29.5.12

Astrology நாட்டாமையின் மகனுக்கு எதற்காகப் பயப்பட வேண்டும்?


+++++++++++++++++++++++++++++++++++++++++++
Doubt: நாட்டாமையின் மகனுக்கு எதற்காகப் பயப்பட வேண்டும்?

Doubts: கேள்வி பதில் பகுதி 18

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எண் பதினெட்டு!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
----------------------------------------------------
email No.71
வெண்மதி, மலேசியா
1
ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். தங்களின் கேள்வி பதில் வகுப்புக்கு நன்றி.
என்னுடைய கேள்விகளுக்கும் பதில் தர வேண்டுகிறேன்.
என்னுடைய கேள்விகள் இதோ.

1. குரு 8‍‍ம் இடத்தில் (மறைவிடம்)இருந்து அந்த வீட்டின் பரல்களும் மிக குறைவாக (23) இருக்கின்றபோது குருவின் நன்மைகளை பெற நவக்கிரகத்தில் உள்ள குருவை வணங்குவதா அல்லது சிவனின் அம்சமாக(குருவான நிலை) உள்ள தெட்சிணாமூர்த்தியை வணங்குவதா? இருவருக்கும் என்ன வேறுபாடு
விளக்கமாக கூறங்கள்.

தெட்சிணாமூர்த்தி என்பது சிவனின் வடிவம்தான். எந்தவடிவத்தை வேண்டுமென்றாலும் நீங்கள் வணங்கலாம்! (Dakshinamurthy is one form of Lord Shiva, where Lord Shiva is the Guru or teacher of all types of knowledge.)

2. இதேபோல் சனிபகவான் மறைவிடத்திலோ அல்லது வக்கிரமாகி இருந்தாலோ சனிபகவானின் (சுய பரல்கள் 2) நன்மைகளை பெற நவக்கிரகத்தில் உள்ள சனிபகவானை வணங்குவதா அல்லது ஆஞ்சனேயரை
வணங்குவதா? இருவருக்கும் என்ன வேறுபாடு விளக்கமாக கூறங்கள்.

சனிக்கும், ஆஞ்சனேயருக்கும் புராணங்களின்படி ஒரு தொடர்பு உண்டு. அதை எழுதினால், இன்றைய இளைஞர்கள், நம்பாமல், அதற்கும் சான்று கேட்பார்கள். எல்லாவற்றிற்குமே நம்பிக்கைதான் அடிப்படை. ஆகவே சனியின் உபாதைகளில் இருந்து மீள்வதற்கு, ஆஞ்சனேயர் உதவுவார் என்ற நம்பிக்கையோடு, அவரையே வணங்குங்கள். குறிப்பாக ஏழைரைச் சனி மற்றும் அஷ்டமச் சனி ஆட்டிவைக்கும்போது, ஆஞ்சனேயரை வழிபடலாம்! மற்ற காலங்களில் சனீஷ்வரனை வழிபடலாம்.

3. விருச்சிக லக்கினத்திற்கு செவ்வாய் லக்கினாதிபதி மற்றும் 6ம் வீட்டதிபதியும் கூட. செவ்வாய் கடகத்தில் நீச்சமாகி இருக்கின்றபோது செவ்வாய் நன்மை செய்வாரா? தீமை செய்வாரா? லக்கினாதிபதியின் அருளைப்பெற வழி (பரிகாரம்) உண்டா? விளக்க வேண்டுகிறேன்.

நீசமானவரிடமிருந்து எப்படி நன்மைகளை எதிர்பார்க்கிறீர்கள்? அதற்கு ஜாதகத்தில் வேறு இடத்தில் நஷ்டநீடு வழங்கப்பெற்றிருக்கும். ஆகவே கவலையை விடுங்கள். செவ்வாயின் பாதிப்புக்களில் இருந்து விடுபட
குமரக்கடவுளை வழிபடுங்கள் (Mars is ruled by Muruga also called Subramanya or Karthikeya. Propitiation of Muruga controls the bad results from Mars)

4. 9 கிரகங்களின் ஓரப்பார்வை எவை? விளக்க வேண்டுகிறேன் (நேர்ப்பார்வை 7ம் பார்வை என்பதை அறிவேன்)

ஓரப்பார்வை என்பது நகைச்சுவைக்காகச் சொல்லப்பட்டது. அதற்கு உண்மையான பெயர் விஷேசப் பார்வை (special aspect) குரு, செவ்வாய், சனி ஆகிய மூன்று கிரகங்களுக்கு மட்டுமே விஷேசப் பார்வைகள் உண்டு.
குருவிற்கு விஷேசப் பார்வை (அவர் இருக்கும் இடத்தையும் சேர்த்து எண்ண வேண்டும்) 5ஆம் இடம், 9ஆம் இடம். செவ்வாய்க்கு விஷேசப் பார்வை (அவர் இருக்கும் இடத்தையும் சேர்த்து எண்ண வேண்டும்) 4ஆம் இடம், 8ஆம் இடம். சனிக்கு விஷேசப் பார்வை (அவர் இருக்கும் இடத்தையும் சேர்த்து எண்ண வேண்டும்) 3ஆம் இடம், 10ஆம் இடம்

5. ராசி கட்டத்திலும் நவாம்ச கட்டத்திலும் லக்கணம் மாறியிருக்கிறபோது, நவம்சத்தில் கிரகங்களின் வீடுகளைக் கணக்கிடுகின்றபோது (1ம் வீடு, 2ம் வீடு,...) ராசி கட்டத்தில் லக்கணம் வீட்டிலிருந்து எண்ணுவதா அல்லது
நவம்ச கட்டத்தில் லக்கணம் வீட்டிலிருந்து எண்ணுவதா? உதாரணத்திற்கு ராசி கட்டத்தில் லக்கணத்தின் வீடு ரிசபம், நவம்ச கட்டத்தில் லக்கணத்தின் வீடு மேசம், ஒவ்வொரு கிரகமும் எத்தனையாவது வீட்டில் உள்ளது
என்று பார்க்க ரிசபத்திலிருந்து துவங்குவதா அல்லது மேசத்திலிருந்து துவங்குவதா?. மேசத்திலிருந்து துவங்கினால் மகரம் 10ம் விடு. மகரம் விட்டில் கிரக நிலை, கிரகங்களின் பார்வை வைத்து தொழில் பற்றி அலசலாமா? விளக்கமாக கூறவும்.

குழப்பிக்கொள்கிறீர்களே? நவாம்சம் என்பது ராசியைப் பூதக்கண்ணாடியால் காட்டும் படம். Navamsam is the magnified version of a Rasi Chart) பாண்டி ஆட்டத்தை ராசியில் மட்டும் வைத்துக் கொள்ளுங்கள். நவாம்சத்தில் வேண்டாம். நீங்கள் பெண்ணாக இருப்பதால் பாண்டி ஆட்டம் பற்றி நன்கு அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அதாவது லக்கினத்தில் இருந்து கட்ட எண்ணிக்கைகளை ராசியில் மட்டும் வைத்துக்கொள்ளுங்கள்.

விளக்கங்கள் போதுமா சகோதரி?
--------------------------------------------------------
email.72
ரமேஷ் வேலுச்சாமி

Sir,
This Question is Regarding Parents
9th house & 10 th house are in Parivartna [10 th lord exchange in exaltion [sukran - kanni & Budhan - Thulam]]. and in thasmsa three planets are utcham[i,e sevvai, bhudan, ketu ] and two planets are in their own house [i,e guru & sani]. chandran in thasmsa lagna and sukran in 2nd house]. My question is :
i had gone through horoscope of my friend's daughter. before her birth their parents are not well settled after her birth they are continously in positive node. is it because of her chart. because you had told that a child horoscope will work after 12 years but the child is only 5 yrs old.

பொதுவாக 12 வயதுவரை குழந்தையின் ஜாதகம் பெற்றோர்களை வைத்துத்தான். அக்குழந்தை செல்வச் செழிப்புடன் வளர வேண்டும் என்றால், அந்தக் குழந்தையை வைத்துப் பெற்றோர்களுக்கு அதற்குத் தேவையான பணம் வரும்!
------------------------------------------------------
email.73
சேகர் வெங்கடேசன்

அன்புள்ள அய்யா,

கேள்வி பதில் பகுதி மிகவும் சுவை. அதிலும் உங்கள் பதில்கள் சில கொஞ்சுகிறது. சிலவற்றில் உரிமையுடன் கண்டிப்பும் தெரிகிறது. அதுதான் சிறப்பு என்று நினைக்கின்றேன். என் சந்தேகங்கள்.

1 அயனாம்சம் சித்ர பக்க்ஷ (365 .25 days ) முறையில் துலாமில் சனி உச்சம். மகரத்தில் குரு நீச்சம். குறிப்பு. நீச்ச பங்க பலன்( பிறந்த போது கொடுக்கப்பட்ட ஜாதக கட்டம் இந்த முறை ) ராமன் (360 days ) முறையில் லக்னத்தில் சனி. மகரத்தில் குரு நீச்சம். நீச்ச பங்க பலன் என்று குறிப்பு.
சனி விசேஷ மூன்றாம் பார்வையால் நீச்ச பங்கமா என்பது என் சந்தேகம். பிறந்த தேதி 05-06-1985 நேரம் 18- 22 இடம் சென்னை] 2. இரு முறையிலும் அம்சங்கள் மாறுகிறது. எது சரி?

கால சந்திப்பில் பிறந்தவர்களுக்கு சமயத்தில் லக்கினமும் மாறும். ராசி சந்திப்பில் உள்ள கிரகங்களும் மாறும். நீங்கள் ராமன் அயனாம்சத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது சரியான ஜாதகத்தைக் கொடுக்கும்!

3. விருச்சிக லக்னம் லக்னாதிபதி செவ்வாய் எட்டில் தோஷமா? தோஷம் என்று குறிப்பு உள்ளது.

லக்கினாதிபதி எட்டில் இருப்பது ஜாதகனுக்கு நன்மையைச் செய்யாது. போராட்டம் மிகுந்த வாழ்க்கை. எதையும் போராடித்தான் பெற வேண்டும். விருச்சிக லக்கினத்திற்கு செவ்வாய் அதிபதி. அதிபதி தனக்குத்தானே தோஷத்தைச் செய்துகொள்ள மாட்டான். அதனால் தோஷம் இல்லை!
--------------------------------------------------------------
email.74
சரவணகுமார்

அன்புள்ள ஐயா,

1.ஜாதகருக்கு, பஞ்சமகாயோகத்தில் எதாவது ஒரு யோகம் இருந்தால் அவயோகம் எல்லாம் தடைப்படுமா? உதாரணமாக, மாளவ்யா யோகம் உள்ளவர்களுக்கு மற்ற அவயோகம் எல்லாம் செயல் இழக்குமா?

ஒரு யோகத்தை வைத்து மற்ற அவயோகங்கள் எப்படி நீங்கும்? நல்ல யோகங்களும், அவயோகங்களும் கலந்ததுதான் ஜாதகம். ஒன்றிற்குப் பயந்து மற்றொன்று எப்படிப் போகும் அல்லது நீங்கும்? நாட்டாமையின் மகன் என்பதற்காக ஊரில் உள்ள அத்தனை பேரும் பயப்படுவானா என்ன?

2.யோகம் ராசியில் இருந்தால் பலன் உண்டா? அல்லது அம்சதில் சுக்ரன் நிலையும் பொறுத்து உண்டாகுமா?
அன்புடன்
சரவண்

அம்சத்தை இன்னும் நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அம்சப் பாடத்தை மீண்டும் மீண்டும் புரிகின்றவரை படியுங்கள். சுக்கிரனைப் பொறுத்து என்றால் பிடிபடவிலை ஸ்வாமி. என்ன சொல்ல வருகிறீர்கள்? சுக்கிரன் என்ன நம் மாமானாரா? அவரைப் பொறுத்து எதற்காக எதன் நிலை மாறும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
-------------------------------------------
email No.75
சுந்தரி பரமசிவம், சென்னை

சார் வணக்கம்,

1.நீங்க குழந்தை இருக்கா? இல்லையா? என்று தெரிந்து கொள்வதைப் பற்றி சொல்லிதந்திங்க அதுல 5ம் வீட்டின் அஷ்ட வ்ர்கம் அதில் இருக்கிற கிரகத்தின் சுய வர்கம்,5ம் வீட்டின் அதிபதி சொன்று அமர்ந்திருக்கும் வீட்டின் அஷ்ட்வர்கம் அதன் சுய வர்க ப்ரல் ம்ற்றும் புத்திரகாரன் குரு அமர்ந்திருக்கும் வீட்டின் அஷ்டவர்கம் அதன் சுயவர்கம் இந்த மூன்றையும் பார்த்துதான் குழந்தை இருக்கிறதா இல்லையா என்று சொல்லமுடியும்
என்று எடுத்துகாட்டுட‌ன் விளக்கினீர்கள் மேலும் குருவின் பார்வை 5ஆம் வீட்டில் விழுந்திருந்தாலும் நிச்சயமா இருக்கும் சொன்னீங்க ஆனால் எத்தனை குழந்தைங்க அதுல பொண்ணு பையன் எத்தனை என்று கண்டு
பிடிக்க கற்றுத் தாருங்கள். மேலும் 5ம்வீட்டை 9ம் வீட்டை பார்க்கணும் என்று ரொம்ப பேரு சொல்றங்க நீங்க இதைப்ப்ற்றி சொல்லி தாங்க எல்லோருக்கும் ரொம்ப பயனாக இருக்கும்.

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்குக் குழந்தைப்பேறு முக்கியமானது. ஒரு ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்கு எத்தனை குழந்தைகள் என்று பார்ப்பதைவிட அவர்களுக்கு ஒரு குழந்தையாவது பிறக்குமா? என்று பார்க்க வேண்டும்! அதைவிட முக்கியம் ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்குத் திருமணம் ஆகுமா? அல்லது ஆகாதா? என்று பார்க்கவேண்டும்!

சரி திருமணம் ஆகிவிட்டது. குழந்தைப்பேறு இருக்கிறதா? என்று தம்பதிகள் இருவரில் ஒருவர் ஜாதகத்தை மட்டும் பார்த்துப் பயன் இல்லை. அந்த பாக்கியம் இருவர் ஜாதகத்திலும் இருக்க வேண்டும்.

குழந்தைப்பேறு என்பது கூட்டு முயற்சி:-))))

1. குழந்தை உண்டு
2. குழந்தை இருக்காது
3. ஒரு குழந்தை மட்டுமே இருக்கும்
4. ஆண் விந்தில் உயிர் அணுக்கள் என்னிக்கையில் குறைபாடு
5. பெண்ணிற்குக் கர்ப்பப்பை அல்லது கர்ப்பப்பையில் குறைபாடு
6. கர்ப்பச் சிதைவுகள். அல்லது குழந்தை இறந்தே பிறக்கும் தன்மை
என்று தலையைக் கிறுகிறுக்க வைக்கும் விஷயங்கள் ஐந்தாம் பாவத்திற்கு உண்டு!

சுருக்கமாகச் சொன்னால் பெண் என்பவள் நிலம். ஆண் என்பவன் விதை. இரண்டுமே நன்றாக இருக்க வேண்டும். இருந்தால்தான் செடி முளைக்கும். இல்லை என்றால் நர்சரியில் இருந்து செடியை வாங்கி வளர்க்க வேண்டியது தான். அதற்குப் பெயர் தத்து எடுத்தல், சுவீகாரம்    Progeny = descendants எனும் ஆங்கிலச் சொல், சந்ததி, வம்சம் என்று பொருள் படும்

இதை அறிந்துகொள்ள குறுக்கு வழி ஒன்றை முன்பு சொல்லிக்கொடுத்தேன். ஐந்தாம் வீடு.ஐந்தாம் வீட்டு அதிபதி அமர்ந்திருக்கும் வீடு, புத்திரகாரகன் குரு அமர்ந்திருக்கும் வீடு, ஆகிய 3 வீடுகளிலும் 28 பரல்களுக்குமேல் இருக்க வேண்டும். இருவர் ஜாதகத்திலும் இருக்க வேண்டும்.

கணவன் மனைவி இருவரில் ஒருவர் ஜாதகத்தில் சரியான அளவில் பரல்கள் இருந்து, இன்னொருவர் ஜாதகத்தில் பரல்கள் சரியாக இல்லை என்றால், குழந்தை பிறப்பது தாமதமாகும்.

இருவர் ஜாதகத்திலுமே பரல்கள் மிகக்குறைவாக இருந்தால், குழந்தை இருக்காது!

ஜாதகத்தில் குழந்தை பாக்கியத்திற்கான முக்கிய அமைப்புக்கள்:

1. நல்ல நிலையில் உள்ள குரு பகவான்
2. நல்ல நிலையில் உள்ள ஐந்தாம் வீடும், அதன் அதிபதியும்
3. Saptamsa chart
4. பெண்கள் ஜாதகத்தில் ஒன்பதாம் வீடு
5. நன்மை தரக்கூடிய நடப்பு தசை/புத்திகள்

மேலே உள்ளவற்றில் கோளாறு இருப்பின், அது குழந்தை பாக்கியத்திற்குத் தடையை உண்டாக்கும். பொதுவாக சனி, செவ்வாய் மற்றும் 6 & 8ஆம் இட அதிபதிகள் சம்பந்தப்பட்டாலும், தாமதங்கள் தடைகள் உண்டாகும். குரு பகவான் 6 அல்லது 8ல் போய் சுகமாக உட்கார்ந்து கொண்டுவிட்டாலும் சிக்கல்தான்!

குழந்தைகளின் எண்ணிக்கை சப்தாம்ச சக்கரத்தின் மூலம் தெரியும். அதை அலசுவதிலும் பல சிக்கல்கள் உள்ளன. (problems like miscarriages and difficulty in conception) அதைப் பிறகு நேரம் இருக்கும்போது அலசுவோம். இப்போது அஷ்டகவர்க்கத்தை மட்டும் உபயோகித்துப் பலனை அறிந்து கொள்ளுங்கள்.

2. ராகு, கேது குருவின் பார்வை பெற்றால் அவங்க எந்த வீட்டிலிருந்தாலும் அவங்க மகா தசையில சும்மாயிருப்பங்களா?
சுந்தரி

ராகு & கேது சுபக்கிரகங்களின் பார்வையைப் பெற்றிருந்தாலும் அல்லது திரிகோணங்கள் அல்லது கேந்திரங்களில் இருந்தாலும் தங்களுடைய தசா/புத்திகளில் ஜாதகனுக்குப் பல நன்மைகளைச் செய்வார்கள்.நீங்கள் சொல்வதுபோல சும்மா இருக்க மாட்டார்கள்:-))))
--------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------
இன்றைய பொன்மொழி
Change yourself and your work will seem different
வாழ்க வளமுடன்!


21 comments:

  1. கேள்விபதில் மீள்பதிவினைப் படித்துப் பயனடைந்தேன்.நன்றி!

    சுந்தரி பரமசிவம் மிகவும் நுட்பமாகக் கேள்விகளை கேட்டுள்ளார்.இப்போது படிப்பினால் அடிக்கடி வகுப்பறையில் காணவில்லை.உங்கள் பதில்கள் சுவையானவை.

    ReplyDelete
  2. குருவிற்கு வணக்கம்
    கேள்வி பதில்கள் படித்து புரிந்ததது,
    மற்றவைகளை படிக்கவேண்டும்.
    நன்றி

    ReplyDelete
  3. ///பொதுவாக 12 வயதுவரை குழந்தையின் ஜாதகம் பெற்றோர்களை வைத்துத்தான். ///

    நீங்கள் பலமுறை இதை வலியுறுத்தி சொல்லியிருக்கிறீர்கள் ஐயா.. ஆனால் இதுவும் பொதுவிதிகளில் அடங்குமா?
    ஏனெனில் எனக்கு ஒருசிலரைப் பார்த்தால் இந்தச் சந்தேகம் வருகிறது. உதாரணம் யுவினா போன்றவர்கள்.
    http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/article1572424.ece
    மேலும் விளக்கம் அளிக்க முடியுமா? இன்று படம்(attitude) எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
    பொன்மொழியும்தான்...பாடத்திற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  4. இந்த பாடலினை
    இன்றைய வகுப்பில் சுழல விடுகிறோம்

    நலந்தானா…. நலந்தானா…
    உடலும் உள்ளமும் நலந்தானா…

    நலம் பெற வேண்டும் நீ என்று….
    நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு…

    இலை மறை காய் போல்… பொருள் கொண்டு…
    எவரும் அறியாமல் சொல் இன்று…

    கண் பட்டதால் உந்தேன் மேனியிலே….
    புண் பட்டதோ அதை நானறியேன்…

    என் கண் பட்டதால் உந்தேன் மேனியிலே….
    புண் பட்டதோ அதை நானறியேன்…

    புண் பட்ட சேதியை கேட்டவுடன்…
    இந்த பெண் பட்ட பாட்டை யார் அறிவார்…?

    நடந்ததெல்லாம் மறந்திருப்போம்…
    நடப்பதையே நினைத்திருப்போம்…

    ReplyDelete
  5. Dear sir,

    Thank you very much for the lessons.i have one doubt regarding Ragu & Kethu.
    is it true that these planets will give good benefits during their second half of dasa/bhukthi only or depends upon the place in the horoscope.

    ReplyDelete
  6. அய்யா,
    குழந்தை பாக்கியம் பற்றிய கேள்விக்கு , மிகத் தெளிவான விளக்கங்கள் கோடுத்துள்ளீர்கள்
    அதற்கு நன்றிகள் பல.

    குரு 6,8ல் அமர்ந்தாலும் சிக்கல் தான் என குறிப்பிட்டு உள்ளீர்கள்

    மிதுன, கன்னியா லக்னக்காரர்களுக்கு குரு கேந்திரத்தில் அமர்வதும் தோஷமா?

    ReplyDelete
  7. அய்யா,

    நானும் , எனது மகள் இருவருமே ‍‍ கன்னியா லக்னம் தான், இருவருக்கும் 5,6க்கு உடைய

    சனி மூன்றில் இருந்து மூன்றாம் பார்வையில் தன் வீட்டையும் பார்க்கிறது.

    நான் முதல் முறய் கருவுற்ற போது, தங்கவில்லை, மறுபடி 5 ஆண்டுகளுக்குப் பின்பு தான் மகன் பிறந்தான்.

    எனது மகளுக்கும் முதல் கரு சிதைவுற்று மறுபடி சில மாதங்களுக்குப்பின் தற்போது மறுபடி தாய்மை அடைந்து இருக்கிறாள் (ஏழுக்குவுடைய குரு 6 ல் ,ஆறு சுய பரல் களுடன் இருக்கிறது).
    சனி, குரு இருவருமே இதற்கு காரணமாக இருக்கலாமோ என ,தங்களின் பதிவிலிருந்து யூகிக்க முடிகிறது. இதைப் போன்ற சிக்கல் கன்யா லக்னக்காரர்கள் அனைவருக்கும் பொருந்துமா?

    ReplyDelete
  8. சுந்தரி பரமசிவம் மிகவும் நுட்பமாகக் கேள்விகளை கேட்டுள்ளார்.இப்போது படிப்பினால் அடிக்கடி வகுப்பறையில் காணவில்லை.உங்கள் பதில்கள் சுவையானவை///
    அண்ணா நான் தின்சரி வகுப்புக்கு வருகிறேன் வணக்கம் அண்ணா. நல்ல தத்துவமான கதை எழுதுங்க எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுதான் சாமியார்கள் ஆற்றிய சொற்பொழிவு கூட பிடிக்கும்.

    வாத்தியார் அண்ணா வணக்கம்,
    பயிற்சிபாடம் ஒன்று போடுங்கள் தங்களுக்கு நேரமிருந்தால்/முடிந்தால் மட்டும்.

    ReplyDelete
  9. "தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது
    தூதிதூ தொத்தித்த தூததே - தாதொத்த
    துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது
    தித்தித்த தோதித் திதி"

    ஐயர் ஐயா, இந்த வரிசையில் நீங்கள் சுழலவிடப் பட்ட பாடலும் அடங்கலாம்.
    :))))

    ReplyDelete
  10. FYI:
    Huge Ancient Civilization's Collapse Explained....
    http://www.livescience.com/20614-collapse-mythical-river-civilization.html

    ReplyDelete
  11. /////Blogger kmr.krishnan said...
    கேள்விபதில் மீள்பதிவினைப் படித்துப் பயனடைந்தேன்.நன்றி!
    சுந்தரி பரமசிவம் மிகவும் நுட்பமாகக் கேள்விகளை கேட்டுள்ளார்.இப்போது படிப்பினால் அடிக்கடி வகுப்பறையில்
    காணவில்லை.உங்கள் பதில்கள் சுவையானவை.////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  12. ////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    கேள்வி பதில்கள் படித்து புரிந்ததது,
    மற்றவைகளை படிக்கவேண்டும்.
    நன்றி/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. /////Blogger arul said...
    nice post////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. /////Blogger தேமொழி said...
    ///பொதுவாக 12 வயதுவரை குழந்தையின் ஜாதகம் பெற்றோர்களை வைத்துத்தான். ///
    நீங்கள் பலமுறை இதை வலியுறுத்தி சொல்லியிருக்கிறீர்கள் ஐயா.. ஆனால் இதுவும் பொதுவிதிகளில் அடங்குமா?
    ஏனெனில் எனக்கு ஒருசிலரைப் பார்த்தால் இந்தச் சந்தேகம் வருகிறது. உதாரணம் யுவினா போன்றவர்கள்.
    http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/article1572424.ece
    மேலும் விளக்கம் அளிக்க முடியுமா? இன்று படம்(attitude) எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பொன்மொழியும்தான்...பாடத்திற்கு நன்றி ஐயா.//////

    அது பொதுவிதி என்பதைவிட முக்கியமான விதி எனலாம். நீங்கள் சுட்டிக்காட்டியுள்ளதைப்போல சில விதிவிலக்குகள் இருக்கலாம். படைப்பின் விநோதங்கள் என அவற்றைக் கொள்ளலாம்!

    ReplyDelete
  15. Blogger அய்யர் said...
    இந்த பாடலினை
    இன்றைய வகுப்பில் சுழல விடுகிறோம்
    நலந்தானா…. நலந்தானா…
    உடலும் உள்ளமும் நலந்தானா…
    நலம் பெற வேண்டும் நீ என்று….
    நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு…
    இலை மறை காய் போல்… பொருள் கொண்டு…
    எவரும் அறியாமல் சொல் இன்று…
    கண் பட்டதால் உந்தேன் மேனியிலே….
    புண் பட்டதோ அதை நானறியேன்…
    என் கண் பட்டதால் உந்தேன் மேனியிலே….
    புண் பட்டதோ அதை நானறியேன்…
    புண் பட்ட சேதியை கேட்டவுடன்…
    இந்த பெண் பட்ட பாட்டை யார் அறிவார்…?
    நடந்ததெல்லாம் மறந்திருப்போம்…
    நடப்பதையே நினைத்திருப்போம்…////

    யாருக்காக? இது யாருக்காக?

    ReplyDelete
  16. /////Blogger seenivasan said...
    Dear sir,
    Thank you very much for the lessons.i have one doubt regarding Ragu & Kethu.
    is it true that these planets will give good benefits during their second half of dasa/bhukthi only or depends upon the
    place in the horoscope./////

    நட்புக்கிரகங்களின் புத்திகளில் அவைகள் நன்மைகளைக் கொடுக்கும்!

    ReplyDelete
  17. /////Blogger santhanakuzhali said...
    அய்யா,
    குழந்தை பாக்கியம் பற்றிய கேள்விக்கு , மிகத் தெளிவான விளக்கங்கள் கோடுத்துள்ளீர்கள்
    அதற்கு நன்றிகள் பல.
    குரு 6,8ல் அமர்ந்தாலும் சிக்கல் தான் என குறிப்பிட்டு உள்ளீர்கள்
    மிதுன, கன்னியா லக்னக்காரர்களுக்கு குரு கேந்திரத்தில் அமர்வதும் தோஷமா?/////

    குரு முதல்நிலை சுபக்கிரகம். அவர் கேந்திர கோணங்களில் அமர்வதை எப்படி தோஷமாக எடுத்துக்கொள்ள முடியும்?

    ReplyDelete
  18. /////Blogger santhanakuzhali said...
    அய்யா,
    நானும் , எனது மகள் இருவருமே ‍‍ கன்னியா லக்னம் தான், இருவருக்கும் 5,6க்கு உடைய
    சனி மூன்றில் இருந்து மூன்றாம் பார்வையில் தன் வீட்டையும் பார்க்கிறது.
    நான் முதல் முறய் கருவுற்ற போது, தங்கவில்லை, மறுபடி 5 ஆண்டுகளுக்குப் பின்பு தான் மகன் பிறந்தான்.
    எனது மகளுக்கும் முதல் கரு சிதைவுற்று மறுபடி சில மாதங்களுக்குப்பின் தற்போது மறுபடி தாய்மை அடைந்து இருக்கிறாள் (ஏழுக்குவுடைய குரு 6 ல் ,ஆறு சுய பரல் களுடன் இருக்கிறது).
    சனி, குரு இருவருமே இதற்கு காரணமாக இருக்கலாமோ என ,தங்களின் பதிவிலிருந்து யூகிக்க முடிகிறது. இதைப் போன்ற சிக்கல் கன்யா லக்னக்காரர்கள் அனைவருக்கும் பொருந்துமா?//////

    அனைவருக்கும் பொருந்தாது! ஜாதகத்தின் வேறு அமைப்புக்களை வைத்து மாறுதல்கள் இருக்கும்!

    ReplyDelete
  19. /////Blogger sundari said...
    சுந்தரி பரமசிவம் மிகவும் நுட்பமாகக் கேள்விகளை கேட்டுள்ளார்.இப்போது படிப்பினால் அடிக்கடி வகுப்பறையில்
    காணவில்லை.உங்கள் பதில்கள் சுவையானவை///
    அண்ணா நான் தினசரி வகுப்புக்கு வருகிறேன் வணக்கம் அண்ணா. நல்ல தத்துவமான கதை எழுதுங்க எனக்கு ரொம்ப பிடிக்கும் அதுதான் சாமியார்கள் ஆற்றிய சொற்பொழிவு கூட பிடிக்கும்.
    வாத்தியார் அண்ணா வணக்கம்,
    பயிற்சிபாடம் ஒன்று போடுங்கள் தங்களுக்கு நேரமிருந்தால்/முடிந்தால் மட்டும்./////

    அடுத்தவாரம் எழுதுகிறேன்!

    ReplyDelete
  20. /////Blogger தேமொழி said...
    FYI:
    Huge Ancient Civilization's Collapse Explained....
    http://www.livescience.com/20614-collapse-mythical-river-civilization.html/////

    தகவலுக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  21. அய்யா ,

    தங்களின் பதிலுக்கு நன்றிகள் பல ,
    கேந்திர ஆதிபத்ய தோஷம் என்பது என்ன?

    தனுர் , மீன ராசிக் காரர்களுக்கு புதன் கேந்திரம் பெற்றாலும்,

    மிதுன , கன்னி ராசிக் காரர்களுக்கு குரு கேந்திரம் பெற்றாலும்

    அது தோஷம் என்று குடும்ப ஜொதிடம் என்ற புத்தகத்தில் உள்ளது.
    1980 களில் வந்த ,புத்தகத்தை கொண்டு தான் நான் முதன் முதலாக‌ ஜோதிடம் கற்க ஆரம்பித்தேன் .
    அது பற்றிய விளக்கம் பெறவே தங்களிடம் குரு பற்றிய
    சந்தேகத்தை வெளியிட்டேன்.

    தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

    மீண்டும் நன்றி.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com