11.5.12

அலைவந்து குதித்தாடும் அழகங்கே கூத்தாடும்



 அலைவந்து குதித்தாடும் அழகங்கே கூத்தாடும்

முருகன் பாமாலை
'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன்  பாடிய -  'அலைவந்து குதித்தாடும்' என்னும் பாடல் இன்றைய பக்தி மலரை அலங்கரிக்கின்றது.
---------------------------------------------------------------

அலைவந்து குதித்தாடும்
அழகங்கே கூத்தாடும்
அலை வாயில் வந்தேனய்யா
சீர் அலைவாயில் வந்தேனய்யா

(அலைவந்து ... )

முருகா ... அருட்காட்சி கண்டேனய்யா

மலைக்கோயில் பல கண்டேன்
மனக்கோயில் தனில் வைத்தேன்
கடலோரம் வந்தேனய்யா
கந்தய்யா ... கண்ணாறக் கண்டேனய்யா

வலப்பக்கம் குறவள்ளி
மறுபக்கம் தெய்வானை
விளையாட கடல் நோக்கினாய்
உன் விழி வேலால் என்னை தாக்கினாய்

(அலைவந்து ... )

சங்கத்து தனிப்பாட்டில்
செந்தில் வேள் உனைக்கண்டேன்
எங்கெங்கும் என்றென்றுமே
உன் எழில் பாட்டு விருந்தாகுமே

மயிலூர்தி தனி நீலம்
குறமாது கரு நீலம்
கடல் வண்ணம் புடை சூழவே
செங்கதிர் வண்ணம் இடை தோன்றுதே

(அலைவந்து ... )

முருகா ... அருட்காட்சி கண்டேனய்யா.
+++++++++++++++++++++++++++++++++++++++++ 
இன்றைய பொன்மொழி!

சிறப்பான வழியைத் தேர்வு செய்யுங்கள். அது நீங்கள் பெற விரும்பியதைப் பெற்றுத் தரும். - ஷீல்லர்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

21 comments:

  1. சூரனை வதைத்த இடம்
    அழகன் சுப்ரமண்யன் வாழும் இடம்
    நான் யார் என்று ஆத்மாவில் கேட்டால்
    சரவணபவமே சர்வம் என்று
    சொல்லும் இடம்
    அழகனை நோக்கி அலைகள்
    வந்து கூத்தாடுது
    ஐத்தெழுத்து ஈன்ற ஆறெழுத்தின்
    அருளை நோக்கி மன்றாடுது

    ஓ ம் ச ர வ ண ப வ ந ம

    ஓ ம் ர வ ண ப வ ச ந ம

    ஓ ம் வ ண ப வ ச ர ந ம

    ஓ ம் ண ப வ ச ர வ ந ம

    ஓ ம் ப வ ச ர வ ண ந ம

    ஓ ம் வ ச ர வ ண ப ந ம

    ReplyDelete
  2. பாதாளச் சிறையிலே பாதகர் விரித்தவலையிலே
    வேதாமேதைகள் தேவர்கள் யாவரும்
    கோதா ஒடுங்க சூரபத்மன் சூழ்ச்சியில் சிக்கியே!
    நாதா காப்பாய்தேவ தேவாவென்றே நிந்தன்
    பிதா ஈசனை வேண்டவே; முக்கண்ணனவன்
    தேவா பன்னிருக் கண்ணோடு உனைப் படைத்தானே!

    சூரனை அழிக்க வீரனாய்வந்தே - கெட்டப்
    போரினை துவங்குமுன் கொட்டம்போடும் - அசுரகுல
    வேரினை அடியோடு அறுக்குமுன் - நற்
    காரியமொன்றை செய்தாய்; சமாதானம் பேசக்
    கூறியே வீரபாகுவை அனுப்பினாய் -பாவி
    சூரனும் பணியாது உனைத் துணியவே -வெற்றி
    வீரனே ஆதிசக்திவேலதைப் பெற்றே ஷண்முகா
    அரக்கனைப் பிளந்தே தேவராருயிர் ஆனாயே!


    திருசெந்தில் வேலனாய் வில்லேந்திய வீரனாய்
    திருச்சீர் அலைவாய் நின்றருளும் வெற்றிவேலா!
    திருதேசிக மூர்த்தி போற்றிய தேவாதி தேவா!
    திருநீற்றுமுடியை பணமுடியாக்கி அதிசயத்
    திருவிளையாடல் புரிந்த செல்வக்குமரனே! செந்திலாண்டவனே!!
    திருவே! தெற்கே அமர்ந்து அருளும் ஞானகுருவே!!

    பதிவு என்னையும் எழுதத் தூண்டியது...
    அற்புதப் பாடல் பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  3. ஐயாவிற்கு வணக்கம்! அலைவீசும் கடலோரம் குடி கொண்டுள்ள அழகனை காண கண் கோடி வேண்டும்! அழகான பாடல் வரிகள்!!

    ReplyDelete
  4. குருவிற்கு வணக்கம்

    இன்று முருகன் அருள்கிடைத்தது

    முருகன் பாமாலை படித்து மகிழிந்தோம்

    ஓம் முருகா ஓம்

    நன்றி

    ReplyDelete
  5. எளிமையான வரிகள், நல்ல பாடல் ஐயா, இதுவரை நான் இந்தப் பாடலைக் கேட்டதே இல்லை. தேடிக் கொடுத்ததற்கு நன்றி.

    திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ் பாடலையும் ஒரு முறை பதிவேற்றுங்கள் ஐயா, முத்தப் பருவம் குறித்த பாட்டு ஒன்றினை (கத்தும் தரங்கம் எடுத்தெறிய எனத் தொடங்கும் பாடல்) எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது மனப்பாட செய்யுளாக படித்திருக்கிறேன்.

    ReplyDelete
  6. ஆலாசியம் உங்கள் பாடல் நன்றாக இருக்கிறது. சமாதனம் பேசி பகையை நீக்க முற்சித்ததை "நற்
    காரியமொன்றை செய்தாய்" என்று நீங்கள் புகழ்ந்தது போல அந்த சமாதன முயற்சியை இதற்கு முன்பு யாராவது பாராட்டியுள்ளார்களா? எனக்குப் புதுமையாகத் தெரிந்தது. மூன்று பத்திகளில், இருபது வரி கவிதையில் ஒரு கதையே சொல்லிவிட்டீர்கள். அதிலும் "திரு" என்று ஆரம்பிக்கும் வரிகள் அழகு. நன்றி

    ReplyDelete
  7. அலைவாயுகந்த ஜெயந்திநாதப் பெருமானின் அருமையான பாடலைப் பதிவேற்றியதற்க்கு நன்றி. இதுவரை சீர்காழியாரின் குர‌லில் கேட்டு மட்டுமே இருக்கிறேன். ஒரு கவிதை பல கவிதைகளுக்கு வித்தாவது கவிதையின் பெருமை மட்டுமல்ல கவியின் பெருமையும் கூட.

    திரு. போகரின்,
    //ஐத்தெழுத்து ஈன்ற ஆறெழுத்தின்
    அருளை நோக்கி மன்றாடுது//

    வரிகள் அருமை. ஆலாசியம் அவர்களின் கவிதை கந்தபுராணச்சுருக்கமாக மிளிர்கிறது. அதிலும்,

    //தெற்கே அமர்ந்து அருளும் ஞானகுருவே!!//

    என்று ஒரே வரியில், ஞானகுருவாகிய முருகனையும், திருச்செந்தூர் குருபகவானின் க்ஷேத்திரங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுவதையும் குறித்த திறம் சொல்வர்ணனைக்கு அப்பாற்பட்டது. நன்றி

    ReplyDelete
  8. ////தேமொழி said...
    ஆலாசியம் உங்கள் பாடல் நன்றாக இருக்கிறது. சமாதனம் பேசி பகையை நீக்க முற்சித்ததை "நற்
    காரியமொன்றை செய்தாய்" என்று நீங்கள் புகழ்ந்தது போல அந்த சமாதன முயற்சியை இதற்கு முன்பு யாராவது பாராட்டியுள்ளார்களா? எனக்குப் புதுமையாகத் தெரிந்தது. மூன்று பத்திகளில், இருபது வரி கவிதையில் ஒரு கதையே சொல்லிவிட்டீர்கள். அதிலும் "திரு" என்று ஆரம்பிக்கும் வரிகள் அழகு. நன்றி///

    சகோதரி முதலில் இது தங்களின் முந்தய விருப்பத்திற்காக எழுதியப் பாடலே ஆறு படைக்கும் எழுதி வைத்திருக்கிறேன் அனுப்பும் முன் மீண்டும் அதிலே ஏதும் திருத்தம் தேவைப் படுமோ என்று அனுப்பாமல் இருந்தேன். நேரமின்மையும் காரணம்... இன்றையப் பதிவு அதிலே ஒருபடையின் பாடலை என்னை இங்கே பதிவிடச் செய்துவிட்டது... இருந்தும் இந்தப் பாடல் தங்களின் விருப்பத்தால் ஓரிரு வாரங்களுக்கு முன்பே எழுதப் பட்டதே.... என்னுள் எழுதத் தூண்டியது என்று சொன்னதும் சந்தர்ப்ப அர்த்தப் படவே!...

    தங்களை சந்தோஷ மடையச்செய்த செய்தி என்னையும் சந்தோசப் படுத்தியது.... பாராட்டிற்கு நன்றிகள் சகோதரியாரே!
    சகோதரி பார்வதிக்கும் எனது நன்றிகள்..

    ReplyDelete
  9. ////Blogger Ananthamurugan said...
    Muruga,muruga////

    செந்தூர்முருகா போற்றி! சேவற்கொடியோனே போற்றி!

    ReplyDelete
  10. /////Blogger Bhogar said...
    சூரனை வதைத்த இடம்
    அழகன் சுப்ரமண்யன் வாழும் இடம்
    நான் யார் என்று ஆத்மாவில் கேட்டால்
    சரவணபவமே சர்வம் என்று
    சொல்லும் இடம்
    அழகனை நோக்கி அலைகள்
    வந்து கூத்தாடுது
    ஐத்தெழுத்து ஈன்ற ஆறெழுத்தின்
    அருளை நோக்கி மன்றாடுது
    ஓ ம் ச ர வ ண ப வ ந ம
    ஓ ம் ர வ ண ப வ ச ந ம
    ஓ ம் வ ண ப வ ச ர ந ம
    ஓ ம் ண ப வ ச ர வ ந ம
    ஓ ம் ப வ ச ர வ ண ந ம
    ஓ ம் வ ச ர வ ண ப ந ம/////

    அசுரரை வென்ற இடம் - அது தேவரைக் காத்த இடம்
    ஆவணி மாசியிலும் - வரும் ஐப்பசித் திங்களிலும்
    அன்பர் திருநாள் காணுமிடம்! அன்பர் திருநாள் காணுமிடம்!

    ReplyDelete
  11. Blogger ஜி ஆலாசியம் said...
    பாதாளச் சிறையிலே பாதகர் விரித்தவலையிலே
    வேதாமேதைகள் தேவர்கள் யாவரும்
    கோதா ஒடுங்க சூரபத்மன் சூழ்ச்சியில் சிக்கியே!
    நாதா காப்பாய்தேவ தேவாவென்றே நிந்தன்
    பிதா ஈசனை வேண்டவே; முக்கண்ணனவன்
    தேவா பன்னிருக் கண்ணோடு உனைப் படைத்தானே!
    சூரனை அழிக்க வீரனாய்வந்தே - கெட்டப்
    போரினை துவங்குமுன் கொட்டம்போடும் - அசுரகுல
    வேரினை அடியோடு அறுக்குமுன் - நற்
    காரியமொன்றை செய்தாய்; சமாதானம் பேசக்
    கூறியே வீரபாகுவை அனுப்பினாய் -பாவி
    சூரனும் பணியாது உனைத் துணியவே -வெற்றி
    வீரனே ஆதிசக்திவேலதைப் பெற்றே ஷண்முகா
    அரக்கனைப் பிளந்தே தேவராருயிர் ஆனாயே!
    திருசெந்தில் வேலனாய் வில்லேந்திய வீரனாய்
    திருச்சீர் அலைவாய் நின்றருளும் வெற்றிவேலா!
    திருதேசிக மூர்த்தி போற்றிய தேவாதி தேவா!
    திருநீற்றுமுடியை பணமுடியாக்கி அதிசயத்
    திருவிளையாடல் புரிந்த செல்வக்குமரனே! செந்திலாண்டவனே!!
    திருவே! தெற்கே அமர்ந்து அருளும் ஞானகுருவே!!
    பதிவு என்னையும் எழுதத் தூண்டியது...
    அற்புதப் பாடல் பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!/////

    பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா
    கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
    நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்
    கந்தா முருகா வருவாய் அருள்வாய்............முருகா!

    ReplyDelete
  12. /////Blogger ரமேஷ் வெங்கடபதி said...
    ஐயாவிற்கு வணக்கம்! அலைவீசும் கடலோரம் குடி கொண்டுள்ள அழகனை காண கண் கோடி வேண்டும்! அழகான பாடல் வரிகள்!!////

    சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்முகம் ஒன்று
    சாதிமத பேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று
    நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று
    நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு!

    ReplyDelete
  13. ////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    இன்று முருகன் அருள்கிடைத்தது
    முருகன் பாமாலை படித்து மகிழிந்தோம்
    ஓம் முருகா ஓம் நன்றி////

    திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
    தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்!

    ReplyDelete
  14. ////Blogger தேமொழி said...
    எளிமையான வரிகள், நல்ல பாடல் ஐயா, இதுவரை நான் இந்தப் பாடலைக் கேட்டதே இல்லை. தேடிக் கொடுத்ததற்கு நன்றி.
    திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ் பாடலையும் ஒரு முறை பதிவேற்றுங்கள் ஐயா, முத்தப் பருவம் குறித்த பாட்டு ஒன்றினை (கத்தும் தரங்கம் எடுத்தெறிய எனத் தொடங்கும் பாடல்) எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது மனப்பாட செய்யுளாக படித்திருக்கிறேன்.////

    செய்துவிட்டால் போகிறது. பரிந்துரைக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  15. ////Blogger Parvathy Ramachandran said...
    அலைவாயுகந்த ஜெயந்திநாதப் பெருமானின் அருமையான பாடலைப் பதிவேற்றியதற்க்கு நன்றி. இதுவரை சீர்காழியாரின் குர‌லில் கேட்டு

    மட்டுமே இருக்கிறேன். ஒரு கவிதை பல கவிதைகளுக்கு வித்தாவது கவிதையின் பெருமை மட்டுமல்ல கவியின் பெருமையும் கூட.
    திரு. போகரின்,
    //ஐத்தெழுத்து ஈன்ற ஆறெழுத்தின்
    அருளை நோக்கி மன்றாடுது//
    வரிகள் அருமை. ஆலாசியம் அவர்களின் கவிதை கந்தபுராணச்சுருக்கமாக மிளிர்கிறது. அதிலும்,
    //தெற்கே அமர்ந்து அருளும் ஞானகுருவே!!//
    என்று ஒரே வரியில், ஞானகுருவாகிய முருகனையும், திருச்செந்தூர் குருபகவானின் க்ஷேத்திரங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுவதையும்

    குறித்த திறம் சொல்வர்ணனைக்கு அப்பாற்பட்டது. நன்றி/////

    மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
    வாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று
    சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்முகம் ஒன்று
    சாதிமத பேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று
    நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று
    நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு!

    ReplyDelete
  16. பாடலும், பாடலுக்கான பின்னூட்டங்களில் வந்துள்ள ஹாலாஸ்யத்தின் கவிதையும், அதற்கான விளக்கங்களும் படித்து ரசித்தேன்.பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. இன்றைய புலம்பல்...

    பொல்லாத காயம் அதைப் போட்டு விடுக்குமுன்னே கல்லாவின் பால்கறப்ப கற்பது இனி எக்கலாம் ?...

    ReplyDelete
  19. வாத்தியார் ஐயா வணக்கம்.

    அவருக்கு என்னய்யா குறைச்சல் , அக்கா , தங்கச்சியா?

    , ஒரு பக்கம் பார்த்தால் அண்ணன் பெண்கள் குளிக்கும் ஆறு மற்றும் குளத்தின் அருகில் அன்னையை போல பெண் வேண்டும் என்று இன்று வரை வந்து போகும் பெண்களை பார்த்துகொண்டு காத்துகொண்டு உள்ளார்.

    மறுபக்கமோ தாய் மாமன் கோபியர்கள் கூட கூத்தாடி கொண்டு உள்ளார் .

    அம்மா அப்பாவும் உலகத்தில் உள்ள அனைத்து ஜ்ஜிவராசிகளுக்கும் படி அளந்து கொண்டு இருக்கின்றார் .

    நம்ம தலைவரோ வலது பக்கம் ஒன்று இடது பக்கம் ஒன்று என்று இரண்டு பெண்மநிகைகளுடன் மாமன் மாயகண்ணனை போல மிகவும் ஆனந்தமாக உள்ளார்.

    பள்ளிக்கூடம் போகவேண்டியது இல்லை , வீட்டு பாடம் எழுதும் தொல்லை இல்லை . வேலை தேடி கடல் கடந்து ஆகாய பூர்வமாக வரவேண்டிய கஷ்டம் இல்லை .

    தன்னையே நம்பி உள்ள பக்தர்களையும் நம்பாத பக்தர்களையும் காத்துகொண்டு உள்ளார் இந்த ஒரு வேலையை தவிர அவருக்கு என்ன குறைச்சல் சொல்லுங்கள் பார்க்கலாம்?--

    ReplyDelete
  20. ஆமாம்! மாயக்கண்ணா! இந்த சாமியெல்லாம் ஜாலியாத்தான் இருக்கிறாங்கோ!

    சாமின்னு பேர்வச்சுக்கிட்ட ஆசாமிகளே ஜாலியா இருக்கும் போது, உண்மையான சாமிகளும் இன்னும் அதிக ஜாலியா இருக்கலாம்தானே!

    மாயக்கண்ணா உங்களுக்கு நன்றாக எழுத வருகிறது. எழுதுங்கள் ஆக்கங்களை மாணவர் மலருக்கு. ஐயா வெளியிடுவார், சுவையாக இருந்தால்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com