8.6.12

Devotional சண்முகநாதனுக்கு சந்தத்துடன் ஒரு பாடல்!

 Devotional சண்முகநாதனுக்கு சந்தத்துடன் ஒரு பாடல்!

திருமதி  திருமதி சுதா ரகுநாதன் அவர்கள் பாடிய பாடல் ஒன்றை உங்களுக்கு அளிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.
அனைவரும் கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்
----------------------------------
பக்திப் பாடல்
பாடிப் பரவசப் படுத்துபவர் திருமதி சுதா ரகுநாதன் அவர்கள்
பாடலுக்கான சுட்டி:
http://youtu.be/bp-i4twUXUE
இந்தப் பாடலை இணையத்தில் வலையேற்றிய அந்த முகம் தெரியாத நண்பருக்கு நம் நன்றிகள் உரித்தாகுக!


வாழ்க வளமுடன்!

27 comments:

  1. ஓம் சரவணபவ எனும் திருமந்திரம்
    அதனை சதா ஜெபி என் நாவே.....,

    அதனை தான் என்னுடை பதிமுன்று வயதில்
    இருந்து செய்து கொண்டிருக்கிறோம்.

    கர்மவினைகளால் கலங்கிய போதெல்லாம்
    நேரம் கிடைத்தால்,

    ஒரு நாளைக்கு ஒரு லட்சம் தடவை கூட.

    ஓம் சரவணபவ நம

    ReplyDelete
  2. பாடல்: சரவணபவ என்னும்
    ராகம்: சண்முஹப்ரியா
    தாளம்: ஆதி
    வரிகள்: பாபநாசம் சிவன்

    பல்லவி:
    சரவணபவ எனும் திருமந்திரம் - தனை
    சதா ஜபி என் நாவே - ஓம் (சரவண)

    அநுபல்லவி:
    புரமெரித்த பரமன் நெற்றிக் கண்ணில் உதித்த
    போத சொரூபன் பொற்பாதம் தனைப் பணிந்து (சரவண)

    சரணம்:
    மண்மிசை கிடந்துழல் பிறவிப் பிணியைத் தீர்க்கும்
    மாயை அகலப் பேரின்ப நெறியில் சேர்க்கும்
    தண்மதி நிகர் குளிர் கருணை நிலவு (உ)மிழும்
    சண்முக ப்ரிய சடாக்ஷர பாவன (சரவண)

    பாட்டு என்னமோ நல்லாத்தான் இருக்கு, ஆனால் புரியல ....சுத்தமாப் புரியல...

    எட்டே வரிப் பாடலை, ஒவ்வொரு வரியையும் பற்பல முறை பாடியும் நாலரை நிமிடத்தில் பாடல் முடிந்துவிட, பாடகி பத்தரை நிமிடங்களுக்குமேல் ராக ஆலாபனை என்று பாடிக்கொண்டே இருக்க, அதுவும் முடிந்தபாடில்லை ....பாதியிலேயே நிறுத்தப் பட்டுவிட்டது. இது KMRK ஐயாவுக்குப் பிடித்த பாடல்.

    எனக்கெல்லாம் தளபதி படத்தில் "யமுனை ஆற்றிலே" போன்று சுருக்கமான இனிமையான மெல்லிசைப்பாடலைக் கேட்டுப் பழகிவிட்டு, ஏன் இப்படி பாடிக்கொண்டே இருக்கிறார்கள் என்று புரியவில்லை. இசையின் மகத்துவம் தெரியாத என்னை மன்னிக்கவும். க.தெ.க.வா.(கழுதைக்கு தெரியுமா கற்பூரவாசனை என்று முடிந்தவரை சுருக்கமாக எனக்கு நானே கண்டனம் தெரிவித்துக் கொண்டேன், அதாவது சுருக்கமாக இருக்கட்டும் என்றுதான்)

    ReplyDelete
  3. மிகவும் அருமையானதொரு பாடல்.

    பாவங்கள் யாவும் நாசம் செய்யும்
    பரந்தாமன் மால்மருகன் திருப்
    பாதம் தனைப்பணிந்தே இரு மனமே!

    என்று பாபநாசம் சிவனாரின் அழகானதொருப் பாடல்.
    மாகடலெனும் கருணைக் கடவுளான ஷண்முகா நினது நற்கதி செய்யும் சொரூப நிலையே
    எத்தனை எத்தனை அற்புதங்கள் செய்யக் கூடியன என்பதை மிகவும்
    அழகாக ரத்தினச் சுருக்கமாக சொல்லி இருக்கிறார் புலவர்.

    அதுவும் சுதாரகுநாதனின் குரலில்... கண்களை மூடிக் கேட்கும் போது
    தேகமெங்கும் குளிர் குருதி பொங்கி குடம் குடமாக தலையில்
    இருந்து இதயம் புகுந்ததைப் போன்ற உணர்வைத் தந்து.
    மிகவும் இனிமையாக இருந்தது.... ஆனால் ஏனோ இடையிலே நின்றது....
    இந்த இசையை அடுத்த ஜன்மத்திலாவது நாமும்
    கற்றுக் கொள்ள வேண்டும் என்றேத் தோன்றுகிறது.
    பதிவுக்கு நன்றிகள் ஐயா!
    வேண்டும் முருகன் அருள்!!

    ReplyDelete
  4. சங்கீத ஞானம் உள்ளவர்கள் ரசிக்கக் கூடிய பாடல்தான். இதை என் அழுவலகத்தில் உடன் வேலை செய்யும் ஒருவருக்கு போட்டுக் காட்டினேன். தூக்கம் வருகிறது, நிறுத்தி விடு என்று சொன்னார்.

    இந்த பாடலின் இன்னொரு version, திரைப்பட பாடல், சுட்டி கீழே இருக்கிறது. கேட்டு மகிழுங்கள்.
    http://www.youtube.com/watch?v=Rig7pZPcOvU

    ReplyDelete
  5. குருவிற்கு வணக்கம்
    உள்ளேன் ஐயா
    நன்றி

    ReplyDelete
  6. ஆனந்த், நீங்கள் குறிப்பிட்ட மேட்டுக்குடி திரைபடத்தில் வரும் மனோ பாடிய சரவணபவ பாடலும் நல்ல பாடல்தான்.
    அது பழனி பாரதியின் பாடல். முற்றிலும் வேறுபட்டது, பாபநாசம் சிவன் அவர்களின் பாடல் அல்ல.

    ReplyDelete
  7. தேமொழி அவர்களே நான் அந்த பாடலை குறிப்பிட்ட காரணம் அது சரவண பவ என்னும் திருமந்திரம் என்று தொடங்குகிறது என்பதற்காகதான். மற்றபடி இதற்கும் அதற்கும் துளியளவும் சம்பந்தமில்லை என்பது எனக்கும் தெரியும்.

    ReplyDelete
  8. ஓஹோ..சரி. ஆனந்த்... ஆனால் அவர்களே...இவர்களே என்று அழைக்க வேண்டாம்...தேமொழி என்று சொன்னால் போதும் :))))))))))

    ReplyDelete
  9. முருகா.. முருகா..

    "என் பாட்டுக்குள்ளேயும் சங்கதி உண்டு கண்டுபிடி "

    என்ற சிந்து பைரவி படத்தின் பாடலினை சுழல விடாமல்

    வணக்கமும் வாழ்த்துக்களும்

    ReplyDelete
  10. அற்புதமான பாடல். முப்புரம் எரித்த சிவனாரின் நெற்றிக் கண்ணில் உதித்த ஞான ஸ்வரூபமான முருகப் பெருமானின் திருவடியைப் பணிந்து, ஆறெழுத்தை உச்சரிக்க, முழுமதி போல் கருணைபொழியும் திருமுகம் கொண்ட ஷண்முகரது க்ஷடாக்ஷர மந்திரம், மாயையை அகற்றி, பிறவிப் பிணி தீர்த்து, பேரின்பமாகிய முக்தியை அருளும் என்னும் அருமையான பொருள்பொதிந்த பாடல். இறையருட்செல்வரான, பாபநாசம் சிவனின் அற்புதப் பாடல்களுள் ஒன்று. இசைநுணுக்கங்கள் தெரியாதபோதே என்னை மிகவும் ஈர்த்த பாடல் இது. இசை நுணுக்கங்கள் மாறாமல், பாடலின் ஆன்மாவை வெளிப்படுத்துவது எவ்வளவு கஷ்டம் என்பதை அறிந்த பிறகு, பாடுபவர் மீது பெருமதிப்பு உண்டாகிறது. திருமதி சுதா ரகுநாதனின் அருமையான குரலில் வெளிப்படும் பக்தி பாவம் மனதில் உண்டாக்கும் உணர்வுகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை. அருமையான பாடல் பார்க்க,கேட்கத் தந்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  11. சுதா ரகுநாதன் எம் எல் வசந்தகுமாரியின் சிஷ்யை. எம் எல் வி, ஜி என் பி யின் சிஷ்யை.எனவே ஒரு நல்ல குரு பரம்பரை உள்ளவர்.
    எம் எல் விக்குப் பின் பாட்டுக்காரர்ரரக இருந்த சுதா இன்று முன்னணி இசை நட்சத்திரமாகத் திகழ்கிறார்.

    என் நண்பர், [எல் ஐ சி பகுதிமேலாளர் (ஓய்வு)] ராஜாராமனின் மூத்த மகள் சுதாவின் பெரிய ரசிகை. சுதாவுடன் கடிதத் தொடர்பில் இருந்தாள். அவ்வப் போது சுதாவின் பாட்டுத் திறனைப் பாராட்டி அவருக்கு எழுதுவாள். அந்த நட்புக்காக சுதா அந்தப் பெண்ணின் திருமண வரவேற்பில் தன் பரிசாக இசை விருந்து அளித்தார்.

    பாபனாசம் சிவன் அவர்கள் தமிழில் சாஹித்யம் எழுதியவர்களில் முன்னோடி.
    அருணாசலக் கவி, முத்துத் தாண்டவர் வழி வந்தவர்.
    தனித் தமிழ் இயக்கம் முன்னெடுக்கப்படும் வரை தமிழ் சமஸ்கிருதச் சொற்களுடன் கலந்து மணிப்பிரவாள நடையிலேயே இருந்தது.பெரியாரும் கூட நிறைய சமஸ்கிருதச் சொற்களைக் கலந்தே எழுதியுள்ளார். அதனால் அந்தக் கால நடைமுறையில் இருந்த தமிழ் இப்போது புரியவில்லை என்று
    தேமொழி சொல்வது எப்படியிருக்கிறது என்றால், ஆங்கிலம் கலக்காமல் நான் இப்போது எழுதும் தமிழ் தங்களுக்குப் புரியவில்லை என்று இக்கால பதின் வயதுக்காரர்ரகள் சொல்வதுபோல உள்ளது. புரியவில்லை என்பதை 'அண்டர்ஸ்டாண்ட் ஆகவில்லை' என்று எழுதினாலே நல்ல புரியும் தமிழ் என்பது இன்றைய நிலை.

    கர்நாடக இசையும், தமிழ்ப் பண்களும் ஒரு திட்டப் படுத்தப்பட்டு, அதற்கென்று இலக்கணம், கண்க்கு உள்ளது. அதற்கு உட்பட்டு அதே நேரத்தில் தன் கற்பனை வளத்தையும் காட்ட வேண்டும். மரபுக் கவிதையும் எழுத வேண்டும், அதில் கம்பனைப் போல் கற்பனையும் காட்ட வேண்டும்.மிகவும் க‌டினமானது. இன்று இலக்கணம் படிக்காதவர்கள் உரைநடையை மடக்கிப் போட்டு எழுதினால் புதுக் கவிதை என்கிறார்கள்.

    தூக்கம் வருபவர்கள் தூங்கட்டும். 45 இசைக் கருவிகளுடன் காட்டுக் கூச்சல்(மெல்லிசையா, வல்லிசையா?) கேட்டால் எப்படித் தூக்கம் வரும்?

    ஆம், எனக்குப்பிடித்த இந்தப் பாடலை ஐயா வெளியிட்டதற்கு நன்றி.

    ReplyDelete
  12. aiya avargalaukku vanakkam...migavum arumaiyana paadal..pathivettriyamaikku nandri

    ReplyDelete
  13. ////kmr.krishnan said... அதனால் அந்தக் கால நடைமுறையில் இருந்த தமிழ் இப்போது புரியவில்லை என்று
    தேமொழி சொல்வது எப்படியிருக்கிறது என்றால், ஆங்கிலம் கலக்காமல் நான் இப்போது எழுதும் தமிழ் தங்களுக்குப் புரியவில்லை என்று இக்கால பதின் வயதுக்காரர்ரகள் சொல்வதுபோல உள்ளது.///

    KMRK ஐயா, நான் பாடலின் பொருள் விளங்கவில்லை என்று சொல்லவில்லை.
    ஏன் பாட்டை இழுவையாய் இழுத்து பத்து நிமிடங்களுக்குப் பாடிக்கொண்டே இருக்கிறார் என்று குறிப்பிட்டேன்.
    அய்யர் ஐயா அவர்கள் சரியாக சிந்து பைரவியை தன் கருத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.

    "என்னமோ ராகம் என்னன்னமோ தாளம்
    தலைய ஆட்டும் புரியாத கூட்டம்
    எல்லாமே சங்கீதந்தான்
    சத்தத்தில் பொறந்த சங்கதிதான்"

    என்ற வரிகள் நினைவிற்கு வருகிறதா?....
    சொன்னது தப்பா? தப்பா? :)))))))))))

    பாபநாசம் சிவன், சுதா ரகுநாதன் ஆகியோரது திறமைகளைப் பற்றி நான் குறை சொல்லவில்லை, அதற்கெல்லாம் ஒரு தகுதி வேண்டாமா? "அன்னையும் தந்தையும்தானே வாழ்வில்", "வதனமே சந்திர பிம்பமோ", "கிருஷ்ணா முகுந்தா முராரே", "என்ன தவம் செய்தனை" போன்ற பாபநாசம் சிவன் பாடல்கள் எனக்குப் பிடிக்கும்.
    சுதா ரகுநாதன் ராக ஆலாபனை செய்து பாடுவதை ரசித்துக் கேட்கும் அளவிற்கு எனக்கு சங்கீத அறிவில்லை என்பதைத்தான் நானே குறிப்பிட்டிருந்தேனே.
    செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர் அவர்கள் இதே பாடலை நான்கு நிமிடங்களுக்குப் பாடியிருப்பதை கீழே உள்ள சுட்டி வழி சென்று கேட்கலாம்.
    http://tinyurl.com/Semmangudi

    ////பெரியாரும் கூட நிறைய சமஸ்கிருதச் சொற்களைக் கலந்தே எழுதியுள்ளார்.///

    கிடக்கறது கிடக்கட்டும் கிழவிய தூக்கி மனையில வை அப்படின்னு சொல்ற மாதிரி நீங்களும் இந்தக் கிழவரைத் தூக்கி கருத்திலே வச்சிட்டீங்க போலிருக்கு

    ReplyDelete
  14. //இந்தக் கிழவரைத் தூக்கி கருத்திலே வச்சிட்டீங்க போலிருக்கு//

    பெரியாரைக் கருத்தில் வைக்காமல் எப்படி இருக்க முடியும்? ஒரு கால கட்டத்தில்
    தமிழக அரசியல், சமூக தளத்தில் மிகவும் செல்வாக்குடன் வலம் வந்தவரை எப்படி புறம் தள்ள முடியும்? நான் 1949ல் பிறந்தவன். தி மு க பிறந்த வருடமும் அதுதான். எனவே தமிழகத்தில் நடந்த திராவிட அரசியலைத்தான் நான் அதிகம் அறிவேன். 'திராவிட' என்றால் பெரியார் மூக்கை நுழைத்து விடுவாரே!

    அவருடன் எனக்குப் பல கருத்து வேற்றுமை இருந்தாலும் அவரை மறக்க முடியாது. ராஜாஜியும் அவரும் ஒருவருக்கு ஒருவர் அனபான எதிரிகள்.
    ஆத்மார்த்த நண்பர்கள். அது போலவே பெரியாரும் எனக்கு. பல பிராமணர்கள் பெரியாரின் விமர்சனப் பேச்சுக்களால் தூண்டப்பட்டு தங்களுடைய விட்டுப்போன‌ மத ஆச்சாரங்களைக் கடைப்பிடிக்க ஆரம்பித்ததையும் நான் அறிவேன்.

    ReplyDelete
  15. KMRK ஐயா, இதுதான் வாழ்கையின் வினோதம்..........
    மைனரின் சிந்தையில் இறைவன் வியாபித்து தொடர்ந்து இறைவன் பாடலாக "இறைசிந்தனை"யில் ஆழ்ந்திருந்ததாக ஒரு பக்கம் சொல்ல....
    நீங்கள் கருத்தில் பெரியாரை வைத்திருப்பதாகவும் சொல்லி அவருடன் எனக்குப் பல கருத்து வேற்றுமை இருந்தாலும் அவரை மறக்க முடியாது....
    என்று வேறு சொல்கிறீர்கள்.

    குரங்கை மறக்க மருந்தை குடிக்க சொன்னால் மருந்தை பார்க்கும் பொழுதெல்லாம் குரங்கு நினைவு வந்த கதையாகப் போனதே....

    ReplyDelete
  16. /////Blogger Bhogar said...
    ஓம் சரவணபவ எனும் திருமந்திரம்
    அதனை சதா ஜெபி என் நாவே.....,
    அதனை தான் என்னுடை பதிமுன்று வயதில்
    இருந்து செய்து கொண்டிருக்கிறோம்.
    கர்மவினைகளால் கலங்கிய போதெல்லாம்
    நேரம் கிடைத்தால்,
    ஒரு நாளைக்கு ஒரு லட்சம் தடவை கூட.
    ஓம் சரவணபவ நம//////

    ஓம் சரவணபவ நம
    ஓம் சரவணபவ நம
    ஓம் சரவணபவ நம

    ReplyDelete
  17. Blogger தேமொழி said...
    பாடல்: சரவணபவ என்னும்
    ராகம்: சண்முஹப்ரியா
    தாளம்: ஆதி
    வரிகள்: பாபநாசம் சிவன்
    பல்லவி:
    சரவணபவ எனும் திருமந்திரம் - தனை
    சதா ஜபி என் நாவே - ஓம் (சரவண)
    அநுபல்லவி:
    புரமெரித்த பரமன் நெற்றிக் கண்ணில் உதித்த
    போத சொரூபன் பொற்பாதம் தனைப் பணிந்து (சரவண)
    சரணம்:
    மண்மிசை கிடந்துழல் பிறவிப் பிணியைத் தீர்க்கும்
    மாயை அகலப் பேரின்ப நெறியில் சேர்க்கும்
    தண்மதி நிகர் குளிர் கருணை நிலவு (உ)மிழும்
    சண்முக ப்ரிய சடாக்ஷர பாவன (சரவண)
    பாட்டு என்னமோ நல்லாத்தான் இருக்கு, ஆனால் புரியல ....சுத்தமாப் புரியல...
    எட்டே வரிப் பாடலை, ஒவ்வொரு வரியையும் பற்பல முறை பாடியும் நாலரை நிமிடத்தில் பாடல் முடிந்துவிட, பாடகி பத்தரை நிமிடங்களுக்குமேல் ராக ஆலாபனை என்று பாடிக்கொண்டே இருக்க, அதுவும் முடிந்தபாடில்லை ....பாதியிலேயே நிறுத்தப் பட்டுவிட்டது. இது KMRK ஐயாவுக்குப் பிடித்த பாடல்.
    எனக்கெல்லாம் தளபதி படத்தில் "யமுனை ஆற்றிலே" போன்று சுருக்கமான இனிமையான மெல்லிசைப்பாடலைக் கேட்டுப் பழகிவிட்டு, ஏன் இப்படி பாடிக்கொண்டே இருக்கிறார்கள் என்று புரியவில்லை. இசையின் மகத்துவம் தெரியாத என்னை மன்னிக்கவும். க.தெ.க.வா.(கழுதைக்கு தெரியுமா கற்பூரவாசனை என்று முடிந்தவரை சுருக்கமாக எனக்கு நானே கண்டனம் தெரிவித்துக் கொண்டேன், அதாவது சுருக்கமாக இருக்கட்டும் என்றுதான்)///////

    இதே பாடலுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தால், இன்னும் பலரையும் அது கவர்ந்திழுக்கும் என்று நினைக்கிறேன்!:-)))))

    ReplyDelete
  18. ////Blogger ஜி ஆலாசியம் said...
    மிகவும் அருமையானதொரு பாடல்.
    பாவங்கள் யாவும் நாசம் செய்யும்
    பரந்தாமன் மால்மருகன் திருப்
    பாதம் தனைப்பணிந்தே இரு மனமே!
    என்று பாபநாசம் சிவனாரின் அழகானதொருப் பாடல்.
    மாகடலெனும் கருணைக் கடவுளான ஷண்முகா நினது நற்கதி செய்யும் சொரூப நிலையே
    எத்தனை எத்தனை அற்புதங்கள் செய்யக் கூடியன என்பதை மிகவும்
    அழகாக ரத்தினச் சுருக்கமாக சொல்லி இருக்கிறார் புலவர்.
    அதுவும் சுதாரகுநாதனின் குரலில்... கண்களை மூடிக் கேட்கும் போது
    தேகமெங்கும் குளிர் குருதி பொங்கி குடம் குடமாக தலையில்
    இருந்து இதயம் புகுந்ததைப் போன்ற உணர்வைத் தந்து.
    மிகவும் இனிமையாக இருந்தது.... ஆனால் ஏனோ இடையிலே நின்றது....
    இந்த இசையை அடுத்த ஜன்மத்திலாவது நாமும்
    கற்றுக் கொள்ள வேண்டும் என்றேத் தோன்றுகிறது.
    பதிவுக்கு நன்றிகள் ஐயா!
    வேண்டும் முருகன் அருள்!!//////////

    ஆமாம். எனக்கும் அப்படியொரு ஆசை உள்ளது. நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  19. /////Blogger ananth said...
    சங்கீத ஞானம் உள்ளவர்கள் ரசிக்கக் கூடிய பாடல்தான். இதை என் அழுவலகத்தில் உடன் வேலை செய்யும் ஒருவருக்கு போட்டுக் காட்டினேன். தூக்கம் வருகிறது, நிறுத்தி விடு என்று சொன்னார்.
    இந்த பாடலின் இன்னொரு version, திரைப்பட பாடல், சுட்டி கீழே இருக்கிறது. கேட்டு மகிழுங்கள்.
    http://www.youtube.com/watch?v=Rig7pZPcOvU////

    உங்களின் தகவலுக்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  20. /////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    உள்ளேன் ஐயா
    நன்றி/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  21. ////Blogger arul said...
    nice post/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  22. /////Blogger அய்யர் said...
    முருகா.. முருகா..
    "என் பாட்டுக்குள்ளேயும் சங்கதி உண்டு கண்டுபிடி "
    என்ற சிந்து பைரவி படத்தின் பாடலினை சுழல விடாமல்
    வணக்கமும் வாழ்த்துக்களும்/////

    கந்தா போற்றி, கடம்பா போற்றி, கதிர்வேலா போற்றி!

    ReplyDelete
  23. ////Blogger Parvathy Ramachandran said...
    அற்புதமான பாடல். முப்புரம் எரித்த சிவனாரின் நெற்றிக் கண்ணில் உதித்த ஞான ஸ்வரூபமான முருகப் பெருமானின் திருவடியைப் பணிந்து, ஆறெழுத்தை உச்சரிக்க, முழுமதி போல் கருணைபொழியும் திருமுகம் கொண்ட ஷண்முகரது க்ஷடாக்ஷர மந்திரம், மாயையை அகற்றி, பிறவிப் பிணி தீர்த்து, பேரின்பமாகிய முக்தியை அருளும் என்னும் அருமையான பொருள்பொதிந்த பாடல். இறையருட்செல்வரான, பாபநாசம் சிவனின் அற்புதப் பாடல்களுள் ஒன்று. இசைநுணுக்கங்கள் தெரியாதபோதே என்னை மிகவும் ஈர்த்த பாடல் இது. இசை நுணுக்கங்கள் மாறாமல், பாடலின் ஆன்மாவை வெளிப்படுத்துவது எவ்வளவு கஷ்டம் என்பதை அறிந்த பிறகு, பாடுபவர் மீது பெருமதிப்பு உண்டாகிறது. திருமதி சுதா ரகுநாதனின் அருமையான குரலில் வெளிப்படும் பக்தி பாவம் மனதில் உண்டாக்கும் உணர்வுகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை. அருமையான பாடல் பார்க்க,கேட்கத் தந்தமைக்கு மிக்க நன்றி./////

    நெகிழ்ச்சியான உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி! முருகனருள் முன்னிற்கும்!

    ReplyDelete
  24. ////Blogger kmr.krishnan said...
    சுதா ரகுநாதன் எம் எல் வசந்தகுமாரியின் சிஷ்யை. எம் எல் வி, ஜி என் பி யின் சிஷ்யை.எனவே ஒரு நல்ல குரு பரம்பரை
    உள்ளவர்.
    எம் எல் விக்குப் பின் பாட்டுக்காரர்ரரக இருந்த சுதா இன்று முன்னணி இசை நட்சத்திரமாகத் திகழ்கிறார்.
    என் நண்பர், [எல் ஐ சி பகுதிமேலாளர் (ஓய்வு)] ராஜாராமனின் மூத்த மகள் சுதாவின் பெரிய ரசிகை. சுதாவுடன் கடிதத்
    தொடர்பில் இருந்தாள். அவ்வப் போது சுதாவின் பாட்டுத் திறனைப் பாராட்டி அவருக்கு எழுதுவாள். அந்த நட்புக்காக சுதா
    அந்தப் பெண்ணின் திருமண வரவேற்பில் தன் பரிசாக இசை விருந்து அளித்தார்.
    பாபனாசம் சிவன் அவர்கள் தமிழில் சாஹித்யம் எழுதியவர்களில் முன்னோடி.
    அருணாசலக் கவி, முத்துத் தாண்டவர் வழி வந்தவர்.
    தனித் தமிழ் இயக்கம் முன்னெடுக்கப்படும் வரை தமிழ் சமஸ்கிருதச் சொற்களுடன் கலந்து மணிப்பிரவாள நடையிலேயே
    இருந்தது.பெரியாரும் கூட நிறைய சமஸ்கிருதச் சொற்களைக் கலந்தே எழுதியுள்ளார். அதனால் அந்தக் கால நடைமுறையில்
    இருந்த தமிழ் இப்போது புரியவில்லை என்று
    தேமொழி சொல்வது எப்படியிருக்கிறது என்றால், ஆங்கிலம் கலக்காமல் நான் இப்போது எழுதும் தமிழ் தங்களுக்குப்
    புரியவில்லை என்று இக்கால பதின் வயதுக்காரர்ரகள் சொல்வதுபோல உள்ளது. புரியவில்லை என்பதை 'அண்டர்ஸ்டாண்ட்
    ஆகவில்லை' என்று எழுதினாலே நல்ல புரியும் தமிழ் என்பது இன்றைய நிலை.
    கர்நாடக இசையும், தமிழ்ப் பண்களும் ஒரு திட்டப் படுத்தப்பட்டு, அதற்கென்று இலக்கணம், கணக்கு உள்ளது. அதற்கு
    உட்பட்டு அதே நேரத்தில் தன் கற்பனை வளத்தையும் காட்ட வேண்டும். மரபுக் கவிதையும் எழுத வேண்டும், அதில் கம்பனைப்
    போல் கற்பனையும் காட்ட வேண்டும்.மிகவும் க‌டினமானது. இன்று இலக்கணம் படிக்காதவர்கள் உரைநடையை மடக்கிப்
    போட்டு எழுதினால் புதுக் கவிதை என்கிறார்கள்.
    தூக்கம் வருபவர்கள் தூங்கட்டும். 45 இசைக் கருவிகளுடன் காட்டுக் கூச்சல்(மெல்லிசையா, வல்லிசையா?) கேட்டால்
    எப்படித் தூக்கம் வரும்?
    ஆம், எனக்குப்பிடித்த இந்தப் பாடலை ஐயா வெளியிட்டதற்கு நன்றி./////

    மேலதிகத்தகவல்களுக்கும், நீண்ட பின்னூட்டத்திற்கும் நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  25. /////Blogger padhu said...
    aiya avargalaukku vanakkam...migavum arumaiyana paadal..pathivettriyamaikku nandri////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  26. ////தேமொழி said...
    குரங்கை மறக்க மருந்தை குடிக்க சொன்னால் மருந்தை பார்க்கும் பொழுதெல்லாம் குரங்கு நினைவு வந்த கதையாகப் போனதே....////

    அந்த கதை இப்போ...
    அந்த

    குரங்கிற்கு மருந்து
    குடிக்க தரும்படியாக...,

    கதை தானே.. எப்படி
    கதைத்தால் தான் என்ன?
    (கதைத்தால் என்பது இலங்கை மொழி இதற்கு சொல்லுதல் என்ற தமிழ் பொருள் உண்டு)

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com