழ மாட்டார்கள்.

    "தூங்கையிலே வாங்குகிற மூச்சு சுழிமாறி போனாலும் போச்சு"

    "தேவையில்லாமல் நடப்புகளை பார்த்துவிட்டு உங்களை நீங்களே குழப்பிக்கொள்ளாதீர்கள்.இருக்கும் கொஞ்ச நஞ்ச நிம்மதியும் போய்விடும்"

    இறைவன் கொடுக்க நினைப்பதை நேரடியாக கொடுக்காமல் அடுத்தவர் மூலம் கொடுக்கவைப்பான்.

    வாத்தியார் சொல்லவந்ததை ஆச்சியின் வாயிலாக தீர்க்கமாக சொல்லி உள்ளார்.

    "அசையும் சொத்துகளில்
    ஆத்தாளை தவிர
    அனைத்தையும் பங்கு வைத்துக் கொண்டார்கள்
    ஆத்தாளை வைத்துக்கொள்ள
    மாதங்களை பங்குவைத்தார்கள்"-என்ற வகுப்பறை வாத்தியார் சுப்பையாவின் கவிதை வரிகளை படித்தவுடன்...... என்று கதை துவங்கியிருந்தால் இன்னும் டச்சிங்காக இருந்திருக்கும்.

    ReplyDelete
  23. /////Blogger ananth said...
    குடும்ப அடிதடி, சொத்து தகறாறு இவற்றை என் கண் முன்னால் பார்க்கும் நிலை ஏற்பட்டதில்லை. இனியும் ஏற்படாமல் இருப்பது நல்லது என்றே நினைக்கிறேன்.
    வாழ்க்கையில் எதுவும் நடக்கலாம். இதுதான் நடக்கும் என்று யாராலும் முன் கூட்டியே அனுமனிக்க முடியாது.
    //நான் ஆராய்ந்த கர்மவினை சம்மந்தபட்ட உண்மை சம்பவங்களை,
    கூடிய விரைவில் எழுதுகிறேன்.//
    எழுதுங்கள். படிக்க மிகுந்த ஆவலாய் இருக்கிறேன்.///////

    நான் நிறையப் பார்த்திருக்கிறேன். அந்த அனுபவங்கள்தான் சமயங்களில் கதைகளாக வருகின்றன. நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  24. Blogger தேமொழி said...
    போகர் அவர்களின் ஆக்கத்தைப் படிக்க ஆவலாக உள்ளேன்.
    என் நினைவு சரியாக கைகொடுக்குமானால் .....
    சரண் ஏற்கனவே பிரபல பத்திரிகைகளில் தொழில் முறை எழுத்தாளராக பல பதிவுகளை வெளியிட்டவர் என அவரது வலைப்பூவில் முன்பு பார்த்த ஞாபகம். சில பதிவுகளை ஸ்கேன் செய்து போட்டிருந்ததையும் பார்த்த நினைவு. இப்பொழுது அவை தெரியா வண்ணம் மறைத்துவிட்டார் என நினைக்கிறேன்.
    இவரும் தன்னடக்கம் மிக்க தம்பிகளின் வரிசையில் சேர போட்டி போடுகிறாரோ?
    பார்வதியின் கருத்தைப் படித்த பின்பு எனக்கு நினைவு வந்த பாடல் வரிகள்...
    நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க - அதை
    நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க
    வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க - எந்த
    வேதனையும் மாறும் மேகத்தைப் போல
    வேதனையும் மாறும் மேகத்தைப் போல//////

    உங்களின் இரண்டாவது பின்னூட்டத்திற்கும் பாடல் வரிகளுக்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  25. ////Blogger Subramanian said...
    எப்பொழுதும் போல் கதை சிறப்பாக இருந்தது.இன்னும் விரிவாக இருந்தால் நன்றாக இருக்கும்.நன்றி./////

    விவரிக்க சம்பவங்கள் இல்லாததால், கதை சுருக்கமாக முடிந்துவிட்டது. உங்களின் பாராட்டிற்கு நன்றி சுப்பிரமணியன்.
    என் இயற்பெயரும் சுப்பிரமணியன்தான்!

    ReplyDelete
  26. /////Blogger thanusu said...
    நல்லதொரு கதை.
    மிக வயதான காலத்தில் யாரும் எதிர்பார்ப்பது அன்பும் அரவைனைப்பும் மட்டுமே.சொந்தமாகா எத்தனை கோடி சம்பாதித்து வைத்திருந்தாலும் அவர்களின் உடம்புக்கும் மனதுக்கும் எதிர்பார்ப்பது அன்பும் அரவனைப்பும் தான். நாம் எவ்வள்வு தான் பணமாக கொடுத்தாலும் பார்த்துக்கொள்ள எத்தனை ஆட்களை பக்கத்தில் வைத்தாலும் அந்த வயதானவர்களுக்கு தேவை நெருக்கமான அன்பு மட்டுமே.
    காசை எப்போது வேண்டிமானலும் சம்பாதித்துக்கொள்ளலாம் மனிதர்களை சம்பாதிப்பதே மிக மிக கடினம்.இதை புரிந்துகொண்டால் காசுக்காக கால் இடறி விழ மாட்டார்கள்.
    "தூங்கையிலே வாங்குகிற மூச்சு சுழிமாறி போனாலும் போச்சு"
    "தேவையில்லாமல் நடப்புகளை பார்த்துவிட்டு உங்களை நீங்களே குழப்பிக்கொள்ளாதீர்கள்.இருக்கும் கொஞ்ச நஞ்ச நிம்மதியும் போய்விடும்"
    இறைவன் கொடுக்க நினைப்பதை நேரடியாக கொடுக்காமல் அடுத்தவர் மூலம் கொடுக்கவைப்பான்.
    வாத்தியார் சொல்லவந்ததை ஆச்சியின் வாயிலாக தீர்க்கமாக சொல்லி உள்ளார்.
    "அசையும் சொத்துகளில்
    ஆத்தாளை தவிர
    அனைத்தையும் பங்கு வைத்துக் கொண்டார்கள்
    ஆத்தாளை வைத்துக்கொள்ள
    மாதங்களை பங்குவைத்தார்கள்"-என்ற வகுப்பறை வாத்தியார் சுப்பையாவின் கவிதை வரிகளை படித்தவுடன்...... என்று கதை துவங்கியிருந்தால் இன்னும் டச்சிங்காக இருந்திருக்கும்.////////

    உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கும், பாராட்டிற்கும் நன்றி தனுசு!

    ReplyDelete
  27. 17.
    குழந்தைகள் தவறு செய்தால் இப்போது பெற்றோர்கள் SORRY கேளுன்னு சொல்லுவாங்க...

    முந்தைய காலத்தில சாமிக்கிட்டே மன்னிப்பு கேளுன்னு அன்றைய பெற்றோர்கள் சொல்லித்தருவாங்க அதே போல்

    இறைவன் திருமுன் வேண்டுகோள் வைக்கின்றோம்..
    நிலைமை மாற... சைவம்
    நிலைக்க..

    இன்று முதல் 16 நாட்கள் Count down தினமும் ஒரு தேவார பதிகம் பதிவு செய்கிறோம்..

    countdownல் கலந்து கொள்ள விரும்புவர் இந்த தேவார பாடலினை ஒரு முறை படித்து திருமுன்(நிலைமை மாற... சைவம் நிலைக்க..) வேண்டுதல் செய்யுங்கள்..

    பிறவியால் வருவன கேடுள ஆதலால் பெரிய இன்பத்
    துறவியார்க்கு அல்லது துன்பம் நீங்காது எனத் துங்கினாயே
    மறவல் நீ மார்ககமே நண்ணினாய் தீர்த்த நீர் மல்கு சென்னி
    அறவன் ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே..

    (சம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை)

    ReplyDelete
  28. எங்கே அனந்த ராமனை கானவில்லையே என சில நாட்களாக நினைத்துக்கொண்டு இருந்தேன்.

    "குடும்பத்தோடு வந்தால் தான்
    இலவசங்கள் முழுக்க கிடைக்கும்"
    அரசு அறிவிப்பை பார்த்தபின்
    பதறியடித்துக் கொண்டு பறக்கும் பைக்.

    அப்பாடா
    நம்ம ஊர் தேவலாம்.

    ReplyDelete
  29. நல்லதொரு கதை. இந்த கவிதை வரிகளை முன்னமேயே படித்த நினைவு எனக்குமிருக்கிறது.

    ராங்கியம் கருப்பர் கூலி கொடுத்தாரா? அது தனிக்கதை - அதை இன்னொரு நாள் பார்ப்போம். இப்போது பிரதானக் கதைக்கு வருகிறேன்.//

    இந்தக் கதையையும் தனியாக எழுதுங்கள், படிக்க ஆவலாக இருக்கிறேன்.

    ReplyDelete
  30. நான் ஆராய்ந்த கர்மவினை சம்மந்தபட்ட உண்மை சம்பவங்களை,
    கூடிய விரைவில் எழுதுகிறேன்//

    படிக்க ஆவலுடன் இருக்கிறேன். நான் தங்களிடம் கேட்க விரும்பிய கேள்வி இதோ:

    அன்று ஒரு பின்னூட்டத்தில் புவநேஸ்வரிடம் நானும் நீங்களும் பேசிக்கொண்டது கூட ஏற்கனவே விதிக்கப்பட்டது என்று சொல்லியிருந்தீர்கள். அப்படி ஒவ்வொரு சிறு நிகழ்வும் கூட விதிக்கப்பட்டது எனும்போது கர்ம வினைகள் எங்கிருந்து வரும்? உங்கள் பின்னூட்டக் கருத்தை மறுப்பதற்காக நான் இதைக்கேட்கவில்லை. உங்களிடமிருந்து சற்று ஆழ்ந்த விளக்கம் வரும் என்று தோன்றியதாலேயே, உண்மையில் தெரிந்துகொள்ளும் ஆர்வத்திலேயே கேட்கிறேன்.

    ReplyDelete
  31. பெண்ணிய வாதிகள் கணவன்மார்களுக்கு எதிராகப் பெண்களைத் தூண்டுவதை விடுத்துச் சொத்தைத் தர மறுக்கும் சகோதரர்களுக்கு எதிராகத் தூண்ட வேண்டும்.//

    ரொம்ப எச்சரிக்கை உணர்வோடு பின்னூட்டம் போட்டிருக்கிற மாதிரி தெரியறதே!!!!

    ReplyDelete
  32. நான் நிறையப் பார்த்திருக்கிறேன். அந்த அனுபவங்கள்தான் சமயங்களில் கதைகளாக வருகின்றன. நன்றி ஆனந்த்!//

    நானும் நேரடியாக சொத்துக்கு அடித்துக்கொள்வதைப் பார்த்ததில்லை. இதெல்லாம் முன்கூட்டியே யோசிச்சுதான் எங்க தாத்தா (அப்பா வழி) தொலைநோக்குப் பார்வையுடன் எல்லா சொத்தையும் சீட்டாட்டம், கிண்டி ரேஸ்னு நல்லா என்ஜாய் பண்ணிட்டுப் போய் சேர்ந்துவிட்டார்.

    ReplyDelete
  33. ./// Uma said...
    நான் ஆராய்ந்த கர்மவினை சம்மந்தபட்ட உண்மை சம்பவங்களை,
    கூடிய விரைவில் எழுதுகிறேன்//

    படிக்க ஆவலுடன் இருக்கிறேன். நான் தங்களிடம் கேட்க விரும்பிய கேள்வி இதோ:

    அன்று ஒரு பின்னூட்டத்தில் புவநேஸ்வரிடம் நானும் நீங்களும் பேசிக்கொண்டது கூட ஏற்கனவே விதிக்கப்பட்டது என்று சொல்லியிருந்தீர்கள். அப்படி ஒவ்வொரு சிறு நிகழ்வும் கூட விதிக்கப்பட்டது எனும்போது கர்ம வினைகள் எங்கிருந்து வரும்? உங்கள் பின்னூட்டக் கருத்தை மறுப்பதற்காக நான் இதைக்கேட்கவில்லை. உங்களிடமிருந்து சற்று ஆழ்ந்த விளக்கம் வரும் என்று தோன்றியதாலேயே, உண்மையில் தெரிந்துகொள்ளும் ஆர்வத்திலேயே கேட்கிறேன்.///

    இந்த ஆர்வம் யாருக்குத் தான் இல்லை
    இனி பதிவுகள் வரட்டும் நம்

    கசடுகள் களையட்டும் போகரிடமிருந்து
    கருத்துக்கள் மலரட்டும்..

    இந்த செய்தியினை உங்களுக்கு தந்து
    இனிமையான வணக்கங்களுடன்..

    பேறு இழவு இன்பமோடு
    பிணி மூப்பு சாக்காடு என்னும்
    ஆறும்முன் கருவுட்பட்டது
    அவ்விதி அனுபவத்தால் ஏறிடும்" என

    சித்தாந்த சாத்திரத்தின் தலையாய
    சித்தியார் வாக்கை அறியாதவர்கள் உளரோ?

    ReplyDelete
  34. //நான் ஆராய்ந்த கர்மவினை சம்மந்தபட்ட உண்மை சம்பவங்களை,
    கூடிய விரைவில் எழுதுகிறேன்//

    ஐயா, நான் தங்களது எழுத்துக்களை மிக ஆவலாக எதிர்பார்க்கிறேன். தங்களிடம் ஒரு வினாவை முன் வைக்கத் தங்கள் அனுமதியைக் கோருகிறேன்.

    தனுஷ்டை நட்சத்திரங்களில் நிகழும் இறப்பு கர்மவினைகளாலேயே வருகிறது எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவ்வாறு இறந்தவர்களை, சுவர் இடித்து வழிசெய்து வெளிக்கொணர்வதையும் பார்த்திருக்கிறேன். (இப்போது வேட்டியில் துவாரமிட்டுச் செய்கிறார்கள்). நட்சத்திரத்தைப் பொறுத்து 'வீடுமூடல்' செய்வதும் பரிகார சாந்தி செய்வதும் கண்டிருக்கிறேன். இதன் முழுக் காரணத்தையும் எங்களுக்கு அறியத் தருமாறு பிரார்த்திக்கிறேன். மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  35. /// Uma said...
    நான் ஆராய்ந்த கர்மவினை சம்மந்தபட்ட
    உண்மை சம்பவங்களை,
    கூடிய விரைவில் எழுதுகிறேன்//
    படிக்க ஆவலுடன் இருக்கிறேன். நான்
    தங்களிடம் கேட்க விரும்பிய
    கேள்வி இதோ:
    அன்று ஒரு பின்னூட்டத்தில்
    புவநேஸ்வரிடம் நானும் நீங்களும்
    பேசிக்கொண்டது கூட
    ஏற்கனவே விதிக்கப்பட்டது என்று சொல்லியிருந்தீர்கள்.
    அப்படி ஒவ்வொரு சிறு நிகழ்வும் கூட
    விதிக்கப்பட்டது எனும்போது கர்ம
    வினைகள் எங்கிருந்து வரும்? ;

    அன்புள்ள சகோதரிக்கு உங்களின்
    ஆர்வத்திற்கு
    என்னுடைய வாழ்த்துக்கள்.
    முதலில் கர்மவினை நிர்ணயம் என்ன
    என்பதை,
    நீங்கள் மிக சரியாக புரிந்து கொள்ள
    வேண்டும்.
    முதலில் கர்மா என்றல் என்ன?
    'உங்களால் செய்யபடுகிற
    செயலே கர்மாவாகும்!
    அந்த கர்மாவால்
    ஒருவருக்கு நன்மை நடந்தால்
    அது புண்ணியம்!
    அந்த கர்மாவால்
    ஒருவருக்கு தீமை நடந்து,
    அதனால் அவர் பாதிக்கப்பட்டால்
    அது பாவமாகும்!
    நீங்கள் புவனேஷ்வரன்
    அவர்களை குறிப்பிட்டதால்
    அவர் சார்ந்தே ஒரு உதாரணம்
    சொல்கிறேன்.
    முற்பிறவியில் நீங்கள், உங்களுடைய
    நல்ல குணத்தால் புவனேஷ்
    அவர்களுக்கு,
    ஒரு உதவி செய்கிறீர்கள்.
    அதனால் புவனேஷ்க்கு பல நன்மைகள்
    நடக்கிறது. அதனால்
    உங்களுக்கு புண்ணியம் கிடைக்கிறது,
    இந்த புண்ணியத்திற்கு உண்டான
    பலன்களை,
    நீங்கள் கீழ்காணும் மூன்று விதங்களில்
    அடையலாம்.
    விதி முறை ஒன்று; நீங்கள் செய்த
    புண்ணிய செயலுக்கான பலனை,
    இறைவனே உங்களுக்கு தரலாம்.
    விதி முறை இரண்டு; நீங்கள்
    உதவி செய்த புவனேஷ்வரனே,
    உங்களுக்கு வேரு விதங்களில்
    (நன்றிகடன்) உதவிகள் செய்யலாம்.
    அது இந்த பிறவியிலே நடக்கலாம்.
    அல்லது
    மறுபிறவியிலும் நடக்கலாம்.
    விதி முறை மூன்று; நீங்கள் செய்த
    புண்ணிய செயலுக்கான பலனை,
    மூன்றாம் நபர்கள் மூலமாக
    அடையலாம். (உங்கள் நல்ல குணத்தால்
    புவனேஷ்வருக்கு நீங்கள் வலிய
    சென்று உதவியது போல்)
    இந்த விபரங்கள் அனைத்தையும் பாவ
    செயல்களால் ஏற்ப்படுகிற,
    தீய
    கர்மாக்களோடு ஒப்பிட்டு பாருங்கள்.
    'நீங்கள் உங்கள் தீய குணத்தால்
    ஒருவருக்கு
    தீமை செய்கிறீர்கள்.
    அதனால் அவர் மிகவும் துன்பபடுகிறார்.
    அதனால் உங்களுக்கு பாவம்
    கிடைக்கிறது.
    இந்த பாவத்திற்கு உண்டான பலனை,
    நீங்கள் கீழ்காணும் விதங்களில்
    அடையலாம்.
    விதி முறை ஒன்று; நீங்கள் செய்த பாவ
    செயலுக்கான பலனை
    இறைவனே உங்களுக்கு தண்டனையாக
    தரலாம். (இது பெரும்பாலும்
    நோய்களாகவோ அல்லது தீய
    கர்மா வினைகளுக்கு சமமான
    துன்பங்களாகவோ இருக்கலாம்)
    விதி முறை இரண்டு; உங்களால்
    துன்பபட்ட அவரே உங்களுக்கு,
    அதே போல் (பழிவாங்கும் உணர்ச்சி)
    துன்பம் செய்யலாம்.
    இது அதே பிறவியிலே நடக்கலாம்.
    அல்லது மறுபிறவியிலும் நடக்கலாம்.
    விதி முறை மூன்று; நீங்கள் செய்த தீய
    செயலுக்கான பலனை,
    மூன்றாம் நபர்கள் மூலமாக
    அடையலாம். (நமக்கு தீயகர்ம வினையால்
    கெடுதல் ஏற்பட வேண்டும் என்றால்,
    அதற்கான தீய சூழ்நிலையில், நாம்
    போய் சிக்கி கொள்வோம்.
    விதி அதை செய்யும்)
    உங்களுக்கு புரிதல் ஏற்பட வேண்டும்
    என்பதற்காக தான்,
    உங்களை உதாரணம் காட்டி, பதில்
    சொல்கிறேன்.
    தவறாக எடுத்து கொள்ளவேண்டாம்.
    ஒரு கர்மா நடக்கிறது (செயல்) என்றால்,
    அந்த கர்மா விதியாக வெளிப்படும்.
    அந்த விதியாக வெளிப்பட கூடிய
    மூன்று வழிகளை தான்
    மேலே சொல்லியுள்ளேன்.

    ReplyDelete
  36. நன்றி போகர் அவர்களே...
    சகோ உமா அவர்களுக்கு தாங்கள் அளித்த விளக்கம் எங்களுக்கும் சேர்த்தே என்று புரிந்து கொள்கிறோம்..

    இது தொடர்பாக மேலும் சந்தேகங்கள் உள்ளன. கேள்விகளாக கேட்க அனுமதிப்பீர்களா...?

    பின்ஊட்டப் பேழையில் சந்தேகங்களை பதிவு செய்ய இந்த வகுப்பறை அனுமதி தருமா?

    விவரம் சொன்னால் கேட்கின்றோம்
    விளக்கம் பெற தங்கள் மின் அஞ்சல் முகவரி வழங்கினால் மகிழ்வோம்

    அன்பான வாழ்த்துக்களுடன்

    ReplyDelete
  37. முதல் விதியான
    இறைவனே வந்து நன்மையோ,
    அல்லது தீமையோ தருவது,
    பெரும்பாலும் மிக உச்சகட்டமான,
    புண்ணிய கர்மாக்களுக்கோ,
    அல்லது பாவ கர்மக்களுகோ தான்
    நடக்கும்.
    இரண்டாவது விதி செயல்பட வேண்டும்
    என்றால்,
    முற்பிறவி சம்மந்தபட்டவர்கள்
    பெரும்பாலும்,
    உறவினர்களாகவோ அல்லது
    நண்பர்களாகவோ இருப்பார்கள்.
    மூன்றாவது விதி தான், பெரும்பாலும்
    இந்த உலகில் செயல்படுகிறது.
    நம்முடை கர்மாகளுக்கு ஒத்து வர
    கூடிய நபர்களை சந்திப்பதும்,
    அவர்கள் மூலமாக,
    நம்முடைய
    கர்மாவினைகளுக்கு தகுந்தற்ப் போல்,
    நன்மையோ அல்லது தீமையோ ஏற்ப்படும்.
    'நீங்கள் யாருக்கும் நன்மையோ,
    அல்லது தீமையோ செய்ய முடியாது.
    உங்களால் ஒருவருக்கு நன்மை செய்ய
    முடிகிறது என்றால்,
    அவருடைய நல்ல கர்மாவினைகளுக்கு,
    நீங்கள் கருவி ஆகிறீர்கள்.
    உங்களால் ஒருவருக்கு தீமை செய்ய
    முடிகிறது என்றால்,
    அவருடைய தீய கர்மா வினைகளுக்கு,
    நீங்கள் கருவி ஆகிறீர்கள்.
    உடனே நீங்கள் கேட்கலாம்.
    நான் பிறருடைய கர்மாவினைகளுக்கு
    கருவி தானே ஆகிறேன்
    பிறகு எப்படி, அதற்குண்டான
    நன்மை (விதி) தீமை என்னை வந்து,
    அடையும் என்று நீங்கள் கேட்கலாம்.
    இங்கு தான் நீங்கள் கவனிக்க வேண்டும்.
    நீங்கள் நல்லவராக இருந்தால் மட்டுமே,
    பிறருடைய நல்ல
    கர்மா வினைகளுக்கு கருவியாக
    முடியும்.
    நீங்கள் தீயவராக இருக்கும் பட்சத்தில்,
    பிறருடைய தீய கர்மா வினைகளுக்கு,
    கருவி ஆகிவிடுவீர்கள்.
    அதனால் ஏற்படும் விதியையும், நீங்கள்
    அனுபவிக்க வேண்டியதாகிவிடும்.
    இதனால் தான் நம்முடைய
    முன்னோர்கள்,
    நல்லதே நினை, நல்லதே செய்
    என்கிறார்கள்.
    புவனேஷ்வருக்கு நான் உதவியது,
    நான் மேலே கூறிய,
    இரண்டாவது அல்லது,
    மூன்றாவது விதிமுறையால்
    ஏற்பட்டதாக இருக்கலாம்.
    அது நடக்க விதியால் நிர்ணயம்
    செய்யபட்ட இடம்,
    'நம்முடைய வகுப்பறை அவ்வளவே'
    இறைவன் நாம் அனைவருக்கும்
    பிறவியை,
    தருவதற்கு காரணம் நாம்,
    நம்முடைய தெய்விக
    தன்மையை உணர்ந்து மேன்மை அடையவே.
    ஆனால் நமோ பெரும்பாலும்
    மாயை வசப்பட்டு
    நன்மையோ அல்லது தீமைகளோ செய்து,
    பிறவிகள் எடுத்து அவதிபடுகிறோம்.
    முதலில் பாவ கர்மாக்களை தவிர்க்க,
    புண்ணிய கர்மாக்களை செய்து பிறகு,
    புண்ணிய கர்மாக்களை விட்டு,
    இறைவனை அடைவதே
    நாம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
    நமக்கும் இறைவனுக்கு இடையில்
    இருப்பது, நம்முடைய கர்மாவினைகளே.
    முதலில் இறைவன் கர்மாவினைகள்
    மனிதன் என்று
    இருக்கும் நிலையில், நாம் நம்முடைய
    கர்மாவினைகளை,
    பிறவிகள் தோறும்
    குறைத்து கொண்டே வரும் நிலையில்
    ஒரு பிறவியில் கர்மவினைகள்
    முற்றிலும் நீங்கி
    இறைவன் மனிதன் என்கிற நிலை வரும்.
    அப்பொழுது இணைத்தல் நடக்கும்
    (யோகம்)
    பிறகு
    இறைவன் மட்டுமே இருப்பார்.
    கர்மவினை இயலில் பொது கர்ம சார்ந்த
    விபரங்களை ஆராய்வதை விட
    தனி மனித
    கர்மாக்களை ஆராய்வது சுலபம்.
    அப்படிபட்ட
    சம்பவங்களை எழுதுகிறோம்.
    ஓம் சரவணபவ நம

    ReplyDelete
  38. ஆச்சியின் தெளிவான சிந்தனையும் பேச்சும் வயதானோர்க்கு தெளிவைத் தரும் என்பதில் ஐயமில்லை.

    ராங்கியம் கருப்பரின் திருவிளையாடல் எப்போது வரும் ஐயா???

    ReplyDelete
  39. உங்களின் தெளிவான விளக்கத்திற்கு நன்றிகள் திரு. போகர் அவர்களே!

    ReplyDelete
  40. பார்வதி அம்மையார் சமீபத்தில்,என்னிடம்
    ஒரு கேள்வி கேட்டு இருந்தார்.
    வேலை பளு காரணமாக என்னால் அதற்க்கு,
    பதில் தெரிவிக்க முடியவில்லை.
    ஜோதிடத்தின் மேல் ஆர்வம் உள்ள அனைவரும்,
    அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்.
    அருமையான கேள்வி என்பதால்,நான் அறிந்தவரை
    சில விபரங்களை உங்களிடம் தெரிவிக்கிறேன்.
    கேள்வி இது தான்.

    ////Parvathy Ramachandran said...
    தனுஷ்டை நட்சத்திரங்களில் நிகழும்
    இறப்பு கர்மவினைகளாலேயே வருகிறது எனக்
    கேள்விப்பட்டிருக்கிறேன்.
    அவ்வாறு இறந்தவர்களை, சுவர்
    இடித்து வழிசெய்து வெளிக்கொணர்வதையும்
    பார்த்திருக்கிறேன்.
    (இப்போது வேட்டியில் துவாரமிட்டுச்
    செய்கிறார்கள்). நட்சத்திரத்தைப்
    பொறுத்து 'வீடுமூடல்' செய்வதும்
    பரிகார சாந்தி செய்வதும்
    கண்டிருக்கிறேன். இதன் முழுக்
    காரணத்தையும் எங்களுக்கு அறியத்
    தருமாறு பிரார்த்திக்கிறேன். மிக்க
    நன்றி ////

    வணக்கம் அம்மையே.
    இவ்வுலகில் நிகழும் அனைத்து நிகழ்வுகளும்,
    கர்மவினைகளை சார்ந்தே நடக்கின்றன.
    அதில் தாங்களுக்கு எள் அளவும் சந்தேகம் வேண்டாம்.
    ஆனால் அந்த கர்மவினை நிர்ணயம்(விதி)
    நம்மால் முன்னால் செய்யப்பட்ட செயலால் நிர்ணியிக்கபட்டவை,
    என்பதை நாம் உணர வேண்டும்.
    இப்பொழுது நம்மால் செய்யபடுகிற செயல்கள்,
    நம்முடைய எதிர்கால கர்மாக்களை தீர்மானிக்கும்.
    அது நல்லவினையாகவோ,அல்லது தீயவினையாகவோ வெளிப்படுவது,
    நம்முடைய செயல்களை பொருத்த விசயம்.
    தனுஷ்ட நட்சத்திரங்களில் இறப்பு எற்படுவது,
    கர்மா காரணமா ?
    இதன் முழு காரணத்தையும் சொல்லுங்கள் என்று,
    நீங்கள் கேட்டு இருக்கிறீர்கள்.
    தனுஷ்ட நட்சத்திரங்களில் இறக்கும் அனைத்து,
    ஆத்மாக்களும் துன்பப்படுவதில்லை.
    மற்ற நட்சத்திரங்களில் இறப்பவர்கள் அனைவரும்,
    நற்கதியையும் பெற்றுவிடுவதில்லை.
    நம் முன்னோர்களால் சொல்லப்பட்ட அனைத்து விசயத்திற்குமே,
    இரண்டு பக்கம் உண்டு.
    ஒன்று பொது விதி.இன்னோன்று தீர்மானிக்கப்பட்ட சூட்சம விதி.
    நாம் அனைவரும் பொது விதியை சார்ந்தே,பெரும்பாலும் வாழ்கிறோம்.
    'இந்த பிரபஞ்சத்திற்கும்,ஒவ்வொரு தனிமனிதனுக்கும்
    மிகவும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
    இதை உணர்ந்த சித்தர்கள்,
    அண்டத்தில் உள்ளதே,பிண்டத்திலும் இருக்கிறது என்றார்கள்.
    மற்ற எல்லா கிரகங்களின் அதிர்வலைகளை விட,
    மனோகாரன் சந்திரனால்,ஒரு மனிதன் அதிகமாக
    கட்டுபடுத்தபடுகிறான்.
    உதாரணமாக பௌர்ணமி அன்று,சந்திரன் தன் சோடசகலை அதிர்வுகளால்,
    மிக விசேஷ நாட்களாக நம்மால் எற்று கொள்ளப்படுகிறது.
    கோவில்களிலும் அந்த நாட்களில்,விசேஷ பூஜைகள் நடக்கிறது.
    விரத தினமாகாவும் அனுஷ்டிக்கப்படுகிறது.
    சித்தர்களை வணங்கவும் எற்ற நாள்.
    இதே போல் அமாவாசையை எடுத்து கொள்ளுங்கள்.
    சந்திரன் மிகவும் பலவீனமான அதிர்வுகளை வெளியிடுகிறான்.
    அந்த நாள் இறந்த முன்னோர்களுக்கு திதி கொடுக்கவும்,
    சில உக்கிர தெய்வங்களை பூஜை செய்யவும் எற்ற நாட்களாக இருக்கிறது.
    இந்த நாட்களில் இயற்கை ரீதியாகாவும்,தனி மனிதர்கள் அடிப்படையிலும்,
    சில பாதிப்புகளை ஏற்படுத்தும்.
    உதாரணமாக அமாவாசையை பௌர்ணமி நாட்களில்,
    ஒரு ஆரோக்கியமான மனிதனை விட,
    மனநிலை பாதிக்கப்பட்ட,மனிதர்களின் மன உணர்ச்சிகள்,
    அதிகம் கொந்தளிப்புகள் உள்ளதாக இருக்கும்.
    நன்றாக கவனியுங்கள்.இயற்கை சார்ந்து,ஒரே நிலையில் தான் சந்திரன் இருக்கிறார்.
    ஆனால் நம்முடைய உடல் தகுதி மற்றும் மன தகுதியை பொருத்து,
    பாதிப்புகள் இரு வேறு விதமாக உணரப்படுகிறது.
    இதே நிலைபாடு தான் தனிஷ்ட நட்சத்திரங்களில் இறக்க கூடிய,
    ஆத்மாக்களுக்கும் ஏற்படுகிறது.
    ஏன் என்றால் வான மண்டலத்தில் சில நட்சத்திரங்களில்,
    சந்திரன் செல்லும் போது இறக்க கூடி சிலர்,
    இறப்பிற்கு பிறகு,சில சூட்சும தன்மையில் அவதிபடுவார்.ஆவேசம் அடைவார்.

    ReplyDelete
  41. தொடர்ச்சி.....
    இந்த தனிஷ்ட நட்சத்திரங்களில் இறக்கும் அனைவருக்கும்,
    இந்த நிலை ஏற்படுமா ? என்றால் ஏற்படாது.
    நாம் பல பாவ கர்மாக்களை செய்து, எதிர்மறையான(கெட்ட)
    ஆற்றலோடு இருந்தால் மட்டுமே,
    இயற்கையின் எதிர்மறை ஆற்றல்களுக்கு,
    நாம்(உயிர்)உடன்படுவோம்.
    அப்படி இல்லாமல் பல புண்ணிய கர்மாக்களை செய்து,
    நேர்மறையான(நல்ல)
    ஆற்றலோடு இருந்தால்
    இயற்கையின் எதிர்மறை ஆற்றல்களுக்கு,
    நாம்(உயிர்)உடன்படமாட்டோம்.
    சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால்,
    பூர்வ புண்ணியம் நிரம்ப பெற்றவர்களும்,இந்த பிறவியில் பல
    புண்ணியங்கள் செய்தவரும் ஆழ்ந்த இறை நம்பிக்கை உடையவர்களும்,
    மேற்கூறிய நட்சத்திரங்களில் இறக்கும் போதும்,
    அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பாடது.
    ஆனால் பூர்வ புண்ணியம் கெட்டு,இந்த பிறவியில்,
    மனம் போன போக்கில் பல பாவ செயல்கள் செய்து
    விதியும் சதி செய்து,தனிஷ்ட நட்சத்திரங்களில்
    இறக்க கூடிய,ஆன்மாக்கள் இறப்பிற்க்கு பிறகு,
    பல விதங்களில் இன்னல்களுக்கு ஆளாவர்கள்.
    பெரும்பாலும் அந்த ஆன்மா இறப்பிற்கு பிறகு,
    மேல் நிலைக்கு செல்ல முடியாமல்,இறந்த இடத்திலே தங்கிவிடும்.
    ''நீங்கள் கூறியபடி,சுவர் இடித்து சடலத்தை வெளி கொண்டு வருவாதலோ,
    அல்லது வேட்டியில் துவராமிட்டு கொண்டு வருவதலோ,
    எவ்வித பயனும் இல்லை,,
    மேற் கூறிய சம்பிரதாய செயல்கள் அனைத்தும்.பொது விதியாகும்.
    இறப்பிற்கு பிறகு,அந்த ஆன்மா நற்கதி அடையாமல்,
    இறந்த இடத்திலே தங்கி விடுவதால்,
    அந்த வீட்டை சேர்ந்தவர்களுக்கு ,
    பல விதங்களில் துன்பங்கள் ஏற்படலாம்.
    இப்பொழுது உங்களின் மனதில் ஒரு கேள்வி எழும்,
    சில நாட்களுக்கு முன்னால் நம்மோடு வாழ்ந்தவர்
    இறப்பிற்கு பின்னால் நமக்கு கெடுதல் செய்வரா என்று,

    அவர்களின் நிலையை நாம் உணர வேண்டும்.
    இறப்பிற்கு பிறகு தாங்கள் வாழ்ந்த உடலை இழந்து,
    நற்கதியும் கிடைக்காமல்,
    சூட்சும நிலையில் பிராண அவஸ்தைகளில் அவதிபட்டு,
    ஆவேசபட்டு கொண்டு இருப்பார்கள்.
    அந்த ஆவேச நிலையில் உறவு முறைகளை
    உணர கூடிய தன்மை அவர்களுக்கு இருக்காது.

    நற்கதி அடையாத ஆன்மா அந்த வீட்டில் இருப்பதால்,
    அங்கு வசிப்பவர்களுக்கு,காரிய தடைகள்,பல விதமான இன்னல்கள்
    விபத்துகள்,நோய் நொடிகள்,சுய வாழ்கையில் காரணமே
    தெரியாத பிரச்சனைகளால் அல்லாடுவார்கள்.
    சரியான காரணம் தெரியாமல் தவிப்பார்கள்.

    இந்த பிரச்சனைகள் அனைத்தும்,அந்த சாந்தி அடையாத,
    ஆன்மாவால் தான் எற்படுகிறது என்பதை,
    ஆன்மிகத்தில் உயர் நிலையில் இருப்பவர்களும்,
    மந்திர சாஸ்திரங்களில் தேர்ச்சி அடைந்தவர்களும் உணர்வார்கள்.

    நாம் இப்படிபட்டவர்களை அணுகி ,அந்த ஆன்மா தன் நிலையை உணர்ந்து,
    மேல் நிலையை அடைய சாந்திகளும் பூஜைகளும் செய்ய வேண்டும்.

    தில ஹோமம் நற்கதி அளிக்கும்.'ஜல தாரை'பூஜை போன்றவைகளும் உயர்கதி அளிக்கும்.
    என்ன தான் பூஜை புனஸ்காரங்கள் செய்தாலும்,
    எதுவும் அன்னதானத்திற்கு ஈடகாது.
    இறந்து போன அந்த ஆன்மாவை நினைத்து,
    நம்மால் இயன்ற வரை அன்னதானம் செய்து,
    சிவபெருமானை நினைத்து,இறைவா இப்போது செய்ய்ப்பட்ட,
    அன்னதானத்தால் வருகிற புண்ணிய பலன் அனைத்தும்,
    அந்த ஆன்மாவை சென்று சேரட்டும்,என்று அர்பணித்து பிராத்தனை,
    செய்வது மூலமும்,அந்த ஆன்மா உயர் கதி அடையவும்,உதவியாக இருக்கும்.
    இன்று பலரின் ஜாதகங்களை ஆராயும் போது,
    பித்ருதோசம் குலதெய்வதோசம் போன்றவைகள் இன்றைய காலத்தில் அதிகமாக இருக்கின்றன.
    குலதெய்வத்தையும்,பித்ருகளையும் மறந்தால் நம்முடைய வாழ்க்கை சிறப்படையது.
    நாம் இறந்து போன முன்னோகள் நற்கதி அடைய,
    சாஸ்திர ரீதியாக நம்மால் எதுவும்
    செய்ய முடியவில்லை என்றால்,
    ஒவ்வொரு அமாவாசை அன்றும்,குறைந்தபட்சம்,
    பத்து உணவு பொட்டலங்களையாவது,
    சாலையோரங்களில்,
    இருக்க கூடி அதரவற்றவர்களுக்கு கொடுத்து,
    இந்த அன்னதானத்தால் வருகிற புண்ணிய பலன்களை என்னுடைய முன்னோர்களிடம்
    சேர்த்துவிடுங்கள் இறைவா,
    என்று பிராத்தனை செய்யுங்கள்.
    இது போல் ஒவ்வொரு அமாவாசை அன்றும் செய்யுங்கள்.
    வாழ்வில் மாறுதல்கள் ஏற்படுவதை உணர்வீர்கள்.

    ReplyDelete
  42. குலதெய்வ வழிபாடும்,ஒரு வகையில் பித்ரு வழிபாடே.
    இன்று குலதெய்வங்களாக வழிபடுகிறவர்களின் மூலத்தை ஆராய்ந்தால்,
    அவர்கள் சில நூற்றண்டுகளுக்கு முன்,
    நம்மை போல் மனிதர்களாக வாழ்ந்து,
    தன்னை சார்ந்த மனிதர்களுக்காக,தன் இன்னுயிரை தியாகம் செய்த மகாத்மாக்களே.
    இவர்களின் தியாக உணர்வை மெச்சி இறைவனும்,
    அந்த குல மனிதர்களுக்கு சேவை செய்யும் பாக்கியத்தை கொடுத்து இருப்பார்.
    அவர்களும் சில நூற்றண்டுகள் பிறவிகள் எடுக்காமல்
    தங்கள் சேவைகளை செய்து கொண்டுடிருப்பர்கள்.
    இதை சூட்சுமமாக தெரிந்து கொண்ட நம் முன்னோர்கள் அவர்களை
    வணங்க வழிமுறைகளை ஏற்படுத்தினார்கள்.
    இந்த குல தெய்வத்தின் அருள் உள்ள,குடும்பத்தை சேர்ந்த ஒருவர்,
    தன்னுடைய சுய பாவ கர்மாவினையால்,
    'தனிஷ்ட நட்சத்திரங்களில்'இறந்து சூட்சும வழிகளில்,
    துன்பபடும் போது,
    குலதெய்வம் அந்த ஆத்மாவிடம் சென்று வழிகாட்டும்.
    இந்த மாதிரி சூட்சும சக்திகளை எல்லாம்,
    நாம் அறிவியல் என்கிற காரணத்தால்,
    'மூட நம்பிக்கைகள்'என்று மறுத்த விளைவுகளால் தான்
    நம்முடைய ஆன்மிக செல்வங்களை சிறிது சிறிதாக இழந்து வருகிறோம்.
    மனம்,வாக்கு,காயம் மூன்றாலும்,நற்கர்மாக்கள் மட்டுமே,
    செய்து வரும் போது,எந்த நட்சத்திரங்களில் மரண ஏற்பட்டாலும்,
    நாம் இறைவனை மட்டுமே சென்று அடைவோம்.

    ஓம் சரவணபவ நம

    ReplyDelete
  43. /// Bhogar said...
    என்ன தான் பூஜை புனஸ்காரங்கள் செய்தாலும்,
    எதுவும் அன்னதானத்திற்கு ஈடகாது.///

    சரியே..

    ///இன்று குலதெய்வங்களாக வழிபடுகிறவர்களின் மூலத்தை ஆராய்ந்தால்,
    அவர்கள் சில நூற்றண்டுகளுக்கு முன்,
    நம்மை போல் மனிதர்களாக வாழ்ந்து,
    தன்னை சார்ந்த மனிதர்களுக்காக,தன் இன்னுயிரை தியாகம் செய்த மகாத்மாக்களே.////

    சபாஷ்..
    சரியான விளக்கம்...

    இதைத் தான்
    கடவுள் வேறு தெய்வம் வேறு இறைவன் வேறு ஆண்டவன் வேறு என சொல்லி பின் ஊட்டம் வைத்துள்ளோம்..

    வாழ்க தோழரே..
    வணக்கங்களுடன்..

    ReplyDelete
  44. திரு. போகர் அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.

    வெகுநாட்களாக என் மனதில் இருந்த பெரும் சந்தேகங்களைத் தீர்த்து வைத்த தங்களுக்கு என் மிகப் பணிவான நன்றிகள். தங்களது தெளிவான விளக்கம், மனதிற்குப் மிகப் பெரும் நிம்மதியை வழங்கியதென்றால் மிகையாகாது. தாங்கள், தங்கள் கட்டுரை மூலமாக, என் சந்தேகத்தை தெளிவுபடுத்தக் கூடும் என்று காத்திருந்தேன். தாங்கள் என் மிக நீண்ட, மிக மிகத் தெளிவான விளக்கங்களைப் பின்னூட்டத்திலேயே தந்து விட்டீர்கள். தாங்கள், தங்கள் பொன்னான விளக்கங்களைத் தந்தமைக்கு என் மனமார்ந்த,மிகப் பணிவான‌ நன்றி.

    பரங்குன்றத்து முருகனருளே தங்களைப் போன்ற அருளாளர்களிடமிருந்து நிறையத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பைத் தந்திருக்கிறது. மீண்டும் தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி ஐயா.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com